google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: April 2014

Wednesday, April 30, 2014

அஞ்சான் அண்ணேன்! கதையைக் காப்பியடிச்சி காசப் புடுங்கிடாதீங்க

லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் டைட்டில் லோகோவும் பர்ஸ்ட்-லுக் போஸ்டரும்  இன்று வெளியிடப்பட்டுள்ளது அஞ்சான் பட டைட்டிலைப் பார்க்கும் போது இரண்டு விழிகள்  திறந்து உள்ளது போன்று அஞ்சான் எழுத்து வடிவம் உள்ளது

அதற்கு முன்பு வெளிவந்த கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தின் டைட்டிலும் இதே சாயலில் ஆனால் மூக்கு கண்ணாடி போன்ற அமைப்பில் அனேகன் எழுத்து எழுதப்பட்ட வடிவம் உள்ளது 
அஞ்சான்-அனேகன் லோகோவை ஒரே கம்பெனியில் செய்தார்கள் போல...

இன்னும் சிலரோ அஞ்சான் டைட்டில் லோகோ 7-ம் அறிவு படத்தின் லோகோவுடனும் ஒப்பிடுகின்றார்கள் இரண்டிலும் கண்கள் படம் பிரதானமாக இருப்பதே காரணம்



 


































எது எப்படியோ........சினிமா பிரமாக்களே! லோகோ-போஸ்டர்....ஏன் நடிப்புகூட  காப்பியோ டீயோ எதையாவது அடிங்க அல்லது குடிங்க அதனால ஒன்னும் ஆகப்போவதில்ல ஆனா.....

அஞ்சான் அண்ணேன்! கதையைக் காப்பியடிச்சி காசப் புடுங்கிடாதீங்க 

பார்த்த படத்தையே திரும்ப திரும்ப பார்க்க வச்சிடாதீங்க......


 

Tuesday, April 29, 2014

என்னமோ ஏதோ-சினிமா விமர்சனம்


தற்போதைய காதலையும் காதலர்களையும் ஏனோ தானோவென்று பார்வையாளர்களால் ஜீரணிக்க முடியாத காட்சிகளால் படம் காட்டி பரிதாபமாக முனங்கச்செய்யும்.......என்னமோ ஏதோ 

படத்தின்  கதையாக.......இன்னும் முதிர்சியடையாத இளம் காதலர்கள்  இடையில் தோன்றும் லவ்-பிரேக் அப்-மீண்டும் லவ் என்று  காதலை விளையாட்டுத்தனமாக காட்டுவதே 

ஒரு கிரிமினல் ரவுடி சக்ரவர்த்தி (பிரபு) ஹைதராபாத்தில் ஒரு கலயானத்தை தடுத்து நிறுத்தச் செல்லும் இளைஞன்   கவுதமை (கவுதம் கார்த்திக்) காரில் கடத்துவதும்....வழிப்பயனத்தில் போர் அடிக்காமலிருக்க  துப்பாக்கி முனையில் கவுதமிடம் அவரது காதல் கதையைக் கேட்பதுமாக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் தொடங்குகின்றது 

பிளாஷ்பேக் கதையாக......
ஒரு டிவி சேனலில் வேலை செய்யும் கவுதம் தன் முதல் காதலை சிம்ரன் என்ற காதலியிடம் சொல்லும் போது விபத்தில்  சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட...அங்கே   அவனது காதலி சிம்ரனுக்கும்  டாக்டருக்கும் காதல் பற்றிக் கொள்கின்றது அவர்கள்  காதல் பிரேக்-அப்  

அவனது பிரேக்-அப் காதலி சிம்ரனின்  கல்யாணத்திற்கு  சென்ற இடத்தில் கவுதம் அங்கே அந்த டாக்டரால் கைவிடப்பட்ட காதலி நித்யா(ராகுல் பிரீத் சிங்) வை சந்தித்து காதலிலே தோல்வியடைந்த இருவரும் போதையில் தள்ளாடி காதலர்களாகின்றார்கள்.... கவுதம்-நித்யா காதல் கொடிகட்டி  பறக்க நித்யா வேறு ஒருவருக்கு நிச்சயக்கிப்பட இவர்கள் காதலும் பிரேக்-அப் 

இப்போது கவுதமுக்கு  தன்  நாய்க்குட்டியை வெட்டினரி ஆஸ்பிடலுக்கு  கொண்டு போன இடத்தில் அங்குள்ள டாக்டர் காவ்யா (நிகேஷா பட்டேல்) மீது காதல் இருவருடைய காதலும் நல்லா போய்க்கொண்டிருக்கும் போது அங்கேயும் பிரேக்-அப் ...ம்...காவ்யா வேறு ஒருவரை மணந்து கொள்கின்றாள் 

மீண்டும் நித்யாவுக்கு கவுதம் மீது காதல் வந்து அவனது வீட்டுக்கு வரும்போது அங்கே கவுதமின் முன்னாள் காதலியும் இந்நாள் நண்பியுமான காவ்யா கழுத்தில் தாலியுடன்  இருப்பதை பார்த்து வேறு ஒருவரை திருமணம் செய்ய சம்மதிக்கின்றாள் 

தனது காதலி நித்யாவின் கல்யாணத்தை தடுக்க போகும் வழியில்தான் கவுதம் சக்ரவர்த்தியால் கடத்தப்படுகிறான் இந்த தெய்வீக காதல் கதையெல்லாம் நமக்கு தெரியவருகின்றது

அப்புறம் சக்ரவர்த்தியை அடித்துப் போட்டுவிட்டு கல்யானமண்டபத்திற்கு வருகின்றான் கவுதம் ஆனால் நித்யாவுக்கு கவுதம் மீது தப்பு இல்லை என்று தெரிந்ததால் மணமகள் கோலத்தில்  கவுதமைத்  தேடி அங்கிருந்து தப்பி ஓடிவரும் போது சக்ரவர்த்தியிடம் மாட்டிக்கொள்கின்றாள்

சக்ரவர்த்தியிடமிருந்து நித்யா தப்பித்து கவுதமுடன் இணைந்தாளா....? கவுதம்-நித்யா காதல் என்ன ஆனது...? ஸ்...ஸ்....அப்பாடா....என்ன நண்பர்களே தலை சுற்றுகிறதா? வாசித்த உங்களுக்கே இப்படியென்றால் படம் பார்த்த எனக்கு எப்படி இருந்திருக்கும்?

கேப்டன் தேர்தல் கூட்டணி போல் கவுதம் காதல் அல்லாடுது.........
சரி... கதைதான் காதுலபூ என்றால்....119 கிரிமினல் கேஸ் உள்ள ரவுடியாக வரும் பிரபுவின் கோமுட்டி நடிப்பு பெரிய அக்கப்போர்......

பிளேபாய் காதலனாக வரும் கவுதம் கார்த்திகிடம் அப்பா கார்த்திக்கின் குரல் மட்டுமே எப்போதாவது எட்டிப்பார்க்கின்றது நடிப்பு பூஜ்யம் கன்னியர்களை கவர்ந்திழுக்கும் முதிர்ச்சியான முகபாவம் இல்லை இளம் கன்னியர்கள் பிரித் சிங்-நிகேஷா இருவரும் சும்மா வந்து போகின்றார்கள் நடிப்பும் இல்லை  கவர்ச்சியும் இல்லை 

டி.இமான் இசையில் கதைக்கு சம்பந்தமில்லாத பாடல்கள் நீ என்ன அப்பாடக்கரா..பாடல் கேட்க என்னமோ போல் உள்ளது எல்லா பாடல்களும் வெளிநாட்டில் படமாக்கப்பட்டாலும் பார்பதற்கு ஒளிப்பதிவில்  பிரமாண்டம் எதுவுமில்லை   படமே அழுவி வழியுது பாடல்கள் கழுவி ஊற்றுது....





















இப்ப இருக்கிற காதலும் என்னமோ ஏதோ என்று விளையாட்டுத்தனமாக  இருக்குமென்றால் இயக்குனராவது கொஞ்சம் சிரத்தை எடுத்து தெளிவாக  படம்காட்டி இருக்கலாம் 

Sunday, April 27, 2014

வாயை மூடி பேசவும்-சினிமா விமர்சனம்

லூசுத்தனமான கற்பனைக் கதை, பைத்தியக்காரத்தனமான கதாபாத்திரங்கள் என்று பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் நோக்கம் ஒன்றே பிரதானமாக,  இயக்குனர் பாலாஜி மோகனின் வித்தியாசமான படைப்பு....வாயை மூடி பேசவும்

படத்தின் கதை........பேசிப் பேசியே கூச்சலும் கும்மாளமுமாக வாழும்  ஓர் ஊரில் உள்ளவர்களை திடிரென்று யாரும் பேசக்கூடாது என்றால் எப்படியிருக்கும்...? என்பதை சென்டிமென்ட் கலந்த காதலும் காமெடியுமாக  சொல்வதே

பனிமலை ஊரில் அரவிந்த் (துல்கர் சல்மான்) என்ற சாதுர்த்தியமாக பேசி தன் பேச்சு திறமையால் வீடு வீடாக பொருளை விற்கும் சேல்ஸ் மேன்.....அவன் காதலிக்கும் அதிகம் பேச விரும்பாத டாக்டர் அஞ்சனா (நஸ்ரியா) தேவையற்ற கட்டுபாடுகள் விதிக்கும் அவளது வுட்பி பாய்பிரண்ட்

உளருவாய் சுகாதார அமைச்சர் சுந்தரலிங்கம் (பாண்டியராஜன்)
குடிகாரர்களை கிண்டல் செய்ததால் பொங்கியெழும் த.நா.கு.ச (தமிழ்நாடு குடிகார சங்கம்) தலைவர் ரவி (ரோபோ சங்கர்) அவரது சகாக்கள்

குடிகாரர்களை நக்கலடித்து நடித்த அலப்பறை நடிகர் நியூக்ளியர் ஸ்டார் பூமேஷ் (ஜான் விஜய்) அவரது ரசிகர்கள்இவர்களுக்குள் மோதல் நிறைந்த காமெடி கலாட்டாக்கள்

