google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 2020-ல் தமிழ் சினிமா எப்படி இருக்கும்..?

Sunday, June 09, 2013

2020-ல் தமிழ் சினிமா எப்படி இருக்கும்..?

http://i.allday.ru/uploads/posts/thumbs/1194730499_2.jpg  

அன்று தமிழ் சினிமா படங்கள் மிக நீ...ள...மா...க இருந்தன.  பொதுவாக அவை பக்திப்படங்களாகவும்  அதன் உட்கதைகளாகவும் பழைய நாடகக்கதையாகவும்   இருந்தன..(திருவிழாக்களில் வள்ளி-திருமணம் நாடகம் இரவு 6 மணிக்கு ஆரம்பித்தால்  அடுத்த நாள் காலை 6 மணிக்குத்தான் முருகன் வள்ளியை திருமணம் முடிப்பார்)

freeonlinephotoeditor

அப்புறம் பாகவதர்கள் காலம்..பாடகர்களே கதாநாயகர்களாக  படம் நிறையப் பாடல்கள்... அவர்கள் வாயைத்திறந்து மன்மத லீலையை வென்றாருண்டோ...? என்று கேட்டுப் பாட ஆரம்பித்தால்...அந்த நாள் முடிந்து அடுத்த நாள்  வந்துவிடும்..சில படங்கள் பாடல்களாகவே இருக்கும் பேசுவதுகூட பாடித்தான் பேசுவார்கள்...

freeonlinephotoeditor

அதற்குப் பிறகு பாடகர்கள் டி.எம்.எஸ்.போன்றவர்கள் பாட...அனல் பறக்கும் வசனங்களால் நடிகர்கள் நம் காதைக் கிழிப்பார்கள்...வீர வசனங்கள் யார்தான் பேசுவது என்று கிடையாது..கதாநாயகர் சிவாஜிகணேசன்...ஓடினாள்..ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்...என்று ஆரம்பித்தால்   வில்லன் வீரப்பா....அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி என்பார்... அம்மா கண்ணாம்பாள்..மகனே! மனோகரா...பொறுத்தது போதும் பொங்கியெழு..என்பார்..இரும்புச் சங்கலியால் பிணையப்பட்ட மகன் மனோகரனின் விலங்குகள் அறுந்து விழும்...இப்படி சொல்லிக்கொண்டேப் போகலாம்

freeonlinephotoeditor

நான் (1967-1977) பத்து வருடங்கள் சிறுவனாக வளர்ந்த வடுகப்பட்டியில் திருமலை திரையரங்கம்  என்று ஒரேயொரு திரையரங்கம் மட்டும்தான் உண்டு....அதிலும் ஒரேயொரு சினிமா புரொஜெக்டர் மட்டும்தான் இருக்கும்... குலேபகாவலி,மதுரைவீரன்,மகாதேவி, போன்ற எம்.ஜி.ஆர்.திரைப்படங்கள் மட்டுமே (இவைகளை என் வாழ்வில் எத்தனை முறை பார்த்தேன் என்று எண்ணவில்லை)அதிகம் திரும்ப..திரும்ப..புத்தம் புதுக்காப்பியாக....அறுந்து போகாமல் இருந்தால் நாலு இடைவேளையுடன்  திரையிடப்படும்...

freeonlinephotoeditor

அப்புறம் ரஜினி-கமல் காலகட்டம்..வசனங்கள் அளவோடு..நடிப்பு...? புதுமையாக தலையைச் சொரிந்துகொண்டு...ஸ்டைலு ஸ்டைலுதான்..னு  அது முப்பது வருடங்கள் தொடர்ந்தது....இன்னும் முடிந்தபாடு இல்லை  .  
ஆனால் இன்று எல்லாமே மாறிப்போச்சு....இரண்டுமணி நேரம்  திரையரங்கில் உட்கார முடியவில்லை...நடிப்பு யாருக்கு வேண்டும்?. கதை யாருக்கு வேண்டும்? ஏதோ தியேட்டருக்கு போனோமா...? கொஞ்சநேரம் சிரித்தோமா..? என்றுதான் நினைக்க தோன்றுகிறது எல்லாமே அவசர காலம்

freeonlinephotoeditor

இப்போது  வரும் திரைப்படங்கள் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் விஜய் சேதுபதி கணக்காக  ப்..பே ...னு நாலு வார்த்தைப்  பேசி..அலட்டிக்காம நடிச்சா ஓடுது...நமக்கும் தலைவலி இல்லை
இப்படியே போனால்....2020-ல் தமிழ் சினிமா எப்படி இருக்கும்..?   

http://media.tiin.vn/medias/4ecda874f3335/2012/09/19/8e06cf3f-b3b2-480e-8aa9-ff6943e85aeb.jpg

