google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: December 2014

Thursday, December 25, 2014

கயல்-சினிமா விமர்சனம்

மைனா,கும்கி போன்று காதலை ஆழமாக காட்டாவிட்டாலும் வெள்ளித்திரையில் ஒரு கவிதை போன்று காதலை மிகவும் அழகாக காட்சிபடுத்தி பார்வையாளர்களை கவர்கிறது........பிரபு சாலமோனின் கயல் 

ஆறு மாதம் உழைத்து சம்பாதிப்பதும் சம்பாதித்ததை ஆறு மாதம் ஊர் சுற்றி ஜாலியாக கொண்டாடுவதுமான அனாதை விடுதியில் வளர்ந்த இரண்டு   நண்பர்கள் ஆரோன் மற்றும் சாக்ரடிஸ் தங்கள் ஊர் சுற்றும் பயணத்தில்......
ஊரை விட்டு ஓடி வந்த ஒரு காதல் ஜோடி தப்பிக்க  உதவுகிறார்கள் 

ஜாதி வெறி பிடித்த ஊர் மக்களும் ஜமின்தாரும் இருவருரையும் பிடித்துவைத்து காதல் ஜோடியின் இருப்பிடத்தை தெரிந்துகொள்ள முடியாமல்........

ஜமீன்தார் வீட்டு வேலைக்காரி கயல் மூலம் அவர்களிடமிருந்து உண்மையை தெரிந்துகொள்ள  முயற்சி செய்கிறார்கள் ஆனால் அய்யோ பாவம் கயலின் அழகில் மயங்கி ஆரோன் அவளைக் காதலிக்க.......

ஓடிப்போன ஜமிந்தாரின் மகளை கண்டுபிடித்து விடுவதால்   ஆரோனையும் சாக்ரட்டிசையும் ஊரைவிட்டு விரட்டிவிடுகிறார்கள் 


ஊரைவிட்டு ஆரோன் போனப் பிறகு  கயலுக்கும் ஆரோன் மீது காதல் வந்துவிட ஆரோனை தேடிப் புறப்படுகிறாள்  ஆரோனும் கயலை தேடி அலைகிறான்

ஆரோனும் கயலும் சந்தித்தார்களா....? அவர்கள் காதல் என்ன ஆனது.....? என்பதே கயல் படத்தின் கதை 

இயக்குனர் பிரபு சாலமன் கயல் படத்தின் முன்பகுதியை ஒன-லைனர் காமெடி,வேடிக்கை நிகழ்சிகள் மூலம் நகர்த்திச் சென்றாலும் அவரது சிறப்பான திரைக்கதை முழு படத்திற்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக ஒரு கவிதை படிக்கும் உணர்வை தருகிறது 

ஆரோனாக நடித்துள்ள  சந்திரனின் வசன உச்சரிப்பும் நடிப்பும் பார்வையாளர்களை கவர்கிறது அப்படியே காமெடியன் சாக்ரடிஸாக நடித்துள்ள வின்சென்ட் செம கலக்கல்  கயலாக நடித்துள்ள ஆனந்தியின் அழகான கண்கள் கவிதை பாடுகின்றன ஜமீன்தாராக நடித்துள்ள கிருஷ்ணமூர்த்தி திரையில் தோன்றும் போதெல்லாம் அவரது நடிப்பு பார்வையாளர்கள் கை தட்டலைப் பெறுகிறது 

இமானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு உயிரோட்டமாக உள்ளது அதேபோல் வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவில் மலை சூழ் கிராமத்தின் இயற்கை காட்சிகளும் மிரலவைக்கும் சுனாமி காட்சியும் பரவசமூட்டுகின்றன 

அதேநேரம்......

பிரபு சாலமோனின்  பாத்திரப் படைப்புகள் சுருளி (மைனா), பொம்மன் (கும்கி), ஆரோன் (கயல்)..அனைத்தும்   ஒரே சாயலில் இருகின்றன

கிளைமாக்ஸ் சொதப்பலை மறந்துவிட்டால்...
 வெள்ளித்திரையில் ஒரு கவிதை போன்று காதலை மிகவும் அழகாக காட்சிபடுத்தி பார்வையாளர்களை கவர்கிறது........பிரபு சாலமோனின் கயல்


 படம் பார்த்தவர்களின் மதிப்பீடு.....

