google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: November 2014

Sunday, November 30, 2014

காவியத்தலைவன்-ட்விட்டர்கள் விமர்சனம்


அழிந்து போன நமது கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக இருந்த புராதான புராண நாடகக் கலையை சினிமாவாக வெளிச்சம் போட்டுக் காட்டிய வசந்தபாலன் இயக்கத்தில்.....

இன்றைய சினிமா ரசிகர்களின் ரசனைக்கேற்ப புதுமைப் பொழிவுடன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில்.....

இலக்கியத் தரமான கதையுடன் யதார்த்தமான வசனங்களுடன் எழுத்தாளர் ஜெயமோகனின் நிஜம் கலந்த  கற்பனையில்........

அனைவரும் பாராட்டும் காவியத்தலைவன் படம் பற்றிய ட்விட்டர்களின்  நறுக் விமர்சனங்கள்......


ஆல்தோட்டபூபதி@thoatta 
நாடகத்தை பற்றிய முன்பாதி நல்ல சினிமாவா இருக்கு, பின்பாதி சினிமா மிக நாடகத்தனமாய் இருக்கு # காவியத்தலைவன

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
காவியத்தலைவன் - அபாரமான நடிப்பு , நல்ல இசைக்காக பார்க்கத்தூண்டும் கலைப்பூர்வமான கமர்ஷியல் படம்

RajaR@Rajarath 
காவியத்தலைவன் படம்லாம் தோத்தா அப்புறம் நமக்கு சினிமானு சொல்ல கொரியாவுக்குதான் போகனும்ன்ற நிலை வந்துடும் ஆமாம்:-)

லாரன்ஸ் ராமசாமி@lawranceramsam 
பிருத்விராஜ் நடிப்பு மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசை தான் படத்திற்கு பலம் # காவியத்தலைவன்

வெங்கி ♂@VenkysTwitts 
‘காவியத்தலைவன்’ படத் தலைப்பிற்கு பொருத்தமானவராக அனேகமாக ஆஸ்கர் தமிழன் ரஹ்மானே இருப்பார். தரமான படம்... தரமான இசை...

டுவிட்டர் அரசன் @thamizhinii 
இவ்வளவு ஆழமான கதையை மூன்று மணி நேரத்தில் காட்ட முயன்றதற்க்காகவே பாராட்டி செல்லலாம் குறை சொல்வதெல்லாம் வெட்டி வேலை #காவியத்தலைவன்

எழுத்தாளர்.தமிழ்@Tamiltwits 
காவியத்தலைவன் படம் நல்லாருக்கு நல்ல கதைக்களம் என்ன ராஜா இசை அமைத்திருந்தால் ஆஸ்கார் நிச்சயம் வாங்கி இருக்கும்

அழகிய தமிழ் மகன்@kaviintamizh 
காவியத்தலைவன் படம் பார்க்கும் போது இளையராஜா இசையமைத்து இருக்கலாம் என தோன்றியது எனக்கு மட்டும் தானா..




Friday, November 28, 2014

காவியத்தலைவன்-சினிமா விமர்சனம்

மின்சார LED விளக்கு காலத்தில் மண்ணெண்ணெய் அரிக்கேன் விளக்கு காலகட்டத்தில் நடந்த கதையை திரைப்படமாக காணும் மனநிலையில் நாம் மாறிக்கொண்டால்.......

இயக்குனர் வசந்தபாலன்,இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்,எழுத்தாளர் ஜெயமோகன் போன்ற முப்பெரும் கலைப் படைப்பாளிகளின் காவியத்தலைவன் திரைப்படம் இந்த ஆண்டின் மிகச் சிறந்த  ஒரு கலைப் படைப்பாகும் 

சுதந்திரகாலத்திற்கு முற்பட்ட ஒரு நாடக சபாவில் வாழும் இரண்டு நாடக நடிகர்களின் நட்பு,காதல்,கோபம்,பொறாமை, துரோகம்... போன்றவைகளை சில கதாப்பாத்திரங்கள் மூலம் படம்காட்டுவதே.... காவியத்தலைவன்

படத்தின் கதையாக........

மதுரையில் பிரபலமாக விளங்கும்  நாடகக் கம்பெனி ஸ்ரீலஸ்ரீ பால சண்முகானந்தா நாடகசபா முதலாளி சிவதாஸ் சுவாமி(நாசர்)களின் நாடகக் குழுவில் உள்ள  கோமதிநாயகம் (பிரிதிவிராஜ்)  தனக்கு கிடைக்க வேண்டிய ராஜாபார்ட் வேடம் கிடைக்காததால்   சக நடிகர் காளியப்பா (சித்தார்த்) மீது நட்பாகப் பழகிக்கொண்டே பொறாமையால்....

காளியப்பாவுக்கும் ஒரு ஜமீன்தாரின் மகளுக்கும் இடையில் உள்ள காதலை சிவதாஸ் சுவாமிகளிடம் காட்டிக்கொடுத்து ராஜாபார்ட் வேடத்தை பறித்துக்கொள்கிறான்

சக நாடக நடிகை வடிவாம்பாள் (வேதிகா)கூட தன்னைக் காதலிக்காமல் காளியப்பாவை காதலிப்பதால் சிவதாஸ் சுவாமிகள் மரணத்திற்குப் பிறகு நாடகசபாவை தலைமை ஏற்று நடத்தும் கோமதிநாயகம் காளியப்பாவை தங்கள் சபாவிலிருந்து விரட்டிவிடுகிறான்

பெரிய நாடக நடிகராக வெளிநாடுகள் சென்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை வரும் கோமதி நாயகம் ஒருநாள் விஷக் காய்ச்சலில் நடிக்க முடியாமல் போக காளியப்பாவை தேடிபிடித்து தங்கள் நாடகத்தில் நடிக்க வைக்கிறார்கள்

மீண்டும் காளியப்பா பாகவதராக பேரும் புகழும் அடைகிறான் வடிவாம்பாளுக்கும் காளியப்பா மீது காதலும் தீவிரமடைகிறது இதனால் தந்திரமாக கோமதிநாயகம் காளியப்பாவின் தேசப்பற்றை வெளிப்படுத்தி அவனை சிறையில் அடைக்கிறான்

சிறையிலிருந்து வெளிவரும் காளியப்பா பல சுதேசி நாடகங்கள் நடித்தி பெரிய அளவில் வளர்ந்து வடிவாம்பாளையும் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறான் கோமதியின் நாடக சபா அழிந்துபோக அவனையும் தன் நாடக சபாவில் காளியப்பா சேர்த்துக் கொள்கிறான்

ஆனால்......

