google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: April 2013

Tuesday, April 30, 2013

மரியான்-வலிமையானவன்...?



மரியான்-
நடிகர் தனுஷ்-பார்வதி மேனன் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் பரத் பாலா இயக்கத்தில் விரைவில் வரவிருக்கும்  தமிழ் திரில்லர் திரைப்படம் 

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-prn1/p480x480/528419_569853713059005_504016822_n.jpg
ஒரு உண்மை நிகழ்வின் பின்னணி கதையின் கருவாகும் .பினைக்கைதிகளாக சூடானுக்கு  கடத்தப்பட்ட  மூன்று  இந்திய எண்ணைக்  கிடங்கு தொழிலாளர்கள் பற்றிய கதை... மரியான் என்ற பிணையாளி எப்படி அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து உயிர் தப்பி வருகிறான்..? என்பதை பரத் பாலா தனது கற்பனை நயத்துடன் காட்சிப்படுத்துவதே இப்படத்தின் சிறப்பு.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjq5VectkuB7piZvGL_nnCmFonuQprmQGht_0glfbMFgrfX1R1VmznPd0X9ui8r6t8gV2y8PdD-M___rl1ANY1aBKSQiOwUyk2osl-A_R5GD1LrM2cP05BJpPfcIfJHf3-vmlEEW-cEAA1e/s1600/ztamil.in_2.jpg  
மரியானாக நடிகர் தனுஷ் தென் கடலோர  மாவட்டத்தைச் சேர்ந்த எளியவராகவும் அதேநேரம் தன்னம்பிக்கை, மனஉறுதி மிக்க வலிமையானவராகவும்  நடித்துள்ளார்

                                    thanks-YouTube-sonymusicindiaSME
ஏ. ஆர். ரகுமான் இசையில் நெஞ்சே எழு திரைப்பாடல் டீசர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது..
         thanks-YouTube-by Sony Music India Sony Music India 

திரைப்பட முன்னோட்டக் காட்சிகள்,பாடல் டீசர் காணும் போது கதாப்பாத்திரம் மட்டுமல்ல மரியான்-திரைப்படமே வெற்றிக்கு வலிமையானது என்று நம்புவோமாக.......   

Monday, April 29, 2013

நாட்டுக்கு நல்லதல்ல-ஒரு குத்துப்பதிவு

http://www.juflia.nl/thema%27s/dierenwereld/plaatjes/olifant-papier.png  
நிறையக் கடவுள்கள் இருப்பது
கடவுள்களுக்கு நல்லதல்ல
யார்  பெரிய கடவுள் என்று
கடவுள்களுக்குள் சண்டை வரும்

http://dc351.4shared.com/img/a8b0jCD8/s7/todas_as_religies.jpg
(கடவுள் சண்டையாவது 
கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் 
கடவுள்வாதிகள் சண்டை 
பெரிய தொல்லையாக இருக்கும்
யார் குண்டு வெடித்தது..? என்று
 ஆய்வு செய்வதற்குள் 
அடுத்தக் குண்டு வெடித்துவிடும் ) 

நிறையச் சாதிகள் இருப்பது
சாதிகளுக்கு  நல்லதல்ல
யார் உயர்ந்த சாதி என்று
சாதிகளுக்குள் சண்டை வரும்

http://devdutt.com/w/wp-content/uploads/2009/12/caste.jpg  
(உயர்ந்தசாதி தாழ்ந்தசாதி என்று
சண்டை போட்டாலும் பரவாயில்லை 
தாழ்ந்த சாதிகளில் யார் உயர்ந்த சாதி?
தரித்திர சண்டை உடையும் மண்டை)

நிறையக் கட்சிகள் இருப்பது
கட்சிகளுக்கு நல்லதல்ல
அரசியல்வாதிகளுக்குள்
கூட்டணி சண்டை வரும்

http://www.kidangoorexpress.com/files/news_pics/10051287970563.jpg
 (கூட்டணி சண்டை 
வந்தாலும் பரவாயில்லை..
எந்தக் கூட்டம் நல்ல கூட்டம் 
கண்டுபிடிப்பது பெரிய திண்டாட்டம்)  

நிறையப் பெண்கள் இருப்பது
பெண்களுக்கு நல்லதல்ல
ஆண்களுக்கு அவர்கள்
அடிமையாக வேண்டி வரும்

http://www.colourbox.com/preview/2870400-233386-business-men-and-women-concept-big-crowd.jpg
(அடிமைகள் பரவாயில்லை 
அய்யகோ...பாலியல் வன்கொடுமை
வயது வித்தியாசமின்றி பரவிவிடும்)

