google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: February 2013

Thursday, February 28, 2013

2013-ஆஸ்கார் அலசல்-II

கலிபோர்னியாவில் நடந்த 85 வது (ஆஸ்கார்) அகாடமி விருதுகள் படம்-Silver Linings Playbook-ல் சிறப்பாக நடித்த நடிகை ஜெனிபர் லாரன்ஸ்-க்கு வழங்கப்பட்டது.
 
சிறந்த நடிகை- ஜெனிபர் லாரன்ஸ் 
சிறந்த ரொமாண்டிக் திரைப்படமான Silver Linings Playbook-ல் 22 வயதான இவரது நடிப்பு மிகப் பிரபலமாக பேசப்பட்டது.இப்படம் இவருக்கு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, கோல்டன் குளோப் விருது, இன்டிபெண்டன்ட் ஸ்பிரிட் விருது, சேட்டிலைட் விருது, சிறந்த நடிகைக்கான அகாடமி விருது (Screen Actors Guild Award, Golden Globe Award, Independent Spirit Award, Satellite Award, and the Academy Award for Best Actress)நிறைய பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளது.







 


















இவரே உலகின் குறைந்த வயதில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது வென்ற இரண்டாவது நடிகையாகும்.டேவிட் ஓ ரஸல் இயக்கிய அமெரிக்க காதல் நகைச்சுவைத் திரைப்படம்.இதுவும் ஒரு நாவலின் தழுவல்....இவரது நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது இவருக்கு இந்த வெற்றியைத் தந்தது 


                                     thanks-YouTube-Wendel Nestor
*****************************************************
சிறந்த இயக்குனர்-ஆங் லீ-

85-வது (ஆஸ்கார்) அகாடமி விருதுகள் சிறந்த இயக்குனர் விருது ஆங் லீ(Ang Lee)க்கு அவர்  இயக்கிய படம்-லைப் ஆப் பை (LIFE OF PI)பெற்று தந்துள்ளது. ஆங் லீ-தைவானில் பிறந்த அமெரிக்க திரைப்பட இயக்குனர்,இது இவருக்கு இரண்டாவது ஆஸ்கர் விருது.முதல் விருது Brokeback Mountain (2005)-என்ற படத்திற்கும் இப்போது Life of Pi (2012) படத்துக்கும் வென்றுள்ளார்.




























Yann Martel என்பவர் எழுதிய நாவல் LIFE OF PI அடிப்படையில் அதே பெயரில் ஆங் லீ-யால் இயக்கப்பட்ட இது  2012 அமெரிக்க 3D சாகச திரைப்படம். 50 வது நியூயார்க் திரைப்பட விழாவில் முதல் படமாக இது திரையிடப்பட்டது வெளியிடும்போதே உலகளவில் $ 583 மில்லியனுக்கும் அதிகமாக சம்பாதித்து, வணிகரீதியான வெற்றியைப் பெற்றது. 
ஒரு கப்பல் விபத்தில் குடும்பத்தினர் இறந்துப்போக "பை" படேல் என்ற 16 வயது சிறுவனும் அவனது குடும்பத்தோடு வசித்த ரிச்சர்ட் பார்க்கர் என்ற வங்கப்புலியும்  ஒரு படகு மீது பசிபிக் பெருங்கடலில் தத்தளித்து தவிக்க்கும் கதையே இப்படம்.ஒரு சிறந்த திரைப்படத்துக்குரிய அத்தனை இயல்புகளும் கொண்டது 

அகாடமி விருதுகள் சினிமாவின் நிறைய துறைகளுக்கு வழங்கப்பட்டாலும் எனக்குப் பிடித்த இந்த நான்கு துறைகள் பற்றி மட்டுமே இங்கு எழுதிள்ளேன் ..இதுவரை பொறுமையாக வாசித்த உங்கள் அனைவருக்கும் நன்றி...அலசல் முடிந்தது...நன்றி வணக்கம். 

இதிலிருந்து என்ன தெரிகிறது? 

ஆஸ்கார் விருதுகள் வழங்குவதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை ஆனால் எங்கும் நிறைந்த கடவுள் (மதம்) ஆஸ்கார் சினிமா உலகையும் விட்டுவைக்கவில்லை என்பது மட்டும் அப்பட்டமாக தெரிகிறது
                      ......................................பரிதி.முத்துராசன்  

                                   thanks-YouTube-WSJDigitalNetwork

**********************************************************************************

கடைசியாகப் படித்த காதல்கவிதை?


