google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தி கான்ஜுரிங் 2 - சினிமா விமர்சனம்

Tuesday, June 14, 2016

தி கான்ஜுரிங் 2 - சினிமா விமர்சனம்



நம்ம தமிழ்ல நிறைய காமெடி பேய்களைப் பார்த்து பழக்கப்பட்டு விட்டதால் தி கான்ஜுரிங் 2 படத்தில் வரும் டெர்ரர் பேய் ஒன்னும் பெரிசா தெரியல இருந்தாலும் இது ஓர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான படம் என்று சொல்லப்படும் பொது கொஞ்சம் டர்ர்ர்ர்னு நமக்கு (கிலி) கிழியுது 

கோடம்பாக்கம் சுந்தர் சி அப்படியே பொடிநடையா ஹாலிவுட்க்கு போய் ஒரு பேய் படம் எடுத்த மாரி இருக்கு 

சாதாரணமான காட்சிகளால் துவங்கும்தி கான்ஜுரிங் 2 அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அசாதாரண காட்சிகளுக்கு மாறுது 

லண்டனில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு மாணவிகள் தம் அடிக்க்கும் போது கண்டுபிடித்த ஆசிரியை அவர்களை விரட்டிவிட்டு அந்த தம்மை ஒரு இழுப்பு இழுக்கும் காட்சிகளுடன் யதார்த்தமாக துவங்கும் படம்.....

கணவனால் கைவிடப்பட்ட ஒரு தாய் 
அவளது நான்கு குழந்தைகளுடன் குடியேறிய ஓர் அழகான வீடு 
அதனுள் ஒரு கிழட்டு ஆண் பேய் 
அதை ஆட்டுவிக்கும் ஒரு கிழவி பேய்  
அந்தப் பேய்களை விரட்ட வரும் அமானுஷ்ய சக்தி கொண்ட தம்பதியர் 

இப்படி அசாதாரண காட்சிகளுடன் பயம் காட்டுகிறது தி கான்ஜுரிங் 2
இயக்குனர் James Wan ஒரு வீட்டை வைத்தே பயம் காட்டி இன்னும் எத்தனை படம் படம் எடுத்தாலும் அத்தனையும் பார்க்கலாம் குறைந்த கதாப்பாத்திரங்கள் ஆனால் நிறைய குட்டி குட்டி Plot கதைகள் 

இருள் சூழ்ந்த பயம் காட்டும் ஒளிப்பதிவு  

இசையும்  பேய் கூக்குரலும் கலந்து பயம் காட்டும்  ஒலிப்பதிவு 

அதுக்கும் மேல......

படம் பார்க்கும் சில நாதாரிகள் போடும் கூச்சல் 

அதுக்கும் மேல....
தந்தி டிவி பாண்டே மாதிரி ஆளாளுக்கு பொசுக்குன்னு பேய் கிட்ட பேட்டி எடுக்கிறது தான்பா பயமா இருக்கு

ஆக மொத்தத்தில்.........
தி கான்ஜுரிங் 2- பயம் கலந்த காமெடியும் இரத்தக் கொடுரம் இல்லாத ஹாரர் பேயும் நம்மை பயம் காட்டி ஓர் ஆவி உலகத்தில் கொஞ்ச நேரம் சஞ்சரிக்க வைக்கிறது 

பேயோட என்ட்ரி சீனுக்கு அஜித்,விஜய் என்ட்ரி சீனை விட பெரிய கிளாப்ஸ் அள்ளுது பேசாம கான்ஜுரிங் பேய்க்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமா? னு இருக்கேன் 




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1