google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: July 2014

Tuesday, July 29, 2014

கிக் (இந்தி)-சினிமா விமர்சனம்

ரவி தேஜாவின் கிக் (KICK) தெலுங்கு மசாலா  தமிழில் ஜெயம் ரவியின் தில்லாலங்கடி ஆகி... இப்போது  இந்தியில் சல்மான்கானின் கிக் (KICK)  ஆகி இந்தியாவில் 100 கோடி வசூல் பட வரிசையில்.......

கிக்  படத்தின் கதை.......கொஞ்சம் காதல்,கொஞ்சம் காமெடி,கொஞ்சம் த்திரில், கொஞ்சம் நாடகத்தன்மை....என்று எதுவும் முழுமையாக இல்லாத வேடிக்கையான கதை 

போலந்து  ரயிலில்  மனநல மருத்துவர் ஷைய்னா (ஜாக்குலின் பெர்னாண்டஸ்) தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன்-கம்-போலிஸ் அதிகாரி ஹிமான்ஷு (ரந்தீப் ஹூடா) விடம் தனது முன்னாள் காதலன் ஐன்ஸ்டினை விட IQ அதிகமான  தேவிலால் சிங் DEVI LAL SINGH (சல்மான்கான்) பற்றிய  நினைவுகளை சொல்வதுபோல் தொடங்கும் படம்.....

ஒரு 'கிக்'குக்காக 32 தடவை வேலையை உதறிவிட்டு தில்லாக அலையும்  DEVI..... கண்டதும் காதலாக ஷைய்னா மீது காதல்கொள்ள ஒரு 'கிக்'குக்காக அவரிடமே உடனே காதலிக்கிறேன் என்று சொல்லிடாத கிக்கு போயிடும் என்று வேண்டிக்கொண்டு......

போலிஸ் அதிகாரி ஹிமான்ஷு ஷைய்னாவிடம் வேடிக்கைக்காக ஏழைகளுக்கு உதவிடும் ராபின்ஹூட்டாக மாறி திருடும்  DEVIL என்ற திருடனை பிடிக்க போலந்து வந்ததாக சொல்கிறார் 

DEVIL-லாக சல்மான்கான் போலிஸ் அதிகாரி ஹிமான்ஷுவுடன் விளையாடும் மிக்கி-மவுஸ் விளையாட்டும் DEVI-யாக தன் காதலி
ஷைய்னாவுடன் பழையவை மறந்ததாக நடிப்பதும் என்று காமெடி கலாட்டாக்களால் கிக் (இந்தி) படம் காட்டப்படுகிறது


 எந்த லாஜிக்கும் இல்லாத குப்பை கதை உள்ள கிக் (இந்தி) படத்தை சல்மான்கான் தன் அதிரடி காமெடி நடிப்பால் தூக்கி நிறுத்துகிறார் ஜாக்குலின் அழகு பொம்மையாக வந்து போகிறார் போலிஸ் அதிகாரியாக ரந்தீப் ஹூடாவும் தேவியின் தந்தையாக மிதுன் சக்ரவர்த்தியும் நடித்துள்ளனர்

சல்மான்கானின்  இந்த ஆண்டின் இரண்டாவது படமான கிக் பாலிவுட் சினிமாவுலகம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக முதல் நாளில் இந்தியா (நிகர) ரூ 26.4 கோடி ரூபாய் திரட்டி முதல் இடத்தை பிடித்தது அதன் ரம்ஜான் கலெக்சன் B-L-O-C-K-B-U-S-T-E-R வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

****************************************************************
இது சும்மா....சிரிக்க 



 

Monday, July 28, 2014

விஜய்-அஜித் ரசிகர்களின் ட்விட்டர் யுத்தம் -ஜெயித்தது யாரு?

விஜய் ரசிகர்கள்  நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்காக  #VIJAYFavHeroForever என்ற டேக்கிலும் அஜித் ரசிகர்கள் அதேநேரம் சன் டிவியில் ஒளிபரப்பான வீரம் படத்திற்கு ஆதரவாக #VEERAM_TheCheckMateFromSunTv என்றும் டேக் போட்டு உலகளவில் ட்ரென்ட் ஆக்கிவிட்டார்கள்

உண்மையில் தமிழ் இளைஞர்களின் இந்த சினிமா மாயையை விஜய் டிவியும் சன் டிவியும் சரியாக துட்டாக்கிக் கொண்டார்கள் இது ஊடகங்களின் சதுரங்கவேட்டை என்பதை மறந்து விஜய்-அஜித் அதீத ரசிகர்களில் சிலர் ஆரோக்கியமற்ற ஆட்டம் போட்டார்கள்

உலகளவில் 6 மொழிகளில் இந்த டேக் யுத்தம் நடந்ததில் ஆங்கிலம் முதலிடத்தில் இருந்து நம் தமிழர்களின் சினிமா மோகத்தை வெளிச்சம் போட்டது ஆனாலும் தமிழ் ட்விட்டர்கள் வரம்பு மீறாமல் கீச்சியது ஆறுதலாக இருந்தது

இந்த விஜய்-அஜித் ரசிகர்களின் ட்விட்டர் யுத்தத்தில் இரண்டு பேருமே மாறி மாறி முன்னிலை வகுக்க உண்மையில் ஜெயித்தது யாரு?... என்றால் தமிழ் தொலைகாட்சி ஊடகங்களே


தல,தளபதி என ஆதர்சங்களை கொண்டாடும் இளைஞர்களே!
இதோ தங்கம் வென்ற தமிழன் சதீஷ் சிவலிங்கத்தையும் அறிந்து கொள்ளுங்கள்..SKP Karuna @skpkaruna 

.







Sunday, July 27, 2014

கூகுள் பிளஸில் கலக்கும் நடிகர் விஜய்


இதுவரை பேஸ்புக்,ட்விட்டர்....வலைதளங்களில் பங்கு கொண்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் நடிகர் விஜய் இப்போது கூகுள் பிளஸ் வலைத்தளத்திலும் இணைந்து........

