google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: June 2014

Monday, June 30, 2014

விஜய்-யா அடுத்த சூப்பர் ஸ்டார்? கோர்ட்டுக்கு போகும் அஜித் ரசிகர்கள்


ஒரு வாரஇதழ் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கருத்துக்கணிப்பு நடத்தி பட்டம் கொடுக்க...... ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களும் தல அஜித் ரசிகர்களும் சமுக வலைதளங்களில் யுத்தம் நடத்திக் கொண்டிருக்க....

அது.........சமுதாயத்தில் அவ்வப்போது சர்ச்சை உருவாக்கும் வார இதழ் என்ற பெயர் பெற்றது ..

ஒருமுறை அன்று பின்தங்கி இருந்து இன்று முன்னேறி உள்ள   ஒரு குறிப்பிட்ட  சாதியினரை ஒரு உயர்சாதி எழுத்தாளரை வைத்து கீழ்த்தரமாக தொடர்கதை எழுத...அந்தச்  சாதியினர் அப்பத்திரிகை  அலுவலகம் முன்பு போராட்டம் செய்ய .....பாதியில் நின்று போனது அந்த தொடர்.


சமிபத்தில்கூட  ஒரு பிரபல நடிகையை அவர் சார்ந்த கட்சி தலைவருடன் இணைத்து இன்னொரு மணியம்மை என்று தரக்குறைவாக எழுதி.....கட்சி தொண்டர்கள் போராட்டம்,முற்றுகை செய்ய மன்னிப்பு கேட்டது அந்த வார இதழ் குழுமத்தை சார்ந்த பத்திரிகை.....

இப்போது  சும்மா கிடக்கும் சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்றக் கணக்கில் சும்மாவே வலைதளங்களில் சேற்றை அள்ளித் தெளிக்கும்  அஜித்-விஜய் ரசிகர்களுக்குள் தீமூட்டி விட்டுள்ளது அது நடத்திய அடுத்த சூப்பர் ஸ்டார் கருத்துக்கணிப்பு 

உண்மையில் அஜித்-க்கே ஆதரவு என்றும் அந்த வார இதழ் பணத்திற்காக விஜய்-க்கு அந்தப் பட்டம் கொடுத்ததாகவும் சமுக வலைதளங்களில் கொந்தளிக்கும் அஜித் ரசிகர்கள் இன்று பல குழுக்களாக கூடி சமுதாயத்தில் சச்சரவு ஏற்படுத்திய அந்த வார இதழ் மீது சட்டப்படி கோர்ட் நடவடிக்கை எடுக்க உள்ளதாக முகநூல் மற்றும் ட்விட்டர் வலைதளங்களில் செய்தி தீயாக எரிகிறது  

இது போன்ற சமூகப் பிரச்சனை ஏற்படுத்தும் அந்தவார இதழை அரசே நடவடிக்கை எடுத்து சமுக நலன் கருதி தடை செய்ய வேண்டும் என்று பலமான எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்திலும் கிசு கிசுக்கப்படுகிறது 

 விஜய்-யா அடுத்த சூப்பர் ஸ்டார்? என்று கேட்கும் அஜித் ரசிகர்கள் உண்மையில் கோர்ட்டுக்கு போவார்களா .........? என்பது இன்னும் சில நாளில் தெரியும்  

நண்பர்களே! உங்கள் பார்வையில்......இது போன்ற சமுக பயனற்ற கருத்துக்கணிப்பு நடத்திய அந்த வார இதழ் மீது சட்ட நடவடிக்கை தேவையா?

online survey


Sunday, June 29, 2014

அதிதி-சினிமா விமர்சனம்

ஹாலிவுட் ‘Butterfly on a Wheel’ படம் மாலிவுட்டில் Cocktail என்று சக்கபோடு போட்டு கோலிவுட்டில் அதிதி-யாக மாறி வந்துள்ள  கில்மா  மாதிரி தெரியாத உப்புமா திகில் திரைப்படம்.....

தான் வேலை செய்யும் நிறுவனத்தில் ப்ரொஜெக்ட் மானேஜராக  இருக்கும் மதியழகனுக்கு (நந்தா)  தொழில் ரீதியாகவும் நிறைய எதிரிகள் 

ஒருநாள் மதி  தன் மனைவி வாசுகி (அனன்யா) யுடன் காரில் போகும்போது அறிமுகமில்லாத ஒருவனுக்கு (நிகேஷ் ராம்)  லிப்ட் கொடுக்கிறார்கள் 

சிறிது நேரம் சிரித்து பேசிக்கொண்டு வந்த வழிப்போக்கன்  திடிரென்று துப்பாக்கி முனையில் மதி-வாசுகி தம்பதியரை மிரட்டுகிறான் அவர்களது ஆசை மகள் பவி கடத்தப்பட்டதாகவும் அவன் சொல்கிறபடி அவர்கள் கேட்கவில்லை  என்றால் அவர்களது செல்லமகள் கொல்லப்படுவாள் என்று.......

அழையாத விருந்தாளி(அதிதி)யாக வந்தவன்  தம்பதியரை பாடாய் படுத்துகிறான் மதியின் வங்கிகணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுக்க வைத்து தீயிட்டு கொளுத்தி ஆற்றில் வீசுகிறான்   மதி  வேலை செய்யும் கம்பெனி ரகசியங்களை எதிரி கம்பெனிகளுக்கு தெரியப் படுத்துகிறான்   

கடைசியாக மதியின்   முதலாளியை மதியை வைத்தே  கொல்லவும் உத்தரவிடுகிறான் ஆனால் அங்கே மதிக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது 
அவனது கள்ளக் காதலியின் உருவத்தில்........

வழிப்போக்கனாக வந்த அதிதி ஏன் மதியை இப்படி கஷ்டப்படுத்தினான்?  என்பதை திரையில் காணுங்கள்

மற்றபடி நடிகர்கள் நடிகைகள் நடிப்பை விட திறமையான  திகிலூட்டும் திரைக்கதையாலும் நச் வசனங்களாலும்  இயக்குனர் பரதன் அதிதி படத்தை உயிரோட்டமாக காட்டுகிறார் ஆனாலும் கள்ளக் காதலை மையமாக வைத்து வந்துள்ள  அதிதி திரைப்படம்.... தமிழுக்கும் ஓர் அழையாத விருந்தாளி

தம்பி ராமையாவின் காமெடி காட்சிகள் மற்றும் குத்துப்பாட்டு படத்தின் வேகத்தடைகள் பின்னணி இசை பாடல்கள் ஒளிப்பதிவு எதுவும் அதிதிக்கு உதவவில்லை  

அதிதி-திகில் பட விரும்பிகளுக்கு மட்டும்

 

Saturday, June 28, 2014

விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை காசு கொடுத்து வாங்கினாரா?


