google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 2.0 -(முகநூல்) விமர்சனம்

Monday, December 03, 2018

2.0 -(முகநூல்) விமர்சனம்

என்னிடம் ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. யாராவது “அது மொக்கைப் படம்” என்று சொன்னால் “அப்படி என்னதான் அதில் மொக்கை  இருக்கிறது ?”   என்று அறிய உடனே சென்று பார்த்து விடுவேன்.

சின்ன வயதில் முத்து காமிக்சில் ‘இரும்பு கை மாயாவி’, ‘மந்திரவாதி மாண்ட்ரக்’, ‘Phantom’ அதற்குப் பிறகு MARIO வீடியோ கேம்  விளையாடிய அனுபவம் நிறைய உண்டு. சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்றிருந்தபோது யூனிவர்சல் ஸ்டூடியோவில் TRANSFORMER படத்தின் அனுபவத்தை  இப்போது பெற முடிந்தது.

நேற்றிரவு 2.0 படம் பார்த்து பிரமித்துப் போனேன். சபாஷ் சங்கர்ஜி. தமிழ் நாட்டு திரைப்பட உலகின் தொழில் நுட்பம் ஹாலிவுட் அளவுக்கு உயர்ந்திருப்பது கண்டு பெருமையாக இருந்தது. ஆனால் லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது.

பபுள்கம், சூவிங்கம், ஜவ்வு மிட்டாய் அதைவிட கிளைமாக்ஸில் பயங்கரமாக போட்டு இழுத்தார்கள்..

அக்ஷய் குமார் மண்டையை போட்ட பிறகு படம் முடிந்து விட்டது. ஜாலியாக  எழுந்து போய் விடலாம் என்று நினைக்கையில்  “அடடா…! ஏ,ஆர்.ரஹ்மானிடம் வேறு ஒரு பாட்டு வாங்கி படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோமே, , அதை போட மறந்து விட்டோமே” என்று நினைத்த ஷங்கர் நம்மை மறுபடி உட்கார வைக்கிறார்.

சரி போகட்டும். இப்பவாவது எழுந்து போகலாம்னு நெனச்சா மறுபடியும் “நீ சிட்டி.. நான் குட்டி” என்று பஞ்ச் டயலாக் பேசி Gullivers Travel மற்றும் “The Elves and the Shoemaker’  Fairy Tales-ல் வரும் பாத்திரங்கள் போல chintu size 3.0 ரஜினி சார் இம்சை அரசனாக வந்து நம்மை படுத்துகிறார். “வேண்டாம் ஷங்கர்ஜி. ப்ளீஸ் விட்டுடுங்க!” என்று கத்தலாமே என்று பார்த்தால் latest 4D Audio Technology-யில் யாருக்குமே சத்தம் வெளியே கேட்காது என்று எனக்கு புரிந்தது.

டெக்னாலஜியை தவறாக பயன்படுத்தாதீங்க எனும்  Moral of the story-யை பயங்கர டெக்னாலஜி பயன்படுத்தி நமக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார்கள்.

அதுக்காக பாவம் அந்த பறவை மனுஷன் சலீம் அலியைப்போல ஒருவருக்கு மேக்-அப் போட்டு அவரை பேயாக்கி இப்படி பயமுறுத்தனுமா என்ன..? நல்லவேளை சலீம் அலி 1987-ஆம் வருஷமே இறந்து போயிட்டாரு. இதுக்கு எதுக்கு அக்ஷய் குமார்? ராகவா லாரன்சு போதுமே,,?  அந்த பக்ஷி ராஜன் நல்லதுதானே சொல்றாரு. அவரை ஏன் காஞ்சனாவாக ஆக்க வேண்டும் என்ற நினைப்பை அடக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் பக்கது சீட்டில் அமர்ந்திருந்த என் மகள் ஒரு டயலாக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள். ரோபோவின் கைகளை பிய்த்து விட்டு, கால்களை பிய்த்து எறியும்போது அக்ஷய் குமார். “நான் உன் Call-யை   Deactivate   செய்து விட்டேன்”  என்று சொல்லும்போதுதான் அது ஜெயமோகன் வசனம் என்று புரிந்துக் கொண்டேன். மரணித்த பின்பும் நா.முத்துக்குமாரை நம்மை நினைத்துப் பார்க்க வைத்த இயக்குனருக்கு பாராட்டுகள்.

சயின்ஸ் ஃபிக்ஷன் படமான இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில் நுட்பத்தை யாருமே குறை கூற முடியாது, அப்படி சொன்னால் அவர்களுக்கு நான் பயங்கரமாக கண்டனத்தை கடுமையாக தெரிவிப்பேன்.

இருந்த போதிலும் படம் முடியும் போது “ஆளை விட்டா போது சாமியோவ்”  என்று தலை தெறிக்க ஓடி வந்தேன்.  ப்ளீஸ்..!   ஷங்கர்ஜி. மறுபடியும் 3.0 எடுத்து எங்களை சோதிக்காதீங்க.

🙏🙏🙏#அப்துல்கையூம் fb
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1