google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: June 2013

Sunday, June 30, 2013

அன்னக்கொடி-(ட்வீட்டர்கள்) சினிமா விமர்சனம்


பாரதிராஜாவின் அன்னக்கொடி படம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து படாத பாடு படுகிறது....வாடாமல் வாடுகிறது....இந்தக் கொடி 
தேனி அய்யனார் கோயிலில் கிடா வெட்டி பூஜை போட்டதில் ஏதும் கோளாறா...?  இருந்தாலும் அந்த அய்யனார் இப்படியெல்லாம் சோதிக்க கூடாது.... யாரை..? நம்மளைத்தான்.



பாகவதரின் பவளக்கொடி படம்கூட  பலவருடங்கள் திரையரங்கை விட்டு ஓடாமல் ஓடியதாக சொல்வார்கள்...
பழைய பிரச்சனைகள் ஓயவில்லை இப்போ புதுப் பிரச்சனைகள் புறப்பட்டு வருகின்றன..அண்ணேன்..அன்னக்கொடியை  ஆஞ்சி..ச்சீ..மேஞ்சிடுவாங்க போலத் தெரிகிறது....

ட்வீட்டரில் நம்ம கீச்சர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்  
கடவுள்®கடவுள்®@kolaaru 
மிஷின் இருக்குங்கறதுக்காக வெள்ளப் பேப்பர ஜெராக்ஸ் எடுத்திருக்காரு போல பாரதிராஜா #அன்னக்கொடி

Sakthi ツ Sakthi ツ @YesTNரெண்டுபேருசேந்து ஒருலிட்டரு ரம்மோட ரெண்டுலிட்டரு பெப்ஸிய வாங்கிட்டு தியேட்டருக்குள்ள போனா அன்னக்கொடி படத்தையே முழுசா பாக்கலாம்! 

MPRMPR@actormpr 
'அன்னக்கொடி'... விஷமிகள் புகுகிறார்கள்.. உஷார் - பாரதிராஜா # தியேட்டர்ல இருந்து தப்பி வந்தவங்கலே சொல்லிடாங்க... நீங்க லேட்டு

கானா பிரபாகானா பிரபா@kanapraba 
அன்னக்கொடி விமர்சனங்களைப் பார்க்கும்போது இளையராஜாவை பாரதிராஜா காப்பாற்றிவிட்டிருக்கிறார் எனப் படுகிறது நாமளும் தப்பிச்சோம்

ட்விட்டர்MGRட்விட்டர்MGR@RavikumarMGR 
நல்லவேளை மணிவண்ணன் முன்னாடியே இறந்துட்டார்!இல்லேன்னா அவர் சாவுக்கு அன்னக்கொடி படம் தான் காரணம்னு கிளப்பி விட்ருப்பாங்கே!

கனியன்கனியன்@Kaniyen 
அன்னக்கொடி படத்தில முகேஷ் நல்லா நடிச்சிருக்கான், குட்காவை போட்டு வாய் வெந்து பாவம் கடைசியில் செத்தே போயிர்றான்! # அன்னக்கொடி மரணக்கடி!

உளவாளி உளவாளி @withmekaran 
அன்னக்கொடியும் கொடிவீரன பாரதிராஜா இலட்சியப்படம்னு சொன்னாரு..டீஸர பாக்கும்போது அது நல்லாவே தெரியுது...
                                      thanks-YoyTube-by TamilFunnyVideos

பார்த்தாபார்த்தா@ArunrajN 
அன்னக்கொடி டீசர் பாத்து ஆடிப்போயி உட்கந்திருக்கேன்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தமிழ்ப்பறவைதமிழ்ப்பறவை @Tparavai 
'அன்னக்கொடி’ டீசர் பார்த்தேன்.பாரதிராஜா இவ்ளவு சீப்பாக இருப்பாரென எதிர்பார்க்கலை.இவர் எஸ்,ஜே,சூரியாவைவிட மோசம்:

காதல் கிறுக்கன்காதல் கிறுக்கன் @kaniswaran 
ஒரு நிமிடம் ஆபாசமாக தோன்றவில்லை எனக்கு வலிகளாகவே இறங்கியது என் மனதில் அன்னக்கொடி 

சி.பி.செந்தில்குமார்சி.பி.செந்தில்குமார்@senthilcp
அன்னக்கொடியும் கொடிவீரனும்: கண்ணுக்கு பிகர் அழகு. என் செருப்புக்கு உன் கன்னம் அழகு. உன் மூஞ்சிக்கு அந்த செருப்பே பேரழகு

விஜய்சேதுபதி விசிறிவிஜய்சேதுபதி விசிறி@prakash_cinema 
கடைசில அன்னக்கொடிய அன்னக்கடியாவும்,கொடிவீரன கடிவீரனாவும் மாத்திட்டீங்களே