குமுதம் வாரஇதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் உண்மையில் அஜித்-தான்  அதிக வாக்குகள் பெற்றதாகவும் விஜய் அதை காசு கொடுத்து பறித்துக் கொண்டார் என்றும் சமுக வலைதளங்களில் இணைய யுத்தம் நடக்கிறது....

உண்மையில் நமது பிளாக்கில் வைத்த கருத்துக் கணிப்பில் கூட விஜய் அதிக வாக்குகள் பெற்று குமுதம் வாக்கெடுப்பு சரியே என்று தீர்ப்பளித்தார்கள்....

பொதுவாக கோலிவுட் நடிகர்களில் விஜய்-அஜித் இருவர் பற்றிய செய்திகளே அதிகம் வாசிக்கப்படுவதால் வலைதளங்கள்,பத்திரிகை ஊடகங்கள் அவர்கள் பற்றிய செய்திக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன

முன்பு அரசியல்வாதிகள்தான் இப்படி தூற்றுவார்கள் தேர்தல்காலங்களில் சில கட்சிகள் தங்கள் பணபலத்தால் பத்திரிகைகளை தங்களுக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு வெளியிட செய்து மக்களை குழப்புவார்கள் அதனால் அவைகள் தடை செய்யப்பட்டன

சினிமாவாதிகளும் இப்படிசில பத்திரிகைகள் வலைதளங்கள் நடத்தும் கருத்துக்கணிப்புகளை ஆதரிப்பது..........இனி சமுதாய நலனை முன்னிட்டு சினிமா பிரபலங்களைப் பற்றி கருத்துக்கணிப்பு வெளியிட அரசு தடை செய்ய வேண்டும்  இதனால் சமுதாயத்தில் சினிமா ரசிகர்களால் எழும் பிரச்சனை குறையும் 

அப்படியே......
சினிமா நடிகர்கள் இனி சூப்பர் ஸ்டார்,தல,இளைய தளபதி...போன்ற  பட்டப் பெயருடன் அழைக்கப்படுவதையும் தடை செய்யவேண்டும்

சினிமா நடிகர்கள்.......
முதலில் திரையில் நடிக்கிறார்கள் ...பிறகு சமுதாயத்தில் நடிக்கிறார்கள் கடைசியில் நாட்டை ஆளும் ஆசையில் துடிக்கிறார்கள் 


சி.பி.செந்தில்குமார்@senthilcp 
என்னை சூப்பர் ஸ்டாராக தேர்ந்தெடுத்த குமுதத்திற்கு நன்றி _ விஜய் # உண்மையை உலகுக்கு உணர்த்திய தினமணி க்கு நன்றி


நான் சன்னியாசி © @iammoorthy_p 

செவுத்துல ஒழுங்கா புடிச்சி பிஸ் அடிக்க தெரியாதவனுக்கு எப்படிடா சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைக்கும்னு நினைச்சன். விளக்கம் கிடைச்சிருச்சி

நாகசோதி நாகமணி @nagajothin
என்னை சூப்பர் ஸ்டாராக தேர்ந்தெடுத்த குமுதத்திற்கு நன்றி -விஜய்! # கடைசியில் அது பவர் ஸ்டார் என்று உணர்த்திய குமுதத்திற்கு மறுபடியும் நன்றி!


balaji@arunbalaji006 h
சூப்பர் ஸ்டார் யார் ? தமிழ் சினிமா வின் பல்வேறு மூட பழக்கங்களில் இதுவும் ஒன்று

புலிக்குட்டி தம்பி @Onlyappu 
யோவ் போயா..அதல்லா முடியாது நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரு..போங்கயா வெப்சைட்ல போட்டதெல்லா நான் நம்பபட்ட..முண்டாசுபட்டி முனிஷ்காந்த் மூமண்ட்.

சிவா :)@siva_sankar 
யாரு,மொட்டமாடி கல்பனாவா? ஏம்மா அந்த வீடே உன்னது இல்லையாமே? #நடிகர் விஜய்யும் குமுதமும் சேர்ந்து நடத்திய அடுத்த சூப்பர் ஸ்டார் நாடகம் அம்பலம்

வக்கீல் வரிப்புலி ்@karaiyaan 
குமுதம் + விஜய் -> சூப்பர் ஸ்டார் பட்டம். இததான் சொந்த செலவுல சூனியம்ன்னு சொல்றாய்ங்களோ!

@am pasupathi@pasupathicivil 
கேட்டிருந்தால் சூப்பர் ஸ்டார் பட்டம் என்ன, எங்க 'தல', 'தலை'யே கொடுத்திருப்பாரேடா...! இப்படி அல்ப்பமா நடந்துகிட்டீங்கலேடா அணில் குஞ்சுகளா."

ராஸ்கோலு@RazKoLu 
ஏம்பா ஏ நாட்ல போராட எத்தனையோ பிரச்சன இருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்னதுக்கெல்லாமா போராடுவாங்க. உஸ்ஸ்ஸ்

நல்லவன் @Paasakkaran 
குமுதம் சூப்பர் ஸ்டார் பட்டம் பயபுள்ள பொய் சொல்ட்டான் போல ஏன்டா ஊருக்குள்ள இப்பிடித்தான் சொல்லீட்டு சுத்துறியா?

