google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: July 2013

Wednesday, July 31, 2013

சொன்னா புரியாது-அடங்..கொய்யால..அப்புறம் எதுக்குச் சொன்ன?


(தீர்ப்பு-தொலைகாட்சியில்  தொடராக வரவேண்டியதை திரையரங்கில் படமாகப் போட்டு..சொன்னா புரியாது என்றால்...அடங்..கொய்யால அப்புறம் எதுக்குச் சொன்ன..?.)   

freeonlinephotoeditor


பத்துப் படங்களுக்கு மேல் நடித்துள்ள மிர்ச்சி சிவா இதுவரை எந்த அவார்டும் வாங்கவில்லை ஆனால் இந்தப் படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்டால் நிச்சயம் பத்து விருதுகள் வாங்கிவரும்...
எப்படி...?  என்று கேட்டால் அதுவும்  உங்களுக்குச் சொன்னா புரியாது. 

freeonlinephotoeditor
 
(படுக்கையிலிருந்து விழிக்கும் போதும் சிரித்துக் கொண்டே விழிக்கும் நடிகர் உலகிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்...?.
மேலும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்கள்...டைட்டானிக், ஹாரி பாட்டர் போன்ற படங்களில் நடித்தவர்களைக் கேலியும் கிண்டலும் செய்யும் அளவுக்குப் பெரிய நடிகர் )

freeonlinephotoeditor
 
கதை என்ன என்று கேட்டால்...? அதுவும் உங்களுக்குச் சொன்னா புரியாது.நீங்கள் இதயப் பூர்வமாக உணரவேண்டும்.....வோல்ஸ் வேகன் கார் கனவு லட்சியத்தில் குடியும் கும்மாளமாகத் திரியும்   டப்பிங் ஆர்டிஸ்ட் சிவா திருமனமானால் தன் சுதந்திரம் பாதிக்கப்படும் என்று மறுக்கும் அவருக்கு  அவரது அம்மா மீரா கிருஷ்ணன் அஞ்சலி (வசுந்தரா) என்ற (சிவாவைப் போல்) குடியும் கும்மாளமாக அலையும் அழகி....?-யுடன் கால்கட்டு.காம் கல்யாண புரோக்கர் மனோபாலா மூலம்  நிச்சயம் செய்ய.........இருவரும் திருமணத்தை நிறுத்தத் செய்யும் கோல்மால் காட்சிகளாகப் படம் சொல்கிறது....அவர்கள் திருமணம் நடந்ததா...? சிவாவின் வோல்ஸ்வேகன் கார் கனவுப் பலித்ததா...? என்பதே கதை

freeonlinephotoeditor
 
படம் முழுக்கச் சிவா மட்டுமே....சென்னை-28 க்குப் பிறகு கொஞ்சம் நடிப்பது..? போல் லைட் வெய்ட் கதை...இவரும் லைட் வெய்ட் நடிகர் எதையும் சீரியஸாக எடுத்துக்கொண்டது போல் தெரியவில்லை நடிப்பையும்தான்...சைனீஸ் படங்களுக்கும் ஜாக்கிசானுக்கும்  டிஸ்கவரி சானெல் குரங்குகளுக்கும் டப்பிங்   கொடுக்கும் காட்சியில் நல்ல நடிப்பு..(இதில என்ன நடிப்பு வேண்டியிருக்கு என்று நீங்கள் கேட்பது...உங்களுக்குச் சொன்னா புரியாது..)

http://images.desimartini.com/media/versions/main/original/2d1104fa-46f4-432e-b814-efafee5fb2bf_original_image_500_500.jpg  

அஞ்சலியாக நடித்துள்ள வசுந்தரா காஷ்யப் இரு வேறு மாறுபாட்ட நடிப்பு அடக்கமான பெண்ணாகவும் பார்களில் குடித்துக் கும்மாளமிடும் அழகியாகவும் என்று அடடா...நாம் பார்ப்பது தமிழ் படமா? அல்லது ஆங்கிலப் படமா? என்று..அதுவும் உங்களுக்குச் சொன்னா புரியாது.  

sonnapuriyathu



மீரா கிருஷ்ணன் அவ்வப்போது பாதயாத்திரை செல்ல சாமியாரிணி ஆடைமாற்றுவதும் நல்ல காமெடி..சிவாவின் பாட்டியாக வத்சலா ராஜகோபால் நிறையக் காட்சிகளில் ஐ-போனுடன் FBI (FACEBOOK ID) பற்றிப் பேசி கலக்குகிறார்...அதெல்லாம் சொன்னா புரியாது.

http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2013/01/sonna-puriyadhu-trailer.jpg
 
கால்கட்டு.காம் அதிபர் மனோபாலா செம கூத்து...கங்கை அமரனுடன் ரியாலிட்டி ஷோவில்  சிவா-அஞ்சலி ஜோடியுடன் அலப்பறை பண்ணுகிறார்.(சிவா-அஞ்சலி கல்யாணமாகப் போகும் ஜோடி..மனோபாலாவும் அவரது மனைவியும் எந்த ஜோடியோ..?
 இதில் வேற கூத்து...ரியாலிட்டி ஷோ நடத்துபவரே மனோபாலாவாம்...அதெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது.)


