google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: November 2012

Friday, November 30, 2012

காணவில்லை காவேரியை...(ஒரு புலம்பல்)


எத்தனை முறை
போராடினாலும்
தோல்விதான் பரிசா?
(சுயநலவாதிகளின்
போராட்டங்கள்  
ஒரு பயனும் தராது)  

எவ்வளவு நேரம்
நீந்தினாலும்
அக்கறையை
அடைய முடியாதா..?
(நீந்துவது போல்
கற்பனை செய்தால்
காரியம் ஆகாது)

எந்தக் கல்லை
செதுக்கினால்
வரம்தரும் கடவுள்
வருவார் இங்கே?
(ஆருடம் பார்த்தால்
ஆவது ஒன்றுமில்லை)  

ஏன் இந்த முகாரி..?

காவேரியை
நினைத்தாலே
தண்ணீர் வருகிறதோ
இல்லையோ
கண்ணீர் வருகிறது.

காணவில்லை
காவேரியை...

(காவல் நிலையத்தில்
புகார் கொடு
கண்டுபிடித்துத் தருவார்கள்)  


   

புது அகராதி! புது அர்த்தங்கள்!




கடவுள்-
எதையும் கண்டுக்காமல்   
கல்லு மாதிரி இருப்பவர்

யோகி-
எதற்கும் வாயைத் திறக்காமல்
ஊமை போல் இருப்பவர்

ஞானி-
நாம் தேடிப் போகும் நபர்
எதையும் நம்மிடம் கேட்காதவர்

பரதேசி-
நம்மைத் தேடி வரும் நபர்
எதையாவது நம்மிடம் கேட்பவர்

காதல்-
கடையில் விற்காத மது
காதல் குடியைக் கெடுக்கும்!
காதல் பழக்கம்
உடல் நலத்தைக் கெடுக்கும்!

ஆத்திகம்-
இல்லாததை
இருக்கு என்பது.

நாத்திகம்-
ஏட்டிக்குப் போட்டியாக
எதையாவது பேசுவது.

பகுத்தறிவு-
எல்லாம் தெரிந்ததாக
காட்டிக் கொள்ளும்
அலம்பல்வாதி

தலைவர்-
எல்லோரையும்
மேய்க்கத் தெரிந்தவர்
எல்லோரையும்
ஏமாளியாக நினைப்பவர்

பிரபலங்கள்-
அதிஸ்டக் காற்றால்
அடித்துச் செல்லப்பட்டு
கோபுரக் கலசத்தில்
ஒட்டிக்கொண்ட குப்பைகள்

காவேரி-
அன்று நதியின் பெயர்
இன்று சதியின் பெயர்
தமிழ் நாட்டுக்கு  
என்றும் விதியின் பெயர்




******************************************************************************

இன்றைய  நண்பர் பதிவு...................

நன்றி.................
My Photoவிமலன் 

சிட்டுக்குருவி


மறுபடியும்,மறுபடியுமாய்,,,, 

நாய்கள் பெருத்த வீதிகளாக

உருமாறி காட்சிப்படுகிறது ஊர்.

வீட்டு மாடியில் ஒன்று,

பூட்டப்பட்டிருந்த கேட்டின்
அருகாமையாய் ஒன்று என...மேலும்

 

 

 

Thursday, November 29, 2012

மன்னிச்சுக்குங்க போலீஷ்காரு!




மன்னிப்புக் கேட்கலாம்
என்று வந்தேன்...
என்ன.....?
அதற்குள் பிணத்தை
எரித்து விட்டீர்களா...?

அய்யோ...
இனி நான்
யாரிடம் போய்....
மன்னிப்புக் கேட்ப்பேன்?

என்ன...? என்னைக்
கைது செய்வீர்களா...?
ஆயுள் தண்டனை
அல்லது
தூக்குத்தண்டனையா?

அதையும்
அம்பது வருஷம்
கழிச்சுத்தான் சொல்வீர்களா...?

