google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: September 2014

Monday, September 29, 2014

ஜீவா-சினிமா விமர்சனம்

கிரிக்கெட் விளையாட்டை கதைக்களமாக நிறைய காதலுடன் கொஞ்சம் நட்பு கலந்த  உணர்வுகளின் வெளிப்பாடாக வந்துள்ள ஜீவா......கபடியை கதைக்களமாக கொண்ட  வெண்ணிலா கபடிக்குழு போன்று சுசீந்திரனின் மற்றுமொரு வெற்றிப்படைப்பு  

jeeva

படத்தின் கதையாக................
பள்ளியில் படிக்கும் போதே கிரிக்கெட் விளையாட்டின் மீது தணியாத ஆர்வமும்  திறமையும் கொண்ட ஜீவா (விஷ்ணு விஷால்) கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து அதை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காமல் தவிக்க.......

பக்கத்து வீட்டில் குடிவரும் ஜெனி (ஸ்ரீதிவ்யா) மீது  கொண்ட காதலும் அவர்களது வீட்டில் தெரிந்து அவர்களது காதல் இடையில் பிரித்து வைக்கப்பட.........
ஜீவா குடிகாரனாகி சோகத்தில் தள்ளாடுகிறான் 

அவனை திருத்தும் முயற்சியாக  ஒரு கிரிக்கெட் கிளப்பில் சேர்க்கப்பட்ட ஜீவா தன்  நண்பன்  ரஞ்சித் (லட்சுமணன்)வுடன் இணைந்து விளையாட்டில் திறமையை காண்பித்த போதும் கிரிக்கெட்டில் உள்ள சாதி அரசியலால் இருவருக்கும் ரஞ்சி ட்ராபியில் விளையாடும் வாய்ப்பு  பறிபோக......
நண்பன் ரஞ்சித் தற்கொலை செய்து கொள்கிறான் 

இதற்கிடையில்   ஜெனியுடன் தன் காதலை தொடர்ந்த ஜீவாவுக்கு அவளது அப்பா  அவன்  கிரிக்கெட்டை தலைமுழுகி வந்தால் மட்டுமே தன் மகள் ஜெனியை திருமணம் செய்து கொடுப்பேன் என்று செக் வைப்பது போல் சொல்ல.......

இறுதியில்...... 
ஜீவா சாதி அரசியல் நிலவும் கிரிக்கெட்டில் நுழைந்து ஒரு தொழில் ரீதியான வெற்றி விளையாட்டு வீரராக சாதனை  படைதாரா...? அல்லது கிரிக்கெட்டை துறந்து தன் காதலி ஜெனியை கரம் பிடித்தாரா...? என்பதை பல உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளால் இயக்குனர் சுசீந்திரன் படம் காட்டுவதே..........

இயக்குனர் சுசீந்திரன்........
கிரிக்கெட் விளையாட்டில் பின்னணியில் உள்ள அரசியலையும் எப்படி திறமையானவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதையும் மிகவும் தைரியமாக அதே நேரம் காதல் ரசனையுடன் காண்போர் நெளியாதவண்ணம் நச்சென வெளிப்படுத்தியுள்ளார் 

jeeva

விஷ்ணு விஷால்......
ஆரம்ப நாட்களில் ஒரு கிரிக்கெட் பிளேயராக இருந்ததால் என்னவோ இவருக்கு இப்படத்தில் ஓர் உண்மையான கிரிக்கெட் வீரர் போல் நடிப்பது எளிதாக இருக்கிறது பார்வையாளர்களையும் ஒன்றிட வைக்கிறது 

ஸ்ரீதிவ்யா............
பள்ளிமனவியாக குறும்புத்தனமும் கல்லூரி மாணவியாக பொறுப்புணர்வும் மிளிரும் இவரது நடிப்பில் குட்டப் பாவாடை கவர்ச்சி அழகூட்டுகிறது 

மற்றபடி..........ஜீவாவின் நண்பன் லட்சுமணன் நடிப்பு பார்வையாளருக்கு ஒரு தாக்கத்தை உண்டாக்க........சீனியராக வரும் சூரி கலகலப்பு ஊட்டுகிறார் சார்லி,மாரிமுத்து,டி.சிவா........நடித்துள்ளனர் 

மதியின் கேமரா........காட்சிகளை அழகாக கையகப்படுத்த, இமானின் இசையில் பாடல்கள் கதையோட்டத்துக்கு பின்னடைவு ஆயினும் பின்னணி இசையில் பிரமிக்க வைக்கிறார் 

jeeva

ஆக மொத்தத்தில்............
சுசீந்திரன் தனது நுட்பமான இயக்கத்துடன் கதை சொல்லும் திறமையாலும் விஷ்ணு தன் இயல்பான நடிப்பாலும் ஜீவா படத்தை வெண்திரையில் ஜீவிதமாக உலாவிடச் செய்கிறார்கள் 



