google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: July 2012

Monday, July 30, 2012

நிஜம்



நீ
புதைக்கப்பட்டால்
வீரிய விதையாக
முளைத்து விடுகிறாய்!

நீ
எரிக்கப்பட்டால்
பீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழுகிறாய்!

உன்னை
விழுங்கியவர்கள்
அஜீர்ணத்தால்
அவஸ்த்தைப் படுவார்கள்

உன்னை
நினைக்க மறந்தவர்கள்
நித்திரையை
தொலைத்து விடுவார்கள்  

உன்னை
அழிக்க நினைப்பவர்கள்
அம்மணமாக அலைவார்கள் 
****************************
காணொளி-மௌனத்தில்....... 


  Thanks-YouTube-Uploaded by indhu420 on Aug 16, 2009



Saturday, July 28, 2012

ஓட்டை பேருந்தில் மட்டுமா?




பள்ளிச் சிறுமியின்
உயிரைக் குடித்தது
பேருந்து ஓட்டை 

காவல்துறை
துவக்கியது விசாரணை

அரசு வழங்கியது
நிவாரணம்

நீதித்துறை
விழித்துக்கொண்டு
ஆணையிட்டது

ஓட்டை
பேருந்தில் மட்டுமா?

இந்த நாடு 
ஓட்டைகள் நிறைந்த
ஒரு சல்லடைச் சட்டை
ஊழலேனும் குத்தீட்டியால்
ஓட்டை போட்டவர்கள் யார்?

ஓட்டைதான் போட்டு
ஓலமிடுகின்றாரே! 
நாட்டைதான் சீரழித்து
நீலிக்கண்ணீர் வடிக்கின்றாரே! 

இந்த நாடு ஒரு நாடகமேடை
இது ஒரு நல்ல நாடகம்
இவர்கள் நல்ல நடிகர்கள் 
 *************************
காணொளி-NEWS.....



Friday, July 27, 2012

பில்லா-2 அபூர்வ ‘தல’




ஆயிரம் தலை வாங்கி
அபூர்வ சிந்தாமணி
அப்படியொரு
திரைப்படம்
அன்று
சின்ன வயதில்
கேள்விப்பட்டது
இன்றுதான்
பார்த்தேன்

ஆயிரம் தலை வாங்கி
அபூர்வ ‘தல
டான்...டான்...டான்
டண்டனக்கா...பில்லா-2  
***********************
காணொளி-TRAILER



பஞ்சதந்திரம் கதையா? சதியா?




பாலகர் கதை என்று
பாரினில் உலவுகிறது
‘பஞ்ச தந்திர கதைகள்  
அவைகள்
பஞ்ச தந்திர கதைகளல்ல
வஞ்சக தந்திர கதைகள்

தம்உயர்வை நிலைநாட்ட
தந்திரமாய் உயர் சாதியினர்
தரம்கெட்டு எழுதிய கதைகளே
சாதீய கதைகள்

பஞ்ச தந்திர கதைகள்
உயர் சாதியினரின்
வஞ்சக தந்திர கதைகளே!

தாழ்ந்தோரின்
தோளில் ஏறித்தான்
உயர்ந்தோர்கள்
உயரப்போனார்களோ?

இப்படித்தான்
ஆயிரம் கதைகள் கட்டி
ஆண்டவனை காட்டினார்களோ?
ஆண்டவன் அருகில் இருப்பதாக
அவர்கள் தம்மை காட்டிக்கொண்டு  
உயர்ந்தவர்கள் நாங்கள் என்று
உலகுக்கு உரைத்தனரோ?

அறிவு கொண்டு சிந்தித்தால்
அத்தனையும் பொய்யாகும்
அவர்தம் வாழ்வும் தீயாகும்  
*****************************
காணொளி-கேளடா மானிடரே.... 


Thanks-YouTube-Uploaded by on Feb 21, 2010



Wednesday, July 25, 2012

டாஸ்மாக் கடையே போற்றி!




Drink and Dance by Sourcecode  

காலையில் எழுந்ததும்
கால்வலிக்க காத்திருந்து
கடை திறந்ததும் ஒரு முடக்கு
வாயினில் உற்றியே
நேற்றடித்த சரக்கால் வந்த
தலைவலி தீர்த்து வைத்து
சோம்பிக்கிடக்காமல்
சுறு சுறுப்பாய் இருந்திடவே
‘குடிமக்கள் குறை தீர்க்க வந்த   
டாஸ்மாக் கடையே போற்றி!

