google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரஜினி முருகன்-சினிமா விமர்சனம்

Thursday, January 14, 2016

ரஜினி முருகன்-சினிமா விமர்சனம்

கிராமத்து காதல்,நகைச்சுவை,வில்லத்தனம் எல்லாம் கலந்த சிவகார்த்திகேயனின்  ரஜினி முருகன் பொங்கல் கண்காட்சி ராட்டினத்தில் பயனிப்பதுபோல் ஒரு பொழுது போக்கு குடும்பப் படம் 

கிராமத்தில் படித்துவிட்டு வேலைக்குப் போகாமல் நண்பன் சூரியுடன் கும்மாளமிடும்  கிராமத்து பெரியவர் ராஜ்கிரனின் பேரன் சிவகார்த்திகேயனுக்கு  கிராமத்து தாவணிதேவதையாக வலம் வரும் கீர்த்தி சுரெஷ் மீது  காதல் இவர்களின் காதல் இவருடைய தந்தைகளுக்கும் தெரிய வர காதலுக்கு எதிர்ப்பு 

இதற்கிடையில் ராஜ்கிரன் தன சொத்துக்களை பேரன் சிவகார்த்திகேயனுக்கு எழுதிவைக்க நினைக்கும் போது தனக்கும் சொத்தில் பங்கு கேட்டு வில்லனாக வருகிறார் சமுத்திரக்கனி 

சமுத்திரக்கனியின் சதித்திட்டங்களை முறியடித்து கீர்த்தி சுரேஷை சிவகார்த்திகேயன் மனம்முடித்தாரா...? என்பதை கலகலப்பாக சொல்கிறார் இயக்குனர் பொன்ராம்

கீர்த்தி சுரேஷை கவர்வதற்காக சிவகார்த்திகேயன் செய்யும் பல்வேறு சேட்டைகளில் அவரது பண்பட்ட நடிப்பு இன்னும் அவருக்கு நிறைய குட்டீஸ் ரசிகர்களை அள்ளிவரும் 

கீர்த்தி சுரேஷின் துள்ளல் நடிப்பும் மதுரை பாஷை பேசும் எழிலும் பொங்கல் கரும்பாக இனிக்கும் 

பார்வையாலே மிரட்டுகிறார் வில்லன் சமுத்திரகனி சூரியின் காமெடி வசனங்கள் கலகலப்பு மற்றும் சிவகார்த்திகேயனின் தாத்தாவாக ராஜ்கிரன், அப்பாவாக திருஞானசம்பந்தன்....குடும்பப் பாங்கான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள் 

ஆகா மொத்தத்தில்........

கிளுகிளுப்பான கிராமத்து காதல்,கலகலப்பான நகைச்சுவை,விறுவிறுப்பான வில்லத்தனம் என்று கலவையாக வந்துள்ள  சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படம் பார்ப்பது பொங்கல் ராட்டினத்தில் பயணிப்பது போல்... 

பார்வையாளர்களின் மதிப்பீடு.....



ரஜினி முருகன் - படம் எப்படியிருக்கு....?






படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1