google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: January 2015

Friday, January 30, 2015

இசை-சினிமா விமர்சனம்

எஸ்.ஜே.சூர்யா எழுதி,இசையமைத்து இயக்கிய த்திரிலர் திரைப்படமான இசை கிட்டத்தட்ட திரையிசைக்கலைஞர்கள்  இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான் இருவர்களையும் பற்றி கொஞ்சம் பேசினாலும்  அதற்கும் மேல.....

(குறிப்பு-எனது விமர்சனம் உங்களது  படம் பார்க்கும் நோக்கத்திற்கு எவ்விதத்திலும் இடையூறாக இருக்காது)
 

இசை படத்தின் கதையாக......

பழங்காலத்து இசைக்கருவிகள் மூலம் இசையமைத்து திரையுலகில் மிகப்பெரிய இடத்தையும் மரியாதையையும் பெற்று விளங்கிய இசைமேதை வெற்றிச்செல்வனிடம்  (சத்யராஜ்)  உதவியாளராகப் பணியாற்றும் ஏ.கே.ஷிவா (எஸ்.ஜே.சூர்யா) வுக்கு ஒரு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது 

வெற்றிச்செல்வன் ஆசிர்வாதத்துடன் பிரிந்து சென்று தனியாக இசையமைக்கும் ஏ.கே.ஷிவா......
 
கணணி மற்றும் மென்பொருள் உதவியுடன் புதிய உத்திகளை உபயோகப்படுத்தி புத்துணர்ச்சி ஊட்டும் நவீன இசையால் இசைப்பிரியர்களின் இதயங்களை வருடி இசைக்கடல் என்று மிகப் பெரிய இசையமைப்பாளர் ஆகிறார்

ஒரு கட்டத்தில் தன் குரு  வெற்றிச்செல்வனையே பின்னுக்கு தள்ளி அவரை புகழாலும் பணத்தாலும் மிஞ்சி விஞ்சிவிடுகிறார் 

சொந்தமாக ஒலிப்பதிவு கூடம் அமைத்து திரையுலகின் நம்பர் 1 இசையமைப்பாளரான ஏ.கே.ஷிவா இயற்கை இசை ஆய்வுக்கு சென்ற இடத்தில் காதலித்த ஜென்னி (சுலக்னா பனிஹிராகி) யை மணந்து கொள்கிறார் 

வெற்றிக்களிப்பில் மிதக்கும் ஏ.கே.ஷிவாவால் பாதிப்படைந்த வெற்றிச்செல்வன் தான்  இழந்த புகழை மீட்டெடுக்க பல சதித்திட்டங்களுடன் தன் சுயரூபத்தை காட்டி வில்லனாக அவதாரம் எடுக்கிறார்

 வெற்றிச்செல்வனின் சதி திட்ட  தாக்குதலிருந்து ஏ.கே.ஷிவா தப்பித்தாரா....? தன் செல்வாக்கை நிலையாக தக்கவைத்துக் கொண்டாரா...? என்பதை ஒரு ட்விஸ்ட்வுடன் இயக்குனர் படம்காட்டுவதே  இசை படத்தின் த்திரிலிங் கதை.....


இசை படத்தில்...... இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அவரது முந்தையப் படங்கள் போன்று காதல் காட்சிகளுக்கும் இப்படத்தில் அதீத முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ஆனாலும் திரைக்கதையில் கிடு கிடு தள்ளாட்டம் அப்பட்டமாக தெரிகிறது

நடிகராக எஸ்.ஜே.சூர்யா....46 > 20 வயது இளைஞர் தோற்றத்தில்  அவரது ட்ரேட் மார்க் பாணி வசன உச்சரிப்பில் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார்
இசையமைப்பாளராக எஸ்.ஜே.சூர்யா இசையமைத்த .டாப் 10-ல் முதலிடத்தை பிடித்த இசை வீசி....... பாடல் மட்டுமின்றி அனைத்துப் பாடல்களும் இசைப்பிரியர்களையும் பார்வையாளர்களையும் இதயத்தை வருடுகிறது  BGM....சூப்பர் இனி இயக்குனர் என்பதைவிட இசையமைப்பாளராக அவர் உலா வரலாம் 

                                        thanks-YouTube by SJ SuryahSJ Suryah

சௌந்தராஜன்......ஒளிப்பதிவில் கொடைக்கானல் மலைசூழ் கிராமத்து காட்சிகள் மட்டுமின்றி பாடல் காட்சிகளும் அருமையாக....
 3 மணி நேர நீள் படத்தை பார்க்கும் அயர்ச்சி இல்லாமல் செய்கிறது  

ஒரிசா தொலைகாட்சி நடிகை   சுலக்னா பனிஹிராகி காதல் கவர்ச்சி நடிப்பில் ராய் லட்சுமி வரிசையில்.....
 அதுக்கும் மேலே....உணர்வு  பிரதிபலிக்கவும் நடித்துள்ளார்

சத்யராஜ்......பெருந்தன்மையும் பொறாமையும் முகத்தில் பிரதிபலிக்க இரு வேறுபட்ட நடிப்பில் இசைக்கலைஞராக நடிப்பில் கலக்குகிறார் 

மற்றும் சத்தியராஜ் வேலைக்காரராக கஞ்சா கருப்பு,பாதிரியாராக தம்பி ராமையாவும்  சிறப்பாக நடித்துள்ளனர் 



இசை கிட்டத்தட்ட திரையிசைக்கலைஞர்கள்  இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான் இருவர்களையும் பற்றி கொஞ்சம் பேசினாலும்  அதற்கும் மேல.....

காதுக்கினிய இசைப்பாடல்களையும் கண்களுக்கு குளுமையான கவர்சிக் காதலையும் படம் காட்டி போட்ட துட்டை வசூல் செய்யலாம் 

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........
தயவு செய்து படம் பார்த்தவர்கள் மட்டுமே வாக்களிக்கவும் 



எஸ்.ஜே.சூர்யாவின் இசை
                                படம் எப்படியிருக்கு...? 




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......
http://kavithaivaanam.blogspot.in/2015/01/isai-movie-tweets.htm

இசை-
ட்விட்டர்களின் சினிமா விமர்சனம்


Thursday, January 29, 2015

பேபி (இந்தி)-சினிமா விமர்சனம்

நீரஜ் பாண்டேயின் அற்புதமான இயக்கத்தில் அக்ஷய் குமாரின் அதிரடி நடிப்பில் இதுவரை பாலிவுட் கண்டிராத அதிரடி உளவு த்திரிலர் திரைப்படம்....பேபி 
ஆனாலும் பாகிஸ்தானில் திரையிட தடைசெய்யப்பட்டுள்ளது

பயங்கரவாதிகளிடமிருந்து இந்திய மக்களையும் நாட்டையும்  காக்க பெரோஸ் (டேனி டென்சோங்பா) என்ற  இந்திய பாதுகாப்பு படை அதிகாரி தலைமையில்  நடக்கும்  ரகசிய நடவடிக்கைகள் (பேபி) பற்றிய கற்பனை கதையே பேபி படத்தின் கதைக்கரு

துருக்கியில் தன் சக இந்திய பாதுகாப்பு அதிகாரியை காப்பாற்றும் போராட்டத்தில் அஜய் ராஜ்புத் (அக்ஷய் குமார்) இந்தியாவில் டெல்லியில் உள்ள ஒரு மாலை (Mall) சீர்குலைக்கும் பயங்கரவாதிகளின் சதி திட்டத்தை கண்டுபிடிக்கிறார் 

அஜய் ராஜ்புத் தன் நண்பர் ஜெய் (ரானா தகுபதி) யுடன்  டெல்லி மாலை (Mall) யும் பொதுமக்களையும்  காக்கும் போராட்டத்தில் பயங்கரவாதிகளின் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் திட்டத்தையும்...........

பாக்கிஸ்தான்-இந்தியா எல்லையில் தொல்லைகள் செய்யும் பயங்கரவாத சூத்திரதாரி மவுலானா (ரஸீத் நாஸ்) என்பவன் சிறையிலிருக்கும் பயங்கரவாதி பிலால் (கே.கே.மேனன்) என்பவனை தப்பிக்கச் செய்யும் முயற்சியையும்..........