திராட்சை கனியிலிருந்து
திரட்டி எடுத்த ரசமோ?
வயிற்றை புரட்டி  
வாந்தி எடுக்கும் விஷமோ?
உடலினில் புகுந்திடவே
உலகமே மறப்பதாய்
கல்லீரல் சிதைந்தாலும்
கட்டிய வேட்டியுடன்
கவலை நோயும் கலைந்திடவே
களிப்புடன் தள்ளாடும்
‘குடிமக்கள் குறை தீர்க்க வந்த   
டாஸ்மாக் கடையே போற்றி!


கள்ளச் சாராயமோ?
காய்ச்சிய சாராயமோ?
மக்கள் உயிரை   
மாயத்திடக் கூடாதென்று...
நம்ம அரசாங்கமே
நல்ல அக்கறையுடன்
நல்ல சரக்குகளை
நியாய விலையில் விற்றிட   
குடிமக்கள் குறை தீர்க்க வந்த   
டாஸ்மாக் கடையே போற்றி!
*******************************
காணொளி-tasmac anthem 



Thanks-YouTube-Published on Jun 9, 2012 by madhubaanakadai

Monday, July 23, 2012

கடவுளைக் காப்பாற்றுங்கள்



அனைத்து மதங்களிலும்
ஆண்டவனின்
உறைவிடங்கள்
பழுதடைந்து போகிறது
போய்கொண்டிருக்கிறது

அனைத்து மதங்களிலும்
ஆண்டவனின் தூதுவர்கள்
அழிந்துகொண்டிருக்கிரார்கள்
அவர்களின் அபயக்குரல்
கேட்க்கின்றது

அறிவியல் இங்கே
ஆட்சி செய்ய
ஆரம்பித்துவிட்டது

எத்தர்கள் இங்கே
அறிவியலிலும்
ஆண்டவனை
ஒழித்துவைக்க
முயலுகிறார்கள்
கடவுள் துகள்தான்
அதன் ஆரம்பம்....
எத்தனை நாள்தான்
இப்படி செய்வார்கள்?  

இனி வரும் தலைமுறை
இறையாண்மையை
இல்லாமல் செய்துவிடும்

திரும்பி பார்............
உன் மகனிடமே
மாற்றம் தெரியும்
அவன் மகனிடம்
அதைவிட பெரிய
அறிவு இருக்கும்
....................................
...............................
இப்படியே போகும்
இனிவரும் தலைமுறை
இறைவனை
இல்லாமல் செய்துவிடும்

கடவுளின் பிரதிநிதிகளாக
கயமைத்தனம் செய்வோரே
கடவுளை காணாமல் செய்வார்!

மதத்தின் பெயரால்
வன்முறை செய்வோரே
மதத்தை அழித்துச் செல்வார்!

இல்லாததை சொல்வார்கள்  
பொல்லாததை செய்வார்கள்
ஆண்டவன் அடையாளத்தை
ஆத்திகர்களே அழிப்பார்கள்
நாத்திகர்கள் தேவையில்லை  
 
கடவுளைக் காப்பாற்ற
முடியுமா உங்களால்?
முடிந்தால்......
கடவுளைக் காப்பாற்றுங்கள்
              -(தொடரும்)   
********************************
காணொளி-SLIDE SHOW


Thanks-YouTube-Uploaded by on Sep 30, 2009


ஒரு இல்லற ஞானியின் கதை.....


 
நாமிருவர் நமக்கிருவர்
காலம் தொட்டு காதல் செய்து...
ஆண் அய்வர் பெண் அய்வர்
ஆண்டவன் தந்ததாக பெற்றெடுத்து
அரசனாக இருந்தவன் ஆண்டியான
ஒரு இல்லற ஞானியின் கதை.....

பசுமை புரட்சிபோல்
குழந்தை புரட்சி செய்தேன்
அவர்கள் வளர்ந்தபோதும்
அவர்கள் மனவாழ்வின்போதும்
அதுவாங்க இதுவாங்கவென்றும்
அரண்மனைபோலிருந்த வீட்டை விற்று
வாடகை வீட்டில் வாடிக்கிடக்கிறேன்

எல்லோரும் போய்விட்டார்கள் நலமாக
எல்லோரும் வாழ்கிறார்கள் வளமாக
எவருமில்லை என்னைப்போல் ஞானப்பழமாக
என்னவளும் நானும் தனிமரமாக
எங்கள் வாழ்வும் ஆனதே ஒய்ந்த புளிமரமாக
ஆனாலும் ஆனந்தமே அதுவும் பேரானந்தமே! 
*********************************************
 காணொளி-புத்திசிகாமணி பெத்த பிள்ளை....



