google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: October 2014

Thursday, October 30, 2014

என்னை அறிந்தால்...(ட்விட்டர்கள் பார்வையில்)

 கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 55 படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் என்னை அறிந்தால்... வெளிவந்ததை தொடர்ந்து சமுக வலைத்தளமான ட்விட்டர் இன்று களை கட்டியது....

கோலிவுட் பிரபலங்கள்.....
 powerful mass and class என்று பாராட்டிய  தனுஷ் கவுதம் மேனன் அவரது படங்களுக்கு வைக்கும் தலைப்பு அவரை கவர்வதாக கூறுகிறார் இதே போன்று ராய் லட்சுமி,அனிருத்,பிரேம்ஜி,தயா அழிகிரி...பலரும் பாராட்டுகிறார்கள்

ட்விட்டர்கள் பார்வையில்..............

கர்ணாசக்தி @karna_sakthi
அண்டமெல்லாம் புழுதிகிழப்பி ஒரு கறையும் படாதவாறு வெண்ணிற ஆடையனிந்து உக்கிரமாய் முறைப்பாராம் எளிமையின் திருவுருவம் #பர்ஸ்ட்லுக்

ஆல்தோட்டபூபதி@thoatta 
கதைக்கு சம்பந்தமில்லாம அருவாமனை, ஆக்சா ப்ளேடுன்னு வைக்கிறத விட கதைக்கு ஏத்த டைட்டில் வைக்கிற பெருந்தன்மை தலக்கு தான் வரும்

காக்கைச் சித்தர்@vandavaalam 
சின்ன பசங்களெல்லாம் ராயல் என்பீல்ட் ஓட்டி ஓட்டி நாஸ்தி பண்ணிட்டானுங்க. இப்பதான்யா புல்லட்டுக்கே ஒரு கெத்து வந்துருக்கு.

கற்றது B.E.@liryc10 
இவனுக பைக்க தலைகீழ ஓட்டிட்டு வந்தாலும் ஏதாவது தேடிபிடிச்சு காப்பினுதான் சொல்லுவாங்க #நீ வா தல

ஜென்டில்மேன்©@Paasakkaran 
Mass க்கு Class எடுக்குற தலயும் Class அ Mass ஆ எடுக்குற கௌதமும் சேர்ந்தா அதான்டா என்னை அறிந்தால்

ஆந்தைகண்ணன்@cinemascopetaml 
என்னை அறிந்தால் #thala55 டைட்டில் அழகிய தமிழில் பெயர் வைக்கும் மேனன் அசத்தல்

குழந்தை Talks@maanniiiiiii 
அஜீத் ரசிகனுக்கு விஜய் ரசிகையும் விஜய் ரசிகனுக்கு அஜித் ரசிகையும் துனைவியா வரணும் :) சாகட்டும் பக்கிக. கொலையா கொல்லுதுங்க :( முடியலடா

சட்டம்பியை அறிந்தால்@stalinsk50 
இந்திய அளவில் முதல் இடம் உலக அளவில் இரண்டாமிடம் இந்த டைட்டிலுக்கு கிடைத்த வரவேற்பு இது தான் "தல" மாஸ் "தல" கெத்து ஆங் #YennaiArindhaal

Vidya@vidya_05 
டைட்டில் சாதரணமா இருக்க இல்ல Mass ah இருக்கா? இவரோட பாத்தா சாதரண title கூட Theri Mass ah தெரியும் #YennaiArindhaal ! 

#YennaiArindhaal™@TigerTayson 
அந்த திமிர் அந்த மிடுக்கு அந்த ஆணவம் #Thalaய தவிர யாருக்கும்வராது #YennaiArindhaal

வெள்ளமனசுகாரன்®@manivenkatesh 
கடைசி வரைக்கும் தல யாருன்னே தெரியாம சுத்திட்டு இர்ருப்பரம் கிளைமாக்ஸ்லதான் தெரயுமாம் அப்போ தான் என்னை அறிந்தால்ன்னு பேரு போடுவாங்களாம்!

மேகத்தை துரத்தினவன்@iam_sihva 
அடேய் அது அரிந்தால் இல்லடா அறிந்தால் என்ன பண்றது படிப்பும் பத்தாங்கிளாஸ் பெயில்தான:)))))))))

லிங்கா குட்டி @2singakutti 
ஆனா கவுதம் நீ சரியான ஆளுடா சூரியாவுக்கு காக்க காக்க, வாரணம் ஆயிரம் Title வச்சிட்டு #என்னை அறிந்தால்னு வச்ச பாத்தியா புரிது தல னா யாரு
 ஒரு படத்தின் டைட்டில் வெளிவந்த ஒரு சில மணி நேரத்தில் உலகளவில் ட்ரென்ட் செய்தது உலக சினிமா வரலாற்றில் அஜித்தின் என்னை அறிந்தால்....படத்தின் தலைப்பும்  பர்ஸ்ட்-லுக் போஸ்டரும் ஆகும் என்று சினிமா வலைத்தளங்கள் பாராட்டுகின்றன 



Monday, October 27, 2014

ட்விட்டர்கள் போற்றும் கத்தி திரைப்படம்


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த கத்தி திரைப்படம் அதன் சமுதாய சிந்தனையான  கதைக்கரு.... விவசாய நிலங்கள் பன்னாட்டு கம்பெனிகளால் அபகரிக்கப்பட்டு பாதிக்கப்படும் விவசாயிகளை முன்னிறுத்துவதாக........
ட்விட்டர் சமுக வலைதளத்தில் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அனைவராலும்  போற்றப்படுகிறது

கில்லி மனோ@Tweets_4rm_MaNo 
படியுங்கள்,கத்தியின் மூலம் விஜய்'ம் முருகதாஸ்ம் எவ்வளவு பெரிய விழிப்புணர்வு எற்படுத்தியிருக்கிறார்கள் என்பது புரியும் m.vikatan.com/tiny/index.php

(கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.)
VishnuRam@VishnuRam_G 
உண்மை கதைக்காக இரண்டு நிமிடம் படியுங்கள். -------"கத்தி" படமும் "சூரியூர்" கிராமமும்-------
(சூரியூரில் பாட்டில் (Glass Bottle) தயாரிக்கும் தொழிற்சாலை வரப்போவதாக
தவறான தகவலை அப்போதைய சூரியூர் ஊராட்சிமன்ற தலைவர் மலர்விழி மூலம் சொல்லி தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி 2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த
மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற
தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான கம்பெனி என்று.)

