google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: January 2013

Thursday, January 31, 2013

தணிக்கைச் சட்டத்தை இப்படித் திருத்தலாமா...?

(திரைப்படத் தணிக்கைச் சட்டத்தைத் திருத்தப் போவதாக மத்திய அரசு ஆலோசனை செய்வதாகச் செய்தி....
அதானாலே இந்த நகைச்சுவை F (FUNNY)பதிவு
நமக்குத் தெரிந்த சில அய்டியாக்களைச் சொல்கிறோம்.
யார் மனதையும் புண் படுத்தும் நோக்கமல்ல).

ஏன்டா...........அறிவுச்செல்வா!
நேற்று பார்த்தோமே ஒரு செக்ஸ்(SEX) படம் 
அதுதாண்டா...ஷகிலா படம் 

A முத்திரை போட்டுருந்தாங்க 
அப்படினா என்னடா....?
அடல்ஸ்(ADULS ONLY) ஒன்லியா....?
பெரியவங்க மட்டும் பார்க்கிறதா...?

அப்படி எல்லா படத்துக்கும் 
ஏதாவது  ஒரு முத்திரையைக்  குத்தி
படத்தை வெளியிட வேண்டியதுதான்டா?
அதவிட்டுட்டு ஏன்டா இப்படி 
சண்டைபோட்டு மண்டைய உடைக்கிறாங்க?


மதம் (RELIGION)சம்பந்தப் பட்ட படம்னா R-னும் 
சாதி (CASTE)சம்பத்தப்பட்டதுனா C-னும் 
காதல் ஆதரவு (LOVE)படம்னா....L-னும் 
காதல் எதிர்ப்பு படம்னா... ? L -போட்டு அடிசிடனும்!
சிரிப்பு (FUN)படம்னா....F-னும்...
...................................................
......................................................
அப்படியே மொக்க படம்னா...M-னும் 
இப்படி முத்திரை குத்திட்டா 
எந்தப் பிரச்சனையும் வராதுல்ல..

நம்மளும் முத்திரையைப்பார்த்துட்டு
வேணும்னாபோய்ப்  பார்க்கலாம் 
இல்லனா....
முக்காடு போட்டுக்கிட்டுப் படுத்துக்கலாம்  

(அண்ணேன்...
இப்போலாம் உங்களுக்கு 
அறிவு பொத்துக்கிட்டு வழியுது அண்ணேன் 
அப்படியே....
இது இந்துக்கள் படம் 
இது இஸ்லாமியர்கள் படம் 
இது கிருத்துவர்கள் படம் 

இன்னும் கொஞ்சம் மேல....

இது பிராமணர்கள் படம் 
இது நாடார்கள் படம் 
இது செட்டியார்கள் படம் 
இது தேவர்கள் படம் ...
..................................................
இப்படியும் போடலாம் ...அண்ணேன்)

இவர்கள் சண்டை 
இப்படித்தான் இருக்கிறது....
அடே..அறிவுச்செல்வா 
என்கூடச் சேர்ந்து உனக்கும் 
வளர்ந்துவிட்டதடா...வால்..ச்சீ...அறிவு 

 
                 ...........................பரிதி.முத்துராசன்
*************************************************************************
நண்பர் பதிவு (திண்டுக்கல் தனபாலன் வேண்டியபடி....)

நன்றி-இசக்கி's கிறுக்கல்கள் 

மகிழினி மணிமாறன் – தெரியுமா?

************************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள்  கருத்து............................? 

தூசியில் உருவான ஓவியங்கள்!

thanks-lepak.my

கார் கண்ணாடியில் 
படியும் தூசிகள்...




















கலைஞர் ஸ்காட் வேட்
கண்ணில் பட்டாலோ 
கலைமிகு ஓவியங்கள்...

                                  

  






















அதற்கு 
அவர் வைத்த பெயர்....
"Da Vincci of Dust"

                                                                        .........பரிதி.முத்துராசன்

thanks-source and images from-lepak.my
************************************************************************
                                            thanks-YouTube-by jynxprod

Wednesday, January 30, 2013

விஸ்வரூபம் எடுத்த கீச்சுக்கள்!

