google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜிகினா-சினிமா விமர்சனம்

Friday, August 21, 2015

ஜிகினா-சினிமா விமர்சனம்



பேஸ்புக்-கில் போலி ஐடி (fake id),போலி சுயவிவரம் (fake profile),போலி புகைப்படங்களை நம்பி காதல் செய்யும் ஜொள்ளு காதலர்களை பகடி செய்கிறது.........வண்ண ஜிகினா 
 
தாழ்வு மனப்பான்மை கொண்ட  கால்-டாக்ஸி ஓட்டுனர் பாவாடை (விஜய் வசந்த்) அவரது ஐடி நண்பர்கள் உதவியுடன் பேஸ்புக்கில் கிஷோர் குமார் என்று தான் தற்செயலாக சந்தித்த ஒருவரின் புகைப்படத்துடன் போலி கணக்கு தொடங்கி....

ஏஞ்சல் பிரியா (சானியாதாரா) என்ற அழகியை காதல் செய்கிறார் கற்பனையில் மிதக்கிறார்

ஆனால்....

இருவரும் சந்திக்கும் போது தன காதலை சொல்லமுடியாமல் பாவாடை தவிக்கிறார் 

உண்மையில்...

பேஸ்புக்-கில் பாவாடையுடன் chat செய்வது ஏஞ்சல் பிரியாவா...? அப்படியானால் அவர்கள் காதல் என்ன ஆனது....? என்பதை ஒரு ட்விஸ்ட் உடன் கதை சொல்கிறார் இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி 

சத்யராஜ் குரலில் கதை சொல்வதுபோல் வித்தியாசமான திரைக்கதையுடன் படம் மெதுவாக நகர்கிறது அவ்வப்போது ரசிக்கும் படியான சில காமெடி வசனங்கள் 

ஜான் பீட்டர் இசையில் கானா பாடல் வாசனையில் வரும் ரோஜாப்பூ ரவிக்கைக்காரி.....பாடல் ரசிக்கும்படி உள்ளது கொடைக்கானல் மலையும் சில மலை சார்ந்த காட்சிகளும் குளுமையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது 

ஆக மொத்தத்தில்............ 

போனில் காதல் செய்த காதல் கோட்டை போன்று முகநூலில் (Facebook) போலி புகைப்படம்,சுயவிவரம்...போன்றவைகளை நம்பி காதல் கொள்ளும் ஜொள்ளு காதலர்களை பகடி செய்யும் காமெடி காதல் வண்ண ஜிகினா.......பார்க்கலாம்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1