Friday, September 26, 2014

மெட்ராஸ்-சினிமா விமர்சனம்


கார்த்தியின்  வெற்றிப்பட வரிசையில் மற்றுமொரு கிரீடமாக.. மெட்ராஸ்-  சென்னை வாழ் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் கழிசடை ரவுடி அரசியல் செய்யும் பாதிப்புகளை நட்பு,காதலுடன் யதார்த்தமாக காட்சிப்படுத்துகிறார் அட்டைக்கத்தி இயக்குனர் பா.இரஞ்சித்


madras
படத்தின் கதையாக........
வட சென்னை பகுதியைச் சேர்ந்த இரண்டு அரசியல் கட்சியைச் சேர்ந்த ரவுடி பெருந்தலைகள் (மாரி-கண்ணன்) தங்களுக்குள் பகுதி பிரிப்பதில்  மோதிக்கொண்டு வியாசர்பாடி  குடிசை மாற்று வீடுகளில்  குறீயீடாக ஒரு பெரிய சுவரில்  படம் வரைவதில் போட்டிபோட.......
கண்ணன் கோஷ்டியினர் அவரது அப்பா படத்தை வரைந்துள்ளார் 

இதை அப்பகுதியில் வாழும்   ரவுடி மாரியின்  ஆதரவாளன் அன்பு (கலையரசன்)  தன் நண்பன்  காளி(கார்த்தி) யுடன் சேர்ந்து எதிர்க்க........
ரவுடி கண்ணன்  கோஷ்டியினர் அன்பை கொல்ல வரும் போது நடக்கும் சண்டையில் காளி.........
 கண்ணனின் மகன் பெருமாளை  போட்டுவிடுகிறான் 

காளியும் அன்பும் கோர்ட்டில் சரணடைய செல்லும் போது  காளியின் கண்ணெதிரிலேயே நண்பன் அன்பை  சில ரவுடிகள்  கொலை செய்துவிடுகிறனர்

தன் நண்பனை கொன்ற உண்மையான அரசியல் ரவுடியை  கண்டுபிடித்து   காளி எப்படி பழி வாங்குகிறான்? என்பதை.........

அடித்தட்டு மக்களின் சமுக அரசியல் பின்னணியுடன் காளி-கலையரசி (கேத்ரின்) காதலையும் கலந்து நிறைய யதார்த்தமான கதாப்பாத்திரங்களை உலாவ விட்டு....
மெட்ராஸ்  படம் காட்டுகிறார் அட்டகத்தி புகழ் இயக்குனர்  பா.இரஞ்சித்

இயக்குனர்  பா.இரஞ்சித்.....கொஞ்சமும் போலித்தனம் இல்லாமல் போலி அரசியலை அப்பட்டமான நிஜமாக 1990 காலகட்ட மெட்ராஸ் பின்னணியில் வெண்திரை சித்திரமாக வரைந்துள்ளார் ஆனாலும் சினிமாத்தனமாக காதலுக்கும் நட்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தின் வேகத்தை தடுக்கி விழ வைத்துவிட்டார் 



கார்த்தி...........ஆவேசம்,கோபம்,காதல்,நட்பு...என்று பல்வேறு உணர்வுகளை கதைக்கு ஏற்ப அழகாக பிரதிபலித்து அந்த காலகட்ட  மெட்ராஸ் ஹவுஸிங் போர்டில் வாழும்  இளைஞனை பேச்சிலும் உருவத்திலும் கொண்டுவந்துள்ளார் 

கேத்தரின் தெரஸா.......கோலிவுட்டில் நுழைந்த டோலிவுட்டை கலக்கிய அம்மணி தன் அழகாலும் நடிப்பாலும்  இங்கேயும் கலக்கலாக தன் இடத்தை தக்கவைத்துக் கொள்வார் என்று நம்பப்படுகிறது

படத்தில் நிறைய கதாப்பாத்திரங்கள் உயிரோட்டமாக உலாவருகின்றன அதில் மனிதில் நிற்பவர்கள் காளியின் நண்பனாக வரும் அன்பு, அன்புவின் மனைவி மேரி (ரித்விகா),கண்ணனின் ஆதரவாளனாக வரும் விஜி,மாரி,கண்ணன்,காளியின் அம்மா (ரமா), பைத்தியமாக வந்து கலகலப்பு ஊட்டும் பரட்டைத் தல ஜானி........
பட்டய கெளப்பும் ஜானி! உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு 

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் பாடல்களும் அருமை அதிலும் காகித கப்பல்..........காதல் கிறக்கம்  என்றால்  கானாபாலா நடித்து பாடிய ஒப்பாரி பாடல்  இறந்திடவா........உள்ளத்தை உருகவைக்கும் 

ஜி.முரளியின் ஒளிப்பதிவில்..........சென்னை நகர ஹவுஸிங் போர்ட் வீடுகள்,நகரத்து சந்து பொந்துக்கள் கண்ணைக் கவர்கின்றன நள்ளிரவு துரத்தல் காட்சிகள் உயிரோட்டமாக உள்ளன

ஆக மொத்தத்தில்..........

அட்டக்கத்தி  பா.இரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் திரைப்படம்.......
 கார்த்தியின்  வெற்றிப்பட வரிசையில் மற்றுமொரு கிரீடம்  

பா.இரஞ்சித் அண்ணேன்......
கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் மெட்ராஸ்-படத்துல இறக்கிட்டார்   போல தெரிகிறது ...ஹா...ஹா

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு............
(தயவு செய்து படம் பார்த்தவர்கள் மட்டுமே  வாக்களிக்க அன்புடன் வேண்டுகிறேன்) 
madras

மெட்ராஸ்-படம் எப்படியிருக்கு...?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........


