google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கபாலி-சினிமா விமர்சனம்

Friday, July 22, 2016

கபாலி-சினிமா விமர்சனம்




இதுவரை நாம் பார்த்த ரஜினியின் மாஸ் திரைப்படங்களிலிருந்து பா.ரஞ்சித் இயக்கத்தில்  ரஜினியின் ஸ்டைலிஷ் மூவ்மென்ட் உடன்  வித்தியாசமான நடிப்புடன் வெளிவந்துள்ளது.......கபாலி 

25 வருடங்களுக்கு முன்பு தன் மனைவி (ராதிகா ஆப்தே) மற்றும் கைக்குழந்தையுடன்  சந்தோசமாக வாழும் கடின உழைப்பாளி கபாலிஸ்வரம் (ரஜினிகாந்த்) ........

 மலேசிய தமிழர்களுக்கு கொடுமை செய்யும்  வின்ஸ்டன் சாவோ, கிஷோர், 'மைம்' கோபி ஆகிய மூவர் இருட்டு உலக கும்பலை (கேங் 43) எதிர்த்து மனைவி,குழந்தையை பிரிந்து  சிறை செல்கிறார் 

25 வருடங்களுக்கு பிறகு மலேசியா சிறையிலிருந்து நன்னடைத்தையாலும் வயது காரணமாகவும் விடுதலையாகும் கபாலிஸ்வரம் மீண்டும் கேங் 43 கும்பலை ஒழித்து தன் மனைவி,மகளுடன் இணைந்தாரா? என்பதை....

 ரஜினிகாந்த் அவருக்கே உரிய ஸ்டைல் நடிப்பால் வெளிப்படுத்துகிறார் 

இயக்குனர் பா.ரஞ்சித்தின் டச் அவ்வப்போது காட்சி அமைப்புகளில் வெளிப்படுவது மெதுவாக நடைபோடும் கதையை உசுப்பிவிடுவது போல் உள்ளது 

மீண்டும் ரஜினிகாந்தின் பரட்டை,பாட்சா ஸ்டைல்
 கபாலி படத்தின் சிறப்பு 
விஷுவல் பிளாஷ்பேக் காட்சிகளில் ரஜினியின் டான் நடிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தராது
  நெருப்புடா....பாடலை திரையரங்கில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள் 

ராதிகா ஆப்தே ....இதுவரை பார்த்த ரஜினி கதாநாயகிகளிடம் இருந்து வித்தியாசப்படுகிறார் பிரிவுக்குப் பின் ரஜினியுடனான சந்திப்பில் நடிப்பு மிளிர்கிறது. ரஜினியின் மகளாக தனுஷிகா 
மற்றும் அட்டக்கத்தி தினேஷ்  உடல் மொழியால் சிறப்பாக நடித்துள்ளார்கள்

வில்லன்களாக வரும் வின்ஸ்டன் சாவோ, கிஷோர்... போதிய நடிப்புக்கு வாய்ப்பில்லை 


கபாலி படத்தின் சில குறைபாடுகள்.....

யுகிக்கக்கூடிய க்ளைமாக்ஸ்,பலவீனமான வில்லன், கிக்கான இசை இல்லாமை, மற்றும் நகைச்சுவை பற்றாக்குறை 

ஆக மொத்தத்தில்.......

கபாலி......
ரஜினியின் மீண்டும் ஒரு பரட்டை,பாட்சா ஸ்டைல் நடிப்புக்காக 

பார்க்கலாம் மற்றபடி கபாலி.....காலியாகாத கபாலிடா....!!! அவரது ரசிகர்களுக்கு மட்டுமே நெருப்புடா...!!! திரையரங்கில் படம்பார்த்தால் ஒளிப்பதிவில் மலேசியா தரும் எல்லோருக்கும் #மகிழ்ச்சிடா....

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு....



கபாலி படம் எப்படி இருக்கு....?




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1