முன்பு கலைஞருக்கு வலதுபக்கம் உட்கார்ந்திருந்த கமலுக்கே இந்த கதினா இடதுபக்கம் உட்கார்ந்திருந்த ரஜினிய நினைச்சேன் சிரிச்சேன்

ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டியை வெளில வா கோடிப்பேரு நாங்க இருக்கோம்டா


செம RT @SelvaaRocky: "தென்னிந்திய நடிகர்" சங்கத்தை நினைக்கும்போது "வருத்தபடாத வாலிபர் சங்கம்" கைப்புள்ள கதி தான் நினைவுக்கு வருது"

கலைஞராவது அவரது அடியாட்களை தான் காவலனுக்கு பயன்படுத்தினார். மம்மிக்கு எப்பவும் போலிஸ்தான்.

மதத்தின் வியாதியால் ஒரு மகத்தான கலைஞன் உணர்வுக்கு மதிப்பளிக்க தவரிய சமூகத்தால் தமிழனின் நிலை உலகத்தில் அல்ல உளுந்தூர்பேட்டையில் கூட உயராது

தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் காணச் சென்ற ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டுகிறது போலீஸ் #நல்ல இருக்கய்யா உங்க விசுவாசம் போங்கயா

என்னது,மீண்டும் தடையா?இந்த கொடுமையை எங்கேபோய் சொல்வது!நாட்டில் ஆயிரம்விஷயம் நாதியற்று கிடக்குது.கேட்பாரில்லையா?

RT@tubeless28: படம் எடுத்தவனும் சாவறான்.. பயிர் பண்ணவனும் சாவறான்... இதாடா ஒங்க சமூக நீதி !


விஜயகாந்தை எதிர்கட்சித் தலைவராக்கிய ஜெயலலிதா கமலை ஆளுங்கட்சி தலைவராக்க நினைப்பது தவறா?

ஒரு படத்திற்கான மோதல் அல்ல இது ஒரு உண்மையான தமிழனுக்கு தமிழ் நாட்டில் கூட கிடைக்காத மரியாதைக்கான குறல்கள்

ஜெயலலிதா கணக்குப்படி இஸ்லாமியர் பெரும்பாண்மையினர்,கமல் ரசிகர்கள் சிறுபாண்மையினர்.

மாயவரத்தான்....மாயவரத்தான்....@mayavarathaan
DTHலே ரிலீஸ் செஞ்சிருந்தா அவனவன் அவன் வீட்டு டிவியை கல் விட்டு எறிஞ்சு உடைச்சிருப்பானோ?! #கேணப்பயலுங்க #fb

உடன்பிறப்பே உடன்பிறப்பே @udanpirappe
கமல் விழுந்தால் விதையாவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே,இந்த ஆட்சியாளர்கள் விழுந்தால் என்ன ஆவார்களென சிந்திப்பது நல்லது


எல்லோருமே நல்ல கீச்சர்கள்.
.காந்தியவழியில் 
அண்ணாவழியில் 
அய்யா வழியில் 
அம்மாவழியில் 
ம்....ம் தம்பி வழியில் 
விஸ்வரூபம் எடுத்த கீச்சுக்கள்! 


  ............................பரிதி.முத்துராசன்
*************************************************************************
விஸ்வரூபம் பற்றிய நிறைய பதிவுகள் எழுதிவிட்டேன் ...ஆனால் என் மனதளவில் நான் நடுநிலை உணர்வுடனே ...பதிவுகள் செய்துள்ளேன் 
யாரையும் சார்ந்தது போல் தெரிந்தால் வருந்துகிறேன் ...இதுதான்  விஸ்வரூபம் பற்றிய என் கடைசிப் பதிவு பதிவு எதுவும் எழுதமாட்டேன் 
******************************************************************************

விழுந்தால் விதையாக எழுவேன்-கமலஹாசன் உருக்கம்


விஸ்வரூபம் படம் வெளியீடு தடை எதிர்த்து  உயர் நீதிமன்ற தீர்ப்பு என் முந்தய பதிவில் எழுதியதுபோல் வரும்..ஆனால் வராது..?...! என்ற நிலைதான் 
தடை இல்லை என்று தீர்ப்பு கொடுத்த உயர் நீதிமன்றம் கூடவே மேல் முறையீடு செய்யலாம் என்று அனுமதியளித்தது நமது கூற்றுபடியே இருதலைக்கொள்ளி எரும்பு நிலையே  கமலுக்கு...