தடுக்க முயலும் போது நடக்கும்  ஒரு குண்டுவெடிப்பில் அஜய் ராஜ்புத்-ஜெய் தவிர அனைவரும் இறந்துவிடுகிறார்கள் 

அதுக்கும் மேல........

நேபாலில் இன்னொரு பயங்கரவாதி வாசிம் கான் (சுஷந்த் சிங்) என்பவனின் பயங்கர சதித்திட்டத்தை முறியடிக்க அஜய் ராஜ்புத் தன் சக அதிகாரி பிரியா (டாப்சி பானு) வுடன் கணவன்-மனைவியாக நாடகமாடி முயற்சிக்கிறார்கள் 

பேபியின் கடைசி நடவடிக்கையாக.......
பேபியின் தலைமை அதிகாரி பெரோஸ் அஜய்-ஜெய் ஆகியோரை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப...
அவர்கள்  அங்கே மறைந்திருக்கும் பயங்கரவாதி பிலாலை கண்டுபிடித்து கொல்கிறார்கள் 

அப்படியே விமானநிலையத்தில் சவுதி போலீஸிடமிருந்து  தப்பித்து பயங்கரவாதி மவுலானாவையும் தந்திரமாக இந்தியாவுக்கு உயிருடன் கடத்தி வருகிறார்கள்
முடிவு.........பாரத் மாதா கி ஜெ!!!

இயக்குனர் நீரஜ் பாண்டே......இப்படத்தின்  காட்சிப்படுத்தலில்   ஒரு சீரான  தெளிவு  இல்லாமல் இருந்தாலும் பாகிஸ்தான் பயங்கரவாத முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரிப்பதிலிருந்து தவறவில்லை அதனால்தான் பாகிஸ்தானில் இப்படம் திரையிடப்படவில்லை

அக்ஷய் குமார்......அவரது வழக்கமான குரங்கு காமெடி சேட்டைகளை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு ரொம்ப சீரியஸாக நடித்துள்ளார்
 
இப்படம் 5 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தாலும் வலைதளங்களில் இப்படத்தை ஏனோ தானோ என்றே எழுதுகின்றன

நம்ம தமிழ் சினிமாவில் இதுபோன்ற கேப்டன் விஜயகாந்த் படங்களை நாம் எப்போதோ பார்த்தாகிவிட்டது எல்லாத் துறைகளிலும் முன்னணியில் இருக்கும் தமிழன் சினிமாவில் மட்டும் பின்னடைவானா....? தமிழனடா! கேப்டன்டா!!

 

Wednesday, January 28, 2015

என்னை அறிந்தால்...சினிமா (முன்) விமர்சனம்

கொஞ்சம் குடும்பம்-காதல் என்றும் நிறைய அதிரடி த்திரிலர் காட்சிகளுடன் கலக்கலாக   படம் காட்டும் என்னை அறிந்தால்.... அஜித்தின் வெற்றிப்பட வரிசையில் மற்றுமொரு வெற்றிக் கிரீடம்

சமுதாயத்தில் நல்லவனான வாழும் நல்லவர் ஒருவர் வாழ்வில் பல மோசமான நிகழ்வுகளை சந்தித்து ... 
ஒரு மெல்லிய கோடு இந்தப்பக்கம் நல்லவன் அந்தப்பக்கம் கெட்டவன் எந்தப்பக்கம் போவது? என்று குழப்பத்தில் எடுக்கும் தீர்மானமே படத்தின் கரு......

என்னை அறிந்தால்...படத்தின் கதையாக........

சக்திவாய்ந்த நல்ல போலிஸ் அதிகாரியான சத்ய தேவ் (அஜித்குமார்) தன் மனைவியும் நடனக்கலைஞருமான ஹெமானிகா (திரிஷா) வுடனும் செல்ல மகள் (பேபி அனிகா)வுடனும் சந்தோசமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது...
அவரது மனைவியும் குழந்தையும் ஒரு கொடூர குற்றவாளி கைதியால்  கொலை செய்யப்படுகிறார்கள்

குடும்பத்தை பிரிந்த கவலையில் நல்லவரான சத்ய தேவ் மிகவும் கெட்டவனாக மாறுகிறார் 

இதற்கிடையில் கல்லூரி மாணவி தேன்மொழி (அனுஷ்கா) சத்ய தேவின் நல்ல மனதையும் அவருக்கு வாழ்வில் ஏற்பட்ட இழப்பையும் அறிந்து அவர் மீது காதலில் விழுந்து அவரையே மணந்து கொள்ள அடம்பிடிக்கிறாள் 

சத்ய தேவ் தன் மனைவி-மகளை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்கினாரா...?  சத்ய தேவ்-தேன்மொழி காதல் என்னவானது...? என்பதை அறிந்துகொள்ள வெள்ளித்திரையில் கண்டுகளியுங்கள் 

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்....என்னை அறிந்தால் என்று படத்துக்கு பெயர் வைத்ததிலே படத்தின் கதைக்கருவையும் படத்தின் முன்னோட்டத்தில் தல அஜித் பேசும் பன்ச் வசனத்தில் படத்தின் டெம்போவையும் ஊட்டி அஜித் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் தள்ளிவிட்டார்...அது வீண் போகவில்லை 

தல அஜித்.......நான்கு வேறுபட்ட கெட்டப்களில் தோன்றி அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் நவரச நடிப்பால் கவர்கிறார் நடுங்க வைக்கும் அதிரடி சண்டைக்காட்சிகளில் பார்வையாளர்களை பயம்காட்டுகிறார் 

திரிஷா......குடும்பப்பாங்கான தோற்றத்தில் அஜித் மனைவியாக நடிக்க அனுஷ்கா....இளம் கல்லூரி மாணவியாக கவர்ச்சியில் கலக்குகிறார் 

அருண் விஜய்.........யதார்த்தமான வில்லனாக வித்தயாசமாக நடித்துள்ளார் விவேக்.....ரிவால்வார் ரிச்சர்ட் வேடத்தில் வந்து அரங்கம் அதிர சிரிக்கவைக்கிறார் 

பார்வதி நாயர்,தலைவாசல் விஜய்,டேனியல் பாலாஜி....இன்னும் பலர் நடித்துள்ளனர் 

ஹாரிஸ் ஜெயராஜ்..... சண்டைக்காட்சிகளில் பின்னணி இசை கர்ஜிக்கிறது பாடல்களில் அதாரு அதாரு ஆட்டம் போடவைக்கிறது தாமரையின் வார்த்தைகளில் மழை வரப்போகுதே.....ஏன் என்னை....பாடல்கள் தேனாமிர்தமாக காதில் இனிக்கிறது 

ஆஸ்திரேலிய ஒளிப்பதிவாளர் டான் மக்கார்தர் கேமரா கைவண்ணத்தில் பாடல்காட்சிகள் கண்ணைக் கவர்கின்றன சண்டைக்காட்சிகள் துள்ளவைக்கின்றன 

ஆக மொத்தத்தில்...........
தல அஜித்தின் நான்கு வேறுபட்ட தோற்றத்திலும் நடிப்பிலும் என்னை அறிந்தால்... இதுவரை கோலிவுட் கண்டிராத வித்தியாசமான பழிவாங்கும் த்திரிலர் திரைப்படம் 

குறிப்பு-இது பிப்ரவரி 5-ல் வெளிவர இருக்கும் அஜித்தின் என்னை அறிந்தால்...திரைப்படத்தின் முன்னோட்ட காணொளியை வைத்து எழுதப்பட்ட சினிமா முன்  விமர்சனம் 

                                     thanks-YouTube-by Sony Music India  

உங்கள் பார்வையில்.........

என்னை அறிந்தால்...
 படம் எப்படியிருக்கும்......?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....