சென்டிமென்ட் டச்சாக....பிடிவாத நிலக்கிழார் ஆதிகேசவன் (வினு சக்ரவர்த்தி) அவரது குடும்பம் அஞ்சனாவின் சின்னம்மா வித்யா (மதுபாலா) வாயைத் திறந்தாலே ஏடாகூடமாக பேசும் அர்விந்தின் நண்பன் அவனது நர்ஸ் காதலி

இப்படி நிறைய ஏதேனும் ஒருவகையில் மறை கழண்ட நிறைய கதாப்பாத்திரங்கள் நிறைந்த மலைக்கிராமம் பனிமலையில் விசித்திரமான ஊமைக் காய்ச்சல் (DUMP FLU) பேசுவதால் மரணிக்கும் வைரஸ் நோய் பரவுகின்றது

அதனால் அரசாங்கம்  அதற்குரிய மருந்தை கண்டுபிடிக்கும் வரை மக்களை பணிமலையை விட்டு வெளியேறவும் யாரும் யாருடனும் பேசவும் தடை விதிக்கின்றது

கடைசியில் ஊமைக்காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா...? அரவிந்த்-அஞ்சனா காதல் என்னவானது...? என்பதை இயக்குனர் அவரது புதுமையான பாணியில் சிரிக்க வைகின்றார் 

 நடிகர் மோகம்,படங்களுக்கு தடை செய்ய நினைக்கும் போலிக் கூட்டம், அரசியல் உள்குத்து ...இப்படி ஏகப்பட்ட நிகழ்வுகளை இடையிடையே இயக்குனர் பாலாஜி மோகன் நாசுக்காகவும் நையாண்டியாகவும் படம் காட்டுகின்றார் ஆனால் அளவுக்கு மீறிய கற்பனை சில நேரம் நமக்கு எரிச்சல் மூட்டுகின்றது

படத்தின் முன்பாதி ஒரே கூச்சலாக இருக்க பின் பாதியில் பத்து நிமிடமே பேசுகின்றார்கள் பிறகு அனைத்தும் சைகையே..இதுவே  சிலருக்கு பிடிக்காமலும் போகலாம் படம் பார்க்கும் பார்வையாளர்களே பாத்திரங்கள் பேச வேண்டிய வசனத்தை திரையரங்கில் பேசி சிரிக்கின்றார்கள் 

துல்கர் சல்மானின் வசன உச்சரிப்பும் உடல் மொழியும் பிரமாதப் படுத்துகின்றன நஸ்ரியாவின் சாந்தமான நடிப்பு அவரது முக அழகை விட பார்ப்பதற்கு அழகு ரோபோ சங்கர் யதார்த்தமான குடிகாரக் காமெடியில் அலப்பறை செய்கின்றார் பாண்டியராஜன் தனக்கே உரிய நக்கல் வழியும் காமெடியில் அசத்துகின்றார் ஜான் விஜய் கொஞ்ச நேரமே வந்தாலும் தூக்கலான சிரிப்பூட்டும் நடிப்பு 

சீன்  ரோல்டன் இசையில் போதும் இனி நீ வருந்தாதே...பாடலும்  காதல் அறை ஒன்னு விழுந்துச்சு... பாடலும் இனிமை பின்னணி இசையை பக்கபலமாக வைத்தே படத்தின் பின்பகுதி இயக்கப்பட்டுள்ளது  சௌந்தரராஜனின் ஒளிப்பதிவில் பனிமலை கற்பனை கிராமம் (மூனார் மலைப்பகுதிகள்) பாடல்காட்சிகள்... இந்த கோடையில் கண்ணுக்கு குளுகுளு..... இரண்டுமணி நேர ஜில்...ஜில் 

வாயை மூடி பேசவும்-சில இரட்டை  அர்த்த வசனங்கள் இருந்தாலும் குடும்பத்துடன் கண்டுகளிக்க தகுந்த மேம்போக்கான கதையுள்ள நகைச்சுவை திரைப்படம்

 என் பார்வையில் படம் பரவாயில்லை ரகம்தான் 
உங்கள் பார்வையில்...........

























(நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால் அல்லது படம் பார்த்துவிட்டு தங்கள் மதிப்பீட்டை தெரியப்படுத்தவும்)



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு- 5/4/2014



Friday, April 25, 2014

என்னமோ நடக்குது-சினிமா விமர்சனம்


முன்பாதி சென்டிமென்ட்,காதல் என்றும்.....பின்பாதி விறுவிறுப்பு, கலக்கல் காமெடி என்று எதிர்பாராத திருப்பமாகவும்.... ஒரே நாள் நிகழ்வாக காதல்-திரிலர்-காமெடியாக...என்னமோ நடக்குது  

படத்தின்  கதையாக.....
பேங்க்  பணத்தை சட்டத்துக்கு புறம்பாக கள்ளத்தனமாக வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றிய படம்

தாதாவும் அரசியல்வாதியுமான பர்மா (ரகுமான்) தன் புது வேலையாள் விஜி (விஜய் வசந்த்)யிடம்   20 கோடி ரூபாயை கள்ளத்தனமாக  பட்டுவாடா செய்ய அனுப்ப....  விஜயிடமிருந்து பணத்தை அபேஸ் செய்துவிடுகின்றது பர்மாவின் எதிரிக் (பிரபு) கூட்டம் 

ஆனால் பணத்தை விஜிதான் எடுத்ததாக நினைத்த  பர்மா.... விஜியின் காதலி மதுவை (மஹிமா) யை கடத்திச் செல்கின்றான்

விஜி தன் நண்பர்களுடன் சேர்ந்து   பணத்தையும்  தன் காதலியையும் எப்படி மீட்கின்றான்...?  என்பதை காமெடி திருப்பத்துடன் திரிலிங்காக  சொல்கின்றார்  இயக்குனர்

இயக்குனர் ராஜபாண்டி........விஜய் வசந்த் மயக்க நிலையில் ஆஸ்பத்திரியில் கிடப்பதும் ரகுமான் அவரிடம் பணம் பற்றி கேட்பதுமாக எதிர்பார்ப்புடன்    படம் துவங்குகின்றது நாலு மாத பிளாஷ்பேக் காட்சியாக விஜியின் அம்மா (சரண்யா) காதலி (மஹிமா) இவர்களைப்பற்றி கொஞ்சம் இழுவையை குறைத்திருக்கலாம் வசனம் ரசிக்கும் ரகம்........
"அய்யா...நாலு நாள் பொறுங்கயா.. தல..ய அடகு வச்சாவது உங்க பணத்த தந்துடுவேன்"
"யோவ்...எங்கிட்ட வாங்கின பணத்துக்கு எப்படி  அஜித்த அடகு வைப்ப...?"

 
விஜய்  வசந்த்....தன் முந்தைய மதில் மேல் பூனை படத்தைவிட நல்லாவே தேரியிருக்கின்றார் காமெடி-காதல்-சண்டைக்காட்சிகளில் மிளிர்கின்றார் மஹிமா.....கொஞ்சம் அழகு கொஞ்சம் நடிப்பு கவர்ச்சி மிஸ்ஸிங் 
  
முன்பாதியில் ரகுமான்...பின் பாதியில் பிரபு என்று படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றார்கள் வக்கீல்-கம்-வில்லன் ஆலோசகராக நடித்துள்ள தம்பி ராமையா படத்தின் கலகலப்பு ஊட்டுகிறார் அம்மாவாக  சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல் ஆனால் இதில் ஒரு குத்து பாட்டு போட்டு நடித்துள்ளார்கள்... பேங் ஆபிசர்-கம்-வில்லியாக  வரும் சுகன்யா என்னமோ சும்மா வந்து  போகிறார்

பிரேம்ஜி அமரன் இசையில் என்னமோ இரண்டு பாடல்கள் மற்றும் சில இடங்களில்  பின்னணி இசையும்  பரவாயில்லை ரகம்...... வெங்கடேஷின் ஒளிப்பதிவு பாடல்காட்சிகளில் மட்டும் பளிச்...























கொஞ்சம் சினிமாத்தனம் நிறைய நாடகத்தனம்......
ஆனாலும்  பொழுது போகாதவர்களின் பொழுதைப் போக்க.....என்ன  என்னமோ நடக்குது 


   

Wednesday, April 23, 2014

ரஜினி,கமல்,விஜய்,அஜித்-தேர்தலில் நின்றால் யாருக்கு உங்க ஓட்டு?


அடுத்த  தேர்தலில் ரஜினி,கமல்,விஜய்,அஜித்.. இவர்கள் தனி அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்று ஓட்டு கேட்டால் யாருக்கு உங்கள் ஓட்டு? என்ற கற்பனை நகைச்சுவை பதிவு...........

அகில இந்திய சூப்பர்  ஸ்டார் முன்னேற்ற கழகம் (அ இ சூ மு க) 
கண்ணா ! தம்பி உடையான் படைக்கு அஞ்சான் !
கோடானுகோடி தம்பி உடையான் இந்த கோச்சடையான் ! அரசியல் எதிரிகளைக் கண்டு அஞ்ச மாட்டான் கோட்டயப் புடிக்க ஆசையில்ல !
ஆனா கோட்ட விடுற ஆளும் நான் இல்ல!

இக்கடச் சூடு...என் வாக்குறுதியைக் கேளு....
நாங்க ஆட்சிக்கு வந்தால் அதச் செய்வோம் இதைச் செய்வோம்னு சும்மா எதையாவது சொல்லமாட்டோம்..........எல்லாருக்கும் எல்லாம் இலவசம்  இது  எப்படியிருக்கு?

அன்னிக்கு ஆண்டவன் சொன்னான்
அந்த அருணாச்சலம் செஞ்சான்
இன்னிக்கு இந்த கோச்சடையான் சொல்றான்! நீங்க கேட்காமலேயே செய்வான் அதனால உங்க ஒட்ட அ இ சூ மு க- கட்சிக்கு போடுங்க சும்மா ஆதாயத்த அள்ளிக்குங்க அள்ளிக்குங்க.........