 

Wednesday, September 24, 2014

அரண்மனை Vs ஆயிரம் ஜென்மங்கள்



இயக்குனர் சுந்தர் சி-யின் அரண்மனை திரைப்படம் மளையாள யட்ச கானம் படத்தின் தமிழ் ரீமேக்கான ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அப்பட்டமான காப்பி  என்று.....

ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் கதையாக.....

விஜயகுமார் அவரது மனைவி  லதா,லதாவின் அண்ணன் ரஜினிகாந்த் மூவரும் விஜயகுமாரின் எஸ்டேட்க்கு விடுமுறையை கொண்டாட செல்லும்போது...

எஸ்டேட்டில் லதா மட்டும்  நடுராத்திரியில் பாடிக்கொண்டு செல்லும் ஆவிப் பெண்  பத்மபிரியாவை காண்கிறாள் அன்றே அந்த  ஆவி லதாவின்  உடலில் புகுந்து அவளது நடவடிக்கையை மாற்றி  லதாவும் நடுஇரவில்  காட்டில் பாடிக்கொண்டு அலைகிறாள் 

லதாவின் மாறுபட்ட நடவடிக்கையை கண்ட ரஜினிகாந்த் அவளைப் பின்தொடர்ந்து சென்று  விஜயகுமாருக்கும் அவரது  முன்னாள் காதலி பத்மபிரியாவுக்கும் உள்ள காதலையும் அவளது முறைமாமனால் கற்பழிக்க விரட்டப்பட்டு அவள் தற்கொலை செய்து கொண்டதையும் அறிகிறார்

லதாவின் உடம்பில் புகுந்த பத்மபிரியாவின் ஆவி மீண்டும் தன் காதலன் விஜயகுமாருடன் ஒரு பவுர்ணமி தினத்திற்குள் ஓன்று சேர்ந்தால்  நிரந்தரமாக அவள் உடலில் தங்கிவிடும் என்பதை அறிந்த ரஜினிகாந்த் அவர்கள்  இருவரும் ஓன்று சேரவிடாமல் தடுக்கிறார் 

கடைசி நாள் பவுர்ணமி தினத்தன்று ஆவி பத்மபிரியா ரஜினிகாந்தை ஏமாற்றிவிட்டு விஜகுமாரை நள்ளிரவில் காட்டுக்கு அழைத்துச் சென்று ஓன்று சேர முயலும் போது........

லதாவின் அழுகுரல் கேட்டு  எழுச்சிக் கொண்டு எழுந்த ரஜினிகாந்த்  அவர்களை விரட்டிச்  சென்று இணையவிடாமல் தடுக்க....பவுர்ணமியும் முடிய...பத்மபிரியா ஆவி லதாவின் உடலைவிட்டு பிரிந்து மறைந்து விடுகிறது..........சுபம் 

அரண்மனை படத்தின் கதை...........

 வினய்,அவரது மனைவி ஆண்ட்ரியா மற்றும் உறவினர்கள் (மனோபாலா, கோவை சரளா,சித்ரா லட்சுமணன்,நிதின் சத்யா,ராய் லட்சுமி,சுந்தர் சி) உடன் கிராமத்திலுள்ள பரம்பரை அரண்மனையை  விற்பதற்கு வரும் போது......


ஐந்து வருடங்களுக்கு முன்பு கிராமத்து அரண்மனைக்கு வந்த வினய்-யுடன் காதல் கொண்ட கோயிலில் வளர்ந்த அபூர்வ சக்தி கொண்ட கிராமத்து பெண் ஹன்ஷிகா......
 வினய்-யின் மனைவி ஆண்ட்ரியாவின் உடம்பில் ஆவியாக  புகுந்து.....

அம்மன்  சாமி நகைகளை  களவாடிய சரவணன் அவனது கூட்டாளிகளை தன் அபூர்வ சக்தியால் கண்டுபிடித்ததால்  தன்னை   உயிருடன் அந்த அரண்மனையில் புதைத்து கொலை செய்தவர்களை பழிவாங்குவதுடன்... 

அவள் விரும்பிய காதலன் வினய் உடன் ஒரு சூரிய கிரகண நாளுக்குள் உடலுறவு கொண்டால் நிரந்தரமாக தங்கிவிடலாம் என்று ஓன்று சேர துடிக்கிறாள்

இதை  அறிந்த ஆண்ட்ரியாவின் அண்ணன் சுந்தர் சி அவர்கள்  வினய்-ஆண்ட்ரியா இருவரையும் ஓன்று சேரவிடாமல் தடுப்பதுடன் 
அந்த சூரிய கிரகணத்தன்று ஒரு சாமியார் சக்தியால் ஆண்ட்ரியாவின் உடலிலிருந்து ஹன்ஷிகாவின்  ஆவியை விரட்டுகிறார்......சுபம்

ஒற்றுமையும் வேற்றுமையும்..........