நையாண்டி நைனா@naiyaandinaina 
ஆனா உலகத்திலேயே சூப்பர் ஸ்டார் பட்டத்கு அத்தாரிட்டியே குமுதம் தான்னு நம்பறான் பாரு, அவனோட மூளை இங்க இருக்க வேண்டிய மூளையே அல்ல...
பட்டம் விற்கப்படும்
நாட்டி நாரதர்®@mpgiri 
இங்கு நல்ல சூப்பர்ஸ்டார் பட்டம் விற்கப்படும்


• »புரட்சி புயல்« •@itskabi 
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று குமுதம் அறிவித்ததை தொடர்ந்து,விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 

அ ல் டா ப் பு - @altaappu 
அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய்க்கு போனதால், இன்று முதல் ரஜினியை 'இளைய தளபதி ரஜினி' என அன்போடு அழைக்கப்படுவார்


  கர்ணா @karna_sakthi 
நடிகனுங்க கிட்ட மைக் குடுத்து என்னத்தையா பேச சொல்றிங்க போய் பொழப்ப பாருங்கன்னு சொன்ன கவுண்டமணி தான்யா நிஜ சூப்பர்ஸ்டார்
 




Friday, June 27, 2014

சைவம்-சினிமா விமர்சனம்


விஜய்,அஜித்,விக்ரம்....போன்ற மாஸ் ஹீரோக்களை நம்பி அங்கே இங்கே சுட்டு படம் காட்டிய இயக்குனர் ஏ.எல்.விஜய் சைவம் படம் மூலம் தனது ஒரிஜினல் கதையை நம்பி களம் இறங்கியுள்ளார்.......

மனிதர்-விலங்கு உறவு பற்றிய இதயத்தை வருடும் புதியச் செய்தியை உலகுக்கு சொல்வதில் வெற்றிபெற்றுள்ளார்  

படம்  ஆரம்பிக்கும்போது இயக்குனர் விஜய்...... இப்படம் சைவ உணவு ஆதரவாளர்களுக்கும் விலங்குகள் பலியிடுவதை எதிர்ப்பவர்களுக்கும் அர்பணிப்பு என்று செய்தி போடுவதிலையே பார்வையாளர்களை ஒரு புதிய கதைக்களத்திற்கு தயார் செய்துவிடுகிறார். 

இது அசைவப் பிரியர்களுக்கும் மூட நம்பிக்கையாளர்களுக்கும் அலர்ஜியாக தோன்றினாலும் இயக்குனர் விஜயின் தனித்துவமான கதை சொல்லும் போக்கில் சமாதானமாகிவிடுவார்கள் 


கோட்டையூர் கிராமத்தில்  வாழும்  அசைவப்  பிரியரான கதிரேசன் (நாசர்) தன் வீட்டில் வளர்க்கும் ஆடு,மாடு, கோழிகளுக்கு மனிதப் பெயர்களை வைத்து பாசமுடன் அழைப்பவர் அவருடன் வசிக்கும்  பேத்தி தமிழ்செல்வி (சாரா) ஒரு சேவலை பாப்பா என்று பெயர் வைத்து பாசமுடன் பழகுகிறாள்

பெரியவர்  கதிரேசனின்  வெளியூரில் வசிக்கும் மொத்த குடும்பமும் அவரது கிராமத்து கோயில் திருவிழாவுக்காக  ஓன்று சேர்கிறார்கள் அவர்களது அன்றாட நிகழ்வுகள், யதார்த்தமான செயல்கள், காதல்....என்று நகரும் படம்

தங்கள் கஷ்டத்துக்கு காரணம் தங்கள் குல தெய்வ கருப்பசாமி கோயிலுக்கு செய்யவேண்டிய நேர்த்திக்கடன் (சேவல் பலியிடல்) செய்யாததும் கோயிலுக்கு நேர்ந்துவிட்ட சேவலை வீட்டில் வளர்ப்பது தவறு என்றும்  தீர்மானித்து சிறுமி தமிழ்செல்வி உயிராக நினைக்கும் (பாப்பா)  சேவலை பலியிட நினைக்கிறார்கள் 

தமிழ்செல்வி  சேவலை காப்பாற்ற யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைத்து அவர்கள் மணம் மாறச் செய்யும் முயற்சி வெற்றி பெற்றதா...? என்பதை திரையில் காணுங்கள் 

இயக்குனர் விஜய் இந்த சைவ-அசைவ பிரச்னையை சைவம் படத்தின் மூலம் திறம்படக் கையாண்டு அசைவப் பிரியர்களையும் விரும்பும் வண்ணம் படம் காட்டியுள்ளார் ஒருபுறம் மூடநம்பிக்கையையும் நையாண்டியாக  தோலுரிக்கிறார்

சைவம்-படத்தில் நிறைய கதாப்பாத்திரங்கள் நாசர் உருவத்தாலும் உணர்வுப் பூர்வமான நடிப்பாலும் கிராமத்து தாத்தாவாகவே வாழ்ந்துள்ளார் 

தெய்வ திருமகள் படத்தை விட பல மடங்கு சாரா ஆத்மார்த்தமான நடிப்புடன் சைவம் படத்தில் மிளிர்கிறாள் சரவனனாக ஆங்கிலம் பேசி நடிக்கும் சிறுவன் ராய் பால் முதல்தரமான நடிப்பால் நம் மனதில் இடம்பிடிக்கிறான் 

செந்தில்  (பாஷா)-அபிராமி (துவரா தேசாய்) காதல் ரசிக்கும்படி உள்ளது இன்னும் கவுசல்யா,ரவி,ராஜலக்ஷ்மி, சுரேஷ்,சண்முகராஜன்.... அவரவர் கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர் 

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை கிராமத்தை நோக்கிய ஓர் இசைப்பயணம் தென்றலென நம் இதயத்தை வருடுகிறது பாடல்களில் அழகே அழகு...பாடல் இனிமையாக உள்ளது 

நிரவ் ஷாவின் ஒளிப்பதிவில்........கிராமத்து அழகை அவரது கேமரா வன்னத்தூரிகையாக காட்சிக்கு காட்சி உயிரோட்டமாக வரைந்து காட்டியுள்ளது ஒரே வீட்டினுள் நடக்கும் கதையை அது தெரியாத வண்ணம் படம் பிடித்துள்ளார்

இதுவரை காப்பி மன்னன் என்று கேலிசெயயப்ப்ட்ட இயக்குனர் விஜய் சைவம்  படத்தின் மூலம் தனது சொந்த அனுபவக்  கதையால் தனித்துவமாக போற்றப்படுவார்

சைவ-அசைவ பிரியர்கள் யாராக இருந்தாலும் சைவம் படத்தை குடும்பத்துடன் பார்த்து கொண்டாடலாம் 

என் பார்வையில்........படம் நன்று 
படம் பார்த்தவர்களின் மதிப்பீடு..................



படம் பார்த்துவிட்டு வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.............


