google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பரிணாம வீழ்ச்சி-தரிசனம்!

Friday, November 16, 2012

பரிணாம வீழ்ச்சி-தரிசனம்!





அந்தக் குரங்கு குட்டியும்
அந்த மனிதக் குட்டியும்
கொஞ்சி விளையாடினர்
அந்த அம்மா குரங்கு
சிறிது நேரம் கழித்து
குட்டியை அழைத்துக்கொண்டு
பிரியா விடை கொடுத்து
புறப்பட்டுச் சென்றது.

(எந்தக் குரங்கு...? என்று
கேட்கும் நண்பர்கள்
‘பரிணாமவீழ்ச்சி-மீண்டும் குரங்காக....’
பதிவைப் படித்துவிட்டு...தொடரவும்.)

தன் குழந்தையையும்
தன் மனைவியையும்
அழைத்துக்கொண்டு அவன்
அந்த மலைக்கோயில் படியேறி
மேலே செல்லாமல்..
வந்த வழியே கீழ்நோக்கி
திரும்பி நடந்தான்....

அடிவாரத்தில் இருந்த
கடைகளில் விசாரித்தான்
தாயின் அடையாளங்களைச் சொல்லி...

அதில் ஒருவர் சொன்னார்
“தெருக் கடைசியில் இருக்கும்
அரசமரத்தடியில் போய்ப் பாரு
அங்கேதான் இருப்பார்கள்
வயதானவர்கள் நிறைய என்று.

அந்த அரசமரத்தடி திண்டை
அவர்கள் அடைந்தபோது..
தன் தாய் அம்மாயி
தன் மடி மீது படுத்திருந்த
குரங்கின் தலையை வருடியபடி
மரம் மீது சாய்ந்திருப்பதைக் கண்டான்

(யார் இந்த அம்மாயி...?
என்று கேட்கும் நண்பர்கள்   
‘பரிணாமவீழ்ச்சி-மங்காத்தா’
பதிவைப் படித்துவிட்டு...தொடரவும்.)

அருகில் சென்று
அம்மா...என்று அழைத்தான்
“வாம்மா..வீட்டுக்குப் போகலாம்

திடுக்கிட்ட அம்மாயி..
“வந்திட்டியா சாமி...
எண்ணப் பெத்த ராசா...
சாமியப் பாத்தாச்சா..?

தன் மகனையும் பேரனையும்
நெஞ்சோடு அனைத்து
உச்சி முகர்ந்து முத்தமிட்டாள்.
அப்படியே சாய்ந்து
வி...ழு..ந்...தா....ள்...
ம..டி.....ந்....தா....ள்...
அந்தக் கிழட்டுக் குரங்கும்
இவர்களைப் பார்த்து
ஏதோ முனங்கியபடி போனது....
   
தரிசனம் தேடிடும் மானிடா!-தெய்வ
தரிசனம் தாயில்லாமல் ஏதடா!
நிதர்சனம் வாழ்வில் இதுதானடா!-நெஞ்சில்
கரிசனம் தாய்மேல் கொள்ளடா! 

*************************************************************
இன்றைய சிரிப்பு பீரங்கி.....

நன்றி-C.P.Senthilkumar
 c.p.senthilkumar
*************************************************************************************
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1