போக்கிரிபோக்கிரி@ipokkiri 
விஜயை கலாய்ப்பது, புகழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா? போங்கய்யா போய் அன்னக்கொடி படம் பாருங்க!!


ramji yahooramji yahoo@ramjiyahoo 
பதிவர்களின் விமர்சனத்தை நம்பி ரிஸ்க் எடுக்கலாமா . கில்மா படம் என்கிறார்கள் - அன்னக்கொடி

மாயவரத்தான்....மாயவரத்தான்....@mayavarathaan 
’அன்னக்கொடியும் கொடிவீரனும்’ தலைப்பு பெரியதாக இருப்பதால் ‘அன்னக்கொடி’ என்று சுருக்கினார் பாரதிராஜா #அதையும் சுருக்கி அகொ-ன்னு வைங்களேன்

வானதிவானதி@NVaanathi 
அன்னக்கொடி விமர்சனமெல்லாம் பார்த்தபிறகு தோன்றியது "கிரீஸ் டப்பாவ எப்பிடி எட்டி உதைச்ச" கவுண்டர் டயலாக் தான் ;)

சி.பி.செந்தில்குமார்சி.பி.செந்தில்குமார்@senthilcp 26 Nov 11
பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடி வீரனும் சரித்திர வெற்றி பெறும்கறாரே? அது கொடி காத்த திருப்பூர்க்குமரன் வரலாறா?

கீச்சான்கீச்சான்@iAmKeechan 
அன்னக்கொடி ஓடலையோ? நடிகையின் பின்பக்க முதுகை இப்படி காமிக்குறாங்க டிவியல?


உங்களில் ஒருவன்உங்களில் ஒருவன்@NamVoice 
அன்னக்கொடியை தடைசெய்யக் கோரி போராட்டமாம்..! # ஒருவேளை பாரதிராஜா ஏற்பாடா இருக்குமோ..?

மாயவரத்தான்....மாயவரத்தான்....@mayavarathaan 
திட்டமிட்டு சிலர் செய்யும் விஷமதனம் - பாரதிராஜா அறிக்கை #எது.. அன்னக்கொடி படமெடுத்து ரிலீஸ் செஞ்சதா?!

Cable sankar -SankarCable sankar -Sankar @cablesankar 
புலம்புறவங்க லிஸ்டப் பார்த்தா தியேட்டர் போய் பாக்குற வரைக்கும் கூட இருக்காது போலருக்கே #அன்னக்கொடி

இன்னும் நிறைய இருக்கு...இதுவே அன்னக்கொடி படம் பார்த்த மாதிரி இருக்கு உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் அதனால் இத்தோடு நிறுத்திகொள்கிறேன்..நன்றி கீச்சர் நண்பர்கள் அனைவருக்கும் 

புலம்பும் நகரத்து மரங்கள்

http://affordabletreeserviceandlawncare.com/resources/6.jpg  

சிக்குவிழுந்து கிடக்குதைய்யா
எங்கள் சிங்கார தலைகள்
சீர்குலைந்து கிடக்குதைய்யா
எங்கள் சின்னஞ்சிறு இலைகள்
உங்கள் வாகனப்புகையிலும்
குழிவிழுந்த சாலைப்புழுதியிலும்
சிக்குவிழுந்து கிடக்குதைய்யா.....
சீரழிந்து கிடக்குதைய்யா........

கிராமத்து கனிதரும் மரங்களல்ல
உங்கள் நகரத்தை அழகுசெய்ய
நீங்கள் நட்டிவைத்த மரங்கள்
உங்கள் சாலையை சரிசெய்ய
எங்கள் கைகளை ஓடித்ததால்
அரைகுறை ஆடையில் நிற்கும்
நகரத்து நாகரிக மங்கைகள் போல்
நாங்கள் நகரத்து மரங்களைய்யா

நிழல் தரும் மரங்கள் நாங்கள்
நிற்கமாட்டீர்கள் யாரும் நீங்கள்
அவசரவேலை உங்களுக்கு
ஆனாலும் நீங்கள்
கம்பி இணைப்புகளை
இழுத்துச்செல்ல
தவறாமல் போடுவீர்கள்
திருப்பதி மொட்டை எங்களுக்கு

வாகனங்களின் 
வக்கிர இறைச்சல்களில்
தொலைந்துபோகிறது 
எங்கள் தென்றல் ராகம்
தள்ளாடுகிறது 
எங்கள் தாலாட்டுப்பாடல்

எந்த கத்திரிவெயிலுக்கும்
சுகம்தருவோம் நாங்கள்
ஆனாலும் நீங்கள்
அடைந்து கிடப்பீர்கள்
குளிர்சாதன அறைக்குள்