நிறைய வலைப்பதிவுகள் இருப்பது 
கணனிக்கு நல்லதல்ல 
கண்ட வைரைஸ் வந்து நுழையும் 
(ஆண்டி-வைரைஸ் இருந்தாலும் 
மாமா-வைரஸ் இருந்தாலும் 
காதல் வைரஸை கண்டால் 
அதுவும்  பல்யிளித்து வழிவிடும் )

http://bestclipartblog.com/clipart-pics/poetry-clip-art-10.jpg
நிறையக் கவிஞர்கள் இருப்பது 
நாட்டுக்கு நல்லதல்ல 
அதுவும் என்னைப் போல்
நையாண்டிக் கவிஞர்கள் 
நாட்டுக்கு தேவையில்லை
(எதையும் இப்படியே 
எடக்கு மடக்காய் பேசி..
கவிஞ்சர்கள் 
இந்த நாட்டின் சாபக்கேடு 
மிகப்பெரிய சோம்பேறிக்கூட்டம்) 



http://timesofindia.indiatimes.com/photo/17624210.cms


(அப்பாடா...
உள்குத்தோ வெளிக்குத்தோ
நம்ம தமிழ் சினிமா மாதிரி 
ஒரு குத்துப்பதிவு  போட்டாச்சு..
சாடை மாடையாய்
எல்லோரையும் திட்டிவிட்டு..
நம்மளை நாமே திட்டலைனா 
அது நல்லாயிருக்காதில்லையா...?)


என்னமோ தோணுச்சு இப்படி எழுதிப்புட்டேன்



பீரும் மோரும்
அடிக்கும் வெயிலுக்கு 
குடிக்கச் சுகம்தான் 

http://www.talimpu.com/images/spicy_buttermilk.jpg  
ஆனால் 
மோருக்கு இல்லை
பக்கவிளைவுகள் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-BQVv6O2Pm2Q2qw_0LGfdw5d1zhkOFkmio7_3MDGk6jlyp4gQ4tAlkpY7jDUknimTWXBuokU0s6w3_5Sw9181l3Bem1LcTedIV8ciyOT5WBwvmT9oY2WhyDkafWB36Y74FaK7XkvQPYU/s1600/drinking+beer.gif
பீருக்கு உண்டு 
ஏகப்பட்ட வினைகள்
பானைபோல் 
வயிறு பெருகும்..

https://lh5.googleusercontent.com/-n33n8ZzL3Rk/UXzSOBoUanI/AAAAAAAACZY/fU-4vl9Sl7k/w497-h373/drunk_big_belly-other.jpg  

தொப்பைதான் 
நோய்களுக்கு அப்பனாகும் 
உடம்புக்கு எது நல்லது..?
அறிந்து மோர் குடிப்போரே 
நீடூழி வாழும் குடிமக்கள் 

http://gifs.gifbin.com/052012/1336066024_beer_drinker_pukes_on_friend.gif

அறியாது பீர் குடிப்போர்
நோயோடு மாய்ந்து
துடி துடிக்கும் 'குடி'மக்கள்  

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்    

கவிதை தந்த குறள் 23:

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
கலைஞர் உரை:

நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
***************************************************
(யோவ்..இதெல்லாம் ஒரு கவிதையா..? உருப்படியா எதையாவது எழுதமாட்டியா...?)

http://www.vikatan.com/news/images/sasi%20perumal%201.jpg

அது சரி...அண்ணேன்... காந்தியவாதி சசி பெருமாள் கால்ல விழுந்து சொல்லியே யாரும் கேட்கமாட்டேங்கிறாங்க...அவரும் கட்டிங்குக்கு காசு கேட்பதாக நினைத்து பைய துலாவுராய்ங்க.. அறிவுரை சொல்ல நான் என்ன சாக்ரேட்டீசா..? இலக்கியத்தரமா கவிதை பாட நான் என்ன கம்பரா...? 

https://lh4.googleusercontent.com/-ITbe-HHwYBA/UX0vOUffMgI/AAAAAAAACas/-yvCW8tEez0/w600-h450/funny-drunk-puppy.jpg
thanks-Toufique Hossain-G+Community -  Joke of the Day (Funny)


