google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உத்தம வில்லன்-படப் பாடல்கள் எப்படியிருக்கு....?

Monday, March 02, 2015

உத்தம வில்லன்-படப் பாடல்கள் எப்படியிருக்கு....?



ஜிப்ரான் இசையமைப்பில் 7 பாடல்களும் 7 ஒரிஜினல் சவுன்ட் ட்ராக்களும் 3 கரோக்கிகளும் இடம்பெற்றுள்ள....
 கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் சினிமா இசைப்பிரியர்களை மட்டுமன்றி விமர்சகர்களையும் கவர்ந்துள்ளது

7 பாடல்களில் 5 பாடல்களை கவிஞர் கமலஹாசன் எழுதிட, மற்றவைகளை விவேகா-சுப்பு ஆறுமுகம் எழுதிவுள்ளனர்  
இவைகளை பின்னணிப் பாடகர் கமலஹாசனுடன் பத்மலதா,சரன்யா கோபிநாத்,அனிதா,நிவாஸ்,சுப்பு ஆறுமுகம்,ருக்மணி அசோக்குமார்.....பாடியுள்ளனர் 

1-லவ்வா..லவ்வா 
இப்பாடலில் சரன்யாவின் குரல் உஷா உதுப்பை நினைவூட்டியும் பாடலில் வரும் கிட்டார் ஒலியிசை கேட்பவர்களுக்கு ஒரு விதப் போதையை ஊட்டுகிறது 

2-ஆடலாம் கடவுள் முன் 
இப்பாடல் ட்ரம்ஸ் ஒலியிசையில் தொடங்கி பண்டைய இசைக்கருவிகள் கஞ்சிரா,மிருதங்கம்....ஒலிக்கலவையாக கர்னாட்டிக் இசையாக வலம் வந்து ஒரு பரதநாட்டிய பாடல் போல்........
மோகத்தை சொல்ல மொழியும் ஒரு தடையாகுமோ...? என்ற கவிஞர் கமலஹாசனின் கவின்மிகு வார்த்தைகளில் நம்மை 18 நூற்றாண்டு உலகுக்கு தாலாட்டி அழைத்துச் செல்கிறது

3-உத்தமன் அறிமுகம் 
இப்பாடலில் ஒரு கதை சொல்லும் பாங்குடன் வில்லுப்பாட்டின் கலப்பான சந்தம்  கேட்பவர் தலையை அசைத்துப்பார்க்கும் கால்களை தாளமிடச் செய்யும் கைகளை சொடுக்கு போட வைக்கும் அதுக்கும் மேல.........
அரசியல்வாதி உண்மை சொன்னதுபோல் அதிசயம் கண்டேன் என்ற கமலின் நையாண்டி பன்ச் வசனம் நம் உதடுகளில் புன்னகை தவழச் செய்யும் 

4-சாகாவரம் 
இப்பாடலில் பாராம்பரிய கேரள வாத்தியங்கள் செண்டை மேளம்,கொம்பு..இவைகளுடன் பியானோ  ஒலியிசையும்  கலவையில் ஒரு வித அழுகைக் குரலுடன்  இடையிடையே வாள்வீச்சு சப்தங்கள்....
சாகாவரம் போல் சோகம் உண்டோ.......? என்ற புரிந்து கொள்ள முடியாத புலம்பலுடன்  ராஜ கம்பீரமாக அமைந்துள்ளது

5-இரணியன் நாடகம் 
இது பாடலாக அமைந்த ஓரங்க நாடகம் போல்.....கமல் உச்சரிக்கும் கம்பீரமான வசனம் பலவிதமான இசைக்கருவிகளின்  ஓசையோடு கலந்து நமக்கு பால்ய வயதில் பார்த்த மேடை நாடகங்களை நினைவூட்டும் 

6-முத்தரசன் கதை 
ஒரே பாடலில் நம் நாட்டு பாரம்பரிய கர்னாட்டிக் இசையும் நாட்டுப்புற இசையும் லாவகமாக மேல்நாட்டு சிம்பொனிக் இசையுடன் கலவையாக பாய்ந்து வந்து நம் காதுகளில் இன்பத் தேனாக பாய்கிறது

7-உத்தமன் கதை 
இப்பாடல் ஒரு பல்லவியில் தொடங்கி பல வித தாளங்களுக்கு மாறி இடையிடையே உரையாடல் கலந்து இசைக்கருவிகளின் ஓசையின் மத்தியில் இதுவரை தமிழ்திரை கண்டிராத பாணியில்  ஒரு கதை சொல்கிறது

உத்தம வில்லன் பாடல்களை கேட்டு ரசியுங்கள்...........
                                thanks-YouTube by Sony Music India


நீங்கள் கேட்டு ரசித்த.........



























ஜிப்ரான் இசையமைப்பில்.........
உத்தம வில்லன்
படப் பாடல்கள் எப்படியிருக்கு....?






வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி .........

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1