கர்ணாசக்தி @karna_sakthi 
5000கோடி லோன் வாங்கிட்டு கட்டமுடியலைன்னு கைய தூக்கிட்டு தற்கொலை செய்யாம இருக்கிறவன்னு கத்தி விஜய் சொல்றது விஜய் மல்லையாவ தான?

அர்ஜூன் ரகு@ragu_as 
கத்தி படத்தில் குறை சொல்ல எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அப்படம் விவசாயத்தை மையமாக கொண்டதால் இத்துடன் எனது உரையை..

ansari masthan@ansari_masthan 
கத்தி சொல்ற மாதிரி தமிழ் நாட்டு விவசாயிகளை யாராலயுமே காப்பாத்த முடியாதா ??

Sumar Moonji Kumaru@SumarMoonji_K 
அமெரிக்காவை அசர வைத்த கத்தி பாக்ஸ் ஆபிஸ்!: தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு எடுத்து சென்றவர் முருகதாஸ...

ANBARASU@ANBARASUSE 
#கத்தி# இனி கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் போதெல்லாம் இனி ஏழ விவசாயி ரத்தம்தான்டா ஞாபகம் வரும்..

 #HappyBirthdaySanga@sharmilan33 
விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரே தமிழ் படம் கத்தி.நன்றி விஜய் அண்ணா

பட்டதாரி @pattuTwits 
நான் மெர்சலாய்டேன்! #கத்தி முழுகதை ஒரே போஸ்டரில் #இளைய தளபதி விஜய் #முருகதாஸ்


Makkal Thalapathy@ThalapathyFan1 
கத்தி ஏற்படுத்திய சமூக விழிப்புணர்வு ! TRICHY.. PROTEST AGAINST PEPSI PLANT AT SURIYUR.


                             thanks YouTube by agni india


thanks to all twitter friends

Saturday, October 25, 2014

கத்தி வெற்றிக்கு காரணம்...?


விஜயின் கத்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அனைவராலும் பாராட்டப் பட அதன் கதை, திரைக்கதை,வசனம்,இயக்கம், நடிப்பு, இசை,ஒளிப்பதிவு....என்று சொல்லப்பட்டாலும்.........
கத்தி படத்தின் வெற்றிக்கு உண்மையான  காரணங்கள் எவை?

கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்........
கதையிலும் திரைக்கதையிலும் நிறைய லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிந்தாலும் ஒரு மிகப்பெரிய பட்ஜெட்,மிகப் பெரிய நடிகர் நடித்த கத்தி  படத்தில்........

விவசாய பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனைகள்-விவசாயத்துக்கான நீர்வளத்தை திருடும் குளிர்பான கார்பரேட் கம்பெனிகளின் அய்யோக்கியத் தனங்கள்,2 ஜி ஊழல் பற்றிய வசனங்கள்... பற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் சிந்தனைகள்  பாராட்டப்பட்டாலும்........

 பொழுது போக்கு காதல்,காமெடி கமர்சியல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அவரது ரமணா படம் போன்ற விழிப்புணர்வு படமாக அமையவில்லை enஎன்றும் சொல்கின்றனர்

 நடிப்பு..........

நடிகர் விஜய்-தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கும் நடிகர் விஜய்  கிராமத்து மக்களுக்காக வாழும் புரட்சிகர கம்னிஸ்டாக ஜீவானந்தம்  என்ற ஒரு வலுவான கதாப்பாத்திரத்தில் அமைதியாக அடக்கமாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்கிறார்

அதேநேரத்தில் அவரது அதீத ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்ய கதிரேசன் என்ற இளமைத் துள்ளலுடன் அதிரடி சண்டைக்காட்சிகள், வேகமான நடன அசைவுகள்,காதல் பாடல்காட்சிகள்....என்று கலக்கலாக நடித்துள்ளார்

ஒரே உருவத்தில் இரு வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்

மற்றபடி சமந்தா-பாடல்களுக்காகவே கவர்ச்சியாகவும் அழகாகவும் வந்து போகிறார் சதீஷின் காமெடி எடுபடாமல் போக.....ஆனால்  நீல் நிதின் முகேஷின் வில்லத்தனமான நடிப்பு கவனிக்க வைக்கிறது

இசை.........

அனிருத்-பின்னணி இசையில் இன்னும் அடங்காத கொலைவெறியுடன் அலைந்தாலும் மூன்று பாடல்களில் தேனிசை ஊட்டுகிறார்

ஒளிப்பதிவு..........

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் கெல்கத்தா சிறை உடைக்கும் காட்சி,சுரங்கப்பாதை காட்சி மட்டுமின்றி ஒரு கிராமமும் அழகாக காட்டப்படுகிறது  சில்லறை நாணயங்களை தூக்கிப் போட்டு அடியாட்களை பந்தாடும் இருட்டில் நடக்கும் சண்டைக்காட்சி பிரமிக்க வைக்கிறது

இப்படத்தின் வெற்றி ஒரு கூட்டு முயற்சியாக தெரிவதால்......

கத்தி வெற்றிக்கு காரணம்...? 
(ஒருவர் எத்தனை காரணங்களுக்கும் வாக்களிக்கலாம்)



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........

Thursday, October 23, 2014

ஹேப்பி நியூ இயர் (இந்தி)-சினிமா விமர்சனம்

கண்களுக்கு குளுமையான வண்ணக் காட்சிகள், காதுக்கு இனிமையான தேனிசை பாடல்கள், தலையாட்ட  வைக்கும் நடனங்கள்....இவைகளால் படம் பார்ப்பவரை பரவசத்தில்  துள்ள வைக்கிறது.....ஷாருக் கானின் ஹேப்பி நியூ இயர்

இப்போதெல்லாம் பாலிவுட் நாயகர்கள் திருடர்களாக திரையில் தோன்றுவது வெற்றியின் குறியீடாக......அமீர்கான் (தூம் 3), சல்மான்கான் (கிக்),ஹிருத்திக் ரோஷன் (பேங் பேங் பேங்) 
ஆனால்....
ஷாருக் கான் திருடராக தோன்றினாலும் வித்தியாசமான கதையால் ஹேப்பி நியூ இயர்-படம் வேறுபடுகிறது 

படத்தின் கதையாக........

