google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆடாம ஜெயிச்சோமடா-சினிமா விமர்சனம்

Tuesday, September 23, 2014

ஆடாம ஜெயிச்சோமடா-சினிமா விமர்சனம்

சூது கவ்வும்,மூடர் கூடம் போன்று டார்க் காமெடி வரிசையில் வந்தாலும் தனித்துவமாக கிரிக்கெட்சூதாட்டத்தை மையப்படுத்தி கிரைம் த்திரிலராக படம் காட்டுகிறது..... பத்திரியின் ஆடாம ஜெயிச்சோமடா 

படத்தின் கதையாக..........

 சென்னையில் நடைபெற இருக்கும்  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஈடுபடும் சூதாட்ட கூட்டத்தை கண்டுபிடித்து தடுக்க போலிஸ் கமிஷனர் கே.எஸ்.ரவிக்குமாரால்  இன்ஸ்பெக்டர் பூமிநாதன் (சிம்ஹா) தலைமையில் ஒரு சிறப்பு குழு நியமிக்கப்படுகிறது 

போட்டிக்கு இரண்டு நாட்கள் முன்பு  புரோக்கர் தயாளன் (பாலாஜி)  ஒரு பெட்டி நிறைய பணத்துடன்  பன்னீரின் (கருணாகரன்) டாக்ஸியில் போகும்போது....
இருவரும் நண்பர்களாகிறார்கள் 

கருணாகரன் தான் பட்ட கடன் தொல்லையால் திருமணமான மறுநாளே அவனது மனைவி ரமா (விஜயலட்சுமி) பிரிந்து சென்ற சோகக் கதையை தயாளனிடம் சொல்லி உதவி கேட்க.....
தயாளனும் இரண்டு நாளில் பணம் தந்து உதவ சம்மதிக்கிறான் 

மறுநாள் தயாளன் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு செல்லும் பன்னீர் அங்கே மர்மமான முறையில் தயாளன் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கச் செல்ல......
இன்ஸ்பெக்டர் பூமிநாதனால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறான்

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் முக்கிய புள்ளியை இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கண்டுபிடித்து கிரிக்கெட் பெட்டிங்கை தடுத்தாரா....? என்பதே கதை 

ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் நிறைய லாஜிக் ஓட்டை உடைசல்கள் இருந்தாலும் இயக்குனர் பத்ரி நகைச்சுவை உணர்வுடன் புதுமையாக காமெடி கோணத்தில் திரைக்கதை அமைத்து கதை சொன்ன விதம் அருமை என்பதால்....மறப்போம் (தவறுகளை) மன்னிப்போம்

ஆடாம ஜெயிச்சோமடா படத்தின் முதுகெலும்பாக விசித்திரமான கதாப்பாத்திரங்களின் நடவடிக்கைகளே   இருப்பதால் பார்வையாளர்களை திருப்தி படுத்துகிறது.........
கொடுத்த காசு எள் ஆகவில்லை

ஜிகர்தாண்டா ரவுடி அசால்ட் குமாராக வந்த  பாபி சிம்ஹா இதில்  போலிஸ் அதிகாரியாக   சக்கைப்போடு போடுகிறார் 
அசடு வழியும் அப்பாவியாக கருணாகரன் அசத்துகிறார் பாலாஜியும்  வித்தியாசமான நடிப்பால் பட்டைய கெளப்ப... கே.எஸ்.ரவிகுமாரும் அவர் பங்குக்கு நகைச்சுவையிலும் கலக்குகிறார்... விஜயலட்சுமி (இட்லி விற்கும் ஏழைப் பெண்ணாக) வந்து போகிறார் ஆடுகளம் நரேன்,சேட்டன்,ராதாரவி...கதாபாத்திரத்துக்கு  ஏற்ப நடித்துள்ளார்கள்

ஆக மொத்தத்தில்.............

 பத்ரியின் ஆடாம ஜெயிச்சோமடா....நகைச்சுவை வசனங்கள், கதாப்பாத்திரங்கள், காட்சிகளால் ஓர்  இரண்டு மணிநேர T-20 கிரிக்கெட் விளையாட்டை வெள்ளித்திரையில் கண்டு களித்த உணர்வைத் தருகிறது 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1