google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மனிதன் மிருகமாவது எப்படி...?

Saturday, December 29, 2012

மனிதன் மிருகமாவது எப்படி...?



சில நேரங்களில்
மனிதர்களில் சிலர்
மிருகங்களாய்..?

சில நேரங்களில்
மிருகங்களில் சில
மனிதர்களாய்...?

இருவருக்கும்
இருக்கும் மூளை
என்ன வேறுபாடு?


மிருகங்களின் மூளை
பாக்கெட் கால்குலேட்டர் போல...


மனிதர்கள் மூளை
சந்தையில் விற்கும்
சமீபத்திய கணணி போல...

சில நேரங்களில்
சில தலைக்குள்ளிருக்கும்  
கால்குலேட்டர் கணணி போன்றும்..

சிலநேரங்களில்
சில தலைக்குள்ளிருக்கும்  
கணணி கால்குலேட்டர் போன்றும்..

இப்படி இடக்கு முடக்காய்
இவைகள் வேலை செய்வதால்
இந்த மாற்றங்களோ...?



இதற்குமேல் சொல்ல
என் மூளைக்கு
எதுவும் தெரியவில்லை...?
உங்களுக்கு..?   

.......................................பரிதி.முத்துராசன் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1