அரண்மனை - ஆயிரம் ஜென்மங்கள்  இரண்டு படங்களுமே தன் காதலனின் மனைவி உடம்பில் புகுந்த காதல் பேய்களை  கில்லாடி அண்ணன்கள் விரட்டுவதை படம்காட்டுகின்றன

ஆனால்........

இரண்டு படங்களுமே திரைக்கதை,காட்சிகளால் அதைச் சொல்லிய விதத்தில் மாறுபடுகின்றன 

ஆயிரம் ஜென்மங்கள் படம் திகிலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க அரண்மனை படம் பழிவாங்கும் திகிலுடன் நகைச்சுவைக்கு முக்கியத்தும் தருகிறது 

Tuesday, September 23, 2014

ஆடாம ஜெயிச்சோமடா-சினிமா விமர்சனம்

சூது கவ்வும்,மூடர் கூடம் போன்று டார்க் காமெடி வரிசையில் வந்தாலும் தனித்துவமாக கிரிக்கெட்சூதாட்டத்தை மையப்படுத்தி கிரைம் த்திரிலராக படம் காட்டுகிறது..... பத்திரியின் ஆடாம ஜெயிச்சோமடா 

படத்தின் கதையாக..........

 சென்னையில் நடைபெற இருக்கும்  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஈடுபடும் சூதாட்ட கூட்டத்தை கண்டுபிடித்து தடுக்க போலிஸ் கமிஷனர் கே.எஸ்.ரவிக்குமாரால்  இன்ஸ்பெக்டர் பூமிநாதன் (சிம்ஹா) தலைமையில் ஒரு சிறப்பு குழு நியமிக்கப்படுகிறது 

போட்டிக்கு இரண்டு நாட்கள் முன்பு  புரோக்கர் தயாளன் (பாலாஜி)  ஒரு பெட்டி நிறைய பணத்துடன்  பன்னீரின் (கருணாகரன்) டாக்ஸியில் போகும்போது....
இருவரும் நண்பர்களாகிறார்கள் 

கருணாகரன் தான் பட்ட கடன் தொல்லையால் திருமணமான மறுநாளே அவனது மனைவி ரமா (விஜயலட்சுமி) பிரிந்து சென்ற சோகக் கதையை தயாளனிடம் சொல்லி உதவி கேட்க.....
தயாளனும் இரண்டு நாளில் பணம் தந்து உதவ சம்மதிக்கிறான் 

மறுநாள் தயாளன் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு செல்லும் பன்னீர் அங்கே மர்மமான முறையில் தயாளன் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கச் செல்ல......
இன்ஸ்பெக்டர் பூமிநாதனால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறான்

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் முக்கிய புள்ளியை இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கண்டுபிடித்து கிரிக்கெட் பெட்டிங்கை தடுத்தாரா....? என்பதே கதை 

ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் நிறைய லாஜிக் ஓட்டை உடைசல்கள் இருந்தாலும் இயக்குனர் பத்ரி நகைச்சுவை உணர்வுடன் புதுமையாக காமெடி கோணத்தில் திரைக்கதை அமைத்து கதை சொன்ன விதம் அருமை என்பதால்....மறப்போம் (தவறுகளை) மன்னிப்போம்

ஆடாம ஜெயிச்சோமடா படத்தின் முதுகெலும்பாக விசித்திரமான கதாப்பாத்திரங்களின் நடவடிக்கைகளே   இருப்பதால் பார்வையாளர்களை திருப்தி படுத்துகிறது.........
கொடுத்த காசு எள் ஆகவில்லை

ஜிகர்தாண்டா ரவுடி அசால்ட் குமாராக வந்த  பாபி சிம்ஹா இதில்  போலிஸ் அதிகாரியாக   சக்கைப்போடு போடுகிறார் 
அசடு வழியும் அப்பாவியாக கருணாகரன் அசத்துகிறார் பாலாஜியும்  வித்தியாசமான நடிப்பால் பட்டைய கெளப்ப... கே.எஸ்.ரவிகுமாரும் அவர் பங்குக்கு நகைச்சுவையிலும் கலக்குகிறார்... விஜயலட்சுமி (இட்லி விற்கும் ஏழைப் பெண்ணாக) வந்து போகிறார் ஆடுகளம் நரேன்,சேட்டன்,ராதாரவி...கதாபாத்திரத்துக்கு  ஏற்ப நடித்துள்ளார்கள்

ஆக மொத்தத்தில்.............

 பத்ரியின் ஆடாம ஜெயிச்சோமடா....நகைச்சுவை வசனங்கள், கதாப்பாத்திரங்கள், காட்சிகளால் ஓர்  இரண்டு மணிநேர T-20 கிரிக்கெட் விளையாட்டை வெள்ளித்திரையில் கண்டு களித்த உணர்வைத் தருகிறது 

Monday, September 22, 2014

ஆள்-சினிமா விமர்சனம்


சமீபத்தில்  பிரதமர் மோடி சொன்னதுபோல் "இந்திய முஸ்லீம்களின் தேசப்பற்று குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது" என்ற கருத்தை பிரதிபலிப்பது போல்..........