கயல்-படம் எப்படியிருக்கு.....?





படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........


மீகாமன்-சினிமா விமர்சனம்

தேவையற்ற பஞ்ச் டயலாக்குகள்,வாந்தியெடுக்கும்  நகைச்சுவைக் காட்சிகள் ,வரைமுறையற்ற காதல்,மற்றும் நம்பமுடியாத ஹீரோயிசம் இல்லாமல் ஆரம்பம் முதல் கடைசிவரை சீரான திரைக்கதையாலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதாப்பாத்திரங்களாலும் கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் அதிரடி  திரைப்படமாக........மகிழ் திருமேனியின் மீகாமன்

மும்பை ரகசிய போலிஸ் அதிகாரிகளான அருள் (ஆர்யா) மற்றும் சந்திரா (ரமணா) கோவா போதைப் பொருள் கடத்தல் மாபியா கும்பல் தலைவன் ஜோதி (அஷுடோஷ் ராணா) யை பிடிக்க நியமிக்கபடுகிறார்கள்

சிவா என்ற பெயரில் அந்தக் கும்பலில் உள்ள அடியாளாக மாறிய அருள்.....
ஜோதியின் கடத்தல் பொருளை ஒருநாள் திருடி ஒழித்துவைத்து இதுவரை வெளயுலகுக்கு தெரியாமல் இருந்த ஜோதியை யார்...? என்று கண்டுபிடித்து தண்டிப்பதே மீகாமன் படத்தின் கதை

நிறைய காட்சிகளில் குருதிப்புனல் படத்தை நியாபகப்படுத்தும் மீகாமன் படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி இடைவேளைக்கு முன்பு வரும் அதிகப்படியான விசாரணை வன்முறை காட்சிகள் பார்வையாளர்களுக்கு அடிவயிற்றை கலக்குகிறது 

ஆனாலும் தொடர் விறுவிறுப்பு ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த திரைக்கதை படத்தை தொய்வடையாமல் கொண்டு செல்கிறது

ஆர்யா.......தனது இறுக்கமான முகத்துடன் ரகசிய போலிஸ் அதிகாரி வேடத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறார் ஹன்ஷிகா....கொஞ்ச நேரமே வந்தாலும் அழகாக தெரிகிறார் வில்லனாக வரும் அஷுடோஷ் ராணா... தனது வித்தியாசமான கலக்கல் நடிப்பால் கோலிவுட்டில் நிறைய வலம் வருவார் 

தமனின் பின்னணி இசை படத்தின் சிறப்பான ஒன்றாகும் ஒளிப்பதிவில் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன 

குருதிப்புனல் போன்ற நிறைய   ரகசிய போலிஸ் படங்களை நினைவூட்டினாலும் சீரிய திரைக்கதையால் தனித்துவம் பெறும் மீகாமன்  அதிரடிப் பட விரும்பிகளுக்கு அதிரடித் திரைவிருந்து... மற்றவர்கள்.... ஒருமுறை பார்க்கலாம் 

meaghaman

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு.........

மீகாமன்-படம் எப்படியிருக்கு?





படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........


 
 

Wednesday, December 24, 2014

கே.பாலச்சந்தர்-திரையுலகின் பிரம்மா-1

இன்று (23/12/14) கே.பாலச்சந்தர் மரணமடைந்தார் 
ஆனால் இயக்குனர் சிகரம்  கே.பாலச்சந்தர் என்ற படைப்பாளிக்கு என்றும் மரணமில்லை 

வெள்ளித்திரையில் அவரது படைப்புகள்  காலத்தை வென்றவைகள் 
தமிழ் திரையுலகின் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்தில்  தன் இயக்குனர் திறமையால் மூன்றாவது துருவமாக இருந்த திரையுலகின் பிரம்மா..............கே.பாலச்சந்தர்
  
அவரது திரைப்படங்கள் அவை வெளிவந்த காலகட்டத்தின் சமுக,அரசியல்  அவலங்களின் பிரதிபலிப்புகள் 
அவைகளில் சில துணிச்சலான பெண்களை சித்தரித்து பெண்ணியத்தின் பெருமையை படம் காட்டின இன்னும் சில அடிமட்ட மேல்மட்ட மக்களின் வாழ்வாதரப் பிரச்சனைகளை பிரதிபலித்தன 

