google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: December 2013

Tuesday, December 31, 2013

இங்கேயும் தல அஜீத்தே N0-1.....வாவ்வ்வ்வ்வ்


இதுவரை என் வலைப்பதிவுகளில் முதல் பத்து இடங்களைப் பிடித்த டாப் 10 பதிவுகளில் 5 பதிவுகளில் இடம் பெற்று முதல் இடத்தை தல  அஜித்தும் 2 பதிவுகளில் இடம்பிடித்து இரண்டாவது இடத்தில் கார்த்தியும்......
இங்கேயும் தல அஜீத்தே N0-1.....வாவ்வ்வ்வ்வ்



  














நல்லதொரு முட்டாள் தினத்தில் துவங்கப்பட்ட (1/4/2012) எனது வலைப்பூவில் இதுவரை 5 லட்சத்துக்கும் மேல்  (page views) பார்வைகள்... அவைகளில் 5118 பார்வைகள் பெற்று அஜித்தின் ஆரம்பம்-வெற்றிக்கு காரணம்? முதலிடத்தையும்............






















5118
4797
4310
4131
4005
3889








3423








3320








2917








2751
என் வலைப்பதிவுகளை பார்வையிட்டு வாழ்த்திய... தூற்றிய....
 என் இதயத்தில் வாழும் என் இனிய இணைய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.................ஆதரவு கொடுத்த அனைத்து திரட்டிகளுக்கும் நன்றி.........
எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....



Monday, December 30, 2013

இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம்?



ரஜினி,கமல்,விஜய்,அஜித்,தனுஷ்,சிவ கார்த்திகேயன்,விஜய் சேதுபதி,ஆர்யா,சூர்யா,கார்த்தி,விஷால்,ஜெய்,சிவா...என்று நிறைய திரை நட்சத்திரங்கள் இருக்கும் தமிழ் சினிமாவில்...இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் யார்........ ?

குறும்பட இயக்குனர்கள்,டார்க் காமெடி கலக்கல்கள்,நடிப்பு, இயக்கம் என்று புது முகங்களின் வெற்றி....இப்படி 2012-லிருந்து புது எழுச்சி கண்ட தமிழ் சினிமா.....

2013-ஆம் ஆண்டும் வெற்றிகரமாக தொடர்ந்திட....
பல திறம் படைத்த இயக்குனர்கள் மணிரத்தினம்,பாரதிராஜா,அமீர்,ராஜேஷ்....போன்றவர்கள் சொதப்பிட........

நட்சத்திர  நடிகர்கள் கமலஹாசன்,விஜய்... போன்றவர்கள் சில புரியாத மாயையில் சிக்குண்டு தடுமாறிட....

Made with FreeOnlinePhotoEditor.com

 சூது கவ்வும்,நேரம்,மூடர் கூடம்...போன்ற புதுமையான டார்க் காமெடி படங்கள் கலக்கல் செய்தன அதிலும் சூதுகவ்வும் படம் வசூலிலும் அதில் நடித்த விஜய் சேதுபதி விமர்சகர்களால் பெரிதும் பாராட்டுப் பெற்றார்......



சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி வரும் 2014-ஆம் ஆண்டுஅதிரடி யதார்த்த நகைச்சுவையில் கலக்க கைவசம் ஆறு படங்கள்........ரம்மி,புறம்போக்கு,ஜிகர்தண்டா,பண்ணையாரும் பத்மினியும்,சங்குதேவன் ,வன்மம்.... என்று 


vijaysethupathy

இன்று  பல நடிகர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் நடிகர் விஜய் சேதுபதியே இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றார் என்று கோடம்பாக்கம் கோடாங்கி ஓங்கி அடிகிறார் செய்தி உடுக்கையை...டக்க...டக்க.....

sivagarthikeyan

அப்படினா...எங்க சிவகார்த்திகேயன் நம்பிக்கை நட்சத்திரம் இல்லையா? என்று கேட்க்கும் ரசிகர்களே....

மெரினாவில் தலையைக் காட்டி கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று ஜோடி சேர்ந்து..தனியாளாக  எதிர்நீச்சல் போட்டு எதிர் பாராத வெற்றி என்று கரை சேர்ந்த இவர் ஆரம்பித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்   அமோக வெற்றி...ஆனாலும் அண்ணனுக்கு 2014-ல் வரவிருக்கும்   மான்கராத்தே...ஸ்வப்ன சுந்தரி படங்களின் வெற்றியைப் பொறுத்தே...

