google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: January 2014

Friday, January 31, 2014

ரம்மி-சினிமா விமர்சனம்





















ரம்மி-கொஞ்சம் காதல் நிறைய திகில்,அதிரடி,மோதல்,பயங்கரம்... என்று படம் காட்டும் கிராமத்து காதல் திகில் திரைப்படம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது...ஆனால் ஏதோ ஓன்று இல்லை



சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி கிராமத்தில் 1987-ல் காதல் என்றால் கவுரவக் கொலை செய்யும் ஊரும் மக்களும் உள்ள கதைக்களம் அங்கே கல்லூரியில் படிக்க வந்த சக்தி (இனிகோ பிரபாகர்) ஜோசப் (விஜய் சேதுபதி) என்ற இரண்டு கல்லூரி நண்பர்களின் காதல் கதை.......


rummy

ஜோசப்  அந்த ஊர்  பெரிய மனிதரும் காதல் எதிரியும் ஆன தலைக்கட்டுகாரரின் மகள் சொர்னத்தை (ஐஸ்வர்யா)  காதலிக்க அவனது நண்பன் சக்தியோ தலைக்கட்டு தம்பி மகள் மீனாட்சியை (காயத்திரி) காதலிக்க என்று கலகலப்பாக நகரும் படம்........


rummy

இவர்கள்  காதல் ஊர் தலைக்கட்டுக்கு தெரியவர படம் பார்ப்பவர்களுக்கு ஒரு வித திகில்  உணர்வு நெஞ்சில் திக்..திக்...என்று
ஒருநாள் இரவு சொர்ணம் ஜோசப்பை இழுத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓட...   தலைக்கட்டு ஆட்கள் கொலைவெறியுடன் ஜோசப்பை தேடுவதும் சக்தியையும் துரத்துவதும் என்று திகிலுடன் கதை நகர்கின்றது.....



ஓடிப்போன ஜோசப்-சொர்ணம் காதல் என்ன ஆனது....? திகிலுடன் இருக்கும் சக்தி-மீனாட்சி காதல் என்ன ஆனது.....? திகிலும் திருப்பங்களும் நிறைந்த ரம்மியை திரையில் பாருங்கள்

அறிமுக இயக்குனர் என்பது போல் இல்லாமல் பாலகிருஷ்ணன் படம் ஆரம்பத்திலையே  தலைக்கட்டுவின் அடியாள் ஊருக்குள் காதலித்த ஒருவனை விரட்டி கையை வெட்டும்  காட்சியை வைத்து...இரண்டு காதல் ஜோடிகள் காதலிக்கும் கதையை காட்டும் போதே பார்வையாளர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு 



விஜய் சேதுபதி வழக்கம் போல் நல்ல காதாப்பத்திரம் தேடி நடித்துள்ளார் அவருக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் அவரது பாத்திரம் பேசும் படி அமைந்துள்ளது அவரும் பல்வேறு நடிப்பு பரிணாமங்களை காட்டி அசத்துகின்றார் 



இனிகோ பிரபாகர் கதாநாயகனாக காதல்,பாடல்,சண்டை காட்சிகளில் பிரமாதப் படுத்துகின்றார் முகபாவனையில் கொஞ்சம் மாற்றம் காட்டி நடித்து இருந்தால் இன்னும் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.மற்றபடி காயத்திரி,ஐஸ்வர்யா,சூரி இவர்கள் கதையோடு ஒன்றி நடித்திட....ஊர் தலைக்கட்டாக வரும் பெரியவர் அவரது அடியாள்,கல்லூரி வில்லன் சையது..இவர்கள் நடிப்பும் அருமை 


                                thanks youtube by JSK Film Corporation

இமானின் ஒலிப்பதிவில் பாடல்கள் அத்தனையும்  கேட்பதற்கு 80-90 காலக்கட்டங்களில் நாம் ரசித்த பாடல்கள் போல் உள்ளது கூட மேல கூட வச்சு...பாடலும் கேட்க இனிமை பார்க்க   குளுமை பிரேம் குமாரின் ஒளிப்பதிவில் பாடல்களில் வரும் கோயிலும் கோயில் சார்ந்த தூண்கள்,கோபுரம்,குளம்...என்று பார்க்க கிராமத்து சூழலின்யதார்த்தம் படம் காட்டப்படுகின்றது (நல்லவேளை...கூட மேல கூட வச்சு...பாடலை கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு...மாதிரி ஜப்பானுக்கு பறந்துப் போகவில்லை)



கிராமத்துக் காதலை ரம்மியமாக படம்  காட்டிய ரம்மி திரைப்படம்....  எல்லாம்  நால்லாத்தான் இருக்கு ஆனால் மனதில் ஏதோ ஒரு தாக்கம்...ஜாதி வெறி ,கவுரவக் கொலை..இப்படி பழைய பஞ்சாங்கத்தையே படம் காட்டி பத்தில் ஒன்றாகிவிட்டதோ...? என்று....................