அவரது நீர்க்குமிழி திரைப்படத்தில்......
 சேது (நாகேஷ்) என்ற மரணத்தின் வாயிலில் இருக்கும் ஓர் அப்பாவி  வேடிக்கை இளைஞனை சித்தரித்து... 

                    thanks YouTube by Raveendrarasa Paramanathan

Death is very likely the single best invention of Life. 
It is Life's change agent.(Steve Jobs)
மரணம் பற்றிய  வாழ்க்கை தத்துவத்தை எடுத்துரைத்தார் 

மேஜர் சந்திரகாந்த் படத்தில்.......
சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் உள்ள மோகன் (நாகேஷ்) தன் தங்கை விமலா (ஜெயலலிதா)வை காதலித்து ஏமாற்றி அவளது தற்கொலைக்கு காரணமான சமுதாயத்தின் மேல்மட்டத்தில் உள்ள  மேஜர் சந்திரகாந்(சுந்தராஜன்) தின் மகனை பழிவாங் அவரது வீட்டிலேயே தஞ்சம் அடைவது  போன்று படைத்தார் 

அவரது பாமாவிஜயம் படத்தில்.........
நடுத்தர வர்க்கத்து கூட்டு குடும்பமான ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எத்திராஜ் (டி.எஸ்.பாலையா) தன் மூன்று மகன்களும்  (மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன்,நாகேஷ்) அவர்களது துணைவிகளும் (சௌகார் ஜானகி,காஞ்சனா,ஜெயந்தி)........

                                  thanks YouTube by petromax light

 பக்கத்து வீட்டிற்கு குடிவந்த நடிகை பாமா (ராஜஸ்ரீ) வின் பகட்டு வாழ்க்கையை கண்டு தாங்களும் அவள் போல் தகுதிக்கு மீறி வாழ ஆசைப்படுவதை நகைச்சுவையாக சுட்டிக் காட்டினார் 

                                                                                          (தொடரும்)



Monday, December 22, 2014

பிசாசு-சினிமா விமர்சனம்

வித்தியாசமான கதைக்கரு,திரைக்கதை,காட்சி அமைப்பு,ஒளிப்பதிவு.. போன்றவைகளை ரசிக்கும்  உலக சினிமா ரசிகர்களுக்கு காதல்,நகைச்சுவையை கலந்துள்ள திகிலுடன் படம்காட்டும்  மிஷ்கினின் பிசாசு வெண்திரையில் ஒரு புரட்சி மற்றவர்களுக்கு......?

விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடும்  இளம்பெண் பவானி(ப்ரயாகா)யை  ஓர் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார் சித்தார்த் (நாகா) 

மருத்துவமனையில் அந்தப் பெண்  சித்தார்த்தின் கையைப் பற்றிக்கொண்டு ஒரு காதல் பார்வையுடன் பரிதாபமாக இறந்துப்போகிறாள்  

ரொம்ப பீலிங் ஆன சித்தார்த் பவானியின் ஒற்றைக் கால் செருப்பை நினைவாக தனது அபார்ட்மெண்ட் வீட்டில் கொண்டு வைக்கிறார் தொடர்ந்து அவருக்கு அந்த வீட்டில் பல அமாஷ்ய நிகழ்வுகள் நடக்க ஒரு பெண் பேய் விரட்டியை வைத்து விரட்ட நினைத்தும் முடியாமல்.......
இறந்துபோன பவானிதான் பேயாக அலைவதாக அவரது தந்தை (ராதாரவி) மூலமாக அறிந்துகொள்கிறார்  

தன் தாயார் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம்பட அந்தப் பவானி பேய்தான் காரணம் என்று நினைத்த சித்தார்த் தன் நண்பர்களுடன் சேர்ந்து அவளது சமாதியை தோண்டி உடலை எடுத்து தீயிட்டு எரித்து அந்த ஆவியை அழிக்க முயல்கிறார்

ஆனால் அந்தப் பேய்தான் தன தாயை காப்பாற்றியது என்பதை அறிந்த போது  சித்தார்த் பவானியின் விபத்துக்கு காரணமானவனை கண்டுபிடித்து தண்டிக்க நினைக்கிறார்
 