நாடே நயன்தாரா கையில் பச்சை குத்தியிருப்பதை பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கும்போது...(நானும் தேடிப்பார்த்தேன் பச்சையும் காணோம் சிவப்பும் காணோம்.மன்சூர் கண்ணுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சிச்சோ...?)  இதையெல்லாம் படிப்பவர்கள் குறைவு என்று எனக்கு தெரியும்
http://i206.photobucket.com/albums/bb110/riseof_billa/cinema/nayana3.jpg


ஏதோ அய்யன் வள்ளுவர்  பெருமான் எழுதிய குறளை படிக்கிற காலத்தில ஒழுங்கா படிச்சிருந்தா மதிப்பெண்கள் அதிகம் கிடைச்சிருக்கும் ..அப்ப படிக்கல்ல ..இப்போ படிக்கிறேன்..என்னமோ தோணுச்சு  இப்படி எழுதிப்புட்டேன்...இப்படியாவது யாரேனும்  குறள் படிக்கட்டுமே  ஆங்..அவ்வளவுதான்..............கோவிச்சிக்காதீங்க  

Sunday, April 28, 2013

அக்னி வெயிலை ஆராதனை செய்வோம்

http://e-kartki.net.pl/kartki/72/5/d/5699.jpg

என் உயிரிலும் மேலான பதிவுவாசிகளே! வணக்கம்.இந்த கொளுத்தும் கோடை வெயிலிலும் வடியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டு கணணியிலும் கைபேசியிலும் நீங்கள் என் அறுவைப் பதிவுகளைப் படிக்கும் போது அதைக் கண்டும் காணாமலும் என்னால் எப்படி இருக்கமுடியும்..? அதனால்தான் இந்தப் பதிவு.    

http://www.blackrivernews.com/images/contentimages/473.gif

110-க்கு மேல் வெப்பம் நிலவும்   கோடைகாலத்தைக் கண்டு கொள்ளாமல் நீங்கள் சும்மா இருந்தால் அது பல வெப்ப நோய்களை (Heat sickness) உங்களுக்கு உம்மா குடுத்துவிடும் 

1-வெப்ப மயக்கநிலை(Heat syncope)-உடலில் வறட்சி வர வழி விட்டால் அது தலைசுற்று மயக்கம் வரை கொண்டுசென்றுவிடும்..
எனவே தாகம் எடுக்காத அளவுக்கு நீர் அல்லது நீர் சத்து நிறைந்த பழச்சாறு அருந்தவேண்டும்
2-வெப்ப பிடிப்புகள்(Heat cramps)-நீங்கள் அதிக வியர்வைசிந்தினால் உடலில் உப்பு சத்து அளவு குறைவு ஏற்பட்டு அடிவயிறு,கை.கால்களில் தசை பிடிப்பு,உடல் வலி போன்ற உபாதைகள் தரும்..இதை நீடிக்க விட்டால் இதய நோயில் கொண்டு விடும் மோர்,நீராகாரம் போன்றவைகளில் நாம் உப்பு போட்டு அருந்துவது உகந்தது  
3-வெப்ப வீக்கம்(Heat edema)-கோடை வெயிலில் அலைய நேரிடால் உடல் வியர்த்தல்,முகம் சிவத்தல்,கை, கால்களில் வீக்கம் போன்றவை வரவாய்ப்புள்ளது..எனவே வெயிலில் அலையாமல் மர நிழல்களில் ஒதுங்கவும் 
4-வெப்ப சோர்வு(Heat exhaustion)-கோடைகாலத்தில் நமது உடலில் நீர் இழப்பு வியர்வை சிந்தல் மூலமாக ஏற்பட்டு தீவிர பலவீனம் மற்றும் சோர்வு தரும்..எனவே வியர்க்காத வண்ணம் குளிர் சாதன அறை அல்லது விசிறிகள் மூலமாகவோ வியர்வை இழப்பை தவிர்க்கவும் 
5-வெப்ப பக்கவாதம்(Heat stroke)-கோடை வெயில் கொடுமையைக்கண்டு தவறான உணவுகள்..ஐஸ் கிரீம்,கூல் ட்ரிங்க்ஸ்,போன்றவைகளை உட்கொண்டும் சில நேரங்களில் பெய்யும் கோடை மழையும் நமது உடலில் வெப்பத்தை உச்சநிலைக்கு 104 டிகிரி கொண்டு சென்றுவிடும் 
அதை நாம் உடன் சரி செய்யவில்லையெனில் குழப்பம்,பிரமை,தலைவலி,தலைச்சுற்று,போன்றவைகளை நமது உடலில் உண்டாக்கி நிரந்தர ஊனம் உண்டாக்கிவிடும்   

http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash3/p480x480/936837_10150288519244964_17362864_n.png

