google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: August 2014

Sunday, August 31, 2014

சலீம்-சினிமா விமர்சனம்


பாத்திரப்படைப்பும் பின்னணி இசையையும் தவிர விஜய் ஆண்டனியின் சலீம் படம் அவரது நான் படத்தின் முழுமையான தொடர்ச்சி அல்ல ஆயினும் விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு நடிகராக நான் படத்தின் பாதையில் வெற்றி நடைபோடுகிறார்


SALIM

நள்ளிரவில் தனிமையான இடத்தில் ஒரு பெண் தாக்கப்பட்டு காயத்துடன் முனங்கும் சப்தத்துடன் பின்னணியில் சலீம் (விஜய் ஆண்டனி)யின் நமாஸ் காட்சியுடன்  துவங்கும் படம்........

காந்திய வழியில் நம்பிக்கை கொண்ட, மனிதாபிமானமிக்க மருத்துவரான சலீம்  ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனையில் தொழிலுக்கு மரியாதை கொடுக்கும் டாக்டராக பணியாற்றுகிறார்

அடங்காப்பிடாரி  புதுமைப் பெண்ணாக வரும்   அவரது காதலி  நிஷா (அக்சா) சலீமின்  குணத்தைக் கண்டு  அவரை நிராகரித்து அவருடன் நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தையும் நிறுத்தி விடுகிறாள்.

அதேநேரம்.....நோயாளிகளிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டதால் மருத்துவமனையிலிருந்தும் சலீமும்  வேலை நீக்கம் செய்யப்படுகிறார்

இப்படிப்பட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்ட  டாக்டர் சலீம் தனது சாந்தமான நல்ல குணத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு அப்படியே எதிர்மறையாக மாறி...........

ஒரு பெண் ரேப் செய்யப்பட்டதில்  ஓர் அரசியல்வாதியின்  மகனையும் அவனது நண்பர்களையும்   ஒரு ஓட்டல் அறையில் துப்பாக்கி முனையில் பிணையக் கைதியாக சிறைபிடிக்கிறார் அந்த ஓட்டலைச் சுற்றி நிறைய துப்பாக்கி ஏந்திய போலீசார் என்று படு பயங்கர சூழ்நிலையில்..........

சலீம் தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா....? என்பதை பார்வையாளர்கள் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் திருப்பத்துடன் இயக்குனர் NV நிர்மல்குமார் சிறப்பான திரைக்கதையால் படம் காட்டுவதே............சலீம் படம்

விஜய் ஆண்டனியே ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்பதால் சலீம் படத்தின் பின்னணி இசையில்...குறிப்பாக அதன் தீம் மியுசிக் கதையின் தன்மைக்கு ஏற்ப உருவாக்கி உள்ளார் . பாடல்கள்  படத்தின் ஓட்டத்துக்கு இடையுறு இல்லாதபடி உள்ளது அதேநேரம் அவரது நடிப்பும் பாராட்டும்படி உள்ளது

படத்தில் சீரியசான இடங்களில் வரும் சில சிரிப்பூட்டும் வசனங்கள் அரங்கில் பார்வையாளர்களிடம் கைதட்டல் பெறுகிறது 

அதேநேரம் சிறப்பான திரைக்கதையில் சில இடங்களில் உள்ள சறுக்கலை சரி செய்து படத்திற்கு இன்னும் விறுவிறுப்பு கூட்டியருந்தால் சலீம்.........

 நான் படம் போன்று ஒரு சிறப்பான இடத்தை கோலிவுட்டில் பிடித்திருக்கும்

விஜய் ஆண்டனியும் அஜித்,விஜய்,சூர்யா...போன்ற சிறந்த நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பார்  




படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........  
விஜய் ஆண்டனியின் சலீம்-படம் எப்படியிருக்கு?



படம் பார்த்துவிட்டு வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........



Friday, August 29, 2014

இரும்பு குதிரை-சினிமா விமர்சனம்


ஒரு விருது நடிகர் (அதர்வா),இரண்டு கவர்ச்சி நடிகைகள் (பிரியா ஆனந்த்,ராய் லட்சுமி), ஒரு பயங்கர வில்லன் (ஜானி ட்ரை ஙுயென்)....இவர்களை வைத்து  யுவராஜ் போஸ் நமக்கு படம் காட்டுவது......இரும்பு குதிரை

 ஹாலிவுட் IRON HORSE படத்தின்  தாக்கத்தில் நிஜ பைக் ரேஸ் ஓட்டுபவர்களின் ஆசாபாசங்களை பிரதிபலிப்பதாய் வந்துள்ள
இரும்பு குதிரை படத்தின் கதையாக......

ஒரு விபத்தில் தன் தந்தை இறந்து போனதால் மிகவும் மெதுவாக பைக் ஓட்டக்கூடிய ஒரு சாதாரணமான பைக்கர் திறமையான அதிவேக  பைக்கராக மாறுவதே 


irumbukuthirai

புதுச்சேரியில் CA படித்துவிட்டு பகுதி நேர பிஸ்ஸா டெலிவரி பாயாக வேலை செய்யும் பிருத்வி (அதர்வா) மெதுவாக பைக் ஒட்டுவதால்  அடிக்கடி கேலிசெயயப்படுகிறார்

ஒருநாள் பிருத்வி தன் காதலி சம்யுக்தா (பிரியா ஆனந்த்) வுடன் ECR ரோட்டில் பைக்கில் வரும் போது......

ஜானி ட்ரை ஙுயென் தலைமையில் சிலர் பைக்கில் வந்து பிருத்வியை இடித்து தள்ளிவிட்டு அவனது காதலி சம்யுக்தாவை கடத்திச் செல்கின்றனர்

ஏன் இந்தக் கடத்தல்....? என்பதையும் 
எப்படி அதர்வா தன் காதலியை மீட்கிறார்...? என்பதையும்  
காதல் கலந்த அதிரடிக் காட்சிகளுடன் படம் காட்டுகிறார் இயக்குனர் யுவராஜ் போஸ் 

இயக்குனரின் டச்......... இதுவரை கோலிவுட் படவுலகில் காண்பிக்கப்படாத ஹாலிவுட் fast and furious படங்களின் ஸ்டைல்  கதை ஆயினும் பார்வையாளர்களை ஈர்த்திட தவறிய சொதப்பல் திரைக் கதையால் இரும்பு குதிரை நொண்டியடித்தாலும்......

முன் பாதி முழுக்க அழகான காதல் காட்சிகளில் ஓடிவிடும் படம் பின் பாதியில் வரும் ஜானி-அதர்வா சண்டைக்காட்சி.....அதிலும் கடைசி 20 நிமிடங்கள் அதிரடி அமர்களமாக இருக்கிறது 


irumbukuthirai

நடிகர்-நடிகையரின்.........

அதர்வாவின் கட்டுமஸ்தான உடலமைப்பு,தீர்கமான பார்வையும் பிரியா ஆனந்த்-தின்  கவர்ச்சி ஒப்பனையும்  படத்துக்கு காதல் உயிர்வூட்டுகிறது தேவதர்ஷினி அதர்வாவின் அம்மாவாக   அவருக்கே உரிய நடிப்புடன் நடிக்க ஜெகன்-ராய் லட்சுமி அவரது நண்பர்களாக சிரிப்பூம் கவர்ச்சியும் ஊட்டுகின்றனர் 7-ஆம் அறிவு வில்லன் டாங் லீ-யான  ஜானி ட்ரை ஙுயென் வரும் காட்சிகளில் அரங்கம் கொஞ்சம் அதிர்கிறது

GVP இசையில்....... 
"அங்கே இப்போ என்ன செய்கிறாய்...?" பாடல் மட்டுமே திரையில் கேட்பதற்கும் பார்பதற்கும் இதமாக உள்ளது "ஹலோ பிரதர்" பாடலில் ராய் லட்சுமியின் குத்தாட்டம் கவர்ச்சி.......பின்னணி இசையில் நிறைய ஹாலிவுட் படங்களை GVP காப்பி   குடித்தது போல் பிரமை.....