நம்மால் காதலிக்கப்படுபவர்கள் 
மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் 
அறிந்திடலும் புரிந்திடலும்
அதுவே பரஸ்பர காதல் இயல்பு 


அகராதியில் காதலின் முகம்
அளப்பறியா அதீத பாச உணர்வு
அதன் இன்னொரு முகமூடி
அதீத பாலியல் உணர்வு 





கற்பனைக் காதல்-
அரைவேக்காடு ஓவியர்களின் 
தெளிவற்ற கற்பனை ஓவியம்

தேவதாஸ் காதல்-
பாலியல் உணர்வுகளால்
அரிப்புத் தேய்மான அழிவு .
கதைகளைப் போன்று... 

அரவணைப்பும் தோழமை உணர்வும் 
அங்கே அரிதிலும் அரிது




நிபந்தனையற்ற காதல்-
 எதையும் பொருட்படுத்தாமல் 
எடுத்தெறிந்து வாழும் 
ஏளனத்துக்குள் வாழும் 
ஏமாற்றம் எள்ளி நகைக்கும் 


பகட்டு(Puppy) காதல்- 
அறிவற்றதன்மையும் 
தற்பெருமையும் நிறைந்த 
சொகுசு உணர்வு 
ஜொலிக்கும் கண்ணாடி கல்
ஒரு வித போதைக் கள்





பொருளியல் காதல்-
தாய் காட்டும் அன்பு 
தந்தை காட்டும் பரிவு 
அன்பின் அரவணைப்பின்றி 
பொருளாதாரத்தில் புதைவது.


பெற்றோர் வழிகாட்டுதலில்
வளரும் காதல்...
தத்தளிக்கும் போது
துடுப்புகள் கிடைக்கும் 
உண்மையில் இந்தக் காதல் 
உண்மைக்காதல் 

 

நட்புக் காதல்-
நல்ல காதலா? கள்ளக் காதலா?
விவாதிக்கப்படும் காதல் 
விவேகமில்லாதது.
நடைமுறையில்
வெளியுலகுக்கு விரசமாக...  


தெய்வீக காதல்-
காதலிப்பது கடவுள் செயல்...
சாதி மதம் சாக்கடையாக   
கலப்படமாக...
கழிசடையாக...
பகுத்தறிவு அற்ற காதல் 
பண்பாடு மீறிய காதல் 



சுயநலக்காதல்-  
இவர் காதலிப்பது
இரண்டாம் பட்சம் 
இவர் காதலிக்கப்படுவது 
முதல் பட்சம்.....?


சாத்வீக காதல்-
சத்தியமாய் 
இதுதான் காதல்
அடுத்தவர் நலம்பேனும்  
நல்லதோர் காதல் 



ஆசிட் காதல்-
புதிதாக முளைத்த 
அழிக்கும் அமிலக்காதல்
உச்சகட்ட வேதனைக் காதல்
இஃது எந்த வகைக் காதல் 
எதுவும் புரியவில்லை...?


(யோவ்--பரிதி! நீ எங்கே இருக்கிறாய்?
காணாமல் போனாளே என் காதலி 
கடைசியாகப் அவள் படித்தது 
உன் காதல் தத்துவங்களைத்தான்..
கல் எடுத்துக்கொண்டு வருகிறேன் 
நீயும் காணாமல் போய்விடாதே) 


  
   ....................................................பரிதி.முத்துராசன் 
 

***********************************************************************  
 

Wednesday, February 27, 2013

ஹரிதாஸ்-ஒரு சிறப்பு(SPECIAL-FILM) படம்


ஹரிதாஸ்-
இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் வெள்ளித்திரையில் வரைந்த ஓவியம்  ஆட்டிஸ்ட்டிக் குழந்தையையும் அதன் கவனிப்பும் பராமரிப்பும் பற்றிய வணிகரீதியில் சொல்லப்பட்ட(விழிப்புணர்வு)திரைப்படம் 


