google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: August 2012

Friday, August 31, 2012

ஏவி விட்ட ஆவிகளோ?



அன்று
கொசுக்களின் தொல்லை
டெங்கு காய்ச்சல்

அப்புறம்
ஈக்கள் தொல்லை
காலரா பீதி?

இன்று
மருத்துவ மனைகளில்
எலிகள் நாய்கள் தொல்லை

பாவிகளா!
நீங்கள்
எதிர் கட்சியினர்
ஏவி விட்ட ஆவிகளோ? 
********************************
Video-cybernetic robotic fight 


Thanks-YouTube-Uploaded by TheLife4something on Oct 22, 2011



வாழும் ஓவியம



இது 
அன்பின் அடக்கமா?
பாசத்தின் கலக்கமா?
ஆனால்......
வாழும் ஓவியம்! 
'அடாலா' காவியத்தின் 
உந்துதலால் 
உருவான ஓவியம்.  
 
********************************************************


Thanks-YouTube-Published on Apr 15, 2012 by SimonBergerMusique
Thanks-jpge-http://en.wikipedia.org



Thursday, August 30, 2012

அரசியலில் அன்னா ஹசாரே




தாவிக் குதிக்கும்போது
பாம்பு வாயில்
தெரிந்தே
விழுந்து விட்டது
தவளை                             

அன்னா ஹசரேவும்
அரசியல்வாதி
ஆகிவிட்டார்

ஊழல் ஒழிந்து விடும்  
************************

சாக்கடையை                   
சுத்தம் 
செய்யப்போனவர்                                                                                                 
விச வாய்வு தாக்கி 
சாக்கடையிலேயே 
விழுந்து விட்டார்...பாவம்  
******************************** 
VideoBar-Anna Hazare is the Bodyguard 


Thanks-YouTube-Uploaded by ndtv on Sep 3, 2011
 

உயிர் தப்பினார்!



போற்றுவோரும்
தூற்றுவோரும்
போடும் சண்டை....

வேடிக்கை பார்க்க
வேகமாக வந்தார்

அது
போற்றுவோரும்
போற்றுவோருமே
போடும் சண்டை...

பயந்து போனாரோ?

வந்த வேகத்தில்
ஓடி ஒழிந்துக் கொண்டார்

உயிர் தப்பினார் அவர்! 
***************************
காணொளி-ஒன்றே குலம்....

Thanks-YouTube-Uploaded by RehmanHits on Nov 2, 2010

Dembow Reload Kick Sound - Dj Jory by Dj_Jory

என் நாட்டில் வந்து ஏன் பிறந்தாய்?



நான் பிறந்த நாட்டை
நாசம் செய்யும் நீ
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?
மரங்களை வெட்டி
காடுகளை அழித்து
கட்டிடங்களில்
கதவும் சன்னலுமாய்
காட்ச்சிக்கு வைத்தாயே
மழை வரும் வழியை              
மறைத்து விட்டாயே
மக்கள் வாழ்வை
சிதைத்து விட்டாயே          
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?

மலையை உடைத்து
பாதாளம் தோண்டி
பளிங்கு கற்களை
பவ்வியமாய் எடுத்து
அடுக்கு மாளிகை
அழகுபட கட்டினாயே  
இயற்கை வளத்தை                
இல்லாமல் செய்யவா?
நாளை நிலநடுக்கத்துக்கு
வழி செய்து விட்டாயே!
மக்கள் வாழ்வை
வதைத்து விட்டாயே
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?

ஆற்று மணலை
அள்ளிச் சென்று  
ஆற்றுப் பாசனத்தை
அழித்து விட்டாயே
விவசாயின் வயிற்றில்
அடித்து விட்டாயே
மக்கள் வாழ்வை              
புதைத்து விட்டாயே
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?
       
நீ
அரசியல் வாதியானது
அள்ளிச் சுருட்டி
ஊழல் வாதியாய்
உரு மாறி அலையவா?
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?                 

நீ
மத வாதியானது
மனிதத்தைக் கொன்று
கடவுளுக்கு
களங்கம் செய்யவா?           
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?

நீ
நீதி தேவனானது
நியாயத்தை தின்று
அநியாயத்தோடு
கொஞ்சிக் குலாவவா?
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?


நீ
அரசு அதிகாரியானது       
அஞ்சுக்கும் பத்துக்கும்
கையயூட்டு வாங்க
கையேந்தி நிற்க்கவா?
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?