அதனால்....விஜய் சேதுபதியே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று............
என்ன நாஞ் சொல்றது...?  



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-6/1/2014
 

Sunday, December 29, 2013

2013 தமிழ் சினிமா-உல்டா புல்டா

(எச்சரிக்கை-இந்த ஆண்டு (2013) வந்த தமிழ் சினிமா படங்களைப் பார்த்து எனக்கு வந்த கோளாறில் எழுதப்பட்ட பதிவு இது...ஆங்..இதைப் படித்துவிட்டு உங்களுக்கும் ஏதேனும் கோளாறு வந்தால் நான் பொறுப்பல்ல....)

Made with FreeOnlinePhotoEditor.com

ஜனவரி-இந்த  வருடம் தொடங்கும்போதே  துப்பாக்கியுடன் சண்டை போட்ட கள்ளத்துப்பாக்கி முதல் படமாக வெளிவந்து புஸ்வானமானது... ஆவலுடன் எதிர்பார்த்த கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்  எல்லாருக்கும் அல்லா கொடுத்தார் அப்படித்தான் விஷாலும் சமர் என்ற கல்கொனா கல்லுமிட்டாய் கொடுத்து படம் பார்த்தவர்களின் பல்லை உடைத்தார் என்றால்....சந்தானம் பவர் ஸ்டாருடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று கலக்கிவிட்டு பாவம் பாக்கியராஜக்கு லட்டு கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்

kamal

பிப்பரவரி மாதம் தமிழ் திரையின் இமாலய இயக்குனர்  மணிரத்தினம் வாங்கடா வாங்க...என்று படம் பார்க்க வந்தவர்களையெல்லாம் கடல் -லில் மூழ்கடித்தார் என்றால் இன்னொரு ஜாம்பவனோ மதம் பிடித்த யானை போன்று விஸ்வரூபம் எடுத்து எல்லோரையும் காலில் போட்டு மிதித்தார் அப்படித்தான் புதுமை இயக்குனர் அமீரின் ஆதிபகவன் எடுத்து அவரே படம் பார்க்க வேண்டியதானது ஆனாலும் ஹரிதாஸ் நல்லாத்தான் படம்காட்டினார் அய்யோ பாவம்  மசாலா போடா மறந்துவிட்டார்

paradesi

மார்ச் மாதம் வந்த படங்களில் பாலாவின் பரதேசி....அவரை பரதேசியாக்கவில்லை...ஆனாலும் சென்னையில் ஒரு நாள் ஏதோ பரவாயில்லை ஆனால் காமெடி  மசாலா தூக்கலாக இருந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா செம கலக்கல்

ஏப்ரலில் வந்த சேட்டை குறட்டை விட்டது...உதயம் NH4 நெடுஞ்சாலையில் விபத்து ஆகாமல் ஆனாலும் வேகமில்லை


மே மாதம்  சிவ கார்த்திகேயன் எதிர்நீச்சல் போட்டு கரை சேர்ந்திட...சூது கவ்வும் என்ற விஜய சேதுபதியை வெற்றி கவ்வியது  சசிகுமாரின் குட்டிபுலி பாய்ச்சல் கொஞ்சம் பரவாயில்லை தொப்புள் நங்கை  நஸ்ரியாவின் நேரம் இப்ப நல்லாத்தான் இருந்துச்சு....



ஜூனில் வந்த பாரதிராஜாவின் அன்னக்கொடி கிழிஞ்சு போச்சு...தில்லு முல்லு...அடங்கொய்யால......படம் பார்த்த என்  காசு எள்ளு...ஆனால் தீயா வேலை செய்யனும் குமாரு-னு  சுந்தர்,சி....நல்லாவே சிரிக்க வச்சாரு
ஜூலையில்  சூர்யாவின்  சிங்கம்-2 அதிரடி கர்ஜனை..படம் பார்த்தவர்களின் காது கிழிந்தது.........அவிங்களுக்கு காசு குவிந்தது.மரியான்-னையும் பட்டத்து யானையையும் பாடாப்படுத்தியது

thalaivaa

ஆகஸ்ட்டில் சுசீந்திரன்  ஆதலால் காதல் செய்வீர் என்று   சொல்லி காதல் செய்வோரைப் பார்த்து பல்லிளிக்க...ஆதலால் அரசியல் செய்யாதீர் என்று தலைவா தரிகிடத்தோம் போட....காமெடி மசாலா குதிரையில் ஜம்முனு  தேசிங்கு ராஜா விமலின் பயணம் அதே நேரம் தான்  பிடித்த மீன்கள் தங்க மீன்கள் என்று ராம் சொல்ல நொந்த மீன்கள் என்று சிலர் சொல்ல...படத்துக்கு வெளியே  ஏக களோபரம்