குழந்தைகள் மற்றும்  வயதான பெரியவர்கள் மட்டுமே இத்தகைய அதீத பாதிப்புக்கு உள்ளாகின்றனர்...முதல் நான்கு அறிகுறிகளையும் உடன் குளிர்ந்த நீர் அருந்தி சரி செய்துவிடலாம் ஐந்தாவது அறிகுறியை மருத்துவர்கள் மட்டுமே சரிபடுத்த முடியும் 

குடி மகன்கள் குளிர்ந்த பீர் மற்றும் மது பானங்கள் அருந்துவது அந்த நேரத்திற்குத் தற்காலிக தீர்வாகத் தெரியும் பின் அதுவே பெரிய கேடாக மாறி அந்த 5-வது அறிகுறிக்கு காரணியாகிவிடுகிறது.

http://www.yougivegoods.com/assets/photos/525.jpg

இதற்கு என்னதான் தீர்வு...?ஆம்..நாம் அக்னி வெயிலை ஆராதனை செய்யவேண்டும்.
1-ஆல்கஹால் மற்றும் காஃபின் இல்லாத குளிர்ந்த திரவங்கள் நிறையக் குடிக்கவேண்டும்.. 
2-கோடைகாலத்திற்கு ஏற்ற உடலுக்கு வெப்பத்தை அனுமதிக்காத கதர் போன்ற பருத்தி ஆடைகள் அணியவேண்டும்
3-நாம் இருக்கும் இடம் குளிர் சாதனம் உள்ளதாகவும் அல்லது காற்றோட்டமாக உள்ளதாகவும் பார்த்துக் கொள்ளவேண்டும்  
4-நமது வெளிப்புற நடவடிக்கைகளை முறைபடுத்தி..முடிந்தால் அதிக வெட்பம் உள்ள நேரமான 11 A.M. முதல் 4 P.M. வரை தவிர்க்க வேண்டும் 
5-எல்லாவற்றையும் விட மாறி மாறி வரும் இயற்கையின் படைப்பில் இதுவும் ஒரு காலகட்டமே..இதைக்கண்டு பயந்து நமது உடலுக்கு ஒவ்வாத உணவுகள் எதையும் உட்கொள்ளாமல் அதிகத் தூய்மையான நீர் மட்டும் அருந்தி அக்னி வெயிலை ஆராதனை செய்வோம். 

இவை எல்லாவற்றையும் விட மிகவும் எச்சரிக்கை...ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று ஊட்டி,கொடைக்கானல்,மூனாறு..போன்ற குளிர் பிரதேசங்களுக்கு சென்று நமது உடல் வெப்பத்தின் நிலைப்பாட்டை சீர்குலைக்காதீர்கள்      

வாழும் உத்தமர்கள்

http://cache.desktopnexus.com/thumbnails/969234-bigthumbnail.jpg
இருக்கும் போது தட்டாம்பூச்சி 
இறந்த பிறகு பட்டாம் பூச்சி 
இதுதான் உலகம்!
இப்படித்தான் 
மனிதர்களில் சிலரை 
இருக்கும் போது தூற்றுகிறார்கள் 
இறந்தப்பிறகு  போற்றுகிறார்கள்...
(புண்ணாக்குத் தலையர்களே!
அவர்கள் இறந்தபிறகு 
நீங்கள் தூற்றினால் என்ன...?
வாழ்த்திப் போற்றினால் என்ன...?
அவர்களுக்கு 
அது தெரியவாப் போகிறது?)  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiC_c13z9hi4kO_-BJmPI3b0z3QHbcGsScQXFYrTAxG37LrpzMXiqgIWf0jVt1JEtOCm2Kn7PhwrFtb4wYXUastf6EYZ2KhlfofJoHXnbPFvun-HFNMPSb5pWZmEcKRecGK7cVDOukvQfQ/s1600/funny+power+star.jpg
இதை அறிந்துதான் 
இன்றைய 
அரசியல்வாதிகள்
சினிமாவாதிகளும்  
வாழும் போதே...
வாழ்த்துப் பதாகைகள் 
அவர்களே அச்சடித்து 
அழகாக வைக்கிறார்களோ?

