google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தோழாசினிமா விமர்சனம்

Tuesday, March 29, 2016

தோழாசினிமா விமர்சனம்


சில படங்களை பார்த்து விட்டு வெறுப்பில் சினிமா தியேட்டர் பக்கம் போய் ரொம்ப நாட்கள் ஆனது அதை சரி செய்த ஒரு திருப்தியான படம் கார்த்தியின் தோழா...
எங்க தொலைத்தோமோ அங்கதான தேடனும்

சின்னச் சின்ன திருட்டுக்களில் மாட்டிக் கொண்டு சிறைக்குப் போவதால்   கார்த்தியை வீட்டை விட்டே துரத்திவிடுகிறார் அம்மா.

நண்பர் விவேக் முயற்சியால் விபத்தில் கை கால்கள் பாதிக்கப்பட்ட கோடிஸ்வர தொழிலதிபர் நாகார்சுணாவை கவனிக்கும் வேலையில் சேருகிறார்

கள்ளம் கபடம் இல்லாமல் பழகும்  கார்த்தியை தன் தம்பி போல் பாவிக்கும் நாகார்சுணா கார்த்தியின் குடும்பத்தில் உண்டாகும் சில பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்

கார்த்தியும் நாகார்சுணாவின் விபத்துக்கு முந்தைய வாழ்வின் சந்தோஷத்தையும் அவரது காதலையும் நல்ல துணையையும் மீட்டுக் கொடுக்கிறார்

தெலுங்கு பட இயக்குனர் வம்ஷி....ஆங்கில படம்  தி இன்டச்சபிள்ஸ் ரீமேக் என்றாலும் தோழா-வை முழு தமிழ் படமாக காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார்

படம் முழுக்க தள்ளு வண்டியில் இருந்தாலும் நாகார்சுணா அவரது முக பாவனையில் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார்

கார்த்திக்கு மீண்டும் நகைச்சுவை கலந்த உதார் பேர்வழி பாத்திரம் நடிப்பில் முன்னேற்றம்

தமண்ணாவின் நடிப்பு ஒரு நளின காதல் கவிதை மற்றபடி அனுஷ்கா,ஷ்ரேயா வந்து போகிறார்கள்

விவேக்,பிரகாஷ்ராஜ் இருவரும் நகைச்சுவை கலந்த குணச்சித்திர நடிப்பு அருமை

பாடல்களை விட பின்னணி இசை கவர்கின்றது

ஒளிப்பதிவு பார்வையாளர்களை பாரீசின் அழகியலில் போதை ஊட்டி கிரங்கடிக்கின்றது

ஆக மொத்தத்தில்....

தோழா...படம் பார்க்கும் உணர்வை தராமல் பாரீஸ் சுற்றுலா போன உணர்வையும் நல்லது செய்தால் நல்லதே நடக்கும் என்ற நல்ல சிந்தனையையும் விதைக்கின்றது
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1