சித்தார்த் அந்த விபத்துக்கு காரணமானவனை கண்டுபிடித்தாரா? பவானியின் உடலை எரித்து ஆவியை அழித்தாரா? என்பதை இயக்குனர் மிஷ்கின் அவருக்கே உரிய தனித்தன்மை மிக்க திரைக்கதை, காட்சியமைப்புடன் படம்காட்டுவதே.....பிசாசு   

மிஷ்கினின் பிசாசு.....முன்பாதியில் திகில் நகைச்சுவையுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்கிறது பின்பாதியில் அறிவுஜீவி ரசிகர்களுக்கு மட்டுமே புரியும் அதிகப் புரிந்துணர்வு குறியீடு காட்சிகள், நிறக்குருடு, மனோதத்துவம், பிரமை...போன்ற அசாதரணமான காட்சிகள்   சாதாரண ரசிகர்களை குழப்புகிறது

நடிகர்களில் பவானியின் அப்பாவாக வரும் ராதாரவி மனதில் நிற்கிறார் சித்தார்த்தாக நடித்துள்ள நாகா படம் முழுக்க அவரது முகத்தை மறைத்துக் கொண்டே வருவதால் நவரசமும் தெரியவில்லை ஒரு ரசமும் புரியவில்லை பேயாக வரும் ப்ரயாகா நல்ல அழகு என்பது ஒன்றிரண்டு காட்சிகளில் தெரிகிறது மற்ற காட்சிகளில் கிராபிக்ஸ் பேய்....பெண் பேய்விரட்டி நல்ல காமெடி நடிப்பு மற்றபடி சொல்லும்படி யாருமில்லை

அரோல் கரோலி இசையில் ஒரு பாடல் மற்றபடி பின்னணி இசையில் எதுவும் புதுமை இல்லை ஆனால் கதையை நகர்த்திச் சென்று நம்மை தூங்கவிடாமல் செய்கிறது ரவிராயின் இருட்டில் மிரட்டும்  ஒளிப்பதிவு குருட்டு ஒளிப்பதிவல்ல  


வெண்திரையில் மர்மயோகி படம் காலம்தொட்டு விட்டலாச்சார்யா  ஜெகன்மோகினி சமிபத்திய பிட்சா,வில்லா,முனி,அரண்மனை வரை எத்தனையோ பேய் படங்கள் பார்த்திருப்பிர்கள் ஆனால் ஹிஹி... மிஷ்கின் பகுத்தறிவுவாதியாக பேய்களை நக்கலடிக்கும் படமே......... பிசாசு
 

இன்னும் அவருக்கே உரிய இயக்கும் திறமை (மிஷ்கினிஸம்)யை  தெரிந்துகொள்ள ஒருமுறை திரையில் காணுங்கள்  பிசாசு.....இது பயம் காட்டாத ஆனால் பரிதாபம் உண்டாக்கும் ஒரு தலை காதல் பேய்

மற்றபடி.....

உலக சினிமா ரசிகர்களுக்கு காதல்,நகைச்சுவையை கலந்துள்ள திகிலுடன் படம்காட்டும்  மிஷ்கினின் பிசாசு வெண்திரையில் ஒரு புரட்சி மற்றவர்களுக்கு........கொஞ்சம் அலற்சி 


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு........

மிஷ்கினின் பிசாசு எப்படியிருக்கு? 




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவர்க்கும் நன்றி........




Friday, December 19, 2014

ஷங்கரின் ஐ பட டிரைலர் எப்படியிருக்கு?கருத்துக்கணிப்பு


விக்ரமின் வேறுபட்ட நடிப்பில் ஷங்கரின் பிரமாண்டமானதிரைப்படத்தின் டீசர் அதிக அளவில் பார்வை பெற்ற நிலையில் 

இப்போது அப்படத்தின் (டிரைலர்) முன்னோட்ட காணொளி வெளிவந்து.........


                                        thanks YouTube by Aascars TV

ஷங்கரின் பட டிரைலர் எப்படியிருக்கு?






வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........


Friday, December 12, 2014

லிங்கா-சினிமா விமர்சனம்

இங்கே ரஜினியின் லிங்கா பட விமர்சனமும் லிங்கா படம் எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பும்......

ஒரு மிகப்பெரிய அணையை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்வது போல் துவங்கும் லிங்கா படத்தின் கதையாக..........