தெரு ரவுடியாக அலையும் ஷாருக் கான் தன் தந்தையை  (அனுபம் கெர்) திருட்டு பட்டம் கட்டி சிறைக்கு அனுப்பிய  ஜாக்கி ஷெராபை பழிவாங்க....

துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜாக்கி ஷெராப் பாதுகாப்பில் இருக்கும் விலை உயர்ந்த வைரங்களை நியு இயர் அன்று நடக்கும் உலக நடனப் போட்டியில்............

அபிஷேக் பச்சன்,தீபிகா படுகோனே,சோனு சூட்,போமன் இரானி,விவான் ஷா ஆகியோருடன் கூட்டணியாக நடனக் கலைஞகள் வேடத்தில்  போட்டியில் கலந்து கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்  

அவர்களது முயற்சி வெற்றி பெற்றதா....? என்பதை இயக்குனர் ஃபரா கான் காதல்,நகைச்சுவை,திகில் திருப்பங்களுடன் படம் காட்டுகிறார் 

சிறப்பான இயக்கம்,விறுவிறுப்பான திரைக்கதை,பாடல்கள், ஒளிப்பதிவு,அதிரடிச் சண்டைக்காட்சிகளால் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ஹேப்பி நியூ இயர் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்     



பூஜை-சினிமா விமர்சனம்

காமெடி கலந்த குடும்பக் கதையில் ரோலர்-கோஸ்டரில் பயணிக்கும் திரைக்கதையுடன் இருக்கை விழிம்பு வரை வழுக்கி விழ வைக்கும் அதிரடி மசாலா ட்விஸ்ட்கள் நிறைந்த  பூஜை திரைப்படம்.....

இயக்குனர் ஹரி வெண்திரையில் படைத்த இனிப்பு,துவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு,கசப்பு..அறுசுவை தீபாவளி விருந்து

படத்தின் கதையாக........

பொள்ளாச்சியில் கொலை,கொள்ளை,அடுத்தவர் நிலங்களை ஆட்டை போடும் பைனான்ஸ் கம்பெனி அதிபரும் கூலிப்படை தலைவனும் கோயில் அறங்காவலருமான முகேஷ் திவாரி........

கோவையில் பெரிய தொழில் நிறுவனமான கோவை குருப்ஸ்  பங்குதாரர்கள் ராதிகா,ஜெயபிரகாஷ்,தலைவாசல் விஜய்...ஆகியோருக்கு சொந்தமான நிலத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார்.ஜெயப்பிரகாசை அடித்து அவமானப்படுத்துகிறார். உயர் போலிஸ் அதிகாரி சத்யராஜை கொலை செய்ய  கூலிப்படைகளை அனுப்புகிறார் 

இதனால் கோபம் கொண்ட ராதிகா வீட்டை விட்டு பிரிந்திருக்கும் தன் மகன் விஷாலிவிடம் சொல்லி முகேஷ் திவாரியை  அடக்கி வைக்க சொல்கிறார்

ஸ்ருதியுடன் காதலும் மோதலுமாக ஜொள்ளுவிட்டு அலையும்  விஷால் போலிஸ் அதிகாரி சத்தியராஜையும் அவரது மனைவியையும் முகேஷ் திவாரி ஆட்களிடமிருந்து காப்பாற்றி..........

திவாரியை பொள்ளாச்சி மெயின் ரோட்டில் அடித்து இழுத்துச் சென்று அவமானப்படுத்துகிறார்
முகேஷ் திவாரியின் ஆட்கள் விஷாலை கொலை செய்ய தேடுகிறார்கள்

இருவருக்கும் இடையில் நடக்கும் எலியும் பூனையும் பழிவாங்கும் காமெடிக் கூத்துகளாக  நாயகன் விஷால் தனி ஆளாக நின்று சண்டையிட்டு வில்லன் முகேஷ் திவாரியை எப்படி பழிவாங்குகிறார்...? என்பதை.......

 இயக்குனர் ஹரி வழக்கமான அவரது அதிவேக ஆக்சன்  பாதையில் தவறாமல் காதல்,நகைச்சுவையுடன் அதிரடியாக படம் காட்டுகிறார் 

முதல் பாதியில் விஷால்-ஸ்ருதி காதலுடன் வில்லன் திவாரியின் அட்டகாசங்களை வெளிச்சம் போடும் படம்.......
இரண்டாம் பாதியில் மின்னல் வேகமெடுத்தாலும் நிறைய குடும்ப சென்டிமென்ட் காட்சிகளால் தடுமாறுகிறது நீளத்தை குறைத்திருக்கலாம்

நடிகர் விஷால்...அதிவேக அதிரடி சண்டைக் காட்சிகளில்  ஆங்கிலப் பட அதிரடி நாயகர்களை மிஞ்சும் வண்ணம் பாய்கிறார் காதல் காட்சிகளில் அவருக்கே உரிய நளினம் மிளிர்கிறது

அய்யோப் பாவம் ஸ்ருதி ஹாசனை அதிக மேக்கப்போட்டு துணிக்கடை விளம்பர பொம்மை ஆக்கிவிட்டார்கள்

மற்றபடி சத்தியராஜ்,ராதிகா,ஜெயபிரகாஷ்...குணச்சித்திரமாக நடிக்க.......
ஆண்ட்ரியா........சிறப்பு தோற்றத்தில் ஒரு கவர்ச்சி குத்து போட்டு  குதிக்க......
கவுண்டமணி-செந்தில் போன்று  சூரி-பிளாக் பாண்டி இருவரும் காமெடியில் கலக்குகிறார்கள்

இசையில் யுவன் சங்கர் ராஜா அமுக்கி வாசிக்க.....பிரியனின் ஒளிப்பதிவில் பாடல்காட்சிகள் மட்டும் கவர்கிறது ஸ்ருதியை கொழு கொழு கொலு பொம்மையாக காட்டுகிறது

ஆக மொத்தத்தில்.............