 சிவாவின் நண்பர் கல்யாண வீட்டில்  ஊர் நாட்டாமையாக வரும் சிங்கமுத்து கொஞ்ச நேரமே என்றாலும் பரவாயில்லை..மற்றபடி சிவாவே கதாநாயகன்+காமெடி+வில்லன்+....+...இப்படி அனைத்தையும் அவரே செய்வதால் என்னத்த  நான் சொல்வது...? சொன்னாலும் புரியாது 

https://sphotos-b-ord.xx.fbcdn.net/hphotos-ash3/p480x480/7295_152378334947435_830894496_n.jpg
 
இயக்குனர் கிருஷ்ணன்  ஜெயராஜ் ...காமெடி தீயா வேலை செய்திருக்கிறாரு ..ஆனால் சிரிப்புத்தான் வரமாட்டேங்குது....
இப்படிக் குத்துப்பாட்டும் கொலைவெறி டான்சும் அதிரடியும்  என்று எந்தச் சினிமாத்தனங்களும் இல்லாத இதைச் சினிமா என்று சொன்ன உம்மைப் பாராட்ட வேண்டும் நீங்க நல்லா வருவீங்க..இங்க அல்ல சின்னத்திரையில....இப்படி கதம்பமாக உங்களுக்குச் சிரிப்பு வரும் காட்சிகளைக் கோர்த்து நல்லாவே சொரியுரிங்க...அப்புடியே மறந்திடாதீங்க...
freeonlinephotoeditor
 
உங்க படத்தை (உங்க வார்த்தையில் சொன்னா...இது படமல்ல பாடம்) ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்ய மறந்திடாதீங்க..உங்களுக்கு சொன்னா புரியாது...அவிங்களும் சொரிஞ்சி சொரியாசிஸ் வந்து சிரிக்கட்டும்..இல்லனா சாகட்டும் அப்படியே ஹாலிவுட்ல நீங்க ஒரு பெரிய இயக்குனராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்

http://images.desimartini.com/media/versions/main/original/362fe446-5634-49f3-a722-2f8277bf2d6f_original_image_500_500.jpg
 

(ஏன்...? என்று கேட்காதீங்க அப்படியாவது தமிழன் பிழைத்துப் போகட்டும் என்னடா...இந்த தமிழனுக்கு வந்த சோதனை..அண்டை நாட்டிலும் அவஸ்தை..நடுக்கடலிலும் உயிர எடுக்கிறாயிங்க...சொந்த நாட்டிலயும் இப்படிச் சொரியிராயிங்க..ஒரு சினிமா கூட ஒழுங்கா பார்க்க விடமாட்டேங்கிராயிங்க... .இதெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது. ...அடங்..கொய்யால- என்ற வார்த்தைகூட...உங்க படத்து வசனம்தான்...நல்லா குடிப்பாயிங்க அப்புறம் கொய்யா பழம்  தின்னா வாட அடிக்காதாம்...அந்தக் கொய்யாவத்தான் சொன்னேங்க   

**************************************************************************
 இது கவர்ச்சி பக்கம்..........
vasundhara

Tuesday, July 30, 2013

யார் வசூல் சக்ரவர்த்தி? கணிப்பு முடிவு

(குறிப்பு-நமது வலைப்பதிவில் நடத்திய ரஜினி,கமல்,விஜய்,அஜித்,சூர்யா...யார் வசூல்சக்ரவர்த்தி என்ற கருத்துக்கணிப்பு முடிவும்...சில உண்மைகளும்)

vijay



நமது கருத்துக்கணிப்பு முடிவு......இளையதளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய்  என்று தீர்ப்பளித்துள்ள வாக்காளர்களுக்கு நன்றி.......



ரஜினி,கமல்,விஜய்,அஜித்,சூர்யா..இவர்களில் உண்மையான வசூல் சக்ரவர்த்தி யார்..?               



கருத்துக்கணிப்புபின் போது ஒரு பிரபல சினிமா வலைப்பதிவர் தொடர்பு கொண்டு விஜய்தான் என்று எல்லோரும் வாக்களிப்பார்கள் என்றும் ஏனென்றால் அவருக்குத்தான் வலைதளங்களில் அதிக செல்வாக்கு என்பது போன்றும்  சொன்னார்....ஆனால் அது நிஜமல்ல

http://i1.ytimg.com/vi/VFCf4Mz42V8/hqdefault.jpg

உண்மையான  நிலவரம்..இதுவரை  பாக்ஸ் ஆபீஸ் நட்சத்திரங்களும் அவர்களின் வசூல் வாரிக்குவித்து அவர்களை முன்னணியில் வைத்திருக்கும்  பிளாக்பஸ்டர் (Blockbuster) படங்களில் ஐந்து வரிசைப் படுத்தப்பட்டால்..........

1-எந்திரன்..........278 கோடி  
2-துப்பாக்கி........187 கோடி  (இன்னும் தொடரும் வசூல்....) 
3-நண்பன்............169 கோடி   
4-தசாவதாரம்...159 கோடி   
5-மங்காத்தா......130 கோடி   

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன்  சாதனை படைத்து இன்றும் முன்னணியில்  இருப்பதைக் காணலாம்.அங்கே ஒரு உண்மையையும் நாம் காணவேண்டும் அந்த வெற்றி ரஜினியால் மட்டுமே வந்தது என்று சொல்வதற்கில்லை... 



அவரது எந்திரன் திரைப்படம் 278 கோடிக்கு மேல் வசூல் செய்து யாரும் முறியடிக்க முடியாத சாதனையில் இன்றுவரை நீடிக்கிறது. 
ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டாரும் ஷங்கர் என்ற சூப்பர் இயக்குனரும் இணைந்து புதிய தொழில் நுட்பத்தில் பெரிய முதலீட்டில்..அதிக விளம்பரங்களுடன்  படைத்த சாதனை...

http://cinebuzz.in/wp-content/uploads/2012/11/thupakki1-500x280.jpg

அதேநேரம் நடிகர் விஜய் தனியொருவராக தனது துப்பாக்கி படம் மூலம் ரூ.187 கோடிக்கு மேல் வசூல் சாதனைப் படைத்தும்....
இயக்குனர் ஷங்கரிடம் இணைந்தும் நண்பன் திரைப்படம்...
ஆக இரண்டு  பிளாக்பஸ்டர் (Blockbuster) படங்களுடன் முன்னணியில் உள்ளார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற நிலையை எட்டிப் பிடித்துள்ளார்.