விஜய் மக்கள் கட்சி (VMK)
அந்த ஏரியா இந்த ஏரியா இல்ல ஆல் ஏரியாவிலும் ஐயாதான் தலைவர்ர்ர்ர்ர்ர்ர்டா .........TIME TO LEAD  என் வீடும் எனக்குத்தான் என்  நாடும் எனக்குத்தான் நம்ம பேச்சு மட்டும்தான் சைலேன்டாக இருக்கும் ஆனா ஆக்சன் ஒவ்வொன்னும் சரவெடி.......தலைமை ஏற்க நான் தயார் ஆயிட்டேன்  அதனால உங்க ஓட்ட இந்த தலைவா மக்கள் கட்சிக்கு போட்டு... அறுவடையை  அள்ளிக்குங்க  அள்ளிக்குங்க......


அகில உலக கமல்  விஸ்வரூப கழகம் (கவிகழகம்)
ஆ......நா இதுவர எல்லா தேர்தலிலும் யாருக்காவது ஓட்டு போடுங்கன்னு சொன்னேன் ஆ...னால் இந்த தேர்தல்ல நானே விஸ்வரூபம் எடுத்து கவிகழகம் ஆரம்பிச்சு உங்க முன்னாடி உங்க எல்லார ஓட்டையும் எனக்கே போடுங்கன்னு வந்திருக்கிறேன்............. நீங்க எனக்கு ஓட்டு போடலனா நான் இந்த ஊர விட்டு ஓடிடுவேன் அப்புறம் நீங்க ஓர் உலக தலைவர இழந்துடுவிங்க........அதனால எனக்கே உங்க பொன்னான ஓட்ட போடுங்கனு சொல்லல....எனக்கு போட்டா நல்லாயிருக்கும்னு சொல்றேன்........


அகில இந்திய அண்ணன்கள்  தம்பிகள்  தல தலைமை கழகம் (AIATTTTK)
என்னத்த நான் சொல்றது...? எல்லாத்தையும்  அவியிங்களே சொல்லிப்புட்டாயிங்க ............என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் நிமிஷமும் நொடியும் நானா செதுக்கினது...........அதமாதிரி உங்க வாழ்க்கையும் இப்ப செதுக்க வந்திருக்கிறேன் எனக்கு வாக்களித்தால்...ஆங் 



ரஜினி,கமல்,விஜய்,அஜித்-
தேர்தலில் நின்றால் யாருக்கு உங்க ஓட்டு?




வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி..............முடிவு-30/4/2014

Saturday, April 19, 2014

டமால் டுமீல்-சினிமா விமர்சனம்

சின்ன பட்ஜெட் இரண்டு மணிநேர  படமாயினும் இழுவை இல்லாத திரைக்கதை, அளவான பாடல்கள்,தேவையான காமெடி,திறமையான இயக்கம் ... இவைகளால் ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வு தருகின்றது...டமால் டுமீல்  

 அம்மா,தங்கை என்று அன்பான குடும்பம்,அழகான காதலி (ரம்யா நம்பீசன்) என்று கைநிறைய சம்பளத்துடன் வாழும் மணி (MONEY) கண்டனுக்கு (வைபவ்) வந்ததே கேடுகாலம்..........அவன் வேலை செய்யும் IT கம்பெனியை மூடிவிடுகின்றார்கள் 


ஆனாலும் நியுமராலோஜி நம்பிக்கை உள்ள மணி (MONEY) கண்டன்   அதிஷ்டவசமாக  5 கோடி ரூபாய் பணப்பையை  கண்டெடுக்கின்றான் அந்தப் பணத்துடன் அவன் வெளிநாடு தப்பிவிட நினைக்கும் போது........

அந்தப் பணம்  இளவரசு (கோட்டா சீனிவாசராவ்)  என்ற தாதா காமாட்சி (ஷயாஜே ஷிண்டே) என்ற போலி மருந்து வியாபாரிக்கு அனுப்பியது 

இப்படி   இரண்டு வில்லன்களையும் அவர்களது கையாட்களையும்  மணி (MONEY) கண்டன் எப்படி எதிர்கொள்கிறான்? என்பதை காமெடி கலந்த த்திரிலராக இயக்குனர் ஸ்ரீ படம் காட்டுகின்றார் 

அறிமுக இளம் இயக்குனர்  ஸ்ரீ........ஒரு நெருப்புக்குட்சி ஸ்லோ-மோஷனில் எரிந்து கொண்டே கீழே விழுவது போல் ஆரம்பிக்கும் படம் கடைசிவரை இயக்குனர் டச்சில் மிளிர்கின்றது டமால் டுமீல் என்று இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் படமாக இழுவை இல்லாமல் கதை சொன்ன வேகம்தான் படத்தின் வெற்றியாகும் 

ஒரு த்திரிலிங்கான கதையில் அவ்வப்போது நகைச்சுவையை தூவிய  இயக்குனர் ஸ்ரீ  ஆனால் பார்வையாளர்கள் எதிர்பார்த்த திருப்பத்துடன் உச்சகட்ட காட்சியை அமைத்துள்ளது படத்திற்கு பின்னடைவு 

வைபவ்  நடிப்பு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது ரம்யா நம்பீசன்  கொஞ்ச நேரமே என்றாலும் தன் வசீகரிக்கும் அழகால் அசத்துகின்றார் கோட்டா சீனிவாசராவும் ஷயாஜே ஷிண்டேவும் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப நடித்துள்ளனர் 

எஸ்.தமன் இசையில் முத்தான மூன்று பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கப்பலமாக உள்ளன உஷா உதுப்பின் டுமீல்...டைட்டில் ஷாங் படத்தின் மையக் கரு பிரதிபலிக்கும் சரியான தேர்வுமேலும் படத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்பவைகளில் ஒளிப்பதிவுக்கும் எடிட்டிங்-க்கும்முக்கிய பங்கு உண்டு

damaaldumeel

மொத்தத்தில்........டமால் டுமீல் திரைப்படம் ஒரு ஹாலிவுட் டார்க் காமெடி திரைப்படத்தை அனுபவித்து பார்த்த அனுபவத்தை தரும்



Friday, April 18, 2014

தெனாலி ராமன்-சினிமா விமர்சனம்

வடிவேலுவின்  தெனாலி ராமன் திரைப்படத்தை முழு நீள காமெடி படம் என்று நினைத்து போனார்கள் என்றால்..........சிலர் சிரிப்பார்,சிலர் அழுவார்,சிலர் சிரித்துக்கொண்டே அழுவார்...?

இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவரும் உடல்மொழி காமெடி,அறிவுப்பூர்வமான விகடம்,நவீன அரசியல் நையாண்டி,கவர்ச்சிக் காதல் காமெடி,அந்நிய முதலீடு அவலம்,அரசுக்கு எதிரான சதி...இப்படி  காதல்-காமெடி-த்திரிலர் நிறைந்த பல்சுவை திரைப்படம் 

படத்தின் கதையாக...மக்கள் நலனை மறந்து சுக போகத்தில் திளைக்கும்  மாமன்னரை ஓர் அறிவுப்பூர்வமான கிளர்ச்சியாளன் அமைச்சராகி தன் விகடத்தனத்தால் திருத்துவதே....

படத்தின் ஆரம்பமே...... குறுநில மன்னரும் (ராதாரவி)  ஒன்பது விகட புரத்து அமைச்சர்களும்  சீன தேச தூதருடன்  விகட புரத்தில் வியாபாரம் செய்ய  ரகசிய ஆலோசனையில் ஒத்துழைக்காத ஒரு அமைச்சரை சாகடித்து...
படம்   ஒர் த்திரிலிங் எதிர்பார்ப்புடன் துவங்குகின்றது

அடுத்து விகட புரத்து மாமன்னர் (வடிவேலு) தன் அமைச்சரவையில் குறைந்த ஒரு அமைச்சருக்காக போட்டி வைத்து தேர்ந்தெடுப்பதில் தெனாலி ராமன் (வடிவேலு) கலந்து கொண்டு வெற்றி பெற்று அமைச்சராகிறார். தெனாலியின் விகடத்தனமான செயல்களில் மயங்கிய மன்னரின் மகள் இளவரசி மாதுளை (மீனாட்ஷி தீட்சித்) தெனாலியை காதலிக்கின்றாள்

மாமன்னர் நம்பிக்கைக்கு பாத்தியமான தெனாலி ராமன் ஒரு கிளர்ச்சியாளர் என்பதை அறிந்த மற்ற எட்டு சதிகார அமைச்சர்கள் கூட்டம் பல திட்டங்கள் தீட்டி மன்னரிடமிருந்து  தெனாலியை பிரிக்கிறார்கள் ஆனால் இளவரசியின் தூண்டுதலால் மீண்டும் மன்னருடன் சேர்ந்த தெனாலி மன்னருக்கு மக்கள் படும்கஷ்டங்களை சொல்ல........

மாமன்னர்  நகரில் மக்களுடன் பத்து நாட்கள் மாறுவேடத்தில் வாழவும் அதுவரை தெனாலி இடைக்கால மன்னராக இருக்கவும்  முடிவு செய்து....... மக்கள் படும்  கஷ்டங்களையும் சீன தேச வியாபாரிகளின் கொடுமைகளையும் கண்டு மன்னர் மக்களுடன் சீன வியாபாரிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் போது.....

அமைச்சர்கள் உதவியுடன்   சீன தேசத்து தூதுவரால் கைது செய்யப்படுகின்றார் தெனாலி தன் சாமர்த்திய அறிவால் எப்படி மன்னரை காப்பாற்றி அமைச்சர்களை தண்டிக்கின்றார் என்பதே........

36 மனைவிகள்  52 குழந்தைகள் என்று  மாமன்னராக வரும் வடிவேலு தன் உடல் மொழிக் காமெடியாலும் படபடவென் சரவெடி வசனங்களாலும்  சிறுவர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றார் என்றால்.....