பூஜை திரைப்படம்...... இயக்குனர் ஹரி வெண்திரையில் கலவையாக படைத்த இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு,  கார்ப்பு, உவர்ப்பு,கசப்பு..அறுசுவை தீபாவளி விருந்து   

Wednesday, October 22, 2014

கத்தி-சினிமா விமர்சனம்


கத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும்  காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின்   மற்றுமொரு வெற்றிப் படம் 

படத்தின் கதையாக..............

விவசாய நிலங்களை அபகரிக்க நினைக்கும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக போராடிய  அமைதியான சமுக ஆர்வலர் ஜீவானந்தன் (விஜய்) சுடப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில்...........

சின்ன சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டு சிறைக்கு போய் தப்பி வரும்  துடிப்பான வலிமையான இளைஞன் கதிரேசன் (இன்னொரு விஜய்) சந்திக்க......

ஒரே உருவத்தில் இருக்கும் திருடன் கதிரேசன் சமுக ஆர்வலர் ஜீவானந்தமாக மாறி கிராமத்து விவசாய மக்களுக்காக அவ்வப்போது தன் காதலி (சமந்தா)வுடன்  கொஞ்சிக்  குலாவினாலும் பன்னாட்டு நிறுவன முதலாளியை (நீல் நிதின் முகேஷ்)  எதிர்த்து போராடுகிறார்  

திருடன்  கதிரேசன் தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா...? சமுக ஆர்வலர் ஜீவானந்தம் என்ன ஆனார்....? என்பதை திரையில் தெரிந்துகொள்ளுங்கள் 

இயக்குனர் முருகதாஸ்.......அதிகமான .வணிக சினிமா சமாச்சாரங்களை கொஞ்சம் சமுக சிந்தனையுடன் படைத்துள்ள கத்தி படத்தின் திரைக்கதை நிறைய லாஜிக் ஓட்டைகளால்  தள்ளாடுகிறது    இந்தப் படத்துக்கு ஏன் கத்தி என்ற பெயர்...? அவருக்கே வெளிச்சம் 

நடிகர் விஜய்.....இருவேடங்களில் இரு வேறுபட்ட நடிப்பை காட்டுகிறார் அவரது அதீத ரசிகர்களுக்காக............கதிரேசனாக கலக்குகிறார்  
பொதுவான ரசிகர்களுக்காக......அமைதியான ஜீவானந்தனாக வருகிறார் 

சமந்தா........தனது அழகான கவர்ச்சிப் புன்னைகையால் படம்பார்ப்பவர்களின் இதயங்களை புரட்டி புரட்டி போட்டு தாக்குகிறார் முத்தான மூன்று பாடல்களில் அழகு ஓவியமாக தோன்றுகிறார் 

மற்றபடி சதீஷ் பேசும் ஒன்லைன் காமெடி வசனங்கள் பெரிதாக எதுவும் சொல்வதற்கில்லை MNC கம்பெனி தலைவராக வரும் நீல் நிதின் முகேஷ் வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் கவர்கிறார் 

அனிருத் இசையில் பாடல்கள் அருமை...பின்னணி இசையில் அரங்கம் அதிர்கிறது The Sword of Destiny’..இசைக்கும்போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரத்தில் தியேட்டருக்குள் தீபாவளிச் சரவெடி........செல்பி புள்ள....பாடல் கொளுத்தி போட்ட மத்தாப்பு

ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு கதிரேசன்-ஜீவானந்தம் இருவர் மனநிலைக்கு ஏற்ப இரு மாறுபட்ட வண்ணத்தை திரையில் படம் காட்டுகிறதுஜெயில் உடைபடும் காட்சி,360டிகிரியில் காட்டப்படும் சுரங்கப்பாதை காட்சி.......பிரமிக்க வைக்கிறது 


ஆக மொத்தத்தில்.................
கத்தி- கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய பொழுது போக்கும்  காட்சிகளாக கலந்துகட்டி படம் காட்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியினரின்   மற்றுமொரு வெற்றிப் படம் 

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...............

கத்தி-படம் எப்படியிருக்கு.........?




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........

Tuesday, October 21, 2014

தனுஷின் அனேகன்-டீஸர் எப்படியிருக்கு?

 கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கலக்கல் நாயகன் தனுஷ் அழகு மங்கை அமைரா தாஸ்தூர்வுடன் இணைந்து நடிக்கும் மிகப் பெரிய பொழுது போக்கு சினிமா........
 அனேகன் - டீஸர் எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பு.........


                                  thanks YouTube by Sony Music India Sony Music India

அனேகன்-டீஸர் எப்படியிருக்கு......?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........




Monday, October 20, 2014

கத்தி Vs பூஜை-ஜெயிக்கப்போவது எது?

இங்கே தீபாவளிக்கு வெளிவரும் விஜயின் கத்தி-விஷாலின் பூஜை திரைப்படங்களில்   ஜெயிக்கப்போவது எது....? என்ற ஒரு நாள் அதிரடி வாக்கெடுப்பில் கலந்துக் கொண்டு............ 

                              thanks YouTube by Lyca Productions

கத்தி-
பல வெற்றிப்படங்களை தந்த ஏ.ஆர்.முருகதாஸ் எழுத்து இயக்கத்தில் இளையதளபதி விஜய் இரட்டை வேடத்தில் கவர்ச்சிப்புயல் சமந்தா,பாலிவுட் வில்லன் நீல் நிதின் முகேஷ்வுடன் நடித்து தீபாவளிக்கு வெளிவரும் அதிரடி திகில் திரைப்படம் 

                              thankds YouTube by VishalFilmFactory

பூஜை-
ஹை-ஸ்பீடு கில்லாடி இயக்குனர் ஹரியின் எழுத்து இயக்கத்தில் இளம் நடிகர் விஷால்...... கவர்ச்சி உலக நாயகி ஸ்ருதி ஹாசன்,சத்யராஜூடன் நடித்து தீபாவளிக்கு வெளிவரும்   மசாலா திரைப்படம் 

நண்பர்களே! இரண்டு படங்களின் முன்னோட்டத்தை பார்த்து இருப்பீர்களே!

கத்தி Vs பூஜை-ஜெயிக்கப்போவது எது?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு-21/10/2014 ....10 pm



Sunday, October 19, 2014

கத்தி-முன்னோட்டம் (ட்ரைலர்) எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பு


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-சமந்தா நடிப்பில்  கத்தி திரைப்படத்தின் முன்னோட்டம் (ட்ரைலர்) பற்றிய ஒரு நாள் கருத்துக்கணிபு...........