https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-prn1/p480x480/154399_437439639643782_806301407_n.jpg

இந்திய அளவில் இன்று ரூ.100 கோடிக்கு மேல் 
வசூல் செய்யும் ஒரு சில பாலிவுட் நட்சத்திரங்களில் தமிழ் திரைவானிலிருந்து இருவர் மட்டுமே.....ரஜினியும் விஜய்-யும் 
அந்தப் பெருமையையும் உயர்வையும் அவருக்கு தந்தது துப்பாக்கி திரைப்படமே  



விரைவில் வரவிருக்கும் நடிகர் விஜயின் "தலைவா" திரைப்படமும் துப்பாக்கி போன்று வெற்றிபெற்று வசூலில் சாதனை படைத்தால்.....தமிழ் திரைவானில் மட்டுமல்ல இந்தியத் திரைவானில் என்றும்  உண்மையான வசூல் சக்ரவர்த்தி அவரே!

thalaiva


விரைவில்...
தலைவா- துப்பாக்கியாக வசூலில் வெடிக்குமா...?
என்பதை ஒரு பதிவில் காண்போம்
 
****************************************************************************
thanks-images are with mouse hover effect...sorry for any inconvenience to some browsers and mobile readers all images from google.co.in are linked with original nets..some data and sources from net and thanks to imdb..TOP 5 BOX OFFICE COLLECTION TAMIL MOVIES OF ALL TIME

Monday, July 29, 2013

சினிமா இயக்குனர்களே! இங்கே பதிவர்கள் ஜாக்கிரதை!

(குறிப்பு-இது சினிமா இயக்குனர்களை உஷார் படுத்தும் எச்சரிக்கைப் பதிவு. சினிமா விமர்சகர்கள் என்றப் போர்வையில் உலாவரும் ட்வீட்டர்கள்..முகநூல்வாசிகள்...பதிவர்கள்   பற்றிய ஒரு சிறப்பு...சாரி....சிரிப்பு பதிவு. எச்சரிக்கை- இங்கே  எந்த சினிமா விமர்சகர்களும் தனிப்பட்டு விமர்சிக்கப்படவில்லை) 

freeonlinephotoeditor

என் உயிரிலும் மேலான தமிழ் சினிமா இயக்குனர்களே! கொஞ்சம் உஷாராக இருங்கள்...அன்று உங்கள் திரைப்படம் சில மாத -வாரயிழகள்..சில நாளிழல்கள் மட்டுமே விமர்சித்தன..இப்போது எல்லாம் மாறிவிட்டது...

freeonlinephotoeditor

உங்கள் படத்தில் நீங்கள்  இடைவேளை விடும் போது...ஏன் படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே விமர்சிக்கப்படுகிறது...ஒரு ட்வீட்டர் ஒரு கீச்சு கீச்சினால்..அது பல லட்சம் கீச்சர்களிடம் போய் மொக்க...மொக்க..என்று கத்துகிறது.

freeonlinephotoeditor

ஒரு படத்தின் முதல் காட்சி முடிந்த அடுத்த நிமிடமே அது விலாவாரியாக முகநூலில் வாசிக்கப்படுகிறது..சில முகமூடி முகநூல் வாசிகள் தங்கள் விருப்பு வெறுப்பை அங்கே எச்சில் உமிழ்கிறார்கள்...

இப்படித்தான் சில பதிவர்களும் ரசனையுடன் எழுதுவதாக நினைத்துக் கொண்டு எதையாவது எழுதுகிறார்கள்...அவர்களை யாரும் குறை சொல்லமுடியாது....உங்களுக்கு கோடிகள் பெரிதல்ல......எங்களுக்கு ஒரு ரூபாயும் சிறிதல்ல. 

freeonlinephotoeditor

சில நல்ல தமிழ் இயக்குனர்கள்கூட...   ஹோலிவுட் திரைப்படங்களில் உள்ள சில புதிய தொழில்நுட்பங்களை தங்கள் தமிழ் சினிமாவில் பயன்படுத்தி..பல கோடிகள் செலவு செய்து...தயாரிப்பாளர்களை திருவோடு ஏந்தவிட்டு  தெருவோடு அலையவிடுகிறார்கள்..அப்புறம் அவர்களும் தூங்குகிறார்கள் அவர்கள் திறமையிலும்   சிலந்தி வலை பின்னுகிறது...

freeonlinephotoeditor

இப்போதைய தமிழ் சினிமா புதியப் புரட்சியாக....3-D, DSLR கேமரா டிஜிட்டல்,ஆரோ 11.1 3D ஒலி (AURO-3D) இன்னும் பல தொழில்நுட்பங்ள் உபயோகப்படுத்தி  தமிழில் இப்போது படம் எடுக்கிறார்கள்.....

              
       thanks-YouTube-bySony Music India Sony Music India

சமீபத்திய மரியான் ஒரு சிறந்த உதாரணம்....ஆழ்கடலில் மரியான் தனுஷ் குத்தீட்டியுடன் சுறா வேட்டையாடும்  காட்சி...
பாலைவனத்தில் சிறுத்தைப் புலிகள் வேடிக்கை காட்டும்  காட்சி... வெள்ளை மணல்பரப்பில் காதல் பாடல் காட்சி..இப்படி நிறைய சொல்லலாம் இவைகள் உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான..மார்க்ஸ் கொனின்க்கக்ஸ் (Marc Koninckx) மூலம் படம்காட்டப்பட்டது.அதேபோல் ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஆரோ 3 D ஒலிவடிவம் ...