Made with FreeOnlinePhotoEditor.com

செப்டம்பரில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆரம்பித்த சிவ கார்த்திகேயன் நல்ல வசூல் அறுவடையில் மிதக்க....மூடர் கூடம் நவீன் வித்தியாசமான தமிழ் படக்கூட்டத்தில் நல்ல வரவு என்றால்....ராஜா ராணி உல்டா கதைகளின் உறைவிடம்  அய்யோ பாவம்... 6 மெழுகுவர்த்திகள் ஷாம் தன் உடலை வருத்திக்கொண்டதுதான் மிச்சம்  

Made with FreeOnlinePhotoEditor.com

அக்டோபரில்.....இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று அண்ணாச்சி...விஜய் சேதுபதி இஸ் ஹேப்பி... நஸ்ரியாவின் தொப்புள் விவகாரம் நல்ல  நய்யாண்டி.........ஹி...ஹி

ajith

ஆனால் இந்த மாதம்  அஜித்தின் திரைவாழ்வில் வெற்றிப் பயணத்தின் மீண்டும் நல்லதோர் ஆரம்பம்



நவம்பரில் ஆல் இன் ஆல் அழகுராஜா எல்லோரையும் அழவைத்ததுதான் மிச்சம் அப்படித்தான் பிட்சா-2 வில்லா என்று புல்லா ஒரு வீட்டையே காட்டி அவியிங்களே பயிந்து ஓடிட்டாயிங்க......அதாவது பரவாயில்ல இன்னொரு மாய உலகத்த  காட்டுறேன் என்று சொல்லி செல்வராகவன் அண்ணன் இரண்டாம் உலகம் காட்டி ஏகத்துக்கு நம்மள பைத்தியமாக்க....நவீன சரஸ்வதி சபதம் என்று சந்த்ரு அண்ணன் காதுல சுத்துன பூ கணக்கு வழக்கு இல்லை...ஆனால் பாண்டிய நாடு விஷால் காட்டில் நல்ல மழை

vikrampirabu

இந்த டிசம்பர் மாதத்தில்...... பிரசன்னா செய்த கல்யாண சமையல் சாதம் சாப்பிடுற மாதிரி இருந்துச்சு....வெங்கட் பிரபு செய்தது  பிரியாணியா...? குஷ்காவா..? என்று ஆராய்ச்சி நடக்கின்றது..அதாவது பரவாயில்லை  இப்பலாம் படத்துக்கு போகவே பயமாயிருக்கு அம்புட்டுபேரும் கையில அருவாளோடு மதயானைக் கூட்டம் போல் தகராறுக்கு அலையிறானுங்க...சாவு ஒப்பாரியையும்   காமெடி விழாவாக்கிப்புட்டாயிங்க  அதுலபாருங்க விக்ரம் பிரபு மட்டும்.......... இவன் வேறு மாதிரி கொஞ்சம் புது மாதிரி  ஆனால் காதல் மட்டும் என்றென்றும் புன்னகை



இந்த வருடம்  சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் கோபித்துக்கொண்டு வரவேயில்லை உலகநாயகர் தனது இரண்டாம் விஸ்வரூபத்தை காட்ட தயக்கம் இளையதளபதியோ அடக்கத்தின் ரூபமாய்....தலதனக்கு ஆரம்பித்த வெற்றியின் அடியாளமாக மொட்டத் தல....ஆனால் விஜய் சேதுபதியும் சிவ கார்த்திகேயனும் எதிர்பாராத வெற்றிக்களிப்பில்....