ஆட்டிசம்(AUTISM-மதியிறுக்கம்-தனக்கென்று ஒரு வட்டத்தை அமைத்துக்கொண்டு வாழ்வது  ) பற்றிய சிந்தனையுடன் உலகத்தரத்தில் உண்மையான தமிழ்படம்...பிறவியிலேயே   ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட  தன் மகனை ஒரு தந்தை அவனுக்குள் ஒளிந்திருக்கும் திறமையைக் கண்டுணர்ந்து அவன் வழியிலேயே வெளியுலகுக்கு  அழைத்துவருவது கதை...இதைச் சினிமாவாக அதுவும் அரங்கத்தில் நமது சிந்தனையைச் சிதறவிடாமல்  கதையுடன் ஒன்றிப்போகச் செய்தது இயக்குனர் திறமை 


அதற்கு அவர் எடுத்துக்கொண்டது என்கவுண்டர் போலிஸ் அதிகாரி(கிஷோர்)-வில்லன் ஆதி(பிரதீப் ராவத்)-அமுதவல்லி ஆசிரியை(சினேகா)ஆகியோர்களின் கதை இவைகள் ஹரிதாஸ்  என்ற அழகிய ஓவியத்திற்கு   மெருகூட்டிய வர்ணங்கள் தெளிந்த நீரோடையாகச் செல்கிறது திரைக்கதை..தெளிவான வசனம்....வெற்றி அறுவடை தரும் பாசனம்  

 இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டதாக நடித்திருக்கும் ஹரிதாஸ் சிறுவன்(பிரிதிவிராஜ் தாஸ்) மற்றும் நடிகர் கிஷோருக்கு மீண்டும் நடிப்பு சவாலான கதாப்பாத்திரம். 
யூகி சேது சிறிது நேரம் வந்தாலும் அவருக்கே உரிய குத்தலான நடிப்பு வார்த்தைகளின் உச்சரிப்பு எல்லாமே சிறப்பு.
சூரியின் காமெடி கதாபாத்திரம் மற்றும் படத்தில் வரும் குத்துப்பாட்டு இவைகள்  படத்தின் சீரியஸ்தனத்தைச் சிதைக்கவில்லை படத்தின் இடைவேளை கதைக்கு இன்னும் எதிர்பார்ப்பை கூட்டுகிறது


படத்தின் இசை(Vijay Antony) பாடல்கள் அதிலும் சிவதாஸ் தாயார் இறந்துபோகும் காட்சியில் ஒரு கிராமத்து பாடல் நெஞ்சைத்தொடுகிறது.வில்லன் ஆதியுடன் நடக்கும் கடைசி சண்டையிலும் அதற்கு ஏற்ப ஒலிவடிவம் அருமை 






  














இந்தத் திரை ஓவியத்திற்கு ஒளிவடிவம் ...கேமரா ...எந்திரன் ரத்தினவேலு ....கதையின் காட்சிகளுக்கு வெளிச்சமிடுவது  பாராட்டத்தக்கது.அதிலும் கடற்கரை குழந்தைகள் பாடல்காட்சி,குதிரைகள் ரேஸ்கோர்சில் ஓடும் காட்சி,இப்படி நிறைய காட்சிகள் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்கின்றன

படத்தில் அனைவரின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது தமிழ் திரைவானில் எப்போவாது இப்படிக் குறிஞ்சியும் மலர்கிறது.ஒரு கவிஞனால்தான் இப்படி உயிரோட்டமான திரைக்காவியம் படைக்கமுடியும் இயக்குனர் குமாரவேலனும் இப்படத்திற்கு பாடல்கள் எழுதிய கவிஞரே 

மேலோட்டமாகப் பார்த்தால் களிமண்.. (நிறைய படங்களில் பார்த்தது போல் நிறைய காட்சிகள் சிலநேரங்களில் மணிரத்தினத்தின் அஞ்சலி படம் கூட  நினைவுக்கு வரும்)ஆனால்  இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் கைகளில் அருமையான கலைச்சிற்பம்

அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய திரைப்படம்  படத்தில் ஹரிதாஸ்-ஒரு சிறப்பு(SPECIAL-CHILD) குழந்தை,ஹரிதாஸ் படமோ-ஒரு சிறப்பு(SPECIAL-FILM) திரைப்படம்
      
   ....................................................பரிதி.முத்துராசன் 

thanks-SoundCloud

Tuesday, February 26, 2013

2013-ஆஸ்கார் விருதுகள்:ஒரு அலசல்


85 வது அகாடமி விருதுகள் விழா (ஆஸ்கார்) பிப்ரவரி 24, 2013 அன்று கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட்-டில் நடந்தது.
உலகளவில் இவ்விருது பெறுவதே சினிமா கலைஞர்கள் கனவாக இருப்பதாலும் உலகில் அதிகம் பேர் பார்வையிடும் நிகழ்ச்சியாக   இருப்பதும் இவ்விருதின் முக்கியத்துவம் இருக்கிறது.  