தீர்ப்பு பற்றிய கமல்ஹாசன் விளக்கம் மிகவும் உருக்கம் 
இந்தத் திரைப்படம்  காலதாமதமான வெளியீடு அவருக்கு மிகப்பெரிய மனவருத்தத்தை தந்துள்ளது தான் மனிதரை நேசிப்பவன் மதம் சார்ந்தவன் அல்ல ...பொருளாதார ரீதியிலும் பாதிப்பு ஆனாலும் அவர் உள்ளத்தில் உறுதி நீடிப்பு விழுந்தாலும் விதையாக எழுவேன் இது அவரது தன்னம்பிக்கை பேச்சு 
























காயம்பட்ட ஒரு கலைஞனின் வலி............   
இதோ அவரது பேட்டி....கொஞ்சம் தமிழிலும் முழுவதும் ஆங்கிலத்திலும் 

     


                                                    thanks-YouTube


Tuesday, January 29, 2013

விஸ்வரூபம்-வரும்...ஆனால் வராது...!...?


தமிழகத்தில் விஸ்வரூபம் திரையரங்குகளில் வெளியிடப்படுமா....? என்ற எதிர்பார்ப்பு .... 
இன்று இரவு 8 மணியளவில் உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு............. 

பிறகு 8.30 மணிக்கு தீ...ர்...ப்...பு....என்றார்கள்  

இப்போது 10.00 மணிக்கு என்கிறார்கள் ...தீ..ர்...ப்...பூ ...(காதில பூ)
அது சரி....தீர்ப்பு சொல்வதுக்கே இந்த இழு இழு இழுக்கிறார்களே 
தீர்ப்பு.... 

                      வரும் ஆனால் வராது...?  
என்ற காமெடி காட்சிபோல் ...

































விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் என்று கதைகளில் படித்த ஞாபகம் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று விஸ்வரூபம்-தமிழகத்தில் தடை விசயத்தில் அரசும் கமலஹாசன் தரப்பினரும் செய்த நீதிமன்ற விவாதங்களில் இருந்து தெரிந்துகொண்டோம் 
கிட்டத்தட்ட இந்த தடை விவகாரம் மற்றும் விவாதம் அந்த படத்தை காசு கொடுக்காமல் ஓசியில் பார்த்து விட்டதாகவே தோன்றுகிறது ..


இதற்க்கு முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல்....(விஸ்வரூபம்-சில கேள்விகள்...?)
திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிகள் வரும்போது "குடி குடியைக்கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்" என்றும்  புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும்போது  "SMOKING IS INJURIOUS TO HEALTH" என்றும் எச்சரிக்கை வாசகங்கள் வருவது போல் மதச் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும்போதும் மற்றும் கற்பழிப்பு,கொலை,கொள்ளை காட்சிகள் வரும்போதும்  இ.பி.கோ.சட்டங்களையும் குற்றத்திற்கான தண்டனைகளையும் எச்சரிக்கை வாசகங்களாகத் திரையில் வெளியிடலாமா..? ...என்று நாம் கேள்வி எழுப்பியதுபோல்.....
 இத்திரைப்படம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல என்றும் இப்படத்தில் சித்திகரிக்கப்பட்டுள்ளது போல் அனைத்து இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்ல என்பதாகவும் எச்சரிக்கை வாசகத்துடன் கர்நாடகாவில் வெளியிடப்பட்டுவிட்டது கேரளாவிலும் பிரச்சனை இல்லை

இங்கே இப்போது உயர் நீதிமன்றம் ....தீர்ப்பு ...வரும்...ஆனால் வராது...!...?
அப்படியே வந்தாலும் படம் திரையரங்கங்களில் ...வரும் ஆனால் வராது...? 
செல்லுலாய்டு  படம் செல்லரித்துப் போன பின்புதான் தீர்ப்பு வருமோ...? 
எல்லோரும் பார்த்து முடித்தப்பின்புதான் அரங்கில் வந்து ஆடுமோ...?
என்ன உலகமடா....இது?