சமுக வலைதளங்களில் முதல் இடத்தில் இருக்கும் பேஸ்புக் எளிதில் ஒருவருக்கொருவர் கலந்துரையாடவும் புகைப்படங்களுடன் கருத்துக்களை பரிமாரவும்  உதவுகிறது அதேநேரம் அதில் VIDEO GIF புகைப்படங்கள் இணைக்க முடிவதில்லை 

ட்விட்டர் வலைத்தளத்திலும் பிரபலங்கள் இணைந்து தங்கள் கருத்துக்களை பரிமாருவதுடன் மிக விரைவில் அதன் பாலோவர்ஸ் மூலம் பலருடன் ஒரே நேரத்தில் செய்தியை பரவச் செய்திடலாம் அதிலும் VIDEO GIF புகைப்படம் குறைந்த MB-யில் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் 


ஆனால்...கூகுள் பிளஸ் தளத்தில் நீங்கள் வீடியோ,VIDEO GIF,ANIMATED GIF...போன்ற அனைத்தும் எளிதில் இணைத்துக்கொள்ளலாம் இவை ஒவ்வொன்றும் இப்போதெல்லாம் எளிதில் செல் போன் மூலம் தொடர்பு கொள்ள முடிவதால் பயன்படுத்துவோர் அதிகம் 


இதைத் தெரிந்து கொண்ட நடிகர் விஜய் கூகுள் பிளஸ் தளத்தில் இணைந்து ஒரே நாளில் 1000 பாலோவேர்ஸ் மேல் பெற்றது மட்டுமல்லாமல் மேலே நீங்கள் கண்ட VIDEO GIF படங்களை இணைத்து கவர்சியாக்கி வருகிறார் 




மேலே உள்ள லிங்க் மூலம் நீங்களும்  இணைந்துகொள்ளலாம்.......


 

Saturday, July 26, 2014

அஞ்சான் படப்பாடல்கள் எப்படியிருக்கு?



நடிகர் சூர்யா-சமந்தா இணைந்து நடிக்கும் அஞ்சான் திரைப்படத்தில் யுவன் சங்கர்ராஜா இசையில் ஐந்து பாடல்கள்.........
பாடலைக் கேளுங்கள் உங்கள் கருத்தை  வாக்கெடுப்பில் பதிவு செய்யுங்கள்..........

1-பேங் பேங் பேங்
                                      thanks-YouTube by SonyMusicIndiaVEVO

மதன்கார்க்கியின்  வார்த்தைகளில் மாஸ் ஹீரோக்களுக்கான அறிமுகப் பாடலாக வரும் ரஞ்சித் குரலில்  பேங் பேங் பேங் யுவன் மின்சாரத்தை இசையாக மாற்றியதுபோல்........ 

2- ஒரு கண்ஜாடை......


                                 thanks-YouTube by SonyMusicIndiaVEVO

விவேகாவின் வார்த்தைகளில் பென்னி தயாலின் இனிமையான குரலில் யுவன் தீட்டிய வண்ணமயமான காதல் இசை ஓவியம்....... 

3-ஏக் தோ தீன்
                                    thanks-YouTube by SonyMusicIndiaVEVO

நா.முத்துகுமார் வார்த்தைகளில் ஆண்ட்ரியா எரேமியாவுடன் நடிகர் சூர்யா கலக்கும் வேடிக்கையான இசைவிருந்து  

4-காதல் ஆசை.........


                                    thanks-YouTube by SonyMusicIndiaVEVO

கபிலன் வார்த்தைகளில் சூரஜ் சந்தோஷ்வுடன் யுவன் இணைந்து பாடும் கோரஸ் தூக்கலாக ஒரு வித்தியாசமான திரையிசை........

5- சிரிப்பு என்.......
                                      thanks-YouTube by SonyMusicIndiaVEVO

விவேகாவின் வார்த்தைகளில் M M மானசி பாடும் இப்பாடல் மெல்லிசையும் வார்த்தைகளும் பின்னிப் பிணைந்து கேட்போரை கிறங்கடிக்கும்
அஞ்சான்-படப்பாடல்கள் எப்படியிருக்கு?

வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி.........

 

Thursday, July 24, 2014

திருமணம் எனும் நிக்காஹ்-சினிமா விமர்சனம்


சரியான திரைக்கதை இல்லாமல்  தேவையில்லாத மதம், கலாச்சாரக் காட்சிகளுடனும் சொல்ல வந்த காதலை சொதப்பிவிட்டது   ஜெய்-நஸ்ரியா  நடித்த..... திருமணம் எனும் நிக்காஹ் 

சென்னையிலிருந்து  கோவைக்கு ரயிலில் செல்லும் பிராமண இளைஞன் ராகவன் (ஜெய்) டிக்கெட் கிடைக்காமல் அபு பக்கர் என்ற முஸ்லிம் பெயரிலும் அதே ரயிலில் ஐ.டி. கம்பெனி வேலை விசயமாக செல்லும் பிரியா (நஸ்ரியா) என்ற பிராமண இளைஞி ஆயிஷா என்ற பெயரிலும் போகும்போது அவர்களுக்குள் காதல் தீ பற்றிக் கொல்....கொள்கிறது 

இருவரும்  முஸ்லிம் மதத்தவர்களாக தங்கள் காதலை தொடரும் போது ராகவன் இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ளவும் முஸ்லிம்  திருமணம் எனும் நிக்காஹ்-வை தெரிந்து கொள்ளவும்  சௌகத் அலி என்ற முஸ்லிம் பெரியவரிடம் தான் கலப்பட முஸ்லிம் என்று பொய் சொல்லி அவரது வீட்டுக்கு போகிறான் அங்கே அவரது மகள் நசீமா ராகவன் மீது ஒருதலையாக காதல் கொள்கிறாள் 

ஒரு கட்டத்தில் ராகவனும்-பிரியாவும் அபு பக்கர்-ஆயிஷா என்ற தங்கள் முகமூடியை கலைத்துவிட்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள் ஆனால்..அவர்கள் காதல் பழைய கிளுகிளுப்புடன் இல்லாததால் ராகவன்-பிரியா திருமணம் நின்றுவிடுகிறது 

உண்மை தெரிந்த சௌகத் அலி ராகவன் தன் மகள் நசீமாவை காதலித்து ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறார் இதற்கிடையில் பிரியா அமெரிக்கா போக...ராகவன் பெங்களூரு போக......

மீண்டும் சென்னை வந்த ராகவன் பிரியாவை அவர்களது தோழியின்  திருமணத்தில் சந்திக்க இருவருக்குள்ளும் மீண்டும் காதல் மலர்கிறது அதேநேரம் சௌகத் அலியின் அக்கா மகன் ஆசிப் ராகவனை கொலைவெறியுடன் விரட்டுகிறான்

ராகவன்  ஆசிப்பிடமிருந்து தப்பித்தானா....? ராகவன்-பிரியா மீண்டும் வாழ்வில் இணைந்தார்களா...? என்பதை திரையில் காணுங்கள்.