ஒருபுறம்  கோமதி நாயகம் வடிவாம்பாளை அடைவதற்காக காளியப்பாமீது நயவஞ்சக கொலைவெறியுடன் கூடவே இருக்க.....
இன்னொருபுறம் வெள்ளைக்கார போலிஸ் உயர் அதிகாரி சுதேசி நாடகங்கள் நடத்தும் காளியப்பாவை சுட்டுக் கொல்ல வாரன்ட்வுடன்  கொலைவெறியில் அலைய......

இவர்களிடமிருந்து காளியப்பா பாகவதர் உயிருடன் பிழைத்தாரா...? என்பதை பல உணர்வுப் பூர்வமான காட்சிகளாளும் சில எதிர்பாராத திருப்பங்களாலும்  உயிரோட்டமாக பட்ம்காடுகிறார் இயக்குனர் வசந்தபாலன்

படத்தின் சிறப்பான காட்சிகளாக.........

-ரயிலில் காளியப்பா  பாடி பிச்சையெடுக்கும் சிறுவனாக தோன்றும் பிளாஸ்பேக் காட்சி
-சூரபத்மன் நாடகத்திற்கான ஒத்திகையும் காளியப்பாவை  முதன்முதலாக ராஜாபார்ட் வேடத்திற்கு சிவதாஸ் சுவாமிகள் தேர்வு செய்யும் காட்சி
-சிவதாஸ் சுவாமிகள் காளியப்பாவின் காதலை கண்டித்து அடித்து உதைக்கும் காட்சி 
-சிவதாஸ் சுவாமிகள் மீது  காளியப்பா தன் காதலியின் மரணத்திற்கு காரணம் என்று சாபமிட்டு மண்வாரித் தூவும் காட்சி 
-படத்தில் பாடலுடன் வரும் பவளக்கொடி,கர்ணமோட்சம்....போன்ற நாடகக்காட்சிகள் அத்தனையும் ரசிக்கும்படி இருக்கின்றன 
-காளியப்பா-வடிவாம்பாள் டூயட் பாடல் யாருமில்லா தனியரங்கில்....என்ற பாடலின் இசையும்  காட்சியாக்கப்பட் விதமும் அருமை 
-கடைசியில்  வரும் வாரணாசி திவசக் காட்சியும் சாமியார்களும் 
இதுபோல் நிறைய காட்சிகள் படத்தில் உள்ள ஒன்றிரண்டு சோடைக் காட்சிகளை மறக்கடித்தி படத்தோடு நம்மை ஒன்றிடச் செய்கிறது 

இயக்குனர் வசந்தபாலன்....இந்த அதிவேக காலக்கட்டத்தில் இதுபோன்ற ஆமைவேக நாடகத்தன்மை உள்ள நாடகக் கதையை   அனைவரும் ரசிக்கும் வண்ணம் சினிமாவாக்கியது சினிமா மீது அவருக்கு உள்ள நேசத்தின் பிரதிபலிப்பு ஆயினும்...

திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம் ஆனாலும் கிளைமாக்ஸ் வாரணாசி காட்சி வசந்தபாலனின் இயக்கத்திற்கு அரங்கத்தில் கரவொலிகள் வெகுமதியாக.....

எழுத்தாளர் ஜெயமோகன்......அவரது காவிப் பற்றையும் காவியப் பற்றையும் கொஞ்சம் தேசப்பற்றுடன் கலந்து ஒரு கற்பனை கதைகட்டியுள்ளார் படம் பார்க்கும் போது மகாபாரத கதைகளின் உல்டாவாக ஒரு நாவலைப் படிக்கும் உணர்வு அதிகமாக மிஞ்சி விஞ்சி நிற்கிறது ஜனரஞ்சகம் அஞ்சி எஞ்சி நிற்கிறது 

ஏ.ஆர்.ரகுமான்......இசையில் ஒரு சரித்திரம் படைத்துள்ளார் பழைய நாடகங்கள் காட்சியாக வந்தாலும் இன்றைய நவநாகரீக மாந்தர் ரசனைக்கு ஏற்ப தூள் கிளப்புகிறார் பாடல்கள் அத்தனையும் காட்சிகளோடு கேட்பது மனதைக் கவர்கிறது 

நிரவ் ஷா ஒளிப்பதிவில்......அந்தக் காலகட்டத்திற்கேற்ப வண்ணத்தை பிரதிபலிக்கிறார் ஒப்பனையும் கலையும் காட்சிகளுக்கு ஒருவித நிஜத்தன்மையை காட்டி காட்சிகள் களைகட்டுகின்றன

நடிகர்கள் சித்தார்த்தும் பிரிதிவிராஜும் சம பங்கிட்டு கதைக்கேற்ப நடித்துள்ளனர் சித்தார்த் முகபாவனையில்  கதைக்கேற்ற அப்பாவித்தனமும் பிரிதிவிராஜ் முகபாவனை நிறைய நேரம் நம்பியார் சாயலும் அப்பட்டமாக தெரிகிறது வேதிகா....அழகாக தெரிகிறார் நடிப்பிலும்

நடிகர் பொன்வண்ணன்...ராஜாபார்ட் வைரவர் பாகவதராக  கொஞ்ச நேரமே வந்து போனாலும் மனதில் நிற்கிறார் நடிகர்கள் சிங்கம் புலி,தம்பி ராமையா,மன்சூர் அலிகான்... சிரிக்கவைக்கிறார்கள் நாசர்....நடிப்பின் உச்சத்தை இப்படத்தில் எட்டிவிட்டார் 

ஆக மொத்தத்தில்............

மின்சார LED விளக்கு காலத்தில் மண்ணெண்ணெய் அரிக்கேன் விளக்கு காலகட்டத்தில் நடந்த கதையை திரைப்படமாக காணும் மனநிலையில் நீங்கள்  மாறிக்கொண்டால்.......
காவியத்தலைவன்  படம் பார்க்கும் உங்கள் முகம் பிரகாசமாக தெரியும் இல்லையேல்......பியுஸ் போன பலப்  


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு.........

காவியத்தலைவன்-படம் எப்படியிருக்கு........?



படம் பார்த்து......
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.......... 




Wednesday, November 26, 2014

ஹாலிவுட் எக்ஸோடஸ் படத்துடன் மோதும் ரஜினியின் லிங்கா?

சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருது வென்ற கிளாடியேட்டர் (2000) ஹாலிவுட் படத்தின்  இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் பிரமாண்டமான படைப்பு....எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் (Exodus: Gods and Kings)

உலகளவில் எதிர்பார்க்கப்படும் காவிய சாகஸ திரைப்படம் எக்ஸோடஸ்  டிசம்பர் 12, 2014 அன்று உலகெங்கும் திரைக்கு வருகிறது

இப்படத்தில் (Batman) பாட்மான் திரைப்படத்தொடரில் முதலாம் திரைப்படம் பேட்மேன் பிகின்ஸ் படத்தில் பாட்மானாக நடித்த கிரிஸ்டியன்  ஃபிலிப் பேல் நாயகனாக நடித்துள்ளார் 

இது பைபிள் பழைய ஏற்பாடு காப்பியத்தில் உள்ள....
எகிப்திய பேரரசிலிருந்து மோசஸ் தப்பிக்கும்  திகிலூட்டும் ஒரு தனிமனித  சாகஸ கதையின்   உந்துதலால் உருவாக்கப்பட்ட திரைக்காவியமாகும்  


                             thanks YouTube by 20th Century Fox  

பிரமிக்க வைக்கும் 3-D முப்பரிமான விஷுவல் காட்சிகள் நிறைந்துள்ள
எக்ஸோடஸ் படத்துடன் அதே டிசம்பர் 12, 2014 அன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படம் உலக அளவில் மோதுமா....? மோதினால் தேறுமா...?

அண்ணேன்....அது ஹாலிவுட்...இது கோலிவுட் என்றால் சரி




 

Monday, November 24, 2014

கயல்-படப்பாடல்கள்


மைனா,கும்கி வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் பிரபு சாலமன்-டி.இமான் கூட்டணியினரின் கயல் திரைப்படத்தில்.........

1-பறவையா பறக்குறோம்...
பாடியவர் : ஹரிச்சரண்
பாடலாசிரியர் : யுகபாரதி


2-எங்கிருந்து வந்தாயோ...
பாடியவர் : ஷ்ரேயா கோஷல்
பாடலாசிரியர் : யுகபாரதி


3-கூடவே வரமாதிரி...
பாடியவர் : அல்போன்ஸ் ஜோசப்
பாடலாசிரியர் : யுகபாரதி


-என் ஆள பாக்கப்போறேன்...
பாடியவர்கள் : கே.ஜி.ரஞ்சித், ஷ்ரேயா கோஷல்
பாடலாசிரியர் : யுகபாரதி


5 -உன்ன இப்ப பாக்கணும்...
பாடியவர்கள் : ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீனிவாசன்
பாடலாசிரியர் : யுகபாரதி


6-டியாலோ டியாலோ...
பாடியவர் : கோபு
பாடலாசிரியர் : யுகபாரதி


7-எங்க புள்ள இருக்க...
பாடியவர் : பல்ராம்
பாடலாசிரியர் : யுகபாரதி


இப்பாடல்களை இங்கே கேட்டு மகிழுங்கள்..........


                        thanks YouTube by<a href="/channel/UCTNtRdBAiZtHP9w7JinzfUg" class=" yt-uix-sessionlink     spf-link  g-hovercard" data-sessionlink="ei=ShVzVPqPEY2BogOV_oCwBA" data-ytid="UCTNtRdBAiZtHP9w7JinzfUg" data-name="">SonyMusicSouthVEVO</a> SonyMusicSouthVEVO
 

Sunday, November 23, 2014

என்னை அறிந்தால் VS ஷங்கரின் ஐ-ஜெயிக்கப் போவது யாரு?


தல அஜித் நடிக்கும்  என்னை அறிந்தால்... திரைப்படமும் 
விக்ரம் நடிக்கும்  ஷங்கரின் ஐ திரைப்படமும் 
பொங்கல் வெளியீடாக ஜனவரி 2015 -ல் வெளிவரும் என்று....

அப்படி இரண்டு படங்களும் மோதிக்கொண்டால் அவைகளில் வெற்றியடையப் போகும் படம் எதுவாக இருக்கும்?

உங்கள் பார்வையில்..........

என்னை அறிந்தால் VS ஷங்கரின் ஐ
ஜெயிக்கப் போவது யாரு?  





வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......



 
  

Saturday, November 22, 2014

நாய்கள் ஜாக்கிரதை-சினிமா விமர்சனம்

படத்தின் நாய்....யகன் போன்று ஒரு பெல்ஜிய ஷெப்பர்ட் நாய் பெயரை முதலில் போட்டு நாய்குலத்துக்கே பெருமை தேடி கொடுத்துள்ளார்.....நாய்கள் ஜாக்கிரதை படத்தின் இயக்குனர் சக்திராஜன்  

ஹாலிவுட் போன்று நாய் சார்ந்த இன்வெஸ்ட்டிங் த்திரிலர் திரைப்படங்கள் கோலிவுட்டில் அரிதான ஒன்றாகும் அத்தகை திரைப்படத்தை தேர்வு செய்து நடித்துள்ள நடிகர் சிபிராஜ் பாராட்டுக்கு உரியவர்

படத்தின் கதையாக............
பனிபடர்ந்த மலைப் பிரதேசத்தில் உள்ள லடாக் இராணுவ எல்லைப்பகுதியில் இராணுவ பயிற்சி பெற்ற  ஒரு பெல்ஜிய ஷெப்பர்ட் நாயின் எச்சரிக்கையை மீறி செல்லும் அதன் மாஸ்டர் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு மரணிப்பது போல் துவங்கும் படம்....

பிறகு இன்னொரு இராணுவ அதிகாரியின் பாதுகாப்பில் இருந்து கோயம்பத்தூரில் காவல்துறை ஆய்வாளராக இருக்கும் சிபிராஜ் வசம் சுபிரமனியாக வருகிறது  

மனவுளைச்சல் மிக்க போலிஸ் அதிகாரி சிபிராஜின் குடும்பத்தில் ஒருவராக மாறிய சுப்பிரமணி எப்படி அவருக்கு உறுதுணையாக இருக்கிறது...? ஒரு கட்டத்தில் கடத்தப்பட்ட அவரது கர்ப்பிணி மனைவி அருந்ததியை எப்படி காப்பாற்றுகிறது...? என்பதை நகைச்சுவை கலந்த திகில் காட்சிகளுடன் படம் காட்டுவதே........