குருதேவ்-கோபி அமர்நாத்  ஒளிப்பதிவில்.....
 ஹாலிவுட் படங்களின் வண்ணமும் கனவுப் பாடல்களின் பிரகாசமான  விஸுவலும் நச்சென மிளிர்கிறது அதிலும் பைக் பாய்ந்து செல்லும் அதிரடிக் காட்சிகளில் இவர்களின் கேமரா காட்டும் வித்தை  நம்மைக் கவர்கிறது புதுச்சேரி-கேரளாவில்  நடக்கும் கதைக்கு இத்தாலியில் உள்ள காட்சிகள் கண்ணைக் கட்டுகிறது

  படம் எப்படியிருக்கு....?
பாய்ந்து செல்லும் பைக் காட்சிகள், கவர்சிக் கன்னியருடன் வண்ணமயமான பாடல்கள், கட்டுமஸ்தான உடல் கட்டுடன் வரும் நடிகர்கள்....இவைகளால் நீங்கள் வெளியுலகை மறந்து இரண்டு மணிநேரம் மகிழ்வாக இருக்க இன்னொரு கவர்ச்சி உலகத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்..... இரும்பு குதிரை 



பைக் ரேஸ் என்றால் தல அஜித் இல்லாமலா....? ஒரு காட்சியில்  தல போஸ்டர் காட்டி அவரது ரசிகர்களை குஷிப்படுத்துகிரார்கள்


இவைகள் மட்டுமின்றி வேறு பெரிதாக நீங்கள் எதிர்பார்த்து சென்றால் இரும்பு குதிரையில் உங்கள் பயணம் பெரிதாக இருக்காது 



படம் பார்த்தவர்களின் மதிப்பீடு.........

இரும்பு குதிரை-படம் எப்படியிருக்கு?



படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......
 

 

Wednesday, August 27, 2014

தி எக்ஸ்பென்டபில்ஸ் 3 - சினிமா விமர்சனம்

ரஜினி,கமல்,விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம்...போன்ற கிழட்டு நடிகர்களுடன் ஆர்யா,விஷால்,அதர்வா,விக்ரம் பிரபு,கெளதம் கார்த்திக்,சிம்பு...போன்ற இளம் நடிகர்கள்  நடித்து கோலிவுட்டில் ஒரு படம் வந்தால் எப்படியிருக்குமோ....? அந்த உணர்வு தருகிறது ஹாலிவுட் படம்......... தி எக்ஸ்பென்டபில்ஸ் 3

உலகளவில் பயங்கர ஆயுத வியாபாரி தலைவனை  சில்வஸ்டர் ஸ்டலோன் தலைமையிலான எக்ஸ்பென்டபில்ஸ் டீம் கண்டுபிடித்து அழிப்பதே படத்தின் கதை 

எக்ஸ்பென்டபில்ஸ் தலைவர் சில்வஸ்டர் ஸ்டலோன் தனது குழுவினருடன்  இராணுவ சிறையிலிருக்கும்  தங்கள் முன்னாள்  நண்பரை ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஓடும் ரயிலில் சாகச சண்டையிட்டு மீட்பது போல்  படம் துவங்குகிறது 

சில்வஸ்டர் ஸ்டலோன்  இவர்களுடன்  சென்று சோமாலியாவில் சட்டவிரோத ஆயுத வியாபாரம் செய்யும் கும்பலை தடுக்கும் போது ஏற்படும் சண்டையில் ஆயுத வியாபார தலைவன் மெல் கிப்சன் சுட்டதில் எக்ஸ்பென்டபில்ஸ் குழுவில்  இவர்களுக்கு உறுதுணையாக இருந்த   சீசர் (Terry Crews) காயம்படுகின்றார்

அதனால்  சில்வஸ்டர் ஸ்டலோன் தன் பழைய நண்பர்களை விட்டுவிட்டு எக்ஸ்பென்டபில்ஸ் அமைப்பாளர் ஹாரிசன் ஃபோர்டு தூண்டுதலால் லாஸ் வேகாஸ் சென்று தனது அணிக்கு இளம் கூலிப்படையினரை திரட்டுகின்றார் 


சில்வஸ்டர் ஸ்டலோன் இந்த புதிய இளம் அணியில் உள்ள   (ஒரு முன்னாள் கடற்படை வீரன்,  ஓர் இரவு விடுதி பெண் பாதுகாவலர், ஒரு கணணி நிபுணர் மற்றும்  ஓர் ஆயுத வல்லுனர்) கூலிப் படையினர் உதவியுடன் மெல் கிப்சனுடன் மோதும் போது...

மெல் கிப்சன் அந்த இளம் அணியினரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொள்கிறார் 

மீண்டும் சில்வஸ்டர் ஸ்டலோன் தன் பழைய  எக்ஸ்பென்டபில்ஸ் அணி நண்பர்களுடனும்  அவரது இன்னொரு நண்பர் அர்னால்ட் உதவியுடனும் ஆயுத வியாபாரி மெல் கிப்சனை அழித்து இளம் அணியினரை மீட்பதுடன் படம் நிறைவடைகிறது 

அப்படியே சில்வஸ்டர் ஸ்டலோன் தலைமையில் புதிய திறமைகளுடன் இன்னொரு இளம் அணியினர் அடங்கிய தி எக்ஸ்பென்டபில்ஸ் 4 படத்திற்கு இயக்குனர் ஹக்ஸ் கதவு திறந்து வைக்கிறார்



எக்ஸ்பென்டபில்ஸ் பழைய அணியில் ஹாலிவுட் கிழட்டு நடிகர்களும் புதிய அணியில் இளம் நடிகர்களும் கலக்கலாக நடித்துள்ளனர் ஒருவருக்கொருவர் பெரிசு-இளசு என்று நக்கலடிப்பது செம காமெடி........
 
படம் முழுக்க சில்வஸ்டர் ஸ்டலோன் மட்டுமே நிறைந்து இருந்தாலும் அர்னால்ட் வரும் சில காட்சிகளில் மட்டுமே அரங்கம் அதிர்கிறது 


தி எக்ஸ்பென்டபில்ஸ் 3 தமிழ் பதிப்பில் வசனங்கள் நம்ம கோலிவுட் படங்களில் வருவதைவிட சுவராசியமாக உள்ளது நிறைய பன்ச் வசனங்கள் சிரிப்பூட்டுகிறது மேலும் படையப்பா படத்தில் வரும் வெற்றி கொடிகட்டு....பாடல் ரசிக்கும்படி உள்ளது   

தமிழில் வரும் அதிரடிப் படங்களைவிட தமிழாக்கம் செய்யப்பட்ட  தி எக்ஸ்பென்டபில்ஸ் 3  ஹாலிவுட் படம் ரொம்ப தமாஸாகத்தான் உள்ளது நேரம் போவதே தெரியவில்லை 




Saturday, August 23, 2014

கபடம்-சினிமா விமர்சனம்


காதல்-நட்பு-துரோகம் இம்மூன்றையும்  ஹாலிவுட் Across The Hall படத்தை நேர் எதிர்,உன்னோடு ஒரு நாள் படத்துடன் மூன்றாவது முறையாக காப்பியடித்து இயக்குனர் ஜோதிமுருகன் படம் காட்டுவதே.... கபடம் 

விச்சு (சச்சின்) தன் வருங்கால மனைவி பத்மினியை (அங்கனா ராய்) பின்தொடர்ந்து ஒரு தங்கும் விடுதிக்குச் சென்று அவள் தங்கியுள்ள அறைக்கு எதிர் அறையில் தங்கி ஆத்திரத்தில் தன் நண்பன் சிவாவுக்கு போன் செய்து பத்மினி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவளை கையும் களவுமாக பிடித்து விட்டதாகவும் கொலை செய்யப்போவதாகவும் சொல்கிறான்

kabadam

விச்சு சிவாவிடம் பேசும் போது.... 
அவன் முதன் முதலாக பத்மினியை  கோயிலில் பார்த்து காதல் கொண்டது, பத்மினிக்கும் அவனுக்கும் திருமணம்  நிச்சயிக்கப்பட்டது, 
விச்சுவுக்கு பத்மினியின்  நடவடிக்கை மீது சந்தேகம் எழுந்தது,
பத்மினியை  பேருந்தில் அனுப்பிவிட்டு விச்சு அவளைப்  பின் தொடர்ந்தது,
லாட்ஜில் அறை எடுத்தது வரை அனைத்தும் பிளாஸ் பேக்காக சொல்கிறான்...