Thursday, January 30, 2014

நினைத்தது யாரோ-சினிமா விமர்சனம்















நினைத்தது யாரோ-என்றும் காதல் புனிதமானது என்று சொல்லும் இயக்குனர் விக்ரமன் டச் திரைப்படம்... புல்லாங்குழல் தரும் மெல்லிசையாக ஒரு காதல் இசைக் காவியம் 

























காதலில் வஞ்சகமாக ஏமாற்றப்பட்ட மூன்று வாலிபர்கள் இரண்டு வாலிபிகள் காதல் என்றாலே காதல் அனுகுண்டைவிட கொடியது என்று தீர்மானித்து காதலர்களையும் காதலை ஆதரிப்பவர்களையும்  கலாயித்து கொண்டு ஒரே அறையில் வாழ்கின்றார்கள் 

ஒருநாள் காதல் திரைப்படங்களாக எடுக்கும் இயக்குனர் மோகன் (ரேஜித் மேனன்) என்பவரை பேட்டி எடுத்து கலாயிக்க அவர் தன் காதல் கதையை அவர்களுக்கு சொல்வது போல் படம் துவங்குகின்றது..........




























மோகன் துணை இயக்குனராக இருக்கும் போது கவிதா (நிமிஷா) என்ற கல்லூரி மாணவி மீது காதல் கொள்ள....அவர்கள் காதலுக்கு கவிதாவின் பெற்றோரும் சம்மதிக்க.......சந்தர்ப்ப சூழ்நிலையால்தவறுதலாக மோகன் ஒரு பேருந்து எரிப்பு போராட்டத்தில் கைது  செய்யப்பட்டு சிறை தண்டனை அடைகின்றார் பிறகு 6 மாதத்தில் நிரபராதியாக வெளிவரும் மோகன் கவிதாவுக்கு பெங்களூரில் ஒரு பணக்காரருக்கு திருமணம் முடிந்து விடுவதை அறிந்து டாஸ்மாகே தஞ்சமென்று தேவதாஸாக  மாறிவிடுகிறார்........

மோகனின் பரிதாப நிலையை பார்த்து கவிதா கணவரிடம் டைவர்ஸ் செய்ததாக சொல்லி மோகனின் வாழ்க்கையில் மீண்டும் வந்து அவரை ஒர் இயக்குனர் ஆவதற்கு உதவுகின்றார் மோகனுக்குள் மீண்டும் காதல் மலர்கின்றது அவரும் இயக்குனர் ஆகிறார் 




















மீண்டும் மோகன்- கவிதா காதலில் இணைந்தார்களா...? என்பதை எதிர்பாராத திருப்பத்துடன் இயக்குனர் அவருக்கே உரிய இயக்கப்பாணியில் நளினமாக சொல்கின்றார்.........வெண்திரையில் பார்த்து மகிழுங்கள் 
























இயக்குனர் விக்ரமன் படத்துக்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு நான் அப்படியொன்றும் சிறந்த விமர்சனம் எழுதும் அனுபவப் பதிவர் அல்ல எந்த வணிக ரீதியான சமரசங்களுக்கும் அடிபணியாமல் தான் சொல்ல வந்த கதையை அழகாக,நிளினமாக,நாகரீகமாக....மீண்டும் நினைத்தது யாரோ திரைப்படம் மூலம் நிரூபித்திருக்கின்றார் இயக்குனர் விக்ரமன் 

                              thanks-YouTube-by timesmusicsouth

நடிகர்  ரேஜித் மேனன் அமைதியான காதலராக வந்து நடித்து அசத்துகின்றார் அவருக்கு இணையாக புதுமுகம் நிமிஷா சிறப்பிக்கின்றார் இனியா,மோனிகா,அமீர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க...பாலச்சந்தர்,பாரதிராஜா,பாண்டியராஜ்,ரவிகுமார், நடிகர்கள் சூர்யா,... என்று திரையுலக ஜாம்பவான்கள் இவர்களுடன் அமரர்  இயக்குனர் மணிவண்ணன்  அவர்களையும்  ஒரு காட்சியில் காணும்போது மெய் சிலிர்க்கின்றது

                           thanks-YouTube-by timesmusicsouth

படத்தின் ஒளிப்பதிவும் பாடல்களும் மிகப் பெரிய பிளஸ் பாயின்ட் பால்ராஜ் இசையில் பாடல்கள் அத்தனையும் தேனிசை விருந்து ஒளிப்பதிவில் பிரதாப் காஷ்மீர் மலைப்பகுதிகளையும் பஹல்காம் கோயில் இயற்கை காட்சிகளையும் அட்டகாசமாக சுட்டு கண்களுக்கு விருந்தளிக்கின்றார்  



  எந்தவித  விரசமான காட்சிகளும் இன்றி காதலை இப்படிகாவியமாய் பாடிய இயக்குனர் விக்ரமனின் நினைத்தது யாரோ..........ஒரு வித்தியாசமான அனுபவம் 



 




















புல்லாங்குழலிருந்து புறப்பட்டு வரும் மெல்லிசையாக திரையில் இயக்குனர் விக்ரமனின் நினைத்தது யாரோ படம் பார்த்தது மூங்கில் காட்டுக்குள் மல்லாக்கப் படுத்து நிலவின் ஒளியில் தென்றலின் தாலாட்டைக் கேட்டது போல் உள்ளது 




Wednesday, January 29, 2014

ஹாலிவுட் நடிகைகள் வரிசையில் அசின்...