அதிரடியாக ஜெய் நான்கு பேரால் விரட்டி தாக்கப்படும் காட்சியுடன்   திருமணம் எனும் நிக்காஹ் படத்தை துவக்கும் இயக்குனர் அனிஷ்  கிளைமாக்ஸ் வரை பிளாஷ்பேக் உத்தியுடன் கதை சொல்கிறார் ஒரு நல்ல காதல் கதையில் மதம் முலாம் பூசி கெடுத்துவிட்டார் சொதப்பல் கிளைமாக்ஸ் ஆனாலும் எந்த மதத்தையும் பாதிக்காத காட்சிகள் வைத்துள்ளதால் பாராட்டலாம்

ஜெய்.........இயல்பாக அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார் நஸ்ரியா....அழகு தேவதையாக வருகிறார் காமெடிக்கு மயில்சாமி ரயில் டிக்கெட்  புரோக்கராகவும் பாண்டியராஜன் ரயிலில் பயணிக்கும் கட்டப்புலியாகவும் வருகிறார்கள்

கிப்ரான் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் எதுவும் மனதில் பதியவில்லை பாடல்காட்சிகளில் லோகநாதனின் ஒளிப்பதிவு அருமை

திருமணம் எனும் நிக்காஹ்.........சரியான திரைக்கதை இல்லாமல்  தேவையில்லாத மதம், கலாச்சாரக் காட்சிகளுடனும் சொல்ல வந்த காதலை சொதப்பிவிட்டது 

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு............

 திருமணம் எனும் நிக்காஹ்-படம் எப்படியிருக்கு?



படம் பார்த்தவர்கள் மட்டும் வாக்களிக்கவும் 
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..............

குறிப்பு- திருமணம் எனும் நிக்காஹ் படம் ஓடும் நம்ம மால் திரையரங்கில் படு பயங்கர கூட்டம்.......காவலர்கள் கூட்டம் 



Sunday, July 20, 2014

சதுரங்க வேட்டை-சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு மணிவண்ணன் போல் இயக்குனர் வினோத்தின் லொல்லு நையாண்டி வசனங்களுடன்....மீண்டும் ஒரு சூதுகவ்வும் படம் போல் சமுதாய பித்தலாட்டங்களை கதைக்களமாகக் காட்சிப்படுத்தும் சினிமா....சதுரங்க வேட்டை 

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவது தவறில்லை என்றும்  பணம்தான் எல்லாமே என்ற பாலிசிக்கு சிறுவயதிலேயே தள்ளப்பட்ட காந்தி பாபு (நடராஜ்) வின் பித்தலாட்ட வாழ்க்கை பயணம் கடைசிவரை தொடர்ந்ததா...? என்பதை  எட்டு நிகழ்வுகளாக  காட்சி படுத்தி தன் குத்தீட்டி வசனங்களால் பார்வையாளர்களை குஷிப்படுத்துகிறார் இயக்குனர் வினோத் 

கடந்த காலத்தில் நாம் கண்ட நடுத்தர பாமர மக்கள் தங்கள் பணப் பேராசையால்  அறிந்தும் அறியாதது போல் தொடர்கதையாய் ஏமாறுவதும் ஏமாற்றாப்படுவதும்தான் கதைக்களம் 

படத்தின் கதாநாயகன் பெயர் காந்திபாபு என்பது அவனது தாயாரால் காந்தி போன்று உண்மையாக வாழவேண்டும் என்ற நோக்கத்தில் வைக்கப்படுகிறது ஆனால் அவன் செய்யாத பித்தலாட்டங்கள் இல்லை இன்றைய சமுதாயத்தில் வள்ளல் போன்ற பட்டபெயரில் பிரபலங்கள்...? செய்யும் மொள்ளமாரித்தனங்களை  தன் நக்கலான திரைக்கதையால் தோலுரிக்கிறார் இயக்குனர் வினோத்........

ஒவ்வொரு நிகழ்வுகளும் வேடிக்கையாகவும் அர்த்தமுள்ளதாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது MLM (Multi Level Marketing) கம்பெனி சாதாரண குழாய் தண்ணீரை  கேன்சரை குணப்படுத்தும் மினரல் வாட்டர் என்று விற்பதும் நாம் அறிந்த காந்தப்படுக்கை கம்பெனிகளையும்   Amway போன்ற போலிக் கம்பெனிகளையும்  நினைவுப்படுத்துகிறது 

இப்படித்தான்'தி ரைஸ் புல்லிங்' ( 'Rice Pulling'),  50% தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை செய்யும் gold scam...போன்ற  காட்சிகள் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன 


சதுரங்க வேட்டை........படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் வணிக சினிமா ரீதியான கட்டாயத்தில் சமாச்சாரங்களாலும் காதல், சென்டிமென்ட்,சோகத்தில் தள்ளாடினாலும் இன்னும் கொஞ்சம் விரிவாக இயக்குனர் தன் நோக்கத்தை விவரித்திருந்தால் சூது கவ்வும் படத்தை மிஞ்சியிருக்கும்

நடராஜ்,இஷ்ரா,பொன்வண்ணன்,இளவரசு.....என்று நடிகர்களுடன் இயக்குனர் வினோத்தின் பேனாவும் சிறப்பாக நடித்துள்ளது  படத்திற்கு பாதிப்பில்லாத பின்னணி இசை மற்றும் இயல்பான ஒளிப்பதிவு

சதுரங்க வேட்டை......
இப்படத்தை நீங்கள் விமர்சனம் படிப்பதால் மட்டுமே அதன் உள் அர்த்தத்தை உணரமுடியாது அமைதியாக திரையில் கண்டுகளியுங்கள் அதன் அர்த்தமுள்ள நையாண்டித்தனத்தை அனுபவித்து மகிழுங்கள் 

                                                                                                .........பரிதி.முத்துராசன் 

 

Friday, July 18, 2014

வேலையில்லா பட்டதாரி-சினிமா விமர்சனம்



எவ்வித எதிர்பார்ப்புமின்றி காதல்,காமெடி கலாட்டாவில் கலகலப்பாக நகரும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் இடைவேளைக்கு பிறகு யதார்த்தமான கட்டுமான கம்பெனிகளின் தில்லுமுல்லுகளை  தோலுரித்து த்திரிலிங் அதிரடியாக  மின்னல் வேகத்தில் பயணிக்கிறது.......

