google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கிக் (இந்தி)-சினிமா விமர்சனம்

Tuesday, July 29, 2014

கிக் (இந்தி)-சினிமா விமர்சனம்

ரவி தேஜாவின் கிக் (KICK) தெலுங்கு மசாலா  தமிழில் ஜெயம் ரவியின் தில்லாலங்கடி ஆகி... இப்போது  இந்தியில் சல்மான்கானின் கிக் (KICK)  ஆகி இந்தியாவில் 100 கோடி வசூல் பட வரிசையில்.......

கிக்  படத்தின் கதை.......கொஞ்சம் காதல்,கொஞ்சம் காமெடி,கொஞ்சம் த்திரில், கொஞ்சம் நாடகத்தன்மை....என்று எதுவும் முழுமையாக இல்லாத வேடிக்கையான கதை 

போலந்து  ரயிலில்  மனநல மருத்துவர் ஷைய்னா (ஜாக்குலின் பெர்னாண்டஸ்) தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன்-கம்-போலிஸ் அதிகாரி ஹிமான்ஷு (ரந்தீப் ஹூடா) விடம் தனது முன்னாள் காதலன் ஐன்ஸ்டினை விட IQ அதிகமான  தேவிலால் சிங் DEVI LAL SINGH (சல்மான்கான்) பற்றிய  நினைவுகளை சொல்வதுபோல் தொடங்கும் படம்.....

ஒரு 'கிக்'குக்காக 32 தடவை வேலையை உதறிவிட்டு தில்லாக அலையும்  DEVI..... கண்டதும் காதலாக ஷைய்னா மீது காதல்கொள்ள ஒரு 'கிக்'குக்காக அவரிடமே உடனே காதலிக்கிறேன் என்று சொல்லிடாத கிக்கு போயிடும் என்று வேண்டிக்கொண்டு......

போலிஸ் அதிகாரி ஹிமான்ஷு ஷைய்னாவிடம் வேடிக்கைக்காக ஏழைகளுக்கு உதவிடும் ராபின்ஹூட்டாக மாறி திருடும்  DEVIL என்ற திருடனை பிடிக்க போலந்து வந்ததாக சொல்கிறார் 

DEVIL-லாக சல்மான்கான் போலிஸ் அதிகாரி ஹிமான்ஷுவுடன் விளையாடும் மிக்கி-மவுஸ் விளையாட்டும் DEVI-யாக தன் காதலி
ஷைய்னாவுடன் பழையவை மறந்ததாக நடிப்பதும் என்று காமெடி கலாட்டாக்களால் கிக் (இந்தி) படம் காட்டப்படுகிறது


 எந்த லாஜிக்கும் இல்லாத குப்பை கதை உள்ள கிக் (இந்தி) படத்தை சல்மான்கான் தன் அதிரடி காமெடி நடிப்பால் தூக்கி நிறுத்துகிறார் ஜாக்குலின் அழகு பொம்மையாக வந்து போகிறார் போலிஸ் அதிகாரியாக ரந்தீப் ஹூடாவும் தேவியின் தந்தையாக மிதுன் சக்ரவர்த்தியும் நடித்துள்ளனர்

சல்மான்கானின்  இந்த ஆண்டின் இரண்டாவது படமான கிக் பாலிவுட் சினிமாவுலகம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக முதல் நாளில் இந்தியா (நிகர) ரூ 26.4 கோடி ரூபாய் திரட்டி முதல் இடத்தை பிடித்தது அதன் ரம்ஜான் கலெக்சன் B-L-O-C-K-B-U-S-T-E-R வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

****************************************************************
இது சும்மா....சிரிக்க 



 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1