                             thanks-YouTube-by xcjustin

இங்கே தமிழ்நாட்டில் எத்தனை திரையரங்குகளில் Perlux® Digital திரை இருக்கிறது...? உங்களின் டிஜிட்டல் ஒளிப்பதிவை எந்தனை திரையரங்குகள் அதன் தன்மை மாறாமல் திரையிடமுடியும்..? 

                                           thanks-Youtube-by sethami

DIGITAL IMAX HD-வடிவத்தில் வரும் உங்கள் படம் இங்கே யாரால் பார்த்து ரசிக்க முடியும்...? 

First 4K 3D projection plus 3D sound combination

                                  thanks-YouTube-by barcoTV

எத்தனை திரையரங்குகளில் உங்கள்   ஆரோ 11.1 3D ஒலியை அப்பாவி சினிமா ரசிகன் அனுபவிக்க முடியும்...?

                         thanks-YouTube-by DirectorTutsDCU

உங்கள் முயற்சியை விழலுக்கு இரைத்த நீராக வீணாகப் போகிறது...டிஜிட்டல் LED திரையில் பார்க்கவேண்டிய திரைப்படத்தை ப்ரோஜெச்சன் திரையில் பார்த்தால் அதன் தரம் எப்படி இருக்கும்.....?

                             thanks-YouTube-by Ray Ameyar

தமிழ் இயக்குனர்களே நீங்கள் ஹோலிவுட் ரேன்ஜ்க்கு படம் எடுத்துள்ளேன் என்று சொல்லும் போது சென்னை மாநகரில் உள்ள ஒரு ரசிகன் கூட அனுபவிக்க முடியவில்லை...யாருக்காக படமெடுக்கின்றீர்கள்...? அமெரிக்கா..ஆப்பிரிக்கா...அண்டார்டிகா ரசிகனுக்கு படம் எடுக்கின்றீர்கள் என்றால் உங்கள் படப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு..அங்கே பறந்து போங்கள்    கதையை நம்பி படமெடுங்கள்.. 

                            thanks-YouTube-by DarkHoleFilms

ரசிகனின் நாடி பிடித்து ரசனைக்குப் படமெடுங்கள் 
கவர்சிக் குத்துப்பாட்டும் கொலைவெறி டான்ஸும் கையை வெட்டுவது...தலையை வெட்டுவது என்று வன்முறை காட்சிகளையும் காட்டி வெற்றிபெறலாம் என்று நினைக்காதீர்கள்...

உங்களுக்கு கோடிகள் பெரிதல்ல......எங்களுக்கு ஒரு ரூபாயும் சிறிதல்ல..சிந்தியுங்கள்.......சீரழியாதீர்கள்......இந்தச் சமுதாயத்தையும் சீரழிக்காதீர்கள்.   

Sunday, July 28, 2013

இஸ்ஸாவின் ஹைக்கூ கவிதைகள்

(இங்கே இஸ்ஸாவின் ஹைக்கூ கவிதைகள் எனக்குப் பிடித்தவைகள் ஐம்பது கவிதைகள் எனது கவிதை நடையில் மொழியாக்கம்.....)
http://www.gwarlingo.com/wp-content/uploads/2012/06/issa_the_haiku_poet-by-Hashimoto-Heihachi.jpg

கோபயாஷி இஸ்ஸா-இவர் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கவிஞர் இளமையில் தாயாரின் இறப்பும் சித்தியின் கொடுமையும் இவரைக் கவிதை எழுதத் தூண்டியது.இவரது ஹைக்கூ கவிதைகளில் சோகம் பாலாடை போர்த்தியது போல் இருக்கும்.

இவர் எழுதிய 20,000 க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகள் இயற்கை,வாழ்வின் அன்றாட விதிமுறைகள்,அனுதாபங்கள்...பற்றி விவரிக்கும்..........அதில் சில  
http://www.indieday.cn/blog/wp-content/uploads/2009/05/hokusai2.jpg

ஒ...நத்தையே 
புஜி மலை மீது ஏறு...
ஆனால், மெதுவாக...மெதுவாக  

நீங்கள் பிறந்த போதும் ஒரு குளியல்,
நீங்கள் இறந்த போதும் ஒரு குளியல்,
என்ன முட்டாள்தனம்.

 
ஒரு குயில் பாடுகிறது 
எனக்கும் அந்த மலைக்கும் 
எனக்கும் அந்த மலைக்கும் 

ஒரு பெரிய தவளையும் நானும் 
ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு 
யாரும் நாங்கள் நகரவில்லை 

எப்போதும் நான் புத்தரிடம் பிராத்திப்பது 
நான் கொசுக்களை 
கொல்லாமல் இருக்க வேண்டுமென்று  

என்ன வயது உனக்கு? என்று  
புத்தாடையிலிருந்த அந்தப் பையனிடம் கேட்டதும் 
ஐந்து விரல்களையும் நீட்டினான் 

http://24.media.tumblr.com/tumblr_m090weq1rT1qc6wuio1_500.jpg  

இரவுப்பூக்களின் மலர்ச்சி 
மக்கள் முகத்தில் 
இசையின் மிளிர்ச்சி 

நீர்பறவைகள் போன்று குழந்தைகளின் போலித்தனம் 
இன்னும் அற்புதமாக உள்ளது 
நீர்பறவைகளை விட...