என் பெயர் ரகுவரன் நான் ஒரு வேலையில்லா பட்டதாரி என்று ஆரம்பிக்கும் படம்.......
சொந்தமாக பில்டிங் கட்டவேண்டும் என்று வேறு வேலைகளுக்கு போக விரும்பாத திறமையான B.E (civil) Eng.பட்டதாரி இளைஞர்  ரகுவரன் (தனுஷ்) கண்டிப்பான தந்தை (சமுத்திரக்கனி) பாசமுள்ள தாய் (சரண்யா) வேலைபார்க்கும் தம்பி உடன் வாழ்கிறார்

எதிர்வீட்டுக்கு குடிவரும் மாதம் இரண்டு லட்சம் சம்பாதிக்கும் ஷாலினி (அமலா பால்) மீது காதல் கொள்ள...சிறு மோதலுக்குப் பிறகு அம்மணியும் லவ்வ... எதிர்பாராமல் தன் தாய் மரணத்துக்கு காரணமாகிறார்

அதனால் அவருக்குள் இருக்கும் லட்சிய தீ பற்றி எரிய....ஒரு கட்டுமான நிறுவனத்தில் சேர்ந்து ரூ.300 கோடியில் அரசு குடிசை மாற்றுவாரிய கட்டுமான ஆர்டரைப் பெறுகிறார்

அங்கே அவருக்கு வில்லனாக அருள் சுப்பிரமணியம் (அமிடேஷ்) என்ற பெரிய பித்தலாட்ட கட்டுமான கம்பெனி நிறுவனர் மகன் இடையூறுகள் பல செய்ய....
ரகுவரன்  VIP என்ற வேலையில்லா பட்டதாரி பேஸ்புக் நண்பர்கள் துணையுடன் அரசு குடியிருப்பை வெற்றிகரமாக கட்டி முடிப்பதே படத்தின் கதை........

இயக்குனர்  வேல்ராஜ் முன்பாதி கலகலப்பாகவும் பின் பாதி அதிரடியாகவும் குடும்ப சென்டிமென்ட் கலந்த அழகான ஒரு காதல் கதையை படைத்துள்ளார் படம் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை தனுஷ் என்ற கதாப்பாத்திரமாக மாறிவிடும் நடிகனுக்காகவும் அவரது ரசிகர்களுக்காகவும்  எழுதப் பட்ட கதையுடன் படம் காட்டுகிறார் வசனங்கள் நச்சென்று இருக்கின்றன பன்ச்க்கு பஞ்சமில்லை நிறைய காட்சிகள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாமலை,படையப்பா. படக்காட்சிகளை நினைவுப்படுத்துகிறது

தனுஷ்...தனக்கே உரிய ஸ்டைலுடன் காமெடி-காதல்-அதிரடி காட்சிகளில் கலக்கலாக வருகிறார் கிளைமாக்க்ஸ் சண்டைக்காட்சியில் புருஸ் லீயை நினைக்க வைக்கிறார் 

அமலா பால்....காதலுக்கும் அவ்வப்போது தனுஷ்க்கு ஆக்சிசன் கொடுத்து ஊக்குவிக்கவும் வருகிறார் சமுத்திரக்கனி........அப்பா வேடத்தில் புதிய பரிணாமம் நல்ல நடிப்பும்கூட சரண்யா......வழக்கம் போல் பாசக்கார அம்மா பாதியிலேயே அவுட் ஆனாலும் கடைசிவரை இன்னொரு உடலில் வாழ்கிறார் விவேக்........இடைவேளைக்குப் பிறகு வந்து அவரது தோஸ்த் செல் முருகனுடன்  சிரிக்க வைக்கிறார்

அனிருத் இசையில் ...வாட் ஏ கர்வாட்.....பாடல் கலக்கல் என்றால் தனுஷ்-ஜானகி பாடிய அம்மா அம்மா... பாடல் உருகவைக்கும் ரகம் அனிருத் பாடிய ஊதுங்கடா சங்கு...பாடல் ஆட்டம் போட வைக்கும் என்றால் தனுஷ் பாடிய பூ இன்று நீயா....காதுக்கு இனிமை

அருன்பாபு ஒளிப்பதிவில்.........பூ இன்று நீயாக....பாடல் கண்ணுக்கு குளுமை சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கிறது

வேலையில்லா பட்டதாரி......தனுஷ் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக தோன்றினாலும்  இன்றைய கட்டுமான கம்பெனிகளின் தில்லு முல்லுகளை காட்சிப்படுத்திய விதத்தால் வேறுபடுகிறது...

வேலையில்லா பட்டதாரி......இன்றைய காலகட்டத்தில் பேஸ் புக் வலைதளத்தின் ஆக்கப்பூர்வமான சக்தியையும் எடுத்துரைப்பதால் எல்லோரும் கண்டுகளிக்கலாம்

என்  பார்வையில்........வேலையில்லா பட்டதாரி படம் நன்று
மற்றபடி....படம் பார்த்தவர்கள் மதிப்பீடு தெரிந்துகொள்ள..........
(தயவு செய்து படம் பார்த்தவர்கள் மட்டும் வாக்களிக்கவும்.........)
வேலையில்லா பட்டதாரி படம் எப்படியிருக்கு?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............


Monday, July 14, 2014

பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் கதை...?

பாலாவின் இயக்கத்தில் நடிகர் சசிகுமார்-வரலட்சுமி இணைந்து நடிக்கும் தாரை தப்பட்டை படத்தின் கதை கசிந்ததா...? பரதமா? கரகமா? என்று வலைதளங்களில் போட்டி நடக்கிறது...........


bala

தமிழ் சினிமாவை தன் திரைக்கதை-இயக்கத்தால் தலையில் சுமந்து அதன் தரத்தை உலகளவில் கொண்டு செல்பவர் இயக்குனர் பாலா அதே நேரம் அவர் படத்தில் நடிப்பவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்து நடிகன்டா.... என்று திரையுலகம் பாராட்ட செய்யும் வல்லமை கொண்டவர் 

பாலா தான் இயக்கம் படத்தின் கதையை அப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் சொல்லமாட்டார் அவரது உதவியாளர்களுக்கும் இன்று என்ன மாதிரி காட்சி என்றும் சொல்லமாட்டார் 

இபபடியிருக்க பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் கதை கசிந்ததாக இணையத்தில் உலாவருவது.......

படத்தின் நாயகன் சசிகுமார் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அவரது குடும்பத்தார் அவரை மிருதங்க வித்துவானாக்க முயல்வதும் ஆனால் அவரோ தவில் கலைஞராக ஆசைப்பட்டு கரகாட்டக் குழுவினருடன் சேர்ந்து.....

கரகாட்ட  குழுவில் உள்ள வேறு சாதியை சேர்ந்த வரலட்சுமியை காதல் செய்வதாகவும் அவரது பிராமண குடும்பம் எதிர்ப்பதாகவும்.......என்று   சொல்லப்படுகிறது 


உண்மையில் இதுதான் கதை என்றால்.........நாம் இன்னொரு சேது மாதிரியான படத்தையும் சசிகுமார் உருவில் இன்னொரு சீயான் விக்ரமையும் தாரை தப்பட்டை கிழிய திரையில் காணலாம் 




Sunday, July 13, 2014

பிலிம்பேர் விருது 2014-சிறந்த நடிகர் யார்?


