google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தீரன் அதிகாரம் ஓன்று-சினிமா விமர்சனம்

Tuesday, November 21, 2017

தீரன் அதிகாரம் ஓன்று-சினிமா விமர்சனம்


தீரன் அதிகாரம் ஓன்று-
தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டிய புறநகர் பகுதிகளில் நடக்கும் கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் வடமாநில கொள்ளைக்கூட்டத்தை கண்டுபிடித்துஅழிக்கும் ஒரு போலிஸ் அதிரடி திரைப்படம் என்பதிலிருந்து மாறுபட்டு....
இக்கொடுற குற்றங்களின் முகலாய-ஆங்கிலேய வரலாற்று பின்னணியும் பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தி....
இன்றும் தமிழகத்தில் நடக்கும் பல குற்ற செயல்களுக்கு வடமாநிலத்தை  சேர்ந்த பல குற்றவாளிகள் இருக்கும் நேரத்தில் வெளிவந்து  விழிப்புணர்வு உருவாக்குகிறது

தீரன் அதிகாரம் ஓன்று-
ஒரு உண்மை சம்பவத்தை விறுவிறுப்பான திரைக்கதையுடன்
 நடிகர்கள் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், மனோபாலா, சத்யன், போஸ் வெங்கட் உருவங்களில்....

சத்தியன் சூரியன் ஒளிப்பதிவில் ராஜஸ்தான் பாலைவனம்,ஹரியானா காடுகள் என்று பிரமாண்டமாகவும்.... 

ஜிப்ரானின் அதிரடி இசையிலும்.... 
வெற்றிப்படமாக படைத்துள்ளார்  சதுரங்க வேட்டை இயக்குனர் எச்.வினோத்

என்பார்வையில்........
இந்த வடமாநில கொலை, கொள்ளையர்கள் தமிழ்நாட்டில் செய்யும் கொடூரமான கொலை, கொள்ளைகளைவிட  அதிகமாக இன்றைய வடமாநில ஆட்சியர்களின் (#demonitisation) செல்லாத பணம் செய்த கொலைகளையும்
GST வரிவிதிப்பு செய்யும்  கொள்ளைகளையும்  தடுக்க என்று  ஒரு தீரன் வருவாரோ? 
ஆக மொத்தத்தில்.........
தீரன் அதிகாரம் ஓன்று-நடிகர் கார்த்திக் திரைவரலாற்றில் ஒரு திருப்புமுனை சினிமா 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1