அய்யா....வள்ளுவரே!

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நான
நன்னயம் செய்து விடல்


உமது குறளை யாரும்
படித்ததில்லையோ...?
உமது குரலை யாரும்
கேட்பாரில்லையே....!

அய்யோ...
இனி நான்
அடுத்தக் கொலை
எப்படிச் செய்வேன்....? 



(இது ஒன்னும் என் மவனோட
வாக்குமூலம் இல்லீங்க...

நம்ம வள்ளுவரு எழுதிவச்சத 
தப்புக்கா புரிஞ்சிக்கிட்டு.....
கவிஞ்ன்சரு ஆசையில  
இப்படி எழுதிபுட்டான்..சாரு 
மன்னிச்சுக்குங்க போலீஷ்காரு 
அவன் டெங்கு கொசுவைக்கூட   
அடிக்க மாட்டான் 
அப்பாவிப் பய புள்ள அய்..யா)  

*********************************************************************************




நன்றி.........................
வணக்கம் !

தமிழ் கவிதைகள் தங்கச்சுரங்கம்


என்றும் நேயமுடன் ! ஸ்ரவாணி



கல்கி யுகம் !

விரலுக்கொரு மோதிரம் கேட்கவில்லை
பீடி சுற்றி வீங்கிய விரலுக்கும்   லேபில் ஒட்டி
விறைத்துப் போன கைகளுக்கும்
.....மேலும் 





டாஸ்மாக்-சுவர்க்கத்தின் கதவுகள்!



div style="background:url (http://cdn.oddstuffmagazine.com/wp-content/uploads/2012/11/mug_of_beer1.jpg)no-repeat;"> ச்சரிக்கை-
குடி குடியைக் கெடுக்கும்!
குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்!

(இது மதுபானம் பற்றிய கவிதை
அதனால்தான் இந்த எச்சரிக்கை...
இது 18+ பதிவாகவும் இருக்கலாம்)

சுவர்க்கத்தின் கதவுகள்
திறந்து இருக்கின்றன
மலர்களின் தேனை
அருந்தி மகிழுங்கள்...
பறந்து செல்லுங்கள்
  
சுவர்க்கத்தின் கதவுகள்
திறந்து இருக்கின்றன
பாடுங்கள் குயில்களே!
சோகத்தின் சுவடுகள்
அழிந்துப்போகட்டும்....

வசந்த வாழ்வின்
இன்ப மணிகள்
சிதறிக்கிடக்கின்றன
சிட்டுக்குருவிகளே!
சோம்பிக்கிடக்காமல்
பொறுக்கிச் செல்லுங்கள்...

சீக்கிரம் வாருங்கள்!
சிங்கக்குட்டிகளே...
இந்த நாட்டின்
எதிர்கால ஏந்தல்களே...!
நீங்கள் அருந்தும்போது...

உள்ளமும் உடலும்
ஜில்லென்று இருக்க..
குளிரூட்டப்பட்ட அறை!

இடை இடையே சுவைக்க
அத்தனை வகை
நொறுக்குத் தீணிகளும்
காரசாரமாக....

எழுச்சி கொண்டு வாருங்கள்
சுவர்க்கத்தின் கதவுகள்     
திறந்திருக்கும் காலம்-

காலை பத்துமணியிலிருந்து
இரவு பத்துமணி வரை மட்டுமே!

(நீ ரொம்ப நல்லவப்பா..
இப்படியே எழுது.....ஹி..ஹி...
உனக்கு விருது கிடைக்கும்...) 
 

*********************************************

                 Thanks-YouTube-Published on May 16, 2012 by

**********************************************

ஹாய்...பிரண்ட்ஸ்...இதுக்கு கருத்திட்டாலோ...ட்வீட்டேர்ல கீச்சினாலோ...பேஸ்புக்ல லைக் பன்னுனாலோ..யாரும் கைது செய்ய மாட்டாங்க...ஒன்னும் பயப்படாதிங்க...
      