விச்சுவின் பதட்டத்தை புரிந்து கொண்ட சிவா அவனை தான் லாட்ஜ்க்கு வரும் வரை 20 நிமிடம் எதுவும் செய்யாமல் பொறுமையாக இருக்க வேண்டுகிறான் ஆனால் விச்சு பொறுக்கமுடியாத ஆத்திரத்தில் பத்மினியை கொல்ல முயல்கிறான் 
kabadam


விச்சு தன வருங்கால மனைவியை கொலை செய்தானா...? ஏன் பத்மினி விச்சுவுக்கு துரோகம் செய்தாள்....? பத்மினியின் கள்ளக்காதலன் யார்...? என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

சச்சின் முகத்தில் பல உணர்சிகளை காட்டி நடித்துள்ளார் காதல் சரவணன் லாட்ஜ் ரூம் பாயாக வருகிறார் அங்கனா ராஜ் அழகாகவும் கவர்ச்சியாகவும் தோன்றி கிளுகிளுப்பு ஊட்டுகிறார்  

kabadam


ஏற்கனவே நிறைய தமிழ் படங்கள் (நேர் எதிர்,உன்னோடு ஒரு நாள்) ஹாலிவுட் Across The Hall படத்தில் வரும்  கள்ளக் காதல் கதையை  இங்கே படம் காட்டிவிட்டதால் கபடம் திரைப்படம்-கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் ஏற்படுத்தவில்லை 

ஆனாலும் ஜோதி முருகன் யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ் வைத்து திகில் பட நேயர்கள் விரும்பும் வண்ணம் விறுவிறுப்புடன் காதல் திகில் திரைப்படமாக கபடம் படத்தை படைத்துள்ளார் 




Friday, August 22, 2014

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி-சினிமா விமர்சனம்


குடும்பம்,காதல்,சென்டிமென்ட்.. கலந்த காமெடிக் கதையுடன்  21-க்கு மேற்பட்ட  சிரிப்பு நடிகர்கள் நடித்த..... ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படம்  உண்மையில் நகைச்சுவை சினிமாப் பிரியர்களுக்கு நல்ல விருந்து 

25 ஆண்டுக்கு முந்திய கருப்பு வெள்ளை பிளாஸ் பேக் காட்சியாக.... தவறான பதில் சொன்ன சிறுவன் சிகாமணியை ஓட ஓட விரட்டி  அடித்த பள்ளிக்கூட ஆசிரியரிடம் அவனது பணக்கார தந்தை (மறைந்த நடிகர் காதல் தண்டபாணி) இனிமேல் பள்ளிக்கூடம் பக்கம் தன மகனை அனுப்ப மாட்டேன் என்று சபதம் செய்வதுபோல் காமெடியாக துவங்குகிறது....

எதுவும் எழுத-படிக்க-எண்ணத் தெரியாதவராக இருந்தாலும்   சித்த  மருத்துவத்தில் சிறந்த நிபுணராகவும் அவரது குடும்பத்தில் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்தியராக  சிறந்து விளங்குகிறார்  சிகாமணி (பரத்

அவரை ஏமாற்றிப் பிழைக்கும்  நண்பர்கள் (சௌந்தர்,கொட்டாச்சி, படவா கோபி) மத்தியில் சிகாமணி தன சக வைத்தியர்கள் பால்பாண்டி (கருணாகரன்), சிவ கார்த்திகேயன் (இமான் அண்ணாச்சி) சூரி (மனோபாலா)... இவர்களுடன் வெற்றிகரமாக சித்த வைத்திய சாலையை நடத்துபவருக்கு ஒரு படித்த பெண்ணை மணக்க  திருமண தரகர் விஜய் சேதுபதி (சிங்கம் புலி) மூலம் பல பெண்களை  தேடியும் கிடைக்காததால்.............


சிகாமணியே தனது நண்பன் பால்பாண்டியுடன் நம்ம பழைய காதல் சினிமாக்களில் வரும் ஹீரோ போல் ஒரு பொறியல் கல்லூரி வாசலில் போய் நின்று டாவ் அடித்து....

 கடைசியில் நம்ம நாயகி நந்தினியை (நந்திதா) படித்த வாலிபர் போல் நடித்து காதலித்து அவளது தந்தை சிலம்பம் சின்னத்துரை (தம்பி ராமையா) யை சந்திக்க, அவரும்  தவறுதலாக நம்ம சிகாமணியை MBBS டாக்டர் என்று நினைத்து திருமணத்துக்கு சம்மதிக்க.....
படிக்காத சிகாமணிக்கும் படித்த நந்தினிக்கும் திருமணம் நடக்கிறது  

இதை அறிந்த நம்ம சிகாமணியை ஏய்த்துப பிழைக்கும் நண்பர்கள் கூட்டமும்  அவரால் பாதிக்கப் பட்ட லோக்கல் ரவுடிகள் கூட்டமும் சிகாமணியின்  திருமண வாழ்க்கையை சீர்குலைக்க நினைக்கிறது 

அது நடந்ததா...? என்பதையும்  அதைத் தொடர்ந்து வரும் காமெடி ட்விஸ்ட்களையும்  திரையில் காணுங்கள்
 
இப்போதைய காலகட்டத்தில் நகைச்சுவை உணர்வு உள்ள லைட் வெயிட் கதையே ரசிகர்களை சென்றடைகிறது என்பதை அறிந்த இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் அதை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளார் 

சில நேரங்களில் அவரது லாஜிக் இல்லாத அதிகப்படியான வசனங்கள்,அளவுக்கு மீறிய காமெடி நடிகர்களை கையாளும் திறன் இல்லாதது .....கதையை தடம் புரண்டோடச் செய்கிறது 

நடிகர் பரத்...... அவருடைய 25 வது படம் என்ற முக்கியத்துவமாக தனது அப்பாவித்தனமான பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்துள்ளார் 

நந்திதா.... தனது வழக்கமான நடிப்புடன் பாடல்களில் கவர்ச்சி மிளிர மின்னுகிறார் தம்பி ராமையா.... மற்ற நடிகர்களை பின்னுக்கு தள்ளி ஆயினும் அவரது ஓவர் ஆக்டிங் வார்த்தைப் பிரயோகம் சில நேரங்களில் சலிப்பூட்டுகிறது 

பறந்துவரும் துப்பாக்கி புல்லட்கள், இரத்தம் சிதறும் அருவா வெட்டுகள்,ஜொள்ளு வடிக்க வைக்கும் கவர்ச்சி குத்துக்கள் நிறைந்த கோலிவுட் திரையுலகில்   இவைகள் எதுவும் இல்லாத நகைச்சுவை மிளிரும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணியை ஒருமுறை குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம் 

சித்த வைத்தியத்தின் பெருமையையும் படிப்பின் அருமையையும் காமெடி கலந்த ஆரோக்கிய லேகியமாக கொடுத்த  இயக்குனரையும் பாராட்டலாம்.....


Wednesday, August 20, 2014

சிங்கம் ரிட்டர்ன்ஸ்(இந்தி)-சினிமா விமர்சனம்

 நீங்கள் அஞ்சான் சூர்யாவின் சிங்கம் 2-படம் பார்த்தவராக இருந்தால் அதன்   இந்தி தொடர் ரீமேக் அஜய் தேவ்கனின் சிங்கம் ரிட்டர்ன்ஸ் படத்தை பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்

 சிங்கம் படத்தில் வரும் அதே கம்பீரமான,பயமறியா கோவா பார்டர் போலிஸ் அதிகாரி ACP பாஜிராவ் சிங்கத்தை (அஜய் தேவ்கன்) சிங்கம் ரிட்டர்ன்ஸ் (இந்தி) படத்தில் மும்பாய் போலிஸ் அதிகாரி DCP ஆக இன்னும் அதீத சக்தியுள்ளவராக இயக்குனர் ரோஹித் ஷெட்டி படைத்துள்ளார் 


beach
தன் சக நேர்மையான போலிஸ் அதிகாரி மர்மமான முறையில் ஓர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கறுப்பு பணக்குவியலில் இறந்துகிடப்பதை கண்ட பாஜிராவ் சிங்கம்  கொலையாளிகளான அந்தக் கறுப்பு பணத்துக்கு முதலாளிகளான ஒரு  போலி சாமியார் பாபா (அமோல் குப்தே) மற்றும் ஓர் அரசியல்வாதி (ஜாகிர் உசேன்)  ஆகியோர்களை தண்டிப்பதே படத்தின் கதை............