சுமார் 70 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில்  கட்டப்பட்ட சோலையூர்  அணையை உடைத்துவிட்டு பல ஆயிரம் கோடியில் புதிய ஆணை கட்டி கொள்ளையடிக்கும் எண்ணத்தில் உள்ள அப்பகுதி M.P (ஜெகபதி பாபு) அணையை ஆய்வு செய்து போலி அறிக்கை தரமறுத்த பொறியாளரை (பொன்வண்ணன்) தன் ஆட்களை விட்டு கொலை செய்ய......

அவரோ சாகுமுன் சோலையூர் நாட்டாமை ( கே.விஸ்வநாத்) பெரியவரிடம் அணையை ஒட்டியுள்ள ஒரு சிவன் கோவிலை திறந்து பாருங்கள் என்று சொல்லி செத்துவிடுகிறார்

அந்தக்  கோவிலோ சோலையூர் அணையைக் கட்டி மக்களை காப்பாற்றிய ராஜா லிங்கேஸ்வரன் (ரஜினி) என்பவரால் கட்டப்பட்டதால் அவரது வாரிசு பேரன் லிங்கா (இன்னொரு ரஜினி) வந்துதான் திறக்க வேண்டும் என்று தனது பேத்தி லட்சுமி (அனுஷ்கா) மூலம் தேடுகிறார்........

நண்பர்களுடன் காமெடித் திருடனாக அலையும் லிங்காவை கண்டுபிடித்த லட்சுமி தந்திரமாக அவரை சோலையூர் அழைத்து வர....
நாட்டாமை அவரிடம் கோவிலில் இருப்பது மரகத லிங்கம் என்று சொல்கிறார்

லிங்கா தன் நண்பர்கள் சந்தானம்,கருணாகரன் உடன் மரகத லிங்கத்தை நள்ளிரவில் திருடிச் செல்ல முயலும் போது ஊர் மக்களிடம் அகப்பட்டுக் கொள்ள....லிங்காவை திருடன் என்று சந்தேகப்படுகிறார்கள் 

அப்போது நாட்டாமை அந்த சோலையூர் அணையுடன் சேர்த்து சிவன் கோவில் எப்படி கட்டப்பட்டது? பிறகு ஏன் மூடப்பட்டது? என்பதை பிளாஷ்- பேக் கதையாக விவரிக்கிறார்.........

ஆங்கிலேயர் காலத்தில் மதுரை கலெக்டராக இருக்கும் பொறியியல் படித்த கொடையூர் ராஜாவான லிங்கேஸ்வரன் சோலையூரில் நீர் இல்லா பஞ்சத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் தற்கொலை செய்வதை அறிந்து அங்கே ஒரு அணை கட்ட அரசாங்கத்தில் அனுமதி மறுக்கப்பட தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு.........

மக்களுக்காக தன் அரண்மனைகளையும் சொத்துக்களையும் விற்று சோலையூரில் மக்களோடு மக்களாக இருந்து அணைகட்டுகிறார்  பரிகாரமாக அந்தச் சிவன் கோவிலையும் கட்டுகிறார் (அவ்வப்பதோ துணையாக இருந்த அந்த ஊர் பெண் மணி பாரதி (சோனாஷி சின்கா) யையும் கட்டுகிறார்) 

அணைகட்ட இடையூறாக இருக்கும் வில்லன் ஆங்கிலேய துரையின் சதியால் ஊர் மக்கள் அவருக்கு எதிராக திரும்பிவிடுகிறார்கள் அவர் கட்டிய அந்த கோவிலை மூடிவிட்டு அவரை ஊரைவிட்டும் விரட்டிவிடுகிறார்கள் உண்மை தெரிந்த மக்கள் ராஜாவை மீண்டும் அழைக்கும் போது அவர் வர மறுத்துவிடுகிறார்

அவரது பேரன்தான் இந்த லிங்கா என்றும் மீண்டும் சோலையூருக்கு வந்துள்ள ஆபத்தை லிங்கா கண்டுபிடித்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறார்

 சாகுமுன் பொறியாளர் பொன்வண்ணன் கோவிலில் மறைத்து வைத்த அறிக்கையை எடுத்து லிங்கா தன் காதலி தொலைகாட்சி ரியாலிட்டி ஷோ நடத்தும்  லட்சுமியுடன்  சேர்ந்து சோலையூர் அணையையும் மக்களையும் அப்பகுதி M.P யிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறார்....? என்பதை

