google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: March 2013

Sunday, March 31, 2013

தமிழனின் தலை எழுத்துக்கள்


'' -என்றதும்  
''-னு வாயத் திறந்தால்
''-லவசம்  என்பார்
''-வாயில் நுழையும் நமக்கு
''-ண்மையில் லாபம் அவருக்கு
''-ளையிடாதே...தமிழா!
''-ட்டி  மிதிப்பார் அவர்
''-ளனம் செய்வார் உன்னை
''-யா சாமி என்றால் 
''-ரு ரூபாய் இட்லி தந்து 
''-ழிஞ்சிப் போ...  
'அவ்'-வளவுதான் என்பார் 
இ''து அரசியல் கோட்பாடு  இங்கே! 


இவை தமிழ் உயிரெழுத்துக்கள் 
இல்லைவே  இல்லை...தமிழா! 

தமிழனின் தலை எழுத்துக்கள்
தேர்தல் காலம் வரும்போது
அரசியல்வாதிகள் எழுதுவார்கள் 
புதுப் படம் வெளிவரும் போது 
சினிமா நடிகர்கள் எழுதுவார்கள்



 அகர முதல எழுத்தெல்லாம் சினிமா
 அரசியல்  முதற்றே உலகு
                                                     ......................பரிதி.முத்துராசன்

                                               thanks-YouTube-MagicboxTamRhy

*********************************************************************


எலேய் ...அறிவுச்செல்வா.
எங்கல போய் ஒழிஞ்ச....
மறுபடியும் வீட்டு வாசல்ல சத்தம் கேட்குது 
என்ன கூட்டம் போய் பாருல....சில்லாட்ட மூத  

(ஆம்மாம்..இவருக்கு வேலையே இல்ல 
எதையாவது எழுதுவாரு..அப்புறம் 
ஆமாம் சாமி போடுவாரு..பெரிய   கவிஞரு...
அண்ணேன்...நீங்க புதுசா குறள் எழுதினிங்கலாமே 
அதிமுக-திமுக   கட்சி தொண்டர்கள் வந்துருக்காக 
அஜித்-விஜய்  ரசிகர்கள் வந்திருக்காக...)


அப்புடியா...என்னல வம்பாப் போச்சு....
எதையும் எழுத உடமாட்டேங்கிறாங்க....
அது சரில...மத்தவங்கலாம்  எங்கல...?
ஆளுக்கொரு வாழ்த்துப்பா எழுதி தருறேன்...
அப்படியே வாசிச்சுக்கிட்டு போகச் சொல்லுல....



  


















அகர முதல எழுத்தெல்லாம் அதிமுக
அம்மா  முதற்றே உலகு

**************************************************























அகர முதல எழுத்தெல்லாம் தளபதி
ஸ்டாலின் முதற்றே திமுக

****************************************************
























அகர முதல எழுத்தெல்லாம் இளைய 
தளபதி  முதற்றே சினிமா

**************************************************



























அகர முதல எழுத்தெல்லாம் தல
அஜித்  முதற்றே சினிமா

**********************************************


அடேய்..யாரடா அவன் 
எங்களலாம் பார்த்தா கட்சி தலைவரு மாதிரி தெரியலையா....ஏண்டா..இப்படி...? சட்டசபையில்தான் லொள்ளு பன்னுரிங்கனா..நெட்லகூட கொட்டுரீங்களடா..ஆங்..அடுத்து சி.எம்மா வந்ததும் உன்னைக் கவனிச்சிக்கிறேன்..ஆங்  

Saturday, March 30, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா-சினிமா விமர்சனம்


இயக்குனர் பாண்டிராஜ் எழுதி இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா காதல் நகைச்சுவை திரைப்படம் ஆயினும் நகைச்சுவைக்கே முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளாலும் பேசும் வசனங்களாலும் சிரிப்பு சினிமாவுக்குக் கதையோ அறிவுப்பூர்வமான சிந்தனையோ (LOGIC) தேவையில்லை என்பதை நிருபித்த வெற்றித் திரைப்படங்களில் இதுவும் ஓன்று....

