google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மேகா-சினிமா விமர்சனம்

Monday, September 01, 2014

மேகா-சினிமா விமர்சனம்

 கெளதம் மேனனின் காக்க காக்க பட ஸ்டைலில் ஓர் அறிமுக இயக்குனரான கார்த்திக் ரிஷி காதல்-கடத்தல்-திகில் மூன்றையும் கலந்துக்கட்டி..படம் காட்டுவதே........மேகா


megha


போலிஸ் துறையில் தடயவியல் வேலைக்கு முயற்சிக்கும் முகில் (அஸ்வின்) கண்டதும் காதலாக பஸ் ஸ்டாண்டில்   மேகா (சிருஷ்டி) என்ற பார்த்ததும் ஜொள்ளு விட வைக்கும் அழகியை காதலிக்க.............

மேகாவும் தனது அண்ணன் கல்யாணத்தில் புகைப்படம் எடுக்க வந்த முகிலை...... கண்டதும் காதலாக காதலிக்க..........

முன்பாதி படம் நல்லதொரு காதல் காவியமாக இருக்கிறது 

பின்பாதியில் இன்னொரு திகில் கதையாக.........

தடயவியல்  வேலை கிடைத்த முகில் தன்னை வளர்த்து ஆளாக்கிய போலிஸ் அதிகாரி ராகவன் (விஜயகுமார்) மரணத்தில் உள்ள மர்மத்தையும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரத்தையும் கண்டறிகிறார் அதனால் அவரது காதலியை கொலைகாரன் கடத்திச் சென்றுவிடுகிறான் 

உண்மையான கொலைகாரனை முகில் கண்டுபிடித்தாரா...? கடத்தப்பட்ட தன் காதலி மேகாவை மீட்டாரா...? என்பதை திரையில் காணுங்கள் 

எது எப்படியோ...? மேகா படத்தில்  நீங்கள் ரசிப்பதற்கு உங்களுக்கு ஓர் அருமையான காதல் கதை இருக்கிறது திகில் பிரிவில்தான் இயக்குனர் கார்த்திக் ரிஷியின் கதை சொல்வதில் உண்டான தடுமாற்றம்  நமக்கும் திகில் கிடைக்காமல் ஏமாற்றம் 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படத்தில் இரண்டாம் ஹீரோவாக வந்த அஸ்வின் இப்படத்தில் முழு கதாநாயகனாக நடித்துள்ளார் காதல் காட்சிகளில் ஜொலிக்கிறார் 

 
megha
மேகாவாக வரும் சிருஷ்டி......கோலிவுட் திரையுலகுக்கு புதுவரவாக கவர்ச்சியும் குடும்ப பாங்கும் கலந்து சிருஷ்டிக்கப்பட்ட  கண்ணக்குழி தேவதை அம்மணி இளவட்டங்களை தூங்கவிடாமல்....விடாது கருப்பு ஆக கனவில் உலாவருவது உறுதி 

மேலும் அங்கனாராய்,விஜயகுமார்,ஜெயபிரகாஷ்,ஆடுகளம் நரேன், Y.G.மகேந்திரன் ...   என்று நிறைய நடிகர்கள் கொஞ்ச நேரம் வந்து கொஞ்சம் நடித்துவிட்டு போகிறார்கள் 

இளையராஜாவின் இசையில் புத்தம் புதுக் காலை...... பாடல் மட்டும் கேட்கும்படி உள்ளது இசைஞானியின் பெஸ்டிவலில் வெடிப்பது நமுத்துப்போன பட்டாசு ஆனால்.......குருதேவ் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் பார்ப்பதற்கு ...நிலவொளியில் நதிவெளியில் நீந்தும் படகில் பயணிப்பது போன்று

ஆக மொத்தத்தில்..........ஓர் அறிமுக இயக்குனராக கார்த்திக் ரிஷி கெளதம் மேனனின் காக்க காக்க பட ஸ்டைலில் காதல்-கடத்தல்-திகில் மூன்றையும் கலந்துக்கட்டி..படம் காட்டுவதே........மேகா 

ஆனால் கலவையில் ஏதோ கோளாறு ஆனதால் பேஸ்மென்ட்டும் வீக்...பில்டிங்கும் வீக்...என்ற கதையாக மேகா........கதை

நண்பர்களே! எந்தப் படத்துக்கும்  ரேட்டிங் கொடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லைங்க...
அதனால்  படம் பார்த்தவர்களின் மதிப்பீட்டை வைத்து படம் எப்படியிருக்கு? என்பதை நீங்களே தீர்மானம் செய்யுங்கள்.........



மேகா-படம் எப்படியிருக்கு....?

 



படம் பார்த்துவிட்டு வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1