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் காதலும் நகைச்சுவையும் கலந்த அதிரடி திரைப்படமாக காட்டுவதே.........லிங்கா

படத்தின் முன்பகுதியை கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்தும் இயக்குனர்  பிளாஷ்-பேக் காட்சி கதையை மெலோ ட்ராமாவாக நாடகத்தன்மையுடன் நத்தை வேகத்தில் கொண்டு போவது கொஞ்சம் அபத்தம் ஆயினும் படம் முழுக்க ரஜினியிசமாக வரும் அவரது நடை,உடை, பாவனையில் அவரது ரசிகர்களை விசிலடிக்க வைப்பதில் வெற்றியடைந்துள்ளார்

ரஜினியின் பிறந்த நாளில் இன்று வெளிவரும் லிங்கா படத்தில் ராஜா லிங்கேஸ்வரன் அரண்மனையில் பிரமாண்டமாக பிறந்த நாள் கொண்டாடும் காட்சி வைத்துள்ளது அவரது இயக்கத்தில் உள்ள நல்ல ரசனை

படத்தின் சிறப்பான காட்சிகளாக............
-ரஜினியின் துவக்க காட்சியாக  லிங்கா ஆடும் கனவுப்பாடல் ஒ...நண்பாவும் -போலிஸ் ஸ்டேசனில்  பிரமானந்தத்துடன் அனுஷ்கா அடிக்கும் லூட்டி
-லிங்கா அனுஷ்காவுடன் நட்சத்திர ஓட்டலில் அடிக்கும் நகைக் கொள்ளை
-கலெக்டர் லின்கேஸ்வரனாக ரஜினி ரயிலில் போடும் சண்டை
-ராஜாவாக ரஜினி அரண்மனையில் ஆங்கிலேய கவர்னர்,துரைகளுடன் கொண்டாடும் பிரமாண்டமான பிறந்த நாள்
-பொறியாளர் லிங்கேஸ்வரன் ரஜினி  சோனாஷி சின்காவுடன் போடும் வண்ணமயமான பாடல் காட்சி
-லிங்கா ரஜினியுடன் அனுஷ்கா காணும் படகு பாடல் காட்சி

இன்னும் நிறைய சிறப்பான காட்சிகள் இருக்க கிளைமாக்ஸ் பலுன்-பைக் சேஸிங் போன்ற  லாஜிக் மீறல் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியை கோச்சடையான் மாதிரி அல்லாமல் நிஜத்தில்  பார்க்கும் போது அவரது வயதும் முதிர்ச்சியும் ஒப்பனையின் திறமையாலும் இயக்குனர் திரைக்கதை திறமையாலும்  தாத்தா ரஜினி-பேரன் ரஜினி இருவரையும் ஒரே உருவத்தில் இளமையாக காட்டுகிறார்கள் ரஜினியும் தனது ஸ்டைல் நடிப்பாலும் தத்துவ வசன உச்சரிப்பாலும்  ரசிகர்களை ஏமாற்றவில்லை

அனுஷ்காவின் முதிர்ச்சி முகத்தில் மறைக்க முடியவில்லை அப்படியே சோனாஷியின் இளமை ஒப்பனையின்றி துள்ளுகிறது

சந்தானம் தனது ஒன்-லைன் காமெடியில் கருணாகரனுடன் வெளுத்து வாங்குகிறார் அவர் ரஜினியிடம் நன்பேண்.....என்று ஆரம்பிப்பதும் ரஜினி டா....போட்டு முடிப்பதும் நல்ல தமாஷு

மற்றபடி  வில்லன் M.P-யாக வரும் ஜெகபதி பாபு,ஊர் பெரியவர் விஸ்வநாத்,பழைய நாட்டாமை விஜயகுமார்,ஜமீன் நிழல்கள் ரவி, போட்டு கொடுக்கும் சகுனியாக வரும் சுந்தர்ராஜன்,ரயில் இஞ்சின் ட்ரைவர் மனோபாலா, உதவியாளர் இளவரசு...என்று ஒரு நடிகர்கள் கூட்டமே திறமையாக நடித்துள்ளனர்  

ரத்தினவேலின் ஒளிப்பதிவில் அணை,இயற்கை காட்சிகள்,நீர்வீழ்ச்சி காட்சிகள் மட்டுமல்ல ரஜினி,சோனாஷி,அனுஷ்கா எல்லோரும் அழகாக தெரிய ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு பெரிதும் துணையாக இருக்க......