ஒலிவியா வைல்ட்,மேகன் பாக்ஸ்,லூசி கேல்..போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் வரிசையில் 5 ஆண்டுகள் தமிழ் சினிமாவை தனது கவர்ச்சியால் கலங்கடித்த நாயகி அசின்............
















உலகளவில்  ஒப்பனை பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமான அவான் இந்தியா நிறுவனத்தின் 2014-அம ஆண்டின்  முதல் இந்திய பிரான்ட் அம்பாசிடராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார் 




































அசின் 2001-ல் மலையாளத்தில் அறிமுகமாகி M.குமரன் S/O மகாலக்ஷ்மி தமிழ் படத்தில் கோலிவுட்டில் கொடி நட்டிய அம்மணி 5 ஆண்டுகள் பல வெற்றிப்படங்களில் தன் நடிப்பை காட்டி.....



2008-ல்  பாலிவுட்டில் அமீர்கானுடன் கஜினி மூலம் அறிமுகமாக அங்கேயும் சல்மான்கான்,அஜய்,அக்ஷய் குமார்,அபிஷேக்..போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது 

அரைவேக்காடும் கொலைகாரனும்- கேஜ்ரிவாலின் RT சரியா?


காங்கிரஸ் ராகுலை அரைவேக்காடு என்றும் பாஜக நரேந்திர மோடியை கொலைகாரன் என்றும்  இசையமைப்பாளர் விசால் தாத்லானி சமுக வலைத்தளமான டிவிட்டரில் மறைமுகமாக விமர்சித்து பரபரப்பாக கூச்சலோடு கீச்ச...

ஆம் ஆத்மியின் அதிரடி வீரர் அரவிந்த் கேஜ்ரிவால் அதை ரீ-டுவிட் (RT) செய்ய அவரது இச்செயல் அரசியலின் அநாகரிகத்தையும் ஆம் ஆத்மி கேஜ்ரிவாலின் கோமாளிதனத்தையும் காட்டுவதாத அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.....

அரசியலை தூய்மை படுத்த வந்ததாகச் சொல்லிக்கொள்ளும்  கேஜ்ரிவாலும் எல்லா அரசியல்வாதிகள் போன்றுதான் அரசியலை சாக்கடை ஆக்குகின்றார் என்றும்...........





















இந்திய நாட்டின் அடுத்த பிரதமராக வர ஆசைப்படும் ஆம் ஆத்மியின் தூண் அரவிந் கேஜ்ரிவாலின் சமீபத்திய நடவடிக்கைகள்......

போலிஸ் தடையை மீறி ஒரு முதல்வராக இருந்துகொண்டே பொது இடத்தில் தர்ணா செய்தது......

டெல்லி  வாழ் உகண்டாபெண்களிடம் அவரது சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி தரக்குறைவாக நடந்துகொண்டது......

போன்ற செயல்கள் பொதுமக்கள் மத்தியிலும் அவருக்கும் அவரது ஆம் ஆத்மிக்கும் ஆதரவாக இருந்த ஊடகங்கள் கூட முகம் சுழிக்கும் அளவுக்கு மோசமானது..............என்றும் சொல்பவர்கள் பலர் 


ஆனால்....
நம்ம  கவுண்டர் சினிமாவில் சொல்வதுபோல்........
அரசியலில்  இதெல்லாம் சகஜமப்பா...என்போரும் உண்டு 

உங்கள் பார்வையில்............

கேஜ்ரிவாலின் இந்த ட்விட்டர் ரீ-டுவிட்  சரியா...? தவறா?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...முடிவு-5/2/2014

 

Sunday, January 26, 2014

ஜெய் ஹோ (இந்தி)-ஆம் ஆத்மி அதிரடி வீரன்


தங்களது ரசிகர்களுக்காக மட்டுமே  ஜில்லா-வீரம் போன்று படம் காட்டும் தளபதி-தல நடிகர்கள் இங்கு மட்டுமல்ல  பாலிவுட்டிலும் இருக்கின்றார்கள்- சல்மான்கானின்  ஜெய் ஹோ (இந்தி)- அதிலும் இது ஆம் ஆத்மியின் அதிரடி வீரன் 






