முஸ்லீம் தீவிரவாதிகள் பற்றிய உலகளாவிய சர்ச்சையை கதைக்கருவாக எடுத்து தீர்க்கமான திரைக்கதையுடன் அமைதியும் நல்லிணக்கத்தையும் வலியிறுத்தி  திகில் படம் காட்டுகிறது  விதார்த் நடித்த.... ..ஆள் 


aal

சிக்கிமில் உள்ள ஓர் அழகான ஊரில் இருக்கும் ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் விளையாட்டு பயிற்சியாளராக வேலை செய்யும் சென்னையை சேர்ந்த அமீர் (விதார்த்)........

 ஒருநாள் சில மாணவர்களால் தீவிரவாதி என்று அடித்து விரட்டப்படும் ரிஸ்வான் என்ற முஸ்லிம் இளைஞனை காப்பாற்றி (இவனால்தான் பின்னாடி பெரிய சிக்கல் வரும் என்பது தெரியாமல்...) அவன் மேல் பரிதாபப்பட்டு தன்னுடன்  தன் அறையில் தங்க வைக்கிறார்

நட்பாக பழகிய ரிஸ்வானுடன் அமீர் சென்னையில் உள்ள தன் அம்மா,தம்பி,தங்கை மீது உள்ள பாசத்தையும் தன் வேற்றுமதக் காதலி மீனாட்சி (ஹர்திகா ஷெட்டி) பற்றியும் சொல்லி பகிர்ந்துகொள்கிறார்

 காதல் விவகாரம் தன் காதலியின் அப்பாவுக்கு தெரிந்ததால் திருமண விசயமாக   அவரை  சந்திக்க சென்னை விமான நிலையம் வரும் அமீருக்கு போனில் வரும் ஒரு மர்ம அழைப்பு......

அவரது குடும்பத்தினரை பணயக் கைதியாக பிடித்து வைத்து அச்சுறுத்தலுடன்........ அவரை "ஜிஹாத்" அவசியத்தை பற்றி மூளைச்சலவை செய்து பல பயங்கரவாத செயல்களை செய்ய வலியுறுத்துகிறது 

 தன் குடும்பத்தை காக்க அந்த மர்மக் குரலுக்கு அடிபணிந்து அமீர் பயங்கரவாத தீவிரவாதியாக மாறினாரா....? அமீரின் காதல் என்ன ஆனது...? என்பதை ஆள் படத்தில் திகிலுடன் படம் காட்டுகிறார் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா

இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா......ஃபிலிப்பைன்ஸ் CAVITE தாக்கத்தில் வந்த அமீர் (இந்தி) படத்தின் அப்பட்டமான தமிழ் ரீமேக் ஆள் படத்தில்.....

இன்றைய சமுக அரசியல் சூழலில் ஒரு சாதாரண முஸ்லிம் இளைஞர் தான் சார்ந்துள்ள மத நம்பிக்கைக்கும் மத பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கும் இடையில் எப்படி சங்கடப்படுகிறான் என்பதை திகில் காட்சிகளாக பிரதிபலிக்கிறார் 

ஆள்-படத்தில் முன்பாதியில் வரும் அதிகபட்ச உரையாடல்களும் பின்பகுதியில் வரும் அதிகபட்ச உணர்வு பூர்வமான காட்சிகளும் ரசிகர்களுக்கு சலிப்பூட்டுகின்றன 


aal

விதார்த்......அடுத்த கட்டத்தை எட்டியுள்ள இவரது நடிப்பு அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் குறிப்பிடத்தக்கது ஹர்திகா ஷெட்டி.... நடிப்பதற்கு அதிக சந்தர்பம் இல்லை என்றாலும் சொக்கவைக்கும்  அழகுக்கும் கவர்ச்சிக்கும் பஞ்சமில்லை 

ஜோகனின் பின்னணி இசை கதை ஓட்டத்துக்கு இடையூறு இல்லாமல் அற்புதமாக உள்ளது அதேநேரம் என்.எஸ்.உதயகுமாரின் கேமரா சிக்கிமின் அழகை அள்ளிவந்துள்ளது


aal

ஆக மொத்தத்தில்..........
அதிகபட்ச உரையாடல்,பலவீனமான கதாநாயகி பாத்திரப் படைப்பு,சலிப்பூட்டும் கதை சொல்லலால் கொஞ்சம் தள்ளாடினாலும்.........

வலுவான கதை,திரைக்கதை,பின்னணி இசை,விதார்த் நடிப்பு,அழகியல் காட்டும் ஒளிப்பதிவு...இவைகளால் சமுக சிந்தனையுடன் வந்துள்ள இந்த ஆள்......பரவாயில்லை


Sunday, September 21, 2014

ஆகடு (தெலுங்கு)-சினிமா விமர்சனம்

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அதிரடியிலும் காமெடியிலும் தமண்ணா வுடன் இணைந்து நடிக்கும்  ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் டூகுடு போன்று  மீண்டுமொரு பிளாக்பஸ்டர் வெற்றிப்படம்..... ஆகடு  

aagadu

படத்தின் கதையாக..........