ஆக மொத்தத்தில்.............

நிறைய காதல்,காமெடியுடன் கொஞ்சம் சமுக சிந்தனையாக   சாதி சமத்துவம்,தேசபற்று என்று சினிமா காட்டும் கே.எஸ்.ரவிகுமார்- ரஜினி கூட்டணியில்  லிங்கா திரைப்படம் கொஞ்சம் ட்ரிம் பண்ணி விறுவிறுப்பு கூட்டியிருந்தால் முத்து படையப்பா வரிசையில் மிகப் பெரிய வெற்றிப்படமாக  இருக்கும்



படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........

லிங்கா-படம் எப்படியிருக்கு.....?




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......
முடிவு-19/12/2014



Thursday, December 11, 2014

'அதாரு உதாரு' பாடல் எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பு


அஜித்தின் என்னை அறிந்தால்...படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் விக்னேஷ் சிவன் வார்த்தைகளில் விஜய் பிரகாஷ்-கானா பாலா பாடி வெளிவந்துள்ள 'அதாரு உதாரு' பாடல்..........


                            thanks YouTube by <a href="/channel/UCTNtRdBAiZtHP9w7JinzfUg" class=" yt-uix-sessionlink     spf-link  g-hovercard" data-ytid="UCTNtRdBAiZtHP9w7JinzfUg" data-sessionlink="ei=GDGJVJSYFNiJogO1oYCQDA" data-name="">SonyMusicSouthVEVO</a>SonyMusicSouthVEVO


இருவேறு  கருத்துக்களால் வலைதளங்களில் விமர்சிக்கப் படுகிறது
உங்கள் பார்வையில்............
என்னை அறிந்தால்...படத்தில் வரும்
 'அதாரு உதாரு' பாடல் எப்படியிருக்கு?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..............

Saturday, December 06, 2014

2014-சிறந்த தமிழ் படம் எது?

இங்கே 2014-ம் ஆண்டு இதுவரை வெளிவந்த 200-க்கு மேற்பட்ட தமிழ்  படங்களில்  எனது வலைப்பதிவில் விமர்சனங்களுடன் நடந்த கருத்துக்கணிப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்ட  10  படங்கள்.......
1-வீரம்
2-கோலிசோடா 
3-குக்கூ 
4-அரிமா நம்பி 
5-சதுரங்க வேட்டை 
6-ஜிகர்தண்டா 
7-மெட்ராஸ் 
8-கத்தி 
9-காவியத்தலைவன் 
10-சலீம் 

இப்படங்களின் விமர்சனங்கள் படிக்காதவர்கள் 
அந்தப் படங்களை கிளிக் செய்தால் படிக்கலாம்  

இவைகளில் உங்களுக்கு பிடித்த சிறந்த தமிழ்படம் எது?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......


Thursday, December 04, 2014

என்னை அறிந்தால்- பட டீஸர் எப்படியிருக்கு?

தல அஜித் நடிக்கும் என்னை அறிந்தால்....படத்தின்  59 விநாடிகள் டீஸரில் அஜித்தின் வேறுபட்ட நான்கு தோற்றங்களுடன் நாயகிகள் அனுஷ்கா-திரிஷாவுடன் காட்சிப்படுத்தி... 

அவரது கம்பீரமான வசன உச்சரிப்புடன்......
"ஒரு மெலிசான கோடு. இந்தப் பக்கம் போனா நான் நல்லவன் அந்தப் பக்கம் போனா நான் ரொம்ப கெட்டவன்"


ஹாரிஸ் ஜெயராஜின் ஏற்ற இறக்கம் நிறைந்த மாறுபட்டபின்னணி இசையில்.........