தோள்பட்டையில் துப்பாக்கி, முதுகில்  கத்தி,கட்டுமஸ்தான  உடல் என்று முழுக்க முழுக்க  கார்ட்டூன் படங்களில் வரும்   வரும் ஒரு அறிவார்ந்த சிந்தனை இல்லாத கோபம் கொண்ட இளைஞனாக, முரட்டு வாலிபனின் காட்டுமிராண்டித் தனமான பாத்திரப் படைப்பு........சல்மான் 




உற்றுப்பார்த்தால் சமுதாயத்தில் அவரது நடவடிக்கைகள் அத்தனையும் ஆம் ஆத்மி கேஜ்ரிவால்   ஜெய் ஹோ என்று சப்தம் எழுப்பிக்கொண்டு திரையில்  நடிக்க வந்த பிரமை 


























ஜெய் (சல்மான் கான்) என்ற முன்னாள் ராணுவ மேஜர் இந்நாள் ஆம் ஆத்மி இளைஞர் ......DO GOOD என்பது அவரது  திருமந்திரம்
ஆனால் அவரது செயல்கள்.......? ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால் ரோட்டில் படுத்து உருளுவார் சல்மான் கான் அடுத்தவரை ரோட்டில் போட்டு உருட்டுவார்




















கிரிஷ்-3 -தூம்-3 சூப்பர் ஹீரோக்களுக்கு  சாகசங்கள் செய்ய  பல ஆயுதங்கள் தேவைப்பட்டது இந்த ஜெய் ஹோ சூப்பர் ஹீரோவுக்கு அவரது கையும் காலுமே எல்லாமாக....காலால் எட்டி உதைத்தால் ஆம்புலன்ஸ் ஆகாயத்தில் பறக்கும் இது போன்ற சல்மான் கான் சாகசங்கள் அவரது ரசிகர்களை அவரது போஸ்டருக்கு ஆரத்தி எடுக்க செய்கின்றது   கிளைமாக்ஸ் சண்டை பார்வையாளர்களின் இதய துடிப்பை எகிறச்செய்யும்



இன்றைய அரசியல் போன்று முதல்வர்,ஹோம்மினிஸ்டர்,ஊழல் அதிகாரிகள்,நேர்மையான அதிகாரிகள் என்று எல்லாம் உண்டு
சல்மான் கான்,தபு,டெய்சி ஷா... அவர்களுக்கோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆனால் படம் பார்ப்பவர்களுக்கோ திண்டாட்டம் 



முழுக்க  முழுக்க சல்மான் கான் தன் ரசிகர்களுக்கு படைத்த அதிரடி திரைவிருந்து ஜெய் ஹோ.... ஆனால் மற்றவர்களுக்கோ.....அய்யகோ




 ஜெய் ஹோ- சூப்பர் ஹீரோ போர்வை போர்த்திய ஒரு காமெடி பீஸ் சிரஞ்சீவி நடித்த ஸ்டாலின் தெலுங்கு படத்தின் அரைவேக்காடு உல்டா...ஸ்ஸ்ஸ்...அப்பாடா


Saturday, January 25, 2014

தனுஷ்-க்கு சிறந்த நடிகர் விருது


பாலிவுட்டின் சிறந்த புதுமுக நடிகருக்கான 59-வது பிலிம் பேர் விருது நடிகர் தனுஷ்-க்கு ராஞ்சனா (இந்தி) படத்தில் நடித்ததற்காக கிடைத்துள்ளது......படம் வெளியானதும்   நமது வலைப்பதிவு விமர்சனத்தில் அன்று சொன்னது இன்று பலித்தது  

ராஞ்சனா(இந்தி)-  ஒரு காதல் காவியம்...என்றும் வாழ்வில் மறக்கமுடியாத முதல் காதலை தனுஷ்-சோனம் கபூர் மூலம் இயக்குனர் ஆனந்த் எல். ராய் அழகாக காட்சிப்படுத்தி நம் கண்களுக்கு விருந்தளிக்கிறார்...


dhanush

பெனாரஸ் புனித நகரில் உள்ள  குந்தன் (தனுஷ்) தன் சிறு வயதுதிலேயே ஜோயா (சோனம் கபூர்) மீது காதல் கொள்ள..  
அவளோ தில்லிக்கு படிக்க செல்கிறாள்.. ஆனால் அவனோ அவள் நினைவிலேயே.. சில வருடங்களுக்குப் பிறகு ஜோயாவை சந்திக்கும் குந்தன் அவளுக்கு அக்ரம் (அபய் தியோல்)  மீது உள்ள காதலையும் அவர்கள் காதலை சேர்த்துவைக்கும் படி குந்தனிடமே அவள் கேட்பதும் ஆக மிகப்பெரிய காதல் ட்விஸ்ட்...குந்தன் இளமைக்காதல் வென்றதா...? அல்லது ஜோயாவை அக்ரமுடன் சேர்த்து வைத்தானா...? என்பதே கதை.