                              thanks YouTube by Lyca Productions

கத்தி-ட்ரைலர் எப்படியிருக்கு? 





வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி  முடிவு-20/10/2014 10 pm


Tuesday, October 14, 2014

2014-ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது? கணிப்பு முடிவு


மது பிளாக்கில்..........
 கத்தி, தல 55, ஐ,லிங்கா,  உத்தமவில்லன், பூஜை... இவைகளில் 2014-ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது? என்று நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு........

THALA55

அஜித் நடித்து வெளிவரவிருக்கும் தல 55 படமே அதிக வாக்குகள் பெற்று  2014-ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது 


இவைகளில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்....
 உங்கள் விருப்பமான படம் எது....?



வாக்களிக்த்த  அனைவருக்கும் நன்றி........ 




Friday, October 10, 2014

வெண்ணிலா வீடு-சினிமா விமர்சனம்

அதிரடிச் சண்டைகள்,கவர்ச்சிக் கூத்துக்கள், டார்க் காமெடிகள்,டாஸ்மாக் வாந்திகள்...போன்ற நவீன சினிமாச் சமாச்சாரங்கள் இல்லாத போலிப் பந்தாவை படம் காட்டும் யதார்த்தமான குடும்பச் சினிமா.....வெண்ணிலா வீடு 

beach

படத்தின் கதையாக...........

சென்னையில் ஒரு அபார்ட்மெண்டில் மகள் வெண்ணிலாவுடன் சந்தோசமாக வாழும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த காதல் திருமண தம்பதியினர் கார்த்திக் (மிர்ச்சி செந்தில்)-தேன்மொழி (விஜயலட்சுமி) வாழ்வில் எதிர்பாராமல் வரும் சோதனையாக.......

ஒருநாள் கார்த்திக்  மனைவி தேன்மொழியுடன் தன் முதலாளி மகள் கல்யாணத்தில் கலந்து கொள்ள போகும் போது..

தேன்மொழியோ தன் பக்கத்து வீட்டு பணக்கார தோழி இளவரசி (சிருந்தா ஆசப்) யிடம் விலையுர்ந்த (ரூ.25  லட்சம்) தங்க நகையை இரவலாக வாங்கி அணிந்துக்கொண்டு கல்யாணத்திற்கு போகிறாள் 

இருவரும்  வீடு திரும்பும் போது தங்க நகையை திருடனிடம் பறிகொடுத்து விடுகிறார்கள் 

இளவரசியும் அவளது கந்து வட்டி  மாமனாரும் கார்த்திக்-தேன்மொழி இருவரையும் சந்தேகப்பட்டு தரக்குறைவாக பேசி கெடுபிடி செய்ய.....

இப்பிரச்சனையிலிருந்து இருவரும் எப்படி மீள்கிறார்கள்? என்பதை எதிர்பார்ப்புடன் படம் காட்டுவதே........வெண்ணிலா வீடு 




இயக்குனர் வெற்றி மகாலிங்கம்.....சொல்லவந்த அட்சய திருதியை தினத்தன்று தங்க நகை வாங்கும் மோகம், எதையும் இரவல் வாங்குவதால் வரும் பிரச்சனைகள்,விளை நிலத்தை பிளாட் போட்டு விற்கும் ரியல் எஸ்டேட்காரர்கள் மோசடி.... 

தலையை சுற்றி மூக்கை தொடும் திரைக்கதையால் இடைவேளை வரை தொலைகாட்சி சீரியல் பார்ப்பது போல் நத்தை வேகத்திலும்.... இடைவேளைக்குப் பிறகு முயல் வேகத்தில் கதையை நகர்த்துகிறார்   
கிளைமாக்ஸ் காட்சி பாராட்டப்படவேண்டியது 

மிர்ச்சி செந்தில் குமார்-விஜயலட்சுமி இருவரும் அன்னியோன்யமான தம்பதியராக கதைக்கேற்ற நடிப்பில் மிளிர்கிறார்கள்   கிராமத்து குடிகாரன் கோவிலான், பகட்டு தோழி இளவரசியாக வரும் சிருந்தா ஆசப், வில்லன் கந்துவட்டி கொடுரனாக வரும்  முத்துராமன்.... கதாப்பாத்திரங்களாக உலா வர பிளாக் பாண்டி,VJ  சரவணன்-VJ செந்தில் சிரிக்க வைக்கிறார்கள்

அதேநேரம்.........

இன்றைய காலகட்டத்தில்.........



இப்படி எவ்வித புரிதலுமின்றி பல்வேறு உணர்வுகளின் கலவையாக எழுதப்பட்ட திரைக்கதை உள்ள வெண்ணிலா வீடு படம்  இன்றைய சினிமா ரசிகர்கள் எத்தனை பேரை திருப்திபடுத்தும்?



 

Thursday, October 09, 2014

அஜித்தின் தல 55-கலக்கல் புகைப்படங்களுடன்...

இங்கே...... அஜித்-திரிஷா-அனுஷ்காவுடன்  நடிக்கும் கவுதம் மேனனின் இன்னும் பெயரிடப்படாத தல 55 (THALA 55)   அதிரடி த்திரிலர் திரைப்படத்தின்  புகைப்படங்கள் தொகுப்பும் சில அதிரடிச் செய்திகளும்.......
THALA55

காதுல கம்மல்? கழுத்துல மாலை ஜீன்ஸ் சட்டையுடன் அஜித் பார்வையில் புலியின் ஆக்ரோஷம் பாய்கிறது


thala55


ஒரு பெட்டிக்கடை பெஞ்சில் யதார்த்தமாக அமர்ந்து ஆவலுடன் எதையோ எதிர்பார்க்கிம் அஜித்தும் அவருக்கு எதிரில் அதே எதிர்பார்ப்புடன் அருண் விஜய்..........


இந்தப் புகைப்படங்களை வைத்து வலைத்தளங்கள் வகை வகையாக கதை விடுகின்றன ஆனால்....



எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் படத்தின் டைட்டில்கூட இன்னும் வைக்காமல் இறுதிகட்ட படபிடிப்புவரை வந்துவிட்டார்கள்


cricket

ட்விட்டர்,பேஸ்புக்..சமுகவளைதளங்களில்  கத்தியின் இரண்டு டீசர் வெளிவந்த நிலையில் தல 55 படத்தின் புகைப்படங்கள் வித விதமாக படம்காட்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பை ஏகத்துக்கு ஏற்றிவிடுகின்றன....... 

இங்கே வாக்களித்தீர்களா....?
இவைகளில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்....
 உங்கள் விருப்பமான படம் எது....?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........ 



Monday, October 06, 2014

கத்தி,தல 55,ஐ-எது உங்கள் விருப்பம்?


விரைவில் வரவிருக்கும் விஜயின் கத்தி, அஜித்தின் தல 55, விக்ரமின் , ரஜினியின் லிங்கா, கமலின் உத்தமவில்லன், விஷாலின் பூஜை... திரைப்படங்களில் சில அமளி துமளி பண்ணிக் கொண்டும் சில அமைதியாகவும் இருக்கின்றன

இவைகளில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்....
 உங்கள் விருப்பமான படம் எது....?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........ 

Sunday, October 05, 2014

பேங் பேங்! (இந்தி) -சினிமா விமர்சனம்


பிரமாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட ஹிருத்திக் ரோஷன்-கத்ரினா கைப் நடித்த பேங் பேங்!  போல் பாலிவுட்டில் இதுவரை எந்தத் திரைப்  படமும் இப்படி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது இல்லை
படத்தின் கதையாக.........

லண்டனில் உள்ள M16 சூப்பர் சிறை அலுவலகத்தில் இந்திய ராணுவ அதிகாரி வீறேன் நந்தா (ஜிம்மி ஜெரிகில்)   லண்டன் டவரில் உள்ள கோஹினூர் வைரத்தை சுடவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பயங்கரமான சர்வதேச குற்றவாளி உமர் ஜாபர் (டேனி டென்சோங்பா) வை சரண் அடைய பேசிக்கொண்டிருக்கும் போது........
உமர் ஜாபர் அதிகாரி வீறேன் நந்தாவை கொன்றுவிட்டு தப்பிக்கிறான்  
அடுத்து சிம்லாவில் ஒரு வங்கியில் வேலை செய்யும் ஹர்லீன் (கத்ரீனா கைப்)  இணைய தளங்களில் காதல் வலை வீசி அகப்பட்ட ஆண் அழகன் ராஜ்வீர் நந்தா (ஹிருத்திக் ரோஷன்) வை சந்தித்து  வாழ்க்கையை கொண்டாட காத்திருக்கும் போது.......
ராஜ்வீர் நந்தாவை ஒரு கும்பல் விரட்டி வருகிறது ஹார்லீனையும் சந்தேகப்பட்டு விரட்டுகிறது

ஹர்லீனுக்கு ராஜ்வீர் ஓர் உள்ளூர் திருடன் என்றும் கோஹினூர் வைரத்தை திருடிய சர்வதேச திருடன் என்றும் தெரிய வருகிறது 

இப்படி.......

இந்திய போலிஸ்,சர்வதேச போலிஸ்,பயங்கர குற்றவாளி உமர் கும்பல் என்று மும்முனை துரத்தலில் இருந்து தப்பித்து ராஜ்வீர்-ஹர்லீன் காதல் வென்றதா....? என்பதை படம் காட்டுவதே..... பேங் பேங்!   
அதிகப்படியான பட்டாசு சண்டைக் காட்சிகள்,கார் சேஸிங், போரடிக்கும் நீர் சறுக்கு காட்சிகளுடன் வந்துள்ள டாம் குரூஸ்-கேமரூன் டயஸ் நடித்த நைட் அன்ட் டே படத்தின் இந்தி ரீமேக்கான பேங் பேங்! படத்தை............



ஜொள்ளுவிட வைக்கும் கவர்ச்சி ஜோடி ஹிருத்திக் ரோஷன்-கத்ரினா கைப் இருவருக்காகவும் இயற்கை தவழும் இமாசலப் பிரதேசத்தின் எழில் மிகு கண்கவர் காட்சிகளுக்காகவும் மட்டுமே ஒருமுறை பார்க்கலாம் மற்றபடி..........



Saturday, October 04, 2014

ஹைதர் (இந்தி)-சினிமா விமர்சனம்


ஷேக்ஸ்பியரின் ஹெம்லட் நாடகத்தை இந்திய காஷ்மீர் அரசியலின் கொந்தளிப்பான சூழ்நிலை பின்னணியில் இயக்குனர் விஷால் பரத்வாஜ்  படம் காட்டும் ஹைதர்  இந்திய இராணுவத்திற்கு எதிரான படமா? என்ற கேள்விக்கு........

haider

படத்தின் கதையாக.............
இடாணுவ ஆட்சி நடைபெறும் 1995 காலகட்ட ஸ்ரீநகருக்கு அலீகர் பல்கலை கழகத்தில் பயின்று கொண்டிருந்த ஹைதர் (ஷாஹித் கபூர்) தன் தந்தை போராளியாக நினைத்து இந்திய ராணுவத்தால் கடத்தப்பட்டதாக செய்தி கேட்டு வருகிறான் 

அங்கே அவர்களது வீடு தகர்க்கப்பட்டு அவனது தாய் காசலா (தபு) அவனது தந்தையின் சகோதரர் குர்ராம் (கே கே மேனன்) வீட்டில் வாழ்வதையும் அறிகிறான் 

உண்மையில் தனது தந்தை கடத்தப்படவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதையும் குர்ராமுடன் தனது தாய் கசாலா  கொண்டுள்ள கள்ள தொடர்பே அவரது கொலைக்கு காரணம் என்பதையும் அறிந்த ஹைதர் மனநிலை பாதிக்கப்பட்டு......
தன் தந்தை கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்குவதே......

இயக்குனர் விஷால் பரத்வாஜ்.........இதற்கு முன்பு ஷேக்ஸ்பியரின் மேக்பத் (Macbeth) நாடகம் மூலம் மும்பை தாதா உலகத்தை மக்பூல் (Maqbool) படத்திலும் ஒத்தெல்லா (Othello) நாடகத்தை உ.பி.யில் நிலவும் சாதிய கும்பல் பின்னணியில் ஓம்காரா (Omkara) படம் மூலமும் வெற்றிகரமாக படமாக்கியது போல்................