இயக்குனர் ரோஹித் ஷெட்டி போலிச்சாமியாரின் கதாப்பாத்திரத்தை நித்தியானந்தாக்கள் சாயலில் மர்மக்குகையில் பெண்களுடன் கும்மாளமிடுவது போன்றும்  வெளியில் கோமாளியாகவும் இரு வேறுபட்ட கோணத்தில் படைத்துள்ளார் இன்னும் குருஜி (அனுபம் கெர்) அன்னா ஹசாரே போன்று  கதாப்பாத்திரம், மகாராஷ்டிரா முதல்மந்திரி (மகேஷ் மஜ்ரேகர்)கலகலப்பு ஊட்டுகிறார்



இவர்களுடன் பாஜிராவ் சிங்கம் அவ்வப்போது அவ்னி (கரீனா கபூர்) வுடன் செய்யும் காதலும் ஆட்டமும் அதிரடி சண்டைப் படத்துக்கு மெல்லிய நாதமாக சிறப்பூட்டுகிறது 


சில மத அமைப்புகள்,அரசியல் கட்சிகள் நம்ம  கோலிவுட் திரைப்படங்களில் சிலவற்றை அவ்வப்போது தடைகோரி கோர்ட் வாசல்கதவை தட்டுவது போல் சிங்கம் ரிட்டர்ன்ஸ்(இந்தி) படமும்  இந்து சாமியார்களை மோசமாக படம் காட்டுவதாக தடை செய்ய வேண்டி Hindu Janajagruti Samiti (HJS) அமைப்பால் CBFC-க்கு மனு போட்டது குறிப்பிடத்தக்கது 

அஜய்-ரோஹித்-கரீனா கூட்டணியினரின் சிங்கம் ரிட்டர்ன்ஸ் 2014 பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்த படமாக வரலாம் என்று விமர்சகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது 


singham

சிங்கம் ரிட்டர்ன்ஸ்....அஜய் தேவ்கனின் யதார்த்தமான சண்டைக் காட்சிகளால் பாலிவுட்டின் வித்தியாசமான படவரிசையில் இடம்பிடித்துள்ளது  

அதேநேரம் தமிழ் சிங்கம்-2 படத்தில் வரும் போதைப் பொருள் கடத்தல்,வெளிநாட்டு வில்லன்...போன்று எதுவும் இல்லாமல் முற்றிலும் வேறுபட்டு புதுமையான கதைக்களத்துடன் போலி சாமியார் போலி அரசியல் போன்றவைகளுடன்.......சிங்கம் ரிட்டர்ன்ஸ்....  லண்டன் மேடம் டுஷாட்ஸில் சிங்கம் ரிட்டர்ன்ஸ் நாயகி கரீனா கபூருக்கு மெழுகு சிலை எது ஒரிஜினல்...? எது சிலை? pic.twitter.com/JM2i9G6NDq

Monday, August 18, 2014

காவியத்தலைவன்-படப்பாடல்கள் எப்படியிருக்கு?


ஏ.ஆர்.ரகுமானின் மந்திர இசையில் வசந்த பாலன் இயக்கம் 1920- காலக் கட்டத்தைச்  சார்ந்த நாடகக் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை படம் காட்டும் காவியத்தலைவன் படத்தில் மனம் கவரும் பாடல்கள்.....

1-யாருமில்லா........


பா.விஜய் வார்த்தைகளில் சுவேதா மோகன்-ஸ்ரீனிவாஸ் குரல்களில்  நமக்கு  பண்டைய திரைப்படங்களையும் அதில் அமைந்துள்ள உயிரோட்டமான கண்ணதாசன் வார்த்தைகளில் எம்.எஸ்.விஸ்வநாதன்  இசையமைப்பில் டி.எம்.எஸ்.-சுசீலா இணைந்து பாடிய பாடல்களை நினைவூட்டுகிறது 

2-ஏய் மிஸ்டர் மைனர்..........

                                       thanks-YouTube by Sony Music India
இதுவும்  முந்தைய பாடல் போன்று பழமை மாறாமல்  பா.விஜய் வார்த்தைகளில் ஹரிசரண்-சாஷா குரல்களில் இருவர் படத்தில் வரும் ஏ.ஆர்.ரகுமானின்  'ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி' பாடலை நினைவுப்படுத்துகிறது

3-வாங்க மக்கா வாங்க..........

                                 thanks-YouTube by Sony Music India
நா.முத்துகுமார் வார்த்தைகளில் ஹரிசரண்-நாராயணன் பாடிய இப்பாடல் இன்றைய இசைப் பிரியர்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது.இது ஒரு நாடக குழுவின் விளம்பர பாடல் போன்று எல்லோருக்கும் அழைப்பு விடுவது போல் உள்ளது.

4-சண்டி குதிரை...........

                                       thanks-YouTube by Sony Music India
பா.விஜயின் நகைச்சுவை  வார்த்தைகளில் ஹரிசரண் மூச்சுவிடாமல் பாடிய இப்பாடல் படத்தில் வரும் ஒரு நகைச்சுவை நாடகத்தில் வருவதுபோல் தெரிகிறது பாடலில் பல்வேறு வித்தியாசமான இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு கடைசியில் சிரிப்போலியுடன் முடிகிறது 

5-சொல்லிவிடு சொல்லிவிடு.........

                                         thanks-YouTube by Sony Music India
பா.விஜய் எழுதிய இப்பாடலில் முகேஷ் குரலில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் நம் இதயத்தை தாக்குகிறது யுத்த களத்தில் அர்ஜுனன் அழுகுரலுடன் கிருஷ்ணனுடன்போரை நிறுத்த மன்றாடுவதுபோல் பாடுகிறது இப்பாடல் ஒரு நாடகத்தில் வருவதாயினும் நமக்கு தற்போதைய யுத்த உலகின் இருண்ட சூழ்நிலையை படம்காட்டுகிறது

6-திருப்புகழ்..........
                                               thanks-YouTube by Sony Music India
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலை ஏ.ஆர்.ரகுமானின் வீணை மிருதங்கம்  இசையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாணி ஜெயராமின் இனிமையான குரலில் புத்துணர்ச்சி ஊட்டும் தெய்வீக தன்மையுடன் அன்னையின் தாலாட்டு கேட்பதுபோல் உள்ளது.

7-அல்லி அர்ஜுனா.........

                                           thanks-YouTube by Sony Music India
அமரகவி  வாலியின் வார்த்தைகளில் ஹரிசரண்-பேலா ஷிண்டே பாடிய இப்பாடல் பேலட் (‘Ballad’) வகையைச் சார்ந்தது அர்ஜுனனின் அல்லி மீது காதலும் அதைத் தொடர்ந்து நடக்கும் காமம்,கல்யாணம்,ஊடல்...என்று தமிழர் கலாச்சாரத்தை பறை சாற்றும் வார்த்தைகளுடன் வலம் வருகிறது 
 காவியத்தலைவன்-படப்பாடல்கள் எப்படியிருக்கு?  



வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி..........




Sunday, August 17, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம்-சினிமா விமர்சனம்

கதையே இல்லாத ஒரு சினிமா  என்று ராதாகிருஷ்ணன் பார்த்திபன் கதைத்தாலும்  அவரது வழக்கமான நக்கலும் புதுமையும் கலந்த கதை தேடி அலையும் சினிமாக்காரர்கள் பற்றிய ஒரு வித்தியாசமான சினிமா கதையுடன் ....கதை திரைக்கதை வசனம் இயக்கம்

படத்தின்  ஆரம்பமே படு அமர்களமாக...வானுயர்ந்த கட்டிடத்தை தகர்க்கும் சுனாமி அலை என்று  ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு காட்சி....

அடுத்து பிரியாணிக்கும் பழைய சோறுக்கும் உள்ள வித்தியாசத்தை நையாண்டி செய்யும் கோலிவுட் ஸ்டைல் காட்சி.....

அடுத்து ஒரு கிட்டார் பிளேயர் தனது மாணவர்களுடன் தர்க்கம் செய்வது யுத்த களத்தில் போரிடும் வீரர்கள் போன்ற காட்சி....

அப்படியே பேண்டஸி உலகத்தில் பிரம்மா குழந்தைகள் தலையில் மூளை அசெம்பிளி செய்யும் புதுமையான காட்சி......