dhanush


இதற்கிடையில் தில்லி அரசியல்,AICP (ALL INDIA CITIZEN PARTY)..அப்படி  இப்படி என்று கதை த்திரிலர் படமாக தடம் மாறிப்போனாலும் குந்தன்-ஜோயா காதலும் ஊடலும் என்று படம் காதலை மையம் கொண்டு...ஒரு காதல் நாவலைப் படிக்கும் உணர்வைத் தருகிறது.


dhanush

படத்தின் சிறப்பான காட்சிகள் -
-ஜோயாவிடம் ஆட்டோவில் குந்தன் தன் காதலை கையைக் காயப்படுத்திக் கொண்டு  சொல்லுவது.
-வாரணாசி தெருக்களில் குந்தன் போலீஸ்காரரை விரட்டி விரட்டி நடத்தும் ஹோலிப் பண்டிகைக் காட்சி



- குந்தனுடன் ஜோயா ஸ்கூட்டரில் போகும் போது அக்ரம் மீது உள்ள அவளது காதலைச் சொல்ல....குந்தன் அப்படியே பிரமை பிடித்தவனாக  அவளுடன் ஆற்றில் போய் விழுவது
-வாரணாசி ரயில் நிலையத்தில் ஜோயாவை சைக்கிளில் விரட்டும் காட்சி
-தில்லியில் நடக்கும் AICP சமுக சேவைக் காட்சிகள் 





வாரணாசி நகரத்தின் சந்து பொந்து எல்லாம் சிறப்பாக படம் பிடித்து உள்ளார் ஒளிப்பதிவாளர் நடராஜன் சுப்பிரமணியன்...படத்தின் சிறப்பு ஒளிப்பதிவின் கண்ணுக்கு குளிர்ச்சியான கலர் டோன்


dhanush

ஏ ஆர் ரஹ்மான் இசை கதைக்கும் காட்சிகளுக்கும் நல்ல உயிரோட்டம்..பாடல்கள் அவ்வப்போது காட்சிகளுக்கிடையில் பிட்டு பிட்டாக வந்தாலும் காதுக்கு இனிமை.

தேசிய விருது பெற்ற நடிகர் என்பதும் கொலை வெறி டி பாடல் தந்த புகழும் தனுஷ்க்கு பாலிவுட்டில் நடிகராக அங்கீகாரம் கிடைத்துள்ளது...
அவருக்கே உள்ள திறமையும் அதிஷ்டமும் நிச்சயம் அங்கேயும் அவருக்கு நிலையான இடம் தரும் என நம்புவோமாக....

முதல் காதல் என்றும் முடிவில்லாதது...என்று சொல்லும் ராஞ்சனா-படம் பார்க்கலாம்...பார்க்கும் போது உங்கள் முதல் காதல் நினைவுக்கு வரலாம்...நல்லதொரு காதல் நாவலை வண்ண ஓவியமாக பார்த்த உணர்வு...நெஞ்சை விட்டு நீங்காது.

Friday, January 24, 2014

கோலி சோடா-சினிமா விமர்சனம்


கோலி சோடா-காலி சோடா அல்ல கதையே நாயகனாக, நாயகியாக, காமெடியாக, அதிரடியாக... இப்படி எல்லாமுமான படு பந்தாவாக விஜய் மில்டன் வெண்திரையில் எழுதிய சமுக நாவல்



கதை.......கோயம்பேடு மார்க்கெட்டில் வாழும் அடையாளமில்லாத அனாதைகளான நான்கு சிறுவர்களின் ஆசா பாசங்கள்... அவர்கள் தேடிக்கொள்ளும் சுய அடையாளங்கள். 
























கோயம்பேடு  மார்க்கெட்டில் மூட்டை தூக்கி வாழும் (கிஷோர்,பாண்டி, ஸ்ரீராம்,  முருகேஷ் )  நான்கு சிறுவர்கள் தங்களை ஆதரிக்கும் ஆச்சி என்ற பெண்ணுடன்  சேர்ந்து  மார்க்கெட்டில் பெரிய கந்துவட்டி தாதாவும் சங்க தலைவராகவும் உள்ள நாயுடுவின்  குடோனில் ஆச்சி மெஸ் டிபன் கடை நடத்துகின்றார்கள் அவர்களுக்கு அதுவே ஆட்சி மெஸ் பசங்க என்று அடையாளமாக மாறிவிடுகின்றது 




ஒருநாள் இரவில் நாயுடுவின் அடியாள்  மயில் குடியும் குடித்தனமுமாக மெஸ்ஸில் வந்து அலப்பறை செய்ய அதனால் உண்டாகும் மோதலில் நான்கு பேரும் மயிலை அடித்துவிட தனது மரியாதை,தன் மீது உள்ள பயம்,பந்தா,அடையாளம் தொலைந்ததாக ஆத்திரம் கொண்ட நாயுடு நான்கு சிறுவர்களையும் அடித்து துவைத்து  நாலு தூர திசையில் தூக்கிப்போட்டு பிரித்து விடுகின்றார் 




























பிரிந்த நான்கு நண்பர்களும்  மீண்டும் ஓன்று சேர்ந்து நாயுடுவை எதிர்த்து பல பயங்கர ஆபத்துக்களை சந்தித்து தங்கள் அடையாளமான ஆட்சி மெஸ் டிபன் கடையை நாயுடுவிடமிருந்து மீட்டு செய்கூலி சேதாரமின்றி அவர்களும் நாயுடுவும் தங்கள் அடையாளத்தை நிலை நிறுத்திக்கொள்கின்றனர்.........



