சிறந்த திரைப்படம்-அர்கோ(ARGO)

இது 2 0 1 2-ல் பென் அஃப்லெக்(Ben Affleck) இயக்கி-நடித்த அமெரிக்கக் கற்பனை திரில்லர் திரைப்படம். 
இது மாஸ்டர் ஆப் டிஸ்கியூஸ்(The Master of Disguise)என்ற புத்தகம் மற்றும் லேமாண்ட் ஜான்சன்-1979 ஈரான் பணயக்கைதிகள்பற்றி இயக்கிய ஒரு தொலைக்காட்சி படம் (Escape from Iran: The Canadian Caper)ஆகியவற்றின் தழுவல்.
இப்படத்தின் கதை....

























1979 இல் தெஹ்ரானில் அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கிய ஈரான் தீவிரவாதிகள் தூதரக ஊழியர்களில் 50 க்கும் மேற்பட்டவர்களைப் பணயக் கைதிகளாகச் சிறை பிடித்தனர்....அவர்களில் ஆறு பேர் டோனி மெண்டஸ்(Ben Affleck)தலைமையில் தப்பிய கதையைச் சொல்கிறது (இப்படத்துக்கு ஆஸ்கார் விருது வழங்கியதற்கு ஈரானில் எதிர்ப்பு என்று செய்தி ஊடகங்கள் சொல்கின்றன). 


இப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளதை கூட்டிக் கழித்துப்பார்த்தால் கமலின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு 2014-ல் ஆஸ்கார் விருது 99% கிடைக்க வாய்ப்பு உள்ளது. அர்கோ (ஈரான் தீவிரவாதிகள்)படம் போன்று விஸ்வரூபமும் (ஆப்கான்)தீவிரவாதிகள் பற்றிய படம்    

******************************************************************** 

சிறந்த நடிகர்-டேனியல் டே லூயிஸ்(Daniel Day-Lewis)
 











 










லிங்கன்(Lincoln)என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக டேனியல் மைக்கேல் பிளேக் டே லூயிஸ்-க்கு சிறந்தநடிகருக்கான ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. இவர் லண்டன் அரசவைக் கவிஞர் செசில் டே லூயிஸ் மற்றும் நடிகை ஜில் பால்கன் ஆகியோரின் மகன் ஆவார்.

இவர் 5 முறை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு....இது அவருக்கு (1-My Left Foot (1989),2-There Will Be Blood (2007) 3-Steven Spielberg's Lincoln (2012).....மூன்றாவது ஆஸ்கார் விருது.


(அய்யா...டேனியல் டே லூயிஸ் அய்யா...எங்களவர்கள்  ஒரு விருதுக்கே தரிகிடத்தோம் போடும் போது...நீங்கள் நடிப்புக்கு மூன்று விருதுகள் வாங்கிய மர்மம் என்ன....? எங்கள் நடிகர்களுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள் அய்யா!..இவர்கள் விருது விருது என்று சொல்லி எங்களை வறுத்தெடுப்பது தாங்கமுடியவில்லை)   

விரைவில் அடுத்தப் பதிவில்...............
சிறந்த நடிகை- ஜெனிபர் லாரன்ஸ் (Jennifer Lawrence)படம்-Silver Linings Playbook மற்றும் சிறந்த இயக்குனர்-ஆங் லீ(Ang Lee)படம்-LIFE OF PI ஆகியோரைப்பற்றிப் பார்ப்போம்..............................(தொடரும்)  

   
   ....................................................பரிதி.முத்துராசன் 
 **********************************************************
 
                                                   thanks-YouTube-filmisnow

*****************************************************************************
இப்பதிவு பற்றிய தங்கள் கருத்து....?

கீழே கிடந்த நூறு ரூபாய் நோட்டு

யாரோ தவறவிட்ட நூறு ரூபாய் நோட்டு
யார் கண்ணிலும் அகப்படாமல் 
ஒரு குப்பைத்தொட்டி அருகே 
கடைவீதியில் கிடந்தது.... 