Thursday, June 26, 2014

விஜய்-அஜித் பற்றி முருகதாஸ் சொல்லும் ரகசியம்


விஜய்-அஜித் இரண்டு மாஸ் ஹீரோக்கள் இருவரையும் வைத்து  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்  படம் இயக்க தயாராக உள்ளதாக சொல்கிறார் மேலும் கத்தி படம் தயாரிப்பது ஒரு சிங்கள நிறுவனம் அல்ல என்ற விளக்கமும்....









































தமிழுக்கும்  தமிழர் இனத்துக்கும் யார் எதிரிகளோ அவர்கள் எனக்கும் விஜய்க்கும் எதிரிகள் என்று முழங்குகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படம் தயாரிக்கும் LYCA நிறுவனம் ஒரு சிங்கள நிறுவனம் அல்ல என்றும் அவர்கள்  ஈழத்தமிழர்கள் என்றும் மறுக்கிறார் 



































விஜயின் நடிப்பு தவிர கத்தி  படத்தின் பிளஸ் பாயிண்டாக....... -சமந்தாவின் சிரித்த முகம் 
-அனிருத் இசை 
-ஜார்ஜின் ஒளிப்பதிவு 
-இளையராஜாவின் கலை 
-ஆக்ஷனுக்கு அனல் அரசு ...என்று நிறைய பேரின் உழைப்பு உள்ளது என்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 











































துப்பாக்கி  படம் முடிந்ததும் அஜித்தை வைத்து அடுத்த படம் எடுக்க கதையெல்லாம் தயார் செய்ததாகவும் ஆனாலும் சில காரணங்களால் தள்ளிப்போனதாக சொல்லும் இயக்குனர் முருகதாஸ் இப்போதுகூட அவரிடம் விஜய்-அஜித் இணைந்து நடிக்க நல்ல கதை உள்ளதாக கூறுகிறார் 

நண்பர்களே  இயக்குனர் வெங்கட்பிரபுவும் விஜய்-அஜித் இணைந்து நடிக்க தீவிர முயற்சியில்  இருப்பதாகவும் முயற்சி செய்வதாகவும் சொல்கிறார் ஆனால் விஜய்-அஜித் ரசிகர்கள் இருவரும் வலைதளங்களில் போடும் சண்டை கூவத்தைவிட நாறுகிறது 

அதனால்....விஜய்-அஜித் ரசிகசிகாமனிகள்  நட்புடன் அமைதிகாத்து சினிமா வேறு வாழ்க்கை வேறு என்பதை உணர்ந்து ஒற்றுமையாக செயல்பட நமது பிளாக் அன்புடன் வேண்டுகிறது.....



thanks-posters by anandavikadan


Tuesday, June 24, 2014

கவியரசர் கண்ணதாசன்-தெரியாத சில உண்மைகள்


நடுநிலை பள்ளிப் படிப்பைக்கூட தொடராத கவியரசர் கண்ணதாசன் ஆங்கிலத்திலும் வார்த்தை விளையாட்டு வல்லமை கொண்டவர் என்பது தெரியுமா? அவரது பாடல்களில்  சாக்ரடிஸ்  தத்துவம்  ஒளிந்திருந்தன ஷேக்ஸ்பியரின் சில நாடக வரிகள் துள்ளிக்குதித்தன......

ஆங்கில கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் மகள் கவிதாயினி சென்னையில் ஒரு நட்சத்திர தங்கும்விடுதியில் இருப்பதை அறிந்த கவியரசர் சந்திக்க நினைத்து அனுமதி மறுக்கப்பட........

கவியரசர் விடுதி ஊழியரிடம் ஒரு துண்டு சீட்டில் ஆங்கிலத்தில் எழுதி கொடுத்து அனுமதி கேட்டு அனுப்பினார்.அதைப் பார்த்த அடுத்த நொடியே அந்த அம்மையாரும் அறையைவிட்டு வெளியே வந்து மணிக்கணக்காக கவிஞரிடம் உரையாடினார் 

அப்படி  என்னதான் ஆங்கிலத்தில் கவியரசர் எழுதியிருந்தார்.....
"An Outstanding Tamil Poet is Standing Outside"......என்றுதான்.

எந்த கவிஞரும் இன்னொரு கவிஞரின் தாக்கத்தில் தான் எழுதியதை ஒப்புக்கொண்டதில்லை ஆனால் கவியரசர் சென்னை வானொலி தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் தான் ஷேக்ஸ்பியரின் மக்பெத் (Macbeth) நாடக வரிகள்..........
O sleep! O gentle sleep!
Nature’s soft nurse, how have I frighted thee,
That thou no more wilt weigh my eyelids down
And steep my senses in forgetfulness? .........என்பதின் தாக்கத்தில் உருவானதே தனது பாடல்.............


தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்....என்று பெருமையாக சொல்லிக்கொண்டார் 


உலகதத்துவஞானி சாக்ரடிஸ் வரிகள்.......உன்னையே அறிவாய் என்பதின் முழு அர்த்தத்தையும்........

உன்னையறிந்தால் நீ 
உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் 

தலை வணங்காமல் நீ வாழலாம்......என்ற கவியரசரின் பாடலில் ஒளிந்திருப்பதையும் ஒரு மாபெரும் தத்துவத்தை எந்த ஒரு தமிழ் பாமரரும் பாடி மகிழச் செய்த கவியரசர் கண்ணதாசரே..........

நீ காவியத்தாயின் 
இளையமகன் மட்டுமல்ல
பாமரசாதியில் தனிமனிதன் 
நீ  கவிதை படைத்ததினால்........
உன் பேர் கவிதைக் கடவுள் 


 

Monday, June 23, 2014

மெட்ராஸ்-பட டிரெயிலர் எப்படியிருக்கு?

 அட்டக்கத்தி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி-கேத்தரின் தெரசா இணைந்து நடிக்கும் படம்.......மெட்ராஸ் 


வட சென்னை வாழ் மக்களின் அன்றாட வாழ்வியல்,அரசியல், பிரச்சனைகளை அங்கே வாழும் சாதாரண மனிதனாக கார்த்தி நடிக்க தனக்கே உரிய யதார்த்தமாக படம் காட்டுவதாக இயக்குனர் ரஞ்சித் சொல்கிறார்



அவர் சொன்ன யதார்த்தம் மெட்ராஸ் படக் காணொளியில் பிரதிபலிப்பதாக இன்றுசமுக வலைதளங்களில் பாராட்டப்படுகிறது 

நண்பர்களே! உங்கள் பார்வையில்...........

online surveys

வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி 



Sunday, June 22, 2014

விஜய்-குமுதம் சொன்னது சரியாப் போச்சு?