Wednesday, November 28, 2012

நாளை....




நாளை-
அகராதியில் அதன் பெயர்
நழுவலா...? மழுப்பலா..?
அல்லது  
நம்பிக்கையின் விதையா?
ஆகட்டும் பார்க்கலாம்!
(கர்மவீரரின் மாமந்திரம்)

இன்று முடியாதது
நானை நடந்திடுமா?
இன்று போன சூரியன்
நாளை வரவில்லை எனில்
என்ன செய்வது.....?
யாரிடம் முறையிடுவது..?

தினம்தோறும்
நினைத்துப் பார்க்கும்
மந்திர வார்த்தை...
‘நாளைக்காவது
அதிகாலையில் எழுந்து
நடை பயிற்சி போகவேண்டும். 

நகரும் வாழ்க்கை
மரத்தடியில்
மல்லாக்கப் படுத்திருக்கும்
பரதேசியின் பகல்கனவு...
‘அமைச்சரே!
மாதம் மும்மாரி
மழை பெய்கிறதா...?

தெருவில் நிசப்தம்
மதக்கலவரம் மறைந்ததா..?
சாதிக்கலவரம் செத்ததா..?
ஒ...ஊரடங்கு உத்தரவா..?
நாளை இது தீருமா..?
இல்லை இன்னும் வருமா
வேறு பெயரில் வேதனை..?

நிழல் போல் தொடரும்
மரணத்தின் சாயல்...
நினைத்துப் பார்ப்பதில்லை
நாளை வருமா...மரணம்?
கடவுளிடம் கேட்டு
தள்ளிப் போடமுடியுமா?
மருத்துவரை பார்த்து
மாத்திரை விழுங்கனுமா..?

எரியூட்டினால்
பீனிக்ஸ் போல
எழுந்து வருமா.....?
புதைத்தால்
பீறிட்டு முளைக்குமா...?

இன்னும் எழுதப்படாத
இதயத்தில் இருக்கும்
இந்த வார்த்தைகள்......

அவநம்பிக்கையை
அகற்றி விட்டு
தன்னம்பிக்கையை
சுவாசித்துக்கொண்டு...

அம்மாவின் புலம்பல்.....
“ஏண்டா...இப்படி பண்ற...?
நடுராத்திரியில்
நீயும் தூங்காம..
என்னையும் தூங்க விடாமா
என்னத்தடா எழுத்துர...?
விளக்கை அனைச்சிட்டு தூங்கு
நாளைக்கு எழுதலாம்!“

****************************************************************
இன்றைய நண்பர் வலைப்பூ.....................
நன்றி-

இப்படியும் ஒருவர்!

ஒருமுறை... காமராஜரின் தாயார்,
தன் மகனுக்குக் கடிதம் எழுதினார்.....மேலும்  



Tuesday, November 27, 2012

இவள் ஒரு துப்பாக்கி!




மோனோ லிசா- 
இவள் ஒரு துப்பாக்கி!

இவள் கண்கள்
இதயத்தை துளைக்கும்
துப்பாக்கியின்
இரட்டைக்குழாய்கள்!

இவள் சிரிப்பில்
பாய்ந்துவரும்
தோட்டாக்கள்.

இல்லை
இல்லவே இல்லை...!
என்று சொல்லுபவர்கள்
சிறிதுநேரம்
உற்றுப்பாருங்கள்
அவள் கண்களை....

இதயம் வலிக்கிறதா..?
இல்லையா...?
இல்லை
இதயம் உங்களுக்கு...   


கொழுக்கட்டை...





இன்று எங்கள் ஊரில்
சொக்கப்பனை எரியும்
ஊரெங்கும் வெளிச்சம்

இன்று எங்கள் வீடுகளில்
எண்ணைய் விளக்குகள்
எல்லாம் எரிந்து
இருள் இல்லாமல் போகும்...

இன்று மட்டும்...
மின்சாரமே-நீ
விடுமுறை எடுத்துக்கொள்.