சக்திராஜன் இயக்கத்தில்.....நாய்கள் ஜாக்கிரதை முழுமையான த்திரிலராக திரைக்கதை எழுதப்படாமல் முன்பாதி முழுவதும் காதாப்பாத்திரங்களில் அறிமுகத்திற்கு மட்டுமே என்று செல்ல இடைவேளைக்குப் பிறகு படம் சூடு பிடிக்கிறது  

சிபிராஜ்-அருந்ததி இடையே உள்ள கணவன்-மனைவி நெருக்கத்தை அதிகம் காட்டத்தவறியதும் வில்லன் (பாலாஜி) கதாப்பாத்திரத்தில் அதிக கவனம் செலுத்த தவறியதும் இயக்குனரின் பின்னடைவு ஆயினும் உச்சகட்ட காட்சி அதீத உணர்ச்சி பிரளயமாக காட்சிப்படுத்தி உள்ளார் 

நடிகர் சிபிராஜ்........நடிப்பில் புதுமையும் ஆற்றலும் தெரிந்தாலும் இன்னும் அவருக்கு முகத்தில் கதாபாத்திரத்தின் உணர்ச்சியை பிரதிபலிக்க செய்யும் கலை தெரியவில்லை  

ஆனால் அந்த பெல்ஜிய ஷெப்பர்ட் நாய் ஒரு கைதேர்ந்த நடிகர் போல் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது அதன் பயிற்சியாளர் மட்டுமின்றி இயக்குனரும் அந்த நாயிடமிருந்து கற்றுகிட்ட மொத்த வித்தையையும் மொத்தமாக இப்படத்தில் இறக்கியுள்ளனர் 

சின்னப்பா தேவர்,இராமநாராயணன் படங்களில் வேடிக்கை காட்டும் மிருகங்களாக பார்த்த நமக்கு ஒரு நாயை விவேகம் உள்ள நடிகராக காட்டிய இயக்குனரை பாராட்டலாம்  

மகாத்மா காந்தியின் மேற்கோள்....."ஒரு நாட்டின் முன்னேற்றமும் பெருந்தன்மையும் அந்த நாட்டில் உள்ள விலங்குகள் எப்படி வழிநடத்தப்படுகின்றன என்பதில்தான் உள்ளது"....காட்டி பார்வையாளர்களின் சிந்தனையை தூண்டி துவங்கும் படம்....

தயாரிப்பாளர் சத்யராஜின் மறைந்த நண்பரை நினைவுபடுத்தும் விதமாக அமைதிப்படை கிளிப்பிங் காட்டுவதுடன்..........

இயக்குனர் சாமர்த்தியமாக வணிகரீதியில்  அஜித்-தின்  மங்காத்தா, விஜய்-யின் துள்ளாத மனமும் துள்ளும் படங்களின் துண்டு காட்சிகளை காட்டி அவர்களது ரசிகர்களின் கைதட்டலைப் பெறுகிறார்  

இப்படி வித்தியாசமான நாய்கள் ஜாக்கிரதை த்திரிலர் திரைப்படத்தை நாய்கள் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ஒருமுறை கண்டுகளிக்கலாம் 


அதேநேரம் நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் 1989-ல் ராட் டேனியல் இயக்கத்தில் மெல் ஹாரிஸ் நடித்த K-9 அமெரிக்க ஆக்ஷன் / திரில்லர்-நகைச்சுவை படத்தின் இன்ஸ்பிரேசன் என்றும் சொல்லப்படுகிறது


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு.........

நாய்கள் ஜாக்கிரதை-படம் எப்படியிருக்கு?




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........


Friday, November 21, 2014

வன்மம்-சினிமா விமர்சனம்

யதார்த்தமான கிராமத்து கதைக்களத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து கொஞ்சம் காதலும் சஸ்பென்ஸ் திகிலுடன் விஜய் சேதுபதி-கிருஷ்ணா மூலம் இயக்குனர் ஜெய் கிருஷ்ணா படம் காட்டுவதே....... வன்மம் 

படத்தின் கதையாக.........
குமரி மாவட்டத்தில் கடலும் மலையும் இயற்கை மிளிரும் கிராமத்தில் குடியும் ரவுடித்தனமாக வாழும் அன்னியோன்யமான நண்பர்கள் ராதா (விஜய் சேதுபதி), செல்லத்துரை (கிருஷ்ணா)

புலிவேசம் போட்டு ஆடு-புலி ஆட்டம் ஆடும் தன் நண்பன் செல்லத்துரையை அடிக்கவரும் போலிஸ் இன்ஸ்பெக்டரையே அடிக்கும் அளவுக்கு தில்லான  ராதா........
தன் நண்பன் செல்லத்துரை- வதனா (சுனைனா) காதலுக்கும் பாதுகாப்பாக இருக்கிறான் 

இன்னொரு ட்ராக்கில்......
ரத்தினம் (கோலிசோடா மதுசூதனன்)-ஜேபி என்று மர வியாபாரம் செய்யும்  இரண்டு பார்ட்னர்களுக்குள் ஏற்பட்ட மோசடியும் அதனால்  அவர்களுக்குள் ஏற்படும் பகையும் என்று படம் நகர......

ஒருநாள்.....
செல்லத்துரை-வதனா காதலை கண்டு ஆத்திரம் கொண்ட வதனாவின் அண்ணன்  ரத்தினம் செல்லத்துரையை வெட்டவருகிறான் நண்பனைக் காப்பாற்ற  ராதாவுக்கும் ரத்தினத்திற்கும் இடையில் நடந்த கைகலப்பில்  தவறுதலாக ரத்தினம் வெட்டப்பட்டு சாகிறான் 

ராதா தன் செல்வாக்கால் நண்பனுக்காக செய்த ரத்தினம் கொலையை மறைத்துவிடுகிறான்  

ஆனால்.....

ஜேபி தந்திரமாக செல்லத்துரையை ராதாவிடமிருந்து பிரித்து தன் பார்ட்னர் ரத்தினம் குடும்பத்திற்கு தொல்லை தருகிறான் இரண்டு நண்பர்களுக்கும் இடையில் பகையை உண்டாக்குகிறான் 

ராதாவோ குற்றவுணர்வின் பிரதிபலனாக   ஜேபியின் கொலைவெறியிலிருந்து ரத்தினம் குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருக்கிறான்

மீண்டும் நண்பர்கள் இருவரும் இணைந்தார்களா....? செல்லத்துரை-வதனா காதல் என்ன ஆனது....? என்பதை திரையில் காணுங்கள் 