ஊதாரியாக வெட்டித்தனமாக திரியும்  இரண்டு நண்பர்கள் அவர்கள் போக்கிலேயே தந்தையர்களால் விடப்பட்டும் திருத்தப்பட்டும்  வாழ்க்கையில் வெற்றிபெறும்  மாமுலான கதைதான் ஆனால் சொல்லப்பட்ட விதம் அருமையாக .சிரிக்கவைத்துச் சிந்திக்கவைத்த சினிமாக்களில் இதுவும் ஓன்று

ஆரம்பத்தில் சிரித்து வயிறு வலித்தது..கடைசியில் கொஞ்சம் சோகம் நெஞ்சை வருடியது ..கடைசியில் இயக்குனர்  தட்டுத் தடுமாறி திறமையாக மறுபடியும் நகைசுவையுடன் முடித்தது...ஆனாலும் ஒன்றுமே இல்லாத கதை ஏதோ ஒன்றை உணர்த்தியது...தந்தை மகன்களுக்குள் உள்ள பாசப்போராட்டம்...இப்படியும் இயக்குனர்கள் நம்மைத் திரைப்படத்துடன் ஒன்றிடச் செய்பவர்கள் இங்கே தமிழ் திரையுலகில் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது பாண்டிராஜ்-க்கு   ஜெ.... போடலாம்....
































நடிகர் விமல்(தேனீ கேசவன்)-நடிகர் சிவ கார்த்திகேயன்(பட்டை முருகன்) இணைபிரியாத நண்பர்கள் காதல்  உந்துசக்தியால் ஊந்தப்பட்டு இடைவேளைவரை நாயகர்களின் ஒருதலை காதல் காட்சிகளால் படம் செல்கிறது இடைவேளைக்குப் பிறகு வலையைத் தேடி வரும் மீன்களாக அவர்களின்  இரண்டு வாயாடி காதலிகளும் இரண்டு நாயகர்களையும் தேடி...ஆனால் படம்முழுக்க அரைகிராக்குகளாக அலைவதும்... .நிகழ்வுகள் சில திருப்பங்களுடன் (எவ்வளவு நேரம்தான் இவர்கள் காதலை பார்த்து நாமும் ஜொள்ளுவது.?).அதனால் அப்படியே அரசியல் தில்லுமுல்லு காட்சிகள் நம்மைக் குதுகலப்படுத்துகின்றன

விமலின் காதலியாக  மருத்துவ மனையில் டோக்கன் போடும் பெண்ணாக வரும் பிந்து மாதவி கண்களை உருட்டி உருட்டி பார்ப்பதும் நடுரோட்டில் விமலை லேடி ஜேம்ஸ்பாண்ட் மாதிரி எகிறி குதித்து நோண்டி  நொங்கு எடுப்பது  நம்பமுடியாததுபோல் இருந்தாலும் சிரிக்க வைக்கும் காட்சி...அதேநேரத்தில் பிந்து மாதவியின் அம்மா...அம்மம்மா..எல்லோருமே இப்படி டிஸ்யும் சீனத்துச் சிங்காரிகள்தான் என்று காட்டும் காட்சிகள்  இன்னும் அடங்காச் சிரிப்பு



























சிவ கார்த்திகேயனுக்குக்  காதலியாகப் பாப்பா ஜெராக்ஸ் கடை நடத்தும் ரெய்னா கொடுத்த தலையில் கொட்டும் தண்டனையும் உக்கி போடும்  கொடுமையும் இன்னும் வித்தியாசமானது..சிரிக்க வைக்கக் கூடியது.பட்டையின் தந்தை தன் மகனை காணவில்லை என்று பாப்பாவிடம் ஜெராக்ஸ் எடுக்க வரும் காட்சி நல்ல காமெடி..
கதாநாயகிகளில் உடலிலும் உடையிலும் நடையிலும் இல்லாத கவர்ச்சி அவர்களது கொஞ்சும் காதல் மொழியில் உரையாடலில் இருக்கிறது... 