இதை நகைச்சுவையும் காதலும் அதிரடியும் என்று பல திருப்பங்களுடன் சொல்வதே கோலி சோடா இப்படத்தின் உயிரோட்டமாக நகைச்சுவைக்கு இமான் அண்ணாச்சிக்கு நிறைய காட்சிகள் கலக்குகின்றார் அவர் போலிஸ் நிலையத்தில் டாஸ்மாக்கை போட்டுத் தாக்கும் காட்சி சூப்பர்   பவர் ஸ்டார்,சாம் ஆண்டர்சன் சிறப்பு தோற்றத்தில் மார்க்கெட்டில் நடக்கும் சினிமா சூட்டிங்  காட்சியில் வந்து சிரிக்க வைக்கின்றார்கள்

ஆட்சியாக நடித்திருக்கும் பெண்ணும் அவரது மகளாக நடித்திருக்கும் சாந்தினியும் ஒரு செடி ஒரு பிளவர் என்று வரும் ATM பெண்ணும் செம கலக்கல் நடிப்பு  கொத்தவால் சாவடி MKB என்ற கோயம்பேடு நாயுடுவாகவும் அவரது அடியாள் மயிலாகவும் வருபவர்கள் நடிப்பும் அதிரடி அசத்தல் (நடிகர்கள் யார் என்பதைவிட இங்கே கதையும் கதாப்பாத்திரங்களும் மட்டுமே  எல்லாமாக இருப்பதால்....)

























கோயம்பேடு மார்க்கட் கதை என்பதால் காய்கறிகள் போல் கூட்டம் கூட்டமாக நிறைய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் கதையோட்டமாக நாலு சிறுவர்களையும் நாயுடுவையும் மையமாக கொண்டு கதையை விருவிருப்பாகக் கொண்டு செல்லும் இயக்குனர் விஜய் மில்டன்   சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதால் காட்சிகள் கண்களை கவர்கின்றன 


கேரளா,கர்நாடகா என்று அவரது கேமரா ஒரு ரவுண்டு போய்வருகின்றது விடலைப் பசங்களின்  காதல் வார்த்தைகள்  கொஞ்சம் கசந்தாலும் இன்னும் சில வசனங்கள் இனிமையாக நெஞ்சை வருடுகின்றன 

அருணகிரி இசையில் அத்தனை பாடல்களும் துண்டு துண்டாக தெரிந்தாலும் எல்லாம் இனிமை அதிலும் கானா பாலாவின் ஆறு அடி வீடு.... பாடல் அருமை 























திரையில்  கணையாழி அசோகமித்திரனின் குறுநாவல் படித்ததுபோல் நிஜத்தின் பிரதிபலிப்பாக இந்த சமுதாயத்தில் வாழும் அடையாளம் இல்லாத மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை அதிரடியாக திரையில் சொல்கின்ற கோலி சோடா........காலி சோடா அல்ல 


 















விரசங்களோ,அருவெறுப்பு வசனங்களோ,அதிபயங்கர அவலங்களோ..இல்லாத கோலி சோடாவை எல்லோரும் குடும்பத்துடன் குடித்து.......திரையில் பார்த்து கொண்டாடலாம் 



 

Thursday, January 23, 2014

வீரம்-ஜில்லா சிரிப்பு சினிமா பட்டிமன்றம்


(குறிப்பு-இது வீரம்-ஜில்லா படங்கள் பற்றிய ஒரு கற்பனையான நகைச்சுவை   சிரிப்பு பட்டிமன்றம்....மற்றபடி ஏதும் உட்குத்தோ? வெளிக்குத்தோ? எதுவும் இல்லை........நீ....ள்...பதிவு) 



நடுவர்-சினிமா ஆப்பையா 
மதிப்பிற்குரிய பெரியோர்களே! தாய்மார்களே! இந்த சினிமா நாட்டின் இளங் சிங்கங்களே! வணக்கம்...இப்பலாம் நா எந்த சினிமா பட்டிமன்றங்களிளையும் கலந்துகொள்வதில்லை ஏன்னா இவியிங்களுக்கு ஒரு தீர்ப்பு சொல்றதுக்குள்ள நம்ம பிழைப்பு பெரும் கஷ்டமாப் போயிடுது.... இதுக்கெல்லாம் அந்த திண்டுக்கல்காரப் போய் பாருங்கய்யானா கேட்கமாட்டேங்கிறாயிங்க  .பாசக்காரப் பிள்ளைக

சரி...வாங்க ஒட்டன்சத்திரத்தில இருந்து வெள்ளையும் சொள்ளையுமா வேஷ்டி-சட்டையில நரைத்த....சாரிங்கய்யா...சால்ட் பெப்பர்  தலயோட வந்திருக்கும் கரடி கண்ணாயிரம்  அய்யா...அவுத்து விடுங்க வீரமா உங்க படத்தோட பெருமைகளை..........





