படத்தின் சிறப்பான காட்சிகளாக...........
-கிருஷ்ணா புலிவேசம்  போட்டு ஆட்டை கடிக்கும் போது விஜய் சேதுபதி இன்ஸ்பெக்டரை அடிக்கும் காட்சி 
-சந்தையில் நடக்கும் யதார்த்தமான சண்டைக்காட்சி
-தான் கொலை செய்த ரத்தினத்தின்  கருமாதி நாளில்  அவர் வீட்டிலேயே விஜய் சேதுபதி போய் சாப்பிடுவது 
-ரத்தினம் கார் ட்ரைவர் குட்டியை  ஜேபி ஆட்கள் ரயிலில்  தள்ளிவிட்டு சாகடிக்கும் காட்சி 
மேலும் கடல்,மலை,மரங்கள்....இயற்கை காட்சிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

ஜெய் கிருஷ்ணா இயக்கத்தில்..........வன்மம் படம் சொல்ல வந்த கதையை நச்சுனு சொல்லாமல் நீட்டிகொண்டு போகிறார் அதுவே படத்தின் வேகத்தடையாக உள்ளது பின்பாதியில் அதிகப்படியான  குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் மெலோட்ராமாவாக உள்ளது 

கிருஷ்ணா-சுனானா காதல் காட்சிகள் படம் பார்ப்பவர்களை நெளியவைக்கிறது மதுரை பக்கம் நடக்கும் கதை போல் கொலை கொலையா முந்திரிக்கா கதையாக உள்ளது அதிகப்படியான கதாப்பாத்திரங்கள் ஆனாலும் வசனங்களில் குமரித்தமிழ் கொஞ்சுகிறது 

விஜய் சேதுபதி.........முந்தைய ரம்மி ஜோசப் போல் ஏழையாகவும் கோழையாகவும் இல்லாமல் வன்மம் படத்தில் பணக்காரராகவும் தில்லுதுரையாகவும் ராதா கேரக்டரில் நண்பனுக்காக கொலையும் செய்யும் கதாப்பாத்திரத்தில் கிருஷ்ணாவுடன் ஷேர் செய்து நடித்துள்ளார் அவருக்கு தனிப்பட்ட டூயட் காட்சிகள் இல்லை இப்படியே போனால் ஷேர்-ஆட்டோ  விஜய் சேதுபதி என்று..........

கிருஷ்ணா...காதலைக்காட்டும் அளவுக்கு முகத்திலும் நடிப்பிலும்  ஆக்ரோஷத்தை காட்ட முடியவில்லை சுனைனா......அழகாக வந்து போகிறார் காதல் காட்சிகளில் கவர்ச்சியாகவும் நெருக்கமாகவும் நடித்துள்ளார் 

கொஞ்ச நேரம் வந்தாலும் கோலிசோடா மதுசூதனன் ராவ்.....பட்டையக் கிளப்புகிறார் மற்றபடி இவரது ட்ரைவர் குட்டியாக நடித்துள்ளவர் மனதில் நிற்கிறார் போஸ் வெங்கட் நடிப்பும் பாராட்டும்படி உள்ளது 

வன்மம் படத்தின் பிளஸ்-பாயின்ட்டாக இருப்பது இயற்கைக் காட்சிகளை இயற்கையாகச்  சுட்டு ஒவ்வொரு பிரேமிலும் படம் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் பால பரணியின் ஒளிப்பதிவு 

அப்படியே எஸ்.தமனின் இசையில் பின்னணி இசை மிரட்டலாகவும் பாடல்கள் கேட்கும்படியும் இருப்பது செம....டைட்டில் இசை பக்தி பரவசம்

இதுவரை நாம் பலமுறை பார்த்து அலுத்து சலித்துப்போன நட்பு,கூட்டாளிகள் பகை....என்று புளித்துப்போன கதையால்  தள்ளாடினாலும் வன்மம் படம்.....

 அதன்   யதார்த்தமான காட்சியமைப்புக்காகவும்  ,விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்புக்காகவும்  ஒருமுறை பார்க்கலாம் 

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு........

வன்மம்-படம் எப்படியிருக்கு?



படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி 



Tuesday, November 18, 2014

லிங்கா ட்ரெய்லர் எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பு


கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..... அனுஷ்கா ஷெட்டி, சோனாக்ஷி சின்ஹாவுடன் இணைந்து நடிக்கும் லிங்கா படத்தின் முன்னோட்ட காட்சி.........


         thanks YouTube by Rockline EntertainmentsRockline Entertainments  

ஒரு படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி உள்ளதால்தான் இப்போது திரையுலகம் படத்தின் ட்ரெயிலர் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன  

இங்கே வாக்களித்து உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள் 
லிங்கா படத்தின் ட்ரெய்லர் எப்படியிருக்கு?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....



Monday, November 17, 2014

லிங்கா-படப் பாடல்கள் எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பு



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் லிங்கா படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில்...........
1-ஒ நண்பா.....
2-என் மன்னவா....
3-இந்தியனே வா.....
4-மோனா கசோலினா....
5-உண்மை ஒரு நாள் வெல்லும்.....

இப்பாடல்களை கேட்டு மகிழுங்கள்.......


                                 thanks-YouTube by Eros TamilEros Tamil

இங்கே
உங்கள் கருத்தை தெரியுங்கள்.......

லிங்கா-படப் பாடல்கள் எப்படியிருக்கு?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........





Friday, November 14, 2014

திருடன் போலீஸ்-சினிமா விமர்சனம்


போலீஸ் துறையில் வெளியே தெரியாமல் நடக்கும் சில அவலங்களின் பின்னணியில் தந்தை மகன் குடும்பப் பாசத்துடன் கொஞ்சம் காதலும் நிறைய காமெடியுமாக அறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜு அட்டகாசமாக சிரிக்கவைத்து படம் காட்டுவதே ......... திருடன் போலீஸ்

படத்தின் கதையாக...........