அந்த ஈயைக் கொல்ல வேண்டாம், பார்!
அது பிரார்த்தனை செய்கிறது உங்களிடம்
அதன் கைகளையும் கால்களையும் தேய்த்து


http://www.thecie.org/issa/images/issa400.jpg  
என் கிராமம்-
அந்த மக்களைப் பற்றி எதுவும் தெரியாது 
ஆனால் எல்லோரும் 
அலங்கோலமான கொல்லைப்பொம்மைகள்  

கவலைப்படாதீர்கள் சிலந்திகளே!
நான் என் வீட்டை வைத்துள்ளேன் 
சாதாரணமாகத்தான் 

தண்ணீரில் ஆட்டம் போடும் வாத்துக்கள்-
அவைகள் நம்பிக்கையில் உள்ளன 
இன்றிரவு அதிர்ஷ்டம் அடிக்குமென்று...?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJxLSFLYbQ81ZAcp78qFMV1L2gBtKxer7Bc6SsGV0STJ7_C97AEYQfn-iubdq8HIzJyHoAtnvCk38-8aYYv6DWfIUxZXMLCz1w-qtGJt5ogALALFfAdB8rKaP9n3E7uiWIl4tXeBIHWPMO/s1600/umbrells.jpg
 
அந்தச் சிறிய தீவுகளிலும் 
எல்லோரும் உழுது பயிர்செய்கிறார்கள் 
வானம்பாடிகள் பாடுகின்றன 

பூச்சிகளுடன் கூட....
சிலரால் பாடமுடியும் 
சிலரால் முடியாது.

அந்த வசந்த நிலவின் முகாம்-
பன்னிரண்டு ஆண்டுகள் பழையது 
என்னால் சொல்ல முடியும் 

தூங்கி எழுந்த அந்தப் பூனை    
கொட்டாவி விட்டுப் புறப்பட்டது 
காதல் செய்ய....

ஏ....குருவி!
நீ போகும் வழியில் 
வருகிறது குதிரை.

எவ்வளவுக்கு எவ்வளவு 
உனக்குள் நீ அனுபவிக்கிறாய் 
அந்துப்பூச்சியே....?

நான் வெளியே போகிறேன் 
ஈக்களே! மிக நிதானமாக 
காதல் செய்யுங்கள்.
http://talesofjapan.kasugadesign.pro/images/kasuga_haiku_anim.gif
வசந்த மழையில் 
ஒர் அழகான பெண் 
கொட்டாவி விடுகிறாள் 

புதர் நிழலில் 
ஒரு பெண் அவளுக்குள் 
பாடுகிறாள் நடவுப்பாடல் 

அந்தப் பிந்தைய நாளில் 
காலச் சிதைவு
எங்கெங்கும் செர்ரிப் பூக்கள் 

இந்த உலகத்தில் 
நாம் நடக்கிறோம் நரகத்தின் கூரையில் 
மலர்களை வெறித்தப் படி.........

அரை நாள் குட்டித்தூக்கம் 
யாரும் 
என்னைத் தண்டிக்கவில்லை 

நண்பகல் குட்டித்தூக்கத்தில் 
நாற்று நடுபவர்கள் பாட்டு கேட்டு 
எனக்குள் வெட்கப்படுகிறேன் 

 
புத்தாண்டு தினம்-
காண்பதெல்லாம் களிப்பில் 
நான் சாதரணமாக் உணர்கிறேன் 
http://nipponario.abranera.com/wp-content/uploads/2012/03/3ea1c68668d04182334cfdffb51d_grande.jpg
புத்தாண்டு அதிகாலை-
குளத்து வாத்துக்கள் கத்தும் 
க்குவாக்...க்குவாக்  

எந்தச் சந்தேகமும் இல்லை 
அந்த மலைக்குயில் 
அடம்பிடித்து அழும் குழந்தை 

தொட்டிக்குள் இருப்பதை 
அறியாத அந்த மீன் 
குளிறுட்டுகிறது தொட்டி வாயிலை

ஆர்வமின்றி 
பூக்கின்றது 
என் பிளம் மரம் 

பனி மழையின் பீச்சல்  
என் கதவுக்கு வெளியே 
நேர்துளை செய்கிறது 

பார்க்கவும் 
ஒரு தொலைநோக்கி மூலம்......
விலைமதிப்புள்ள மூடுபனி 

கோடை இரவு-
நட்சத்திரங்கள் கூட 
கிசுகிசுக்கின்றன ஒன்றுக்கொன்று....

அந்த அழகான பெண்.......
கடித்து நொறுக்கியபடி 
பொதியப்பட்ட அரிசி ரொட்டியை 

அந்தக் குருவி-
இங்கேயும் அங்கேயும் தேடுகிறது 
நீ எதையும் இழந்தாயா...?

அந்தக் காகம் 
அங்கே நடக்கிறது 
வயலை உழுவது போல...

முள்ளங்கி பிடுங்கும் மனிதன் 
என் வழியைச் சுட்டிக்காட்டினார்
ஒரு முள்ளங்கியைக் கொண்டு...


இன்றிரவும் நிலவின்....
நான் தவறவிட்டேன் 
அவளது புலம்பல்

அந்தக் காட்டுக்கோழி அழுகிறது 
இப்போதுதான் பார்த்தது போல் 
அந்த மலையை 

பனிக்கட்டி உருகுகிறது...  
அந்தக் கிராமம் பெருகுகிறது 
குழந்தைகளால் 

அந்தத் தேரை.........
இப்படித்தான் தெரிகிறது 
நுண்ணுயிர்த்திரளை விழுங்கியது போல 

இந்த அந்துப்பூச்சி பார்த்தது பிரகாசம் 
அந்தப் பெண்ணின் அறையில்.........
எரிந்தது வறுவலாக 

என் வீட்டுக் கூரையில் 
ஓர் அங்குலப் புழு
விட்டங்களை அளந்தபடி....