தெனாலியாக வரும் வடிவேலு சிந்தனையை  தூண்டும் விகடங்களால் பெரியவர்களையும் இளவரசி மாதுளையுடன் காதல் என்று வாலிபர்களையும் எம்.ஜி.ஆர்.சென்டிமென்ட் வசனங்களால் பெண்களையும் தன் நடிப்பால் கவர்கின்றார்

இயக்குனர் யுவராஜ் நமக்கு தெரிந்த தெரியாத என்று நிறைய உள்ளீடு கதைகளை விகடத் தோரணங்களை காட்சிப்படுத்தி உள்ளார்....
---தெனாலி  அய்யனார் கோயிலில் திருட வரும் கொள்ளையர்களை புதையல் இருப்பதாக சாமார்த்தியமாக ஊர் கிணற்றை தூர் வாரச் செய்வது.....
---அமைச்சர் தேர்வில் மன்னரிடம் பதில் சொல்லி சவுக்கடி பரிசு  கேட்டு வாங்கி வாயில் காப்போனுக்கு தண்டனை கொடுப்பது......
---பானையில் யானையை நுழைப்பது? ...
---காட்டுராஜா (மன்சூர் அலிகான்)விடம் மாட்டிக்கொண்ட மன்னர் தப்பிக்கும் காட்சி....
---மாமன்னரின் அப்பா கனவில் வந்து தெனாலியை அழைத்ததாக கடலில் குதிக்க வைப்பது....
---கடைசியில் தெனாலியே நிறைய  காட்டுவாசிகளுடன் வந்து மன்னரை காப்பாற்றுவது.......
இப்படி  நிறைய சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் காட்சிகள் உண்டு 

டி.இமானின் இசையில் அத்தனையும் பழைய  குலேபகாவலி  படத்தில் கேட்ட தேனமுதப் பாடல்களாக இனிக்கின்றன  கிண்டலும் கேலியுமாக ஏய் வாயாடி...பாடல்,ரம்பப்பா.பாடல் சிறுவர்களுக்கான சிரிப்பு பாடல்.... நெஞ்சே...நெஞ்சே...உருக்கமான சென்டிமென்ட் பாடல்....இப்படி கலக்கல் 

ராம்நாத்  ஷெட்டியின் கேமரா...........ஒரு வரலாற்று படத்துக்கான பிரமாண்டத்தை பதிவிட்டுள்ளது ஆரம்பத்தில் வரும் சீன எல்லையில் பனி மலை பயனக்காட்சி.....பாடல் காட்சிகள்....நள்ளிரவில் நிலவு ஒளியில புறா பறக்கும் காட்சி.........விகட நகரம்...மற்றும் உண்ணாவிரதக் காட்சிகள் அத்தனையும் பிரமிக்க வைக்கின்றன நம்மை ஒரு வரலாற்று காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன 

இப்படி.......
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகுவடிவேலு & வடிவேலு கலக்கும்  தெனாலிராமன் படத்தை அனைவரும் குடும்பத்தோடு கண்டு களிக்கலாம் 


உங்கள் பார்வையில்.............
நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால்....அல்லது படம் பார்த்துவிட்டு உங்கள் மதிப்பீட்டை தெரியப்படுத்துங்கள் 


வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி............முடிவு-25/4/2014




Wednesday, April 16, 2014

மோடியுடன் பன்ச் பேசிய விஜய்....


இப்பதிவு.... யாருடைய மனதையும் புண்படுத்தும் விதத்தில் எழுதப்படவில்லை (ஹை-கோர்ட்டே தெனாலிராமன் படத்திற்கு இப்படித்தான் தீர்ப்பு கொடுத்துள்ளது)


மோடியும் விஜயும் இன்று சந்திக்கும் வேளையில் அவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்று ஒரு நகைச்சுவை கற்பனைப் பதிவு........


மோடி-       வணக்கம்....விஜய்...சீ.....ச்சே...ஜீ

விஜய்-ஏக் துஜே கேலியே மோடிஜி.......

மோடி-   விஜய்...ஜி நான் தமிழ்நாட்டுக்கு வரும்போதே தமிழ் கத்துக்கிட்டேன் நம்ம கேப்டன்..ஜி பேசுறத அவரு டிவியில கேட்டு...கேட்டு கத்துக்கிட்டேன் நீங்க தமிழே பெசுங்கஜி.....ஹி..ஹி...எனக்கு கொஞ்சம் கொஞ்சம் அல்ல நால்லாவே பிரியும்

விஜய்-(அடப்பாவி...அந்த ஆளு சும்மாவே  உளருவாரு..இவரு என்னத்த கத்துகிட்டு என்னத்த கிளறப் போறாரோ...?) மோடிஜி... நீங்க என்னைத்தான் முதல்ல சந்திச்சிருக்கணும் அத வுட்டுப்புட்டு போயஸ் கார்டன் போனது தப்பு 
எனக்குத்தான் தமிழ்நாட்டுல 99% செல்வாக்கு இருக்கு 

மோடி-   விஜய்ஜி...அங்க போனது ரஜினியோட டீ குடிக்கத்தான்...ஜி...அப்புறம் லதா அம்மையாரு நல்லா ரசம் வைப்பாங்கனு பேசிக்கிட்டாங்க ரெண்டு கிளாஸ் ஊத்திக்கிட்டு வந்தேன்....

விஜய்-வாழ்க்கை ஒரு வட்டம்....ஜி 
               அதுல ஜெயிக்கிறவன் தோப்பான்
                தோக்கிறவன் ஜெயிப்பான்........ஜி 
அத நீங்க மறந்திடக் கூடாது இது நான் திருமலையில பேசி பாக்ஸ் ஆபிஸ்ல பிச்சுகிட்டு ஓடிச்சு................

மோடி-   (அடப்பாவி....இவர் என்ன சொல்லுறாரு....) ஆப் கி பார் மோடி சர்க்கார் ........அப்படின்னு சொல்லுங்க விஜய்ஜி....

விஜய்-ஆப் கி மோடிஜி............இதக் கேளுஜி.........
                அந்த ஏரியா....இந்த ஏரியா இல்ல 
                 ஆல்  ஏரியாவிலும் அய்யா கில்லி......கில்லிஜி 
இதப்  பேசி கில்லி படத்தில வெற்றிய சொல்லி அடிச்சேன்...ஜி 

மோடி-    மோடி சர்க்காருக்கு இப்படி கில்லிப் பசங்கதான் வேனும்ஜி நீங்கதான் ஆதரவு பான்னனும் 

விஜய்-ஆமாம்....நான் ஒருவாட்டி முடிவு பன்னிட்டேனா,என் பேச்ச நானே கேட்க மாட்டேன்.......ஹ்ஹி...அதனால மோடிஜி.......நீங்க பிரதமர்...நான் துணைப் பிரதமர்...னு நான் முடிவு பன்னிட்டேன்...நம்ம பேச்சு மட்டும்தான் சைலன்ட்டா இருக்கும் ஆனா அடி......சரவெடி அப்புறம் மோடிஜி......
காடுனா நான் சிங்கம்.....
கடல்னா நான் சுறா....
காத்துனா நான் சூறாவளி 

மோடி-   அய்யோ...அய்யயோ...இல.கனேசாரு இந்த தம்பிஜி...ரஜினிஜியைவிட ரொம்ப சூப்பரா பேசுது..... ஆப் கி பார் மோடி சர்க்கார் ..அதிலே இந்த தம்பிக்கு ஒரு சூப்பர்........பார்

விஜய்-ஆமாம்ஜி...சாமி முன்னாடிதான் நான் சாந்தமாப் பேசுவேன் சாக்கட முன்னாடி இல்லை....மோதுனா மன்னர்னு பார்க்கமாட்டேன் மண்ணாங் கட்டினும்  பார்க்கமாட்டேன்...எனக்கு துணைப் பிரதமர் பதவி வேணும் 

மோடி-   விஜய்ஜி....அது ரஜினிஜிக்கு கொடுத்தாச்சு....உங்களுக்கு ஜனாதிபதி உங்க பழைய படங்களுக்கும் நீங்களே ஜனாதிபதி அவார்ட் கொடுத்துக்க வசதியாக இருக்கும்...சரி..விஜய்ஜி...போயிட்டு வாங்க   


(அதற்குள் இல.கணேசன் அலறிக்கொண்டு ஓடி வருகின்றார்........மோடிஜி மோசம போயிட்டோம் ரஜினி-விஜய் இவிங்கள சந்திச்சதால.......மற்ற நடிகர்களின்  ரசிகர்கள்   எல்லோரும் ஏக கோபத்தில இருக்கிறாயிங்க... நாம என்ன ஆகப் போறோமோ தெரியல....கோவிந்தா... கோவிந்தா... பேசாம  ஏழு மலையான மட்டும் சந்திச்சிருக்கலாம்...)


Tuesday, April 15, 2014

ரேஸ் குர்ரம்-விஜயின் ஜில்லா தெலுங்கு உல்டா


தமிழில்  விஜயின் ஜில்லா படத்தை லொல்லு சொன்னவர்களுக்கு மூஞ்சியில் கரி பூசும்  ஜில்லா தெலுங்கு உல்டா படம்தான் ரேஸ் குர்ரம்.....பந்தயக் குதிரை

தெலுங்கு மசாலா படங்கள் போல் வழக்கமாக கதை என்று எதுவுமில்லாமல் அல்லு அர்ஜுனின் பட்டையக் கிளப்பும் அதிரடிச்  சண்டை, கவர்ச்சிச் சூட்டைக் கிளப்பும் ஸ்ருதி, பிரமானந்தத்தின் சரவெடி காமெடி......இவைகளின் கலவையாக பொழுது போகாதவர்களுக்கு  பொழுது போக வைக்கும் படம்.... ரேஸ் குர்ரம் 

எலியும் பூனையுமாக இருக்கும் அண்ணன் ஏ.சி.பி ராமு (ஷாம்) அவரது தமாஷ் ரவுடி  தம்பி  லக்கி என்ற லட்சுமணன்  (அல்லு அர்ஜுன்) என்று துவங்கும் படம் ஒருநாள் லக்கி தன் அண்ணனின் போலிஸ் ஜீப்பை எடுத்துக்கொண்டு ஓட...

ஏ.சி.பி ராமு என்று நினைத்து அரசியல்வாதி சிவா ரெட்டி (ரவி கிஷன்) யின்  ஆட்களால்  விபத்து உண்டாக்க.....