விஜய்,அஜித்,சூர்யா,தனுஷ்,விக்ரம்,சிம்பு...இவர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற குமுதம் கணிப்பு சரியா? என்று நமது பிளாக்கில் வைத்த கருத்துக்கணிப்பில்..............

விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் 






வாக்களித்த அனைவருக்கும் நன்றி.......... 


Saturday, June 21, 2014

கத்தி பர்ஸ்ட் லுக் கசிந்ததா?


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் படத்தின் கத்தி படத்தின் பர்ஸ்ட்-லுக் போஸ்டர் வெளியீடு விஜயின் பிறந்தநாள் 22-அன்று  12 Am மணிக்கு விஜயின் அதிகாரப்பூர்வமான பேன் பேஜ் @vijay_cjv -ல் மட்டுமே வெளியிடப்படும் என்று அதன் இயக்குனர் முருகதாஸ் ட்விட் செய்துள்ளார்.........


அதற்கிடையில் சமுக வலைத்தளமான ட்விட்டரில் இதுதான் கத்தி பர்ஸ்ட்-லுக் போஸ்டர் என்று வித்தியாசமான படங்கள் வருகின்றன 
கத்தி படத்தின் கதை கசிந்தது போல் இதுவும் கசிந்ததா....? அல்லது இதுவும் கத்தி படத்தின் புரோமோஷன் டெக்னிக்......கா?    



 





































ஏனென்றால் முருகதாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் Kindly request all the fans not to post snap shots of the posters before that........என்று கேட்டுள்ளார் அதனால் இது சில ரசிகர்கள் செய்த வேலையாகவும் இருக்கலாம் 



அய்யயோ...இது டபாக்கூராகவும் இருக்கலாம்  



அதுக்குள்ள  சில உத்தமவில்லன்கள் ஆரம்பிச்சிட்டாயிங்கப்பா...
இது காப்பி & பேஸ்ட் என்று ........ 


கத்தி பட பர்ஸ்ட்-லுக் போஸ்டர் எப்படியிருக்கு?


கடைசி  செய்தி................
கசிந்ததாக சொல்லப்பட்ட விஜய்-யின்  கத்தி பட பர்ஸ்ட்-லுக் போஸ்டர் உண்மையாகிவிட்டது ..........
சரி...உங்க கருத்தை சொல்லிவிட்டு போங்கள்..........

web surveys

  வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...............

Thursday, June 19, 2014

வடகறி-சினிமா விமர்சனம்


ஒரு செல் போனை வைத்து காதலும் காமெடியுமாக முதல்பாதியும் போலி மருந்து பற்றிய த்திரிலிங் கலந்த ட்விஸ்ட்கள் உள்ள பின்பாதியும் ஜெய்-சுவாதியுடன் சரவண ராஜன் செய்த வடகறி......... போரடிக்காத பொழுதுபோக்கு படம்

ஒரு ஐ-போனை கண்டெடுத்த ஒருவன் அதை உரியவரிடம் ஒப்படைக்க நினைக்கும் போது சில சங்கடங்களில் மாட்டிக்கொண்டு எப்படி மீள்கிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்கிறார் வடகறி இயக்குனர்

தன் நண்பன் வடகறி (RJ பாலாஜி) தூண்டுதலால்  ஐ-போன் வைத்திருப்பவர் களைத்தான் பெண்கள் காதலிப்பார்கள் என்ற எண்ணத்துடன் இருக்கும் மெடிக்கல் ரெப் சதிஷ் (ஜெய்)  நவீனா (சுவாதி) வை விரட்டி விரட்டி காதலிக்க.. சந்தர்ப்பவசமாக ஒரு டீக்கடையில் ஒரு ஐ-போனை கண்டெடுக்கிறான்

அவனது ஆட்டோ ஓட்டும் அண்ணன் அருள்தாஸ் ஒரு முறை தன் ஆட்டோவில் கண்டெடுக்கும் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்து போலீசாரிடம் பரிசு வாங்கும் நல்லவர் அதனால் மனம்திருந்திய சதிஷ் தான் கண்டெடுத்த ஐ-போனை உரியவரிடம் ஒப்படைக்க போகிறான்.....

அங்கே....போலி மருந்துகளையும் காலாவதியான மருந்துகளையும் மார்கெட்டிங் செய்யும் ஒரு சமுக விரோதி கூட்டத்திடம்  சதீஷ் தவறுதலாக  மாட்டிக்கொள்கிறான்

சதிஷ்தான் கூட்டத் தலைவன் ரவிசங்கர் என்று தயாளன் (அஜய் ராஜ்) என்ற இன்னொரு கூட்டம்  அவன் நண்பன் வடகறியை பினயமாக பிடித்து வைத்து சரக்க ஒப்படைக்க துன்புறுத்துகிறது

சதீஷ்  உண்மையான ரவிசங்கரை கண்டு பிடித்து தன் நண்பன் வடகறியை மீட்டானா...? சதீஷ்-நவீனா காதல் என்ன ஆனது? என்பதே............















                                 
                                                                 


அறிமுக இயக்குனர்  சரவண ராஜன் படத்தின் முன்பாதியி காமெடியிலும் காதலிலும் நகரச்செய்து இடைவேளையில் திகில் ஊட்டி...பின்பாதி சஸ்பென்ஸ்...சேஸிங்...சென்டிமென்ட்  என்று கொண்டுபோகிறார் சன்னி லியோன் கவர்ச்சியை ஊறுகாய் மாதிரி ஒரு பாட்டோடு தொட்டுக்க வைத்துள்ளார்

ஜெய்.......வழக்கம் போல் காதலியிடம் பயந்த சுபாவத்தில் நடிக்கும் நடிப்பு இப்படத்திலும் தொடர்கிறது  சுவாதி........தன் தெத்து பல் அழகுடன் கொஞ்சி கொஞ்சி காதல் செய்கிறார் RJ பாலாஜி....தன் அட்டகாசமான டைமிங் ஒன்-லைனர் காமெடியில் அரங்கம் அதிரவைக்கிறார்.வெங்கட் பிரபு... பிரேம்ஜி  கவுரவமாக வருகிறார்கள் போகிறார்கள்  அருள்தாஸ்...... ஆட்டோகாரராக அருமையான நடிப்பு

விவேக்-மெர்வின் இசையில் கானாபாலாவின் கேளுங்க அண்ணேன் கேளுங்க கேட்க்கிரமாதிரி உள்ளது சில பாடல்கள் நம்மை தலையை தடவுகிறது வெங்கடேஷ் ஒளிப்பதிவில் சன்னி லியோன் பாடல் செம கிக் என்றால் செல்போன் பேயாட்டம் அனிமேஷன் காட்சிகள் அருமை

என் பார்வையில்..........வடகறி நன்றாகத்தான் இருக்கு ஒருமுறை சாப்பிடலாம் இன்னொரு முறை என்றால் திகட்டும்   

vadacurry

மற்றபடி..........
படம் பார்த்தவர்களின் மதிப்பீடு..........