இந்த வருடம் வந்த நிறைய தமிழ் படங்கள் ஆங்கிலம்,கொரியா,சீனா, இந்தி,மலையாளம்... என்று உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் இருந்து சுட்டது போதாது என்று பழைய தமிழ் படங்களிலும் பிட்டு பிட்டாக சுட்டு நமக்கு பிட்டு படைத்த நம்ம இயக்குனர்கள் செய்த திருவிளையாடல்கள்......சாரி....திரை விளையாடல்கள் அதனால் சென்னை எக்ஸ்பிரஸ்,கிரீஸ்3 ,தூம்-3..போன்ற இந்திப்படங்கள் இங்கே வெற்றிக்கொடி நாட்டின....
ஆக...இந்த வருடம் 2013 தமிழ் சினிமா-உல்டா புல்டா  
 

Saturday, December 28, 2013

ரஜினி,கமல்,அஜித்,விஜய்-இவர்களுக்கு 2014 எப்படியிருக்கும்?

(குறிப்பு-ரஜினி,கமல்,அஜித்,விஜய்...இவர்களின் பிறந்த தேதி அடிப்படையில் வரும் 2014-ஆம் ஆண்டு இவர்களது திரையுலக வாழ்க்கையும் செல்வாக்கும் எப்படியிருக்கும் என்ற கணிப்பு........)

இங்கே  சொல்லப்படுபவைகள் அனைத்தும் வலைத்தளங்களின் கருத்து அடிப்படையில் தவிர....எனது அபிப்பிராயம் எதுவுமில்லை 

Made with FreeOnlinePhotoEditor.com

ரஜினிகாந்த்-
இவர்  பிறந்த தேதி 12/12/1950 அடிப்படையில்.....
அதீத கலைத்திறமையை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இவரது வெற்றி இவரது தனித்திறமை இவருக்கு எச்சரிக்கையாக சொல்லப்படுவது இவரது கவனம் சிதறாமல் செயல்படவேண்டும் 
அங்கேதான் சிக்கல்....விரைவில் வரவிருக்கும் இவரது திரைப்படம் கோச்சடையான் படத்தில் இவரது ஆற்றலை இவர் வெளிப்படுத்தி நடித்தார் என்றால் வெற்றி உறுதி அதை விடுத்து அவரது ஆற்றலை இன்னொருவர் படம் வரைந்து திரையில் பொம்மலாட்டம் காட்டினால்....? கோச்சடையான் படத்தில் இவர் கொஞ்சமேனும் திரையில் தோன்றவில்லை என்றால் படம் வெற்றியடைவது உறுதியில்ல....

Made with FreeOnlinePhotoEditor.com
கமல்ஹாசன்-
இவர் பிறந்த 7/11/1954 தேதி அடிப்படையில்.......
உலகில் உள்ள சூச்சுமங்கள் அத்தனையும் அறிந்து கொள்ளவேண்டும் என்று ஆர்வம் கொண்ட இவர் தான் கற்றதை அந்த துறையில் செலுத்தி நிபுணத்துவம் பெறுவார் அதேநேரம் பகுத்தறிவு,பகுப்பாய்வு திறன் கொண்ட இவரது எளிதில் உணர்வுகளுக்கு அடிமையாகும் தன்மையும் அதை சரியான முறையில் வெளிப்படுத்த தெரியாமையும்  இவருக்கு இடைஞ்சலாக இருக்கும் இதன் அடிப்படையில் பார்த்தால்........2014-ல் வெளிவரவிருக்கும் இவரது விஸ்வரூபம்-2 திரைப்படத்தில் இவர் உணர்ச்சி வசத்தில் ஏதேனும் உளறி வைத்திருந்தாலும்...அல்லது நடித்திருந்தாலும் மிகப்பெரிய சிக்கலை சந்திப்பார் 

Made with FreeOnlinePhotoEditor.com
அஜித்குமார்-
இவர் பிறந்த 1/5/1971 தேதி அடிப்படையில்........ 
வெற்றியை நோக்கிய இவரது லட்சிய பயணத்தின் பாய்ச்சல்... அடுத்தவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் இவரது ஆற்றல்.... சுதந்திர பறவையாய் வாழநினைக்கும் இவர்  ஒரு செயலில் இறங்கிவிட்டால் இவருக்குள்ள கட்டுப்படுத்த முடியாத ஆர்வம் அதுவே இவரது முன்கோபமாக மாறி இவரது வெற்றியை பாதிக்கும் அப்படிப்பார்த்தால் இவரது செயல்பாடுகள் வரும் வீரம் திரைப்படத்தில் முழுமையாக இருக்கும் ஆனால் படம் ஏதேனும் ஒரு காரணத்தால் வெற்றிபெறவில்லை என்றால் இவரது கோபத்தின் பிரதிபலிப்பு அடுத்த படத்தில் தெரியும் 