தப்பித்துக்கொண்ட லக்கி அதிரடியாக சிவா ரெட்டியை அடித்து நொறுக்குகிறார் அவரும் பதிலுக்கு மந்திரியாகி லக்கி குடும்பத்துக்கு தொல்லைதர...........

விடுவாரா நம்ம லக்கி ஹீரோ...?
லக்கி...... உடனே ஹோம் மினிஸ்டரைப் பிடித்து அதிரடிப்படை சிறப்பு போலிஸ் அதிகாரியாகிவிடுகின்றார் (பாவம் விஜய் ஜில்லாவில் கஷ்டப்பட்டு பரிச்சை எழுதிதான் போலிஸ் அதிகாரி ஆவார்...) 

லக்கி....துணைக்கு வரும் கில் பில் பாண்டே (பிரமானந்தம்) என்று  ஒரு காமெடி பீஸ் சிறப்பு அதிகாரியுடன் சேர்ந்து சிவா ரெட்டியின் பினாமிகளை சுனாமியாக தாக்கி ஜெயிக்கின்றார் 

அவ்வப்போது  படம் நொண்டியடிக்கும் போது இயக்குனர் சுரேந்தர் ரெட்டிகொஞ்சம் காமெடி அல்லது உலக நாயகி ஸ்ருதியின் கிளுகிளுப்பு கவர்ச்சியைக் காட்டி படத்தை ஓட வைக்கின்றார் 

அல்லு  அர்ஜுன் அறிமுக காட்சியே..........ஒரு பள்ளி சிறுவனை ஒரே வீச்சில் பஸ் கூரை மீது ஏற்றுவது அப்புறம் பார்த்தாலே வண்டிகள் பறந்து சிதறி விழுவது  என்று படம் முழுக்க அமர்க்களம்

இதற்கு  பக்கபலமாக இருப்பது தமனின்அதிரடி பின்னணி இசையும் கிறங்கடிக்கும் பாடல்களும்  மற்றும் மனோஜ் பரமஹம்சாவின் காமிராவில்  அவை படமாக்கப்பட்ட விதமும்தான் 

படம் வெளிவரும் முன்பு இருந்த ஸ்ருதியின் கவர்ச்சி போஸ்டர் பரபரப்பு அதுதான்.........மல்லாக்க கிடக்கும் அல்லு அர்ஜுன்  மீது ஸ்ருதி குதிரை போன்று ஜம்மென்று ஆசனம் போட்டு அமர்ந்திருப்பது.....படத்தில் அம்மணியைப் பார்த்தால் பயமாக இருக்கின்றது யாரப்பா...அந்த மேக்கப் மேனை மாத்துங்கப்பா..........



 

Monday, April 14, 2014

தெனாலிராமன் படத்துக்கு எதிர்ப்பு நியாயமா?கருத்துக்கணிப்பு

கோடானுகோடி தமிழ் நகைச்சுவை சினிமாப் பிரியர்களின் அபிமான நடிகர்  வடிவேலு  நடித்த தெனாலிராமன் திரைப்படத்தை தடை செய்ய நினைக்கும் கூட்டத்திற்கு பதிலடி கொடுக்க இங்கே வாக்களித்து உண்மையைத் தெரியப்படுத்துங்கள்...........

அன்று  விஸ்கிகாந்த் நடிகரை எதிர்த்து தேர்தலில் கேலியும் கிண்டலுமாக பேசிய ஒரே காரணத்திற்காக இன்று வரை சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்ட நடிகர் வடிவேலு.........

அன்று  யாருக்காக குரல் கொடுத்தாரோ அந்த தலிவர் கூட்டமும்  ஒதுங்கிக் கொண்டது தமிழன் தமிழனுக்கு செய்யும் துரோகம் 

இன்று வடிவேலுவின் தெனாலிராமன் படத்திற்கு எதிர்புகாட்டுபவர்கள் உண்மையான தெலுங்கு அபிமானிகளோ அல்லது கிருஷ்ணதேவராயரின் பேரன்களும் அல்ல அவர்களுக்கு பின்னணியில் இருப்பது தமிழன் என்று முகமூடி அணிந்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய துடிக்கும் தெலுங்கு அரசியல்வாதிகள்......... வைகோ, விஜயகாந்த்... போன்ற பச்சோந்திகள்தான்

சாதியின் பெயரால் மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் யாராவது இங்கே குப்பை கொட்ட நினைத்தால் தமிழன் இங்கே பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டான்.நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது. அதையெல்லாம் விட்டு விட்டு குளிர் காய ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. அதை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும்............முருகன் தில்லைநாயகம் 

வைகோ இந்த விவகாரத்தில் உடனே கருத்து சொல்ல வேண்டும் அவர் தெலுங்கு மக்கள் பக்கமா இல்லை தமிழ் மக்கள் பக்கமா ? நான் கேட்பது தவறாக இருக்கலாம் ஆனால் வைகோ போன்றகளுக்கு இனவெறியை தூண்டிவிடும் அரசியலால் ஏற்ப்படும் பின் விளைவுகள் பற்றி புரிய வேண்டும்.................சுப்பிரமணியன்

பதிவுலக நண்பர்களே! உங்கள் பார்வையில்.........
வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது....?

வாக்களித்து  உண்மையை உலகுக்கு தெரிவியுங்கள்..........முடிவு-16/4/2014


Sunday, April 13, 2014

ரஜினி-மோடி சந்திப்பால் கோச்சடையான் பாதிக்குமா?

ரஜினியை சந்தித்த மோடி......இதற்கு முன்பு ரஜினி அரசியலில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இரண்டு முறை செயல்பட ஓன்று வெற்றி இன்னொன்று தோல்வி.........

 இது இப்படி இருக்க இந்தத் தேர்தலில் தனது  அலை வீசுவதாக வீராப்பு பேசும் மோடி பதவிக்காக ஒரு சினிமாக்காரரைச் சந்திப்பதுதான் வேடிக்கை

1996-ல்........"நீங்கள் ஜெயலலிதாவுக்கு ஒட்டு அளித்தால் கடவுள்கூட தமிழ்நாட்டை  காப்பாற்ற முடியாது" என்று திமுகவுக்கு ஆதரவாக பேசினார் 

ஆனால்  உண்மையில் அன்று ஆட்சி மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது அன்றைய (அதிமுக) அரசியின்  உதாரித்தனமான வளர்ப்பு மகன்  திருமணம் என்பது ஊரறிந்த விஷயம்.............

2004-ல் அவரது பாபா படப் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய பாமக கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தாலும்.........பாமக அமோக வெற்றிப் பெற்று நிறைய இடங்களைக் கைப்பற்றியது 

உண்மையில் ரஜினிகாந்தை ஒரு விளம்பரப் பொருளாக கறிவேப்பிலை போன்று  அரசியல்வாதிகள் பயன்படுத்துகின்றார்கள் ஷாருக்கான் சென்னை எக்ஸ்பிரசில் லுங்கி டான்ஸ் என்று குத்தாட்டம் போட்டதுபோல்..........

அதேநேரம்......
ஒரு  சினிமாக்காரரான ரஜினியும் அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்வது தனது சினிமாக்களின் வெற்றியைப் பாதிக்கும் என்பதை அறிவார்...வடிவேலு படும் பாடு இன்னும் தீரவில்லை.

உண்மையில்  மோடி என்ற மோடி மஸ்தான் ரஜினியை சந்தித்ததால் கோச்சடையான்.........அகிலாண்டேஸ்வரியின் கோபத்திற்கு ஆளாகிவிட்டான்   என்று சொல்பவர்கள் அதிகம்....


 )==-I'm J.V.K==-}⚓@Thalapathy_Jvk 
ஆமா மாமன் மச்சான் சந்திப்பு......#என்னை மோடி சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி விளக்கம்

•●♥ (ღღ ɛιa нαʋя ღღ)@Elarudh 
தான் ஜெயிக்க , என்ன வேண்ணாலும் செய்வான் மோடி என்பதற்கு உதாரணம் தான் தற்போது ரஜினி காலில் வந்து விழுந்தது...!!!! 

அகிலன்@rajniththi 
ஆதரவு தரலயின்னாலும் சந்தித்தாலே போதும் அத வச்சு சில ரசிகமணிகளின் ஓட்டை வாங்கிடலாம்ன்னு பிளான் போல # ரஜினி மோடி சந்திப்பு

கனியன்@Kaniyen 
என்னை மோடி சந்தித்ததில் அரசியல் இல்லை! - ரஜினி # கோச்சடையான் ரிலீசைப்பத்தி பயப்படுறியா கொமாரு?

இக்பால் செல்வன்@iqbalselvan 
பாபா படம் ஏன் ஊத்திக்கிச்சு என ரஜினிக்கும் தெரியும், நமக்கும் தெரியும், நரேந்திர மோடிக்கு தெரியாது பாவம். 

Praveen@IamMagudi 
நான் மோடிய சந்தித்ததில் அரசியல் நோக்கம் இல்லை#ரஜினி #ஆமா இவரு ஒரு டீ என்ன வெல’னு கேட்டாரு, அவரு குஜராத்துக்கு பஸ் டிக்கெட் எவ்ளோ’னு கேட்டாரு

தமிழன்டா@subramanigokul 
மோடியுடனான சந்திப்பில் அரசியல் கிடையாது: ரஜினிகாந்த்: நடிகர் ரஜினி # சும்மா இமயமலையில இளநி வித்த கதைய தான் பேச்சிட்டு இருந்தோம் பாஸ்

கோகுல்பிரசாத்@kabulivala 
தமிழ்சினிமா பொறுத்த வரையில் கமலஹாசன் போட்டுக் கொடுத்த பாதையில் தான் பிறர் பயணித்தாக வேண்டும். # ரஜினி & வடிவேலு @ஜெயா டிவி

கிம் ஜோங் III@mohammedarsath2 
கோச்சடையான் பூட்ட கேசுன்னு புரிஞ்சு போச்சு பாபா ரஜினி சுவாமிக்கு ..அதான் வாய்ஸ் கொடுக்காமல் மைண்ட் வாய்ஸ் கொடுத்திருக்காரு


 சி.பி.செந்தில்குமார்@senthilcp 
ஜக்கம்மா என்ன சொல்றா ன்னா ரஜினி கோச்சடையான் ரிலீஸ் க்கு முன் ஜெ வை ஒரு முறை சந்திப்பார் னு

நண்பர்களே! உங்கள் பார்வையில்..........