........................................................................................................................................................
நேற்று இரவு 9 மணிக்கு இப்பதிவு வெளிவந்தது காலையிலிருந்தே தீர்ப்புக்காக காத்திருந்து கடுப்பில் இப்பதிவை வெளியிட்டோம்   ...இரவு 10.30 மணிக்கு தீர்ப்பு வந்தது ..............கூடவே மேல் முறையீடு என்றும் சிக்கலும் சேர்ந்துகொண்டது ...இன்று  இதுவரை (காலை 10 மணிவரை வரும் ஆனால் வராது...? ..நிலை மட்டும் மாறவில்லை!

செய்தி...............
 இன்று தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வெளியான பிறகு படத்தை வெளியிடலாம் என்று திரையரங்குகள் முடிவு செய்துள்ளதாகவும் செய்தி.
 வரும்...ஆனால் வராது - VADIVELU COMEDY.
                           thanks-YouTube-by -rajasankarprem

சிலந்தி சில்க் மேலாடை


இது சிலந்திகளின் பிசினிளிருந்து தயாரிக்கப்பட்ட ஒருவகை சில்க் மேலாடை.இதை தயாரிக்க சுமார் 1.2 மில்லியன் பெண் சிலந்திப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன.சிலந்திப்பூச்சிகள் அனைத்தும் ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் மலைப்பகுதியிலிருந்து பிடித்துவரப்பட்டவைகள்  















































தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்த மேலாடையை ஜவுளி நிபுணர் Simon Peers மற்றும் ஆடை வடிவமைப்பாளர்  Nicholas Godley-யும் இணைந்து மூன்று ஆண்டுகளாக உருவாக்கினார்கள் 






























 இவர்கள் பிடித்துவந்த சிலந்திப்பூச்சிகள் உபயோகத்துக்குப் பிறகு எவ்வித உயிர் சேதாரமின்றி மீண்டும் காட்டில் கொண்டு விடப்பட்டன.

                                                                      .........................பரிதி.முத்துராசன்.


                                                 thanks-YouTube-itnnews
thanks-source and images from zurmat.com
***********************************************************************

பதிவர் உலகின் நிஜரூபம் என்ன...?கருத்துக்கணிப்பு


ஏல....அறிவுச்செல்வா...
எங்கல போய்த் தொலைஞ்சல....?
இப்பலாம் நான்தான்
ஏதும் கீச்சுரதுமில்ல பீச்சுரதுமில்ல
இப்ப ஏன்ல வீட்டு வாசல்ல கூட்டம்? 


காவி பயங்கரவாதத்துக்கு ஆதரவும் சொல்லல எதிர்ப்பும் சொல்லல என்ன சொன்னேன்னு எனக்கே தெரியல அப்புறம் என்னல....?

 

திரிஷா சொன்னதயும்..ஆதரவும் சொல்லல எதிர்ப்பும் சொல்லல என்ன சொன்னேன்னு எனக்கே தெரியல அப்புறம் என்னல....?


 

விஸ்வரூபம் பிரச்சனையிலும்.ஆதரவும் சொல்லல எதிர்ப்பும் சொல்லல என்ன சொன்னேன்னு எனக்கே தெரியல அப்புறம் என்னல....?





(அண்ணேன்........அதுதான் பிரச்சனையே...
ஆதரவு சொன்னதாக ஒரு கூட்டம்..ம்ண்ணேன்
எதிர்ப்பு சொன்னதா ஒரு கூட்டம்...ம்ண்ணேன்
இதெல்லாம் விட பெரிய கூட்டம்...தமிழர் கூட்டம் 
சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கத்தெரியாத  இனம் தமிழ் இனமே. அது அறிவு வளர்ச்சியா? அறிவு வீழ்ச்சியா?
அப்படின்னு சொல்லிப்புட்டிங்களாமே....?
இப்ப என்ன..அண்ணேன் பண்ணலாம்....?
அவியிங்ககிட்டஎன்ன...அண்ணேன் சொல்லலாம்?)