Made with FreeOnlinePhotoEditor.com
விஜய்-
இவர் பிறந்த  22/6/1974  தேதி அடிப்படையில்.....
ஒரு நிறுவனம் அல்லது எதையும் தலைமை ஏற்று நடத்தும் சக்தி கொண்ட இவர் அதை செயல் படுத்தும் குறிக்கோளில் ஏற்படும் சங்கடங்களைக் கண்டு பயம் கொள்வார்....உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர்கள்,நோபல் பரிசு வென்றவர்கள்,முன்னணி கலைஞர்கள்,அரசியல்வாதிகள்...பிறந்த தினத்தில் பிறந்த இவர் வெற்றியாளருக்குரிய அம்சங்கள் அனைத்தும் கொண்ட போதும் இவருக்குள்ளிருக்கும் பதட்டம் அவநம்பிக்கை கட்டுப்பாடு இழந்து இவரது வெற்றியை பாதிக்கும் 
இதன் அடிப்படையில் வரும் ஜில்லா திரைப்படத்தின் வெற்றி எப்படியிருக்கும்...? இப்படத்திற்கு மீண்டும் ஏதேனும் சிக்கல் எதிர்கொண்டால் ஜில்லாவின் வெற்றி இவரது அணுகுமுறையைப் பொறுத்தே அமையும் 

 

அண்ணேன்...இவைகளை முழுவதுமாக நான் சொல்லவில்ல  பிறந்த தேதியை வைத்து ஒருவரையும் அவரது எதிர்காலத்தை கணிக்கும் நியுமராலாஜி வலைத்தளங்கள் என்ன சொல்கின்றனவோ...அதைத்தான் நானும் கொஞ்சம் கணிச்சு சொல்கிறேன் இந்த கணிப்புகள் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் தெரிந்துவிடும் உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் இங்கே நீங்கள் தொடர்புகொண்டு....http://www.numerology.com/about-numerology/birth-day-number போய் தெரிஞ்சிக்குங்க....
அதுசரி....உன் பிறந்த தேதி பலன் என்ன சொல்லுது என்று கேட்க்கின்றீர்களா...? 

Made with FreeOnlinePhotoEditor.com

என் பிறந்ததேதி....... 29 இப்படித்தாங்க சொல்லுது

You are highly intuitive and creative. Your mind thinks in pictures. You seem to draw information and ideas from out of the sky. Your intuition is your gift, along with a powerful drive to know the oneness of all things.
நான்  ரொம்ப கற்பனை சக்தி வாய்ந்தவனாம் என்மனதில் நிறைய பிம்பங்கள் நிறைந்திருக்குமாம் நான் ஆகாயத்தில் கோட்டை கட்டுபவனாம்....

Friday, December 27, 2013

விழா-சினிமா விமர்சனம்


(தீர்ப்பு-விழா....கிராமத்து காதலை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தும் சினிமாத்தனங்கள்   இல்லாத சினிமா..... திரையில் ஒரு நாவல் படித்த உணர்வுடன் வித்தியாசமான  கதைக்களம் வித்தியாசமான சினிமா....?)

http://www.cinemalead.com/photo-galleries/vizha-movie-new-stills/wmarks/vizha-movie-new-stills09.jpg

இயக்குனர் பாரதி பாலகுமாரனின் விழா படத்தின் கதை........மதுரை சுற்று வட்டார கிராமங்களில் சாவு வீடுகளில் தப்பு அடிக்கும் ஒருவனுக்கும் ஒப்பாரி பாடும் ஒருத்திக்கும் உள்ளத்தில் அரும்பும் காதல்... எப்படி பல சிக்கலுக்கிடையில் வெற்றி பெற்றது என்பதை சித்தரிக்கின்றது 

Made with FreeOnlinePhotoEditor.com

விழா படம்  ஆரம்பிக்கும் போது கிராமத்து பெரிசும் பன்னையாருமான  விஜய சேதுபதி மரணம்....அங்கே தப்பு அடிக்கும் சுந்தரம் (மகேந்திரன்) ஒப்பாரி பாடவரும் ராக்கம்மா (மாளவிகா மேனன்) இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொள்ள.....