ரஜினி-மோடி சந்திப்பால் கோச்சடையான் பாதிக்குமா?



வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி..........


இது சும்மா சிரிக்க...............



Friday, April 11, 2014

நான் சிகப்பு மனிதன்-சினிமா விமர்சனம்

முதல் பாதி....துயில் மயக்கம் குறைபாடு உள்ள ஒருவனின்  வாழ்க்கையில் வரும் காதலை காமெடியுடன் படம்காட்டும்  கலகலப்பு.இரண்டாம்பாதியில்   நட்பு துரோகம்,கள்ளக் காதல்..என்று கில்மா படம் காட்டும் அருவெறுப்பு...நான் சிகப்பு மனிதன் 

துயில் மயக்கம் குறைபாடு (Narcolepsy) உள்ள நாயகன் தனக்கு ஆதரவாக இருந்த தன் காதலியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை கண்டுபிடித்து பழி வாங்குவதே........படத்தின் கதை.

பிறவியிலேயே  அதீத துக்கம்,பயம்,உணர்ச்சி,சந்தோசம் வந்தால் தூங்கி விழும்  துயில் மயக்க குறைபாடு உள்ள நடுத்தர வசதியுள்ள இந்திரன் (விஷால்) தனது குறையை கண்டு வெறுக்காமல் காதலித்து வயிற்றில் குழந்தை சுமக்கும் பெரிய வசதியுள்ள மீரா (லட்சுமி மேனன்) வுடன் நள்ளிரவில் வெளியே காரில் போகும் போது  நான்கு ரவுடி கும்பல் வழிமறித்து......

பயத்தில்  இந்திரன் காரில் தூங்கிட..மீராவை கற்பழித்து கோமா நிலைக்கு  தள்ளிவிடுகின்றார்கள் 

தூங்கினாலும் சப்தத்தை பதிவு செய்யும் திறன்கொண்ட இந்திரன் அந்த நாலு ரவுடிகளையும் அவர்கள் பேச்சை வைத்து கண்டுபிடித்து எப்படி பழி வாங்குகின்றார் என்பதை த்திரிலுடன் சொல்கின்றது

இப்படியும் சொல்லலாம்.....இன்னொரு மாதிரியும் சொல்லலாம் 

கர்ணன்  (சுந்தர் ராமு) தன்  மனைவி கவிதா(இனியா)மூலம்  அரவிந் என்ற பணக்கார நண்பனிடம் ரூ.2 கோடி  ஏமாற்றுவதை காட்டிக் கொடுத்து  அதனால் தன் மனைவி கவிதா மரணத்திற்கு காரணமான  இன்னொரு நண்பன் இந்திரனை (விஷால்) பழிவாங்க அவனது காதலி மீரா(லட்சுமி மேனன்) வை ரவுடிகளை வைத்து   கற்பழித்து கோமா நிலைக்கு தள்ளுவதும்.........இந்திரன் எப்படி அவர்களை பழிவாங்கினான்..? என்றும் சொல்லலாம் 

இயக்குனர்  திரு.........எதையோ சொல்ல வந்து எங்கேயோ போய் முட்டிக்கிட்டார் ஆனாலும் படத்தின் துவக்க காட்சிகளாக வரும்......ஓடும் ரயிலில் நான்கு ரவுடிகள் போலிஸ் ஒருவரை தள்ளிவிட்டு கொள்ளுவதும் 

இன்னொன்று இந்திரன் நடுராத்திரியில் நண்பர்களுடன் கள்ளத்துப்பாக்கி வாங்குவது என்றும் ஏகத்துக்கு எதிர்பார்ப்பை உண்டாக்குவது.......பின் அதற்குரிய டெம்போவை கடைசிவரை கொண்டுபோகாமல் தவறவிட்டதும்  திரைக்கதையின் சறுக்கல்.........லட்சுமி மேனன் பையன் வேடம் போட்டு விஷாலுடன் ஷகிலா படம் பார்ப்பது...இப்படி  நிறைய லாஜிக் ஓட்டைகள்... நம்மை அரங்கின் மோட்டைப் பார்க்க வைக்கின்றன    

விஷால்......அவருக்கு கிடைத்த  பூனை-புலி இரண்டு உணர்வுகளையும் முகத்தில் பிரதிபலிக்கின்றார்....லட்சுமி மேனன்....... பாய்ந்து வந்து விஷாலுக்கு லிப்-லாக் கொடுப்பது.....அடடா..... பார்க்கும் நமக்கும் ஏதோ பண்ணுது (அரங்கில் நிறைய சின்ன வாண்டுகள் விசில் சப்தம் காதைப் பிளக்கின்றது) 

மீராவின் பணக்கார அப்பாவாக  ஜெயப்பிரகாஷ்,இந்திரன் தாயாக சரண்யா பொன்வண்ணன், நல்ல நண்பன் ஜெகன், கெட்ட நண்பன் சுந்தர் ராமு,இனியா ....இப்படி நிறைய பேர் வந்து போகிறார்கள் மயில்சாமி ஒரு காட்சியில் வந்தாலும் நல்ல தமாஷ்

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் கானாபாலாவின் லவ்லி லேடிஸ் கேட்கலாம் பெண்ணே ஒ பெண்ணே.....காதல் மெலோடி இதயம் உன்னைத் தேடுதே.......சோகம் கலந்த பாடல் இரண்டும்  ரசிக்கலாம் BGM கூட பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும்

ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவில் பாடல்காட்சிள்  நள்ளிரவு மழைக்காட்சிகள் அருமை பாடல் காட்சிகளில்  வரும் ராஜஸ்தான் மனிதர்கள்,பாலைவனம், கோயில்கள்,பனி மலைகள்....எல்லாம்  குதுகலம்

மான் கராத்தே-யில் பாக்ஸிங் விளையாட்டை காமெடியாக அவமதித்தது போல் தாமஸ் ஆல்வா எடிசன்,வின்சன்ட் சர்ச்சில்...போன்றவர்கள் Narcolepsy மனிதர்கள் என்று சொல்லி அதே குறைபாடு உள்ள கதாநாயகனை செக்ஸ்க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அசிங்கப் படுத்தும் படம் விஷால்-லட்சுமி மேனன் லிப்-லாக் காட்சி கதைக்கு அல்ல........காசுக்கு திணிக்கப்பட்ட காட்சி

முதல்  பாதியில் விஷால் தூங்கி விழுகின்றார் நாம் விழிப்புடன் இருக்கின்றோம் இரண்டாம் பாதியில் அவர் விழித்துக் கொள்கிறார் நாம் தூங்கி விழும் நிலைக்கு வருகின்றோம்....ஆங்...நான் சிகப்பு மனிதன் என்பதை நான் தூங்கும் மனிதன் என்றும் சொல்லலாம் 

நீங்கள்  படம் பார்த்தவராக இருந்தால்..........அல்லது படம் பார்த்து விட்டு உங்கள் மதிப்பீட்டை தெரியப்படுத்துங்கள்........


நான் சிகப்பு மனிதன்-படம் எப்படியிருக்கு....?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....முடிவு-18/4/2014

Tuesday, April 08, 2014

ஒரு கண்ணியும் மூனு களவானிகளும்-சாகடிக்கிறாயிங்கப்பா....

ஒரு கண்ணியும் மூனு களவானிகளும் என்று படம் காட்டி படம் பார்க்கப் போனவங்கள சாகடிக்கிறாயிங்கப்பா என்று நொந்து கொண்டு வந்தார் நண்பர்....

சிம்புதேவன் இயக்கிய காதல் காமெடி படம்தானே என்று பார்க்கப் போனேன் அங்கே சிவ பெருமான்,நாரதர், பிரமா...என்று மூன்று பேரைக்காட்டி பேண்டஸி படம்னு பயம் காட்டுறாயிங்கப்பா....

மனித  வாழ்க்கையில் நேரம் தவறாமையின் முக்கியத்துவத்தை சொல்வதாகச் சொல்லி நம்ம நேரத்தையும் பணத்தையும் பிடுங்கிக்கொண்டு.....

ஒரு டிக்கட்டுக்கு ஒரு  படம் ஆனால்...அந்த ஒரே படத்தில  ஒரே கதையை மூன்று வித நிகழ்வுகள் என்று சிம்புதேவன் ஒரு புது டெக்னிக் உபயோகப்படுத்தி மூன்று படம் காட்டியதே......ஒரு கண்ணியும் மூனு களவானிகளும்

மலேசியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர் வெள்ளையும் சொள்ளையுமான ஹிப்பி லகிரி (நாசர்) தன் எதிரி ஆரோக்கியத்தின்  மகள் இஷபெல்லா (அஸ்ரிதா ஷெட்டி) வின்  திருமணத்தை தடுத்து நிறுத்த..........

ஆள் கடத்தும் திருடனும் இஷபெல்லாவின் காதலனுமான தமிழ் (அருள்நிதி)  என்ற களவானியை முப்பது லட்சம் கூலிக்கு நியமிக்க.....

தமிழ் தன் நண்பர் ராமானுஜம் (பகவதி பெருமாள்), மலர் (பிந்து மாதவி) இருவருடன் சேர்ந்து இஷபெல்லாவை  கடத்துவதை......

ஒரு நொடி,இரண்டு நொடி,மூன்று நொடி...தாமதத்தினால் என்ன நடக்கும் என்பதை மனித பூச்சிக்களுக்கு கடவுள் பூச்சிகள் படம் காட்டுவதாக.....

இயக்குனர் கடவுள் சிம்புதேவன் நமக்கு காமெடியாக மூன்று விதங்களில் சொல்வதே...........ஒரு கண்ணியும் மூனு களவானிகளும் (சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க முடியலே...)