ஷேக்ஸ்பியரின் ஹெம்லட் (Hamlet) நாடகத்தை ஹைதர் படம் மூலம் இந்திய இராணுவ பாதுகாப்பு படைகளுக்கும் பிரிவினை வாத தீவிரவாதிகளுக்கும் இடையில் உள்ளூர் காஷ்மீரிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்,அடையாள நெருக்கடி,கடுமையான கண்காணிப்பு, சித்திரவதை.....போன்றவைகளை பின்னணியாகக் கொண்டு நாடகத்தன்மை இல்லாமல் விறுவிறுப்பான சினிமாத்தனமாக  காட்சிப்படுத்தியுள்ளார் 

haider

ஷாஹித் கபூர்.......கதாப்பாத்திரத்திற்கு தேவையான ஒரு மிருகத்தனமான வெறித்தனமான வன்முறை உணர்வை முகத்தில் பிரதிபலித்து பாலிவுட் திரையுலகம் இதுவரை கண்டிராத ஓரு நடிப்பு திறனை முகத்தில் வெளிப்படுத்துகிறார் 

நடிகை தபு......அவரது காசலா கதாப்பாத்திரத்திற்கு தேவையான பாலியல் பதற்றம், மனஉளைச்சல்...போன்ற உணர்வுகளை  யதார்த்தமாகவும் பிரமாதமாகவும் வெளிப்படுத்துகிறார் 
haider

ஆக மொத்தத்தில்.................

 விஷால் பரத்வாஜ்  இயக்கத்தில் பாலிவுட் திரைப்பட வரலாற்றில் வணிக சமாச்சாரங்கள் இன்றி நடிப்பும் டார்க் காமெடியும் நிறைந்த  அறிவாளி ரசிகர்களின்  அற்புத திரைவிருந்து.........ஹைதர்  

மற்றபடி.........

ஹைதர்- இந்திய இராணுவத்திற்கு எதிராக பகடி செய்யும் படமா....? என்ற ஹேம்லட் குழப்பநிலை கேள்விக்கு....TO SEE OR NOT TO SEE?
நீங்களே படம்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்  

பதில் உங்கள் பார்வையையில்...........


 

Friday, October 03, 2014

கோவிந்துடு அந்தரிவாடில்லே (தெலுங்கு)-திரை விமர்சனம்

கமல்ஹாசனின் தேவர் மகன்,சிரஞ்சீவியின் விஜேதா கலவையாக.......     கிருஷ்ண வம்சி இயக்கத்தில் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வாலுடன் நடித்துள்ள தெலுங்கு மசாலா நிறைந்த குடும்பச் சித்திரம்..........கோவிந்துடு அந்தரிவாடில்லே


raamcharan

படத்தின் கதையாக...............
ஒரு சிறு கிராமத்து தலைவரான பால் ராஜு (பிரகாஷ் ராஜ்) மருத்துவ வசதியில்லாத தன் கிராமத்தை மேம்படுத்த தன் இளைய மகன் சந்திரசேகரை (ரகு) டாக்டருக்கு படிக்கவைத்து கிராமத்தில் ஒரு மருத்துவமனையையும் கட்டி வைத்து காத்திருக்க....
அவரோ லண்டனுக்கு வேலைபார்க்க சென்றுவிடுகிறார் அதனால் அப்பா மகன் உறவு பாதிக்கப்படுகிறது 

பலவருடங்களுக்குப் பிறகு........

சந்திரசேகரின் மகனும் பால் ராஜு பேரனுமான அபிராம் (ராம் சரண்)  தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் லண்டனிலிருந்து அந்த கிராமத்திற்கு வந்து பரிகாரம் செய்வதையும்   பிரிந்த தன் அப்பா-தாத்தா பகையை சரிசெய்வதையும் உணர்வுப் பூர்வமான காட்சிகளால் இயக்குனர் கிருஷ்ண வம்சி படம் காட்டுவதே........ கோவிந்துடு அந்தரிவாடில்லே

ramcharan

இதற்கிடையில்   இன்னொரு கதையாக கிராமத்தின் தலைமையை பால் ராஜுவிடமிருந்து கைப்பற்ற நினைக்கும் அவரது சகோதரர்  (கோட்டா ஸ்ரீநிவாஸ் ராவ் ) குடும்பத்தினர் கதை அதிரடி சண்டைக்காகவும் அபிராம் தன் அத்தை மகள் காஜல் அகர்வால் மீது கொண்ட காதல் கதையும் துனைக்கதைகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது 

இயக்குனர் கிருஷ்ண வம்சி ஒரு குடும்பக் கதையில் அவருக்கே உரிய நகைச்சுவை பாணியை திறம்பட வெளிப்படுத்தி பார்வையாளர்களை குஷிப்படுத்துகிறார் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத விதத்தில்.. ஆனாலும் ஆகப் பழைய கதையுடன் வந்துள்ள படத்தில் பின் பாதியில் உள்ள வேகமும் விறுவிறுப்பும் முன் பாதியில் இல்லை 



ராம் சரண்.........படத்தின் முதுகெலும்பாக இருப்பதுடன் அவரது திறமையான உணர்சிகரமான நடிப்பும்  துள்ளும்  நடனமும் அருமையாக வெளிப்படுகிறது 

காஜல் அகர்வாலின் லொள்ளு அழகும் ஜொள்ளு கவர்ச்சியும் அவர் தோன்றும் ஒவ்வொரு பிரேமிலும் வெளிப்பட்டு ரசிகர்களை கிறங்கடிக்கிறது 

மற்றபடி.........கோபக்கார தந்தையாக வரும் பிரகாஷ் ராஜ்,அவரது மனைவியாக ஜெயசுதா நடிப்பில் மிளிர்கிறார்கள் 

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ஆகாவும் இல்லை ஒகேவும் இல்லை பாடல்கள் சில முனுமுனுக்க வைக்கின்றன சமீர் ரெட்டியின் ஒளிப்பதிவில் சுடப்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோயில்,ராமேஸ்வரம், பொள்ளாச்சி...காட்சிகள் பளிச் 
ramcharan

ஆக மொத்தத்தில்............
கமல்ஹாசனின் தேவர் மகன்,சிரஞ்சீவியின் விஜேதா,சீதாராமையாகாரி மன்வரலு,கபி குஷி கபி கம்...போன்ற படங்களின்   கலவையாக வந்தாலும் கோவிந்துடு அந்தரிவாடில்லே பார்வையாளர்களை பரவசப்படுத்தும் வெற்றிப்படம்


Thursday, October 02, 2014

யான்-சினிமா விமர்சனம்

பிரமாண்டமான காட்சியமைப்புகளும் பிரமிப்பூட்டும் சண்டைக் காட்சிகளும் மட்டுமின்றி இனிமையான திரையிசைப் பாடல்களும்  யான் படத்திற்கு ஒரு பாலிவுட் படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது மற்றபடி.......
yaan

  படத்தின் கதையாக...........
ஓர் அசாதாரன சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட ஒரு சாதாரன மனிதன் எப்படி அதிலிருந்து மீண்டு வருகிறான் என்பதே........ 