உங்கள் சாக்கடை நீரைஉறிஞ்சி
எங்கள் தேகமும் நாறுகிறது
உங்கள் நகரத்து நச்சு காற்றால்
எங்கள் சுவாசமும் நாசமானது

(மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் நகரத்து மரங்கள் எப்போதும் இப்படித்தான் இருக்கின்றன...புலம்பி ஆகப்போவது என்ன? அரசியல்வாதிகளின் பிறந்த நாளுக்கு ஆங்காங்கே நட்டி வைக்கப்படுகின்றன கட்சி கொடிக்கம்பங்கள் போல்.... ஒரு நாள் மட்டுமே உயிரோடு இருக்கின்றன..அடுத்த பிறந்தநாளுக்கு மீண்டும் மரம் நடுவதற்கு இடம் வேண்டும் என்பதினாலா?)

எல்லாமே ஹைக்கூதான்...


உண்மையான ஹைக்கூ கவிதைகள்-4
19 ஆம் நூற்றாண்டின் முதல் ஆண்டுகளிலிருந்து ஹைக்கூ பல பரிசோதனைக்கு உட்பட்டது...பல்வேறு மாற்றங்ககளை சந்தித்தது.
ஜப்பானில் வசித்த டச்சு நாட்டைச் சேர்ந்த நாகசாகி கவர்னர் ஹெண்டிரி டோயிப் Hendrik Doeff (1764–1837) எழுதிய ஹைக்கூ மாதிரி ஹோக்கு கவிதை....

உன் கரங்களை எனக்கு இரவல் கொடு 
மின்னலைவிட வேகமாக....
என் பயணத்திற்கு தலையணை செய்ய

என்று தன் வாழ்க்கைத் துணைவியை சொல்வதிலாகட்டும் 
அல்லது... 

ஒரு வசந்த காற்று 
அங்கேயும் இங்கேயும் அசைக்கிறது 
படகோட்டம்போல் என் சிறியப் படகை  

....என்று இயற்கை இன்பத்தை அனுபவிப்பதிலாகட்டும்  
அதே காலகட்டத்தில்...இங்கிலாந்தில் பிறந்து கொரியாவில் வளர்ந்து ஜப்பானில் வாழ்ந்த ஆங்கிலேயர் ஆர். எச் ப்ளித் என்பவர் ஜென்,ஹைக்கூ,சென்றியு என்று எல்லாம் கலந்து 1949 ஆம் ஆண்டு ஹைக்கூ என்ற தனது முதல் தொகுப்பை வெளியிட்டார்...அவர் அமெரிக்கர்களையும் ஹைக்கூ எழுதிட அழைத்தார்.. ஆங்கிலத்தில் ஐக்கூ எழுதுவதற்கு அவர் தூண்டுதலாக இருந்தார் அவருடைய நான்கு ஹைக்கூ கவிதை தொகுப்புகளே இன்றைய ஆங்கில ஹைக்கூ கவிதைகளுக்கு முன்னோடி என்று சொல்கின்றனர்.

freeonlinephotoeditor

ஒரு நத்தை 
நீலக் கனவு காண்கிறது 
அந்த இலையின் பின்புறம் இருந்து...

ரெஜினால்ட் ஹோரஸ் ப்ளிதின் இந்த ஹைக்கூ கவிதையில்....மனிதன் எல்லா வளமும் தன் காலடியில் வைத்துக்கொண்டு எதுவும் முயற்சி செய்யாமல் வீனாப்போவதை ஒரு நத்தை பசுமையான இலையின் பின்புறம் அமர்ந்து கனவில் சோம்பிக் கிடப்பதாகச் சொல்கிறார்...

freeonlinephotoeditor
மூளை கட்டி நோயினால் பாதிக்கப்பட்ட ஆர். எச் ப்ளித் மரணிக்கும் தருவாயில்..... 

இந்த பயண நாளில் 
நான் என் இதயத்தை 
சசன்கு மலர்களிடம் விட்டுச் செல்கிறேன் 

என்று எழுதி வைத்தார்.....
அவரது கடைசி விடைபெரும் ஹைக்கூ கவிதையாக... 

அங்கும் இங்கும் அலைந்து 
என் சிந்தனைகளை  
சசன்கு மலர்களில் விட்டுச் செல்கிறேன் 

என்று எழுதிவைத்தார் இங்கே அவர் சசன்கு மலர்கள் என்று சொன்னது அவரது கவிதை தொகுப்புகளாக இருக்கலாம் 


இன்று ஒரு ஆங்கில இணையத்தளம் தனது ஒரு தளத்திலேயே ஒரு கோடி ஆங்கில ஹைக்கூ கவிதைகளுக்கு மேல் பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது....அந்த அளவுக்கு ஜப்பனீஸ் ஹைக்கூ கவிதை உலகமெங்கும் இன்று எல்லாமே ஹைக்கூதான் என்று பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது    

                     .........................(இன்னும் வரும்)

 (ஹைக்கூ கவிதைகள்-தமிழ் மொழியாக்கம்..பரிதி.முத்துராசன்.) 
 