இந்த சுவாரஸ்யமான என்னை அறிந்தால்....டீஸர் அஜித்தின் அதி தீவிரமான ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து பொதுவான பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது 


இப்போது வந்துள்ள டீஸர் என்னை அறிந்தால்... படத்தின் மிகப் பெரிய வெற்றி முன்னோட்டமாக  தெரிகிறது 
                              thanks-YouTube by <a href="/channel/UC56gTxNs4f9xZ7Pa2i5xNzg" class=" yt-uix-sessionlink     spf-link  g-hovercard" data-name="" data-ytid="UC56gTxNs4f9xZ7Pa2i5xNzg" data-sessionlink="ei=lPB_VJSPDMiJoAPXzoLYCw">Sony Music India</a>Sony Music India


உங்கள் பார்வையில்............
என்னை அறிந்தால்... 
பட டீஸர் எப்படியிருக்கு?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.............

டிவிட்டர்களின் விமர்சனம்........

Visho Murugananth@vishoprashanth 
என்னை அறிந்தால் டீசர் பார்த்தேன் என்ன ஒரு கம்பீரம் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஹீரோவுக்குரிய மிரட்டல் குரல் அஜித் இடம் தான் இருக்கு செம :)

 அன்பே கடவுள் ☺@AnbarasuRK 
சந்தேகம்மே வேன்டாம்ய்யா , பொங்கழுக்கு நின்னு விளையாட போரது இந்த " என்னை அறிந்தால் "


Vidya@vidya_05 
.நடையிலும் குரலிலும் சிவாஜி கிட்ட இருந்த அதே கம்பீரம் உன்கிட்ட மட்டும் தான் இருக்கு

மறுக்காலத்து கள்ளன்@kalvankallan 
என்னை அறிந்தால் டீஷரே 100 தடவை பாத்துட்டேன் அப்போ படம் எத்தனை தடவை பார்ப்பேன் த்த்த்தா தெறிமாஸ்டா 

சி.பி.செந்தில்குமார் @senthilcp 
என்னை அறிந்தால் டீசர் = வீரம் டீசர் க்கு மேலே ஆரம்பம் டீசருக்கு அருகே.குட் 1

J Anbazhagan@JAnbazhagan 
ஒரு மெல்லிசான கோடு. கோடுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன். அந்தப் பக்கம் போய்ட்டா நான் ரொம்ப கெட்டவன் - 'என்னை அறிந்தால்' 

சன்னியாசி@iam_moorthy 
காலையில் என்னை அறிந்தால் டீசருடன் காலை பொழுது ட்விட்டரில் துவங்கியது...


DinuAkshaya @DinuAkshi 
எமனும் அஞ்சுவான் என்னை அறிந்தால் !
rajmohan@billumohan83 
மற்றவனை அறிந்தவன் மனிதன் தன்னை அறிந்தவன் ஞாநி #என்னை அறிந்தால்#

ramachandiranram@nithikram 
Yennai Arindhaal என்னை அறிந்தால் 
Theri MassS...... — with Thala Aattam Arambam. 

                                                      thanks-.naalayacinema.com

தனுஷ் : Yennai arindhaal teaser simply mass :) can’t wait for the release
சிம்பு : Ajith, Gautham… class + mass check it out ….
பிரேம்ஜி : Therri mass THALA ROCKS
வெங்கட் பிரபு : A very #gvm teaser!!! #classy #YennaiArindhaal #thala
ராய் லட்சுமி : Wowwww is the word! Loved the dual shades of him in the film thala looks fabulous! Complete mass, After #mangatha I am truly happy to see thala in this movie #YennaiArindhaal he will steal the show! #thala #mass he is unstoppable
குஷ்பு : Just watched teaser of #YennaiArindhaal ..my George Clooney is back..#THALA is mass..super duper mass..1 of my fav dir #Gautam is also back
அனிருத் : Yennai Arindhaal Teaser – Mass and rocking!
தனஞ்செயன் : #YennaiArindhaal teaser has powerful dialogues + Ajith’s mass + GathamMenon’s stylish making. All the best to team
அருள்நிதி : super mass .gethu voice :))) Yennai Arindhaal
லட்சுமி இராமகிருஷ்ணன் : 
Ajith looks too good! his enchanting smile! Gautam touch, Classy and dignified! As expected from the maker…
சிவகார்த்திகேயன் : Yennai Arindhal Teaser It’s just a beginning
சிறுத்தை சிவா : Yennaiarindhal……adhirudhu…teaser….allthe best Team



UA-32876358-1