புத்தர் படத்தின் கீழ் 
வசந்தகாலப் பூக்கள் 
அலுப்பு 

கல்லறைகளுக்குச் சென்று 
அந்தக் கிழட்டு நாய்-
வழிகாட்டுகிறது 



http://www.sidewaysstation.com/060508_2325_ThePoemariu1_6.jpg  
அதிசயமான ஓன்று!
செர்ரிப் பூக்கள் மரத்தடியில் 
வாழ்வது.......
 
(அவரது மகளின் கல்லறையில் 
அவள் இறந்த முப்பது நாட்களுக்குப் பிறகு...)
காற்றில் விழுந்தன.....
அவளுக்குப் பிடித்த 
செவ்வந்திப் பூக்கள் 

என் தந்தையுடன் 
நான் பார்க்கவேண்டும் விடியல்
பசும் வயல்வெளி மீது....

http://a-z-animals.com/media/animals/images/470x370/sea_slug6.jpg அந்தக் கடல் நத்தைகளுக்கு 
எதுவும் தெரியவில்லை 
ஜப்பானியர்களைப் பற்றி..

எழுத்துச் சாணி போடுவது 
பணக்காரர்களுக்கு 
கலை அல்ல 

இப்படி இஸ்ஸாவின் ஹைக்கூ கவிதைகள் களிப்புடன் குதித்து  எல்லோரையும் களிப்படையச் செய்கின்றன.

அடுத்து யோசா புசோன் என்ற ஹைக்கூ கவிஞரும் ஓவியரும் எழுதிய சில கவிதைகளைக் காண்போம் 
                                                ...........................இன்னும் வரும்

Saturday, July 27, 2013

கணினி! நீ என் நண்பன்டா!

http://i1.sndcdn.com/artworks-000042573878-ooaun9-t500x500.jpg?cc07a88  
(குறிப்பு-இது கணினியுடன் எனக்கு ஏற்பட்ட  பரிச்சயம்..உறவு பற்றிய கொஞ்சம் சுவை நிறைய அறுவை  நிறைந்த நீ..ள..மா...ன...என் அனுபவப் பதிவு)

ஆரம்பத்தில் குத்துப்பாட்டோடு அறிமுகமாகும் நம் தமிழ் சினிமா நாயகர்கள் மாதிரி நானும் ஒரு கவிதை போட்டு..... 

freeonlinephotoeditor

அட..கணினியே!
நீ
பெண் என்றால் 
அறிவாளியான என்னை
முட்டாளாக்கிய மூதேவி!

உன்னை முதல் முதலாக
என்று பார்த்தேனோ
அன்றிலிருந்து பறிபோனது
என் மனது மட்டுமல்ல
என் மூளையும்தான்

நீ
ஆண் என்றால்
என் அறிவைத்
திருடிக்கொண்ட
திருட்டுக் கம்முனாட்டி!

இன்று நான் ஒரு கடனாளியாக
1...2....3....கூட்டுவதற்கும்
உன் தயவை நாடி நிற்கிறேன்
என் எழுதுகோல்
எழுதுபவைகள் எல்லாம்
கோழிக்கிண்டலாக....

(அண்ணேன்...போதும் உங்க அனுபவத்தைச் சொல்லுங்க 
எங்களுக்கு நிறைய வேலை இருக்கு...)

http://ecx.images-amazon.com/images/I/51fvxDzSN5L.jpg

அப்போது வருடம் 1995 என்று நினைவு.கணினி இந்தியாவில் ஓர் அதிசயப் பொருளாகவும் சாப்ட்வேர் இஞ்சினியர்கள் ஏதோ அறிவு உலகத்திலிருந்து வந்தவர்கள் போலவும் நாட்டு நிலவரம் அப்போதே அதன் விலையோ சப்ப கணினி ரூபாய்  1 லட்சத்திற்கு மேல் இருக்கும்...ரொம்ப அபூர்வமாகவே சில மிகப்பெரிய அரசு..தனியார் நிறுவனங்களில் உபயோகத்தில் இருக்கும் அதுவும் CPU வெளியே தெரியாது

நான் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி (அப்போது இப்போது இருப்பதைவிடப் பாதி வளர்ச்சியடைந்த நிறுவனம் அது)  வாரத்திற்கு ஒரு நாள் அவரது தனியறையில் எங்களுடன் வியாபாரத்தைப் பற்றிக் கலந்துரையாடுவார்.

அப்படி ஒரு நாள் அவரது அறையில் அவரது மேசை மீது  ஒரு கணினியை முழுவதுமாகக் கண்டேன்...அட.. எல்லோரும் மானிட்டரை அவர்கள் பக்கம் அவர்கள் பார்க்க ஏதுவாக வைத்திருப்பார்கள்..இவரோ வித்தியாசமாக இவரைப் பார்க்க வருபவர்கள் பார்க்கும் படி வைத்திருந்தார்...அதில் உள்ள ஸ்கிரீன் சேவரில்  அவரது புகைப்படம் விதவிதமாக....

தொடர்ந்து பத்துக் கலந்துரையாடல்களில் அதையே பார்த்து வெறுப்படைந்து..அவரிடம் கேட்டேன் "முதலாளி..எல்லோரும் கம்ப்யுட்டர அவுங்க பக்கம்தான வைச்சிருப்பாங்க..நீங்க எங்க பக்கம் திருப்பி வச்சிருக்கிங்க..ஏன் இப்படி...?" என்று.
அதற்கு அவரோ சிரித்த படி..."எல்லாம் ஒரு பந்தாவுக்குத்தான்..நம்மளப் பார்க்க பெரிய கம்பெனிகாரங்க வருறாங்க..அவுங்க முன்னாடி ஒரு ஷோ காட்டத்தான்" என்று உண்மையைச் சொன்னபோது....

