google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பெண்களின் ஆ...பாசம் உடையிலா?நடையிலா?கருத்துக்கணிப்பு

Friday, February 15, 2013

பெண்களின் ஆ...பாசம் உடையிலா?நடையிலா?கருத்துக்கணிப்பு


ஏண்டா..அறிவுச்செல்வா!
இந்த ஆபாசம் ஆபாசம்-னு அலம்புறாங்களே...
அப்படியினா...என்னடா?
அரைகுறையா ஆடையில்தான் ஆபாசம்னா....
 ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா....?
மேல் சட்டை போடாமல் 
வேஷ்டியையும் கோவணம் போல் கட்டும்
ஆண்கள் இங்கே உயர்ந்த சாதியாம் 

அதுவே பெண்கள் கட்டிய ஆடையில்
கொஞ்சம் ஓட்டை  (ஜன்னல் ஜாக்கட்)இருந்தாலோ...
கொஞ்சம் ஓரம் விலகினாலோ...
அது பெயர் ஆபாசமாம்! என்ன உலகமடா இது...?
இங்கே எதுவும் புரியவில்லையடா...?




முழுக்க மூடிக்கொண்டு தலுக்கி குலுக்கி 
அங்கம் அசைய நடந்தால் அதன் பெயர் என்னடா...?
பேசுவதிலும் செயல்களிலும் அநாகரீகம் இருந்தால் 
அதுதான்டா ...ஆ...பாசம்!உணர்வைத் தூண்டும் ஆ..வேசம்!











































thanks-img-tunblir
  (ஆடை இப்படி இருந்தால் எப்படி இருக்கும்....?) 



அர்த்த ராத்திரியில் குடைபிடித்து அலைந்தால் ஆபாசம் 
காதல் என்ற பெயரில் பண்பாடு மீறுவதும்....
படுக்கையறையில் நடக்க வேண்டியதை 
பத்து பேர் மத்தியில்  பப்ளிக்கா நடத்துவதும்...
இப்படி நிறைய இருக்கு ஆ...பாசம் 


சினிமாவில் மட்டும் பெண்களின் ஆட்டம் 
அடக்கம் ஒடுக்கமாக ஆட்டம் போட்டால்
அத்தோடு அவள் எடுக்க வேண்டும் ஓட்டம் 
அதுவே ஜொள்ளு வழிய இருந்தால்...
அப்படம் ஓடும் பேயாட்டம்..அரங்கு நிறைய கூட்டம் 




(இன்றைய தொலைக்காட்சி கனவுக்கன்னி தொழிற்சாலையா?)



 அடேய்...அறிவுச்செல்வா....!
அந்த டெல்லி-கேங் ரேப்  துயரத்துக்கு 
ஆண்களின் காமம் ஒன்றுதான் காரணம்...
ஆபாச உடையே காரணம் என்று 
அங்கலாய்க்கும் மதவாதிகள் கூட்டம் ஒருபுறம் 




அம்மணமாகத்தான் அலைவோம் 
அரசாங்கம்தான் பாதுகாக்க வேண்டும்...
அடம் பிடிக்கும் பெண்கள் அமைப்புகள் ஒருபுறம்

அடேய்...அறிவுச்செல்வா....!
இவர்கள் தலைக்குள் இருப்பவைகள் 
இன்னும் வளராத தலைபிரட்டைகளாடா...?




(அண்ணேன்...டென்ஷன் ஆகாதீங்க
அவ்வியிங்க கிடக்கிறாங்க  விடுங்க 
அவிழ்ற வேட்டிய கட்டுங்க....
அந்த டாஸ்மாக் பக்கம் போகாதீங்கனா...
கேட்க மாட்டிங்கறீங்க ...அண்ணேன்)


                                  ...................................பரிதி.முத்துராசன்.
  
****************************************************************************
கருத்துக்கணிப்பு......................

பெண்களின் ஆ...பாசம் உடையிலா...? நடையிலா...?



இந்த சமுதாய  வாக்கெடுப்பில் கலந்து கொண்டு  வாக்களித்த தங்கள் அனைவருக்கும் எனது நன்றி 
*********************************************************************************************

இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து....................?

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1