Saturday, January 24, 2015

தொட்டால் தொடரும்-சினிமா விமர்சனம்

முன்பாதி காதல்,குடும்ப சென்டிமென்ட் என்றும் பின் பாதி மாஃபியா கூலிப்படை கொலைக்கும்பல் பற்றியும் பிரபல பிளாக்கரும் சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர்  படம் காட்டும் வெற்றி காதல் திகில் திரைப்படமே.... தொட்டால் தொடரும் 

பணத்துக்காக படுபயங்கரமான கொலைகள் செய்து அதை விபத்து போல் ஜோடனை செய்யும் ஒரு கூலிப்படை மாஃபியா  கும்பலிடம் மாட்டிக்கொண்ட ஒர் இளம் காதல் ஜோடி பற்றிய கதையே......... தொட்டால் தொடரும்

அமைச்சர் துரைச்சாமி என்பவர்  காரில் போகும் போது சாலை விபத்தில் மரணம் அடைவது போல் துவங்கும் தொட்டால் தொடரும் படத்தின் கதையாக........

ID பேங்கிங் சர்வீஸில் போன் காலராக வேலை பார்க்கும் மது (அருந்ததி) வுக்கும் ஒரு நிறுவனத்தில் HR ஆக இருக்கும் சிவா (தமன் குமார்) வுக்கும் செல்போனிலேயே பேச்சு மோதலுடன் முகமறியா காதல் தொடர்கிறது.....

மதுவின் கவனக்குறைவால் அவளது தம்பிக்கு சாலை விபத்து ஏற்பட்டு மருத்துவச் செலவுக்கு ரூ.30 லட்சம் தேவைப்பட.......
பணம் புரட்ட முடியாத மது தான் இறந்தால் கிடைக்கும் காப்பீடு பணம் ரூ.30 லட்சத்துக்காக நிகில் (வின்சென்ட் அசோகன்) என்ற கொலைகாரன்  தலைமையில் உள்ள ஒரு கூலிப்படையினரை தொடர்புகொண்டு தன்னை விபத்தில் இறந்தது போல் கொலை செய்ய ஏற்பாடு செய்கிறாள் 

சிவாவும்  மதுவுக்கு தெரியாமல் தன் பேஸ்புக் நண்பர்கள் மூலம் ரூ.30 லட்சத்தை திரட்டி மதுவிடம் ஒப்படைக்கும் போது ...........
மது காப்பீடுக்காக செய்துள்ள தவறை அறிந்து அவளை கொலை செய்ய தொடரும் கொலைகாரன் நிகிலிடமிருந்து காப்பாற்ற துடிக்கிறான் 

இதற்கிடையில்.....

அமைச்சர் துரைச்சாமியின் மரணம் விபத்து இல்லை என்றும் அது விபத்து போல் ஜோடிக்கப்பட்ட கூலிப்படையினரின் செயல் என்பதையும் அறிந்து கொண்ட அமைச்சரின் மகனும் அவரது ஆட்களும் நிகிலை தேடி தொடர்கிறார்கள் 

மதுவை விபத்து போல் ஜோடனை செய்து கொலை செய்ய தொடரும் நிகிலிடமிருந்து சிவா அவளை எப்படி காப்பாற்றுகிறான்.../ என்பதே......

படத்தின் சிறப்பான காட்சிகளாக............
- அமைச்சர் துரைசாமியின் சாலை விபத்து 
-சமுக அக்கறையுடன் காட்சிப் படுத்தப்பட்ட பாஸ் பாஸ் பாடல் 
-சிதம்பரத்தில் ஓட்டல் மாடியில் மதுவை கொலை செய்ய பவர் லைனை கட் செய்து நிகில் முயற்சிக்கும் புதுமையான காட்சி 
-தாயத்துக்குள் wireless device  காட்சி
-படத்தில் வரும் நிறைய ஒன் லைன் வசனங்கள் ...
உ.ம்.."சரக்கு அடிச்சவன் சம்சாரத்துக்கிட்ட இருந்து தப்பிச்சுக்கலாம் ஆனால் சைட் அடிச்சவன் பிரண்டுகிட்ட இருந்து தப்பிக்க முடியாது"
-கிளைமாக்ஸ் காட்சியில் நடக்கும் சேஸிங் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் பார்ப்பதற்கு நன்று 

இன்னும் இதுபோன்ற நிறைய காட்சிகள் தொட்டால் தொடரும் படத்துக்கு புதுமையூட்டுகின்றன 

அறிமுக இயக்குனர் கேபிள் சங்கர்.....புது முயற்சியாக விபத்து போல் ஜோடனை செய்து கொலை செய்யும்   மாஃபியா கூலிப்படை கும்பல் பற்றிய கதையுடன் காதலும் சென்டிமெண்டும் கலந்து தொட்டால் தொடரும் என்று திரைப்படமாக கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் அவரும் டாக்டராக இரண்டு காட்சிகளில் நடித்துள்ளார்

அங்கே இங்கே என்று திரைக்கதையில் சில ஓட்டைகள் இருந்து படம் பார்க்கும் போது நம் கண்களை இருள் கட்டினாலும் மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் தடுமாறினாலும் இயக்குனர் காட்சிப்படுத்தியுள்ள சில புதுமையான காட்சிகளால் அவைகள் பெரிதாக தெரியவில்லை 

ஆனாலும் முன் பாதியில்  நாடகத்தன்மையை தரும்  காதலையும் சென்டிமென்ட்டையும் கொஞ்சம் குறைத்து வேகத்தை கூட்டியிருக்கலாம் 


தமன் குமார் முகத்தில் காதலியை காப்பாற்ற வேண்டிய வேகம் பிரதிபலிக்க நன்றாக நடித்துள்ளார் அருந்ததி........நடிப்பில் காதலும் பயமும்  கலந்துள்ளது வின்சென்ட் அசோகன்...நடிப்பில் யதார்த்தமான வில்லத்தனம் தெரிகிறது

ஆக மொத்தத்தில்..........
அறிமுக இயக்குனர் கேபிள் சங்கரின் புதுமையான கதைக்கருவுக்கும் சில சமுக விழிப்புணர்வு செய்திக்காகவும் அனைவரும் பார்க்கவேண்டிய படம் .......தொட்டால் தொடரும்



Sunday, January 18, 2015

டார்லிங்-சினிமா விமர்சனம்














சமீப காலங்களில் கோலிவுட் தமிழ்படங்களுக்கு பெருமை சேர்ப்பது திகில் நிறைந்த காமெடி திரைப்படங்கள் வரிசையில் கல்லா கட்டி களை கட்டும்....


 ஷாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்-நிக்கி கல்ராணி நடித்துள்ள தெலுங்கு பிரேம கதா சித்ரம் ரீ மேக் படமான  ..........டார்லிங் 

ஒரு கடலோர பண்ணை வீட்டில் ஊரைவிட்டு ஓடிவந்த நல்ல காதலர்கள் இருவர் தற்கொலை செய்து கொள்வதால் அந்த வீடு பேய் வீடு என்று அழைக்கப்படுவதாக துவங்கும் டார்லிங் படத்தின் கதையாக........

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன்  இருக்கும் கதிர் (ஜி.வி.பிரகாஷ்).......

 சினிமா இயக்குனர் ஆகமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன்  இருக்கும்  குமார் (பால சரவணன்)........

அக்கா வீட்டுகாரர் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன்  இருக்கும் நிஷா (நிக்கி கல்ராணி)..... 

என்ற மூவரும் தற்கொலைக்கு முன் காரில் ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள....

போகும் வழியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன்  இருக்கும் காரின் குறுக்கே விழும் அதிசயராஜ் (கருணாஸ்) வுடன் அந்த கடலோர பண்ணை பேய் வீட்டில் தங்குகிறார்கள்

உண்மையில் கதிரின் தற்கொலை முயற்சியை தடுக்கவே அவரை காதலிக்கும் நிஷாவும் அவரது நண்பர் குமாரும்  கதிருடன் பின்தொடர்கிறார்கள் என்பது ஒரு திருப்பமாக...........  
குமார் கதிரையும் நிஷாவையும் நெருங்கிப்பழக முயற்சி செய்யும் போது நிஷா உடம்பில் ஒரு ஆவி குடியேறி கதிர் நிஷாவை தொடும் போதெல்லாம் தொடவிடாமல் கொலைவெறியுடன் தடுக்கிறது

கதிர்-குமார்-அதிசயராஜ் மூவரும் நிஷா மீது உள்ள ஆவியை விரட்ட கோஸ்ட் கோபால் வர்மா (நான் கடவுள் ராஜேந்திரன்) என்ற பேய்விரட்டியை அழைத்து முயற்சி செய்தும் முடியாமல்.....