படம் பார்த்தவர்கள் மட்டும் தங்கள் மதிப்பீடை தெரியப்படுத்துங்கள் ...நன்றி

   


Wednesday, June 18, 2014

விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற குமுதம் கணிப்பு சரியா?


விஜய்,அஜித்,சூர்யா,தனுஷ்,விக்ரம்,சிம்பு...இவர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்று தமிழ் வார இதழ்  குமுதம் நடத்திய கருத்துக்கணிப்பில்......... விஜய் அதிக வாக்குகள் பெற்று அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அறிவித்துள்ளது 



அவர்கள்  பெற்ற வாக்குகள் விவரம்........விஜய் 12 லட்சத்து 80 ஆயிரத்து 300 வாக்குகளுடன் முதலிடம் பெற்று அடுத்த சூப்பர் ஸ்டார் ஆனார். அவர் அஜீத்தை விட 62 ஆயிரத்து 650 ஓட்டுகள் அதிகம்பெற்றுள்ளார் 


வெற்றி பெற்ற விஜய்-யை நாமும் வாழ்த்துவோம் 
ஆயினும் சில ஊடகங்கள் தங்கள் வியாபார நோக்கத்திற்காக சில தில்லாலங்கடி வேலைகள் செய்வதுண்டு 

நமது பிளாக்கர் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.........



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..............


ட்விட்டரில் விஜய்-அடுத்த சூப்பர் ஸ்டார் பற்றிய...........

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
குமுதம் - விஜய் இரு தரப்புக்கும் ஏதோ லடாய் இருந்துச்சாம் .அதுக்கு சமாதானக்கொடிதான் சூப்பர் ஸ்டார் வாக்கெடுப்பில் விஜய்க்கு சாதகமாம்.

கத்தி®Verified twitt@doll_fb 
விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்:கருத்துக் கணிப்பு தகவல் - தினமணி சினிமா -#நக்கீரன் கருத்து கனிப்ப நம்ம தளபதி"ஸ்டாலின்"அவர்களயே சாச்சுபுட்டே.

Shalini@shalushaluma 
குமுதம் ஜூலை 1994விஜய் எல்லாம் ஒரு நடிகன் என்று காசு கொடுத்து பார்க்க வேண்டிய தலை எழுத்து..குமுதம் ஜூன் 2014: நாளைய சூப்பர் ஸ்டார் விஜய

நட்புக்காக @natpukkagaa 
செய்திய கேட்டியா விஜய்தான் அடுத்த SSஆம் எப்படி? ஏந்திரன்க்கு அப்புறம் தலைவா தான் அதிக கலெக்சனாம் 270கோடி விஜய் ஃபன்ஸ் சொன்னாங்க oh வடையா

தமிழினி :)@manju_twits 
தத்துவம் எதுவும் தோணலன்னா விஜய் அண்ணாவ புகழ்ந்து இரண்டு ட்வீட் போட்டா போதும். நல்லா ஆர்டி ஆவுது.. அவ்வ் :-))

ராகவ்!@ImRagav 
மீடியா சப்போர்ட் இல்லாம சூப்பர்ஸ்டார் ஸ்டேடஸ்க்கு போனதுக்கே விஜய்ய 'தல'ல தூக்கிவச்சி கொண்டாடனும்.கொண்டாடுவோம்

லிங்கா குட்டி @2singakutti 
அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் -குமுதம் நாளிழதிழின் மெகா சர்வே இனி #அஜித் ரசிகர்கள் #ரஜினி ரசிகரின் ஃபேக் ஐ.டி யில் புலம்புங்கள் ஆகட்டும்




வேலையில்லா பட்டதாரி-ட்ரைலர்,பாடல்கள் எப்படியிருக்கு?


"ஆக்சுவலா நான் கொஞ்சம் பேட் பாய் ஸார்....."
என்று இளைஞர்களை கவரும் அதிரடி பன்ச் பேசி கலக்கும் தனுஷின் 25-வது படம் வேலையில்லா பட்டாதாரி ட்ரைலர் பார்க்கும்போது திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன்...படங்களின் கலவையாக தெரிகிறது.



 


























இன்னும்  சிக்ஸ் பேக் பாடியுடன் வாயில் புகையும் அவரது பட போஸ்டர் ஒருவித சர்ச்சையை சமுக வலைதளங்களில் உருவாக்கினாலும் இப்பலாம் சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா....என்றும் 






































வேலையில்லாத இன்ஜினியர்கள் பற்றிய படத்தில் இளைஞர்கள் இப்படித்தான் வருவாங்கப்பா என்றும் நம்மை நினைக்கத் தோன்றுகிறது 


வேலையில்லா பட்டதாரி படத்தின் ட்ரைலர் பார்த்தீர்களா? என்ன நண்பர்களே ட்ரைலர்  படம் பற்றிய எதிர்பார்ப்பை   உங்களுக்கு உருவாக்குகிறதா? 



 படத்தின் முக்கிய பிளஸ்-பாயின்ட் அனிருத்  இசையில்...
 கவிஞர் தனுஷ் எழுதிய  பாடல்களும்தான்
1-வேலையில்லா பட்டதாரி..அனிருத்+சாலிக்  பாடியது
2- அம்மா அம்மா............தனுஷ்+ஜானகி பாடியது 
3-பூ இன்று நீயாக..........தனுஷ் பாடியது 
4-வாட் எ கருவாட்...........தனுஷ்+அனிருத் பாடியது
5-ஏ...இங்கே பாரு.................அனிருத் பாடியது 
6-ஊது சங்கு...................அனிருத் பாடியது 



                     thanks-Velai illa Pattathari (VIP) Song Review... by igtamil
 

பாடல்கள் பற்றிய காணொளி விமர்சனம் கேட்டீர்களா? 