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்  


(ஏம்பா..உஷாராஉள்ள இருக்கிற பவர் படத்த போட்டுயிருக்க...வேற யார் படத்தையாவது போட்டா நீ உள்ள இருக்கனும்னா..ஹா..ஹா..எப்படியோ 
வள்ளுவர் குறளு உன் கையில கிடச்ச பூமால..நீயும் எங்க கூட்டத்தோடு சேர்ந்திட்ட )    

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRU3-gy8gwJR8QnCymOdlpuUVpSeHqPK-H-4x9zz2nvXVu4pbJCTEqNjn2rHY2-P5jpGoJQuaKSExZuuXNSQGlZg1IqMiARyCQTNk5WEI87Qyn3vh2IhEeOUXM-Jo4gaVvybc4WbiJwsmX/s1600/Thiruvalluvar-Statue.jpg
  
கவிதை தந்த குறள் 22:

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
 ****************************************************
புகைப்படம் பக்கம்  
Balance by Justin Mauldin (friscofoodie)) on 500px.com
thanks-500px.com-Balance by Justin Mauldin

Saturday, April 27, 2013

மரக்காணமும் மண்டை வலியும்


சாதிகள் இல்லையடி பாப்பா 
என்று சொன்ன கவிஞ்சனையும் 
எந்த சாதி நீ?
என்று கேட்ட உலகம் இது.

மதவெறியும் சாதிவெறியும் 
மனதில் இல்லைஎன்றால்... 
யார் உரிமையை இங்கு 
யார் பறித்துக்கொள்ள முடியும்?

உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று
உலகில் தீர்மானிப்பது 
செய்யும் தொழிலே என்று
சொன்ன சண்டாளன் எவனோ...?

செய்யும் தொழிலை வைத்து 
சாதி வர்ணக்கோடுகள்   
வரைந்தவன் எவனோ...?

அந்த அழுக்குப் பாறை 
வழுக்கும் பாறை என்று 
தெரிந்த பிறகும் ஏன் 
வழுக்கி விழுகிறீர்கள்..?
ஒ..சாதிமார்களே!
நீங்கள் 
விழுந்து கிடப்பது 
சாக்கடை தொட்டியில்..

http://media.dinamani.com/2013/04/26/clash2.jpg/article1562018.ece/alternates/w460/clash2.jpg

எரியும் சாதிவெறியில் 
அழிந்து போவது அப்பாவி மக்கள் 
குளிர் காய்வது அரசியல்வாதிகள் 

மரக்காணத்தில் 
நடந்தது எதுவாக இருப்பினும் 
சாதிக்கூட்டம் போட்ட ஆட்டம் 
அசிங்கமான போராட்டம்
இந்த மரக்காணம் இருப்பது 
இங்கே மட்டுமல்ல...
தமிழ் நாடு முழுவதும் 
தலை விரித்து ஆடுகிறது. 

உங்கள் முகமூடி 
முகங்களைப்  பார்த்து 
பவுர்ணமி முகமும்
அம்மாவாசை  போல் 
இருண்டு போனது....

நவநாகரீக காலத்தில் 
ஒழுக்கமற்றவர்களின் ஓலங்கள் 
இந்த நாட்டின் சமுதாய அவலங்கள் 
இவர்கள் வரலாறு....
இவர்கள் வாழும் காலத்திலையே 
இல்லாமல் போய்விடும்....


குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்    
கவிதை தந்த குறள் 21:

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
மு.வ உரை:

ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
 

Kilian Martin: India Within


thanks-YouTube-Bragic

குடிமக்களே! கொஞ்சம் கேளிர்!

http://d2tq98mqfjyz2l.cloudfront.net/image_cache/1332505775601766_animate.gif

பார் இல்லையென்றால்   
பீரும் பிராந்தியும்
டாஸ்மாக்கில் 
விற்பனை குறைந்துவிடும் 
அரசு கஜானா காலியாகிவிடும்..

கடல் நீரையும் 
குடி நீராக்கிவிட்டோம் 
மழை நீர் இல்லாமல் கூட 
தாகம் தீர்ந்து விடும் காலம் 

http://www.outlookindia.com/images/tamil_nadu_liquor_outlet_20061204.jpg

அய்யோ...
மது நீர் இல்லைஎன்றால் 
மரித்துப்போகும் அரசு 
குடிமக்களே! 
கொஞ்சம் கேளிர்!