பொதுவாக இப்படிப் பட்ட படங்களில் கதாநாயகன் சினிமா மோகத்தில்தான் அலையோ அலையென்று அலைவார்கள் இங்கே அரசியல்வாதிகள் ஆகும் கனவோடு தேனீ கேசவனும்  பட்டை முருகனும்   உள்ளாட்சி தேர்தலில் நின்று அரசியல்வாதிகளாகத் துடிப்பதும் அப்படியே  அரசியல்வாதிகள் நையாண்டித்தனத்தால் வருத்தெடுக்கப்படுவது மொக்கையோ மொக்கையாயினும் சக்கையல்ல நல்ல நக்கல் (நகைச்)சுவையானது

படத்துக்கு உயிரோட்டமாக இருப்பது விரசமற்ற இரட்டை அர்த்தம் இல்லாத வசனங்களும்  கலகலப்பாகக் கலாய்க்கும்  உரையாடல்களும் கிழமொழியான பழமொழிகள்கூட (எள்ளுதான் எண்ணைக்குக் காயுதுனா எலிப்புழுக்கை  எதுக்குக் காயுது...?) பஞ்சாமிர்தமாய் இனிக்கிறது...முகநூல் லைக்- அன்லைக் வார்த்தைகள் உபயோகம் அருமை உள்ளது

எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் அதனால் பின்னணி இசை அமைக்க  யுவன் சங்கர்-க்கு இடமே இல்லை ஆன்னாலும் இரண்டு பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன அதிலும் நா.முத்துகுமார்  வார்த்தை வீச்சுக்கள் கதையோட்டத்தோடு ஒட்டி உறவாடுகின்றன..  தெய்வங்கள் எல்லாம் என்ற பாடல் அர்த்தமுள்ளது.

தேனீ கேசவன் தந்தையாக டெல்லிகணேஷ் மகனுக்கும் மனைவிக்கும் செலவு கணக்கு காட்டுவதும் அவர் போடும் ஆட்டமும் அப்புறம் மகனிடம் அடிவாங்குவதும் வித்தியாசமான காட்சிகள்

நடிகர் சூரியின் நடிப்பும் இடையிடையே அடிக்கும் நக்கலும் கதைக்கு நயமாகவும் படத்துக்கு நியாயமாகவும் உள்ளது...

முழு நகைச்சுவை படம் என்பதிலிருந்து தவறி தந்தை மகன் பாச உணர்வுகளை விளையாட்டுத்தனமாகக் காட்டினாலும் விபரீதமாக இல்லாமல் விவரமாகப் படம் தந்த இயக்குனரை பாராட்டலாம் ..எல்லா கதாப்பாத்திரங்களும் பேசிப் பேசியே படம் முழுக்க யாரையாவது கலாய்த்துக்கொண்டிருப்பதும்  ஒருகட்டத்தில்  நம் காது சவ்வு கிழியும் நிலை வரும்போது சட்டு புட்டுன்னு தேனீயை பெரிய பழைய பாட்டால் வியாபாரியாக்கியும் பட்டையை பொன்மலை ரயில்நிலையத்தில் வேலை கொடுத்தும் அப்ப்பப்ப்ப்படா..படத்தை முடித்துவிடுகிறார்கள் நாமும் தப்பித்தோம் படமும் மொக்கையிலிருந்து தப்பித்தது.

கடைசியில் பட்டை முருகன் MY DADDY IS GOD என்றும் தேனீ கேசவன்  MY FATHER IS HERO என்றும் அவரவர் தந்தை நிழற் படங்களில் எழுதுவது சிந்திக்க வைக்கும் காட்சிகள்



எல்லாத் தலைமுறையினரும் அதிலும் இளைய தலைமுறையினர் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம் சிரிப்புக்கு உத்திரவாதம் மன அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்..இறுக்கம் இளகிவிடும் 

Friday, March 29, 2013

இக்கடச் சூடு....இதைக் கொஞ்சம் கேளு....