நீ
கனவு காண்பதும்
கவிதை எழுதுவதும்
காதல் செய்யவா?
இளம் நெஞ்சங்களில்         
விசத்தை விதைக்கவா?
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?
*************************
காணொளி-நிற்பதுவே நடப்பதுவே..... 


Thanks-YouTube-Uploaded by RajsMed on May 28, 2011



indian songs by Pipeo

Wednesday, August 29, 2012

காந்த சக்தியே!


எழுச்சியுடன் கலைஞரின் படை
எழுந்து வருகிறது
புரட்சி கொண்ட புயலாக....
புறப்பட்டுவிட்டது
சுவரொட்டி புரட்சி

இப்போதெல்லாம்
சென்னை நகரெங்கும்
கிளர்ச்சி கொள்ளும்
சுவரொட்டிகள்....

ஒரு மாற்றம் கேட்க்கும்
தளபதியின் ஆவேசம்

காந்த சக்தியாக பரிணமிக்கும்
தளபதியின் ஈர்ப்பு விசை

நாகரிகமான வார்த்தைகள்
காண்பவர் கண்களை மட்டுமல்ல
மனதை ஈர்க்கும்.....
காந்தப் பார்வையுடன் 
கவின் மிகு தோற்றம்       

நிச்சயம் வரும்
ஒரு மாற்றம்


காணொளி-KALAIGNAR KARUNANIDHI DMK SONG

Thanks-YouTube-Uploaded by Aravazhi Kribananthan on Oct 11, 2011


015.Instrumental by Musichive Beta

இது குறள் அல்ல, என் குரல்




கடவுள் வாழ்த்து-

இருக்கு என்பார் இல்லை என்பார் நம்மிடம்
இருக்கும் மனசாட்சியே கடவுள்.

வான்சிறப்பு-

எல்லாநாளும் மழை பெய்தால் நம்நாட்டில்
இல்லையே முல்லைப்பெரியாறு மோதல்.

நீத்தார்பெருமை-

தப்புதப்பாய் வாழ்வோர் வழிபோயின் என்றும்
தப்புதப்பாய் போகும் வாழ்க்கை.

அறன்வலியுறுத்தல்-

கரண்ட்யில்லை வேலையில்லை ஆயினும் 
கஞ்சி தொட்டியவது திறவுங்கள்.

அரசியல்-

அரியணைகாலம்  ஐந்து வருடம்தான் அதற்குள்
அனைத்தையும் கொள்ளை கொள்.
****************************************************************

காணொளி-Thirukkural (ThiruValluvar) in Dr.M.S.Sreekumar`s voice






Thanks-YouTube-Uploaded by drmssreekumar on Jul 22, 2011




Alavarindhu - ThirukkuraL Project - Kavitha by Kavitha Poornima

காதலர் படும் பாடு





                         
சென்னையில்
காதலர்கள் படும் பாடு
காண்போருக்கெல்லாம்           
களிப்பூட்டும் செயல் பாடு

காந்தி சிலை பின்புறம்
கடல் மணலில் அமர்ந்து
கடலைப் பார்த்து                  
கடலை இல்லாமலேயே         
கடலை போடும் காதலர்கள்
காணமல் போனார்கள்
காவலர்கள் விரட்டுவதால்...

பூங்காவுக்குள் அவர்கள்
போகவே முடியாமல்
போனாலும் அங்கே

அமரவே முடியாமல்                  
அடைத்துக் கொண்டது
சோம்பேறிக் கூட்டம் 
சோதனைதான் காதலர்களுக்கு...

எங்கே போவது
என்று தெரியாமல்             
இப்போதெல்லாம்
காதலர்கள் போவது
புதியதாக முளைத்திருக்கும்
காசு புடுங்கும்
காபி ஷாப் கடைகளே...

கனமான காதலன் என்றால்
கோல் மால் அரங்குகளே!
அங்கே
பத்து பேரை வைத்து
படம் ஓட்டுகிறார்கள்
படம் பார்ப்பதை விடுத்து 

இவர்களும்                  
படம் காட்டுகிறார்கள்

சென்னையில்
காதலர்கள் படும் பாடு
காண்போருக்கெல்லாம்
களிப்பூட்டும் செயல் பாடு

*********************************
காதலர் பூங்கா ஓன்று 
கட்டி வைக்கலாமே?
கலாச்சார சீரழிவை      
தடுத்திடலாமே? 

**********************************
காணொளி-கொடி அசைந்ததும்..... 


Thanks-YouTube-Uploaded by sujiar on Nov 19, 2010

Tamil love song by Aj Tamil Entertainment
UA-32876358-1