இது என்னத்தல வம்பாப் போச்சு...
நானும் தமிழன்தான்...ல முத்தமிழன்....ல
நெல்லையிலப் பிறந்த நெல்லைத் தமிழன்.....ல..!  
மதுரையில வளர்ந்த மதுரைத் தமிழன்...டா...! 
இப்ப சென்னையில வாழ்ற சென்னைத்தமிழன்...தா!  


அவங்ககிட்ட சொல்லுல
ஆகட்டும் பார்க்கலாமுன்னு சொல்லுல...



(ஆகட்டும் பார்க்கலாமா...?
அப்படினா என்ன.....அண்ணேன்?)

அட..சொங்கிப்பய மவனே..
அதுகூட தெரியாமல இருக்க
ஆகட்டும் பார்க்கலாம்னா
ஆமாமுனும் இல்ல இல்லனும் இல்ல
அப்படித்தான்ல நானும் நினைக்கிறேன்
அகராதியில்கூட அர்த்தம் இல்லல
அதுக்கு அப்பச்சிக்கிட்டத்தான் கேட்கனும்
அவரும் இப்ப இல்லல 




(அண்ணேன்....புதுசா ஏதோ வண்டி வந்திருக்கு...ண்ணேன் நம்ம சீயான புடிச்சிட்டுப் போக சேது படத்தில கடைசில வருமே அந்த வண்டி மாதிரி இருக்கு..ண்ணேன்)

 

அடே...அவனுங்க மொட்ட போட்டு
இருக்கிற கொஞ்சம் அறிவையும்
இல்லாமப்பன்னிடுவாங்கடா.....
ஆடு..மாடு திங்குறமாதிரி...
இலை தளைதாண்டா தருவானுங்க..
பேசமா...புழல்ல கொண்டு போடச்சொல்லுடா
அங்க கறியும் சோறும் போடுறாங்களாம்...  
               















img thanks-fun2video

படமோ...பதிவோ 
இந்தக் குதிரப்பயவுள்ள கங்கணம் மாதிரி  
தையக்க தக்கான்னு குதிச்சா..
பிரச்சனையே இல்ல...
பணத்துக்கு பணமும் பேருக்கு பேரும் சேரும் 
அட...நானும் குதிச்சுத்தான் பாக்குறேன் ..
காலு சுளுக்குனதுதான் மிச்சம் 
                            ...............................பரிதி.முத்துராசன்    
 ****************************************************************************
அன்பர்களே!நண்பர்களே! இதுவரை இலைமறைவாக இருந்த பதிவர் உலக யுத்தம்  விஸ்வரூபத்தால் இன்று வெளிச்சத்துக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது நீங்கள் ஒரு பதிவராகவோ அல்லது பல பதிவுகளைப் படிப்பவராகவோ இருந்தால் உங்கள் கருத்தை சொல்லுங்கள்............பதிவர் உலகின் நிஜரூபத்தை அறிந்துகொள்ள இது உதவுமே....



இன்றைய பதிவர் உலகின் உண்மையான நிலை என்ன...?



  வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி 

*********************************************************** 
இப்பதிவு பற்றிய கருத்து..................?

Monday, January 28, 2013

விஸ்வரூபம்-நடந்தது என்ன?நிஜம்!


விஸ்வரூபம் திரைப்படத்தில்  கமல் ஏன் தீவிரவாதம் பற்றியக்  கதையைத் தேர்ந்து எடுத்தார்? ஒரு சமுதாயத்தை இழிவு செய்யவேண்டும் என்ற நோக்கமா?
தீவிரவாதம் பற்றி விஸ்வரூபம் படம் எடுக்கக் காரணம் கமலஹாசனின் வெறி....? கலைவெறி !
கலைத்தொழில் மீதுள்ள அவரது தீவிரவாதம்!


புதிய தொழில்நுட்பமான ஆரோ-3D ஒலி வடிவத்தை அவர் அறிய நேர்ந்த போது அவருடைய கலைவெறி இந்த கதையை தேர்வு செய்ய வைத்துவிட்டது.அது இந்த அளவுக்கு அவரை சிக்கலில் கொண்டு விடும் என்று நினைக்கவில்லை. 