இப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பல்வேறுபட்ட சிந்தனைச் சிதறலாக நான்கு  காட்சிகள் வந்தாலும் இவையெல்லாம் திரைப்பட இயக்குனர் ஆக ஆர்வம்கொண்ட தமிழ் (சந்தோஷ்)  தனது இளம் கூட்டாளிகள் ஷெர்லி,முரளி,அரவிந்த் மற்றும் சினிமா அனுபவமிக்க முதியவர் சீனு (தம்பி ராமையா) வுடன் ஒரு சினிமா கதைக்கான விவாதம் 

இவர்கள் ஒவ்வொருவருக்கும்  நகைச்சுவை,சென்டிமென்ட்,சோகம்,காதல் கலந்த ஒரு கதை இருக்கிறது இவர்களுடன் தமிழை  உயிராய் நேசிக்கும் மனைவி தக்க்ஷா (அகிலா கிஷோர்)  ஒருதலையாய் காதலிக்கும் எதையும் முன்கூட்டியே அறியும் ஓர் இளம் பெண்,தயாரிப்பாளர் மூர்த்தி என்று படம் நகர்கிறது 

நிஜக் கதாப்பாத்திரங்களாக  கலை ஞானம், சேரன், யுடிவி தனஞ் சேயன் மற்றும் நிஜக் கலைஞர்கள் பிரகாஷ் ராஜ், ஆர்யா, அமலா பால், விஷால், விஜய் சேதுபதி, தப்ஸி, ராகவா லாரன்ஸ், சாந்தனு, விமல், இனியா, பரத்...என்று ஒரு கூட்டமே நடித்துள்ளார்கள் ஆர்யா-அமலா தம்பதியராக நடித்துள்ளனர் 

கதை திரைக்கதை வசனம் இயக்கம்..... இயக்குனர்  பார்த்திபன் இப்படி புதுமுக நடிகர்களையும் அனுபவ நடிகர்களையும் திறம்பட உபயோகப்படுத்தி தனக்கே உரிய நக்கல்,குத்தல்,நையாண்டி வசனங்களால் தனது சினிமா உலகத்தையும் காயப்படுத்தி சிரிக்க வைத்து படு நேர்த்தியாக படம் காட்டுகிறார் 

சத்யாவின் பின்னணி இசையில் நகரும் படத்திற்கு  நான்கு இசைக் கலைஞர்கள் இசையில் நான்கு பாடல்கள் பரவாயில்லை ரகம் ராஜரத்தினத்தின் இன்டோர் ஒளிப்பதிவு அருமை எடிட்டர் சுதர்சனின் நறுக் கட்டிங் படத்திற்கு விறுவிறுப்பு 

கதை திரைக்கதை வசனம் இயக்கம்......... படம் கடிவாளம் இல்லாத குதிரை போன்று அங்கே இங்கே ஓடினாலும் இயக்குனர் பார்த்திபன் தனது குண்டூசி வசனங்களால்வெற்றிப்  பாதையில் இப்படத்தை பயணிக்க வைக்கிறார் 


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு............

கதை திரைக்கதை வசனம் இயக்கம்-
 படம் எப்படியிருக்கு?



வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி............


Saturday, August 16, 2014

புலிப்பார்வை-எதிர்க்க வேண்டிய படமா?


புலிப்பார்வை படமும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான  படங்களில் ஓன்று என்று  இசை வெளியிட்டு விழாவில் எதிர்ப்பு குரலிட்ட லயோலா கல்லூரி  மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்

"மகிந்த ராஜபக்சே, கலாச்சாரம் மற்றும் வணிகம் மூலம் தமிழகத்தில் கால் பதிக்க முயற்சிக்கிறார். அதற்கு இங்கிருக்கும் சிலரே உதவி வருகின்றனர் என்கிறார் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன்

பாலச்சந்திரன் படுகொலை, ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்தெல்லாம் சர்வதேச விசாரணை நடக்கும் வேளையில், அதை திசை திருப்பும் ராஜபக்சேவின் முயற்சியே புலிப்பார்வை போன்ற படங்கள் என்று மாணவர்கள் போராடுகின்றனர் 


சமீப காலங்களில் இதுபோன்ற தமிழீழ விரோத என்னத்தை விதைக்கும்
மிகுந்த போராட்டங்களுக்கிடையில் வெளிவந்த சந்தோஷ் சிவன் இயக்கத்தில் லிங்குசாமி தயாரித்த இனம் திரைப்படம் எதிர்புக்களுக்கிடையில் வெளிவந்தும் முடங்கிப் போனது 

இன்று இணையத்தில் படு மோசமாக விமர்சிக்கப்படும் அஞ்சான் படம்கூட இனம் படத்தை தயாரித்த இயக்கியவர்களின் படம் என்பதாலேயே என்றும் அதன் மோசமான பிரதிபலிப்புதான் இது  என்றும் பேசப்படுகிறது  

அந்த வகையில் புலிப்பார்வை படமும் சரித்திரத்தை தரித்திரமாக சித்தரிப்பதாக எதிர்க்கப்படுகிறது இதுவரை மாணவர்களுக்கு ஆதரவாக இருந்த நாம் தமிழர் இயக்க சீமான் அமைப்பினர் இத்தகைய  படங்களுக்கு  ஆதரவாக  மாணவர்களையே தாக்குவது சினிமாவில் வரும் ட்விஸ்ட் போல உள்ளது 

அவ்வப்போது  கத்தி படமும் ராஜபக்சே நண்பர் ஈழத் தமிழர் ஒருவரால் எடுக்கப்படுவதாக எதிர்க்கப்படுகிறது

கத்தி மற்றும் புலிப்பார்வை படத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மதிமுக உட்பட பல அமைப்புகள் ஆதரவு செய்கின்றன
அதேநேரம்  சில சுயநல தமிழர் அமைப்புகள் இப்படி படங்களுக்கு எதிராக தேவையில்லாமல் போராடுவதாக கோலிவுட் இயக்குனர்,தயாரிப்பாளர் வட்டங்கள் புலம்புகின்றன 

ஒரு படத்தை தடை செய்யும் பொறுப்பு ஆளும் அரசுக்கு மட்டுமே உண்டு என்றும் கத்தி,புலிப்பார்வையை  எதிர்த்து/ஆதரித்து, புகழ்பங்கு கொள்ள ஏகப்பட்ட அமைப்புகள்,போட்டாபோட்டி! என்று ஏளனமும்  செய்கின்றனர்  

இன்னும்  சிலர் எதுக்கு இந்த போராட்டங்கள்......... உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் படம் பார்க்காமல் புறக்கணியுங்கள் இனம் படத்தை செய்தது போல்.......

புலிப்பார்வை  படம் விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை தவறாக சிறார் போராளி போல்  சித்தரிப்பதாக சொல்லி எதிர்க்கப்படுகிறது


புலிப்பார்வை உண்மையில் எதிர்க்க வேண்டிய படமா?




உண்மையை உலகுக்கு தெரிவிக்க வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......

Friday, August 15, 2014

அஞ்சான்-சினிமா விமர்சனம்

டெல்லி பிராய்லர் சிக்கனில் அதிகப்படியான ஆன்டிபயாடிக் இருப்பது போல் லிங்குசாமியின் அஞ்சான் படத்தில்  கதையைத் தவிர அதிகப்படியான நடிகர்கள்,தேவைக்கு அதிகமான ட்விஸ்ட்கள், பிளாஷ்பேக்,சண்டைகள், கவர்ச்சி,மசாலா... 

வழக்கமான  நண்பன் மரணத்திற்கு பலி வாங்கும் கதையை கேங்ஸ்டார் மசாலா தடவி லிங்குசாமி காரசாரமாக படைத்த படம்.....அஞ்சான் சூர்யாவின் ரசிகர்களுக்குகூட  சிலருக்கு பிடிக்கும் பலருக்கு திகட்டும்  

கன்னியாகுமரியிலிருந்து  கிருஷ்ணா (சூர்யா) தனது அண்ணன் ராஜு என்ற ராஜு பாயை (இன்னொரு சூர்யா) தேடி மும்பாய் வருவதுபோல் துவங்கும் படம்....