சர்ச்சில் திருமணம் நடக்கும் போது கடத்துவதாக பிளான் பண்ணும தமிழ் ஒரு பொம்மை வடிவிலான நிஜ துப்பாக்கியுடன் ஒரே பைக்கில் ராமானுஜம்,மலர் இருவருடன் இஷ்பெல்லாவை கடத்தச் செல்கின்றார்கள் வழியில் தடங்கலாக நாயர் (மனோபாலா) டீக்கடையில்   சிரிப்பு என்கவுண்டர் போலிஸ் (ஆடுகளம் நரேன்) ஒருவரை சந்தித்து நேரம் கடக்கின்றது...

அப்புறம் ஊழல் போக்குவரத்து போலிஸ் (அருள்தாஸ்) ஒருவருடன் கொஞ்சம் நேரம் கடக்கின்றது....

இன்னும்  பிளாஷ்-பேக் கதையாக பெரிய நட்சத்திர ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள தன் தாயை தமிழ் சந்திப்பதில் கொஞ்ச நேரம் கடக்கின்றது...

கடைசியில் சர்ச்சில் கிருஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டு தமிழ் நண்பர்கள் ராமானுஜம்,மலருடன்  இஷபெல்லாவை கடத்த முயற்சிக்க......

முதல்  இரண்டு முறை நேரம் சரியில்லாமல் விதிவசத்தால் தோல்வி அடைவதாகவும் மூன்றாவது முறையாக தமிழ் எப்படி தன் காதலி இஷபெல்லாவை கரம் பிடிக்கின்றார் என்றும் ஹிப்பி லகிரியிடமிருந்து ரூபாய் முப்பது லட்சத்தை பெறுகின்றார் என்றும் சிம்புதேவன் அவர் சிரிக்க சிரிக்க காமெடியாக....? சொல்லியிருக்கின்றார்....

அதேநேரம்....அவருக்கே உரிய சமுதாயச் சாடலாகவும் நையாண்டித் தனமாகவும்  பெரிய தனியார் மருத்துவ மனைகளில் நடக்கும் கொள்ளைகளையும் போக்குவரத்து போலீசாரின் சில்லறை ஊழல்களையும் நக்கலாக  கிண்டலடிக்கின்றார் 

பொதுவாக பேண்டஸி படம் என்றாலே.........படம் பார்ப்பவர்களை அரைப் பைத்தியங்களாக நினைத்துக்கொண்டு கதை சொல்வார்கள் ஆனால்... இயக்குனர் சிம்புதேவன் அண்ணன் நம்மளை முழுப் பைத்தியமாக எண்ணி படம்காட்டுவதே............ஒரு கண்ணியும் மூனு களவானிகளும்

முதல்  கடத்தல் காட்சியில்.......கடத்தப் போகிற கதாநாயகன சாகடிக்கிறாயிங்க......

இரண்டாவது கடத்தல் காட்சியில்.....யாரோ சாகிறாங்க (எனக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோமோ? சரியா நியாபகம் வரல்ல...தாத்தா ரகவனா....?ஆங்)

மூன்றாவது கடத்தல் காட்சியில்............சிவபெருமான் தன் திருவிளையாடலாக ஐந்து பேரச் சாகடிக்கிறாருப்பா.... (அந்த ஐந்து பேர்....யார்? என்பதுதான் படத்தின் மிகப் பெரிய ட்விஸ்ட்) அவ்யிங்க யாருன்னு நான் சொல்லமாட்டேன்....நீங்களே போய் தெரிஞ்சிக்குங்க... ஹி...ஹி.....RUN LOLA RUN 


 

Monday, April 07, 2014

விஜயின் கத்தி படத்திற்கு வில்லங்கம் வருமா?


விஜய் நடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வளரும்  கத்தி படத்தின் தயாரிப்பாளர்கள் இருவர் ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் (Ayngaran International & Lyca Productions) ஆகும்

இலங்கையில் பிரபலமான லைக்கா செல் போன் சர்விஸ் நடத்தி வரும்  சுபாஸ்கரன்  இலங்கை அதிபர் ராஜபக்சேயின் நெருங்கிய கூட்டாளி ஆவார் 

ராஜபக்சே  மகன் நமல் ராஜபக்சேவும்  லைக்கா நிறுவனத்தில்  ஒரு பார்ட்னர் ஆவார்  

இதனால்  ஈழ தமிழ் உணர்வாளர்கள் அவர் தயாரிப்பில் கத்தி படத்தில் நடிக்கும்  விஜய் மீது அதிருப்தியில் உள்ளனர்

சமீபத்தில் ஈழத் தமிழர் உணர்வுக்கு  எதிரான இனம் படம் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி திரையரங்கை விட்டு ஓட்டம் பிடித்தது அதுபோல் விஜயின் கத்தி படத்திற்கும் வில்லங்கம் வரலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது


ஆனாலும்.....

  பெரிய ரசிகர் பட்டாளம் வைத்துள்ள மாஸ் நடிகர் விஜய் இதையெல்லாம் கத்தி போல் ஷார்ப்பாக செயல்பட்டு ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார் என்றும் பேசப்படுகின்றது 

உங்கள் பார்வையில்........

விஜயின் கத்தி படத்திற்கு வில்லங்கம் வருமா?




வாக்களித்து உண்மையை உலகுக்கு தெரியப்படுத்தும் அனைவருக்கும் நன்றி  



உண்மையான உலகநாயகன் ஜாக்கி சான்



ஜாக்கி சானின் 60-வது பிறந்தநாள் விழா  ஏப்ரல் 6 முதல் ஏப்ரல்  10 வரை 5 நாட்கள் பெய்ஜிங் மற்றும் ஷங்காயில் படு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது 

ஜாக்கியின்  பிறந்தநாள் சிறப்பு நிகழ்வாக.....பிளவு உதடுகளுடன் பிறந்த குழந்தைகளுக்கு உதவிடும் அவரது ஆப்பரேசன் ஸ்மைல் (Operation Smile) தொண்டு அமைப்புக்கு ஆதரவாக கலை நிகழ்ச்சி நடத்துகிறார்

 இப்பிறந்தநாள் விழாவில் அன்பும் -அமைதி-நட்பு- நல்லிணக்கமும் நிறைந்த நிகழ்வுகளாக உலகளவில் உள்ள அவரது ரசிகர்களுடன் ஜாக்கி ஷாங்காயில் அவரது ஜெ.சி.பிலிம் கேலரி (JC Film Gallery) -யில் மிகவும் நெருக்கமான சந்திப்பு நடத்துகின்றார்

இதற்கான  அறிவிப்பை ஜனவரி மாத இறுதியிலேயே அவரது மகன் முகநூல்,வலைதளங்களில் செய்திருந்தார்.......உலகில் எந்த மூலையில் உள்ள அவரது ரசிகர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது

உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும்  சீனாவுக்கு வந்து செல்லும்  செலவு தவிர அவரது ரசிகர்கள்  சீனாவில் பயணிக்கும் போது....உணவு, தங்குமிடம், உள்ளூர் பயணச் செலவு,நுழைவு சீட்டு....என்று அனைத்துச் செலவுகளையும் ஜாக்கியே அன்புடன் செய்கின்றார்

ஆறு வயதிலேயே அவரது பெற்றோர்களால் சீனா ட்ராமா அகடமியின் ஒபரா பள்ளியில் சேர்ந்து....இசை,நடனம்,பாராம்பரிய சண்டைப் பயிற்சி கற்றுக்கொண்டு...

திரைப்படங்களில் ஸ்டண்ட் வீரராக சின்ன பாத்திரங்களில் நடித்து தனது திறமையாலும் ஈடுபாட்டாலும் முன்னணி நடிகராக வளர்ந்த ஜாக்கி....

மார்ஷியல்  ஆர்ட்ஸ் பிதாமகன்  புரூஸ் லீ மரணத்திற்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்தவர் 


உலக அளவில் பல கோடி ரசிகர்களின் இதயத்திலும் இடம் பிடித்தவர்..... உண்மையான உலகநாயகன் ஜாக்கி சான்


Saturday, April 05, 2014

மான் கராத்தே படம் எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பு

எதிர்மறை விமர்சனங்களால் தத்தளித்தாலும்  மான் கராத்தே படத்தில் சிவ கார்த்திகேயனின் நடிப்பு வலைதளம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றது......

கஜினி,துப்பாக்கி..தந்த முருகதாஸின் பாக்ஸிங் விளையாட்டை அவமானப்படுத்தும் குப்பை கதை உள்ள படம் மான் கராத்தே என்று சொல்லும் DESIMARTINI ராஜீவ் மேனன் (But as an actor, he manages to deliver in whatever role he essays.) சிவ கார்த்திகேயன் நடிப்பை பாராட்டுகின்றார் 

மான் கராத்தே பெரிய வெற்றிப் படம் இல்லை என்றாலும் சிவ  கார்த்திகேயன் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த பொழுது போக்கு படம் என்கின்றது டெக்கான் குரோனிக்கல் (deccan chronicle)

அணிருத்தின் அற்புதமான இசை,சுகுமாரின் கண் கவரும் கேமரா போன்றவைகளுடன் சிவ கார்த்திகேயனின் வேடிக்கையும் நிறைந்த மான் கராத்தே ஒரு பார்க்கவேண்டிய காதல் பொழுது போக்குச் சித்திரம் என்கின்றது SIFY வலைதளம் 

கொளுத்தும் கோடை வெப்பத்தை தணிக்கும் சிவ கார்த்திகேயனின் குளுமையான காமெடிப் படம் மான் கராத்தே என்று தீர்ப்பு சொல்லும் BEHIND WOODS வலைதள விமர்சனக் குழு..........