கதிர் ஆவேசத்துடன் பேயிடம் வாக்குவாதம் செய்து அந்த ஆவியின் ஆவிக்கதையை பிளாஸ்-பேக் திருப்ப காட்சியாக.......

படம் ஆரம்பத்தில் ஊரை விட்டு ஓடி வந்த   நல்ல காதலர்கள் ஸ்ருதி-சிவா இருவரும் தஞ்சமடைந்த கடலோர பங்களாவீட்டில் அந்த ஊரைச் சேர்ந்த 5 பொறுக்கி வாலிபர்கள்  சிவாவின் கண்முன்னே ஸ்ருதியை பாலியல் வன்கொடுமை செய்து இருவரையும் கொலை செய்ததால்......

 
ஸ்ருதி ஆவி அந்த கடலோர பங்களாவிலேயே தங்கி அங்கே வரும் இளம் பெண்களுக்கு  பாதுகாப்பாக நம்ம அரசியல்வாதிகள் கூடவே இருக்கும் அல்லக்கைகள் போல இருக்கிறது

ஆவியின் கதையை அறிந்த கதிரும் அவனது நண்பர்களும் அந்த 5 பொறுக்கிகளையும் அந்த பங்களா வீட்டு வேலைக்காரன் உதவியுடன் கண்டுபிடித்து ஸ்ருதி ஆவியிடம் ஒப்படைத்து........

கதிரும் நண்பர்களும் நிஷாவுக்கு ஆவியிடமிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தார்களா..?   

நிஷா-கதிர் காதலில் இணைந்தார்களா...? என்பதை திரையரங்கில் காணுங்கள்

டார்லிங் படமும் யாமிருக்க பயமேன் படமும் பேய் திகில் காமெடி  படவரிசையில்  ஸ்ரிப்பூட்டும் படமாக இருந்தாலும்.

 டார்லிங் படத்தில் வரும் ஆவியின் பிளாஸ் பேக் கதை கூட்டு பாலியல் வன்கொடுமையைக் காட்டி சிரிக்க வைத்த பார்வையாளர்களை குற்றவுணர்வுடன் சிந்திக்க வைக்கிறது



காதல் தோல்வியில் சோகத் தாடியுடன் வரும்  ஜி.வி.பிரகாஷ் முகத்தில் உணர்வுப் பிரதிபலிப்புகள் காணவில்லை (போகப் போக ஜொலிப்பார் என்று நம்புவோமாக)

அதேநேரம் நிக்கி கல்ராணி அப்பாவி-ஆவி என்று இரு வேறுபட்ட உணர்வுகளை பிரதிபலிக்கிறார்

பேஸ்புக் அபிமானியாக பாலசரவணனும் வடிவேல் கெட்டப்பில் கருணாஸ்ம் படத்தின் காமெடி டோன் குறையாமல் கலக்குகிறார்கள்  

நான்கடவுள் ராஜேந்திரன்........
கொஞ்ச நேரமே கோஸ்ட் கோபால் வர்மாவாக வந்தாலும் ஐயம் வெயிடிங்....என்னம்மா இப்படி பண்ணுறீங்களே...போன்ற பஞ்ச வசனங்களால் காமெடிப்  பட்டாசை கொளுத்திப் போடுகிறார்   .  

ஆக மொத்தத்தில்..........

அறிமுக இயக்குனர் ஷாம் ஆண்டன் இயக்கத்தில் அரங்கம் அதிர பார்வையாளர்களை சிரிக்கவைத்து படைக்கும் இனிப்பு பொங்கல் விருந்து.... டார்லிங் 


  பார்வையாளர்கள் மதிப்பீடு..............









  டார்லிங்-படம் எப்படி இருக்கு..?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........



Saturday, January 17, 2015

ஆம்பள-சினிமா விமர்சனம்



பழைய பித்தளை,அலுமினிய பாத்திரங்களுக்கு முலாம் பூசுவது போல் 90-களில் வந்த பழைய குப்பை கதைகளை தூசு தட்டி புதுசு போல விற்பனை செய்யும் சுந்தர் சி.....
ஆம்பள  படத்தில் அவரது பாச்சா பலித்ததா? என்பதை....

அரசியல்வாதிகளிடம் காசு வாங்கி கூட்டம் சேர்க்கும் புரோக்கராக விஷால் அறிமுகமாகும்   ஆம்பள படத்தின் கதையாக்........
 .
மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தின் பெரிய வீட்டுக்காரர் விஜயகுமாரை அவர்களது வேலைக்காரன் பசுபதி (பிரதீப் ரவாத்) கொலை செய்துவிட்டு பலியை அவரது மகன் ஆளவந்தான் (பிரபு) மீது போட்டுவிட.......

உண்மை தெரியாத பிரபுவின் மூன்று தங்கைகள் (ரம்யா,கிரண்,ஐஸ்வர்யா) ஆளவந்தானை புறக்கணித்து தனியாக வசதியாக தங்கள் கணவர்களை அடிமைகளாக்கி ஆணவமாக வாழ்கிறார்கள்

ஆளவந்தானுக்கு மூன்று மகன்கள் (விஷால்,வைபவ்,சதிஸ்) அவரது தங்கைகளுக்கும் தலா மூன்று மகள்கள் ( ஹன்ஷிகா,மதுரிமா,மாதவி லதா)

ஆளவந்தானின் மகன்கள் தந்திரமாக தங்களது அத்தைகளை மயக்கி அத்தை மகள்களை லவ்வ்வ்வுட்டி  பிரிந்த குடும்பத்தை இணைக்க முயலுகிறார்கள்

அரசியல் புரோக்கர் சரவணன் (விஷால் ) தன் அத்தை பெரிய பொண்ணு (ரம்யா)வை தேர்தலில் நிற்கும் வேலைக்காரன் பகவதியை எதிர்த்து போட்டியிட வைத்து....

 தன் நண்பன் போலிஸ் சந்தானத்தின் உதவியால்  பகவதியை தோற்க்கடிப்பதையும்........

விஷால்  ஆம்பள மாரி பசுபதிக்கு இரண்டு  அடிபோட்டு கொலையை ஒத்துக்கொள்ள வைப்பதையும்........

துட்டு கொடுத்து திரையரங்கில் போய் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்

படத்தின் சிரிப்பூட்டும் காட்சிகளாக......
-போலிஸ் சந்தானம் உயர் அதிகாரி மனோபாலாவின் பின்புறத்தில் சுட்டுவிட்டு வேலை சஸ்பென்ட் ஆவது 
-விஷால் தம்பிகளுடன் கோயில் திருவிழாவில் அத்தை மகள்களை கடத்துவதாக நினைத்து அத்தைகளை கடத்துவது   
-சந்தானம் RDX ராஜசேகராக வந்து பகவதியின் தேர்தல் பணம் வரும் லாரியை கடத்துவதும் விஷால் கவரில் ரம்யா படத்தை மாற்றி வைப்பதும் 

இப்படி சிரிக்க வைக்கும் காட்சிகள் சில இருந்தாலும் .......
கிரண்-சதிஸ் நடித்துள்ள வக்கிர காட்சிகளை இயக்குனர் சுந்தர் சி தவிர்த்திருக்கலாம் 
  இயக்குனர் சுந்தர்.சி.....இந்த பழைய பார்முலா கதையை சந்தானம் காமெடியை நம்பியும் சண்டை-டூயட் காட்சிகளுடன் முழுக்க முழுக்க தெலுங்கு காரமசாலா கலவையாக படம் காட்டுகிறார்
ஹரி என்ற புலியைப் பார்த்து முதுகில் சூடு போட்டுக்கொண்ட சுந்தர் சி பூனை


விஷால்.......என்னத்தச் சொல்றது? அடிக்கிறாரு....ஆடுறாரு..... பாடுறாரு.....  நடிக்கிறாரா? என்பது தெரியவில்லை

ஹன்ஷிகா...... பார்வையாளர்களை ஜொள்ளு விடவைக்கும் அம்மணி இந்தப்படத்தில் ஆம்பள விஷாலை ஜொள்ளுவிடுவது மாற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

சந்தானம்........RDX ராஜசேகர் என்ற போலீஸாக படத்தின் ஆரம்பத்திலும் கடைசியிலும் வந்து சிரிக்க வைக்க முயலுகிறார் சிலர் சிரிப்பார் சிலர் சிரித்துக்கொண்டே அழுவார்

இன்னும் ஒரு நடிகர் பட்டாளமே நடிக்க வந்தார்கள்....நடிப்பது போல நடித்தார்கள்

ஆக மொத்தத்தில்........
சுந்தர் சி யின் இயக்கத்தில் விஷால்-ஹன்ஷிகா நடித்துள்ள ஆம்பள திரைப்படம் எல்லா வயதினருக்கும் ஏற்ற தமிழ் பேசும் தெலுங்கு மசாலா சமத்துவ காமெடி திரைப்படம் என்று எழுத எனக்கும் ஆசைதான் ...