Saturday, June 29, 2013

அமிதாப் பாராட்டிய தனுஷ்(அம்பிகாபதி-ராஞ்சனா)


அம்பிகாபதி(தமிழ்)-ராஞ்சனா(இந்தி)
தனுஷ்-சோனம் கபூர்  நடித்த ராஞ்சனா (இந்தி) படத்தின் தமிழ் மொழியாக்கம் அம்பிகாபதி... (இடையில் அரசியல் புகுந்து கொஞ்சம் தடம் மாறினாலும்) இயக்குனர் ஆனந்த் ராய் வண்ணத்தூரிகையால் திரையில் வரைந்த காதல் ஓவியம்


dhanush


தனுஷ்-நடிப்பின் பரிணாமங்கள் நமக்கு தெரிந்ததே..அவரது அப்பாவித்தன முகமும் எளிமையான தோற்றமும் நாம் அறிந்ததே...ஆனால் அவர் இன்று பாலிவுட்டில் இந்த அளவுக்கு வெற்றி நட்சத்திரமாக வலம் வருவார் என்பது யாரும் அறியாததே...நாளை ஹாலிவுட் படங்களிலும் பட்டையக் கிளப்பினால் ஆச்சரியமில்லை

freeonlinephotoeditor

 முதல் ஒரு வாரத்திலேயே இந்திய அளவிலும்(35 கோடி)  உலக அளவிலும்(42 கோடி)  ராஞ்சனா பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன்  அந்தப் படத்தை இந்த ஆண்டு பாலிவுட் வெற்றிப்படங்கள் வரிசையில் கொண்டு சேர்க்கின்றது...தனுஷையும் கைகோர்த்து அழைத்துக்கொண்டு....இனி அவரது தமிழ் படங்கள் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு 
பாலிவுட்டில் ஊர்வலம் வரலாம்...

இவை எல்லாவற்றையும் விட...சோனம் கபூர்-அபய்  தியோல் ஆகியோருடன் தனுஷ் இனனைந்து நடித்திருந்தாலும் அவரை பாராட்டாத பாலிவுட் நட்சத்திரங்கள் இல்லை பாலிவுட் இணைய தளங்கள் ராஞ்சனாவுக்கு Ratings: 8.1/10   கொடுத்து அழகு பார்க்கின்றன...
பாலிவுட்டில் என்றும் ஜொலிக்கும் நட்சத்திரம் Big B அமிதாப் பச்சன்  தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ள செய்தி.....
"இன்றைய சினிமாவும் அதன் மகத்தான கலைநுணுக்கமும் மிளிரும்  இளந்தலைமுறை நடிகர்களின் காதல் உலகம்-ராஞ்சனா படம் பார்த்ததில் மகிழ்சி...அதே நேரம் பொறாமையாகவும் புலம்பும் நிலையிலும் நான் இருக்கிறேன் ...அப்படியொரு படத்தில் நான் நடிக்கவில்லையே என்று.வருந்துகிறேன் "



நமது வலைப்பதிவில் ராஞ்சனா (இந்தி)-சினிமா விமர்சனம் எழுதியபோது அதன் தமிழாக்கம் அம்பிகாபதி இங்கு வெற்றி பெறுமா...? என்ற எண்ணம் எனக்கு இருந்தது...ஆனால் இங்கேயும் இணைய தளங்களும்   பத்திரிகைகளும் பாராட்டுகின்றன..பார்த்தவர்களும் குறை சொல்லவில்லை

தென்னிந்தியாவிலிருந்து எத்தனையோ நட்சத்திர நடிகர்கள் பாலிவுட்டில் செய்யாத சாதனையை தன் ஒரே படத்தில்  செய்துவிட்டார்..தனுஷ்  

Friday, June 28, 2013

பலுபு (தெலுங்கு)-சினிமா விமர்சனம்


பலுபு (தெலுங்கு)-படம் ஆரம்பமே பகீர் என்று படம் பார்ப்பவர்களின் வயிற்றைக் கலக்கும் அடிப்புடன் ரவி தேஜா கையில் கிரிக்கெட் மட்டையால் அடி அடியென்று ...பந்தையல்ல...பொறுக்கிகளை அடித்து லட்சுமி ராயைக் காப்பாற்றும் அதிரடிக்காட்சி...அப்படியே லட்சுமி ராய்-ரவி தேஜா குத்துப்பாட்டு  என்று கலக்கலாக...  