Thanks-YouTube-Uploaded by on Jan 7, 2012

ஓன்று சேர்ந்தால்


ஒரு மின்மினிதானே என்று
ஏளனம் செய்யாதே
நாளை
ஒரு கோடி மின்மினிகள்
ஓன்று சேர்ந்தால்
தீபந்தமாகிவிடும்....

இருளே! நீ
இருக்குமிடம்
இல்லாமல் போவாய்! 

Saturday, July 21, 2012

சில்லாட்டை பேய்கள்



சாதி மத பேதமின்றி
சமத்துவமாய் நடப்பது நாட்டில்
பெண்களுக்கு இழைக்கப்படும்
பாலியல் வன்கொடுமைகளும் 
பாலியல் படுகொலைகளுமே!

ஆத்திகர் நாத்திகர்
அரசியல்வாதி சுயநலவாதி
பாமரர் படித்தவர்
பணக்காரர் ஏழை
என்ற பேதம் இல்லாமல்
இந்தப் பேய்களின் தொல்லையே!

பனைமரத்திலிருந்து
பிய்ந்து கீழே விழும்
சில்லாட்டைகள் தெரியும்
நள்ளிரவில் நிலவொளியில்
பறந்து வரும் பேய்போல.......
சில்லாட்டையாவது
சல்லடையாக உதவும்
ஆனால்
காமவெறியுடனும்
கொலைவெறியுடனும்
பறந்து திரியும்  
இந்த சில்லாட்டை பேய்களோ
சமுதாயத்தை சீரழிக்கும்

சட்டங்களை திருத்த வேண்டும்
சீரழியும் சமுதாயத்தை
சீர்தூக்கி நிமிர்த்திடவே
கொடுமை செய்யும் இப்பேய்களை
கடுமையாக தண்டிக்க வேண்டும் 
(சில்லாட்டை= பன்னாடை)
************************************
காணொளி-SOCIAL ILLICIT.....



Friday, July 20, 2012

எருதாட்டமும் மனிதர்கள் ஓட்டமும்



கரகாட்டம் ஒயிலாட்டம்
பொய்க்கால் குதிரையாட்டம்
எந்த ஆட்டமும் போடுங்கள்
எருதாட்டம் மட்டும் கூடாது
என்று சொன்னது சட்டம்
எழுச்சிகொண்டது மக்கள் கூட்டம்
அடக்க நினைத்தது காவலர் கூட்டம்
அங்கே நடந்தது ஒரு சிலம்பாட்டம்    
  
ஆட்டம்போட
கூட்டிவந்த மனிதர்கள்  
அடிவாங்கிக்கொண்டு
அங்கும் இங்கும்
அலறியடித்து
ஓடுவதைப்பார்த்து....

கட்டிப்போட்ட எருதுகள்
எட்டிப்பார்த்து சிரித்தன.....
எருதாட்டம் என்றுசொல்லி
பொய்யாட்டம் ஆடுகிறார்கள்  
*******************************************
காணொளி-அண்ணாச்சி வேட்டிகட்டும்....... 


Thanks-YouTube-Uploaded by hondabalu on Mar 16, 2009


Thursday, July 19, 2012

ஆதினமும் அறிவுமயக்கமும்


கண்ணை மூடினால்
கனவு வருகிறது
கனவில் வருகிறது
காமுகப்பேயும்
பேய்க்கூட்டமும்

கதவை மூடுங்கள்
காற்று வரவேண்டாம்
காற்றோடு சேர்ந்து
கருப்பும் வந்துவிடும்

அன்று வந்த கடவுள்தான்
இன்றும் வந்து சொன்னாரோ
இப்படி உம்மை பிதற்ற?
சந்நிதானத்துக்கே வெளிச்சம்!

***********************************
காணொளி-சட்டி சுட்டதடா.............

          Thanks-YouTube-Published on Apr 15, 2012 by goldtreat


நான் ஒரு கவிஞன்?


கவிதை ஓன்று எழுதினேன்
புனைபெயர் சூடி
கவிஞர்கள் வரிசையில்
சேர்ந்துகொண்டேன்

எழுதிய கவிதையை
என்ன செய்ய?
போட்டிக்கு அனுப்பலாமா?
பத்திரிகையில் வெளியிடலாமா?
விருது கிடைக்குமா?

நாலுபேரிடம் காண்பிப்போமென்று   
என் தமிழாசிரியரிடம் எடுத்துச்சென்றேன்
எதுகை மோனை எதுவுமில்லை
என்னையா கவிதை? என்றார்.
எடுத்தேன் ஓட்டம.