ஆனால் 


 சரி....இதுவரை படம் பார்த்தவர்கள் 
என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போமா?

ஆம்பள-படம் எப்படி இருக்கு...?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........



Friday, January 16, 2015

ஐ-ட்விட்டர்கள் விமர்சனம்

ஷங்கரின் ஐ படத்திற்கு வலைத்தளங்கள் அனைத்தும் பாராட்டி விமர்சனங்கள் எழுதினாலும் ட்விட்டர் உலகத்தில் இரு வித விமர்சனங்கள் கீச்சப்படுகின்றன........

மகாநடிகன்@DrmskSathish 
ஷங்கர் கிட்ட மக்கள் எதிர்பார்த்தது "அதுக்கும் மேல" போல..., #ஐ#

மகாநடிகன்@DrmskSathish 
"ஐ" ல விக்ரமோட லோக்கல் லாங்வேஜ் க்கு ஜனகராஜ் தான் இன்ஸ்பிரேசன் ன்னு நெனைக்கறேன்.."! #அய்யோ..மோடம்..##

புதுவை குடிமகன் @iamkudimagan 
இந்த படம் ஷூட் ஆரம்பிக்கும்போது பவர்ஸ்டார் பேமஸா இருந்தாரு இப்ப இல்ல. அவர் வர சீன தவிர்த்திருக்கலாம்! #ஐ

கொரியன்@mokkasaami 
இப்படத்தில் பறவைகள் மற்றும் விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை..விக்ரம் மட்டுமே.! #ஐ

Kathir @AmKathir 
என்னம்மா இப்படி பன்றிங்களேம்மா ?? சுதந்திரம் வாங்குறது முன்னாடி வந்த படத்தோட காப்பியாமா ஐ படம் ? 


சிவாஜி-ல அங்கவை சங்கவை, ரெம்ப பொங்க வச்சிடிங்க போலிருக்குன்னு கருப்பை கேலி செய்த ஷங்கர் ஐ-படத்தில உருவத்தை கிண்டல் பண்றாரு#பபி Rajagopal SM

Ananda Vikatan@AnandaVikatan 
''பொதுவா ஷங்கர் படங்கள்ல சோஷியல் மெஸேஜ் இருக்கும். இதுல அப்படி எதுவுமே இல்லை.

ஆந்தைகண்ணன்@cinemascopetaml 
#ஐ கதையை யோசிப்பதே கடினம் அதை காட்சி படுத்திய ஷங்கர் திறமையை பாராட்டியே ஆகனும்

இன்டர்நெட் வீரன்↺ @whoisarun 
தியேட்டர் குள்ள போற வரைக்கும் 'ஐ' சங்கர் படம்னு சொன்னவங்க.. வெள்ளவரப்ப அது விக்ரம் படம்னு சொல்றாங்க..

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
ஷங்கர் சறுக்கியது 1 உருவ கேலி 2 திருநங்கை வல்கரிசம் 3 சோசியல் மெசேஜில் இருந்து விலகி தனி நபர் பழி வாங்கும் கதையைக்கையில் எடுத்தது

குலோத்துங்கன்@kulothu 
படத்துக்கு முன்னாடி போட வேண்டிய விளம்பரங்களை படத்திலும் சேர்த்துவிட்டார் சங்கர்.. நல்ல வசூல் வேட்டை ஐடியா.. #ஐ

'சிப்பாய்'™ @itznukki1 
ஐ படத்துல விக்ரம் அன்னியன் அம்பி மாதிரியே பேசுறாப்ல ;;

குலோத்துங்கன்@kulothu 
அந்நியன் படத்தில் சொல்லாத 'கும்பிபாகங்களை' இந்த படத்தில் சொல்லிவிட்டார் சங்கர்.. அந்நியன் பார்ட்-2.. #ஐ
சங்கர் ஸார் ரசிகரா படத்துக்கு போயிட்டு விக்ரம் ரசிகரா திரும்பி வந்துருக்கேன்.....சுபி நாகராஜ் fb
நான் மெரசலாயிட்டேன்...மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்...செய்ற தொழில உசிர கொடுத்து செய்ற‌ நீ தான்யா அல்லாருக்கும் மேல டாப்பான நடிகன்....விக்கியுலகம் வெங்கட் fb
 G.சபரிநாதன் @G_Sabarinathan 
ஐ - எதிர்மறையான விமர்சனங்களை தாண்டி, வெற்றி பெற்ற ஷங்கர் படங்களின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் படம்.

சால்ட்&பெப்பர் தளபதி@thalabathe 
அடப்பாவமே மகாநதி ஷங்கர் டைரக்ட் பண்ண படம் மாதிரில்ல இருக்கு #ஐ

இரண்டாம்துக்ளக்@2amtughluq 
விக்ரம் ரஹ்மான் இல்லனா ஐ ஒன்னுமே இல்லை #ஒருவரின் ஐ பட கமெண்ட்ஸ் #ஷங்கர் ,தயாரிப்பாளர் ஏமி ஜாக்சன் ,கேமரா இதெல்லாம் விட்டுட்டார் போல

  SHANKAR@ShankarNaresh1 
இதுக்கு மேல படம் எடுக்கனும்னா முடியாதுடா சாமி. "ஐ" தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல் நல்லா இல்லனு சொல்றவங்க #கொஞ்சம் ஆபிஸ் ரும்ல வெயிட் பண்ணுங்க.

கருத்து கந்தன்© @karuthujay 
ஐ' படத்துல எமி விக்ரமோட ஐபோன எடுத்து போட்டோவ பாக்குது... அவ்ளோ பெரிய ஆளுங்கள போட்டுத்தள்ரவனுக்கு தன் ஐபோனுக்கு பாஸ்வேடு கூட போடத்தெர்ல-//

ansari masthan @ansari_masthan 
யாருக்கு அந்த மேக்கப் போட்டாலும் ஐ- படத்தில் நடித்து விடலாம் , அதற்கு அற்புதமான கலைஞன் விக்ரம் தேவையில்லை !

தேவ. பழனியப்பன் @urfrdDP 
திரு. ஷங்கரின் "ஐ" விமர்சனத்தில் அமரர் திரு. சுஜாதாவை குறிப்பிடாதவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் போல !!

- அ ல் டா ப் பு - @altaappu 
'ஐ' படம் நல்லாயில்லைன்னு சொன்னால், அவன் அஜித் ரசிகன், 'ஐ' படம் நல்லாயிருக்குன்னு சொன்னால், அவன் உண்மையான அஜித் ரசிகன் - டுவிட்டர் சமுதாயம்

ஸ்டாரன் @SaravananStalin 
சிவாஜியில் கருப்புநிறத்தை கேலி செய்த ஷங்கர் ஐ-யில் '9'எண்ணை அறைஎண்ணாக காட்டி, ஊரோரம் என பாடி அரவானிகளைகேலிப்படுத்தும் காட்சிகள் படுமட்டம்

ஃபீனிக்ஸ் तिरु@fanatic_twitt 
ஷங்கர் 'ஐ' படத்துல பொண்ணுங்களுக்கு நல்ல மெசேஜ் கொடுத்து இருக்கார்.பையன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, காதலிக்குனும் அப்படின்னு.

