google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கத்துக்குட்டி-சினிமா விமர்சனம்

Tuesday, October 13, 2015

கத்துக்குட்டி-சினிமா விமர்சனம்


விவசாயிகள் தற்கொலை,மீத்தேன் திட்டம்,சாதி அரசியல் மொள்ளமாரித்தனங்கள் போன்றவைகளை காதலும் நகைச்சுவையுமாக படம் காட்டுகிறது அறிமுக இயக்குனர் இரா.சரவணனின் கத்துக்குட்டி திரைப்படம் 

விவசாய பூமி தஞ்சாவூர் மாவட்டம்தான் கதைக்களம் 40 வருட அரசியல் வாழ்க்கை கொண்ட ஊர் பெரியவர் ஜெயராஜ்க்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்காமல் நண்பன் சூரியுடன் டாஸ்மாக் குடியும் ரவுடித்தனமுமாக உள்ள அவரது மகன் சரனுக்கு தேர்தலில் சீட் கிடைக்கிறது  

மீத்தேன் மற்றும் ரியல் எஸ்டேட் கொள்ளையரிடமிருந்து விளைநிலங்களை பாதுகாக்க நினைத்து உயிர் விடும் விவசாயின் மகள் ஸ்ருஷ்டி டாங்கேவுடன் மோதலும் பின்பு காதலுமாக தேர்தல் களத்தில் குதிக்கும் நரேன் ஆளும்கட்சி வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்றாரா? என்பதே கத்துக்குட்டி படத்தின் கதை 

இயக்குனர் இரா.சரவணன் சமுக,அரசியல்,விவசாய  பிரச்சனைகளை பார்வையாளர்களுக்கு காதல்,காமெடி,ஐட்டம் சாங்...என்று கமர்ஷியல் சமாச்சாரங்களுடன் படம் காட்டுவதில் வெற்றி அடைந்துள்ளார் ஆனால் எடுத்துக்கொண்ட பிரச்சனைகளை முழுமை படுத்தாமல் விட்டுவிட்டார் 
மனதை நெருடும் வசனங்களால் பேசப்படுவார் 

யதார்த்தமான அடிதடி கிராமத்து இளைஞனாக நரேனும் காமெடி நறுக் வசனங்களுடன் கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் சூரியும்  இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ள எளிமையான கிராமத்து பெண்ணாக ஸ்ருஷ்டி டாங்கே அசத்துகிறார் 

நரேனின் அப்பாவாக வரும் ஜெயராஜ் அச்சு அசலாக பாரதிராஜாவாகவே தெரிகிறார் நடிப்பிலும் அவரைப் போன்ற அனுபவ நடிப்பை காட்டுகிறார்

பாடல்களும் பாடல்களை காட்சிபடுத்திய அழகியலும் அருமை எடிட்டிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்தி படத்தில் அவ்வப்போது வரும் டாக்குமென்ட்ரி உணர்வை தவிர்த்திருக்கலாம் 

ஆக மொத்தத்தில்............

இன்றைய எலி,புலி போன்ற வணிக படமாக இல்லாமல் விவசாயிகள் பிரச்னையுடன் அரசியல் படமாக வந்துள்ள  கத்துக்குட்டி...
சமுக அக்கறை உள்ளவர்கள் மட்டுமின்றி அனைவரும் ஒருமுறையேனும் பார்க்கவேண்டிய படம் 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1