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்    
 

கவிதை தந்த குறள் 20:

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
  


Why You Cry ,Summer ? by  ** Regina **  (ginaups)) on 500px.com
thanks-500px.com-Why You Cry ,Summer ? by ** Regina **

அயர்ன் மேன்-3 சூப்பர் ஹீரோ

http://content9.flixster.com/rtmovie/10/11/101115_gal.jpg
அயர்ன் மேன்-3
மார்வெல் ஸ்டுடியோ தயாரிப்பில் அயர்ன் மேன்,அயர்ன் மேன்-2 தொடர் வரிசையில்  ஷேன் பிளாக் இயக்கத்தில் அமெரிக்க சூப்பர் ஹீரோ 3-D திரைப்படம்

http://cdn.theguardian.tv/mainwebsite/poster/2013/4/26/130425IronMan3Cutdown_7530411.jpg

நவீன அறிவியல்,பேண்டஸியுடன் அதிரடி சாதனை திரைப்படமான அயர்ன் மேன்-3  இதற்கு முந்திய இரண்டு படங்களிலிருந்து மாறுபட்டு   (விஷுவல்) காட்சி அமைப்புகள் நவீன தொழில் நுட்பத்திலும் மற்றும் IMAX 3-D யிலும்  உருவாக்கப்பட்டதாகும்
http://content9.flixster.com/rtmovie/99/94/99943_gal.jpg
கதை பெரிதாக சொல்வதற்கு எதுவுமில்லை...காமிக்ஸ் கதைகளில் வருவதுபோல் சாகசங்கள்  நிறைந்தது. நமது தமிழ் திரைப்படங்களில் கதை என்று எதையோச் சொல்லி தலையைச் சொரிவதை விட..இதுவே பரவாயில்லை 

http://farm9.staticflickr.com/8513/8578014664_99b4cdc11f.jpg  
முந்தய அயர்ன் மேன் படங்களில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் இதிலும் (டோனி ஸ்டார்க்) கதை நாயகனாக சாகச வீரராக நடித்துள்ளார்.
http://content6.flixster.com/rtmovie/99/73/99736_gal.jpg
மிக அதிகப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஒவ்வொரு நாடுகளிலும் வேறு வேறு தினங்களிலும் வடிவங்களிலும் வெளியிடப் படுகிறது ...சீனப் பார்வையாளர்களுக்கு என்று இன்னும் சில சீன பிரத்யேக காட்சிகள் இணைக்கப்பட்டு வெளிவரும்

                            
                              thanks-YouTube-MarvelUK
பிழைக்கத் தெரிந்த சினிமா ஜித்தர்கள்  இங்கு கோலிவுட்டில் மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் உள்ளனர்  
தமிழில் ராபர்ட் டவுனி ஜூனியர் குத்துப்பாட்டும் கொலைவெறி டான்ஸ் ஆட்டமும் போட்டாலும் போடலாம் 
 

Friday, April 26, 2013

அம்மா! தாயே!வாழ்த்திய வாயும் தூற்றும்

http://www.netanimations.net/Rain-on-my-Parade-animation.gif


மாமன்னரின்
அந்தப்புரமும்
நொந்தப்புரமாகிவிடும்
மாதம் மும்மாரி
மழை பெய்யவில்லை எனில்....

http://dl4.glitter-graphics.net/pub/2927/2927774q0x7xfjh8d.gif
அம்மா! தாயே! என்று
வாழ்த்திப்பாடும் வாயும்
சும்மா சொன்னதாக
தூற்றிப் பாட துணியும்..



அதனால்தான்
இங்கே
மழையில்லா காலத்தில்
அடைத்து வைத்த காவேரியை
அழைத்து வர அறிவிக்கை
உண்ணாவிரதம் போராட்டம்
இல்லையேல்
அரசுபாடு திண்டாட்டம்
கடவுள்கூட காணாமல் போவார்


குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்    

கவிதை தந்த குறள் 18:


சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
 மு.வ உரை:


மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
சிந்திக்க வைக்கும் நிழற்படம்


No Grass by 3 Joko (3Joko)) on 500px.com
thanks-500px-No Grass by 3 Joko

ஒரு கையில் திண்டுக்கல் பூட்டு இன்னொரு கையில் பீர் புட்டி

http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-prn1/p480x480/601913_570368009660315_448545114_n.jpg

இன்று பஞ்சம் வந்தால்
இங்கே பாரி வள்ளலும்
மீண்டும் பிறந்திருந்தால் 
முல்லை கொடிக்கு எங்கே
தேர் கொடுப்பார்...?
அப்படியே கொடுத்தாலும்
அதனிடம் வாடகை கேட்பார்?