இன்று சிங்களவர்களும்
வட இந்தியர்களே...
என்று சொல்லும் கரியவாசமே!
உன் காரிய வாசகம்
நாற்றமெடுக்கிறது ....

நீயும் உன் கூட்டமும்
மனிதக் கொல்லிகள் 
கொடியவைரைஸ் நோய்கள்
பயங்கரவாத பேய்கள்....
சுடுகாட்டில்கூட 
வாழ தகுதியற்ற காட்டேரிகள்

 
இங்கிருக்கும் வட இந்தியர்கள்
எம் சொந்த சகோதரர்கள் 
என்று சொல்லியே நீயும்

நீ செய்த சதிவேலைகளுக்கு 
சந்தாதார் ஆக்குகிறாயே...


அட சிங்களச் சண்டாளா.....
அதனால்தான் அவர்கள் உனக்கு
விருந்து வைத்தார்களா...?
நெஞ்சமெல்லாம்
நஞ்சு கொண்ட கூட்டமே!
உண்ட நாட்டுக்கு
நஞ்சு கொட்டுகிறீர்களே....?

 
ஏ...எச்சில் பதரே!
நீ இனிக்கத் தின்ற திருப்பதி லட்டு
என் அப்பாவி தமிழன்
உண்டியலில் போட்ட துட்டு....

இங்கே  மாணவர்கள் படைதிரண்டாச்சு...
இனி பலிக்காது உன் வஞ்சக பேச்சு....
 
யோவ்...கரியவாசமே!

கரகரப்பு குரலில்  எங்கள் தலைவர்கள்
உடன் பிறப்பே என்று ஆரம்பித்தால்...
உயிரோடு  நீ சாகும்வரை விடமாட்டார்கள்...
அன்று அவர்களை நீங்கள்  ஏய்த்ததாக 
இன்று அவர்கள் புலம்புகிறார்கள்


எங்கள் அம்மா கதை சொல்ல ஆரம்பித்தால் 
உங்கள் கூட்டம் காது கிழிந்து சாவீர்கள்.... 
இப்போதுதான் ஆரம்பம் அவர்கள் ஆட்டம்  
இனி நீங்கள் எடுக்கவேண்டும் ஓட்டம்
சட்டசபையில் போட்டாச்சு தீர்மானம் 
கெட்ட நேரம்தான் உனக்கு வருமானம்  

இன்னும் இருக்கிறார்கள் 
சுடுகாட்டில் வீர ஒப்பாரி வைப்பவர்கள் 
மைக் கிடைத்தாளும் கிடைக்காவிட்டாலும்  மணிகணக்கில் பேசியே...
உன் மண்டை வெடித்து சாகடிப்பார்கள் ....
இன்னும் நிறைய 
எழுதிப் பிழைக்கும் எழுத்தாளர்கள் 
பாடிப் பிழைக்கும்  கவிஞர்கள்...
எழுதுகோலை   எடுத்துவிட்டார்கள்...
அவர்கள் அரம்பாடியே உன் வம்சம் அழிப்பார்கள் 

உனக்கு மட்டும்தான் பேசத்தெரியுமா...?
உன்னைவிட பெரிய நடிகர்கள் 
இங்கே நிறையப் பேர்கள் உண்டு...
இக்கடச் சூடு....இதைக் கொஞ்சம் கேளு....   


ஏண்டா..பன்னித்தலையா...!
ஒரு தமிழ் மாநிலத்துக்காக 
ஏன் இந்தியாவே கவலைபடவேண்டும்?
என்று கேட்கும் பனங் கொட்ட மண்டையா!
தமிழ்நாடுதாண்டா...இந்தியா.



அண்ணேன்..அவிங்க 
அண்ணன் தம்பிகளெல்லாம் 
ஓடிசாவுல இருகிறாங்களாம்ல...
ஊத்தவாயன் உளறுறான்...
அவிங்கலாம் யாரு அண்ணேன்....?
இங்கத்தானே இருக்கான்  சுனா சானா 
இவிங்க யாரைச் சொல்றானுங்க,,,,?