புக்காபட்டனத்தில் போலிஸ் அதிகாரியாக பதவியேற்கும் என்கவுண்டர்  ஸ்பெசலிஸ்ட் ஷங்கர் (மகேஷ் பாபு) அங்கே சட்டவிரோத தொழில் செய்து மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தாதா தாமோதரின் (சோனு சூட்) சின்ன சின்ன தொழில்களை தனது வேடிக்கை விளையாட்டுகளால் முடக்குகிறார் தாமோதரின் மிகப் பெரிய பவர் பிளான்டை அழிப்பதில் குறியாக இருக்கிறார் 

அவ்வப்போது ஷங்கர் அங்கே  இனிப்பு கடை வைத்திருக்கும் சரோஜா (தமண்ணா) வுடன் கொஞ்சி காதல் மயக்கத்தில் இருந்தாலும்...

அவரது முக்கிய குறிக்கோள் தனது கலெக்டர் அண்ணன்-அண்ணி தற்கொலைக்கு காரணமான தாதா தாமோதரை தில்லி சூரி (பிரம்மானந்தம்) உதவியுடன் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது 

தாதா தாமோதரையும் அவரது கூட்டத்தினரையும் எப்படி ஷங்கர் அழித்து பழிவாங்குகிறார்....? என்பதை இயக்குனர் ஸ்ரீனு வைட்லா காமெடி நிறைந்த அதிரடி காட்சிகளால் படம் காட்டுவதே.........ஆகடு 

காமெடி,பன்ச் வசனங்களுக்கு  பெயர் பெற்ற இயக்குனர் ஸ்ரீனு வைட்லா இப்படத்தில் இடைவெளியில்லாத தொடர் காமெடி பன்ச் வசனங்களால் பார்வையாளர்களை குசிபடுத்துகிறார் ஒரு வழக்கமான பழிவாங்கும் கதையை நகைச்சுவை,அதிரடி,காதல்..காரசாரமான கரம்மசாலாவுடன்  சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றி ரசிகர்களை பரவசப்படுத்துகிறார் 
                 thanks-YouTube by 14reels 

மகேஷ் பாபு.....இப்படத்தின் தொடக்கத்திலிருந்து ஒன் மேன் ஷோவாக சண்டைக்காட்சிகளில் பிரமிப்பும் வசன உச்சரிப்பில் நக்கல் கலந்த வேடிக்கையும் காதல்காட்சிகளில் நளினனமும் அலப்பறை நடனமும் என்று ரசிகர்களுக்கு வெள்ளித்திரையில் விருந்து படைக்கிறார் 
 
தமண்ணா....நடிப்பதற்கு ஒன்றுமில்லை என்றாலும் காதல் பாடல் காட்சிகளில் கலக்க......

aagadu

ஸ்ருதி ஹாசன்....ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டு கவர்ச்சியால் பார்வையாளர்களை கதிகலங்க வைக்கிறார் 
மற்றபடி ராஜேந்திர பிரசாத்,நாசர்,சோனு சூட்,பிரமாஜி, நதியா...என்று ஒரு கூட்டமே நடித்திருக்க தில்லி சூரியாக வந்து  பிரம்மானந்தம் கலக்குகிறார் 

எஸ்.தமனின் இசையில் படத்துக்கு இசையூறு இல்லாத பின்னணி இசையும் முன்னரே பிரபலமான பாடல்களும் கவர்கின்றது அப்படியே KV குகனின் ஒளிப்பதிவு படத்திற்கு ஹை-லைட்டாக இருக்க ஸ்ருதியின் நம்-2 பாடல் ஆட்டக் காட்சி....ஆஹா 

aagadu

ஆக மொத்தத்தில்.........
டூகுடு,ஒக்கடு,போக்கிரி....வெற்றிப்பட வரிசையில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுக்கு ஆகடு திரைப்படமும் மணிமகுடம் ஆகும் 


Saturday, September 20, 2014

கத்தி-படப் பாடல்கள் எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பு


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய்-சமந்தா இணைந்து நடிக்கும் கத்தி -படப் பாடல்கள் எப்படியிருக்கு........?  உங்களுக்கு பிடித்த பாடல்கள் எவை.....?  கருத்துக்கணிப்பு


kaththi

1-பக்கம் வந்து......
                                          thanks-YouTube by erostamilerostamil

பாடியவர்கள்: ஓடி ஓடி, 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி
பாடல்: மதன்கார்க்கி,ஹிப் ஹாப் தமிழா  

2-பலம்........
                                     thanks-YouTube by erostamilerostamil

பாடியவர்கள்: ஷங்கர் மஹாதேவன், ஸ்வேதா மோகன்
பாடல்: நா முத்துக்குமார்

3-செல்ஃபி புள்ள...
                               thanks-YouTube by erostamilerostamil


பாடியவர்கள்: விஜய்,சுனிதி செளகான்
பாடல்: நா முத்துக்குமார்
 

4-நீ யாரோ.....
                                     thanks-YouTube by erostamilerostamil

பாடியவர்கள்: KJ யேசுதாஸ்
பாடல்: பா. விஜய்
  

5-ஆதி
                                  thanks-YouTube by erostamilerostamil
பாடியவர்கள்: அனிருத், விஷால் தத்லானி
பாடல்:யுகபாரதி
 


kaththi

கத்தி-படப் பாடல்கள் எப்படியிருக்கு....?  