இதற்கிடையில் இறந்த பெரிசு ஊருக்கு குளம் வெட்டிதருவதாகவும் பள்ளிக்கூடம் கட்டிதருவதாகவும் வாக்குறுதி கொடுத்து விட்டு சாக, அவரது மனைவி சின்னாத்தாஅதற்க்கு பணம் கொடுக்காமல் சண்டித்தனம் பண்ணுவதும்......

இன்னொரு காதலாக  காட்டப்படும்  நகரத்தில் படித்த பெரிசு பேரன் பாண்டி-கயல் விழி காதலை சுந்தரமும் அவனது நண்பர்களும் சின்னாத்தா விருப்பத்திற்கு மாறாக  ரகசியமாக நடத்தி வைக்க.......

கோபம கொண்ட சின்னாத்தா சுந்தரத்தை கொலை செய்ய அடியாட்களை அனுப்புவதும் ஆனால் சுந்தரத்திற்கு ஊரில் உள்ள இன்னொரு பணக்காரர் மணிமாறன் (யுகேந்திரன்) பாதுகாப்பு தர.....
அதேநேரம் சின்னாத்தாவின் சகுனிதனத்தால் சுந்தரத்தின் காதலி ராக்கம்மா மனிமாறனுக்கு நிச்சயிக்கப்பட...சுந்தரம்-ராக்கம்மா காதல் என்ன ஆனது...? இருவரும் காதலில் சேருவார்களா...?என்று பரபரப்பு.... கிளைமாக்ஸ் 
கிளைமாக்ஸ்...யாரும் எதிர்பாராதது...ரொம்ப நகைச்சுவையானது 

Made with FreeOnlinePhotoEditor.com

மகேந்திரன்  நடிப்பு கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல்வாகும் அதே நேரம் காதல் காட்சிகளில் நல்ல முக ஜொலிப்பு...சண்டைக்காட்சிகளில் ஆவேசம் எடுபடாத   முகபாவம்........மாளவிகா மேனன்...ஒப்பாரி பாடுவதும் காதலிப்பதுமாக வந்து போகிறார் வேறு பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை....சின்னாத்தாவாக நடித்துள்ளவர்  சினிமாவுக்கு கிடைத்த கிழட்டு வில்லி 

படத்தின் மிகப் பெரிய பிளஸ்-பாயின்ட் பாடல்களும் இசையும்தான்... கிராமத்து இசைக்கருவிகளால் ஜேம்ஸ் வசந்தன் நல்லதொரு இசை சித்திரம் படைத்திருக்கின்றார் மதுர என்னும் மாநகரம்..பாடலும் செத்துப்போ.... என்ற காணாபாலாவின் பாடல்  நகைச்சுவையாக இருக்க நெஞ்சடைச்சு நின்னேனே...சோகம் மிளிர்வதாகவும் மற்றவை காதல் களிப்பாகவும் உள்ளது


படத்தின்  சிறப்பான காட்சிகளாக...கிராமத்தில் லேப்-டாப்புடன் அலையும் காதல் தண்டபாணியின்  பேஸ்புக் கலாட்டாக்கள்.....ரவுடி கிழவிகள் பாய்ந்து தாக்கும்  அதிரடி நகைச்சுவை சண்டைக்காட்சிகள்....செத்துப்போ பாடலில் வரும் கிராமத்து கிழவர்களின் இளமை துள்ளாட்டங்கள்...

                                           thanks-YouTube-Paartha Jans

உதிரி  என்ற குறும்படத்தின் நெடும்படம் என்பதால் நிறைய திணிக்கப்பட்ட கதாபாத்திரங்கள்.....காட்சிகள் என்றும் கதையும் ஒரே சீராக செல்லாமல் நிறைய கிளைக் கதைகளுடன்.......... ஆனாலும்  

கிராமத்து காதலை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தும் சினிமாத்தனங்கள்   இல்லாத சினிமா....விழா திரைப்படம் 
திரையில் ஒரு நாவல் படித்த உணர்வுடன்..... வித்தியாசமான  கதைக்களம்......வித்தியாசமான சினிமா பார்க்க விருப்பமுள்ளவர்களுக்கு
வித்தியாசமான அனுபவமாக இருக்கும்....... 