http://l1.yimg.com/bt/api/res/1.2/fQUvWhOKlzrSIHMGK5G03A--/YXBwaWQ9eW5ld3M7cT04NQ--/http://media.zenfs.com/fr_FR/News/Pampapress/buzz1.jpg
அப்போது எங்கள் நிறுவனத்தில் விற்பனை ரசிது (bill),வரவு-செலவு கணக்கு... அனைத்தும் நோட்டுப் புத்தகத்தில் கையில் எழுதுவதாகத்தான் இருந்தது..அதில் நிறைய அசௌகரியம்..உ.ம்...ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று (JAN 1)  விற்பனை எவ்வளவு என்பதை  ஒரு மாதம் முடிந்தாலும் எங்களால் கணக்கிட கடினம் அதனால் எனது அறிவு மண்டையில் மின்னலடித்தது..எங்கள் கிளையில் கணனிமூலம் விற்பனைப் பில் போட முதலாளியிடம் அந்தக் கணனியைக் கேட்டேன் "அதுலாம் நம்ம ஸ்பீடுக்குச் சரிப்படாதப்பா..அப்புறம் கணணி கையாளும் அளவுக்கு இங்கே வேலையில் யாருப்பா இருக்கா...?"  என்று மறுத்தார்...தொடர்ந்து எனது இடைவிடாத நச்சரிப்பு காரணமாக..சரி எடுத்துட்டுப் போ...என்று சொன்ன அடுத்த நிமிடமே அந்தக் கணணியை அள்ளிக்கொண்டு வந்தேன்.

உடன் எனக்குத் தெரிந்த சாப்ட்வேர் நண்பரை வரவழைத்து..எங்கள் வியாபார நிறுவன வேலைக்குப்  பாதிப்பு இல்லாமல் இரவு நிறுவனம் மூடியப் பிறகு தினமும் நள்ளிரவு 2 மணிவரை பத்துநாளில் அவருக்கு என் தேவைகளைச் சொல்லி அருகில் இருந்து ஒரு பில்லிங் சாப்ட்வேரை உருவாக்கினால்...அது முழுக்கக் கணினி மௌஸ் கொண்டு செயல் படுத்துவதுபோல் இருந்தது...

அப்போது எனக்கும் மௌஸ் செயல்பாடு கைவசப் படவில்லை...நான் ஒரு பக்கம் நகர்த்தினால் அதன் அம்புக்குறி  வேறு பக்கம்  ஓடும்...ரைட்-கிளிக் லெப்ட்-கிளிக் பெரிய தலைவலியாக இருந்தது...மீண்டும் அவரிடம் சொல்லி கீபோர்ட் மட்டுமே உபயோகித்து எளிதாக ஒரு சாப்ட்வேர் செய்ய...இன்னும் இருபது இரவுகள் தூக்கம் தொலைத்து... அப்பாடா...கண்டுபிடித்தார் MS-DOS MODE-ல் ஒரு செயல்பாடு...  

http://sp0.fotolog.com/photo/48/61/47/extracktor_4ever/1181769772_f.jpg

அது கணினி அறிவு அறவே இல்லாத அனைவரும் கணணியை உபயோகித்துப் பில் செய்ய எளிதாகவும் விரைவாகவும் இருந்தது..அப்போது வந்த புத்தாண்டு விற்பனை நிலவரத்தை என் முதலாளி மணிக்கு ஒருமுறை கேட்கும்போதும் துல்லியமாகச்  சொன்னபோது அவர் துள்ளிக் குதித்தார்   எங்களுக்கும் அன்றைய விற்பனை கணக்குகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது....பிறகு என் முதலாளி அவரது அனைத்து கிளைகளுக்கும் இது போன்று கணினிமூலம் பில்லிங் செயல்படுத்தினார்.

http://www.animaatjes.de/cliparts/computer/nerd/173039.jpg
இதனால எனக்கு எப்படி  கணினி அறிவு வந்தது...?
எனக்குத்தான் கற்பூர மூளையாச்சே...கணினி சாப்ட்வேர் நண்பருடன் ஒருமாதகாலம் உடனிருந்து அவரது செயல்பாடுகளைக் கவனித்தேன் அல்லவா அவை அப்படியே என் மண்டையில் ஏறிவிட்டது.

அதற்குப் பிறகு எங்கள் நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியடைந்து..கணக்குப் பிரிவு என்று அவரது அலுவலகத்தில் தொடங்கப்பட்டு... இன்டர்நெட்வுடன் இணைக்கப்பட்டு TOLLY-யுடன் இணைந்து முழுக்கக் கணினிமயமானது 

இப்போது  உலகளவில் பிரசக்தி பெற்ற SAP நிறுவனத்துடன் இணைந்து பலகோடிகள் செலவு செய்து இங்கே சென்னையில் ஒரு வாடிக்கையாளர் ஒரு கிளையில் பில் செய்தால் கன்னியாகுமரியில் அவர் போகாமலே அவர் சொல்லும் விலாசத்தில் பொருள் டெலிவரி செய்யும் நிலையும்..அதேபோல் தமிழ்நாட்டின் எந்த மூலையில் உள்ள கிளையில் பில்செய்த அடித்த நிமிடமே சென்னை தலைமையகத்திலிருந்து அதைத் தெரிந்துகொள்ளும் வசதியும் வந்துவிட்டது  ஆனாலும் அன்று எனது ஐடியாவில் நண்பருடன்  செய்த எளிய  பில்லிங் முறை சில மாற்றங்களுடன்  இன்றும் எங்கள் நிறுவனத்தில் நடைமுறையில் இருக்கிறது..

