google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மழை தருவது யாகங்களா? மேகங்களா?

Saturday, August 11, 2012

மழை தருவது யாகங்களா? மேகங்களா?


 
வருண பகவானே!
வந்து விடு இங்கே
நீ வரவேண்டி
இந்தியத் திருநாட்டில்
இவர்கள் செய்யும்
இன்னல்களால்
இதயம் நோகிறது.


 
இங்கே நீ
வரவேண்டுமென்று........
கழுதையை கட்டி வைத்து
கல்யாணம் செய்கிறார்கள்

நாயை கூட்டிக்கொண்டு
மனமேடை ஏறுகிறார்கள்


தவளைகளுக்கு
திருமணம் செய்து வைத்து
தண்டோரா போடுகிறார்கள்  

அறிவீர் சிறந்த பண்டிதர்களோ
அண்டா குண்டாக்களில்
தண்ணீரை நிரப்பிக்கொண்டு
தவமிருக்கிறார்கள்

இன்னும் சிலரோ
யாகம் செய்வதாக
கரும் புகை எழுப்பி  
ஆகாயத்தை                 
அசுத்தம் செய்கிறார்கள்

கத்திரி வெயில் காலத்தில்
காணாமல் போகும் இவர்கள்
மழை பெய்யும் காலத்தில் மட்டும்
மறக்காமல் வந்து விடுகிறார்கள்
மந்திரங்கள் சொல்கிறார்கள்
தந்திரக்காரர்கள்
மழைதான் பெய்து விட்டால்
மந்திரத்தால் பெய்ததாக
மார்தட்டி கொள்கிறார்கள்

மழை தரும்  மாயவியே!
எங்கே நீ
மறைந்து கொண்டாய்?

(மழை தருவது 
யாகங்களா? மேகங்களா?
மண்டை வெடிக்கிறது
உங்களுக்கு தெரிந்தால்
சொல்லுங்களேன்?)

*********************************
காணொளி-
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1