எலேய்...சில்லாட்ட மூதே...
எங்க தமிழச்சிக மானத்தோட  
விளையாண்டது போதலையா?
பன்னாட பரதேசிப் பயலே
இன்னும் நீ ஐ.பி.எல்.-ல விளையாடனும்மால
அதையும் நான் காசுகொடுத்து பாக்கனுமால... 

இலங்கை தமிழர் பிரச்சனை தமிழ் மக்கள் பற்றிய ஒர் இனப்பிரச்சனை அல்ல மனிதர்கள் உரிமையை அழித்த மனிதாபிமானமற்றவர்கள் பற்றிய உலகப்பிரச்சனை ...இதை  உணர்ந்து கொள்ள மனிதர்களால் மட்டுமே முடியும் அதையும் தாண்டிஉன்னைப்போல் மிருகங்களால் முடியாது..முடியாது...முடியாது.

ஏய்..ய்...நா ஒரு தடவ சொன்னா...நூறு தடவ சொன்னமாதிரி....நீ ஒரு போர் குற்றவாளி...ஆண்டவன் உன்னைப் போலக் கெட்டவங்களைத் தண்டிப்பான்..ஈழத்தமிழர்களைக் கைவிடமாட்டான் ..2-ம் தேதி உண்ணாவிரதம் இருந்து உன்னைச் சோலி முடிச்சிடுறேன்...ஆ..ங் 

என்னோட நண்பனா இருக்கிறதுக்கு எந்தத் தகுதியும் வேண்டாம் ஆனா எதிரியா இருக்குறதுக்குத் தகுதி வேணும்...நான் 'தல'டா..மவன என்கிட்டவேயா ....?

கையாள அணைகட்டி தடுக்க நா ஒன்னும் கால்வாய் இல்லைடா...காட்டாறு...
நீ அடிச்சா....அடி விழும்...
நா அடிச்சா...இடி விழும்   
எவ்வளவோ பண்ணுறோம் இதப் பண்ணமாட்டோமா...?
ஏய்...இந்த ஆட்டத்த ஆரம்பிச்சது நீ...
நடத்திக்கிட்டு இருக்கிறது அவன்...
ஜெயிக்கப்போறது நாங்கதான்டா.....

                                        thanks-YouTube-SriHari S
நீ சொல்லுவ..நாங்க செய்வோம்....ஆட்டம்-போட்டி-பந்தயம்னு வந்துட்டா சும்மா...சொல்லி அடிப்பான் தமிழன்... கில்லி ..கில்லி மாதிரி 
 
அடேய்..கரியவாசமே! கரையான் ...கரிச்சான் குஞ்சே!
எங்களிடம் இப்படி நிறைய பஞ்ச் இருக்கு
அத்தனையும் கேட்டால் நீ பஞ்சறாகிடுவ....... 


Thursday, March 28, 2013

டாஸ்மாக்-எப்படி நம்ம அய்டியா...?


தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்றும் சுமுகவிரோதிகள்தான் மதுவிலக்கு வேண்டும் என்கிறார்கள் என்றும்
சமூக விரோதிகளுக்குச் சென்று கொண்டிருந்த மது வருவாயை அரசின் கஜானாவிற்குக் கொண்டு வரவே டாஸ்மாக் மூலம் மது விற்பனை தொடங்கப்பட்டது என்றும்.... மதுவிலக்கு மற்றும் 
ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் நாற்றம் (யோவ்..அது நாற்றம் அல்ல நத்தம் .கணணியை பார்த்து தட்டு இல்லனா உன்னையும் இரண்டு தட்டு தட்ட வேண்டியிருக்கும்) சாரி...நத்தம் விஸ்வநாதன் பேசினார்.....