freeonlinephotoeditor

அதிரடி அடிப்புக்கு சாரி நடிப்புக்கு தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜ்  ரவி தேஜாவுடன்  போட்டி போட்டு கவர்ச்சி காட்ட ஸ்ருதி ஹாசனும் அஞ்சலியும் அப்புறம் பலுபு (BALUPU) படம் பார்க்க...கசக்குமா? அதிலும் இது இயக்குனர்  கோபிசந்த் மலினேனி,  ரவி தேஜாவுக்காக உருவாக்கிய ஸ்பெசல் அடிதடி காதல் த்திரிலர் காமெடிப் படம் 

freeonlinephotoeditor

கதை - ஸ்ருதி(சுருதி ஹாசன்) தனது உறவினர் கிரேசி மோகன்(பிரமானந்தம்)  னுடன் சேர்ந்து காதலிப்பது போல் எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருக்க    ரவி (ரவிதேஜா)வும் ஸ்ருதியை காதலிப்பதுபோல் நடிக்க ரவியின் தந்தை பிரகாஷ்ராஜ் இருவருக்கும் திருமணம்செய்து வைக்கும் கட்டத்தில்.. கதையின் மிகப்பெரிய திருப்பமாக வில்லன் அசுதோஷ் ரானா நுழைகிறார்...
ரவிதான் பலுபு சங்கர் தாதா என்பதையும் பிரகாஷ் ராஜ்தான் தாதா நானாஜி என்பதையும் தெரிந்து ஸ்ருதியைக் கடத்திச் செல்கிறார்.
ரவிதேஜாவுக்கும் பிரகாஷ்ராஜ்-க்கும் என்ன உறவு..? ரவிதேஜா ஸ்ருதியை மீட்டாரா? டாக்டர் அஞ்சலி(அஞ்சலி)யின் கதை என்ன? என்பதுதான் கதை..சஸ்பென்ஸ் நிறைந்த அடிதடி காமெடியாக சொல்லப்பட்டுள்ளது.

raviteja

ரவிதேஜா- இரு மாறுபட்ட அமைதி-ஆக்ரோஷம் நடிப்பையும் அடிதடி-காதல் நடனம் துடிப்பையும் நல்லாவே வெளிப்படுத்துகிறார்.அவர் வாயைத்திறந்தாலே பஞ்ச் வசனம்தான்...அரங்கம் கைதட்டும் ஓசையில் அதிர்கிறது அவர் "கோட்டாலா...மிம்மாலினி கோட்டாலா... ரெண்டிநின்டிலோனோ பஞ்ச் உண்டுன்டிறாய்.." என்று தொடங்கும் பஞ்ச் மிகப் பிரபலமாகும் என்று பஞ்ச் ஆருடம் சொல்கிறது. அவருக்கும் ஸ்ருதி ஹாசனுக்கும் பிசிக்ஸ்-கெமிஸ்ட்ரி நல்லாவே பொருந்துது...அதிலும் அவர் டவலுடன் வரும் அம்மணிக்கு சூப்பர் ஆடை கட்டிவிடுவது நல்ல கிளுகிளுப்பு...இருவரும் இன்னும் நிறையப்படங்கள் நடிக்கலாம் 

freeonlinephotoeditor

ஸ்ருதி ஹாசன்- கதைக்கு ஏற்ற நல்ல நடிப்பு....பாடலுக்கேற்ற நல்ல கவர்ச்சி அவரது நடிப்பு தெலுங்கு படங்களில் நன்றாகவே.... தெரிகிறது.போட்டிக்கு அஞ்சலி இருந்தாலும் இவரே முக்கிய வேடத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து கலகலப்பாக நடித்துள்ளார்.

freeonlinephotoeditor

அஞ்சலி- இடைவேளைக்குப் பிறகு வரும் டாக்டர் அஞ்சலி ஒரு பாட்டு கொஞ்சம் காதல் என்று ரவி தேஜாவுடன் ஆட்டம் போட்டாலும் பாதியிலையே பொசுக்கென்று போட்டுத் தள்ளிவிடுகிறார்கள்  

freeonlinephotoeditor

பிரகாஷ் ராஜ்- இரு மாறுபட்ட நடிப்பு- ரவியின் தந்தையாகவும் நானாஜி தாதாவாகவும்...கதைக்கு அருமையாகப் பொருந்துகிறார்.ஈவ்-டீஸிங் கேஸில் போலிஸ் நிலையத்திலிருந்து வெளிவரும் காட்சி சூப்பர் நாசர் ஸ்ருதியின் தந்தையாக வந்துப் போகிறார்.
பிரமானந்தம்தான் படத்தின் முக்கிய பாத்திரம்...படம் தொய்யும் போதெல்லாம் கங்கணம் ஸ்டைல் பாட்டுப்பாடி கலகலப்பு ஊட்டுகிறார்.

