google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வருதப்பா..ஒரு ரூபாய் இட்லி வருதப்பா!

Tuesday, February 19, 2013

வருதப்பா..ஒரு ரூபாய் இட்லி வருதப்பா!

மலிவு விலை உணவகங்கள்:

இன்று முதல் ஆரம்பம்.... அம்மாவின் அதிரடித் திட்டமாம்.............
 அரசு மலிவு விலை டிபன் சென்டர்
இன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் 15 இடங்களில் அரம்பிக்கப்படுகிறது.

சாந்தோம்- பட்டினப்பாக்கம் இடையில் கடற்கரை  சாலையில்   அம்மா அவர்களே இன்று திறந்து வைக்கிறார்கள் ...வழியெங்கும் பதாகைகள்

அம்மா!தாயே! அன்னலட்சுமியே! 



மலிவு விலை உணவகங்கள் அனைத்தும் டைல்ஸ் பதிக்கப்பட்ட தளம் சுவர்கள் மின்விசிறி,நின்று சாப்பிடும் வசதி..இப்படி ஒரு சிறந்த தனியார் உணவகங்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது 


இடங்கள் அனைத்தும் சுகாதரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டுள்ளது.
உணவுகளும் அதுபோல் சுகாதரமனவையாக இருக்கும் என்றே நம்புவோம் 

இத்திட்டம் உண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டால்..... ஏழை உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் 

உலகிலேயே முன்னோடியான இத்திட்டம் 
அம்மா அவர்களுக்கு 
இங்கு மட்டுமல்ல 
இந்தியாவில் மட்டுமல்ல
 உலகப் புகழ் பெற்றுத்தரும்....

 இந்த மலிவு விலை உணவகத்தைப்பற்றி நமது தளத்தில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி.............. 


அரசு மலிவு விலை ஓட்டல்கள்:அம்மா அம்மாதான்!

அரசு டிபன்-சென்டர் பற்றிய உங்கள் கருத்து...?

நல்ல திட்டம்
  77 (79%)
சரிவராது
  10 (10%)
சுயநலமானது
  10 (10%)

Votes so far: 97
Poll closed 

மிக சிறந்த திட்டம் என்றே 79% விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ளது. 

வாக்களித்த அனைவருக்கும் நன்றி ..............

                                    .......................................பரிதி.முத்துராசன்

**********************************************************************************
(என்னப்பா...வர..வர..இப்படி...
இட்லிபதிவுலாம் போட ஆரம்பிச்சிட்ட....?.
எப்படி இருந்த நீ...இப்படி ஆயிட்ட....?)

அப்படியா....?இந்த சாப்பாடு பாட்டப் பாருங்க....
இது அந்த காலத்து குத்துப்பாட்டு................ 
இப்ப வருற  பித்துப் பாட்டெல்லாம் 
இது பக்கத்திலேயே வராது....அம்புட்டுத்தான்

                                     thanks-YouTube-Messiraj

 ***********************************************************************
நம்ம ட்வீட்டர்கள் சுட்ட சில இட்லி.....கீச்சுக்கள்  

அண்ணா, இட்லிக்கடை ஆரம்பிச்சிருக்கோம், நடைபயணத்துல போகும்போது அங்க அங்க சாப்ட்டு டேஸ்ட் நல்லாருக்கான்னு சொல்லுங்க ஓக்கே ? சரிங்மா !!

எம்.ஜி.ஆருக்கு ஒரு சத்துணவுத் திட்டம். ஜெ.விற்கு இதோ ’அம்மா மெஸ்’.

இந்த மலிவு விலை உணவுக் கடை அநேகமாக அணைத்து டாஸ்மாக் கடைக்கருகில் சீக்கிரம் திறக்கப்படும் என்பது உண்மை # note this point


அடேய், யாருடா அது? மாம்பழம் விக்கிற கண்ணம்மா- பாட்ட, இட்டிலி விக்கிற குண்டம்மா-னு மாத்தி பாடுறது? பிச்சு புடுவேன் பிச்சு.

மலிவு கடை இட்லி நல்லா இருந்ததா என் நண்பன் ஃபோன்பண்ணி சொன்னான் #சும்மாவா,மாவாட்டுனது நாஞ்சில் சம்பத் ஆச்சே

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1