யார் இந்த ராஜு பாய்....? மும்பாய் இளம் தாதா சந்த்ரு (வித்யுத்)வின் நண்பனும் கையாளுமான ராஜு பாய்  எதையும் சாதுரியமாய் சாதிக்கும் அஞ்சா நெஞ்சன்   கமிஷனர் மகள் ஜீவா (சமந்தா)வையே  அசால்டாக கடத்தி  காதல் பண்ணும டாப்டக்கர் 

மும்பாய் பெரிய தாதா இம்ரான் பாய் (மனோஜ் பாஜ்பாய்)வுடன் ஏற்படும் மோதலால்   சந்துருவும் ராஜு பாயும்  தந்திரமாக கொல்லப்படுகிறார்கள் 

இறந்து போனதாக நினைக்கப்படும் ராஜு பாய் மீண்டும்  ஒரு ட்விஸ்ட்வுடன் உயிர்த்தெழுந்து துரோகிகளையும் எதிரிகளையும் எப்படி பலி வாங்குகிறான் என்பதை பிளாஷ்பேக் ட்விஸ்ட்களுடன்  சமந்தா சமந்தாயில்லாத சமந்தா காதலுடன் லிங்குசாமி படம்காட்டுவதே அஞ்சான்.........

லாஜிக்  இல்லாத திரைக்கதை, இத்துப்போன நண்பனுக்காக பலிவாங்கும் மூலக்கதை, ஓவர் டோஸ் கவர்ச்சி, அழுகுணி அலப்பறை சண்டைக்காட்சிகள் இப்படி  நிறைய கசமுசாக்கள் காட்சிகளால் லிங்குசாமி கிணறு தோண்ட பூதம் வந்த கதை 

சூர்யா தனக்கு கிடைத்த இரண்டு வேடங்களில் மாறுபட்ட நடிப்பை காட்டி உள்ளார் ஆனால் கவுதம் மேனனை ஒதுக்கிய பாவம் லிங்குசாமியால் பலிவாங்கப்பட்டுள்ளார் சமந்தா.....பாடல்களில் அரைகுறை ஆடைகளுடன் ஆடுவது கவர்ச்சி போய் அலர்ச்சி வருகிறது நமக்கு 

மும்பாய் டாக்ஸி டிரைவராக பரோட்டா சூரி காமெடி செய்கிறார் நமக்குத்தான் சிரிப்பு வரவில்லை பிரமானந்தம் தாதா பாடகராக வந்து ஒரு காட்சி சிரிக்க வைக்க முயல்கிறார் மற்றபடி நிறைய வில்லன் நடிகர்கள் நிறைய இந்தி தாதாக்கள் வருகிறார்கள் செந்தமிழ் பேசுகிறார்கள் துப்பாக்கி சண்டை போடுகிறார்கள் உடன் செத்தும் போகிறார்கள்

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கிர்ர்ர்.....புர்ர்ர்ர்....டர்ர்ர்ர்ர்ர் பாடல்கள் பேங் பேங் பேங் இரைச்சல் சூர்யா பாடிய பாடல் ஏக் தோ தீன்.....கேட்பதைவிட படத்தில் வண்ணமயமான காட்சியாக சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் மிளிர்கிறது 

அஞ்சான் படத்தில் பிரிந்தா சாரதியின்  பன்ச் வசனங்கள்......மாஸ் "நான் சாகுறதா இருந்தாலும் அத நான் தான் முடிவு பண்ணனும், நீ சாகுறதா இருந்தாலும் நான் தான் முடிவு பண்ணனும்". ரோபில் கலக்கல் 

 தேவையில்லாத காட்சிகளை நீக்கி படத்துக்கு விறுவிறுப்பு கூட்ட தவறியதும் மும்பாய் கதைக்களம் தேர்ந்தெடுக்க பட்டதும் படத்திற்கு சறுக்கல்

டெல்லி பிராய்லர் சிக்கனில் அதிகப்படியான ஆன்டிபயாடிக் இருப்பது போல் லிங்குசாமியின் அஞ்சான் படத்தில்  கதையைத் தவிர அதிகப்படியான நடிகர்கள்,தேவைக்கு அதிகமான ட்விஸ்ட்கள்,சண்டைகள், கவர்ச்சி,மசாலா... என்று  படத்தை தள்ளாட வைக்கிறது அஞ்சான்.....சூர்யாவின் சிங்கம் படத்தை ஒருகாலும் மிஞ்சான்


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........

(தயவுசெய்து நீங்கள் அஞ்சான் படம் பார்த்தவராக இருந்தால் மட்டுமே உங்கள் மதிப்பீட்டை தெரியப்படுத்தவும்)
அஞ்சான்- படம் எப்படியிருக்கு?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......


Wednesday, August 13, 2014

மூன்று முகம் ரீமேக்கில் விஜய்,அஜித் யார் நடித்தால்?


ரஜினிகாந்த் நடித்த வெற்றிப்படமான மூன்றுமுகம் ரீமேக் செய்யப்பட்டால் அதில் விஜய்,அஜித்,கார்த்தி,சூர்யா, விக்ரம்.... இவர்களில் யார் நடித்தால் வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு..

1982-ல் மூன்றுமுகம் படத்தில் மூன்று வேடங்களில் ரஜினிகாந்த் நடித்து அதிலும் நேர்மையான போலிஸ் அதிகாரி அலெக்ஸ் பாண்டியனாக கலக்கலாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்

இந்த வித்தியாசமான போலிஸ் அதிகாரி வேடத்தில் புதிய மூன்று முகம் படத்தில் விஜய்,அஜித்,கார்த்தி, சூர்யா,விக்ரம்....இவர்களில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும்?




வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி......

Monday, August 11, 2014

வேலையில்லா பட்டதாரி,ஜிகர்தண்டா படங்கள் கலாச்சார சீரழிவா?


வேலையில்லா பட்டதாரி,ஜிகர்தண்டா படங்கள் அதிக அளவில் புகை பிடித்தல், மது அருந்துதல் காட்சிகளுடன் இளைஞர்களை சீரழிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி......

இது போன்ற சமுக சீரழிவுக்கு காரணமான படங்கள் எடுப்பதை கோலிவுட் சினிமாக்காரர்கள் நிறுத்தாவிட்டால் பாமக மிகப்பெரிய போராட்டம் செய்யும் என்கிறார் 

எச்சரிக்கை வாசகத்தை பயன்படுத்திக்கொண்டு இத்தகைய திரைப்படங்கள் அதிக அளவில் புகைப்பிடிக்கும் மது அருந்தும் காட்சிகள் வைத்துள்ளன 

வேலையில்லா பட்டதாரி படத்தில் மணம் உளைச்சலில் தனுஷ் மது அருந்திய படி ஊதுங்கடா சங்கு....என்று ஒரு குத்து பாட்டு போடுகிறார் 
ஸ்டைலாக வாயில் புகை விட்டபடி சண்டை போடுகிறார்  

ஜிகர்தண்டா படமோ சித்தார்த் தன் குறும்படத்திற்கான தீர்ப்பு பற்றி பதட்டத்துடன் புகை விடும் காட்சியில்   துவங்கி.......படம் ரவுடி பற்றியது என்பதால் காட்சிக்கு காட்சி புகையும் மதுவும் பஞ்சமில்லை கிணற்றுக்குள் மதுவில் நீந்தும்  குத்துப்பாட்டும் கொண்டாட்டமும் பஞ்சமில்லை 

ஆனாலும் கோடியில் பணத்தைப் போட்டு படம் எடுக்கும் சினிமாக்காரர்கள்  பணம் சம்பாதிக்க எதையும் காட்டுவார்கள் செய்வார்கள் பணத்துக்காக உலகமே சுழலும் போது நடிப்பவர்கள் மட்டும் விதிவிலக்கா...? 

பலகோடி வருமானம் வருகின்றது என்று அரசாங்கமே மது விற்பனை செய்வதும் புகையிலை பொருட்களை விற்க தடை செயாததுமான நாட்டில் அரசியல்வாதிகள் சினிமாக்காரர்களை மட்டுமே குறை சொல்வது எந்த வகையில் நியாயம்?

நண்பர்களே! உங்கள் பார்வையில்.........


வேலையில்லா பட்டதாரி,ஜிகர்தண்டா படங்கள் கலாச்சார சீரழிவு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டுவது.........



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........

Sunday, August 10, 2014

ஜிகர்தண்டா-சில விதண்டாவாதங்கள்

எனது விமர்சனத்தில் ஜிகர்தண்டா.......கோலிவுட்டை புரட்டிப் போடவந்த நெம்புகோல் சினிமா என்று எழுதியிருந்தேன் ஆனால் அது கொரியா படங்களின் உல்டா என்று சொன்னவர்கள் அதிகம் உண்மையில்........