freeonlinephotoeditor

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பயங்கர சண்டைகாட்சிகள் இருக்கும் என்று பார்த்தால்...அப்படியே உல்டாவாக தமாஷ்...பாட்டுப்பாடியே படத்தை முடித்துவிட்டார். இயக்குனர் கோபிசந்த் மலினேனி பிளாஷ் பேக் உத்தியுடன் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் வெளிப்படுத்துகிறார் அஞ்சலி மீது ஆசிட் வீச விரட்டும் காட்சி அசத்தல் ஒளிப்பதிவாளர் ஜெயணன் வின்சென்ட்...போர்ச்சுகல் நாட்டில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியில்...ஒளிப்பதிவு அருமை அதேப்போல் எஸ்.தமன் இசையமைப்பில் அடிதடி காட்சிகளும் அத்தனை பாடல்களும் இனிமை...அதிலும் லக்கி லக்கி சூப்பர் ஹிட்...
ஆக மொத்தத்தில் படம் நல்ல பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் 

                                          thanks-YouTube-by FilmyTime

தமிழில் விரைவில் வரலாம் வந்தால் மிகப்பெரிய வெற்றி நிச்சயம் 
படம் பார்க்க நினைப்பவர்கள் படத்தில் ரவி தேஜாவின் கிரிகெட் மட்டையால் விளாசும் முதல் அதிரடி சண்டைக்காட்சியையும் லட்சுமி ராயுடன் குத்துப்பாட்டையும் காணத்தவறாதீர்கள்... 

பரிதி.முத்துராசன் ‏@PARITHITAMIL
 பலுபு-படம் பார்க்க
மொழி தெரிந்திருக்க தேவையில்லை
காதலும் சண்டையும் மொழிக்கு அப்பாற்பட்டவை        

Thursday, June 27, 2013

வடுகப்பட்டியும் வைரமுத்தும்

http://www.thehindu.com/multimedia/dynamic/00316/26TH_VAIRAMUTHU_316583g.jpg
அர்த்தமில்லாத அகராதி-2 
கவிப்பேரசு வைரமுத்து வளர்ந்த ஊர் வடுகப்பட்டி...
எனக்கும் வளர்ந்த ஊர்....வடுகப்பட்டி இந்த இரண்டும்தான் எங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமை. 

வடுகப்பட்டி என்ற பெயரில் நிறைய ஊர்கள் உண்டு.இது பெரியகுளம் அருகில் உள்ள இயற்கை அழகு தவிழும் கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத இடைப்பட்ட நிலையில் உள்ள மிகப் பெரிய ஊர்.அங்கிருந்து பார்த்தால் கொடைக்கானல் மலையின் இயற்கை அழகு எழிலாகத் தெரியும் ஊரின் ஓரமாக மழை காலங்களில் மட்டும் சேரும் சகதியுமாக மஞ்சள் நிறத்தில் வரும் ...வராகநதி அருகில் தாமரைக் குளம் என்ற பாசன நீர் குளம் உள்ள  பசுமையான ஊர்.இன்னொரு புறம் வைகை அணை நீர்த்தேக்கம் அதனால் நீர்பஞ்சம் கிடையாது கிணற்றிலிருந்து கமலைக் காளைகள் நீர் இறைக்கும் அழோ அழகு...அதைப் பார்த்துக்கொண்டிருந்தாலே பாட்டு தானாக வரும்   

அங்குள்ள அரசினர் உயர் நிலைப் பள்ளியில் நான்  6-ஆம் வகுப்பு படிக்கும் போது வைரமுத்து SSLC படித்தார்..1968-1974 காலகட்டமாக இருக்கும் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல் அப்போதே அவரது கவிதை திறனை அறிந்திருக்கிறேன்...இன்றும் அந்த நிகழ்வு என் மனத்திரையில் பாடிக்கொண்டிருக்கிறது....

அன்று எங்கள் பள்ளிக்கு அரசு கல்வித்துறை மேல் அதிகாரி ஒருவர் வந்ததால் அவரது பேச்சைக் கேட்க நாங்கள் அனைவரும் பள்ளி மைதானத்தில் அழைத்து அமரவைக்கப்பட்டோம்..அப்போது கடவுள் வாழ்த்து பாடியவரும்...தொடர்ந்து அந்த உயர் அதிகாரிக்கு வாழ்த்துப்பா பாடியதும் அன்று ஒரு மாணவர் அவரே இன்றைய கவிப்பேரரசு வைரமுத்துமானவர்
"ஜொலிக்கும் வானத்து நட்சத்திரங்கள் மத்தியில் அமர்ந்திருக்கும் நிலவு போல..."(இப்படித்தான்இருந்திருக்க வேண்டும்) என்று அந்த உயர் அதிகாரிக்கு அவர் புகழாரம் தொடுத்த போது எழுந்த கையோசை அடங்க வெகு நேரமாகியது.