சிறந்த  கதைக் குழுவிலிருந்து ஒரு மொக்கை கதையுள்ள படம் மான் கராத்தே என்றாலும் சிவ கார்த்திகேயன் பாடல்களில் தன் உடல் மொழியாலும் நடனத்தாலும் நல்ல விருந்து படைக்கின்றார் என்கின்றது MOVIE CROW

மான்  கராத்தே படத்தின் வெற்றி...நடிகர்  சிவ கார்த்திகேயனை ஒரு விளம்பர படத்திற்கு 3 நாட்கள் கால்-ஷீட்க்கு மட்டும் ரூ.1 கோடி சம்பளம் பெறும் அளவுக்கு உச்சத்தில்  கொண்டுசென்று உள்ளது என்று SOUND CAMERA ACTION வலைதளம் பாராட்டுகின்றது

ஆனால்...ட்விட்டர் வலைதளத்தில் அதிகம் படத்தைவிட சிவ  கார்த்திகேயனே  கலாய்க்கப் படுகின்றார்

:-) பிரபலம்:-) @SLovemani24 
காக்காவ கல்லால அடிக்கப்போற பொசிஷன்ல எல்லா பயலும் போட்டா போட்ரானுங்க, கேட்டா மான் கராத்தே வாம்! #கிர்ர்ர்ர்

வாழவந்தான்@sumusuresh 
தம்பி சினா கானா இன்னும் இருபடல்களில் இதே பாணியில் நடித்தால் அடுத்த விமலாகவோ,அடுத்த கார்த்தியாகவோ வரலாம் #மாத்தியோசி தம்பி #மான்கராத்தே

விச்சு @r_vichu 
இங்க பிரபலமில்லா விளையாட்டுன்னு பாக்ஸிங்கை இவ்ளோ கேவலப்படுத்திருக்க கூடாது. - மான் கராத்தே..

Gokila Honey@gokila_honey 
சிவகார்திகேயன கலாய்க்றதா நெனச்சு, மான் கராத்தே படத்துக்கு நல்லா விளம்பரம் பண்றாங்க ட்விட்டர்ல எல்லாரும் :P

பங்காளி @ckcbe 
மான் கராத்தே மானங்கெட்ட கராத்தேனு ஒரு கமெண்ட் ரெடி பண்ணி வெச்சிருந்தேன்.. கரெக்டாதான் இருக்கு

கனியன்@Kaniyen 
மான்கராத்தேவுக்கு எங்க தாத்தா சொன்ன விமர்சனம்! : "மான்கராத்தே : வீண்கராத்தே"!

Sajee-- சஜீ@sajee3556 
மான் கராத்தே,, சித்தன் வாக்கு சிவன் வாக்கு ,,குத்துங்க எசமான் குத்துங்க ,சிவா படமா தொட

சோமா பயில்வான்@Azhvarkadiyann 
டைரடக்கர்கள் சூரி மற்றும் சிகாவின் வாய்க்குப் பூட்டு போடுதல் நலம். டயலாக்கின்ற பேர்ல மொக்க தாங்க மிடியல. #மான்கராத்தே

உளவாளி @withkaran 
சிவகாவ கவுக்கனும்ன்னு விஜய்தான் முருகதாஸ்ட்ட இந்த கதைய சொல்லி அனுப்பியிருக்கனும்

Mr.லொள்ளு தாதா @lollu_party 
காமெடிங்குற பேர்ல சந்தானம் போடுற மொக்கைக்கு மான் கராத்தே எவ்வளவோ பெட்டர் நல்லா சிரிக்கலாம்



உங்கள் பார்வையில்...........
மான் கராத்தே- படம் எப்படி இருக்கு....?


 மான் கராத்தே -படத்தில் உங்களுக்கு பிடித்தவைகள்....?(*select multiple choice)

வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி........முடிவு-10/4/2014

http://parithimuthurasan.blogspot.in/2014/04/maankarate-vimarsanam.html

மான் கராத்தே-சினிமா விமர்சனம்  
(இதுவரை வாசிக்காதவர்களுக்காக.....)
 

Friday, April 04, 2014

மான் கராத்தே-சினிமா விமர்சனம்

சிவ கார்த்திகேயனின்  மான் கராத்தே படம் அவரை ரஜினி,கமல்,விஜய்,அஜித்.. நட்சத்திர நடிகர்கள் வரிசையில் இடம் பிடிக்கச் செய்யுமா? என்ற கேள்விக்கு....

மான் கராத்தே படத்தின் கதையாக..........பூனையை புலியாக காட்டும் காதலும் காமெடியும்  கலந்த பேண்டஸிக் கதை 

சந்திரகிரி மலைக்கு விடுமுறை கொண்டாடச் செல்லும் சத்வம் கம்பெனி ஐ.டி.ஊழியர்கள் சாண்டி (சதீஷ்) யும் அவரது நான்கு நண்பர்கள்-நண்பிகள் ஒரு அபூர்வ சித்தரை சந்தித்து கிண்டலாக..... வரும் 2014 விடுமுறை தினமான ஆயுத பூஜை தேதியிட்ட தினத்தந்தி நாளிதழை வரமாக கேட்க...அவரும் அந்த நாளிதழை மந்திரத்தால் வரவழைத்துக் கொடுக்கின்றார் 

அதில் சொல்லப்பட்டது போல் அவர்கள் கம்பெனி மூடப்படுகிறது... வேலையிழந்த அவர்கள் பணம் சம்பாதிக்க அந்த தினத்தந்தி நாளிதழில் சொல்லியிருப்பது போல்........ ஒரு குத்துச் சண்டை டோர்ணமேன்டில் அவர்கள் ஆதரிக்கும் ராயபுரம் பீட்டர் வெல்லுவார் என்றும் அதனால் அவர்களுக்கு 2 கோடி பணம் கிடைக்கும்...என்ற முன் நிகழ்வை அறிந்து....

குத்துச்சண்டை பற்றி எதுவும் தெரியாத  ராயபுரம் பீட்டர் (சிவகார்த்திகேயன்)     உடன் அக்ரிமென்ட் போட்டு களம் இறக்குகின்றார்கள் பல லட்சம் அவருக்கு செலவு செய்வது மட்டுமில்லாமல் அவர் காதலிக்கும் குத்துச் சண்டை ரசிகை யாழினி (ஹன்ஷிகா) யின் காதலுக்கும் உதவுகின்றார்கள்

ஆனால்..கடைசி நேரத்தில் உண்மையான குத்துச்சண்டை வீரர் கில்லர் பீட்டர் (வம்சி கிருஷ்ணா) டோர்ணமேன்டில் களம் இறங்க.........ராயபுரம் பீட்டருக்கு ஆதரவாக இருந்த சாண்டியும் அவரது நண்பர்களும் சூதாக கில்லர் பீட்டருடன் சேர்ந்து கொள்ள...........

சங்கி மங்கி குங்பூ போல் கோமாளித்தனமான குத்துச்சண்டை (மான் கராத்தே) கண்டுபிடித்த அப்பாவி ராயபுரம்  பீட்டர் அந்த டோர்ணமென்ட் கடைசி சுற்றில் கில்லர் பீட்டரை ஜெயித்தாரா...? யாழினியுடன் அவரது காதல் வென்றதா...? என்பதே.....

ஆக...மொக்கையான ஏ.ஆர்.முருகதாஸின் கதையை காமெடி காட்சிகளாலும் வயறு குழுங்க  சிரிக்க வைக்கும் நறுக் சுறுக் சிரிப்பு வசனங்களாலும் பட்டை தீட்டிய இயக்குனர் திருக்குமரன் உழைப்பு மான் கராத்தே படத்திற்கு 25 % என்றால்.... 

தனக்கென்று நக்கலும் விக்கலும் கலந்த  புதுப் பானி, தனிப்பாணி நடிப்பால்  75% படத்தை தோளில் சுமப்பது சிவகார்த்திகேயன் ஆகும் 

சிவ கார்த்திகேயன்..... கொஞ்சம் தவறினாலும் சொதப்பலாகக் கூடிய மான் கராத்தே கதையில் தனது நடிப்பால் வெற்றிப்படமாக்கியது  இவரது நடிப்பு-ரஜினி,கமல்,விஜய்,அஜித்...கலவையாக அதே நேரம் வித்தியாசமாகவும் உள்ளது 

ஹன்ஷிகா.......அம்மணிக்கு உடல் மெலிந்தாலும் இரண்டு கண்ணங்களும்   புசு..புசு.. என்று அப்படியே இருக்கின்றன  ........ம்.. யாருக்கோ கொடுத்து வைக்கவில்லை.. ரெப்ரி டைகர் டய்சனாக கொஞ்ச நேரமே வந்தாலும் சூரியின் அலப்பறை அட்டகாசம் 

அனிருத் இசையில் பாடல்கள் படத்தில் சரியான இடத்தில் வருவதால் கேட்பது போல் உள்ளது ஓபன் த டாஸ்மாக்...பாடல் குத்துப்பாட்டுரகம் மாஞ்சா பாடலும் டார்லிங் டம்பக்கும்...படத்தில் சிச்சுவேசன் சாங் ரகம் 

சுகுமார் ஒளிப்பதிவில் பாடல்கள் குளுமையாக உள்ளன மலை,அருவி,சித்தர்  காட்சிகள் அருமை...குத்துச்சண்டை டோர்ணமென்ட் காட்சிகள் நல்ல படபிடிப்பு எடிட்டிங் அஸ்வின் பாராட்டுக்குரியவர் 

ஆக...மொக்கை கதையை உள்ள   படத்தை  தன் லைட்-வெயிட் நடிப்பால் தோளில் சுமந்து பார்வையாளர்களை கலகலப்பாக்கிய  சிவ கார்த்திகேயன் மான் கராத்தே படத்தின் மூலம் ரஜினி,கமல்,விஜய், அஜித்..  நட்சத்திர நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்துவிட்டார் என்றுதான் சொல்வீர்கள் நீங்கள் அவர்களது தீவிர ரசிகர்களாக இல்லையென்றால்.......
நான் படம் பார்த்த மாலில் உள்ள இரண்டு திரையரங்குகளில்  மான் கராத்தே படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவும் அம்புட்டும் சிவ கார்த்திகேயனை திரையில் காணும் போதெல்லாம் விசிலடிக்கும் ரசிகர்  கூட்டமாகவும்  இருந்ததே இதற்கு சாட்சி.............. 

உங்கள் பார்வையில்.............
நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால்
 மான் கராத்தே படம் எப்படி இருக்கு....?


வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி....

UA-32876358-1