கொரியா படங்கள் A Dirty Carnival மற்றும் Rough Cut படங்களின் இன்ஸ்பிரேசன் என்று இருந்தாலும் அதை மதுரை கதைக்களத்துடன் நச்சுனு பொருத்தி யாரும் எதிர்பார்க்காத திருப்பமாய் படம் காட்டிய ஜிகர்தண்டா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பராட்டப்படவேண்டியவர்தான் 

அதனால்தான் கோலிவுட் அரியணையில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் இயக்குனர் ஷங்கர் தயங்காமல்........... "Jigardhanda superb,unpredictable,humorously thrilling,new xperience, xellent performance by all,well written Kalakkal Subbaraj." கலக்கல் சுப்புராஜ் என்று இன்னொரு இளைய இயக்குனரை பாராட்டினார் 

அவரைத் தொடர்ந்து  இயக்குனர் மணிரத்தினமும் படம் பார்த்துவிட்டு....
"Hi karthik, saw Jigarthanda yesterday. Very impressed. You seem to have a distinct voice   and a lot of style"  என்று பாராட்டுகிறார் 


கொரியா படங்களோடு ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கும் விமர்சகர்கள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும் அந்த கொரியா படஇயக்குனர்களே ஜிகர்தாண்டா குடித்தால்...சாரி....பார்த்தால்  கோலிவுட்டில்  குடியேறிவிடுவார்கள் 


பொதுவாக தான் சம்பந்தப்படாத சினிமாக்களின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாதவரும் குக்கூ-வை கடித்து குதறிய  எழுத்தாளர் (யாரு...?)கூட கார்த்திக் சுப்புராஜ் என் மாணவனாக இருந்திருக்கவேண்டும் என்றும் இன்னொரு மணிரத்தினம் என்றும்  மார்தட்டுகிறார் 

பொதுவாக தமிழ்ப்படங்களுக்கு  8.5 பாயின்ட் தாண்டாத IMDB ஆங்கில சினிமா வலைதளம் ஜிகர்தண்டா படத்துக்கு 9.1 Ratingகொடுத்துள்ளது ஆச்சரியம் 

இன்னும் நிறைய ஜிகர்தண்டா படத்தில் இருக்கின்றது பாசமலர் சிவாஜியின் மலர்ந்தும் மலராத பாடல்வரிகளுடன் கிலாசிக்கலாக ஒரு கொலையுடன் துவங்கும் ஜிகர்தண்டா...மூடநம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் கோடம்பாக்கத்தை கேலியும் கிண்டலுமாக டைட்டில் போட்டு கிழிக்கிறது

ஆதலினால்.........

ஜிகர்தாண்டா படத்துக்கு யாரும் எதிர்மறை விமர்சனங்கள் எழுதுவது சும்மா விதண்டாவாதமே 



ஜிகர்தாண்டா-சினிமா விமர்சனம் 


Wednesday, August 06, 2014

ஹெர்குலிஸ்-சினிமா விமர்சனம்

நீங்கள் கிளாடியேட்டர், 300 போன்ற ஹாலிவுட் படங்களின் அதீத ரசிகர்கள் என்றால் யுத்த சாகசங்கள்,எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன் முப்பரிமான திரைப்படம்......ஹெர்குலிஸ் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்

பட்டை தீட்டப்பட்ட வைரவரிகளாலும் அதிரடி,காதல்,கவர்ச்சி, சென்டிமென்ட்... மசாலா காட்சிகளாலும் நம்பமுடியாத கிரேக்க புராண கதைகளில் ஒன்றான மாவீரன் ஹெர்குலஸ் சாகச யுத்த பயணத்தை படம்காட்டுகிறது இயக்குனர் ப்ரெட் ரேட்னெரின் ஹெர்குலிஸ் திரைப்படம் 


ஜீயஸ் கடவுளுக்கும் மனித பெண்ணுக்கும் பிறந்ததாக நம்பப்படும் கடவுள் பாதி மிருகம் பாதி வல்லமை கொண்ட ஹெர்குலிஸ் (Dwayne Johnson)
ஆறு பேர் கொண்ட கூலிப்படையினருக்கு தலைவனாக வாழ்வதும் அவர்களை திரேஸ் நாட்டு மன்னன் கோட்டிஸ் மகள் எர்கினியா சந்தித்து ஹெர்குலிஸ் எடைக்கு எடை தங்கம் தருவதாகவும் திரேஸ் நாட்டு படைவீரர்களுக்கு அவர்கள் பயிற்சி அழித்து எதிரி மன்னன் ரஹெசஸயும் கைது செய்ய வேண்டும் என்றும் படம் துவங்குகின்றது.......

திரேஸ் நாட்டு படைவீரர்களுடன் ஹெர்குலிஸ் குழுவினர் முதலில் ஒரு காட்டுமிராண்டி மாயாவிக் கூட்டத்தினரை யுத்தம் செய்து வென்று இன்னும் பயிற்சி பல செய்து கோட்டிஸ் மன்னனின் எதிரி ரஹெசஸ்வுடன் போரிட்டு அவனையும்  கைதுசெய்து திரேஸ் நாட்டுக்கு அழைத்து வருகின்றனர் ரஹெசஸ் சித்தரவதை செய்யப்படும் போது ஹெர்குலிஸிடம் கோட்டிஸ் மன்னனின் கொலைவெறியை சொல்கிறான்

மன்னன் கோட்டிஸ் மகள் எர்கினியாவும்  அவளது மகன் சிறுவன் அரிஸ் உயிரை கோட்டிஸிடமிருந்து காக்கவே பொய் சொல்லி ஹெர்குலிஸ் தந்திரமாக அழைத்துவரப்பட்டதாக சொல்கிறாள் எடைக்கு எடை தங்கம் பெற்ற ஹெர்குலிஸ் திரேஸ் நாட்டை விட்டு வெளியேறாமல் கோட்டிஸ் மன்னனிடமிருந்து நாட்டைக் காக்க நினைக்கிறார் ஆனால் கைது செய்யப்பட்டு சிறையில் சங்கிலியால் கட்டப்படுகிறார் 

சிறையில் ஏதென்ஸ் மன்னன் எரித்தீசியஸ்யும் திரேஸ் மன்னன் கோட்டிஸ்யும்  கைகோர்த்து வர, ஹெர்குலிஸ்க்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளின் கொடூர கொலைக்கு காரணமானவன் எரித்தீசியஸ் என்ற உண்மை தெரியவருகிறது 

ஆத்திரம் கொண்ட ஹெர்குலிஸ் ஏதென்ஸ் மன்னன் எரித்தீசியஸ்யும் திரேஸ் மன்னன் கோட்டிஸ்யும் கொன்று பலிவாங்குவதுடன் எர்கினியா துணையுடன் இளவரசன் அரிஸ் அரியணையேற அடுத்த சாகஸ பயணத்துக்கு ஹெர்குலிஸ் தன் குழுவினருடன் புறப்படுவதாக இப்படம் நிறைவு பெறுகிறது

Hercules: The Thracian Wars என்ற காமிக் புத்தகத்தின் அடிப்படையில் தமிழ் திரைப்படம் போன்று பன்ச் வசனங்களுடன்   Ryan J. Condal and Evan Spiliotopoulos அமைத்துள்ள திரைக்கதையில்  Brett Ratner தயாரித்து இயக்கிய ஹெர்குலிஸ் திரைப்படத்தை குழந்தைகளுடன் கண்டுகளிக்கலாம்

விர்ர்ர்ர்ர்ர்ரென்று திரையை கிழித்துவரும் அம்புகள், திரைக்கு வெளியே பாய்ந்துவரும் ஆபத்தான விலங்குகள்...இன்னும் பல முப்பரிமான வேடிக்கைகள்  சிறப்பாக படம் காட்டாப்படுகிறது

                               thanks-YouTube-by MOVIECLIPS Trailer

ஏன் ஹெர்குலிஸ் படத்தை பார்க்கவேண்டும்...?
இயக்குனர் ப்ரெட் ரேட்னெர் இப்படத்தை ஒரு புராண காலத்து சூப்பர் ஹீரோ ஹெர்குலிஸ் ஆக நமக்கு காட்டாமல் விதியை மதியால்  வென்ற தன்னம்பிக்கை கொண்ட ஒரு மாவீரனாக காட்டு..........


