google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: திருமணம் எனும் நிக்காஹ்-சினிமா விமர்சனம்

Thursday, July 24, 2014

திருமணம் எனும் நிக்காஹ்-சினிமா விமர்சனம்


சரியான திரைக்கதை இல்லாமல்  தேவையில்லாத மதம், கலாச்சாரக் காட்சிகளுடனும் சொல்ல வந்த காதலை சொதப்பிவிட்டது   ஜெய்-நஸ்ரியா  நடித்த..... திருமணம் எனும் நிக்காஹ் 

சென்னையிலிருந்து  கோவைக்கு ரயிலில் செல்லும் பிராமண இளைஞன் ராகவன் (ஜெய்) டிக்கெட் கிடைக்காமல் அபு பக்கர் என்ற முஸ்லிம் பெயரிலும் அதே ரயிலில் ஐ.டி. கம்பெனி வேலை விசயமாக செல்லும் பிரியா (நஸ்ரியா) என்ற பிராமண இளைஞி ஆயிஷா என்ற பெயரிலும் போகும்போது அவர்களுக்குள் காதல் தீ பற்றிக் கொல்....கொள்கிறது 

இருவரும்  முஸ்லிம் மதத்தவர்களாக தங்கள் காதலை தொடரும் போது ராகவன் இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ளவும் முஸ்லிம்  திருமணம் எனும் நிக்காஹ்-வை தெரிந்து கொள்ளவும்  சௌகத் அலி என்ற முஸ்லிம் பெரியவரிடம் தான் கலப்பட முஸ்லிம் என்று பொய் சொல்லி அவரது வீட்டுக்கு போகிறான் அங்கே அவரது மகள் நசீமா ராகவன் மீது ஒருதலையாக காதல் கொள்கிறாள் 

ஒரு கட்டத்தில் ராகவனும்-பிரியாவும் அபு பக்கர்-ஆயிஷா என்ற தங்கள் முகமூடியை கலைத்துவிட்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள் ஆனால்..அவர்கள் காதல் பழைய கிளுகிளுப்புடன் இல்லாததால் ராகவன்-பிரியா திருமணம் நின்றுவிடுகிறது 

உண்மை தெரிந்த சௌகத் அலி ராகவன் தன் மகள் நசீமாவை காதலித்து ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறார் இதற்கிடையில் பிரியா அமெரிக்கா போக...ராகவன் பெங்களூரு போக......

மீண்டும் சென்னை வந்த ராகவன் பிரியாவை அவர்களது தோழியின்  திருமணத்தில் சந்திக்க இருவருக்குள்ளும் மீண்டும் காதல் மலர்கிறது அதேநேரம் சௌகத் அலியின் அக்கா மகன் ஆசிப் ராகவனை கொலைவெறியுடன் விரட்டுகிறான்

ராகவன்  ஆசிப்பிடமிருந்து தப்பித்தானா....? ராகவன்-பிரியா மீண்டும் வாழ்வில் இணைந்தார்களா...? என்பதை திரையில் காணுங்கள்.

அதிரடியாக ஜெய் நான்கு பேரால் விரட்டி தாக்கப்படும் காட்சியுடன்   திருமணம் எனும் நிக்காஹ் படத்தை துவக்கும் இயக்குனர் அனிஷ்  கிளைமாக்ஸ் வரை பிளாஷ்பேக் உத்தியுடன் கதை சொல்கிறார் ஒரு நல்ல காதல் கதையில் மதம் முலாம் பூசி கெடுத்துவிட்டார் சொதப்பல் கிளைமாக்ஸ் ஆனாலும் எந்த மதத்தையும் பாதிக்காத காட்சிகள் வைத்துள்ளதால் பாராட்டலாம்

ஜெய்.........இயல்பாக அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார் நஸ்ரியா....அழகு தேவதையாக வருகிறார் காமெடிக்கு மயில்சாமி ரயில் டிக்கெட்  புரோக்கராகவும் பாண்டியராஜன் ரயிலில் பயணிக்கும் கட்டப்புலியாகவும் வருகிறார்கள்

கிப்ரான் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் எதுவும் மனதில் பதியவில்லை பாடல்காட்சிகளில் லோகநாதனின் ஒளிப்பதிவு அருமை

திருமணம் எனும் நிக்காஹ்.........சரியான திரைக்கதை இல்லாமல்  தேவையில்லாத மதம், கலாச்சாரக் காட்சிகளுடனும் சொல்ல வந்த காதலை சொதப்பிவிட்டது 

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு............

 திருமணம் எனும் நிக்காஹ்-படம் எப்படியிருக்கு?



படம் பார்த்தவர்கள் மட்டும் வாக்களிக்கவும் 
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..............

குறிப்பு- திருமணம் எனும் நிக்காஹ் படம் ஓடும் நம்ம மால் திரையரங்கில் படு பயங்கர கூட்டம்.......காவலர்கள் கூட்டம் 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1