கருத்து கந்தன்©@karuthujay 
ஐ' ன்னு ஆரம்பிச்சு ஐ'யோன்னு படத்த பாத்து கடைசில ஐ'யய்யோன்னு சொல்லவெச்சுடுச்சு போல-///

உளவாளி@withkaran 
ஐ நல்லா இல்லைன்னா ஒன்னும் பிரச்சனை இல்லை.. இருக்கவே இருக்கு.. வாசன் ஐ கேர்..நாங்க இருக்கோம்..

சி.பி.செந்தில்குமார் @senthilcp 
ஏ ஆர் ரஹ்மான் லிங்கா போலவே ஐ யிலும் ஷங்கரை ஏமாற்றி விட்டார்.பாடல்கள் பிரமாதமாக சோபிக்கவில்லை.ஒளிப்பதிவும் லொக்கேசனும் கலக்கல்

V.ஸ்ரீதர் @Tamil_Typist 
ஐ படம் ரிலீஸ் சங்கர் பயப்பட வேண்டியது இணையத்தில இருக்கற விமர்சகர்களுக்கு தான் எத்தனை பேர் விமர்சனம் எழுதப்போறாங்களோ

#‎ஐ‬ படத்தை கண்டிப்பாக தியேட்டரில் பார்த்தால் மட்டுமே ரசிக்க முடியும். அதான் ஷங்கர் மேஜிக்.
குறை சொன்னவைங்க எல்லாம் இனிமேல் டிவி சீரியல் மட்டும் பாருங்க...................முத்துராமலிங்கம் சுப்பிரமணியம் fb


3 மணி நேரம் நீண்ண்ண்டு செல்லும் படத்தில் நிறங்களின் ஜாலமும், கொஞ்சம் சுவாரஸ்யமும் கலந்தேயிருக்கிறது….!
முக்கியமாக எந்திரன், சிவாஜியைவிட 'ஐ' எவ்வளவோ மேல்..!!.....புருஷோத்தமன் தங்கமயில் fb


இங்கே வாக்களித்தீர்களா.....?


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........

-படம் எப்படி இருக்கு?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............

-படத்தில் உங்களுக்கு பிடித்தவை எவை?
(ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களுக்கு வாக்களிக்கலாம்)




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..............


இங்கே வாசித்தீர்களா......?
  -சினிமா விமர்சனம் 



Thursday, January 15, 2015

ஐ-சினிமா விமர்சனம்



இங்கே விக்ரம்-சங்கர்-ஏ.ஆர்.ரகுமான்-பி.சி.ஸ்ரீராம்...போன்ற கலையுலக ஜாம்பவான்களின் ஐ திரைப்பட விமர்சனமும்  ஐ-படம் எப்படி இருக்கு? மற்றும் ஐ-படத்தில் உங்களுக்கு பிடித்தவை...? என்ற கருத்துக்கணிப்பும்

ஐ-திரைப்படம் நாம் இதற்கு முன்பு பார்த்த வழக்கமான காதல் பழிவாங்கும் கதையுள்ள படமே ஆயினும் நடிகர் விக்ரம் நடிப்பாலும் இயக்குனர் ஷங்கரின் திரைக்கதையாலும் சிறப்பு பெறுகிறது

ஒரு கல்யாண மண்டபத்திலிருந்து மணப்பெண்ணை முதுகு கூனிய ஒரு மாற்று திறனாளி கடத்தி செல்வதுபோல் துவங்கும் ஐ-படத்தின் கதையாக......

உடற்பயிற்சி கூடம் நடத்திக்கொண்டே மிஸ்டர் தமிழ்நாடு ஆக முயற்சி செய்யும் லிங்கேசன் (விக்ரம்) விளம்பர மாடல் அழகி தியா (எமி ஜாக்சன்) மீது அபிமானமாக இருக்கிறார்

 மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்துக்கான போட்டியில் ஏற்படும் மோதலில் பழைய மிஸ்டரையும் அவனது கூட்டாளிகளையும் அடித்து துவைத்து விரோதத்தை சம்பாதித்துக்கொள்ளும் லிங்கேசன் தான் நேசிக்கும் மாடல் அழகி தியாவுடன் மாடல் செய்யும் வாய்ப்பு....
தியாவின் குடும்ப டாக்டரும் லிங்கேசனின் ஜிம்மில் பழக்கமானவருமான சுரேஷ் கோபி மூலம்  கிடைக்கிறது

மாடல் உலகில் பிரபலமான ஜானின் (உபேன் படேல்)  பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட தியா மிஸ்டர் தமிழ்நாடு லிங்கேசனை.....
ஒரு அழகுகலை நிபுணர்  திருமங்கை  உதவியுடன் ஆண் மாடல் லீ(விக்ரம்) யாக மாற்றி  தன்னுடன் விளம்பரத்தில் நடிக்க சீனாவுக்கு அழைத்து செல்கிறார்

சீனாவில் தன்னை ஒருதலையாக காதலிக்கும் திருமங்கையை லீ அவமதிப்பதுடன் லீ-தியா இடையே காதல் வளர்கிறது  விளம்பர வாய்ப்பிழந்த ஜான் சீன ரவுடிகளை அனுப்பி லீயை கொள்ள முயற்சிக்கிறான் ஜான் மற்றும் திருமங்கையின் விரோதங்களையும் லீ  சம்பாதிக்கிறான்

லீ-தியா நடித்த i-பிரான்ட் வாசனைத் திரவியங்கள்,அழகுசாதனப் பொருட்கள்...போன்றவைகளில் நடித்த லீ அதன் தொழில் அதிபர் ராம்குமாரின் இன்னொரு தயாரிப்பான ICE குளிர்பானத்தில்  நச்சுப்பொருள் இருப்பதால் நடிக்க மறுப்பதுடன் பேட்டியும் அளித்து அவரது தொழில் நஷ்டமடைய காரணமாகி அவரது பகையையும் சம்பாதிக்கிறார்

இப்படி இவர்களது பகையை  சம்பாதித்துக்கொண்ட லீ ஒருநாள் தாக்கப்பட்டு டாக்டர் சுரேஷ் கோபியின் அலட்சியத்தால் உடல் உருவம் படிப்படியாக சீர் குலைந்து அகோரமான முதுகு கூனிய மாற்றுதிறனாளியாகிறார்

தன் அகோர நிலைக்கு காரணமான மேற்படி ஜிம்பாய்,மாடல் ஜான்,தொழில் அதிபர் ராம்குமார்,திருநங்கை,டாக்டர் சுரேஷ் கோபி ஆகியோர் தன் உடலில் செலுத்திய i -வைரஸ் கிருமிகளே காரணம்  என்பதை ஒரு வயதான நல்ல டாக்டர் மூலம் அறிந்த லிங்கேசன்....

 எதிரிகள்  ஒவ்வொருவரையும் தன்னைப் போன்று அகோர உருவம் கொண்டவர்களாக்கி எப்படி தண்டிக்கிறார் என்பதையும்............

