google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சம்சாரம் அவள் மின்சாரம்!

Saturday, November 10, 2012

சம்சாரம் அவள் மின்சாரம்!


விலையில்லாத
மின் விசிறியும்
வந்து சேர்ந்தது வீட்டுக்கு.
இன்னும்
ஒட்டிப்பார்க்கவில்லை!

மின்சாரமே! நீ
எப்போது வருவாய்...?
எப்படி வருவாய்.........?

புளுங்கி நாறுது உடம்பு
அய்யோ!...
அது மனக்குதோ
டெங்கு கொசுவுக்கு...?

வட்டமிடும் கொசு
வந்து கடிக்கும் முன்னே
வந்து விடு மின்சாரமே!
விரட்டி விடு கொசுவை....

விலையில்லாத
மின் அம்மியும்
வந்து சேர்ந்தது வீட்டுக்கு.
இன்னும்
ஆட்டிப்பார்க்கவில்லை!

மின்சாரமே! நீ
எப்போது வருவாய்...?
எப்படி வருவாய்.........?

அரசனை நம்பி
புருசனை கைவிட்ட
பழமொழிக் கதையாக
என் பொண்டாட்டி
மின் அம்மியை நம்பி
கல் அம்மியை
கை கழுவி விட்டாள்
இப்போ
அலுவலகம் விட்டு
வீட்டுக்கு வந்தால்
அடுத்த வேளை...

ஆட்டுற வேலை
அரைக்கிற வேலை

அதுவே என் வேலை.

விலையில்லாத
மின் விசிறியும்
விலையில்லாத
மின் அம்மியும்
வந்து சேர்ந்தது வீட்டுக்கு.
இன்னும்
ஒட்டிப்பார்க்கவில்லை!
ஆட்டிப்பார்க்கவில்லை!

மின்சாரமே! நீ

சீக்கிரமாய் வாராயோ...?
என் சம்சாரத்திடமிடுந்து 
விடுதலைத்தான் தாராயோ...?

****************************************************************



                                                   Thanks-YouTube-Published by kthamba




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1