google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தூங்காவனம்-சினிமா விமர்சனம்

Tuesday, November 10, 2015

தூங்காவனம்-சினிமா விமர்சனம்


தூங்காவனம்-பிரெஞ்ச் படத்தின் ரீமேக் என்றாலும் அந்தக் கதையை தமக்கே உரிய அதிரடி நடிப்பாலும் அட்டகாசமான பாய்ச்சலாலும் விறுவிறுப்பான த்திரிலர் திரைப்படமாக்கி காரசாரமான தீபாவளி விருந்துடன் 1000 வாலா சரவெடியாய் வெடிக்க வைத்துள்ளார் கமல்ஹாசன் 

போதை கட்டுப்பாடு பணியகத்தின் (Narcotic Control Bureau) கொஞ்சம் கெட்ட கொஞ்சம் நல்ல மூத்த போலிஸ் அதிகாரி திவாகர் (கமல்ஹாசன்) மிகப்பெரிய பயங்கரமான போதைப்பொருள் கடத்தல் ஆசாமி விட்டல்ராவ் (பிரகாஷ்ராஜ்) வின் போதைப்பொருட்களை திருடி ஒளித்துவைக்கிறார் 


ஆத்திரமடைந்த விட்டல்ராவ் திவாகரின் மகனை கடத்தி வைத்து போதைப்பொருட்களை ஒப்படைக்கும்படி மிரட்டுகிறார்  ஆனால் திவாகர் ஒளித்துவைத்த இடத்தில் போதைப்பொருட்கள் காணாமல் போகிறது 

எப்படி விட்டல்ராவிடமிருந்து தன் மகனை திவாகர் மீட்கிறார் என்பதை இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா சீரான திரைக்கதையால் விறுவிறுப்பாக படம் காட்டுவதே தூங்காவனம் 

கமல் வழக்கம்போல் தன் அதிரடி நடிப்பால் பார்வையாளர்களை தன் திவாகர் கதாப்பாத்திரத்துடன் ஒன்றிடச் செய்கிறார்  

முதல்முதலாக போலிஸ் அதிகாரி வேடத்தில் திரிஷா திறம்பட நடித்துள்ளார் 

பிரகாஷ்ராஜ் தனது வழக்கமான வில்லன்பாணி நடிப்பிலிருந்து மாறுபட்டு கோபம்,பயம்,வலிகளை வெளிப்படுத்தி அசத்திஊள்ளார் 

கொஞ்ச நேரம் வந்தாலும் கமலின் மகனாக நடித்துள்ள அமன் அப்துல்லா மனதில் நிற்கிறார் 
மற்றும் கிஷோர்,சம்பத்,ஆஷா சரத்,மது சாலினி வந்து போகிறார்கள் 

ஜிப்ரான் பின்னணி இசை......படத்தின் தேவையான இடங்களில் அதிரடியாகவும் தேவையில்லாத இடங்களில் அமைதி காத்தும் படத்திற்கு சிறப்பூட்டுகின்றன ஒரு பாடல் என்றாலும் கலக்கல்

சானு வர்கீஸின் ஒளிப்பதிவில் சீரான காட்சியமைப்புகளும் காட்சிக்கேற்ற வண்ணங்களும் மனத்தைக் கவர்கின்றன சண்டைக்காட்சி அமைப்புகள் கதிகலங்க வைக்கின்றன 


ஆகமொத்தத்தில்......
பாபநாசம்,உத்தமவில்லன் போன்ற மெலோட்ராமா படங்களுக்குப் பிறகு வந்துள்ள அதிரடித் திரைப்படம் தூங்காவனம் அதன் விறுவிறுப்பான கதை ஓட்டத்திற்காக பார்வையாளர்களை பெரிதும் கவரும்  

பார்வையாளர்களின் மதிப்பீடு..........

தூங்காவனம்-படம் எப்படியிருக்கு..?




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....

இங்கே வாசித்தீர்களா.....?


வேதாளம்-சினிமா விமர்சனம் 
தல அஜித்தின் வேதாளம்....முழுக்க முழுக்க வணிகரீதியில் எடுக்கப்பட்ட  டோலிவுட் சமாச்சாரங்களுடன் ஒரு  கோலிவுட் மசாலா பொழுதுபோக்கு படம்  மேலும்






இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1