மணக்கோலத்தில் லிங்கேசனால் கடத்தப்பட்ட தியா என்ன ஆனாள்..? என்பதையும் திரையில் காணுங்கள்

இயக்குனர் ஷங்கர் அவரது வழக்கமான அதேநேரம் வித்தியாசமும் பிரமாண்டமும் கலந்த பாடல்காட்சிகள் மூலம் மூன்று மணிநேர படமாக்கி பார்வையாளர்களை கிறங்கடித்து மயக்குகிறார் ஆனாலும்  நிறைய வில்லன்களை உருவாக்கியும் ஊகிக்கக்கூடிய திருப்பங்களாலும் ஐ-படத்தின்   விறுவிறுப்பை குறைத்து விட்டார்

இன்னும் ஐ படம் அந்நியன் படத்தின் சண்டைக் காட்சிகளையும் பாடல்களையும் நினைவுபடுத்துவதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்

விக்கிரம்........"ஐ" சங்கரின் படம் என்பது போய்  விக்ரமின் "ஐ"படம்  என்று அழைக்க தோன்றும் அளவுக்கு ஈடுபாட்டுடன் மூன்று வேறுபட்ட உடல் தோற்றத்துடன் நடித்துள்ளார்  

எமி ஜாக்சன்.......மாடல் அழகியாக கவர்சிக் காட்டி பாத்திரத்தின் தன்மையை பிரதிபலிக்கிறார் 

சந்தானம்........அவருக்கே உரிய ஒன்-லைனர் காமடியில் மட்டுமல்லாது நன்பேண்டா...என்று குணச்சித்திரத்திலும் கலக்குகிறார் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்....பந்தா ஆக்டராக வந்து கொஞ்ச நேரம் சிரிக்க வைக்கிறார்  மற்றபடி ராம்குமார்,உபேன் பட்டேல்,சுரேஷ் கோபி......நடித்துள்ளனர்

ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையைவிட பாடல்கள் படத்திற்கு மெருகூட்டுகின்றன பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் பாடல்காட்சிகள் மட்டுமின்றி சண்டைக்காட்சிகள்,சீனத்து இயற்க்கை காட்சிகள் கண்களை கவர்கின்றன

ஆக மொத்தத்தில்..............
ஷங்கரின் ஐ படத்தை விக்ரமின் ஐ படம் என்பதே பொருத்தம்



படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........

-படம் எப்படி இருக்கு?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி............

-படத்தில் உங்களுக்கு பிடித்தவை எவை?
(ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களுக்கு வாக்களிக்கலாம்)




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..............

இங்கே வாசித்தீர்களா...?

ஐ -ட்விட்டர்கள் விமர்சனம்  
சினிமாவை சீர்படுத்தும்   ட்விட்டர் போராளிகளின் 
நறுக் விமர்சனங்கள்

Tuesday, January 13, 2015

கமலின் உத்தம வில்லன் ட்ரைலர் எப்படியிருக்கு?


நடிகருக்கும் அப்பாற்பட்டு ஓர் ஓவியர்,தத்துவஞானி,சமுக ஆர்வலர்,நாத்திகர்,சிந்தனையாளர்...என்று பல்வேறு முகங்கள் கொண்டவர் கமலஹாசன்

 உத்தம வில்லன் திரைப்படத்தின் ட்ரைலர் (முன்னோட்டக் காணொளி) அவரது வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளை படம்காட்டி அவரது வாழ்க்கை சித்திரமாக அவரது கனவுகளின் பிரதிபலிப்பாக தெரிகிறது

காலம் சென்ற இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள உத்தம வில்லன் திரைப்படம் ஒரு சகாப்பத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



                                thanks-YouTube by Ulaganayagan Tube

உங்களின் பார்வையில்...........

கமலின் உத்தம வில்லன் ட்ரைலர் எப்படியிருக்கு?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........



Sunday, January 11, 2015

விகடன் விருதுகள் 2014-ஒரு பார்வை

இதுவரை நாம் கமலஹாசன்,விஜய்...போன்ற நட்சத்திர நடிகர்களை அழைத்து வந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அவர்கள் கையில் விருது என்ற பெயரில் ஒரு தகர டப்பாவைக் கொடுத்து  காசு பார்க்கும் தொலைகாட்சி ஊடகங்களை பார்த்திருக்கிறோம் 

இன்னும் சில பத்திரிகை ஊடகங்கள் அலைந்து திரிந்து கருத்துக்கணிப்பு நடத்தியதாக அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்று அவர்களுக்கு ஆசையூட்டி சினிமா ரசிகர்களிடையே பகை தீமூட்டி......

ஆனால்....

ஆனந்த விகடன் (14/01/2015)இதழில் விகடன் விருதுகள்  2014 என்று அனைத்து பொழுது போக்கு துறைகளிலும் சிறந்தவர்களை எவ்வித பாரபட்சமுமின்றி நியாயன்மாராக அடையாளம் காட்டியுள்ளது 

அவைகளில் சினிமா துறையில் விருதுகள் பெற்றவர்களைப் பற்றிய நமது வலைப்பதிவில் எழுதப்பட்ட கருத்துக்களை காணுங்கள்

சிறந்த படம்-சதுரங்க வேட்டை 

மீண்டும் ஒரு மணிவண்ணன் போல் இயக்குனர் வினோத்தின் லொல்லு நையாண்டி வசனங்களுடன்....மீண்டும் ஒரு சூதுகவ்வும் படம் போல் சமுதாய பித்தலாட்டங்களை கதைக்களமாகக் காட்சிப்படுத்தும் சினிமா....சதுரங்க வேட்டை மேலும் >>

சிறந்த இயக்குனர்-பா.இரஞ்சித் (படம்-மெட்ராஸ்)

இயக்குனர்  பா.இரஞ்சித்.....கொஞ்சமும் போலித்தனம் இல்லாமல் போலி அரசியலை அப்பட்டமான நிஜமாக 1990 காலகட்ட மெட்ராஸ் பின்னணியில் வெண்திரை சித்திரமாக வரைந்துள்ளார் மேலும்>>

சிறந்த நடிகர் -தனுஷ் (படம்-வேலையில்லா பட்டதாரி)
தனுஷ்...தனக்கே உரிய ஸ்டைலுடன் காமெடி-காதல்-அதிரடி காட்சிகளில் கலக்கலாக வருகிறார் கிளைமாக்க்ஸ் சண்டைக்காட்சியில் புருஸ் லீயை நினைக்க வைக்கிறார்  மேலும்>>


சிறந்த வில்லன்-பாபி சிம்ஹா (படம்-ஜிகர்தண்டா)

பாபி சிம்ஹாதான் படத்தின் ஹீரோ போன்று கலக்கலாக வருகிறார் சில நேரங்களில்  படு பயங்கரமும் சில நேரங்களில்   காமெடியுமாக கலக்குகிறார்  மேலும்>>

இன்னும் இதுபோல்.......
சிறந்த நடிகை-மாளவிகா நாயர்(படம்-குக்கூ)

சிறந்த புதுமுக இயக்குனர்-ராம் குமார் (படம்-முன்டாசுப்பட்டி)
சிறந்த இசையமைப்பாளர்-சந்தோஷ் நாராயணன் (படம்-குக்கூ,ஜிகர்தண்டா,மெட்ராஸ்))
சிறந்த ஒளிப்பதிவு-கேவ்மிக் யு ஆரி (ஜிகர்தாண்டா)
சிறந்த பாடலாசிரியர்-யுகபாரதி(குக்கூ)

இவர்களோடு இன்னும் சினிமாவின் பலதுறைகளில் விருதுகள் பெற்ற படைப்பாளிகள்,திறமைசாலிகள்  அனைவருக்கும் நமது பிளாக் வாழ்த்துகிறது 

அதேநேரம் திறமைக்கு மட்டுமே விருது என்று போலிகளை புறம்தள்ளிய வாரயிதழ் ஆனந்த விகடனையும் வாழ்த்துகிறது 

                                                                                 ...........................பரிதி.முத்துராசன்


Wednesday, January 07, 2015

பிகே(PK)இந்தி-சினிமா விமர்சனம்

அமீர் கான்-ராஜ்குமார் ஹிரானி கூட்டணியினரின் 3 இடியட்ஸ் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றி நகைச்சுவை பாலிவுட் திரைப்படம்.......பிகே

பிகே(PK) படத்தின் கதையாக......
மனித உருக் கொண்ட வேற்று கிரகத்து ஏலியன் (அமீர் கான்) பூமியில் உள்ள மனிதர்களையும் அவர்களது பழக்க வழக்கங்களையும் ஆய்வு செய்ய ஒரு விண்கலத்தில் ராஜஸ்தான் பாலைவனத்தில்  நிர்வானான நிலையில் வந்து இறங்க...
அவரிடமிருந்த விண்கலத்தின் தொலைதொடர்பு ரிமோட் கண்ட்ரோல் கழுத்துப்பட்டையை ஒரு திருடன் அபகரித்து ரயிலில் தப்பி ஓடுகிறான்

