google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தெனாலி ராமன்-சினிமா விமர்சனம்

Friday, April 18, 2014

தெனாலி ராமன்-சினிமா விமர்சனம்

வடிவேலுவின்  தெனாலி ராமன் திரைப்படத்தை முழு நீள காமெடி படம் என்று நினைத்து போனார்கள் என்றால்..........சிலர் சிரிப்பார்,சிலர் அழுவார்,சிலர் சிரித்துக்கொண்டே அழுவார்...?

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவரும் உடல்மொழி காமெடி,அறிவுப்பூர்வமான விகடம்,நவீன அரசியல் நையாண்டி,கவர்ச்சிக் காதல் காமெடி,அந்நிய முதலீடு அவலம்,அரசுக்கு எதிரான சதி...இப்படி  காதல்-காமெடி-த்திரிலர் நிறைந்த பல்சுவை திரைப்படம் 

படத்தின் கதையாக...மக்கள் நலனை மறந்து சுக போகத்தில் திளைக்கும்  மாமன்னரை ஓர் அறிவுப்பூர்வமான கிளர்ச்சியாளன் அமைச்சராகி தன் விகடத்தனத்தால் திருத்துவதே....

படத்தின் ஆரம்பமே...... குறுநில மன்னரும் (ராதாரவி)  ஒன்பது விகட புரத்து அமைச்சர்களும்  சீன தேச தூதருடன்  விகட புரத்தில் வியாபாரம் செய்ய  ரகசிய ஆலோசனையில் ஒத்துழைக்காத ஒரு அமைச்சரை சாகடித்து...
படம்   ஒர் த்திரிலிங் எதிர்பார்ப்புடன் துவங்குகின்றது

அடுத்து விகட புரத்து மாமன்னர் (வடிவேலு) தன் அமைச்சரவையில் குறைந்த ஒரு அமைச்சருக்காக போட்டி வைத்து தேர்ந்தெடுப்பதில் தெனாலி ராமன் (வடிவேலு) கலந்து கொண்டு வெற்றி பெற்று அமைச்சராகிறார். தெனாலியின் விகடத்தனமான செயல்களில் மயங்கிய மன்னரின் மகள் இளவரசி மாதுளை (மீனாட்ஷி தீட்சித்) தெனாலியை காதலிக்கின்றாள்

மாமன்னர் நம்பிக்கைக்கு பாத்தியமான தெனாலி ராமன் ஒரு கிளர்ச்சியாளர் என்பதை அறிந்த மற்ற எட்டு சதிகார அமைச்சர்கள் கூட்டம் பல திட்டங்கள் தீட்டி மன்னரிடமிருந்து  தெனாலியை பிரிக்கிறார்கள் ஆனால் இளவரசியின் தூண்டுதலால் மீண்டும் மன்னருடன் சேர்ந்த தெனாலி மன்னருக்கு மக்கள் படும்கஷ்டங்களை சொல்ல........

மாமன்னர்  நகரில் மக்களுடன் பத்து நாட்கள் மாறுவேடத்தில் வாழவும் அதுவரை தெனாலி இடைக்கால மன்னராக இருக்கவும்  முடிவு செய்து....... மக்கள் படும்  கஷ்டங்களையும் சீன தேச வியாபாரிகளின் கொடுமைகளையும் கண்டு மன்னர் மக்களுடன் சீன வியாபாரிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் போது.....

அமைச்சர்கள் உதவியுடன்   சீன தேசத்து தூதுவரால் கைது செய்யப்படுகின்றார் தெனாலி தன் சாமர்த்திய அறிவால் எப்படி மன்னரை காப்பாற்றி அமைச்சர்களை தண்டிக்கின்றார் என்பதே........

36 மனைவிகள்  52 குழந்தைகள் என்று  மாமன்னராக வரும் வடிவேலு தன் உடல் மொழிக் காமெடியாலும் படபடவென் சரவெடி வசனங்களாலும்  சிறுவர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றார் என்றால்.....

தெனாலியாக வரும் வடிவேலு சிந்தனையை  தூண்டும் விகடங்களால் பெரியவர்களையும் இளவரசி மாதுளையுடன் காதல் என்று வாலிபர்களையும் எம்.ஜி.ஆர்.சென்டிமென்ட் வசனங்களால் பெண்களையும் தன் நடிப்பால் கவர்கின்றார்

இயக்குனர் யுவராஜ் நமக்கு தெரிந்த தெரியாத என்று நிறைய உள்ளீடு கதைகளை விகடத் தோரணங்களை காட்சிப்படுத்தி உள்ளார்....
---தெனாலி  அய்யனார் கோயிலில் திருட வரும் கொள்ளையர்களை புதையல் இருப்பதாக சாமார்த்தியமாக ஊர் கிணற்றை தூர் வாரச் செய்வது.....
---அமைச்சர் தேர்வில் மன்னரிடம் பதில் சொல்லி சவுக்கடி பரிசு  கேட்டு வாங்கி வாயில் காப்போனுக்கு தண்டனை கொடுப்பது......
---பானையில் யானையை நுழைப்பது? ...
---காட்டுராஜா (மன்சூர் அலிகான்)விடம் மாட்டிக்கொண்ட மன்னர் தப்பிக்கும் காட்சி....
---மாமன்னரின் அப்பா கனவில் வந்து தெனாலியை அழைத்ததாக கடலில் குதிக்க வைப்பது....
---கடைசியில் தெனாலியே நிறைய  காட்டுவாசிகளுடன் வந்து மன்னரை காப்பாற்றுவது.......
இப்படி  நிறைய சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் காட்சிகள் உண்டு 

டி.இமானின் இசையில் அத்தனையும் பழைய  குலேபகாவலி  படத்தில் கேட்ட தேனமுதப் பாடல்களாக இனிக்கின்றன  கிண்டலும் கேலியுமாக ஏய் வாயாடி...பாடல்,ரம்பப்பா.பாடல் சிறுவர்களுக்கான சிரிப்பு பாடல்.... நெஞ்சே...நெஞ்சே...உருக்கமான சென்டிமென்ட் பாடல்....இப்படி கலக்கல் 

ராம்நாத்  ஷெட்டியின் கேமரா...........ஒரு வரலாற்று படத்துக்கான பிரமாண்டத்தை பதிவிட்டுள்ளது ஆரம்பத்தில் வரும் சீன எல்லையில் பனி மலை பயனக்காட்சி.....பாடல் காட்சிகள்....நள்ளிரவில் நிலவு ஒளியில புறா பறக்கும் காட்சி.........விகட நகரம்...மற்றும் உண்ணாவிரதக் காட்சிகள் அத்தனையும் பிரமிக்க வைக்கின்றன நம்மை ஒரு வரலாற்று காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன 

இப்படி.......
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகுவடிவேலு & வடிவேலு கலக்கும்  தெனாலிராமன் படத்தை அனைவரும் குடும்பத்தோடு கண்டு களிக்கலாம் 


உங்கள் பார்வையில்.............
நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால்....அல்லது படம் பார்த்துவிட்டு உங்கள் மதிப்பீட்டை தெரியப்படுத்துங்கள் 


வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி............முடிவு-25/4/2014




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1