பக்கத்துவீட்டு எழுத்தாளரிடம்
படிக்ககொடுத்தேன்
ஆகா...ஓகோ....அருமை...
ஆனால்ஆங்கிலத்தில் இதை  
படித்ததாக ஞாபகம் என்றார்
(போலி கவிஞரென்று
புகார் கொடுப்பாரோ?)

வீட்டுக்கு வந்துவிட்டேன்
கைபேசியில் வாய்பேசினேன்   
நண்பரோ"சிக்னல் வீக்"என்று
துண்டித்துவிட்டார்
(நட்பையும் சேர்த்துதான்)

மகனைப்பார்த்தேன்
படிப்பதுபோல் பாவித்தான்
மனைவியை தேடினேன்
அடுப்படியில் அடைந்துகொண்டாள்  

கணணியை முடுக்கி
தளங்களை தேடினேன்
எல்லா தளங்களிலும்
ஏகப்பட்ட விதிகள்

நானே துவக்கிவிட்டேன் வலைப்பூ  
எழுதிவிட்டேன் என் கவிதையை
நானும் கவிஞனாகிவிட்டேன்.
(நினைப்புதான் பிழைப்பை கெடுக்குது)
****************************************
காணொளி-ஒரு நாள் போதுமா.......


Thanks-YouTube-Uploaded by rajshritamil on Feb 1, 2010

Wednesday, July 18, 2012

நான் ஈ-திரைப்படம் போல



பெரிய மீன்களை
துண்டுபோட்டு 
சின்ன மீன்களை
கூறு போட்டு
மொய்த்த ஈ கூட்டத்தை
விரட்டி அடித்து
விற்றுக்கொண்டிருந்தாள் 
கூவிக்கூவி மீன்காரி 
அருகில் இரண்டு பூனைகள்
ஆவலோடு காத்திருக்க.....

தலை வேறு கால்கள் வேறு
தனித்தனியாக....
தோலுரித்த ஆடு
தொங்கிக்கொண்டிருக்க
கண்டம்போடுவதில்
கவனமாக இருந்தார்
கரிக்கடைக்காரர்
அங்கும் ஒரு ஈ கூட்டம்
கடை எதிரில் நாய்க்கூட்டம்
எலும்பு எதுவும் விழுமா என்று

இன்னொருபக்கம்
கத்தரிக்காய் வெண்டைக்காய்
காய்ந்துபோன வெங்காயம்
புடலங்காய் பாகக்காய்
அத்தனை காய்களுடனும்
அழுகிப்போன காய்களும்   
அழகாய் ஒளிந்திருந்தன
அங்கேயில்லை     
நாயும் பூனையும்
ஆனால் இருந்தது
புழுவும் பூச்சியும் ஈயோடு..  

வாங்கவில்லை எதையும் 
வந்துவிட்டேன் வீட்டுக்கு
நமச்சல் எடுத்தது
நெஞ்சுக்குள்.............

சுகாதாரத்தை சீர்கெடுக்க  
ஈக்கள் எல்லாம் ஈட்டிகளோடு
கடைவீதியில் அலைகின்றன   
“நான் ஈ திரைப்படம் போல...

ஏழை நடுத்தர மக்களிடம்
வாக்குகளை வாங்கி...
ஆட்சிக்கு வந்ததும்
ஆட்சியாளர்கள் போடுவது
அவர்களுக்கு வாய்க்கரிசி  

சுடுகாடுகள் எல்லாம்
சுத்தமாக இருக்கிறது
கடைவீதிகள் எல்லாம்
வியாதிகளை விற்கிறது 
****************************
காணொளி-அம்மா இங்கே வா வா....  

Thanks-YouTube-Uploaded by sigaramchannel on Jun 30, 2010


Tuesday, July 17, 2012

போதை போடும் பேனாக்கள்


கவியரசே! நீ
போதைபோட்டு
எழுதினாலும்
உன் எழுத்துக்கள்
தள்ளாடவில்லை!

காரிகைகளுடன்
குலாவினாலும்
உன் கவிதைகளில்
விரசமில்லை!

போலி உலகில்
பாட்டு எழுதினாலும்
உன் பாடல்களில்
நிஜம் இருந்தது.

இன்றோ....
எழுதுபவர்கள்
பேனாக்களில்
விஸ்க்கியும்
பிராண்டியும்
கலந்து ஊத்தி
எழுதுகிறார்களோ?

எழுத்துக்கள் எல்லாம்
எழுந்து நடக்க முடியாமல்
தடுமாறுகின்றன!