நாளை வந்து
வாங்கிக் கொள்
கொழுக்கட்டை...   

thanks-image-tamilblog.ishafoundation.org
*****************************************************************************

பனை ஓலைக் கொழுக்கட்டை
                                                                             (செய்முறை)
நன்றி-
http://tamilblog.isha.ws/wp-content/uploads/2012/09/tamil-blog-logo.png
link-
http://tamilblog.ishafoundation.org/vinayaka-chathuthi-special-recipe-kolukattai/


********************************************************************************



Monday, November 26, 2012

இன்றைய சினிமா- ஹைக்கூ...




ஹைக்கூ-
சாதாரணமானவர்கள்
எழுதினால் (ஹைக்கூ)HAIKU.
பிரபலமானவர்கள்
எழுதினால் (உயர் கூ)HIGH-KU.  

ஆத்திகம்-
கடவுள் இருக்கிறாரா..?
இல்லையென்றால்
இல்லை பிழைப்பு
இங்கு நிறையப் பேருக்கு...

சாதி-
அது எப்படி...?
சிலருக்கு மட்டும்
சாக்கடை மணக்கிறது...?

தியானம்-
கொஞ்ச நேரம்
அசைவற்று இருந்தால்
இறந்துவிட்டான் என்று
புதைத்துவிடாதீர்கள்.....

இன்றைய சினிமா-
காதலர்களுக்கு-போடா போடி
ஊழல்வாதிகளுக்கு-  
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
திண்ணிப் பண்டாரங்களுக்கு-பீட்சா

அமைச்சர்கள்  
ஆவலுடன் எதிர்பார்ப்பது-
அம்மாவின் கைப்பேசி

எதிர் கட்சிக்காரர்கள்
எல்லோர் நிலையும்-
பரதேசி

மீண்டும் வருமா
விலைவாசியின்
விஸ்வரூபம்.....?

விரைவில் வருகிறது......
ட்வீட்டர்களுக்கு –
ஹிட்லிஸ்ட் 

******************************************* 
Thanks-image from here

Sunday, November 25, 2012

கைபேசியா..? தீக்குச்சியா...?


கைபேசியினால்

நன்மைகளைவிட

தீமைகளே
அதிகம்...

பேசிக்கொண்டே
நடப்பவர்களை
சாலை
விபத்துக்கள்
தூக்கிச்
செல்ல வைக்கின்றன

பாடல்
கேட்டுக்கொண்டே
வாகனம்
ஒட்டுபவர்களை
பாடையில்
போக வைக்கின்றன

அவைகள்
கைபேசிகளா...?
உயிர்
போக்கிகளா...?

ஒரு
கைபேசியை வைத்து
தீக்குச்சி
போன்று
தீ
மூட்ட முடியுமா...?

எரிவாயு
உபயோகப்படுத்தும்
சமையல்
அறைகளில்
கைபேசி
உபயோகிக்கலாமா..?
பெட்ரோல்
நிலையங்களில்
கைபேசி
உபயோகிக்கலாமா..?

இந்தக்
காணொளியைக் காணுங்கள்..


                    Thanks-YouTube-Uploaded by JemsHuang
 **********************************************
 

நிர்வாண ஊரில்.....



ல்லோரும் நிர்வாணமாக
ஆடை எதுவுமின்றி...
எல்லோரும் நிர்வாணமாக...

கோவணமாவது கட்டுங்கள்
என்று சொன்னவரும்
நின்று கொண்டிருந்தார்
நிர்வாணமாக...
அவர் ஆடையையும்
அவிழ்த்து விட்டார்கள்...

இந்த நிலைமைதான்
இன்று நாட்டில்...
மதம்-சாதி-அரசியல்
அதில் உள்ள அவலங்களை
எழுதினாலும் பேசினாலும்...

எஞ்சி நிற்பது
அவமானம் ஒன்றே!