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........




Saturday, June 14, 2014

நான்தான் பாலா-சினிமா விமர்சனம்



கதாநாயக நடிகராக விவேக் சிறப்பாக நடித்திருந்தாலும் சரியான துணை நடிகர்கள் இல்லாமல்.... நான்தான் பாலா 
எந்தப் பிரமாண்டமும் காட்டாமல் சாதாரணமான சினிமாவானது

naanthaanbala

கும்பக்கோணத்தில்  பெருமாள் கோயில் பிராமண பூஜாரியான பாலா (விவேக்) கண்ணியமானவன் மனிதாபிமானம் மிக்கவன் சந்தர்ப்ப வசத்தால் திருட்டு பழியுடன் சிறைக்கு சென்ற  தன் வயதான தந்தையை வெளியில் கொண்டுவர தேவைப்படும் பணத்தை காஞ்சிபுரம்  ரவுடி  பூச்சி (வெங்கட் ராஜ் ) யிடம் வாங்குகிறான்

அவமானத்தால் பாலாவின் தாய்-தந்தை தற்கொலை செய்துகொள்ள... பாலாவும்  தன் சமுகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறான் அதனால் தனக்கு உதவிய பூச்சியுடன்  காஞ்சிபுரத்தில் பாலா  நட்பாக சேர்ந்து வாழ்கிறான்

அங்கே  அவனுக்கு பூச்சியின் நட்பும் செல்முருகன் பழக்கமும்  வைசாலி (ஸ்வேதா) யின் காதலும் என்று வாழ்க்கை நகரும் போது..........பூச்சி ஒரு கூலிப்படை கொலைகாரன் என்றும் கை தென்னவன் என்ற கொலைகாரனின் கையாள் என்றும் தெரிய வருகிறது தன் நண்பன் பூச்சியை திருத்தி அவனை போலீசில் சரணடைய செய்ய முயற்சிக்கிறான் பாலா.......



பாலா தன் நண்பன் பூச்சியை திருத்தினானா? ஆச்சாரமான பாலாவின் தெருவில் தின்பண்டங்கள் விற்கும் வைசாலியுடன் உண்டான காதல் என்ன ஆனது? என்பதே கதை



விவேக்.......சாமி படத்தில் இதே போன்று காமெடி வேடத்தில்  ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை கேலியும் கிண்டலும் செய்து காமெடியனாக நடித்த விவேக் இப்படத்தில் முழு கதாநாயகராக...அதேநேரம் யார் மனதும் புண்படாத வண்ணம் நடித்துள்ளார் அவரது அனுபவம் வசன உச்சரிப்பில் அவருக்கு கைகொடுக்கிறது

செல் முருகன் காமெடி நடிகராகவும்  மற்றபடி ஸ்வேதா,வெங்கட் ராஜ்,கை தென்னவன்..அவரவர் பாத்திரங்களில்  நடித்திருந்தாலும் திரைக்கதையில் கதாநாயகனுக்கு நிகரான வில்லன் பாத்திரம் இல்லாததும் விவேக்கின் ஒன் மேன் ஷோ படமாகப் போனது

கண்ணனின்  சிறப்பான இயக்கம் வெங்கட் கிரிஷியின் இனிமையான இசை... எல்லாமிருந்தும்   சறுக்கலான திரைக்கதை, யதார்த்தமில்லாத  வசனங்கள்,தொலைகாட்சி அழுவினி நாடகத் தன்மை, அடிக்கடி உபயோகிக்கப்படும் யாருக்கும் புரியாத சமஸ்கிருத ஸ்லோகங்கள் , திரைக்கதைக்கு ஓட்டத்துக்கு பின்தங்கிய மகாபாரத குட்டிக்கதை..... பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது............நான்தான் பாலா

எவ்வளவுதான்  விவேக் நான்தான் பாலா-வை தன் சிறப்பான நடிப்பால் தோளில் தூக்கி  சுமந்தாலும் மற்ற நடிகர்களின் நடுத்தரமான நடிப்பும் மந்தமான கதையும் பிரமாண்டமாக வரவேண்டிய படத்தை சாதாரணமாக ஆக்கிவிட்டது 

என்  பார்வையில்..........
நான்தான் பாலா சாதாரனமானவன்தான் படம்-பரவாயில்லை ரகம் 
விவேக்கின்  விவேகமான அனுபவ நடிப்புக்காக படம் பார்க்கலாம்

நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால் உங்கள் மதிப்பீட்டை தெரியப்படுத்தவும் 

பார்வையாளர்களின் மதிப்பீடு..............




படம் பார்த்துவிட்டு வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........


Friday, June 13, 2014

முண்டாசுப்பட்டி-சினிமா விமர்சனம்


முண்டாசுப்பட்டி-கிராமத்து மூடநம்பிக்கையை கதைக்களமாக வித்தியாசமான நகைச்சுவையுடன் கொஞ்சம் காதல்,நிறையக் கள்ளக்காதல் ,கொஞ்சம் சாமி சென்டிமென்ட்,கொஞ்சம் த்திரிலிங்....கலவையாக வந்துள்ள படம்

1947 காலகட்டத்தில் முண்டாசுப்பட்டி கிராமத்தில் ஒரு வெள்ளைக்காரர் புகைப்படம் எடுத்த கிராமத்துமக்கள் சிலர் மர்ம நோயால் இறந்துவிட அந்தக் கிராமமக்கள் புகைப்படம் எடுத்தால் இறந்துபோவோம் என்று நினைக்கும் மூடநம்பிக்கையில் வாழ்கிறார்கள் என்றும் 

அங்கே வானிலிருந்து விழுந்த ஒரு எரிகல்லை அந்தக் கிராமத்தை காக்கவந்த வானமுனி கடவுளாக வணங்குகிறார்கள் என்றும் 

அந்த எரிகல்லில் விலைமதிப்பற்ற கனிமங்கள் இருப்பதாக அந்த ஆங்கிலேய வெள்ளைக்காரர் குறிப்பு எழுதிவைத்துள்ளார் என்றும் முன்கதையாக தொடங்கும் படம்............