உலகில் இந்தத் தொழில் நுட்பத்தில் விஸ்வரூபத்துக்கு முன்பு 
வெளிவந்தவைகள் இரண்டு படங்களே
அதிலும் Red Tails-திரைப்படம் முழுக்க முழுக்க யுத்த திரைப்படம் இரண்டாம் உலகப்போரில் தரைவழி வான்வெளி பங்கு பெற்ற ஆபிரிக்க அமெரிக்க விமானிகளில் ஒரு Tuskegee  குழு மற்றும் அவர்களின் பயிற்சி திட்டம் பற்றிய யுத்தக்காட்சிகள் விமானங்களின் யுத்த பயிற்சிகள் சித்தரிப்பு அதன் அதிநுட்ப ஆரோ-3D ஒலிவடிவத்தில் அந்தத் திரைப்படம் வெற்றிப் பெற்றது 



இரண்டாவது படமான Rise of the Guardians படமும் வெற்றிப்படமே அதிலும்
ஆரோ-3D ஒலிவடிவம் பயன் படுத்த கதையும் William Joyce's The Guardians of Childhood-அடிப்படையில் உருவான 2012 அமெரிக்க 3D கணினி அனிமேட்டட் கற்பனை-சாகச படம்.




இதில் முதல் படமான Red Tails-யுத்த திரைப்படத்தின் அதீத வெற்றி அவரைப்  பாதித்திருக்கலாம் அதுவே உந்துசக்தியாக இன்றைய அமெரிக்க-ஆப்கானிஸ்தான் நிகழ்கால நிஜப் போராட்டத்தை எடுக்கத் தூண்டியிருக்கலாம் அது (ஆப்கான் ஆதரவு அல்லது அமெரிக்க எதிர்ப்பு) இஸ்லாமியர்கள் நிறைந்துள்ள நாடுகளில் விஸ்வரூபத்துக்கு எதிர்ப்பாக உருவெடுத்துவிட்டது 

நல்லவேளை அவர் ஈழப்போராட்டத்தையோ விடுதலைப்புலிகளையோ இதுபோல் எடுத்திருந்தால் (இந்தியாவில் அதை இந்திய தனிக்கத்துறை அனுமதித்திருக்காது)அந்தப்படமும் பிரச்சனையானதாக மாறியிருக்கும் அதுவும் தமிழ்நாட்டில் ஆதரவு-எதிர்ப்பு என்று அரசியலும் நுழைந்திருக்கும் 
புதிய தொழில் நுட்பத்தை இந்தியத் திரையுலகில் அறிமுகப் படுத்தவேண்டும் என்ற அவரின் அதீத ஆசையே அவர் இந்த கதையை தேர்ந்தெடுக்க வேண்டியதானது மற்றபடி எந்தச் சமுதாயத்தையும் அவருக்கு இழிவு படுத்தும் நோக்கமல்ல 
விஸ்வரூபம் கதைக்களத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தம் இல்லை ஆயினும் மதவிசயத்தில் (இஸ்லாமியர்கள் மட்டுமல்ல) அனைத்து மதவாதிகளும்  ஓன்று சேர்வதிலும் எதிர்ப்பதிலும் முன்னணியில் இருப்பார்கள் என்பதை பகுத்தறிவாளரான  அவர் அறியாதது ஆச்சரியமே!

இந்திய முதல் சுதந்திரப்போராட்டம் வெள்ளையர்களை எதிர்த்து சிப்பாய் கலகம் உருவாகக் காரணமே ராணுவத்தில் இதுபோல் மதஉணர்வை இழிவுபடுத்திய  சம்பவம் என்று சரித்திரத்தில் படித்த ஞாபகம் அதையும் கமலஹாசன் அறியாதது ஆச்சரியமே!

நமது கருத்துக்கணிப்பில் விஸ்வரூபம் தடைசெய்தது நியாயமில்லை என்றே அதிக வாக்குகள் பெற்றபோதிலும்..............
இந்திய தனிக்கத்துறை விஸ்வரூபத்தை அனுமதித்தாலும் ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காக்க மாநில அரசுகள் அனுமதிப்பதும் தடைசெய்வதற்கும் உள்ள உரிமையை யாரும் மறுக்க முடியாது எந்த நீதிபதி படத்தைப் பார்த்தாலும் மாநில அரசை எதிர்த்து செய்வாரா..? சந்தேகமே!