அதனால்தான்
அந்தக் காலப் புலவர்களும்
இந்தக் காலக் கவிஞர்களும்

அரசர்களுக்கும்
அரசுக்கும் துதிபாடியே... 
*****************************************
                   Thanks-YouTube-Uploaded by no1nallavan

********************************************

Nilasuriyan Nila Suriyaநிலாசூரியன்
Link-http://www.nilasuriyan.blogspot.in

தமிழ்  பற்று கொண்ட சமுக ஆர்வலர் 
கவிஞர்,கட்டுரையாளர்,எழுத்தாளர்,
வலைதளங்களில் கவிதைத்திருவிழா நடத்தி 
பரிசளிப்பவர் ...பண்பாளார்.

மண்ணை முத்தமிடும் மழைத்துளிகள்...

நான் வளைந்து கொடுப்பது
என் வழக்கம் - ஆனால்
பயந்து வளைந்தது
இதுவரை இல்லை...!!! 

                                                                    ......நன்றி..நிலாசூரியன் 

 

 


Saturday, November 24, 2012

இது பகுத்தறிவு எழுச்சியா....?




இன்று நாட்டில்
நிறைய பகுத்தறிவாளர்கள்...

பதுங்கிக் கொண்டிருந்தவர்கள்
எழுச்சிக் கொண்டார்களா.....?
தூங்கிக் கொண்டிருந்தவர்கள்
விழித்துக் கொண்டார்களா...?

பகுத்தறிவுத் தடாகத்தில் 
பூக்கின்றன நிறைய
வலைபூக்கள்! 

பகுத்தறிவு வானத்தில்
கீச்சுகின்றன  நிறைய
ட்வீட் குருவிகள்!

முகநூல்களின் முகங்களில்      
முகமூடியைக்கிழிக்கும்
பகுத்தறிவுப் புன்னகை!

அறியாமை
அகராதியிலிருந்து
அகற்றப்பட்டது...

மூடநம்பிக்கை
முக்காடு போட்டு
சுடுகாடு போனது...
இன்னும் வரும் எழுச்சி!
இளைய தலைமுறை புரட்சி!
இந்த மாற்றத்துக்கு
காணாமல் போன
கயமைத்தனம் கொண்ட
கடவுள் பிரதிநிதிகளே சாட்சி!

இந்த மாற்றத்துக்கு
அவர்களுக்கு துணையாக
அடக்குமுறையை ஆளும்  
ஆனவக்காரர்களே சாட்சி!

இன்னும் காலம் வரும் 
மணலை  கயிராகத் திரிக்கும் 
மந்திரவாதிகள் மறைந்துபோவார்...

************************************************************
                  Thanks-YouTube-Uploaded by karadi2000

 *************************************************************


இக்பால் செல்வன் 
இன்றைய இளையதலைமுறை 
பகுத்தறிவாளர்.......

பேய்கள், பூதங்கள் இல்லை எனத் தெரிந்தாலும்,கதைகளில் அவை சுவாரசியம் தருபவையாகவே உள்ளன, கடவுளும் கூட

இக்பால் செல்வன்@iqbalselvan_
கடவுள் தேவைப்படுகின்றார் பலவீனமான மனமுடையவருக்கும், தன்னம்பிக்கை குறைந்தவருக்கும், குற்ற உணர்ச்சி மிகுந்தவருக்கும்.


தமிழ் பகுத்தறிவாளர்கள் 

கோடங்கிKodangi 



******************************************************************

 

டாஸ்மாக் பிரபலங்கள்!




   -----------எப்படி பிரபலமாவது...?----------------
அனைவரையும் பிரபலமாக்கும் புகழ் 
அவர்களுக்குள்ளே இருக்கிறது

15 நிமிடங்களுக்கு மேல்
அது நிலைப்பதில்லை...
ஆன்டி வரோலினின் இக்கூற்று
உண்மையோ..? இல்லையோ...?
கிடைத்தப் புகழை
தங்க வைத்துக்கொள்வோரே..
பிரபலமானவர்களாக
அங்கீகரிக்கப்படுகிறார்கள்....  