Made with FreeOnlinePhotoEditor.com

கிராமத்துக்  காதலை பாரதிராஜா முதற்கொண்டு எத்தனையோ  இயக்குனர்கள் எத்தனையோ வித விதமாக காட்டியுள்ளார்கள்......ஆனால் ஆபாசமாகவும் விபரீதமாகவும்  காட்டாமல் நல்லதொரு நகைச்சுவையாகவும் த்திரிலராகவும் காட்டியுள்ள விழா படத்தின் இயக்குனர் பாரதி பாலகுமாரனை பாராட்டலாம்   


 

Thursday, December 26, 2013

மதயானைக் கூட்டம்-சினிமா விமர்சனம்






(தீர்ப்பு-முட்டாள்தனமான வன்முறையை கவுரவமாக நினைக்கும் ஒரு வன்முறை கூட்டத்தின் முகத்திரையை கிழிக்கும் வன்முறை காட்சிகள் நிறைந்த திரைப்படம்..... மதயானைக்கூட்டம்)

Made with FreeOnlinePhotoEditor.com

இது  போல் ஒரே சாதிக்குள் கவுரவம் பார்க்கும் எத்தனையோ திரைப்படங்கள் அதிலும் மதுரையை கதைக்களமாக கொண்டு வெளிவந்திருந்தாலும் இப்படம் இயக்குனரின் துணிச்சல் மிகுந்த முயற்சிக்காக பாராட்டலாம்

படம் தொடங்கும் போதே சரவெடி சப்தம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன்  ஜெயக்கொடி தேவரின் சவ ஊர்வலம்........ மரணத்திலும் கௌரவ அடக்கம் அப்போது பிளாஸ்-பேக் கதையாக....

Made with FreeOnlinePhotoEditor.com

ஜெயக்கொடி  தேவருக்கு இரண்டு மனைவிகள் இரண்டாவது மனைவியுடன் வாழும் அவருக்கு பார்த்தி (கதிர்) என்ற மகனும் ஒரு மகளும் அவரது  முதல் மனைவி (விஜி சந்திரசேகர்) க்கும் ஒரு மகன் ஒரு மகள் அனால் அவர்கள் விஜியின் சகோதரர் குடும்பத்துடன் வாழ்கின்றார்கள் 

இந்த இரண்டு குடும்பங்களுக்குள்ளும் நடக்கும் பகையுணர்வு,
விட்டுக்கொடுக்காத மனயியல்பு, போட்டி,பொறாமை,கலாட்டாக்கள்.... படத்தின் கதையம்சமாக உள்ளது   

ஜெயக்கொடி  தேவர் இறந்த அடுத்த நிமிடமே முதல் மனைவியின் குடும்பத்தார் அவரது உடலை கைப்பற்றி......இரண்டாவது மனைவியின் குடும்பத்தாரை அவரது உடல் அடக்கத்தில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கின்றார்கள் ஆரம்பத்தில்  முட்டாள்தனமான வன்முறையை ஆதரிக்காத பார்த்தி.....சந்தர்ப்ப சூழ்நிலையால் அவரும் வன்முறையில் இறங்குவதாக காட்டப்பட்டுள்ளது 

Made with FreeOnlinePhotoEditor.com

படத்தின் முதல் பாதி ஜெயக்கொடி தேவரின்  மரணமும் சடங்குகளும் செய்முறைகளும் என்று போய்கொண்டிருக்க....இரண்டாம் பாதி முழுவதும் வழக்கமான கற்பனை பழிவாங்கும் கதை 
ஓவியாவின் கதாப்பாத்திரம் கதிருடன் காதலிப்பது தவிர வேறேதுமில்லை கதிரின் முகத்தில் வடியும் அப்பாவித்தனம் கதாபாத்திரத்தின் வெறுப்பு கபடம் கழிசடை தன்மைக்கு எடுபடவில்லை மற்ற கதாப்பாத்திரங்கள் தேனீ சுற்றுவட்டார பேச்சு வழக்கிலும் லுங்கியுடன் கைகளில் அருவா நடையிலும் கலக்குகிறார்கள்

படம் ஆரம்பித்து  முடியும் வரை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு வன்முறை கொலைக்காட்சி திரையில் காட்டப்படுவதுதான் ஜீரணிக்க முடியவில்லை 

நல்ல  ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் இருந்தும் படம் ஏனோ மனதில் ஒட்டவில்லை போலிப் பெருமை,குடும்ப கௌரவம்...இதைக் கதைக் கருவாக எடுத்துக்கொண்ட இயக்குனரின் முயற்சியை பாராட்டலாம் 

http://images.desimartini.com/media/versions/main/original/a4a2a334-970d-4552-bbc8-3c5b61da19fb_original_image_500_500.jpg