போட்டியில் கலந்துகொண்ட கமல்ஹாசன்,அஜித், சூர்யா..போன்ற நட்சத்திர நடிகர்களையும் மாஸ் ஹீரோக்களையும் புறம் தள்ளி...........
பிலிம்பேர்  விருது 2014 (தமிழ்) சிறந்த நடிகர் விருதை இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் நடித்த நடிகர் அதர்வா பெற்றுள்ளார்


மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வா பைலட் ஆகவேண்டும் என்ற கனவில் இஞ்சினியர் படித்தவர் பானா காத்தாடி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் 


இயக்குனர்  பாலாவின் முயற்சியால் பரதேசி படத்தில் ஒட்டு பொறுக்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் என்பதைவிட படத்தின் ஜீவனாக வாழ்ந்தவர் 


பரதேசி படத்தில் அவரது சிறப்பான நடிப்பு அவருக்கு
- Norway Tamil Film Festival Award for Best Actor,
-Edison Award for Extreme Performance,
-Best Lead Actor at London International Film Festival... போன்ற விருதுகளை இப்போதைய  
-Filmfare Award for Best Actor – Tamil விருதுக்கு முன்பே பெற்றுத்தந்துள்ளது........


2013-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் படங்களில் நடித்த நடிகர்களில்
 தமிழில் சிறந்த நடிகர் பிலிம்பேர் விருது பெற்ற பரதேசி பட நடிகர் அதர்வா-வை வாழ்த்துவோம்

Saturday, July 12, 2014

இவைகளில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் எது?


ரஜினியின் லிங்கா,கமலின் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன்,விக்ரமின் ஐ,அஜித்தின் தல 55,விஜயின் கத்தி,சூர்யாவின் அஞ்சான்,தனுஷ் அனேகன்... 


ரஜினியின்  லிங்கா.....சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புது கெட்டப்பில் அனுஷ்கா-சோனாஷி இவர்களுடன் இணைந்து நடிக்க மீண்டும் வடிவேலு மற்றும் சந்தானம் காமெடியில் கலக்க மைசூர் அரண்மனையில் இயக்குனர் ரவிகுமாரால் படமாக்கப்படும் மிகவும் எதிர்பார்ப்பு உள்ள படம் 


கமலின்  விஸ்வரூபம் 2 மற்றும் உத்தம வில்லன் இருபடங்களும் வெளிவரும் நிலையில் உலகநாயகரின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும்  மிகுந்த ஆவலுடன்...

விக்ரமின் ஐ.........இயக்குனர் ஷங்கரின் உருவாக்கத்தில் வரும் இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் பயம்காட்டும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு.......


அஜித்தின்  தல 55........இதுவும் இயக்குனர் கவுதம் மேனனின் வித்தியாசமான கதைக்களத்தில் அஜித்துடன் அனுஷ்கா-த்திரிஷா இணைந்து நடிக்க மிகுந்த ஆவலைத் தூண்டுகிறது.

விஜய்-யின் கத்தி.........இயக்குனர் முருகதாஸின் அதிரடி விறுவிறுப்பான கதை இயக்கத்தில் இரண்டு வேறுபட்ட தோற்றத்தில் விஜய்-சமந்தா  நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட்-லுக்கே ரொம்ப பேசப்பட்டது  

சூர்யாவின் அஞ்சான்.......லிங்குசாமி இயக்கத்தில் கேங்ஸ்டர்  பற்றிய அதிரடி திரைப்படம் சூர்யாவுடன் சமந்தா உள்ள போஸ்டர் கலக்கலாக அனைத்து ரசிகர்களையும் எதிர்பார்க்க.......

தனுஷின் அனேகன்.........கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ்-கார்த்திக் நடிக்கும் இப்படம் அதன் வித்தியாசமான பர்ஸ்ட்-லுக் போஸ்டரிலேயே கலக்கலாக.......


இவைகளில்....
 நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் எது?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........




Friday, July 11, 2014

ராமானுஜன்-சினிமா விமர்சனம்


தேசிய விருதுகள்  பெற்ற பாரதி,பெரியார் போன்ற வாழ்வியல் படங்களை இயக்கிய ஞான ராஜசேகரின் கணிதமேதை பற்றிய வாழ்க்கைப் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு..........ராமானுஜன் 

சிறுவயதிலேயே கணித  அறிவில் ஞானியாக விளங்கும் கும்பக்கோணம் சிறுவன் ராமனுஜன் (அன்மோல்) கணித பாடங்களில் மட்டுமே சிறந்து விளங்குவதும் மற்ற பாடங்களில் பின்தங்கி இருப்பதும் அவனது பள்ளி ஆசிரியர்கள் தந்தை முதற்கொண்டு அனைவராலும் ஒதுக்கப்படுகிறான் 

ஆனால் 

வாலிபர் ராமானுஜன் (அபினய்) மூளையில் ஒளிந்திருக்கும் அசாத்திய கணிதத் திறமையைக் கண்டறிந்த பிரிட்டிஷ் பேராசிரியர் ஹார்டி (கெவின் மெக்காவன்) உதவியால் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் தன் திறமையை காண்பித்து உலகம் வியக்க பாராட்டப்படுகிறார் இளம் வயதில் நோய் பாட்டு மரணம் எய்துகிறார் 

இயக்குனர் ஞான ராஜசேகரன் தனக்கே உரிய திறமையால் ராமானுஜம் வாழ்க்கை கதையை செல்லுலாய்ட் கதையாக வெள்ளித்திரையில் காட்டினாலும் இதற்கு முந்தைய பாரதி,பெரியார் படங்களில் தெரிந்த ஓர் ஆழம் இல்லை 

பள்ளிச் செல்லும் சிறுவன் முதல் மனைவியுடன் வாழ்ந்து 32 வயதில் மடியும் ராமானுஜம் வாழ்வில் உள்ள முக்கிய நிகழ்வுகள் மட்டுமே படம் காட்டப்படுவதால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் காட்சிகள் எதுவுமில்லை 

(யோவ்...பதிவரே! அதுக்காக ராமானுஜம் கானா பாலாவுடன் குத்து பாட்டும் ஆட்டமுமா போடமுடியும்?..ஆங்)

அதுக்குச்  சொல்லவில்லை நியாயன்மார்களே! படத்தில் காட்சிக்கு காட்சி சோகம் குடியேறி நெஞ்சை அடைக்குதைய்யா நம்ம அழுவினி டிவி சீரியலை பார்த்தது போல் இருக்குதய்யா.....