வேலைவெட்டியில்லாத இளைஞன் விஸ்வா (அட்டகத்தி தினேஷ்)வுக்கு தன் போலீஸ் ஏட்டு அப்பா   (ராஜேஷ்) மீது கொஞ்சமும் மரியாதையை இல்லாமல் நடந்துகொள்வதுடன்  அவரது உயர் போலிஸ் அதிகாரி ஏகாம்பர (முத்துராமன்) த்தின் மகன் நிதின் சத்யாவையும் அடித்து காயப்படுத்துகிறான் 

லோக்கல் ரவுடிகளான மாணிக்கம் (நான் கடவுள் ராஜேந்திரன்) அவன் தம்பி ஜான் விஜய் உதவியுடன்  நிதின் சத்யா ஒரு பெண் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட.....
அதை தெரிந்து கொண்ட ஏட்டு ராஜேஷை  உயர் போலீஸ் அதிகாரி ஏகாம்பரம்   ஒரு என்கவுண்டர் நாடகம் போட்டு அந்த ரவுடிகளை வைத்தே  கொன்றுவிடுகிறார்
ஏட்டு ராஜேஷின் நேர்மையை அறிந்த கமிஷனர் ஆடுகளம் நரேன்   காவல்துறையில் விஸ்வாவுக்கு போலீஸ் வேலை போட்டுகொடுக்கிறார் 

போலீசான விஸ்வா அந்த வேலையில் இருக்கும் கஷ்டத்தை பார்த்து அப்பா மீது பாசம் வருகிறது அவரைக் கொன்ற ரவுடிகளையும்  உயர் போலீஸ் அதிகாரியையும் கண்டுபிடித்து ஒரு சைகோ போல் காமெடியாக சித்திரவதை செய்து தண்டனை வாங்கிக் கொடுப்பதே.............

படத்தின் சிறப்பான காட்சிகளாக..........
-தன் காதலி ஐஸ்வர்யாவின் அக்கா குழந்தையை ரவுடி ராஜேந்திரன் ஆட்கள் கடைவீதியில் கடத்தி ஒழித்து வைத்திருப்பதை தினேஷ் கண்டுபிடிப்பதும் காதல் அரும்புவதும்........
-புழல் சிறையில் ரவுடி ராஜேந்திரன் ஜான் விஜய் இருவரையும் யார் என்று தெரியாமலேயே தினேஷ் அடித்து உதைப்பது
-டாஸ்மாக் பாரில் தினேஷ் அப்பா சென்டிமெண்டில்   பாலசரவணனுடன் பீர் பாட்டிலை அடிக்கும்  காமெடி கலாட்டா 
-கிளைமாக்ஸில் ரவுடிகளுக்கும் உயர் போலிஸ் அதிகாரிக்கும் தினேஷ் பிரியாணி விருந்து படைப்பது 
இப்படி நிறைய காட்சிகள் சொல்லலாம்

இயக்குனர் கார்த்திக் ராஜு........பழைய கள்ளு புதிய மொந்தை என்ற கதையாக அப்பாவை கொன்றவர்களை மகன் பழிவாங்கும் கதையே ஆயினும் நகைச்சுவை காட்சிகளாலும் யதார்த்தமான போலிஸ் துறை காமெடிக் காட்சிகளாலும் படம் பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறார் 
சில நேரங்களில் அப்பா-மகன் சென்டிமென்ட் தூக்கலாக மெலோட்ராமாவாக நம்மை வதைத்தாலும் காதல் காமெடி  காட்சிகளால் குதுகலிக்க வைக்கிறார் 

ஒரே படத்தில் இரண்டு எபிசோட் போன்று தோன்றினாலும் லாஜிக் ஓட்டைகள் எதுவும் அதிகம் இல்லை  ஆனால் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இப்படி தத்தியாக இருப்பாரா....? லோக்கல் ரவுடிகள் இப்படி கோமாளிகளாக இருப்பார்களா....? என்பதை தவிர்த்து.

அட்டகத்தி தினேஷ்.........காதல்,காமெடி,சென்டிமென்ட் எல்லாவற்றிலும் விதவிதமான முகபாவனையில்  தோன்றி நடிக்கிறார் அப்பா மீது  பாசமுள்ள சைகோவாக சிரிப்பூட்டுகிறார் பாடல்காட்சிகளில் நல்ல நடன அசைவுகள் காட்டுகிறார் இவரது போலீஸ்நண்பனாக வரும் பால சரவணன்.......நடிப்பிலும் பேச்சிலும் சிரிப்புக்கு உத்திரவாதம்

ஐஸ்வர்யா........சும்மா வந்து போகிறார் ஆனாலும் அழகாக தோன்றுகிறார் 
ராஜேந்திரன்,ஜான் விஜய்.....கோமாளி வில்லன்களாக தோன்றி பெண்கள் போல் மாறுவேடங்கள் போட்டும்  கலக்குகிறார்கள்  ராஜேஷ்.....தினேஷ் அப்பாவாகவும் நேர்மையான போலீஸ் ஏட்டாகவும் வந்து குணச்சித்திர நடிப்பில் அசத்துகிறார் 

முத்துராமன்....கெட்ட உயர் போலீஸ் அதிகாரியாகவும் ஆடுகளம் நரேன்......நல்ல போலீஸ் கமிஷனராகவும் வருகிறார்கள் நிதின் சத்யா.......சும்மா வந்து போக விஜய் சேதுபதி.....ஒரு குத்து பாட்டில் ஆட்டம் போட்டு போகிறார்   

யுவன் சங்கர் ராஜா இசையில்......பாடல்கள் கேட்கும்படியும் பின்னணி இசை அதிக தூக்கலாகவும்  உள்ளது பேசாதே.......பாடல் மீது மீண்டும் கேட்கத் தோன்றும் சித்தார்த் ஒளிப்பதிவில்.....காட்சிகளும் பாடல்களும் அருமை 

ஆக மொத்தத்தில்............

காவல்துறையில் சில  உயரதிகாரிகள் செய்யும் அவலங்கள்  பற்றிய சமுக விழிப்புணர்வு படம் போல் தோன்றினாலும் யதார்த்தமான காமெடி காட்சிகளால் பார்வையாளர்களை சிரிக்கவைக்கிறான்......திருடன் போலீஸ்


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு.............

திருடன் போலீஸ்-படம் எப்படியிருக்கு.....?




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........


Monday, November 10, 2014

அனேகன் படப் பாடல்கள் எப்படியிருக்கு?

 கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்  அனேகன் திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 6 பாடல்கள்..........

1-டங்கா மாரி ஊதாரி........
2-ரோஜா காதலே.........
3-ஆத்தாடி ஆத்தாடி 
4-யோலோ YOLO (You Only Love Once)
5-தொடுவானம் 
6-தெய்வங்கள் இங்கே 

இப்பாடல்களை இங்கே கேட்டு மகிழுங்கள்..........


                                  thanks-YouTube by JeroVEVO


இங்கே வாக்களியுங்கள்..........


அனேகன் படப் பாடல்கள் எப்படியிருக்கு......?





வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........