அவர் மட்டும் கடைசியில் கொடூரத்தையும் பழிவாங்கும் பைத்தியக்கார வன்மத்தையும் வன்முறையையாக காட்சி படுத்தாமல் இருந்திருந்தாலும் அனைத்து வயதினரும் பார்க்கும் படி படம் காட்டியிருந்தாலும்  இப்படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் 
ஆனாலும்.....அறிமுக இயக்குனர் என்ற வகையில் விக்ரம் சுகுமாரன் பாராட்டப்படவேண்டியவர்

                           thanks-YouTube by JSK Film Corporation 


விமர்சகர்கள் கருத்து........
உணர்ச்சியில்லாத கதை சொல்லும் பாங்கு பார்வையாளர்களை திரைப்படத்துடன் ஒன்றிட செய்யவில்லை படத்தில் வரும் அதிகமான கதாப்பாத்திரங்கள் கடைசியில் எதுவும் பார்வையாளர்கள் மனதில் நிற்கவில்லை....என்கிறது BEHINDWOODS விமர்சனக்குழு 

காதல்  கதையைவிட பழிவாங்கும் கதையை முன்னணிப் படுத்தி ஒரு வன்முறை சமுதாயத்தின் வன்முறை குடும்பத்தை கதையாக மதுரை சார்ந்த பகுதிகளின் நிஜத்தை பிரதிபலித்த இயக்குனர் விக்ரம் சுகுமாரன்,தயாரிப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இருவரின் துணிவு வரவேற்க தக்கது.....என்கிறது indiaglitz வலைத்தளம் 

இந்த ஆண்டின் சிறந்த ஒளிப்பதிவு இப்படமாகத்தான் இருக்கும் என்று ஒளிப்பதிவாளர் ராகுல் தருமனை பாராட்டுகின்றார் desimartiny பிரசாந்த் ரெட்டி 

Made with FreeOnlinePhotoEditor.com
 
டிவிட்டர்களின் பார்வையில்...........

ஈரோடு தங்கதுரை@JesuThangadurai 
சாதீய வெறி கூட்டத்திற்கு நடுவே நடக்கும் பாசத்திற்கும் கெளரவத்திற்குமான போராட்டம்..! ( நிறைய வன்முறையோடு ) # மதயானைக்கூட்டம்

கனியன்@Kaniyen 
இழவு வீட்டை மையப்பொருளாக்கி "மதயானைக்கூட்டம்" மற்றும் "விழா" என்னும் இரண்டு சினிமாக்கள்! # தயாரிப்பாளர்களுக்கு சாவு வெள்ளாமையாக இருக்குமா?

எட்டப்பன்@kalanithi10 
மதயானைக்கூட்டம் ' அப்பிடின்னா மதவெரிபுடிச்ச மதுரக்காரங்ஞண்ணு அர்த்தமா ? #பயங்கரடவுட்டு

@$#0K@ashoker_UHKH 
சிங்கம், சிறுத்தை, சிங்கம்புலி, கும்கி, குள்ளநரிக்கூட்டம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மதயானைக்கூட்டம் #இது தமிழ்சினிமாவா, சர்கஸ் கூடாரமாயா?

ஸிக்மண்ட்~நோவாக்கி@ashok_kumar_t 
மதயானைக்கூட்டம் - இஸ் எ வேர்ல்ட் க்ளாஸ் மூவி பட் ஒன் இன்ச் லெஸ்ஸர் தன் சுப்ரமணியபுரம், ஆடுகளம் & பருத்திவீரன்

Kosaaksi Zen@Zenist 
மதயானைக்கூட்டம் நல்லாருக்குனு சொல்றவங்கள்லாம் சாதிவெறி புடிச்ச ஆளுங்கதான்னு ஒரு கூட்டம் கெளம்புமே. #இணைய போராளி

விஜயகுமார்@vijaymnsvictry 
நேர்த்தியான திரைக்கதை, அருமையான ஒளிபதிவு , அருமையான பாடல்கள், #மதயானை கூட்டம் -

krishnaprasanth@krishthepoet 
மதயானைக்கூட்டம் திரைப்படம் பார்த்தேன் யதார்த்த சினிமாவில் இதும் ஒரு தனி இடம் பெரும் அணைத்து கதாபாத்திரங்களும் கச்சிதம்


UA-32876358-1