கவிதை எழுத யாரும் சொல்லிக் கொடுத்து எழுத முடியாது...ஏனென்றால் கவிதை என்பது உணர்வின் பிரதிபலிப்பு.நாம் எதை உணர்கிறமோ அந்த உணர்ச்சி அத்தோடு அடங்கிப் போகாமல் உடனோ அல்லது என்றாவது ஒருநாள் வெளிப்படும் வடிவமே கவிதை.ஒரு கவிஞன் பிறவியிலேயே  கவிஞனாகப் பிறக்கிறான்...ஆனால் காலம்தான்  அவனை வெளிப்படுத்துகிறது... அந்த வகையில் இது கவிப்பேரரசுக்கு பொருந்தும்.

அதே சமயம் எங்கள் பள்ளியில் உத்தமப்புத்திரன்( புனைப்பெயராகத்தான் இருக்கும்) ஒரு தமிழாசிரியர்...பண்டைய காலப் புலவர்கள் தோற்றத்திலேயே மாணவர்களுக்குத் தமிழ்பால் ஊட்டுவார்.... அவருடைய பாதிப்பு பிறவியிலேயே கவிப்பேரரசு வைரமுத்துக்குள் இருந்த கவியுணர்வை தூண்டியிருக்கலாம்...ஆனால் எனக்கும் அவராலும் இவராலும்  என்னுள் அன்று எழுந்த பாதிப்பு நானும் எதையாவது எழுதிக்கொண்டு கவிதை என்று சொல்லிக்கொள்கிறேன்...

அதற்குப்பிறகு வைரமுத்து அவர்களை நான் பார்த்ததில்லை...காலம் செய்த கோலம் நான் வேலை தேடி சென்னை வந்து இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த ஷேர்-ரூம் இருந்த இடம்...கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம்..
அன்று அவர் வீடு இருந்த பக்கத்து தெரு..இன்று அவர் வீடு இருக்கும் பிள்ளையார் கோயில் எதிர் குவார்ட்டர்ஸ்....1983-1986 வரை நிறைய நேரங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன் எந்த அறிமுகமும் கிடையாது...அவர் எழுதிய புத்தகங்கள் மட்டுமே என்னோடு பரிச்சயம்

சென்னை வந்த பிறகு எனக்கும் எழுதவேண்டும் என்று ஆசை எழுந்தது...எழுதியவைகள் தீபம்,கணையாழி போன்ற பத்திரிகைகளில் வந்தது...ஆனால் தீபம் ஆசிரியர் அய்யா.நா.பார்த்தசாரதியின் அழைப்பின் பேரில் அவரைச் சென்று சந்தித்தேன்...அவரோ என் படைப்புகள் சில வாசித்துவிட்டு..."தம்பி...நீங்கள் முதலில் ஒரு வேலை தேடிக்கொள்ளுங்கள்..அதற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு வேண்டுமாயினும் எழுதுங்கள்" என்று அறிவுரை சொல்லி வழியனுப்பினார்... 

அப்புறமென்ன..? வேலை கிடைத்தது...எழுதுவதற்கு நேரம் கிடைக்க வில்லை ...வாழ்வின் வளம் கண்டப் பிறகு இப்போது  கிடைக்கும் நேரத்தில் இப்படி எதையாவது....எழுதுகிறேன்...என் நினைவுகளை அசைப்போடுகிறேன்       

கவிப்பேரரசு வைரமுத்தும் அவரது புகழும்  வடுகப்பட்டியில் உண்டாக்கிய பாதிப்பு  ஏராளம்   சமீபத்தில் வடுகப்பட்டியில் என்னுடன் பயின்ற பள்ளி நண்பரை சென்னையில் சந்தித்தேன்..
"இப்போதெல்லாம் நம்ம ஊர்ல நிறையப் பேருக கையில நோட்டும் பேனாவுடந்தான்  ப்..பே..னு அலையிறானுங்க...அம்புட்டு பேரும் கவிஞன்களாம்...என்னத்தச் சொல்லுறது..."

நான் என்ன தத்துவஞானியா...? அறிவுரைகள் சொல்ல...எழுதும் என்னருமை நண்பர்களே! உங்கள் எழுத்து உங்களுக்குச் சோறு போடும் என்றால் எழுதுங்கள்...எழுதிக்கொண்டே இருங்கள்...இல்லையேல் என்னைப்போன்று தின்ன சோறு செரிக்க இப்படி எதையாவது கொறித்துக்கொண்டு... எழுதுங்கள்..எதையும் எதிர்பார்த்து எழுதாதீர்கள்...உங்கள் வாழ்க்கையைக் கற்பனைக் கரையான்கள் செல்லரிக்க விடாதீர்கள்..

அகராதி=அகரம்+ஆதி என்கிறார்கள் வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லும் நூல் என்கிறார்கள் ஆங்...வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லும் அகராதி எங்கே..? என்று தெரியவில்லை...தெரிந்தாலும்  அர்த்தமில்லாத அகராதியாகத்தான் இருக்கும் அது.