மயிலுக்கு போர்வை கொடுத்த
மன்னரும்  இன்றிருந்தால்...
மயில் தோகையைப் பிடுங்கிடுவார்.   

இன்று நாட்டில்
வாக்குறுதி கொடுப்பவர்களே
வள்ளல்கள் ஆகிறார்கள்
அடிக்கல் நாட்டுவதிலும்
அறிவிக்கை விடுவதிலும்
அரசியல் செய்கிறார்கள்

இனி
மழை பொய்த்தால்தான்
பஞ்சம் என்பதில்லை
ஆளும் அரசு பொய்த்தாலும்
அந்த நாட்டில் பஞ்சம் வரும்

http://img805.imageshack.us/img805/8806/bkd6llyvwq.jpg
டாஸ்மாக் கடைகள் பெருகிவிட்டாலும்
கஞ்சித்தொட்டிகளும் பெருகிவிடும்
தொட்டிதான் இருக்கும் கஞ்சி இருக்காது.
அப்போது
வள்ளல்கள் எல்லாம்
கருமியாகிவிடுவார்கள்....

மதுக்கடைகளுக்கு
பூட்டு போடுபவர்கள்
ஒரு கையில் திண்டுக்கல் பூட்டு
இன்னொரு கையில் பீர் புட்டி
இவர்கள் இன்றைய வள்ளல்கள்

தள்ளாடாமல்
நிற்க முடியாதவர்கள் 
நாளை நாட்டுமக்களுக்கு
நல்லது செய்ய நினைப்பவர்களாம்

குறிப்பு-இது குறளுக்கு எழுதிய விளக்கமல்ல...குறள் படித்ததால் என்னுள் எழுந்த உணர்வின் பிரதிபலிப்பு..இலக்கியவாதிகள் தவறாக நினைக்க வேண்டாம்............................பரிதி.முத்துராசன்    
கவிதை தந்த குறள் 19:

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
சாலமன் பாப்பையா உரை:

மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.
இன்றைய நிழற்படம்

Yellowstone by Jason Perius (nativeprairiephotography)) on 500px.com
thanks-500px.com-Yellowstone by Jason Perius

கலக்கும் பவர்-சும்மா நச்சுனு இருக்கு(முன்னோட்டம்)



முன்னணி நகைச்சுவை வேடத்தில்  பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசன்  நடிக்கும் A.வெங்கடேஷ்  இயக்கத்தில் விரைவில் வெளிவரும் தமிழ் நகைச்சுவைத்  திரைப்படம் சும்மா நச்சுனு இருக்கு 



 இப்படத்திற்கு முன்பு பவர் பாடிய நினைத்ததை முடிப்பவன் பாடல் பிரபலம் என்பதை நாம் அறிந்ததே!


இதோ....சும்மா நச்சுனு இருக்கு முன்னோட்டம் காணொளி...

                                   thanks-YouTube-IGTAMILMOVIES

மற்றும் தமன்குமார்,விபா நடராஜன்,அர்ச்சனா,இவர்களுடன் தம்பி ராமையா,அப்புக்குட்டி,..நடிக்கும் இப்படம் 



நல்ல நகைச்சுவை அப்படம் எனில் விதவிதமான கெட்டப்பு வேடங்களில் (நடிக்கிறாரோ இல்லையோ) கலக்கும்  பவருக்கு இன்னும் பலமடங்கு உச்சம் நிச்சயம் 
பவர் ஸ்டார்  தமிழ் திரையுலகுக்கு கிடைத்தப் பொக்கிஷம்......

ஏம்பா...
நீ பவரைக் கலாய்க்கிறாயா...? 
பாராட்டுகிறாயா...? 
வரவர நீ எழுதுறது எதுவும் 
எனக்கு புடிபடமாட்டேங்குதப்பா...
உனக்காவது புரியுதா...? 
**************************************************************************
இன்றைய நிழற்படம்
**************************************************************************

Belleza flamenca by Adon  Green (AdonGreen)) on 500px.com
thanks-500px-Belleza flamenca by Adon Green



UA-32876358-1