மும்பையில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும்   நடக்கும் துப்பாக்கிச் சண்டைக்கு  இடையில் மாட்டிக் கொண்ட நாயகி ஸ்ரீலா (கடல் துளசி) வை  காப்பாற்றும் நாயகன் சந்துரு (ஜீவா) அவளது அழகில் மயங்கி காதலிக்கிறான் 

வேலையில்லாத MBA பட்டதாரியான சந்துருவை முதலில் வெறுத்தாலும் கார் ஓட்டுனர் பயிற்சியாளராக உள்ள ஸ்ரீலாவும்  சந்துருவின் காதல் கூத்தாட்டத்தில் மயங்கி அவனை காதலிக்க தொடங்குகிறாள் 

ஆனால்......

ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஸ்ரீலாவின் தந்தை (நாசர்) சந்துருவை அவனது வேலையில்லா வெட்டி ஆபீசர் நிலையை சுட்டிக்காட்டி அவர்கள் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் 

தன் காதலியாலும் காதலியின் தந்தையாலும் வேலையில்லை என்று அவமரியாதை செய்யப்பட்ட சந்துரு ஒரு ட்ராவல் ஏஜென்ட் (போஸ் வெங்கட்) மூலம் மத்திய கிழக்கு அரபு நாட்டில் வேலை கிடைத்துச்  செல்ல........

அங்கே அவனுக்கு சோதனை மேல் சோதனையாக அவர் செய்யாத குற்றமாக அந்த நாட்டு போலீசாரால் போதை மருந்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப் படும் மரணதண்டனை  பெறுகிறான் 

இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து சந்துரு தப்பித்தானா....?  
தன் அழகு காதலியை கரம் பிடித்தானா...? என்பதை வெண்திரையில் காண்க

யான் படத்தின் முன் பாதி முழுக்க ஜீவா-துளசி  காதல் காட்சிகள் என்றும் 
பின் பாதி..........தலை துண்டிக்கும் தண்டனை பெற்ற ஒரு மரண தண்டனைக் கைதி எவ்வித லாஜிக்கும் இல்லாமல் அரபு  நாட்டு சிறையிலிருந்து ஒரு போலிஸ் அதிகாரியை கொன்று தப்பித்து அந்த  நாட்டு அரசு விழாவில் வில்லனை சவாலுக்கு இழுக்கும்  காட்சிகள் என்றும்

ஒளிப்பதிவாளராக இருந்த ரவி கே சந்திரன் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் யான் படத்தில் இயக்குனராக காட்ட முதல் முயற்சி செய்துள்ளார் 

திரைக்கதையில் சொதப்பிவிட்டார் ஆனாலும் அவரது முதல் முயற்சி பாராட்டலாம் வலுவான கதையில்லாமல் அதிகப்படியான வணிகச் சமாச்சாரங்களான காதலும் காமெடியும் பார்வையாளர்களை   அவ்வப்போது நெளியவைக்கிறது 

யான்-ஏனோ தாம் தூம்,மரியான்...படங்களையும் நிறைய அதிரடிக்காட்சிகள் Midnight Express’. சர்வதேச திரைப்படத்தையும்  நினைவுப்படுத்துகிறது 



ஜீவா.......அவரது படங்களிலையே இதில்தான்  அதீதமான உணர்வுகளை கொட்டி நடித்துள்ளார்  ஓர் அதிரடி த்திரிலர் படத்தின் ஹீரோவாக சண்டைக்காட்சிகளிலும்சாக்லேட் பாயாக காதல் காட்சிகளிலும் அவரது நடிப்பு அருமை

துளசி நாயர்..........வழு வழுவென்று கவர்ச்சியாக தோன்றி வனப்புடன் அழகாக இருக்கிறார் நிறைய நடிக்கவும் செய்துள்ளார் 

ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரியாகவும் கண்டிப்பான தந்தையாகவும் வரும் நாசர் படத்தின் பக்க பலமாக இருக்க..... அவரது போலிஸ் அதிகாரி நண்பராக ஜெயபிரகாஷ் வந்துப்போகிறார் தம்பி ராமையா,கருணாகரன் கொஞ்சநேரம் வந்தாலும் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்

மனுஷ் நந்தன் ஒளிப்பதிவில்.........படத்தின் தொடக்கமாக வரும் மும்பை ஏரியல் வியு பிரமிக்க வைக்கிறது பாடல்காட்சிகள் கண்ணுக்கு குளுமையான வண்ணங்களில் பிரகாசிக்கிறது 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்.......படத்தில் தேவையில்லாமல் வந்தாலும் பாடல்கள் அனைத்தும் அருமை அதிலும் கானாபாலா பாடிய  ஆத்தாங்கரை ஓரத்தில்....பாடல் நெஞ்சை வருடும் காதல் சோக கீதம் வாலிபக் கவிஞர் வாலியின் கடைசிப் பாடல் ஹே லம்பா லம்பா......... துள்ளல் 
 
ஆக மொத்தத்தில்............
பிரமாண்டமான காட்சியமைப்புகளுக்கும் பிரமிப்பூட்டும் சண்டைக் காட்சிகளுக்கும்  இனிமையான திரையிசைப் பாடல்களுக்கும்  யான் படத்தை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்

yaan

மற்றபடி படம் பார்த்தவர்களின் மதிப்பீட்டை தெரிந்து கொள்ள...... 

யான்-படம் எப்படியிருக்கு?




படம் பார்த்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி...........


UA-32876358-1