கவிதைகள்
விரசத்தில்
விளையாடுகின்றன!

பாடல்கள் எல்லாம்
பாதை மாறி
நிஜத்தை நழுவ விட்டு
அம்மணமாய்
அலைகின்றன!
********************************
காணொளி-ஒரு கோப்பையிலே....


Thanks-YouTube-Uploaded by ottaipanai on Nov 23, 2011

Monday, July 16, 2012

மனிதத்தை திண்ணும் மதங்கள்


பரதேசி கையில்
பாத்திரம் போல
கோயில்களில்
உள்ளேயும் வெளியேயும்
உண்டியல் எதற்கு?
யார் உண்டியை
நிறைப்பதற்க்கு?

ஆண்டவனின் சன்னதியில்
அனைவரும் சமமென்றால்
அங்கே அனுமதி கட்டணம்
அந்த வெகுமதி எதற்கு?

பூசைக்கும் தோசைக்கும்தான்
போகுது உண்டியல் என்றால்
தரிசனம் பன்னுவோரிடம்
தட்ச்சனை கேட்டு தட்டேந்தும்
தரித்திரம் அங்கே எதற்கு?

அன்று ஆண்ட மன்னர்கள்
மக்கள் தம்மை மதிக்காமல்
எழுச்சிகொண்டு புரட்சி செய்தால்
போய்விடுமே அந்தோ!
அவர்தம் ஆட்சியென்று.....

அடங்கி கிடக்கட்டும் மக்களென்று
ஆலயங்கள் கட்டிவைத்து
ஆண்டவன் என்று சொல்லிவைத்து
அதற்க்கு ஆயிரம் கதைகள் கட்டி
உயர்வு தாழ்வு உள்ளே புகுத்தி
மடங்கள் பல அதனுள் கட்டி
மக்களை மடையர்களாக்கி
சமுகக்கலவரதீ எரியவிட்டு 
குளிர்காய்ந்தார்கள் கோமான்கள்  

இது இங்கு மட்டுமல்ல
உலகம் தழுவிய உண்மை
அகிலமெங்கும் நிறைந்துள்ள
அவநம்பிக்கையின் அடையாளங்கள்
சுயநலவாதிகளின் சுயரூபங்கள்

மனிதன் உண்டாக்கிய மதங்கள்
மனிதர்களையே திண்ணுகிறது 
மனிதத்தை தின்றுக்கொண்டு
மமதையுடன் அலைகிறது 


அவநம்பிக்கை உடையவருக்கே
அடுத்தவர் உதவி தேவை
ஆண்டவர்களின் உதவியும்  
அவர்தம் தூதுவர்களின் சேவையும
அவநம்பிக்கையாளர்களுக்கே தேவை   

தன்னம்பிக்கை உடையவரோ என்றும்  
தரணியில் வாழலாம் தலைநிமிர்ந்தே!     



************************************************************************
 காணொளி-தன்னம்பிக்கை நடனம் 
(ஒரு கால் ஆணும ஒரு கை பெண்ணும்)




Thanks-YouTube-Uploaded by semjase76 on Aug 26, 2007

Sunday, July 15, 2012

அபய முத்திரை


அபய முத்திரையை
அணிந்து கொள்ளுங்கள்
அதோ வருகிறது
சுனாமி......

அன்று வந்த சுனாமி
அள்ளிக்கொண்டு போனதே
ஆயிரமாயிரம் உயிர்களை 
அவர்களில் யாரும்
அணியவில்லையோ
அந்த அபய முத்திரையை?
அன்று காத்திடவில்லையே
அந்த அபய முத்திரை?   

இயற்கையை படைத்தவன்
இறைவன் என்றால்
சுனாமியை படைத்த
சுந்தரப்புருசன் யாரோ?

வீட்டில் வைத்து
ஊதுபத்தி கொளுத்துங்கள்
அல்லது உங்கள் வீட்டையே
ஊதுபத்தியாக கொளுத்துங்கள்
அது அவரவர் நம்பிக்கை
நாட்டில் கொளுத்தி
நாசப்படுத்தாதீர்கள்

நாட்டுக்கு தேவை
நியாய முத்திரை
அதுவே தேர்தல் முத்திரை

அபய முத்திரை என்றும்  
அபாய முத்திரை....

என்று தீருமோ உமது நித்திரை?
**********************************
காணொளி-கடவுள் செய்த பாவம்....


Thanks-YouTube-Uploaded by MultiAbdulgafoor on Feb 27, 2012


UA-32876358-1