ஆனாலும் இயக்குனரின் அட்டகாசமான வசனங்கள் ஆளை மயக்குதைய்யா சில காட்சிகள் நெஞ்சைத் தொடுதையா?
கேம்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் ஆங்கிலேய மாணவர்கள் பேராசிரியர் ஹார்டியிடம்.......

தன்  கணித வினாக்களுக்கு கடவுள்தான் பதில் தருகிறார் என்று சொல்லும் ராமனுஜனுக்கு ஏன் அய்யா உதவுகிறீர்கள்? என்று கேட்க....

பேராசிரியர் ஹார்டியோ.....அவனுக்குள் இருக்கும் அறிவாளியே கடவுள் என்று நம்பும் அவனது நம்பிக்கையே பதில் அளிக்கிறது என்று சொல்லும் காட்சி......

ஒவ்வொரு மனிதரிடமும் ஒளிந்திருக்கும் நம்பிக்கையின் வெற்றியை காட்டுகிறது 

ராமனுஜனாக  நடித்திருக்கும் அபினய் முகமும் பாவனையும்   அறிவுஜீவியாக கனகச்சிதமாக பொருந்துகிறது ராமானுஜம் மனைவி ஜானகியாக பாமா நல்ல தேர்வு மகனை நினைத்து உருகவைக்கும்  தாயாக சுகாஷினி அருமையான நடிப்புபேராசிரியர் ஹார்டியாக நடித்துள்ள கெவின் மெக்காவன் யதார்த்தமாக நடித்துள்ளார்

நிழல்கள் ரவி,ஒய்.ஜி.மகேந்திரன் மிளிர்கிறார்கள் மற்றும் சரத் பாபு, அப்பாஸ், மனோபாலா, ராதாரவி, டி.பி. கஜேந்திரன் என நட்சத்திர பட்டாளம் வந்துபோகிறார்கள்   

ரமேஷ் விநாயகத்தின் இசையில் அந்த  காலகட்டத்துக்கு ஏற்ப பாராம்பரிய பின்னணி இசையும் பாடல்களும் உயிரோட்டமாக உள்ளது ஆரம்பத்தில் வரும் வாணி ஜெயராமின் பஜன் பாடல் சிறப்பு 

சன்னி ஜோசப் ஒளிப்பதிவு வெள்ளித்திரையில் ஓர் ஓவியமாக பளிச்சிடுகிறது ராமானுஜம் வாழ்ந்த காலகட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது 

‘பூஜ்யத்தை பூஜ்யத்தால் வகுத்தால் என்ன கிடைக்கும்? ஏன் பூஜ்யத்தை நீங்கள் மதிப்பதில்லை?" என்று சிறுவன் ஆசிரியரிடம் (டெல்லி கணேஷ்)  கேட்பது போல் தொடங்கும்  கலகலப்பான முதல் பாதி தொடர்ந்து அழுது வடிந்து அதிலும் பின்பகுதி மிக நீளமான அக்கப்போர் ஆக தெரிகிறது ஆங்கிலேயர்கள் எல்லோரும் தமிங்கிலத்தில் பேசுவது ஏதோ டப்பிங் படம் பார்க்கும் உணர்வு.......

ஆனாலும்.......

நம்பிக்கையுடன் வாழ்ந்து  மடிந்த ஓர் அறிவுஜீவி,மாமேதை,இன்றுவரை உலகத்தையே உற்றுப்பார்க்க வைக்கும் கும்பகோணத்து கணித மேதை இராமானுஜம் கதை ராமானுஜன் படமாக வந்துள்ளது குடும்பத்தோடு குழந்தைகளோடு காணத்தவறாதீர்கள்
அந்த அறிவுமேதை  ராமானுஜரை புறக்கணித்தது போல்  இந்த ராமனுஜனையும் புறக்கனித்துவிடாதீர்கள்  மாணவர்களுக்கு ஒருநாள் பள்ளிக்கூடம் ராமானுஜன் ஓடும் திரையரங்குகளில் நடந்தால் தவறில்லை 



Thursday, July 10, 2014

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் ட்ரைலர் எப்படியிருக்கு?


ரஜினி,கமல், விஜய்,அஜித்....போன்ற நட்சத்திர நடிகர்களின் டீசர்கூட வெளிவந்ததும் பல லட்சம் பார்வைகள் தாண்டி  ஓடும்போது மற்ற நடிகர்கள் நடித்த ட்ரைலர் சில ஆயிரம் பார்வைகள் தாண்டுவதே கஷ்டமாக உள்ளது 

ஆனாலும்........

கேபிள் சங்கரின் இயக்கத்தில் தமன்குமார் அருந்ததி நடிக்க தொட்டால் தொடரும்  ட்ரைலர் இதுவரை நாம் காணாத த்திரிலர் திரைப்படமாக இருக்கும் என்று விமர்சகர்கள் எதிர்பார்க்கிறார்கள்


                                   thanks-YouTube-by TigerAudiosOfficial 

என் பார்வையில் தொட்டால் தொடரும் ட்ரைலர் செம ஸ்பீடாக உள்ளது ட்ரைலரில் வரும் பி.சி.சிவன் பின்னணி இசையும் அருமை இப்படத்தில் வரும்  பாஸு பாஸு பாடல் இசைப்பிரியர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டது

நண்பர்களே! உங்கள் பார்வையில்..........

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் ட்ரைலர் எப்படியிருக்கு?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........

Wednesday, July 09, 2014

நடிகர் விஜய் பற்றி பதிவு எழுதினால் அஜித் ரசிகனா?

 நடிகர் விஜய் பற்றி பதிவு எழுதினால்... எனது பதிவு கருத்துப் பெட்டியை குப்பைத் தொட்டியாக்கி விடுகிறார்கள்..நடிகர் விஜய் பற்றி பதிவு போட்டால் நீ அஜித் ரசிகனா? என்று.....