அவர் பேச்சைக் கேட்டு  நாட்டின் மீது பற்று கொண்ட நமது சிறப்பு 'குடி'மகன் மண்ணாங்கட்டியும் இப்படி சில அய்டியாக்களை வாரி வழங்கினார்.....
அய்டியா-1 (நல்ல சரக்கு) 

இதற்குமுன்பு சமுக விரோதிகள் ஹார்ட்வேர்ஸ் கடைகளில் தின்னர்,  வார்னிஷ் வாங்கி அதனுடன் நீர்கலந்து விற்றும்..கள்ளச் சாராயம் என்ற பெயரில்  சல்பைட் பவுடர்,பேட்டரி மருந்து கலந்து காய்ச்சியதை  விற்றும் (கலவைக்கோளாறில்) நிறையப் பேர் இறந்தார்கள்...
சமுக விரோதிகளால் இப்படி யாரும் துடிதுடித்துச்  சாகக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் நமது அரசாங்கமே  டாஸ்மாக் கடைகளில் வைத்து நல்ல சரக்கு விற்கிறது...குடி'மக்களே உங்களுக்கு நல்ல சாவு கேரண்டிஎன்று அரசு உருதியளிப்பதாய் புட்டிகளில் லேபில் ஓட்டலாம் (எப்படி நம்ம அய்டியா...?)  
 அய்டியா-2(விளம்பர பதாகை) 

சமுக விரோதிகள்தான் மதுவிலக்கை அமுல் படித்த சொல்கின்றார்கள் திண்டுக்கல் பூட்டோடு அலையும் அய்யாமார்களே...நீங்கள் நியான்மார்களாக இருந்தால் அப்படியே ஓடிவிடுங்கள் மறுபடியும் பூட்டோடு வந்தால் புழலில் உங்களைப் போட்டு பூட்டவேண்டியது வரும் 


உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்த சசி பெருமாள் நாடாரே...நீங்கள் மறுபடியும் உண்ணாமல் கிடந்தால் உங்களுக்கு குளுகோஸ்க்கு பதில் இரண்டுபுட்டி பீர் ஏற்றப்படும்
நாங்கள்தான் குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்திற்குக் கேடு என்று டாஸ்மாக் விளம்பரப் பலகையில் ஓரமாக எழுதி வைத்து இருக்கிறோம் அது தெரியவில்லையா உங்களுக்கு..? வேண்டுமெனில் இனி பேருந்துகளிலும் திருக்குறள் போல் எழுதிவைக்கிறோம் (எப்படி நம்ம அய்டியா...?) 
அய்டியா-3( டோர் டெலிவரி)  

இந்தியாவில் குஜாரத் தவிர அனைத்து நாடுகளிலும் மது விற்பனை நேரிடையாக நடக்கிறது ..குஜாரத்தில் பிஸா டெலிவரி செய்வதுபோல்.... போன்செய்தால் போதும் வீடு தேடி வரும் மதுப்புட்டிகள் என்று மறைமுகமாக கல்லாக் கட்டுகிறார்கள்..இங்கேயும் அது போல் டோர் டெலிவரி குடுத்தால் நிறைய பேருக்கு வேலை கொடுத்தது போல் இருக்கும்(எப்படி நம்ம அய்டியா...?) 

அய்டியா-4 (டோபக்கோமாக்) 





















இப்போது புகை பிடிப்பவர்கள்தான் நாட்டில் அதிகம் இருகிறார்கள் இப்போது சென்னையில் நாகரீகமாகப் பெண்களும் புகைப்பதாகத்  தெரியவந்துள்ளது.இனி சிகரெட்,பீடி,குட்கா...போன்றவைகளையும் அரசே குறைந்த விலையில் தரமான வெளிநாட்டுச் சிகரெட்டுகள்  டாஸ்மாக் கடைகள் போன்று டோபக்கோமாக்  கடைவைக்கலாமே...? (எப்படி நம்ம அய்டியா...?)  