Saturday, August 02, 2014

சரபம்-சினிமா விமர்சனம்


சரபம் என்றால் என்ன? சிங்க முகமும் வாலும் கொண்ட ஆக்ரோசமான பறவை ஆகும்  சரபம் படத்தில அப்படி எந்த விசித்திர பூச்சியும் இல்லை ஆனால் பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஒரு விசித்திர மனிதன் பற்றி........

அறிமுக  இயக்குனர் அருண் மோகன் ஒரு மர்மமான கடத்தல் பின்னணி உள்ள திரைக்கதையில் நவீன் சந்திரா,சலோனி லுத்ரா,ஆடுகளம் நரேன்...இவர்கள் மூவரையும் வைத்து முப்பதுநாளில் அதீத வேகத்தில் காட்டிய படமே........சரபம்

கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி புராஜெக்ட் இஞ்சினியர் நவீன் சந்திராவின்  தீம் பார்க் பிளான்  சர்வசக்தி வாய்ந்த தொழிலதிபர்   ஆடுகளம் நரேனால் நிராகரிக்கப்படுகிறது

அதனால் ஆத்திரம் அடைந்த நவீன்  பழிவாங்கும் எண்ணத்துடன் நரேனின் அடங்காப்பிடாரி மகள் சலோனியுடன் சேர்ந்து அவள் கடத்தப்பட்டதாக போடும்  நாடகத்துடன் முதல் பாதியும்...........

அந்த கடத்தல் நாடகம் என்ன ஆனது? என்பதை பல  திருப்பங்களுடன் பார்வையாளர்களை இருக்கையின் விளிம்பிலேயே அமரவைக்கும் திகிலுடன் இரண்டாம் பாதியிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

இயக்குனர் அருண் மோகன் தன் சிறப்பான திரைக்கதையால் சரபம் படத்தின்  பின்பகுதியில் வரும் திகில் காட்சிகளுக்கு ஏற்ப நல்ல திடமான பவுன்டேசன் முன்பகுதியில் போடுகிறார் ஆனாலும் அவரது மெதுவான கதை சொல்லும் போக்கு படத்திற்கு பின்னடைவு 

இன்னும் அறிவுஜீவி பார்வையாளர்கள் காட்சியின் தன்மையை ஊகித்துவிடுவார்கள் மேலும் சாதாரனமான பார்வையாளர்கள் விரும்பும் காதலும் காமெடியும் மிஸ்ஸிங்

நவீன் சந்திரா நடிப்பில் அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது ஆனாலும் பெரிய ஹீரோயிசம் இல்லாத வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ளார்........

 ஆடுகளம் நரேனிடம்  ஆடுகளம் படத்திற்குப் பிறகு மீண்டும் வசப்படுத்தும் நடிப்பு மிளிர்கிறது 

சலோனி..... தண்ணியும் தம்மும்  என்று புதுமைப் பெண்ணாக கலக்கல் நடிப்புடன் வருகிறார் கோலிவுட்டில் இன்னும் கொஞ்சகாலம் நல்ல இடம் பிடிப்பார்

பிரிட்டோ மைகேல் தன் பின்னணி இசையில் படம் பார்ப்பவர்களை கவர்ந்திட... கிருஷ்ணன் வசந்த்தின்  ஒளிப்பதிவு கதைக்கேற்ற வண்ணத்தை திரையில்  வரைந்துள்ளது 

எல்லாவற்றையும் விட எடிட்டர் லியோ ஜான் பால் தன் கத்தரியால் படத்துக்கு தேவையான விறுவிறுப்பை வழங்கியுள்ளார்

சரபம்........சாதாரனமான கதையுடன் தொடங்கி அசாதாரணமாக திரையில் தெரிகிறது

 பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் கிளைமாக்ஸ் காட்சியுடன் வந்துள்ள திகில் திரைப்படம் சரபம் ஒருமுறை பார்க்கலாம்

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...............


சரபம்-படம் எப்படியிருக்கு?




வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி..........முடிவு-9/8/2014



Friday, August 01, 2014

ஜிகர்தண்டா-சினிமா விமர்சனம்

போர்ப்ஸ் இந்தியா மேக்கஸின் வெளியிட்ட 2014-ல் பார்க்கவேண்டிய 5 படங்களில் ஒன்றாக இடம்பிடித்த ஜிகர்தாண்டா........கோலிவுட்டை புரட்டிப் போடவந்த நெம்புகோல் சினிமா

சென்னையிலிருந்து ஒரு குறும்பட இயக்குனர் கார்த்தி சுராஜ் (சித்தார்த்) தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்பாக ஒரு ரவுடியை பற்றி நெடும்படம் எடுக்க  மதுரையில் உள்ள பயங்கர ரவுடி கட்டபஞ்சாயத்து  ,தாதா, கொலைகாரனான அசால்ட் சேதுவை  (பாபி சிம்ஹா) தேடி வர......

சேதுவோ  தன்னைப்பற்றி கார்ட்டூன் படம்போட்டு கதை எழுதிய பத்திரிகை ரிப்போர்டரை தீயிட்டு கொழுத்திய  படுபயங்கரமானவன் என்பதை அறிந்த கார்த்தி  மதுரையில் உள்ள அவனது நண்பன் (கருணாகரன்) உதவியுடன் சேதுவின்  அடியாட்களுடன்   தொடர்புகொண்டும்.......

சேதுக்கு சாப்பாடு போடும் இட்லிகாரம்மாவின் மகள் கண்ணம்மாவை (லட்சுமி மேனன்) காதலிப்பதுபோல் நடித்தும்  சேதுவின் கதையை தெரிந்துகொள்ள முயலுகின்றான்.......

கார்த்தி  சேதுவின் கதையை எப்படி படமாக்கினான்...? என்பதை பல திகில் திருப்பங்களுடனும் படம் காட்டுகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

ஜிகர்தாண்டா..... படத்தின் சிறப்பு அதன் கதையில் என்பதைவிட இயக்குனர்  கார்த்திக் சுப்புராஜ் அடுக்கடுக்காக வைத்திருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் திருப்பமான நிகழ்வுகளிலும் உள்ளது அதை நீங்கள் படம் பார்த்தால் மட்டுமே அனுபவிக்க முடியும் 

யதார்த்தமான வசனங்கள் நிறைய உண்டு ஒரு பயங்கரமான கொலைவெறி படத்தை காமெடி படமாக அரங்கம் அதிர சிரிக்க வைக்கும் காட்சிகள்

சித்தார்த்......படித்த மேல்தட்டு இளைஞனாக ஒரு இளம் இயக்குனர் போல் யதார்த்தமாக வருகிறார் லட்சுமி மேனனுக்கு அதிக காட்சிகள் இல்லை ஆயினும் கடைசியில் கொஞ்சம் நடிக்க வாய்ப்பு கவர்ச்சி மிஸ்ஸிங் முகம் மேக்கப் போடாததுபோல் உள்ளது 

பாபி சிம்ஹாதான் படத்தின் ஹீரோ போன்று கலக்கலாக வருகிறார் சில நேரங்களில்  படு பயங்கரமும் சில நேரங்களில்   காமெடியுமாக கலக்குகிறார் விஜய் சேதுபதியின் சிறப்பு தோற்றம் சிறப்பாக அமைந்துள்ளது கருணாகரன் காமெடி நடிகராக பின்னி பெடல்லேடுக்கிறார்

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையை பயம் காட்டுகிறது பாடல்கள் கிராமத்து வாசனையுடன் புதுமையாக உள்ளது கிணற்றுக்குள் நடக்கும் குத்துப்பாட்டு செம கலக்கல் இரவில் நடக்கும் காட்சிகள் மற்றும் மதுரை கோபுரக் காட்சிகள் ஒளிப்பதிவும் பாராட்டலாம்

ஆக மொத்தத்தில் அதிரடிப் பயங்கரம் ஒருபுறம் என்றும் குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி இன்னொரு புறம் என்றும் படம் காட்டும் ஜிகர்தாண்டா........ கோலிவுட்டை புரட்டிப் போடவந்த நெம்புகோல் சினிமா 

படம்  பார்த்தவர்களின் மதிப்பீடு..........


ஜிகர்தாண்டா-படம் எப்படியிருக்கு?



படம் பார்த்துவிட்டு வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......
முடிவு-8/8/2014




UA-32876358-1