google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சென்னையில் குறைந்த மின்வெட்டு ஏன் தெரியுமா?

Sunday, November 11, 2012

சென்னையில் குறைந்த மின்வெட்டு ஏன் தெரியுமா?



சென்னையில் மட்டும்
இல்லை மின்வெட்டு
பெயருக்கு இங்கே
குறைந்த மின்வெட்டு நேரம்
அது ஏன்?...ஏன்?
என்று புலம்பும் என் தோழா!

அது ஏன் தெரியுமா?
இங்குதான்
பிரபலங்களும்
அரசியல் பிரமுகர்களும்
நிறைய இருக்கிறார்கள்
என்று நினைக்காதே.

இங்கு
கூவம் என்று
ஒர் ஆறு இருக்கு
அது நகரெங்கும்
கிளை பரப்பி இருக்கு
குப்பை கொட்டிக் கிடக்கு
குடல் புரட்டும்
நாற்றம் எடுக்கு
இங்கு ஏ.சி.யும் விசிறியும் 
இல்லையென்றால்
ஓசியில் வந்து
ஒட்டிக்கொள்ளும்
டெங்கு கொசு....  

இங்கு
இருந்த இடமெல்லாம்
இட நெருக்கடியில்
சுடுகாடும் வீடாப்போச்சு
இறந்த பிறகு புதைக்க
இடமில்லாமல் போச்சு
மின்சாரம் இல்லையென்றால்
எரியூட்ட என்ன செய்வது?
சும்மாவே....
இங்கு நாய் தொல்லை
இதில் வேறு பேய்த்தொல்லையா..?

இப்படி இன்னல் தரும் கேடுகள்
இங்கே ஏராளம்.
இதனால்தான் இங்கு
மின்சாரம் தாராளம்.

வேதனைப்படும் என் தோழா!
வேண்டுமெனில் ஓன்று செய்.
காந்தி தாத்தா சொன்னது போல்
கிராமங்களில் தன்னிறைவு

மின்சாரம்  தரும்
காற்றாடி ஓன்று செய்து
வீட்டு கூரை மீது நட்டி வை
அதிலிருந்து மின்சாரம் வந்தால்
அது தருமே சந்தோசம் உனக்கு.


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1