1980 காலகட்டத்திற்கு செல்கிறது

 சத்தியமங்கலத்தில் ஹாலிவுட் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ள கோபி (விஷ்ணு விஷால்) அருகிலுள்ள முண்டாசுப்பட்டி கிராமத்தில் இறந்து போன  ஊர் தலைவரின் அப்பாவை புகைப்படம் எடுக்க போகிறார்..


அங்கே அவர் காதலிக்கும் ஊர் தலைவர் மகள் கலைவாணி (நந்திதா) யை காண்கிறார்  அம்மணியும் காதலிக்க....ஆனால் கலைவாணியோ அவளது முறைமாமனுக்கு நிச்சயிக்கப்பட.....இன்னும் அவர்கள் காதலுக்கு குறுக்கே  ஊர் மக்கள் மூடநம்பிக்கை சாமி சம்பிரதாயங்கள் மல்லுகட்டி நிற்க........

இதற்க்கிடையில்  அந்தக் கனிம  எரிகல்லை தேடி வந்த வெள்ளைக்காரரின் மகன்  பக்கத்து ஊர் ஜமீன் (ஆனந்தராஜ்) யிடம் அந்தக்  கடவுள் வானமுனி எரிகல்லை  எடுத்துதர கேட்டு விலை பேச..........

கலைவாணியின் கல்யாணத்தை தடுத்து நிறுத்த  வானமுனி எரிகல்லை கோபி எடுத்து ஒழித்து வைக்கிறான் கலைவாணியின் கல்யாணமும் நின்று போகிறது  ஆனால் அந்த எரிகலும் உண்மையில் காணாமல் போய்விடுகிறது 

காணாமல் போன எரிகல்லை கோபி கண்டுபிடித்தானா? கோபி-கலைவாணி  காதல் என்ன ஆனது? என்பதை திரையில் காணுங்கள்..........


டாஸ்மாக் அருவெறுப்பு,ஆபாசம் எதுவும் இல்லாமல் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம்காட்டி இருக்கிறார் இயக்குனர் ராம்குமார் 

படம்முழுக்க  ஆண்கள் அனைவரும் பெரிய மீசையுடனும் தலையில் முண்டாசு கட்டியபடியும் காட்டி....மூட நம்பிக்கையின் ரூபங்களாக சொல்வது...அய்யோ பாவம் முண்டாசுக் கட்டிய பாரதி இன்று இருந்தால் இயக்குனருக்கு அடிதான் விழும்

முதல்பாதியில் முன்கதைக்கே நிறைய நேரம் எடுத்துக் கொண்டதையும்  காமெடி கள்ளக்காதல் என்று தடுமாறுவதையும் குறைத்துக்கொண்டால் படம் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும்

விஷ்ணு-நந்திதா காதல் காட்சிகளில் நளினமாக நடித்துள்ளனர் கிராமத்து வெட்கம் நந்திதா முகத்தில் மிளிர........முனிஷ்காந்த் கதாப்பாத்திரம்  காமெடியும் அறுவையும் கலந்தது....போலி குறிசொல்லும் சாமியாடி கதையின் திருப்பமாக... ஆனந்தராஜ் கொஞ்ச நேரமே காமெடி வில்லனாக......கோபியின் உதவியாளராக வரும் காளி வெங்கட்டின் காமெடி சிரிக்க வைக்கும்.... மற்றபடி தேவையற்ற கதாப்பாத்திரங்கள் நிறைய 

இசையும் பாடல்களும்  ஒளிப்பதிவும் .பிரமாதம் என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும் மோசமில்லை

மொத்தத்தில்..........முண்டாசுப்பட்டி குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கலாம் அதன் வித்தியாசமான கதைக்களம்,நகைச்சுவைக்காக........

என் பார்வையில் முண்டாசுப்பட்டி.........பரவாயில்லை ரகம் மற்றபடி படம் பார்த்தவர்கள் இங்கே என்ன சொல்கிறார்கள் என்பதை.........




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.......... 








Thursday, June 12, 2014

நான்தான் பாலா-கதாநாயகனாக நடிகர் விவேக் தேறுவாரா?


இதுவரை முன்னணி காமெடி நடிகராக கலக்கிய  நடிகர் விவேக்  சீரியஸான காதானாயகனாக நடித்து நாளை வெளிவரும் படம்.......நான்தான் பாலா கதாநாயகர் வரிசையில் நடிகர் விவேக் தேறுவாரா? வெற்றி பெறுவாரா....? என்று.

தமிழ் சினிமாவில் நடிகர் சந்திரபாபு  முதல் நிறைய காமெடி நடிகர்கள் கதாநாயகராக நடித்து வெற்றிபெறாமல் தொடர்ந்து கதாநாயகனாகவும் நடிக்கமுடியாமல் காமெடி நடிகராகவும் தொடர முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாய் மாறியவர்கள் ஏராளம்........

நான்தான் பாலா படத்தில் கும்பக்கோணம் பெருமாள் கோயில் ஆத்திக பிராமண பூசாரியாக சமஸ்கிருதம் பேசி நடித்துள்ள விவேக் நடிகை ஸ்வேதாவுடன் காதல் செய்தும் கலக்குகிறார் கூலிப்படை ரவுடிகளுடன் சண்டை செய்தும் மிரட்டுகிறார் 

முழுக்க  இது கமர்சியல் படம் போல் தெரிந்தாலும் இயக்குனர் கண்ணன் விருது இயக்குனர் பாலாவின் உதவியாளராக இருந்தவர் என்பதால்....நான்தான் பாலா படமும் விருது வாங்கும் தரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதுவரை கலைவாணர் போல் மூடநம்பிக்கைகளை தன் படங்களில் நையாண்டி செய்த சின்ன கலைவாணர் என்றுஅழைக்கப்படும் நடிகர் விவேக் நான்தான் பாலா படத்திற்குப் பிறகும் கதா நாயகராகவும் காமெடி நாயகராகவும் தொடர்ந்து........

உலக  மக்கள் நலனுக்காக விளம்பர வெளிச்சமின்றி  இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு பசுமை புரட்சி செய்துக்கொண்டிருக்கும் நடிகர் விவேக்......

கதாநாயகர்  வரிசையிலும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

இங்கே.............


http://parithimuthurasan.blogspot.in/2014/06/naanthaanbala.html

நான்தான்  பாலா-சினிமா விமர்சனம் 
 http://parithimuthurasan.blogspot.in/2014/06/naanthaanbala.html


UA-32876358-1