ஒரு திரைப்படம் இந்தியாவில் சிலமாநிலங்களில் வெளியாவதும் சில மாநிலங்களில் தடை செய்யப்படுவதும் புதியதல்ல.நஸ்ருதீன்ஷா-சரிகா நடித்த  பஜானியா(Parzania)-வும் பல விருதுகள் பெற்ற Firaaq குஜாரத்திலும்   அமிதாப் நடித்த Aarakshan படம் உ.பி.யிலும் இன்னும் இதுபோல் நிறைய படங்கள் உள்ளன
 


 உலகிலேயே சினிமா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் தமிழ்நாடே சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்கத்தெரியாத  இனம் தமிழ் இனமே....இங்குதான் சினிமாவில் வள்ளலாக நடித்தவர்  முதல்வராக முடியும் 
ஒரு கதாநாயக நடிகர் நினைத்தால் ஆட்சிமாற்றமே கொண்டுவர முடியும் அது அறிவு வளர்ச்சியா? அறிவு வீழ்ச்சியா? இத்தகைய சிறப்புவாய்ந்த தமிழ் சமுதாயத்தில் விஸ்வரூபம் போன்ற அறிவுஜீவி படம் எதுவும் செய்யலாம்.  

இங்கே ஒரு முடிவுக்கு வருவோம்............ 

நவீன தொழில் நுட்பம் மேல் உள்ள தீவிர பற்று காரணமாகவே கமலஹாசன் அவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்துக்குத் தீவிரவாதம் பற்றிய கதையை எடுத்துக்கொண்டார் என்றும் அவருக்கு உண்மையில் மனதளவில் சிறு கடுகளவு கூட எந்த மதத்தின் மீதும் இழிவுப் படுத்தும் நோக்கமில்லை என்றும் முடிவுக்கு வரலாம் 

அதனால் கமலஹாசனே கொஞ்சம் இறங்கி வந்து சில காட்சிகளை நீக்கிவிட்டு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் விஸ்வரூபத்தை திரையிடலாம் அவரும் அந்த நோக்கத்தில்தான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் என்று நினைப்போமாக! 
கடைசி செய்தி-உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு ...
அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேச கமலஹாசனுக்கு உத்தரவு 

                          ............................பரிதி.முத்துராசன்
கடைசியாக ஓன்று சொல்கிறேன் ...........மிக பலமிக்க யானையை அங்குசத்தால்  அடக்கிவிடுகிறான் மனிதன் ஆனால் அதே யானைக்கு மதம் பிடித்தால் அது பாகன் என்றுகூட பார்ப்பதில்லை  
இன்னும் ....சில அழுக்குச்சட்டைகள்

*****************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து.....?  

Sunday, January 27, 2013

சில அழுக்குச்சட்டைகள்!


அந்தச் சலவைத்துறையில்
வெளுப்புக்கு வந்தன 
சில அழுக்குச்சட்டைகள் 

மதக்கறை  பட்ட
அழுக்குச்சட்டைகள்

அவைகளில்
யார் சுத்தமென்று...?
காவிச் சட்டைகளும்
பச்சை சட்டைகளும்
பயங்கரச் சண்டைப்போட்டு 
இரண்டுமே கிழிந்துபோயின

இடையில் நாட்டமை செய்த  
வெள்ளைச்சட்டையோ
இருவரையும் தூண்டிவிட்டு...
கலவரத்தை கலோபரமாக்கியது

எட்டி நின்று இவர்களை
வேடிக்கைப் பார்த்தது
காக்கிச்சட்டை...

கலவரத்தின் நிறம் என்ன...?

புரிந்தும் புரியாமலும் 
குழப்பத்தில் கருப்புச்சட்டை...


மிக பலமிக்க யானையை அங்குசத்தால்  அடக்கிவிடுகிறான் மனிதன் ஆனால் அதே யானைக்கு மதம் பிடித்தால் அது பாகன் என்றுகூட பார்ப்பதில்லை   

..............................................பரிதி.முத்துராசன்  
**********************************************************************************
இப்பதுக்கு வருகின்ற கருத்துக்களும் விளக்கங்களும்........