Sunday, November 09, 2014

இண்டர்ஸ்டெல்லர் (interstellar)-சினிமா விமர்சனம்

"இண்டர்ஸ்டெல்லர்." படத்தின் மூலம் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் கடினமான இயற்பியலை (astrophysics) அற்புதமான காட்சிகளாக்கி  உண்மையான மீனிடைவெளி அறிவியலை (real interstellar science) ஒரு காவியமாக பொதுப்பார்வையாளர்களுக்கு படம்காட்டுகிறார் 

படத்தின் கதையாக.............
மேத்யூ மெக்கானாகே தலைமையிலான விண்வெளி வீரர்கள் ஒர் அணியாக ஒரு விண்வெளி ஓடத்தில் பயணித்து மனித குலத்திற்கு தேவையான,பாதுகாப்பான ஒரு புதிய இருப்பிடத்தை தேடி........

விண்வெளியில் நட்சத்திர ஒளிப் புயல் (Starlight whirls), கிரகங்களிலிருந்து பியிந்து விழும் பாறைகள்,பல உபயோகமற்ற விண்கலங்களின் குப்பைகள்....இன்னும் பல சோதனைகளைக் கடந்து.................

நாளைய பூமிக்கு பேரழிவு ஏற்பட்டால் மனித குலத்துக்கு தேவையான பாதுகாப்பை விண்வெளியில் கண்டுபிடிக்கும்  சாதனை பயணமே........"இண்டர்ஸ்டெல்லர்" விஞ்சானத் திரைப்படம்  

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் "இண்டர்ஸ்டெல்லர்"....
பல கணணி கிராபிக்ஸ் விந்தைக் காட்சிகள் நிறைந்திருந்தாலும் குவாண்டம் மெக்கானிக்ஸ்,பரவெளி அனுமானம் (wormholes), பிளாக் ஹோல்ஸ் ( black holes), சார்பியல் (theory of relativity),...இது போன்ற பல விஞ்ஞான புதிர்களை பேசும் அவரது லட்சியப்படமாகும் 

அதேநேரம் கிளைமாக்ஸ் காட்சியில் படத்தின் அதிகப்படியான அறிவார்ந்த அறிவியல் தத்துவங்கள் அவருக்கு தடுமாற்றம் தருகிறது ஆனாலும் அவரது கற்பனையையும் முயற்சியையும் பாராட்டலாம்

ஆக மொத்தத்தில்.............
நோலனின் இண்டர்ஸ்டெல்லர் படம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வெள்ளித்திரையில் 169 நிமிடங்கள் விண்வெளி பயணமாக அமைந்து திகிலூட்டும் 
nolan

வக்கிர காதலும் டாஸ்மாக் காமெடியுமாக பணத்திற்காக அய்யோக்கியத்தனமாக படம்காட்டும் கோலிவுட்-டோலிவுட்-பாலிவுட் சினிமாக்காரர்களைவிட விந்தையான சிந்தனைக் காவியம் படைத்த ஹாலிவுட் நோலன் வணக்கத்துக்கு உரியவராவார் 


Saturday, November 08, 2014

ஜோரு (தெலுங்கு)-திரைப்பட விமர்சனம்

"வேங்கடாதிரி எக்ஸ்பிரஸ்"வெற்றிப்பட டோலிவுட் நாயகன் சந்தீப் கிஷன்
மூன்று நாயகிகளுடன் கலக்கலாக நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம்....... ஜோரு (தெலுங்கு) 

படத்தின் கதையாக........
வெளிநாட்டில் படித்துவிட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு விசாகபட்டினத்தில் இருக்கும் தன் MLA தந்தை (ஷியாஷி ஷிண்டே) யை சந்திக்க இந்தியா வரும் அனு (ராசி கண்ணா) வழியில் விமான கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் இறங்கி ஒரு கார் மூலம் பயணிக்க........
அனுவை சந்திக்கும் சந்தீப் (சந்தீப் கிஷன்) அவள் மீது காதல் கொள்கிறான் 
அவர்கள் பயணத்தில் அஜய் என்பவன் பலமுறை அனுவை கொல்ல முயற்சிக்க சந்தீப் அவளை காப்பாற்றி அவளது தந்தையிடம் ஒப்படைக்கிறான் 
சந்தீப் பிரிந்த தன் காதலி அனுவை தேடும் போது அனு பெயரில் மூன்று பெண்கள் இருப்பதை அறிந்து குழம்புகிறான்  
யார் இந்த அஜய்...? ஏன் அஜய் அனுவை கொல்ல வருகிறான்...? என்ற மர்ம முடிச்சுடன் நகர்ந்து சந்தீப் உண்மையான அனுவை கண்டுபிடிப்பதே

குமார் நாகேந்திரா இயக்கத்தில் காதல் காமெடி என்று வந்துள்ள ஜோரு... காதல் படத்திலும் சேர்த்தியில்லாமல் காமெடி படத்திலும் சேர்த்தியில்லாமல் போனது 

சந்தீப் கிஷன்......பிளேபாயாக தோன்றினாலும் இதற்கு முந்தய படங்களில் பார்த்த அதே நடிப்பால் பார்வையாளர்களை ஈர்க்கவில்லை 

ராசி கண்ணா...வெறும் கவர்ச்சிக்காக திரையில் தோன்றுகிறார் வலுவான கதாப்பாத்திரம் இல்லை  மற்ற இரு நாயகிகள் சுஷ்மா,பிரியா பானர்ஜி சும்மா திரையில் வந்து போகிறார்கள் 

படம் முழுக்க பிரமானந்தம் தோன்றினாலும் கொஞ்ச நேரமே சிரிக்கவைக்கிறார் சப்தகிரியின் காமெடி ஒரு சிலருக்கு மட்டுமே பிடிக்கும் 

ஜோரு.....சின்ன பட்ஜெட் படம் என்றாலும் பாடல்கள்,பின்னணி இசை,ஒளிப்பதிவில் பிரமாண்டம் காட்டுகின்றது  

ஜோரு......பொழுது போகாதவர்களுக்கான ஒரு பொழுது போக்கு படம் 
 
(என்ன பிளாக்கரே! பதிவுல ஒரு பட ட்ரிக்ஸ்கூட இல்ல.....?
-
-
அட...போங்க அண்ணேன்...சும்மாவே கவர்ச்சி பதிவர் என்கிறாயிங்க இந்த ஜோரு படத்துக்கு ஸ்டில்ஸ் போட்டா அக்கப்போருதான்)

  

Friday, November 07, 2014

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா-சினிமா விமர்சனம்

கொஞ்சம் சமுக சிந்தனையும் நிறைய காதலும் காமெடியுமாக படம் காட்டுவது இப்போதைய தமிழ் சினிமாவின் புது ட்ரென்ட் போல் . தொழிற்சாலை இரைச்சல் ஒலி மாசு பற்றிய சமுக விழிப்புணர்வுடன்... ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்படம்