அடுத்த காட்சியாக பெல்ஜியம் புரூகேஸில்......
தொலைகாட்சி நிருபரான இந்திய இந்து இளைஞ்சி ஜக்கு (அனுஷ்கா ஷர்மா) ஒரு திரையரங்கு வாசலில் ஒரு பாக்கிஸ்தான் முஸ்லிம் இளைஞன் சஃர்பராஜ் (ஸ்ரீசாந்த் சிங் ராஜ்புத்) என்பவரை சந்தித்து காதல் கொள்ள.....
 ஜக்குவின் தந்தை தங்களது குடும்ப சாமியார் தபஸ்வி மகாராஜிடம் (சவுரப் சுக்லா) ஆலோசித்து அவர்களது திருமணத்தை  எதிர்க்கிறார்

ஆனாலும் ஒரு தவறான கடிதத்தால் அவர்கள் காதல் முறிந்து ஜக்கு இந்தியா திரும்பும் போது டெல்லியில் கடவுளை காணவில்லை என்ற துண்டு பிரசுரங்களுடன் ரயிலில் கடவுளைத் தேடும் ஏலியனை சந்திக்கிறாள்

ஏலியனை பின்தொடரும் ஜக்கு கோயில் உண்டியலில் திருடுவது,கோயில் சுவரில் உச்சா அடித்து போலிஸ் லாக்கப்பில் தூங்குவது போன்ற விசித்திர நடவடிக்கையால் அவனது கதையை கேட்கிறாள்.......

அவளிடம் ராஜஜ்தானில் ரிமோட் கன்ட்ரோலை பறிகொடுத்த ஏலியன் எப்படி டெல்லி வந்து பிகே (குடிகாரன்) ஆன கதையை சொல்கிறான்  

ஒருவரின் கைகளை தொடுதல் மூலம் அவரின் மொழி,உணர்வுகள்,பழக்கம்... அனைத்தும்  அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்த ஏலியன் அந்த ஊர் எல்லையில் ஒரு காரிலிருந்து ஆடைகளை திருடி அணிந்துக் கொண்டு அந்த மக்களோடு மக்களாக அலைகிறான்

அப்போது பைரோன் சிங் (சஞ்சய் தத்) இசைப்பாடகர் குழுவின் வாகனத்தில் ஏற்பட்ட விபத்தால் அவருடன் நண்பராக பழகுகிறான் அங்கே ஒரு விபச்சார பெண் உதவியால் அவளது கை தொடுதல் மூலம் போஜ்புரி மொழியை கற்றுக்கொண்டு நண்பர் பைரோன் சிங் தூண்டுதலால் ரிமோட் கன்ட்ரோலை தேடி டெல்லி வருகிறான்

அவரது விசித்திரமான நடவடிக்கையால் டெல்லி மக்களை அவரை பிகே (PEE KAY) என்று அழைத்து கடவுள்தான் அவரது காணாமல் போன ரிமோட்டை கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள்

முதலில் ஒரு இந்து கோவிலில் கடவுள் சிலையிடம் முறையிடும் பிகே பிறகு
ஒரு கிருத்துவ சர்ச்சில் இந்து பூஜை முறையுடன் தேங்காய் பழ தட்டுடன் நுழைய.....தொடர்ந்து முஸ்லீம் மசூதியில் ஒயின் புட்டிகளுடன் செல்ல....அனைவராலும் விரட்டி அடிக்கப்படும் பிகே......

சிவன் வேடமணிந்த ஒருவரை கடவுள் என்று துரத்தி  தபஸ்வி மகாராஜின் பிரச்சார போதனை கூடத்தில் நுழைந்து விடுகிறார் அங்கே அவரது ரிமோட் கன்ட்ரோலை கண்டு எடுக்க முயலும் போது தபஸ்வியின் ஆட்களால் விரட்டப்படுகிறார் 

பிகேயின் கதையை அறிந்த ஜக்கு அவளது தொலைகாட்சி சேனல் உரிமையாளர் உதவியுடன் தபஸ்வியிடமிருந்து பிகேவின் ரிமோட்டை மீட்க ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தி மீட்க உதவுகிறாள் பிகே தபஸ்வியின் கபட வேடத்தை அம்பலப்படுத்தி அவருக்கு பெரும் நஷ்டத்தை உண்டாக்குகிறான் 
ஜக்கு மீது ஒருவித ஒருதலைக் காதல் கொண்ட பிகே அவளது கடந்த கால காதல் முறிவை கண்டறிந்து மனம் வருந்துகிறான்

அதேநேரம் பிகேவின் நண்பர் பைரோன் சிங் தொலைக்காட்சியில் அந்த ரியாலிட்டி ஷோவை பார்த்துவிட்டு ரிமோட்டை திருடி தபஸ்வியிடம் விற்ற   ராஜஸ்தான் திருடனுடன் டெல்லிக்கு வருகிறார் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்து பிகே கண்முன்னே இருவரும் சாகிறார்கள் 

மீண்டும் தபஸ்வி ஒரு ரியாலிட்டி ஷோவில் பிகேவிடம் சவால்விட மூட நம்பிக்கையால் ஏற்படும் விபரிதங்களால் மனமுடைந்த பிகே ஜக்குவின்  காதல் முறிவுக்கு தபஸ்வியின் முஸ்லிம் பகை உணர்வு மட்டுமல்ல தவறான கடிதமும் காரணமாகும் என்றும்........

 சஃர்பராஜ் இன்னும் ஜக்குவை தேடி இந்தியாவில் அலைவதை உறுதி படுத்தி தபஸ்வியிடமிருந்து ரிமோட்டை மீட்டு தனது சொந்த கிரகத்திற்கு விண்கலத்தில் சில நினைவுப் பொருட்களுடன் பயணிக்கிறார் 

 பிகேவுடன்  தனது இழப்பை நினைவுபடுத்தி ஜக்குவும் PK என்று ஒரு நாவல் வெளியிடுகிறாள்

ஓராண்டுக்குப் பிறகு.......

 பிகே அவரது கிரகத்திலிருந்து பூமிக்கு சுற்றுலாவாக இங்குள்ள மக்களின் மூட நம்பிக்கைகளை எடுத்துச் சொல்லி ஒருவரை ஒரு விண்கலத்தில் அழைத்து வருவாது போல் பிகே திரைப்படம் நிறைவடைகிறது 

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி அவரது முந்தைய நகைச்சுவை படங்கள் 3 இடியட்ஸ்,முன்னாபாய் போன்று பிகேபடத்தில் யதார்த்தமான மத சம்பந்தப்பட்ட குத்தல்,நக்கல்,பகடிகளை  காட்சிகளாக படம்காட்டுகிறார் அதில் இந்து மத நம்பிக்கைகளை சிரிப்பூட்டுவது தூக்கலாக உள்ளது மற்றபடி போராட்டம் பண்ணும் அளவுக்கு அவதூறாக இல்லை 

பிகே படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அமீர் கான் தனது முகத்தில் வேற்று கிரக மனிதராக அப்பாவியான குழந்தைத்தன முக பாவனையை ஒரு சவாலாக பிரதிபலிக்கிறார் 

ஜக்கு ஜனனியாக நடித்துள்ள அனுஷ்கா ஷர்மா.....அமீர் கானுடன் தோளுக்கு தோள் கொடுத்து சிறப்பாக நடிக்க,பிகே நண்பராக கொஞ்ச நேரமே திரையில் வரும் சஞ்சய் தத் மனதில் இடம்பிடிக்கிறார் இந்து சாமியாராக வரும் சவுரப் சுக்லாவின் அலட்டல் நடிப்பு அட்டகாசம் 

ஆக மொத்தத்தில்.............
கடவுளைவிட கடவுள் பற்றிய மத மூட நம்பிக்கைகளை நகைப்பூட்டும் காமெடி படமான அமீர் கானின் பிகே (PK) இந்தி திரைப்படம்.....

மூட நம்பிக்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்கு படம் மதவெறியர்களுக்கு மதவுணர்வுகளை சீண்டிப்பார்க்கும் பப்படம்

  


UA-32876358-1