அய்டியா-5(பாம்பு மது புட்டிகள்)
மேலும் இப்போது குடிகாரர்களைவிடக் குடிகாரிகள்தான் நாட்டில் அதிகம் வெளியே தெரியாமல் எத்தனையோ விஷயங்கள் இருப்பது போல் இதுவும் இருக்கு  இப்படித்தான் நேற்று பூந்தமல்லி அருகில்
மதுவில் விஷம் கலந்து குடித்து தாய் தற்கொலை மீதமிருந்ததைக் குடித்த மகனும் பலியானான் என்று இந்த நாரவாய் நாளிதழ்கள் செய்தி போடுகின்றன இப்படி விஷத்தை சரியான முறையில் கலக்கத் தெரியாதவர்களுக்காக....
சீனா,ஜப்பான்...நாடுகளில்  இப்போதெல்லாம் மதுப்புட்டிகளுக்குள் கொடிய விஷம் கொண்ட தேள், பாம்புகள் ஊற வைத்து விற்பனை செய்கிறார்கள் ..


அதை அருந்தினால்  போதை எப்போது தீரும் என்று யாருக்கும் தெரியாது சுடுகாட்டில் கொண்டு புதைத்தாலும்  போதை தெளியாது. அவைகளையும் நாம் டாஸ்மாக்கில் விற்றால் விற்பனை அளவுகோல் எவரெஸ்ட் சிகரத்தை தொடும் (எப்படி நம்ம அய்டியா...?) 
அய்டியா-6(குடிதானம்)  

இன்னும் நிறைய சொல்லத் தோனுகிறது...அட..போடா புண்ணாக்கு  என்று நீங்கள் திட்டுவது காதில் விழுவதால் எனது மாபெரும்  வீர உரையை இத்துடன் முடித்துக்கொண்டு அரசுக்கு  நானும் என்னால் முடிந்த உதவியாக ஒரு குவார்டரோ கட்டிங்கோ வாங்கி....நீங்களும் அரசுக்கு உதவ.... அரசு திவாலாவதை காப்பாற்ற..(தவறாக நினைக்காதீர்கள்... உங்களை குடிக்கச் சொல்லவில்லை) குடிதானம் பண்ணுங்கள் உங்களுக்கு நிறைய புண்ணியங்கள் வந்து சேரும் அரசையும் திவாலா ஆகாமல் காப்பாற்ற முடியும்...(எப்படி நம்ம அய்டியா...?) 

(யோவ்..மண்ணாங்கட்டி சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி போல...இப்படி எதையாவது உளறி அதுவும்  அமைச்சர்  காதில் விழுந்து நாளைக்கே உன் அய்டியாக்களை அமுல் படுத்திடப் போகிறார்...அடுத்த வருடம்  தேவதாஸ் விருது உனக்குத்தான்...ஹா..ஹா...)  

Wednesday, March 27, 2013

அடர்ந்த காட்டுக்குள்....


அதுவே என்றும் எனக்கு 
ஆயுள் தண்டனை 
அனுபவிக்கும் சிறையா...?
























ஆனாலும் பரவாயில்லை 
மரங்களுக்குள் 
தாவித் தாவி 
மகிழ்ந்து போவேன் 
மனித குரங்காக....






















ஆனந்தமாக
அங்கும் இங்கும் 
அலைந்துத் திரிவேன்

மனிதமானாக...  



மலரிதழ்களில்
படிந்திருக்கும் 
பனித்துளிகளை 
மகிழ்ந்து குடிப்பேன்
மனித வண்டாக...  

அடர்ந்த காட்டுக்குள் 
என்னை அடைத்து வையுங்கள்...