அதில்  கொஞ்சம் நாகரீகமான ஒரு நண்பரின் கருத்துக்கு  மட்டும் இங்கே விளக்கம் தருகின்றேன்
selvan has left a new comment on your post "நடிகர் விஜய்-க்கு கிடைத்த விஜய் டிவி அவார்ட்":

IF YOU ARE A AJITH FAN AND DON'T LIKE VIJAY, WHY YOU ARE POSTING ABOUT HIM??? DO YOU HAVE ANY PERSONAL ISSUES WITH VIJAY? IF YOU DON'T LIKE HIM.. DO NOT POST ANY INFORMATION , EITHER GOOD OR BAD ABOUT HIM.... STAY AWAY WITH YOUR BLOG WITH INFORMATIONS ABOUT AJITH 


நண்பர்களே! நான் ஒரு சினிமா விமர்சன பதிவர் மட்டுமே அதே நேரம் சினிமா சம்பந்தமானச் செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இங்கே பதிவிடுகிறேன் மற்றபடி நான் அஜித் ரசிகரும் அல்ல....நடிகர் விஜய் என் எதிரியும் அல்ல இப்படி சினிமா நடிகர்களைப் பற்றி எழுதித்தான் என் பிழைப்பு ஓட்டவேண்டிய அவசியமும் இல்லை எனது பிளாக்கரில் எந்த விளம்பரமும் வருமானமும் இல்லை இது உங்கள் அறியாமை

நடிகர் விஜய் அடிக்கடி செய்திகளில் வருவதால் அவர் பற்றிய செய்திகள் என் பிளாக் பதிவுகளில் அதிகம் காணப்படும்  இதுவரை என் பிளாக்கில் எழுதப்பட்ட 1169 பதிவுகளில் 55 பதிவுகள் மட்டுமே நடிகர் விஜய் பற்றியது ஆகும்

ஆரம்பகாலகட்டத்தில் விஜய் பற்றிய எனது பதிவு......... 
இளையதளபதி விஜய்-சினிமா?வாங்க அசைபோடலாம்!  

இளையதளபதி விஜய்-
இன்றைய தமிழ் சினிமா உலகில் வயது வித்தியாசமின்றிஅனைவர் இதயங்களிலும் இடம்பிடித்து உச்சத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்களில்களில் இவரும் ஒருவர்...(மேலும்)

என்  பதிவுகளில் என் கருத்தைவிட சமுக வலைதளங்களில்   சொல்பவர்களின் கருத்துக்களே முக்கியத்துவம் பெறும் அதேநேரம் அவைகளில் அநாகரீகமான கருத்துக்கள் என் பதிவுகளில் இடம் பெறாது 

vijay

மேலும்  சினிமா விமர்சனங்கள் செய்திகள் பற்றிய தீர்வுகள் அனைத்தும் என் பதிவுகளில் வாசிப்பவர்களின் தீர்மானத்திற்கே கருத்துக்கணிப்பு மூலம் தீர்வு காண்கிறேன் 

சமீபத்திய  விஜய் பற்றிய கருத்துக்கணிப்பும் முடிவும்.......


நமது பிளாக்கர் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.........


எனவே  விஜய் ரசிகர்களே உங்கள் அபிமான நடிகர் மட்டுமின்றி எந்த நடிகர்களையும் பிரபலங்களையும் என் பதிவுகளில் தவறாக சித்தரிக்கப்படுவதில்லை அப்படி யாரும் என்னை அறியாமல் எழுதப்பட்டால் வருந்துகிறேன் அப்படி இருப்பதை  குறிப்பிட்டால் அதை திருத்தம் செய்கிறேன்.......விஜய் பதிவுகள்

vijay

மீண்டும் சொல்கிறேன் நண்பர்களே!  

நான் எந்த நடிகரின் ரசிகரும் விசுவாசியும் அல்ல

யாரையும் போற்றியும் தூற்றியும் எழுதவேண்டிய அவசியம் இல்லை 


குறிப்பு-யார் மனதும் புண்படக்கூடாது என்பதற்காகவே இப்பதிவு  








































நண்பர்களே! உங்கள் பார்வையில்..........
தலைவா படத்துக்காக நடிகர் விஜய்-க்கு  
விஜய் டிவி விருது கொடுத்தது.....?


வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........

 

Tuesday, July 08, 2014

விஜய் அவார்ட்-கமலுக்கு சிறந்த நடிகர் விருது சரியா?


கமலஹாசனின் உத்தம வில்லன் டீசர் பற்றிய சமுக வலைதள கருத்துக்களும்  கமலஹாசனுக்கு  விஜய் டி.வி சிறந்த நடிகர் விருது வழங்கியிருப்பது பற்றிய கணிப்பும்........ 

நான் கமலின் தீவிர ரசிகன். அவருக்கு விருது கிடைக்கிறது என்றால் அதிக சந்தோஷப்படக் கூடியவன் நான். ஆனால், ”விஸ்வரூபம்” படத்திற்கு விஜய் டி.வி சிறந்த நடிகர் விருது வழங்கியிருப்பது என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை...........என்கிறார் பேஸ்புக்கில் குகன் கண்ணன் 

விஜய்  டிவி வழங்கிய விருதுகள் சூது கவ்வும் படம் தவிர்த்து மற்ற அனைத்து படங்களும் விஜய் டி.வி தொலைக்காட்சி உரிமை வாங்கிய படங்களாக இருப்பதாக  கோடம்பாக்கம் சிணுங்குகிறது

விஜய் அவார்ட்ஸ்’ தொடங்கியபொழுது, அந்த விருதுகளில் இருந்த நடுநிலைமை மொத்தமாக மாறிப்போய் ஸ்டார் நடிகர்களை திருப்திபடுத்தும் விதமாகவே உள்ளது...என்கிறார் பேஸ்புக்கில் ஜானி பால் 

விஸ்வரூபம்  படத்தில் கமல் நடனக் கலைஞராக வரும் சில காட்சிகளும் அவர் விஸ்வரூபம் எடுத்து சண்டையிடும் ஒரு காட்சியும்  கமலுக்கு படத்தில் சிறப்பாக நடித்த சாட்சி 

நடிகர் விஜய் நடித்த தலைவா படத்துக்கு விருது என்பதும் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திற்கும் விருது என்பதும் தமிழ்நாட்டில் இரண்டுபடங்களும் வெளிவர சிரமப்பட்டதை கணக்கில் கொண்டு  அவர்களுக்கு ஆறுதலாக இருக்கட்டும் என்று வழங்கப்பட்டது போல் உள்ளது என்கிறார்கள் கோலிவுட் ஜாம்பவான்கள் 

அவரது   உத்தம வில்லன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பி என்றும் சமீபத்திய அவரது பட டீசர் நிஜாம்  பாக்கு கம்பெனி விளம்பரம் போல் இருப்பதாகவும் சிலர் புலம்புவது இன்னும் அவர் கவனிக்கப்படுகிறார் என்றே காட்டுகிறது




மிஸ்டர் நாவ்!@Thiru_navu 
அணு ஆராய்ச்சி செய்பவர்களை விட நுணுக்கமானவர்கள், கமலை ஆராய்ச்சி செய்து குற்றம் கண்டுபிடிப்பவர்கள்!

அதிஷா@athisha 
காந்தி செத்துடாரானு அதிர்ச்சி ஆகுறவனவிட ஆபத்தானவன் கமல் காப்பியடிச்சிடாரானு அதிர்ச்சி ஆகுறவன்!

