google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காஞ்சனா 2 - படம் எப்படி இருக்கு?

Saturday, April 18, 2015

காஞ்சனா 2 - படம் எப்படி இருக்கு?

திகில் பொழுதுபோக்குவுடன்  மையக் கதையாக  காஞ்சனா-1 ல் திருநங்கைகள் போராட்டம் பற்றி காட்டியது போல் இதில் மாற்று திறனாளியின் போராட்டத்தை சமுக சிந்தனையுடன்  ஒரு ஃப்ளாஷ்பேக் கதையாக  இணைத்து........ ராகவா லாரன்ஸ் படம் காட்டுவதே.....காஞ்சனா-2

உண்மையில் பேய் பங்களா என்று தெரியாமல்  டிவி சானலுக்காக  திகில் பேய் ஷோ நடத்த ஒரு கடற்கரை பங்களாவுக்கு தன் காதலியும்  ஷோ டைரக்டருமான  டாப்ஸியுடன் ஒரு டீமாக போகும் கேமராமேன் ராகவா........

பிறகு இருவரும் பலவிதமான பேய்களால் துரத்தப்படுகிறார்கள்

அந்தப் பேய் பங்களாவின்  பின்னணியில் உள்ள மர்மம் என்ன...? 
ஏன் அந்தப் பேய்கள் அவர்களை துரத்துகிறது....? என்பதை......

திகிலுடன் நித்யா மேனன்-ஜெயபிரகாஷ் சம்பந்தப்பட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகளால் பயம் காட்டுவதே.......காஞ்சனா-2


ராகவா லாரன்ஸின் திகில் காமெடி கற்பனை வளமும் காட்சிகள் அமைக்கும் திறனும்  படத்தில் உள்ள பலவீனமான ஃப்ளாஷ்பேக் மற்றும் நிறைய தருக்க ஓட்டைகளை மறக்கடிக்கின்றன 

பலவிதமான பேய் வேடங்களில் ராகவா லாரன்ஸ் தோன்றி நடிப்பில் முன்னேற்றத்தை காட்டுகிறார் 

டாப்சி வழக்கம் போல் கவர்ச்சியில் கலக்க ஜெயப்பிரகாஷ் கந்துவட்டிக்காரராகவும் மற்றும் நித்யா மேனன்,மயில்சாமி, மனோபாலா,கோவை சரளா....நடித்துள்ளனர் 
ஆக மொத்தத்தில்..........

இந்த கோடை வெயிலுக்கு குளுகுளு கவர்ச்சியுடன் சிரிப்பூட்டும் திகில் பொழுதுபோக்கு (குடும்ப) திரைப்படம் ...காஞ்சனா-2  

ஆனால் கொஞ்சம் பெரிய குழந்தைகளுடன் படம் பார்க்க போனால் கையில் கருப்பு துணியுடன் சென்று சில குளுகுளு டாப்(ஸி) திகில் காட்சிகளின் போது பயந்துவிடாமல் இருக்க குழந்தைகள் கண்களைக் கட்டிவிடுவது நலம் அல்லது உங்கள் கண்களைக் கட்டிக் கொள்வது உத்தமம்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1