கத்தி-படப் பாடல்களில்..........
உங்களுக்கு பிடித்த பாடல்கள் எவை....?
(எத்தனை பாடல்களையும் தேர்வு செய்யலாம்)

 
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........

 

Friday, September 19, 2014

அரண்மனை-சினிமா விமர்சனம்











சந்திரமுகி-யின் மனப்பிரமை பேய்,முனி,காஞ்சனா-வின் பழிவாங்கும் பேய், யாமிருக்க பயமே-வின் சிரிக்கவைக்கும் பேய்..போன்று ஹன்ஷிகா,ராய் லட்சுமி,ஆண்ட்ரியா..இவர்களுடன்  கவர்ச்சியாக
  பய(ட)ம் காட்டி திகிலுடன் சிரிக்க வைக்கும் ......... அரண்மனை

aranmanai

படத்தின் கதையாக.................
 முன்பகுதியில் வினய் தனக்கு சொந்தமான ஓர் அரண்மனையை விற்பதற்கு அவரது மனைவி ஆண்ட்ரியா மற்றும் உறவினர்களுடன் வருகிறார் ஆனால்  அனைவருக்கும் அங்கே அவர்களைச் சுற்றி  பல விரும்பத்தகாத  பயங்கர சம்பவங்கள் நடக்க....

பின் பகுதியில்  அதற்கான காரணத்தையும் தீர்வையும் கண்டுபிடிக்கும்  ஆண்ட்ரியாவின் அண்ணன் கதாப்பாத்திரமாகவும் படத்தின்  இயக்குனராகவும் வரும் சுந்தர் சி படம் காட்டுவதே....

(இது ஒரு காமெடி திகில் திரைப்படம் என்பதால் இதற்கு மேல் தொடரவில்லை..... )
                                          thanks-YouTube by Saregama Tamil 

இயக்குனர் சுந்தர் சி.....அரண்மனை படத்தில் புது முயற்சியாக பயங்கர திகிலையும் காமெடியையும் கலவையாக.....அதேநேரம் சில  திகில் காட்சிகள் Oculus போன்ற ஹாலிவுட் பேய் படங்களில் சுட்டதாகவும் தெரிய...... படத்தின் நீண்ட கிளைமாக்ஸ் ஓர் அம்மன் குட்டிப் படம் போல் உள்ளது  

ஹன்ஷிகா...படத்தின் இடைவேளைக்கு சற்று முன்பு வந்தாலும் ஒரு கிராமத்து பெண்ணாக கவர்ச்சி உடை மற்றும் ஒப்பனை எதுவும் இல்லாத அழகுடனும் நடிப்புடனும் பார்வையாளர்கள் மனதை திருடுகிறார் ஆண்ட்ரியா....அவருக்கு கிடைத்த கதாப்பாத்திரத்தின்  நடிப்பில் அனைவரையும் கவர........... ராய் லட்சுமி.....தன் கவர்ச்சியால் எல்லோரையும் ஜொள்ளுவிட வைக்கிறார் 

சந்தானம்.........வழக்கப் போல் அவரது கலாய்த்தல்  காமெடியில் கோவை சரளா,மனோபாலாவுடன் அரங்கம் அதிரும் காமெடி சிரிப்பை வழங்க வினய்,நிதின் சத்யா,சித்ரா லட்சுமணன்,காதல் தண்டபாணி... என்று ஒரு நடிகர் பட்டாளமே உள்ளது 

பரத்வாஜ் இசையில்......பாடல்கள் பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேணுமா...? சொன்னது சொன்னது...பாடல்களைத் தவிர மற்றவை மனதில் நிற்கவில்லை  செந்தில்குமாரின் ஒளிப்பதிவில்....... அரண்மனையின் உட்புற வெளிப்புற தோற்றங்கள் பிரமாண்டம்  வெளிப்புற பாடல்காட்சிகளில் பிரமிப்பு

aranmanai


சந்திரமுகியின் அடிப்படை கதை,காஞ்சனாவின் காதல்,நகைச்சுவை, அருந்ததியின் பெண்ணை மையப்படுத்திய பிரமாண்டம், யாமிருக்க பயமேயின் A கிளாஸ் ரசிகர்களை மகிழ்விக்கும் டார்க் காமெடி அடிப்படையில்.... 

ஆனாலும்........  

அனைத்து ரசிகர்களையும்  குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும்  கொஞ்சம் பயம் நிறைய காமெடியுடன் கவர்ச்சியாக வந்திருக்கும் படம்........... சுந்தர் சி யின் அரண்மனை


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........

aranmanai

அரண்மனை-படம் எப்படியிருக்கு....?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........



Thursday, September 18, 2014

விஜய் பாடிய கத்தி-படத்தின் செல்பி புள்ள. பாடல் எப்படியிருக்கு?