Prithivie@ImTweetheartGaL 
கமல்ஹாசன் படங்களில் வெற்றி,தோல்விப்படம் என்று எதுவும் இல்லை,புரிந்து கொள்ளப்பட்ட படம்,புரிந்து கொள்ளப்படாத படம் என்று தான் உண்டு-வைரமுத்து

பகவான்@Mayavi_ 
உத்தமவில்லன் படமே காமெடி படம் தானே.. அதுல கமல கெட்டப் காமெடியா தானே இருக்கும்..இதுல என்னத்தய்யா ஓட்ட ட்ரை பண்றீங்க

பிரம்மன்@altappu 
விஜயாவது நியூயார்க் டைம்ஸை காப்பியடிச்சாப்டி. கமல் அல்பதனமா நிஜாம் பாக்கு விளம்பரத்தை காப்பியடிச்சு டீசர் போடறாப்ல.வாட்டே

நோபிட்டா,@iRaVuSu 
''இந்த நாட்ட விட்டு போறத தவிர வேற வழியில்லேனு'' உருக்கமா நடிச்ச கமலுக்கு, சிறந்த நடிகருக்கான விருத கூட கொடுக்கிலினா எப்டிய்யா ? #


ராஜா@Rajasirr 
அவார்டுக்கு பொருத்தமானவர் கமல் அவரை விமர்சிக்க நமக்கு சினிமாவில் எதும் தெரியாது

இப்படி  உலகநாயகரின் உத்தம வில்லன் டீசரும் அவர் வாங்கிய விஜய் அவார்டும் பலவாறு சமுக தளங்களில் பதியப்பட்டுள்ளது 

kamal

நண்பர்களே! உங்கள் பார்வையில்..........
விஸ்வரூபம் படத்தில் நடித்த கமலஹாசனுக்கு விஜய் டிவி 
சிறந்த நடிகர் விருது வழங்கியது............




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........


Monday, July 07, 2014

சூர்யாவின் அஞ்சான் டீஸர் எப்படியிருக்கு?


லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா-சமந்தா இணைந்து நடிக்கும் அஞ்சான் படத்தின் டீஸர் வெளிவந்தது அதோடு அரசல் புரசலாக படத்தின் கதை ரஜினியின் பாட்ஷா படத்தின் உல்டா என்று.......


அஞ்சானில் சூர்யா ராஜு பாய் என்ற தாதா வேடத்திலும் சிக்கந்தர் என்ற முஸ்லிம் இளைஞராகவும் இரண்டு மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார் பாட்ஷாவில் ரஜினி பாட்ஷா என்ற தாதாவாகவும் மாணிக்கம் என்ற ஆட்டோ ட்ரைவர் வேடத்தில் நடித்தது போல........
                                   thanks-YouTube by Sony Music India


சமுக வலைதளங்களில்..........


ராஜா@Rajasirr 
அஞ்சானா இருக்கரத விட அவார்டுக்காக கெஞ்சானா இருக்க கூடாது

சி.சரவணகார்த்திகேயன்@writercsk 
அஞ்சான் டீஸர் #சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் ஒரு பாலிவுட் துல்லியம்!

ஸ்ரீ…@sreenathbala 
உத்தம வில்லன், அஞ்சான்... நீங்க டீசர் வுடாம இருந்தாலே கொஞ்சம் நம்பிருப்போம்.. இப்ப லைட்டா டர்ராவுது!

வேலையில்லா குந்தன் @kundhanshankarr 
பர்ஸ்ட் லுக் விடறவங்க லாம் சூர்யா அஞ்சான் படத்த பாத்து கத்துகடனும் டா

ஸ்ரீவி சிவா@srivishiva 
ஏன் இப்பிடி டவுசருத் தனமா ஆயிட்டாரு சூர்யா.. ஆக்சன் மசாலா ஹிட் ஆயிரும்னு மினிமம் கியாரண்டியா? #அஞ்சான் ட்ரெய்லர்

The Princess@rajakumaari 
சந்தோஷ் சிவன்க்குன்னு ஒரு கெத்திருக்கு... விஜய்யை துப்பாக்கில பிரம்மிப்பா பார்த்தாப்புல அஞ்சான் டீசர்ல சூர்யாவை பார்த்தேன் #மரணமாஸ் :))

Subha S@prof_subha 
ரத்த சரித்திரம் பார்ட் 2 மாதிரி இருக்கு அஞ்சான் டீசர்

Brazil KK@AiKarthi 
அஞ்சான் டீஸர் - சந்தோஷ் சிவன் கேமரா எல்லாத்தையும் அழகா காட்டுது ஆனா வழக்காமான நண்பன் துரோகியாகற கதையாதான் இருக்கும்போல

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
அஞ்சான் டீசர் எப்படி இருக்குனு கேட்டா? அதைப்பத்தி கமெண்ட் பண்ணாம அஞ்சான் ஃபிளாப் தான் ஆகும்னு ஜோசியம் சொல்றாங்க. அய்யோ ராமா!

Balaraman balu ™@BALARAMANR 
#அஞ்சான் டீசர் #Anjaan சின்னதா வேட்டுச்சத்தம் கேட்டவுடன பயந்து ஓடுறத்துக்கு நான் என்ன புறாவா ! நின்னு நிதானமான இரையை தூக்கிட்டு போற கழுகுடா

krishna@kisnamrsachin 
#சூர்யா #அஞ்சான் ல புறாக்கள் பறக்க நடந்து வருவாப்பிலே! தம்பி இதயும் நாங்க #ஜனா லயே பார்த்துட்டம்! நீங்க இன்னும் வளரனும்! #copycat"

Kulothungan@kulothu 
#சூர்யா #அஞ்சான் ல ஸ்டைல்லா சட்டைய போடுவாருப்பா! டேய் டேய் #பில்லா ல இருந்து அதை #துப்பாக்கி ல சுட்டானுக இப்ப #அஞ்சான் லயுமா?

sivasankar@shiva_papillon 
அஞ்சான் அடுத்த பாட்ஷா னு சொன்னா அதுக்காகவே படத்த வறுத்தேடுப்பாங்க!! he needs better p.r.o.

விஜய்சேதுபதி விசிறி@prakash24894 
வாய்ல குச்சிய வச்சி ஒரு ஸ்டைல் பன்னுவாரு சூர்யா செம ஸ்டைலா நல்லா இருக்கு வித்தியாசமா -அஞ்சான் டீசர்

ரசிகன்!!!@beingthalafan 
ஈஈஈஈஈஈஈஈஈஈ அஞ்சான் மிடில அஞ்சு அடில ஒரு டான் அவன்தான் அஞ்சான்

anjaan

 நண்பர்களே! உங்கள் பார்வையில்.............
அஞ்சான் டீஸர் எப்படியிருக்கு?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..............



UA-32876358-1