google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பாபநாசம்-சினிமா விமர்சனம்

Saturday, July 04, 2015

பாபநாசம்-சினிமா விமர்சனம்

ஓர் உயர் பெண் போலிஸ் அதிகாரிக்கும் ஒரு சாதாரனமான குடும்பத் தலைவருக்கும் இடையில் நடக்கும் மிக்கி-மவுஸ் போராட்டமாக அமைந்துள்ள யதார்த்தமான கிரைம் த்திரிலர் திரைப்படம்....பாபநாசம் 
பொழுதுபோக்கு படமல்ல சமுதாயத்திற்கு விழிப்புணர்வு படம் 

பாபநாசத்தில் கேபிள் டிவி நடத்தும் சுயம்புலிங்க அண்ணாச்சி (கமல்ஹாசன்) தன் மனைவி இரண்டு மகள்களுடன் சந்தோசமாக வாழும் போது....

அவரது மனைவி (கவுதமி) மகள் (நிவேதிதா தாமஸ்) இருவருக்கும் வில்லங்கமாக வந்த  காவல்துறை ஐஜியின் மகனை கொலை செய்து புதைத்துவிடுகிறார்கள் 

ஐஜி மற்றும் போலிஸ் படைகள் தேடுதலில் அகப்பட்டுக்கொண்ட    சுயம்புலிங்கம் போலிஸ் கொடூர சித்ரவதைகளிருந்து சாணக்கியத்தனமாக எப்படி தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பதே.....

இயக்குனர் ஜீத்து ஜோசப்  பாபநாசம் படத்தை மலையாள ரீமேக் என்று தெரியாவண்ணம் விறுவிறுப்பாக  படம்காட்டுகிறார் திரிஷம் கிருத்துவ ஜார்ஜ் குட்டி இங்கே பாபநாசம்  இந்து சுயம்புலிங்கமாக மாறியுள்ளார் மற்றபடி கதையில் எந்த சிதைவுகளும் இல்லை  

பள்ளிக்கூட கேம்ப் போகும் மாணவியை வெளிநபர் படம் பிடிப்பது, மகளிர் குளியலறையில்  கேமரா மொபைல் வைப்பது,இரண்டு பெண் பிள்ளைகள் பெற்ற அண்ணாச்சி வீட்டுக்கு வராமல் இங்கிதமின்றி விடியும் வரை கில்மா படம் பார்ப்பது, கணவருக்கு தெரியாமல் மனைவியும்-மகளும் பிணத்தை புதைப்பது ... இப்படி ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இருப்பினும் அதையெல்லாம் தெரியாதவண்ணம் இயக்குனர் படம் காட்டுவது அருமை ஆனாலும் கமல்-கவுதமி கொஞ்சல்களை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்....சகிக்கல 

சினிமாவில் பழம் திண்ணு கொட்டை போட்ட நடிகர் கமல்ஹாசன் நடிப்பதற்கு பாபநாசம் படத்தில் பெரிய வாய்ப்பு இல்லை கதைக்கு ஏற்ப எதார்த்தமாக வந்து போகிறார் உடல் மொழி மற்றும் நெல்லை தமிழ் பேசும் அழகு சிறப்பு. மோகன்லாலுடன் கமலை ஒப்பிடுவது அறியாமை 

கவுதமி-முகத்தில் பலவித உணர்வுகளை  பிரதிபலித்து குடும்ப பெண்ணாக நடிப்பில் அசத்துகிறார் 

ஆனால் கமல்-கவுதமி இருவருக்கும் ஒப்பனை சரியில்லையா...? அல்லது வயதுக் கோளாறா...? சிலநேரங்களில்  அப்பு தத்தா-சீதா பாட்டி மாதிரி தெரிகிறார்கள் 

ஐஜி-யாக வில்லி கேரக்டரில் நடித்துள்ள ஆஷா சரத் சரியானத் தேர்வு பார்வையில் பதவிக்கு ஏற்ற கம்பீரம் 

நிவேதா  தாமஸ் பள்ளி மாணவிக்கு பொருந்தவில்லை கல்லூரி மாணவியாக காட்டியிருக்கலாம் 

போலீஸாக வரும் கலாபவன் மணி   நாம் காணும் நிஜ போலிஸின் பிரதிபலிப்பு அவ்வளவு மொள்ளமாரித்தனம் 

மற்றும் ஓட்டல் ஓனர் எம்.எஸ்.பாஸ்கர் ,சுயம்பு மாமனார் டெல்லிகணேஷ் ,உதவி ஆய்வாளர் அருள்தாஸ் சிறப்பாக நடித்துள்ளனர் 

சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் பாபநாசத்தின்  பசுமை பளிச் இரவு நேர மழைக் காட்சிகள் அருமை 

கிப்ரான் இசையில் பாடல்களைவிட திகிலூட்டும் BGM ரசிக்கவைக்கிறது 

படத்தில் பாய் ஓட்டலில் உள்ள டிவியில் விஜயின் துப்பாக்கி படப் பாடல்  காட்சி தெரிகிறது ஆனால் தென்காசி திரையரங்கில் கமல் குடும்பத்துடன் பார்க்கும் படம் சூர்யாவின்  அஞ்சான்......
கதை நடக்கும் காலக்கட்டத்தை சொல்லும் குறீயீடா...?


ஆக மொத்தத்தில்........

பாபநாசம்  படம் சமுதாயத்திற்கு நாசம் அல்ல 
இந்த மொபைல் உலகில் அதனால் சமுகத்தில் ஏற்படும் சில பக்க விளைவுகள் பற்றிய குடும்பத்துடன் கட்டாயம் பார்க்கவேண்டிய குடும்பப் படம்

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு........


 பாபநாசம்-படம் எப்படியிருக்கு...?


படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி 




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1