படத்தின் கதையாக............
தூத்துக்குடி டு சென்னை ரயிலில் பயணிக்கும் விமலும் சூரியும் தற்செயலாக சக பயணி  பிரியா ஆனந்தை சந்திக்க கலகலப்புடன் நகரும் படம்.....
டாக்டரான பிரியா ஓடும் ரயிலில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்க... 
அதனால் விமலுக்கு பிரியா மீது காதல் உண்டாகிறது

அத்துடன் விமலுக்கு பிரியாவின் பிளாஸ்பேக் கதையாக....
நாசருக்கு சொந்தமான  ஒரு ஸ்டீல் தொழிற்சாலையில் ஏற்படும் இரைச்சலால் தொழிலாளர்கள் காது கேட்காமல் பாதிக்கப்படுவதும் ரசாயனங்களால் புற்று நோய் உண்டாகி மரணிப்பதும் அவர்களுக்காக போராடிய டாக்டர் பிரியாவை கொலைசெய்ய  ரவுடி ஸ்டன்ட் சில்வா அதே ரயிலில் விரட்டி வருவதும்........ தெரியவருகிறது  

அந்தக்  கொலைகாரணிடமிருந்து  விமல்,சூரி,டாக்டர் பிரியா தப்பினார்களா...? என்பதை திரையில் காணுங்கள் 

ஆர்.கண்ணன் இயக்கத்தில்........படத்தின் முதல் பாதியில்  பழைய சினிமா பாணியில் காதலும் காமெடியுமாக பாசஞ்சர் ரயில் வேகத்தில் மெதுவாக  பயணித்தாலும்  பிரியாவின் பிளாஸ்பேக் கதை வரும் போது எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணித்து......கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் சொதப்பலாக தடம் மாறினாலும் தமிழ் சினிமாவில் முழுவதும் ரயிலில் பயணிக்கும் முதல் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்  
எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் கண்ணனின் சமுக சிந்தனைக்கு ஒரு வணக்கம் சொல்லலாம்

விமல்......... வழக்கம் போல் முக பாவனையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தாவிட்டாலும்   யதார்த்தமாக தன் நடிப்பை வெளிப்படுத்துகிறார் 
சூரி......ஒன்லைன் காமெடியில் கலக்குகிறார் 
நாசர்.....ஓட்ட ஸ்டீல் பேக்டரி ஓனராக நடித்துள்ளார் 
ஸ்டன்ட் சில்வா......பிரியாவை கொல்ல வரும் கொலைகாரனாக பயம் காட்டுகிறார்

இவர்கள் அனைவரையும் விட நடிப்பிலும் கவர்ச்சியிலும் அசத்தும் பிரியா ஆனந்த் படத்தை தாங்கிப்பிடிக்கிறார் அதே போல் பிரியாவின் தோழியாக கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள விஷாகா சிங் படத்தின் கதைக்கு பக்கபலமாக இருக்கிறார் 

முத்தையாவின் ஒளிப்பதிவில்.......தூத்துக்குடியின் கரடு முரடு காட்டுப் பகுதிகள் தத்துருபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது 
இமானின் பின்னணி இசையில்...... ஒரு சில காட்சிகளில் உயிரோட்டமாக உள்ளது 

ஆக மொத்தத்தில்..............
தொழிற்சாலை இரைச்சலாலும் ,பாதுகாப்பற்ற ரசாயனங்களாலும் தொழிலாளர்கள் அதைச் சுற்றி வாழும் பொது மக்களின் உயிருக்கு பாதுகாப்பின்மையை எதிர்த்து பொதுநல வழக்கு மூலம் போராடுதல் போன்ற சமுக விழிப்புணர்வுடன் காதலும் காமெடியுமாக வந்துள்ள  ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தை ஒருமுறை பார்க்கலாம்    





Thursday, November 06, 2014

விஜய்-அஜித் இருவரில் யாருக்கு ட்விட்டரில் அதிக ரசிகர்கள்...?


சமுக வலைதளங்களில் பிரபலமான ட்விட்டரில் ஒருநாள் நடிகர் விஜய் பற்றிய செய்தி உலகளவில் ட்ரென்ட் செய்யப்படுகிறது இன்னொருநாள் நடிகர் அஜித் பற்றிய செய்தி உலகளவில் ட்ரென்ட் செய்யப்படுகிறது

எத்தனையோ சமுக அவலங்களுக்கு கொடுக்கப்படாத முக்கியத்துவம் தமிழ் ட்விட்டர்கள் விஜய்-அஜித்  இருவருக்கும் மாறிமாறி ட்ரென்ட் செய்தும் ஒருவருக்கொருவர் சில நேரங்களில் அவதூறு பொழிவதும்.........
உலகளவில் தமிழ் ட்விட்டர்கள் பற்றிய எண்ணம் என்னவாக இருக்கும்? என்பது ஒருபுறம்...........

இன்னொரு சிந்தனையாக.....
 இது ட்விட்டரில் ஒரு பொழுது போக்கு விளையாட்டு  என்றும் தேவைப்படும் போது சமுக அவலங்கள் அரசியல்வாதிகளின் சித்துவிளையாட்டுக்கள் அக்குவேறு ஆணிவேறு அலசி டிவிட்டப்படுவதும் இங்கே வாடிக்கை... வேடிக்கை

உண்மையில்......
 தமிழ் ட்விட்டர்  உலகம் விஜய்-அஜித் இந்த இரண்டு சினிமா ரசிகர்களால்  மட்டுமே நிறைந்து உள்ளதா?

உங்கள் பார்வையில்...............

விஜய்-அஜித் 
இருவரில் யாருக்கு ட்விட்டரில் அதிக ரசிகர்கள்...?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........


Saturday, November 01, 2014

லிங்கா பட டீசர் எப்படியிருக்கு...?

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புது கெட்டப்புடன் அனுஷ்கா ஷெட்டி, சோனாக்ஷி சின்ஹாவுடன் இணைந்து நடிக்கும் லிங்கா படத்தின் முதல் டீசர் வெளியான கொஞ்ச நேரத்தில் ட்விட்டர்,பேஸ்புக்...சமுக வலைதளங்களில் உலக அளவில் ட்ரென்ட் ஆனது 
























                           thanks-YouTube by Rockline EntertainmentsRockline Entertainments

உங்கள் பார்வையில்..............

லிங்கா பட டீசர் எப்படியிருக்கு...?




வாக்களித்த அனைவருக்கும் நன்றி............
UA-32876358-1