வீரம் கரடி கண்ணாயிரம்- 
கணம் பட்டிமன்ற நடுவர் ஆப்பையா அய்யா அவர்களுக்கு வணக்கம்....அய்யா நா கிராமத்துல இருந்து வந்தேனைய்யா..அதுதான் வேஷ்டி கட்டி வந்துருக்கேன்...

நடுவர்-சினிமா ஆப்பையா
நல்லவேளை அய்யா...அப்படியே வயக்காட்டுல இருந்து வந்தேன்னு
கோவணத்தோட வராம போயிட்டிங்க....சரி சொல்லுங்க...




வீரம் கரடி கண்ணாயிரம்-  
அய்யா...நடுவர் அவர்களே..வீரம் படத்துல வீரத்தோட நடிச்ச  எங்க தல ரொம்ப நல்லவருங்க அய்யா..ஒட்டன்சத்திரத்தில கந்துவட்டி கொடுமை பண்ணின அம்புட்டு பேரையும்...அடியோ அடினு அடிச்சு விரட்டி அடிச்சவருங்க அய்யா..

நடுவர்-சினிமா ஆப்பையா
அம்புட்டு வயாசானவரா இருக்கிற தல அம்புட்டு அடி அடிச்சாருனா அவரு சாதாரண மனுசர் இல்லைய்யா...வேட்டிகட்டுன சாக்கிஷான் 





















வீரம் கரடி கண்ணாயிரம்-  
நாலு தம்பிகளுக்கு அண்ணன்டா..ச்சோ..அண்ணனய்யா.. அவியிங்களுக்காகவே கல்யாணம் கட்டாம நரைச்சிப் போனவருங்கையா.. ஆனா.. வீட்டு வேலைக்காரர் அப்புக்குட்டி கல்யாணத்துக்கு ஒரு கடையே எழுதிவச்சு சரித்திரத்தில கடையேழு வள்ளல்கள்ள இவரும் ஒருத்தராயிட்டாறைய்யா........

நடுவர் சினிமா ஆப்பையா- 
அது சரிங்க அய்யா..உங்க தல பொண்ணு இருக்குன்னு சொன்ன மாமா மயில்சாமிக்கு விருந்து போட்டு உதையும் போட்டு அனுப்புறாரு...ஆனா தன் தம்பிகளும் சந்தானமும் சொன்னாமட்டும் கோப்பெருந்தேவிய லுக்கு விடுறாறையா....நல்ல அண்ணன்டா....நல்ல தம்பிகள்டா....



வீரம் கரடி கண்ணாயிரம்-  
காந்தி மாதிரி வாழ்ந்துக்கிட்டிருந்த அவரோட காதலியின் அப்பாகாரர்  நாசர் அய்யாவ குடும்பத்தோடு காப்பாத்துன நல்லவர்  அய்யா...அவர எத்தன அடி அடிச்சாலும் அவருக்கு எதுவும் ஆகாது ஆனா அவரு ஒரு அடி அடிச்சா அடிவாங்கினவன் அம்புட்டுதானையா... மரண அடிங்க அய்யா...
அதனால நடுவர் அய்யா அவர்களே...எங்க தல நடிச்ச வீரம் படமே சமுதாயத்துக்கு தேவையான படம்னு  நீங்க நல்ல தீர்ப்பு வழங்கணும்... என்ன நாஞ் சொல்றது....?

























நடுவர்-சினிமா ஆப்பையா
வழங்கிடுவோமையா...ஜில்லாக்காரங்க என்ன சொல்லுறாயிங்கனு கேட்டுப்புட்டு வழங்கிடுவோம் அடுத்து வாங்க...கலர் கலரா சட்ட போட்ட தளபதியோட ஜில்லா-விலுருந்து  வந்திருக்கும்  தில்லு துரை தம்பி... வாங்க உங்க தளபதியோட ஜில்லா படத்தின் பெருமைகளை எடுத்து விடுங்க..ஆமா..கையில ஏதோ கோணி ஊசியோட வந்த மாதிரி தெரியுதைய்யா....