http://www.picgifs.com/clip-art/computer/nerds/clip-art-nerds-640973.jpg
இப்போது எல்லாமே மாறிவிட்டது...ஆனால் நான் மட்டும் மாறவில்லை  எனது கணினி அறிவுப் பசியும் தீரவில்லை..எனக்கு என்று தனியாக ஒரு கணினி வைத்து எனது கிளையின் செயல்பாடுகளை அதில் லிங்க் மூலம் கண்காணிக்கிறேன் இன்று எனது தலைமையில் நூறு பேருக்கும் மேல் வேலைசெய்கிறார்கள்....உ.ம். இந்த வருட ஜனவரி-1 விற்பனை ஒரே நாளில் ஒரு கோடி ருபாயுக்கும் மேல்..அதை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் கணக்குகளில் எந்தக் குறைபாடும் இல்லாமல் நடைபெறவும் வசதி...நினைத்துப் பார்த்தாலே ஆச்சரியமாக உள்ளது.

http://www.picgifs.com/clip-art/computer/nerds/clip-art-nerds-491966.jpg

என்னிடம் பிரத்தியேகமாக ஒரு கணினி கிடைத்ததால் அதைவைத்து  சென்னை ஹிக்கின்பாதம்ஸ் சென்று சில புத்தகங்களை வாங்கி...ACCESS  C++ போன்று அனைத்தும் தெரிந்துகொண்டு... எனது வேலையை எளிமைப் படுத்திக் கொண்டேன் இன்று நானும் ஒரு கணினி நிபுணர் போல் எந்தத் தவறு நடந்தாலும் நானே சரிபடுத்துகிறேன்  இப்போதைய இன்டர்நெட் வசதியில் இவை எல்லாம் சாத்தியமாகிறது.

https://si0.twimg.com/profile_images/3417155628/f579132314315cd208d2df3dad2cc932.jpeg
நான் வலைப்பூ ஆரம்பித்தது எப்படி என்றால்.........
காலை 9-மணிக்கு துவங்கும் எனது வேலை இரவு 10 மணிவரை இந்தக் கணினியுடன் மாரடித்து ஒரு கட்டத்தில் அதைப் பார்த்தாலே வெறுப்பாகிவிட்டது...ஒருமுறை மயக்கம் வருவது போல் இருந்ததால் தெரிந்த மருத்துவரிடம் போனேன்...அவரோ நீ பார்க்கிற வேலைக்கு மயக்கமென்ன..இப்படியே ஒய்வு இல்லாமல்  வேலை செய்தால் நீண்ட மயக்கம் (மரணம்) விரைவில் வரும்...மனசுக்குப் பிடித்த காரியங்களில் மனதை செலுத்தி ரிலாக்ஸ் செய்து கொள் என்ற அறிவுரையின் படி...
அலுவலக வேலைதவிர எனக்குக் கிடைக்கும் சிறிது ஒய்வு நேரத்தில் YOUTUBE-ல் படம் பார்ப்பது...விடியோ கேம் விளையாடுவது... வலைத்தளங்கள் வாசிப்பது என்று மீண்டும் கணினி என்னுள் அயிக்கியமானது 

http://www.picgifs.com/clip-art/computer/computers/clip-art-computers-070264.jpg
அப்படி வாசிக்கும் போது என்னுள் எழும் உணர்வுகளை சில தளங்களில் எழுதிப் பார்த்தேன் -ஒரு மலர் உதிர்ந்தக் கதை என்ற முதல் கவிதை  ஒரு வலைதளத்தில் வெளிவந்து சிலர் கருத்திட்டார்கள்..
அது என்னுள் புகைந்து கொண்டிருந்த எழுத்து ஆர்வத்தை எரியவைத்தது...அப்படியே இன்னொரு  தளத்தில் தொடர்ந்து எழுதினேன்..அங்கே உடனுக்குடன் வெளியிட்டார்கள் நிறையக் கருத்திடும் நண்பர்கள் கிடைத்தார்கள்..அங்கேயும் வினை ஆரம்பித்தது சிலர் கருத்தால் தாக்கவும் அந்த வலைதளமும் சில விதிமுறைகள் சொல்லி என்னையும் என் எழுத்துச் சுதந்திரத்தையும் சிதைக்க ஆரம்பித்தது...

https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-frc1/p480x480/396128_366085416751326_1879082927_n.jpg
எனவே நானாக யார் தயவுமின்றி ஒரு வலைப்பூ (இப்போது வாசிக்கின்றீர்களேஇதுதான்) ஆரம்பித்து..அதற்குப் பிறகு சில தமிழ் ஆங்கிலம்  வலைதளங்கள் உதவியுடன் அதைச் சீர்படுத்தி...
சொல்லப்போனால்...என் வாழ்வின் பெரும்பகுதியை   இந்தக் கணினி 18 ஆண்டுகளாக விழுங்கிவிட்டது இன்னும் தொடர்கிறது.....
பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் படித்தது என் ஆதங்கம் ஆனால் இது நிஜமல்ல... ஒரு சொகுசு சிறைக்குள் அடைத்துகிடந்த எனக்கு இன்று ஒரு வலைப்பூ ஆரம்பித்தப் பிறகு நிறைய நண்பர்கள்...

http://www.orkugifs.com/en/images/i-love-my-online-friends_2541.gif

அத்தனையும் வாடாத..நறுமணம் வீசும்  வலைப்பூ நண்பர்கள்.. அத்தனையும் மலர்ந்தது இந்தகணினி பூந்தோட்டத்தில்தான் (வலைப்பூ வைத்திருக்கும் அனைவரும் நண்பர்களே! யாரையும் இங்கே பெயர் குறிப்பிட்டு அப்புறம் எதிர்களை கூட்டிக்க கூடாது அல்லவா...?) அதனால்...........  கணினி! நீ என் நண்பன்டா!...நிறைய நண்பர்களைத் தந்த நண்பன்டா,,,,இதுதான் நிஜம்
     

UA-32876358-1