1............மோனம் விட்டெழுந்த முத்துராசா!-மத
மான பொருளேடுத்தது என்ன ராசா?
ஈனப் பொருள்களையச் சாக்கடையுள்-இங்கே
இருவர் இறங்கிவிட்டால் என்ன ராசா?
கூனப் பிரதிநிதி, முத்துராசா! -கூடக்
குழப்பிக் கொடுத்தாலென் சின்னராசா?
ஆனைபெயரெடுத்த தேன்ராசா? -அந்த
அப்பிராணி சத்தியத்துக்கு அடங்கும்,ராசா!
நனறாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகிறேன்

................எழுத்து.நண்பர்-காளியப்பன் எசக்கியேல் 
(என் பதில்-நன்றி அய்யா...உமது கருத்தும் எனது கவிதைபோல் குழப்பமாக உள்ளது ஆயினும் இங்கு எல்லாச் சட்டைக்களுமே அழுக்குத்தான் என்பதை உணர்த்தவே இது கருப்புச்சட்டையும் விதிவிலக்கல்ல சலவைக்கு வந்த அழுக்குச்சட்டைகளில் அதுவும் ஓன்று )

2...............நடப்பினை நயமாக சொன்ன விதம் அழகு அய்யா. இங்கு மதங்களை தூண்டி விட்டு மதவாதம் செய்வோரே அதிகம். அண்ணன் தம்பியாய்,மாமன் மச்சானை பழகுவோரிடம் பங்காளி சண்டையை மூட்டி பனிகாய்கிறது .. 
............................எழுத்து.நண்பர் -ஈஸ்வர் தனிக்காட்டு ராஜா 
(என் பதில்-நன்றி நண்பரே....இங்கு எல்லாச் சட்டைக்களுமே அழுக்குத்தான் என்பதை உணர்த்தவே இது கருப்புச்சட்டையும் விதிவிலக்கல்ல ) 

பெண்களை ஈர்க்கும் தங்கச்சட்டை!


காதலில் ஆண்கள் பெண்களைக் கவர்ந்திடவும் பெண்கள் ஆண்களைக்கவர்ந்திடவும் பல வழிகள் முயற்சிப்பது உண்டு

பெண்கள்  உடைகள்,முகச்சாயங்கள்,அணிகலன்கள்,இவைகளால் 
தங்கள் இயற்கை அழகை மேம்படுத்துவார்கள் 
ஆண்கள் பெண்களை ஈர்க்க என்ன செய்வார்கள்...?
அந்தக் காலத்தில் சிலர் கவிதை எழுதி காதலிக்க முயலுவார்கள் இன்னும் சிலர் தங்கள் கட்டு மஸ்த்தான  உடலைக்காட்டி (அதுதான் ஜல்லிக்கட்டு,சிலம்பாட்டம்,....)

























இந்தக் காலத்து ஆண்கள் தங்கள் உடம்பைக்காட்டினால் பெண்களுக்கு அவன் மேல் வந்த காதலும் வராமல் போய்விடும் 
இப்போதெல்லாம் ஆண்கள் தாங்கள் ஒரு பணக்காரர்களாகக்  காட்டிக்கொண்டு பெண்களைக் கவர நினைக்கிறார்கள் 
இதோ இந்தப் படத்தில் நாம் காணும்  தத்தா ப்ஹுகே ஒரு பணக்கார இந்தியர் அவர் அணிந்திருக்கும் தங்க ஆடையின் விலை ரூ. 11,83,610






















இந்தத் தங்கச்சட்டையை  15 தங்கம் செய்யும் கொல்லர்கள் உழைப்பில் 24 காரட் தங்க நூல்களால் உருவானது
தங்கம் என்றாலே பெண்களுக்கு ஒர் ஈர்ப்பு உண்டு நிச்சயம் இதை அணித்திருக்கும் இந்தத் தங்க மனிதர் பெண்களைக் கவருவாரா ...?

                                                                   ..............................பரிதி.முத்துராசன்  

thanks-source and images from zurmat.com
*******************************************************************************************
UA-32876358-1