                                      .........................................(எப்போதாவது தொடரும்)  


அஜித் படங்களில் சிறந்தது காதலா? அதிரடியா?கருத்துக்கணிப்பு

https://lh6.googleusercontent.com/-6iVx-ktJek8/AAAAAAAAAAI/AAAAAAAAACk/DaAiTll3WTs/photo.jpg

1990-ல் தனது சினிமா பிரவேசத்தை ஆரம்பித்த அஜித்குமார் இதுவரை 54 படங்களுக்கு மேல் சிறிதும் பெரிதுமாக நடித்துள்ளார் தனது ரசிகர்களால் 'தல' என்று  அன்புடன் அழைக்கப்படும் அவர் நடிப்புக்கலையின் நவரசங்களை தனது ஒரே படத்திலும் அல்லது ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி இதுவரை 11-க்கு மேல் சினிமாத்துறை விருதுகளையும் 10-க்கு மேல் விருதுக்கான பரிந்துரைகளையும் பெற்றுள்ளார்.

ஆரம்ப காலகட்டங்களில் அஜித் காதல் நாயகனாகவே அதிகப் படங்களில் பரிணமித்தார் ஆசை திரைப்படம் அவருக்கு அஸ்திவாரமாக இருந்தது. தேசிய விருது பெற்ற காதல் கோட்டை திரைப்படம் அவருக்கு ஒரு திருப்பத்தை தந்து...காதல் மன்னன் அவரை முழு காதல் நாயகனாக அங்கீகரித்தது.தொடர்ந்து அவள் வருவாளா,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்..போன்ற படங்கள் மிகவும் விரும்பப்பட்டது.

அவரது நடிப்பு இன்னொரு பரிணாமத்தை வாலி,முகவரி,சிட்டிசன் போன்ற படங்களில் அவர் அதிரடி நாயகராக ஆரம்பித்து... அமர்க்களம்,தீனா,வில்லன்,வரலாறு,பில்லா,மங்காத்தா..என்று தொடர்கிறது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy8IkKDOW1GcwtVldpA3Gr6SRt3SG7DpeC1KHS0CWOS6khxdFgz0Qvh7ns1YvY2Gx3mq_mpbaQwQ79jC6pB6HiVmz_FgVhb-O20csfHA3nIVMqxRHhWUODP46zVB0mzupgKUzms3i-KzH8/s1600/13972521261_xKQJp.jpg

அவரது படங்களில் அதிரடிப்படங்களான வாலி,வில்லன்,வரலாறு, ஆகிய மூன்று படங்களும் அவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதுகள் மூன்று தடவை பெற்றுத்தந்துள்ளன.
அவரது மங்காத்தா திரைப்படம் சிறந்த வில்லன் நடிகர் மற்றும்   பேவரைட் ஹீரோ விஜய்  விருதுகளை வாரிவழங்கியுள்ளது 
அவரது வாலி,சிட்டிசன் படங்கள் அவருக்கு சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் பெற்றுத்தந்தன..

                              thanks-YouTube-by Shanfaceorange

அதே நேரத்தில் அவரது காதல் திரைப்பட வரிசையில் வரும் படங்களில் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது பெற்ற பூவெல்லாம் உன் வாசம் தவிர மற்றவைகள் விருது பரிந்துரையில் மட்டுமே முடிந்துவிட்டன 

https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash3/p480x480/576409_450365385009386_2061064246_n.jpg

எனது பார்வையில்  அஜித்  ஒரு சிறந்த காதல் திரைப்பட நாயகர் அவரது படங்களில் எனக்குப் பிடித்தது காதல் கோட்டை...

                                             thanks-YouTube-bab boy

உங்கள் பார்வையில்....

அஜித் படங்களில் சிறந்தது காதலா? அதிரடியா?


இது ஒருநாள் கருத்துக்கணிப்பு...
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி
ajith



நண்பர்களே!....முடிந்தால் உங்களுக்குப் பிடித்த
'தல'அஜித் திரைப்படம் எது என்பதை  
கருத்துப்பெட்டியில் தெரியப்படுத்துங்கள்.....நன்றி 



இதையும் பார்வையிடுங்கள்....
அத்தனை படங்களும் 
MOUSE HOVER EFFECT-உடன்........  

இன்னும் படமே வெளிவரவில்லை 
அதுக்குள்ள விமர்சனமா...?
  ராஞ்சனா (இந்தி)தான் அம்பிகாபதி (தமிழ்) 
அம்பிகாபதி (தமிழ்)தான்   ராஞ்சனா (இந்தி)



                             அம்பிகாபதி
                   சினிமா விமர்சனம் 

UA-32876358-1