கதை-ஒரு வரியில் சொல்லுவதுபோல் இருக்கும்..அல்லது கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே படத்தின் கதையாக இருக்கும்.
நடிகர்கள்-ஹீரோ,ஹீரோயின்,2-துணை நடிகர்கள் அல்லது நடிகைகள்
நீளம்-ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும்
பாடல்கள்-கவிஞர்களுக்கு வேலையில்லை (அப்பாடா....நாடும் சேமம் நாட்டுமக்களும் சேமம்..அப்புறம் என்னங்க... இப்பலாம் ட்வீட்டர்கள் கூட எதையாவது எழுதிப்புட்டு கவிதைங்கிறாயிங்க)
திரையரங்குகள்-இருந்தாலும் இருக்கும் இல்லையேல் தொலைக்காட்சியில் இலவசமாகவோ...கட்டணச் சேனலிலோ வெளியாகும் (அதுகூட சில தொலைக்காட்சிகள் தங்கள் இமேஜ் போய்விடும் என்று படம் காட்ட மறுக்கலாம்..You Tube-ல் வெளிவரும் அல்லது நம்மல மாதிரி  பதிவர்கள் வெளியிடலாம்  )  

இவை  எல்லாவற்றையும் விட ஒர் அதிசயம் நடக்கும்..பணம் இருக்கிறவியிங்க எல்லாம் அவன்னவன் மகன்.. பேரன் எல்லோரையும் வைத்து படம் எடுத்துப்புட்டு....படம் பார்க்கச் சொல்லி (நம்மல பிராண்டுவாயிங்க) பார்வையாளர்களுக்கு பணம் கொடுத்து....

freeonlinephotoeditor

(அதுதாங்க அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து ஒட்டு பொறுக்குவதுபோல்.... இதைத்தான் பவர் ஸ்டார்னு ஒரு நடிகர் கொஞ்சகாலம் செய்தாரு இப்ப உள்ள கிடக்கிறாரு) ரசிகர்களை பிடிக்கும் நிலைவரும் பத்து மணிநேரம் ஓடினா அந்த படத்துக்கு ஜனாதிபதி விருது கொடுக்கலாம் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjudV3mQC0DLwbZ64qEkNSGUOYIg8Qmp0hMmkm90zSEFKqea4SXFYQ5j8YjVYEkpB4OKwkoEKdk6FOvImmRiTR82jcE-mlvijo6ZxtmniZe3Bor2HUSBmZWRCBxGqPiajbt02CCKv36TGiX/s1600/excl_ed_comoglio_marbatch_Image-13%5B1%5D.jpg
சுருக்கமாச் சொன்னால்...
 நாம காசு கொடுத்து படம் பார்த்தது போக....இனிமேல் நாம காசு வாங்கிக்கிட்டு படம் பார்க்கும் காலம் வரும் 
 2020-ல் தமிழ் சினிமா எப்படி இருக்கும்..?...ஹி..ஹி..இப்படித்தான் இருக்கும்             


(அது சரி..அண்ணேன்....இப்படியெல்லாம் பதிவு எழுதினா...இனி உங்க சினிமாப் பதிவையும் உங்க கவிதைப் பதிவுகள் மாதிரி நீங்களே எழுதி நீங்களே படிக்க வேண்டியதுதான்...ஹி,,,ஹி..)  


அடேய் தம்பி அறிவுச்செல்வா..நான் என்னடா செய்றது...புலி படம் பார்த்து நடுவுல கால்வாசி பக்கத்தக் காணோம்....மாசாணி பார்த்து...அரைவாசியைக் காணோம்...யமுனாவைப் பார்த்து நடுவுல இல்லடா...முழுப் பக்கத்தையும் காணோம்....இனி சிங்கம் வருது...என்ன செய்யுமோ...? தலைவா...நீ என்ன பண்ணுவியோ...?...ஆங்...தல..உங்க  பெயரில்லாதப் பூச்சி  என்ன செய்யுமோ...? அட...தேவுடா...என்ன ஆச்சு இந்த கோலிவுட்டுக்கு...?    
   




லிடோ டி பாரிஸ்-
சொர்கத்தில் கொஞ்ச நேரம் 

(நேரடி அனுபவப் பதிவு)




பிரான்சு நாட்டு(Champagne)மதுமயக்கத்தில்....
சினிமாக்களை மிஞ்சும் சிங்காரம்......... 
பிரபல பிரஞ்சு காபரே நடனங்கள்....
காதுக்கினிய  நேரடி இசை நிகழ்ச்சிகள்....







லிடோ டி பாரிஸ்-
சொர்கத்தில் கொஞ்ச நேரம் 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1