சென்னையில் ஐபிஎல் -கருத்து கருந்தேள்

(எச்சரிக்கை-அரசியல்வாதிகள் அரசியல் விசுவாசிகள் இதைப் படிக்க வேண்டாம் இது ஒரு நகைச்சுவை பதிவு தவிர யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை...அப்படி யார் மனதும் புண்பட்டால் நான் பொறுப்பல்ல ) 
செய்தி- பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தால்   தமிழகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   

கருத்து கருந்தேள்-
பொறுமை காத்த தமிழக  மக்களே! புரட்சி செய்த தமிழக மாணவர்களே!சென்னையில்  இலங்கை வீரர்கள் விளையாட்டை தடுத்து  சென்னைத் தமிழர்கள் சுயமரியாதையையும் ஈழத்தமிழர்கள் இன்னல்களையும்  நீக்கிவிட்டார்கள் புரட்சி தலைவி அம்மா அவர்கள்.  நீங்கள் உண்மைத் தமிழர்களாக ஐபிஎல் முடிந்ததும் சென்னையில் அதே ஸ்டேடியத்தில் அம்மாவுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளதை அறிந்ததும்  அம்மா அவர்கள் பெருந்தன்மையுடன் மறுத்துவிட்டார்கள் என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன்


























அதே நேரத்தில் அரசு சார்பில் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்கள் (யாரடா அது அல்லக்கைகள் என்று சொன்னது...? பிச்சுபுடுவன் பிச்சி)நேரு ஸ்டேடியத்தில்  நடத்தும் பாராட்டு விழாவிலும் ........

இலங்கை இன வெறியர்களின் கொலைவெறி விளையாட்டை தடுத்து நிறுத்தியதால் அம்மாவுக்கு  ஈழத்தாய் பட்டமளிப்பு விழாவிலும்  தமிழக மக்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்திட வேண்டுகிறோம் 

விலையில்லாத(இலவச) அனுமதி போக்குவரத்து செலவு உணவு தங்குமிடம் எல்லாம் விலையில்லாதது  வாரீர்!  வாரீர்! என் அழைக்கிறோம்................. 
 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கடைசி செய்தி.......தமிழக முதல்வரின் இந்த (தமிழகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க கூடாது)முடிவு இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் விரைவில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளார் சு.சுவாமி 


கருத்து கருந்தேள்......
 
(ஹாய்............
எனக்கு இந்த நாய் விளையாட்டு 
ரொம்பப் பிடிச்சிருக்கு.....
உங்களுக்கு..............? 


Tuesday, March 26, 2013

நான் உங்களைச் சொல்லவில்லை...?


எக்ஸ்பிரஸ் அவின்யுவில் 
கிராண்ட் தாய்-ல் 
கிரில் சிக்கனும் பர்கரும்..
லபக்குனு விழுங்கி
எஸ்கேப் எலைட் திரையில் 
பரதேசி பார்த்துவிட்டு...























ஐ போன் 5-ல்....
பாலாவின் முகநூல் தேடி...
பரதேசிகளுக்கு 
தாடிதான் வளர்ந்திருக்கு 
ஏன் தலையில் 
எதுவும் வளரவில்லை...?   
பரிதாபத்துடன் கேள்விகேட்டு 
படுக்கப்போனால்.....

அய்யோ...பாவம்
அரசியல் தெரியாத அரைபக்கிரி
சமுதாய அக்கறையில்லாத
மடச்சாம்பிராணி என்று...
எவரும் ஏளனம் செய்திடக் கூடாதே...?
அவசரமாகக் கணணியை முடுக்கினால் 
அகப்பட்டது....நம்ம தலீவருதான்...


அவரோ அவசரமாக 
செயற்குழுவை கூட்டி....
அவர்கள் கட்சி நிலையை 
முப்பத்திரண்டு பக்கங்கள்
நீட்டி முழங்கியிருக்க....


அவைகளை விட்டு விட்டு 
அவர்கள் குரூப் போட்டாவில் 
அகக்கண் புறக்கண் பார்த்து 
அங்கே ஏன் அஞ்சாநெஞ்சன் இல்லை..?
அப்படியே ஒரு ட்வீட் கீசிவிட்டு....
இப்படியே போகிறது 
நன்றாகத்தான்  நாடும் நானும்


ட்வீடர்களோ! முகநூல் நண்பர்களோ!
வேறு எந்த நியாயன்மார்களோ! 
யாரும் என்னோடு சண்டைக்கு வராதீர்கள் 
நான் உங்களைச் சொல்லவில்லை...?               

UA-32876358-1