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  அனிருத் இசையில் கத்தி படத்தில் விஜய் & சுனிதி செளகான் பாடிய செல்பி புள்ள. (Selfie Pulla) பாடல் எப்படியிருக்கு? மற்றும் கத்தி-பட டீஸர்   எப்படியிருக்கு.....? கருத்து கணிப்பு 


கத்தி-படத்தின் செல்பி புள்ள. பாடல்
 
                                  thanks-YouTube byerostamil erostamil


கத்தி- செல்பி புள்ள. பாடல் எப்படியிருக்கு?




 
kaththi

கத்தி-பட டீஸர் .......

                                     thanks-YouTube by Lyca Productions

கத்தி-பட டீஸர்   எப்படியிருக்கு.....?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........

Wednesday, September 17, 2014

ஷங்கரின் ஐ படப்பாடல்கள் எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பு


விக்ரம்-எமி ஜாக்சன் நடிக்க  ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஷங்கரின் படப்பாடல்கள் எப்படியிருக்கு? என்ற  கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டு......

1-மெரசலயிட்டன்.........
                                 thanks YouTube by SonyMusicSouthVEVOSonyMusicSouthVEVO

நான் வண்ணாரபேட்டை....நீ வெண்ணிலா முட்டை ....போன்ற   வடசென்னை மக்களின் பேச்சுவழக்கில் உள்ள பிரத்யேக வார்த்தைகளை பிரயோகித்து கொடைக்கானல் மலை உச்சியில் இருந்து கவிஞர் கபிலன் எழுதிய இப்பாடலை  அனிருத் ரவிச்சந்தரும் நீதி மோகனும்  பாட.......... ஏ.ஆர்.ரகுமானின் இசை கேட்பவரை இன்பத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்

2-என்னோடு நீ இருந்தால்...........
                              thanks YouTube by SonyMusicSouthVEVOSonyMusicSouthVEVO

என்னோடு நீ இருந்தால்....உயிரோடு நான் இருப்பேன் என்று  6 முறை வேறுபட்ட ரிதங்களில்  கவிஞர் கபிலனின் மனதை  மயக்கும் வார்த்தைகளை சித் ஸ்ரீராம் தன் கவர்சிக்குரலில் சுனிதா சாரதியின் துணையோடு இதயத்திலிருந்து பாட ஏ.ஆர்.ரகுமான்  ட்ரம்,பியானோ, புல்லாங்குழல்,கிதார்... இசைக்கருவிகளின்  ஒலிக்கலவையாக உயிரோட்டம் தருகிறார் 

3-லடியோ.........
                                    thanks YouTube by SonyMusicSouthVEVOSonyMusicSouthVEVO

கவிஞர் மதன் கார்க்கியின் வார்த்தைகளில் நிகிதா காந்தி பாட ஏ.ஆர்.ரகுமான் முற்றிலும் மேற்கத்தியப் பாணியில் மேற்கத்திய பார்ட்டி நடன இசையுடன் எந்திரனின் இரும்பிலே...பாடலை நினைவூட்டி நம்மை ஷங்கரின் விஷுவல் காட்சிக்காக ஏங்க வைக்கிறது 

4-பூக்களே சற்று ஓய்வெடுங்கள்........
                                thanks YouTube by SonyMusicSouthVEVOSonyMusicSouthVEVO

ஹரிச்சரண்-ஸ்ரேயா கோஷல் வசீகரிக்கும் குரல்களில் கவிஞர் மதன் கார்க்கியின் உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகளில் ஏ.ஆர்.ரகுமார் ஒலி ஓவியமாய் விக்ரம்-எமி ஜாக்சனின் காதல் டூயட்டை கேட்பவரின் கண்முன் காட்சிப்படுத்துகிறார்

5-அய்லா அய்லா........
                                   thanks YouTube by SonyMusicSouthVEVOSonyMusicSouthVEVO
ஆதித்யா ராவ்-நாட்லியா டி லூசியாவின் கதிகலங்க வைக்கும் குரல்களில்  கர்னாட்டிக் இசையை தழுவிய மேற்கத்திய பியானோ ஒலியுடன் பாங்ரா அடி துடிப்பாக  ஏ.ஆர்.ரகுமான்   படைத்துள்ள இப்பாடல் தூங்குபவர்களை தட்டி எழுப்பும்............

6-என்னோடு நீ இருந்தால் (மீள் பாடல்)...........

                              thanks YouTube by SonyMusicSouthVEVOSonyMusicSouthVEVO

சித் ஸ்ரீராம் பாடிய ஒரிஜினல் பாடல் வரிகளுடன் அனால் வேறுபட்ட ரிதமுடனும் இசையுடனும்  மீள் பாடலாக வரும் இப்பாடலில் சின்மாயின் குரல் அதிகபட்சமாக ஒலித்து இதயத்தை வருடுகிறது 

என்ன நண்பர்களே! ஐ படப்பாடல்கள் இதுவரை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதாக உணர்கிறீர்களா....? 
நீங்கள் கேட்டதில்............
ஏ.ஆர்.ரகுமான் இசையில்..........
படப்பாடல்கள் எப்படியிருக்கு?

  பாடல்களில்.....
 உங்களுக்கு பிடித்தவை  எவை...?
(ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்களை தேர்வு செய்யலாம்)
 


வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........




UA-32876358-1