தள்ளாடி தள்ளாடி வந்த அவனோ
அந்த ரூபாய் நோட்டு அருகில் 
கால் தடுக்கி விழுந்தான்...

ரூபாய் நோட்டிலிருந்த உத்தமரோ... 

"அய்யோ....பாவம் 
தரணியாளப்பிறந்த  தமிழ்குடிமகன் 
தள்ளாடுகிறான் பசியால்....
அம்மாவின் இட்லிக்கடையில் 
அவன் கொடும்பசி  தீரட்டும்" என்று.


அவன் கண்ணில் படும்படி 
அந்த நூறு ரூபாய் நோட்டும்
அவனருகே வந்து விழுந்தது....
அக்கம் பக்கம் 
நோட்டமிட்ட அவனோ
அப்படியே அமுக்கிக் கொண்டான்...

'தனியொரு மனிதனுக்கு 
உணவு இல்லையேல்...
தரணியை அழித்திடுவோம்'
பாரதியை நினைத்து 
பாரதத்தந்தையும் சிரித்தார்....

விழுந்த அவனோ 
கவலைப்பட்டான்...  

"உத்தமர் உள்ளநோட்டை 
குப்பையில் வீசியது யாரடா?"

கவலைக்கு மருந்து 
கடையில் வாங்கினான்
டாஸ்மாக் கடையில் வாங்கினான் 

இப்போது அந்த ரூபாய் நோட்டும் 
மதுப்புட்டிகளின் காலிப்பெட்டியில்
அதுதானே டாஸ்மாக் கல்லாப் பெட்டி..

"அடேய்...பாதகா!
இதுக்கு அதுவே பரவாயில்லை 
மீண்டும் என்னை 
குப்பைத்தொட்டியிலே போடடா..."

உள்ளேயிருந்து உத்தமரின் குரல்...
அவன் காதில்  எங்கே விழப்போகிறது? 

இப்போது அவன் கிடந்தான் 
அந்தக் குப்பைத்தொட்டியில்...... 

 

....................................பரிதி.முத்துராசன்

****************************************************************************

டாஸ்மாக் பற்றிதான் உலகின் அதிகபட்ச ட்வீட்ஸ் இருக்குமோ? என்னால் கணக்கெடுக்க முடியவில்லை 
இங்கே சிரிக்க வைத்த சில டாஸ்மாக் ட்வீட்ஸ்...போதை (தரும்)கீச்சுக்கள் 


தமிழனின் தகுதி டாஸ்மாக்கும், படுமட்டமான மசாலா படங்களுமே என இந்த அரசு எள்ளலுடன் நமக்கு நினைவூட்டுகிறது !!
நாளைய தேதியை 'டாஸ்மாக் டே'ன்னே அறிவிக்கலாம் போல. ..ம்மாளே! பார்ல சீரியல் செட்டுல்லாம் மாட்டிருக்கானுவ!
தமிழக மக்களுக்காக ஜெ. எப்படியெல்லாம் போராடுகிறார் தெரியுமா?: நாஞ்சில் சம்பத் #டாஸ்மாக் வருமானம் பிச்சிக்கிறப்பவே தெரியும்ங்க,

ரஜினி ,அஜித் , விஜய் பட வசூலை முறியடித்தது .டாஸ்மாக் 270கோடி வசூல்
தமிழகத்திற்கு போதுமான தண்ணீர் உள்ளது: பிரதமரை சந்தித்த கர்நாடக எம்.பி.க்கள் குழு தகவல் # அடப்பாவிகளா, அது டாஸ்மாக் தண்ணிடா!
சம்பள தினத்தன்று டாஸ்மாகுகளை மூடவேண்டும்-ஞானதேசிகன்#ஆளு பாக்க பொறி உருண்ட மாதிரி இருந்தாலும் நல்லாகாமெடி பன்றாப்ள...
"டாஸ்மாக் எனக்கொரு போதை மரம், நாளும் எனக்கொரு குவார்ட்டர் தரும்...!!"

thanks to all twitters and their tweets...if anybody dislike this,please unfollow me...thanks
*******************************************************************************
 
InfozGuide
UA-32876358-1