முன்னொரு காலத்தில்
மக்களுக்கு நன்மை செய்தவர்கள்
பிரபலமானவர்களாக இருந்தார்கள்
இந்தக் காலத்தில்..
வழக்கமாகச் செய்திகளில்
நல்லபடியோ கெட்டபடியோ
பேசப்படுபவர்கள் பிரபலங்களாக....
அந்த வேலையைச் செய்வது ஊடகங்கள்

பிரபாலங்களை உருவாக்குவதில்
விளையாட்டு-சினிமா-அரசியல்
போட்டோ போட்டி...
பணமும் சூதும் உள்ளவர்கள்
குறுகிய காலத்தில் பிரபலமாகிறார்கள்  

தாய் நாட்டுக்கும் மக்களுக்கும் 
நல்லது  செய்பவர்கள் 
நிரந்திர  ஏ-கிரேடு பிரபலங்கள்
ன் வீட்டுக்கும் தன் மக்களுக்கும்
நல்லது செய்பவர்கள் பி-கிரேடு

பி-கிரேடு பிரபலங்கள்...
அதை நிலைநாட்ட
கேடுகெட்ட காரியங்கள் செய்து
இருந்தப் புகழும் இல்லாமல் போவர்.

அய்யன் வள்ளுவர் இரண்டடியில்....
தோன்றிற் புகழோடு தோன்றுக அ·திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
தவறாகப் புரிந்துகொண்ட சிலர்
உயர் சாதி...? யில் பிறந்ததாலே
பிரபலங்கள் என்று நினைக்கிறார்கள்.

இன்னும்  இருக்கிறார்கள் 
இங்கே சில பிரபலங்கள்.....
டாஸ்மாக் உள்ளே போகும்போது 
சாதாரன குடிமகன்கள்..
டாஸ்மாக் வெளியே வரும்போது 
பிரபல கவிஞர்கள்...!
பிரபல பாடகர்கள்....! 
பிரபல நடிகர்கள்.....!
பிரபல  தத்துவஞானிகள்...!
பிரபல பிஸ்த்தாக்கள்..!
இவர்கள் எந்த கிரேடு பிரபலங்களோ...? 

காட்டுக்குள்ள ஒரு காமெடி - Mimicry by Seeniprabhu

                 Thanks-YouTube- by seeniprabhu ganesan


****************************************************************
 Orkut Thank You Scraps and Images
****************************************************************

வாழ்த்துக்கள்....
amirthanathan arulappan


 

Works at PSN Group of Institutions Tirunrlveli
Attended Government Poly Technic Nagercoil
Lives in Nagercoil
தமிழ் சிறிதளவே தெரிந்தாலும் 
தமிழ் வலைதளங்களைத் தேடிப்பிடித்து 
அவரது எண்ணங்களைப் பதிவிடும் 
அறிவுப் பெருந்தகை.....  

*******************************************************************************
*******************************************************************************
இன்றைய நண்பர் பதிவு..................

நதியின் வழியில் ஒரு நாவாய்

 

Thanks-          Srini Vasan

 

 

  குடிகார குப்பன்களும் பெண்ணியமும்


விருந்து  உபசரிப்புகள்  ,நண்பர்களின் மகிழ்சியை பகிர ஆரம்பிக்கும் உற்சாக பானம் பீர்லில் தொடங்கி  கடைசியில் பிராந்தி ,விஸ்கி முடிகிறது.மனிதன் எதையுமே பத்து நாட்கள் தொடர்ந்து  செய்தால் அதுவே பழக்கமாக மாறிவிடுகிறது .கவலையை மறக்க ஆரம்பிக்கும் குடி பின் பழக்கமாக மாறிவிடுகிறது.குடிகாரர்களின் நண்பர்கள் வட்டமும் அப்படியே அமைந்து இருக்கும்..............மேலும்.




UA-32876358-1