ஜில்லா தில்லு துரை -
வணக்கம் நடுவர் சினிமா ஆப்பையா அவர்களே...ஆமாம் அய்யா இது கோணி ஊசிதான் வருர வழியில ஒரு காக்கி சட்டை போட்ட போலீஸ்காரரு என்னப் பார்த்து யாரு?-னு கேட்டாரு...But...XXX-ல குத்துனேன் பாருங்க அய்யா...வேலையே  வேண்டாமுன்னு  ஓடிப்யேப் போயிட்டாரு...






























நடுவர்-சினிமா ஆப்பையா
ஆமாம் அய்யா..உங்ககிட்ட இந்த ஜில்லாவுல ஒருதடவ குத்து வாங்கினவன் இனி எந்த ஜில்லாவுலயும் இருக்க மாட்டான்... நல்லவேளய்யா..பின்னாடி குத்துனிங்க அதுவே முன்னாடி குத்தினிங்கனா....ரொம்ப நால்லா இருந்திருக்காதைய்யா...நல்லவேள நா காக்கிச் சட்ட போட்டுட்டு வரலையா... 

ஜில்லா தில்லு துரை-
ஜில்லாவுல எங்க இளைய தளபதி சக்தி நேர்மையின் சின்னம் அய்யா...அவர எடுத்து வளத்த அப்பன் சிவன யாரு எதிர்த்தாலும் அவரு பீஸ் பீஸா ஆக்கிடுவாரு...போலிஸ் கமிஷனராக இருந்தாலும் கையில வெட்டிடுவாரு..

நடுவர்-சினிமா ஆப்பையா
அம்மாம்...அப்பா மேல பாசாக்கார பிள்ளயா வர்ராரு...ஆனால் அவியிங்க அப்பாகாரு ரொம்ப நல்லவரு இல்லையே அய்யா...அந்த ஜில்லாவுல நடக்கிற எல்லா தப்புக்கும் அவருதானையா காரணமாய் இருக்காரு...



ஜில்லா தில்லு துரை-
அதனால்தான்யா  எங்க இயக்குனர் அப்படியே கதைய உல்டா பண்ணிட்டாரு... ஏக்-தம்ல எங்க தளபதிய போலிஸ் அதிகாரியா ஆகிட்டாரு....அவுங்க அப்பாவையே எதிர்க்கிற மாதிரி காட்டி கடைசியில நல்லவரா திருத்திடுவாரு...

நடுவர்-சினிமா ஆப்பையா
அது நல்லாத்தான்யா இருக்கு ஆனா...அவரும் அந்த  காஜல் அம்மணியும் ஆடுற But...XXX விளையாட்டுத்தான்யா என்னமோ மாதிரி இருக்கு
                              
ஜில்லா தில்லு துரை-
அந்த  விளையாட்டு இப்ப புதுசா நம்ம ஜில்லாவுல கண்டு பிடிச்சியிருக்கிறாயிங்க அய்யா... வாலிபர்கள்-வாலிபிகள் விளையாடுற விளையாட்டு.... ஒபாமா கூட இந்த விளையாட்டைப் பார்த்துப்புட்டு அடடா...அடுத்த ஒலிபிக்ல இந்த விளையாட்ட சேர்க்கணும்னு அடம்புடிக்கிறாரு.... அதுக்காகவே எங்க தளபதிக்கு ஆஸ்கார் விருது கொடுக்கனும்னு நாங்க ரத்த கையெழுத்து போட்டுக்கிட்டு இருக்கோம்..மவனே அவியிங்க மட்டும் அவார்டு தரல...அம்புட்டு பேரையும் கோணி ஊசியாலேயே  குத்த மாட்டோம்...

நடுவர்-சினிமா ஆப்பையா
அதுவும் சரிதான்யா...(இப்ப நான்கூட நல்ல தீர்ப்பு சொல்லலானா.... அய்யயோ  தலைக்குத்தான் ஹெல்மட் போடலாம் ஏம்பா...இதுக்கு ஏதாவது ஹெல்மட் இருக்காப்பா......எதுக்கு வம்பு?)

























என் உயிரிலும் மேலான என் சினிமா பதிவு வாசிகளே! இந்த நாட்டுக்கு பந்த பாசமின்றி  கடமையாற்றும் காவலர் படம் காட்டிய   ஜில்லா போன்ற படமும் தேவையே ஒரு கன்னத்தில் அடித்தால் அடித்தவனின் இரண்டு கன்னங்களையும் இல்லாமல் செய்யவேண்டும் என்று படம் காட்டிய வீரம் போன்ற படமும் தேவையே


 எனவே இளைய தளபதியும் தலயும் இணைந்தோ அல்லது இணையாமலோ இதுபோன்ற படங்களை இந்த சினிமா நாடு வாழ்வதற்கு மாசத்துக்கு ஒன்னு என்று  படம்காட்ட வேண்டும் அய்யாமார்களே! இந்த பட்டிமன்றத்திற்கு வருகைதந்த அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகிறேன் வாழ்க ஜில்லா வாழ்க வீரம்...ஸ்ஸ்ஸ் அப்பாடா....


UA-32876358-1