google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சிரிப்பு மந்திரியும் மேடைப் பேச்சும்

Sunday, November 18, 2012

சிரிப்பு மந்திரியும் மேடைப் பேச்சும்




ன் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய
பேரன்பு மிக்கப் பெரியோர்களே!
என் உயிரின் உயிரான தாய்மார்களே!
இங்கே அலைகடலெனத் திரண்ட.....

(ஏண்டா..அறிவுச்செல்வா...
அய்யாயிரம் ரூபா அழுதிருக்கிறேன்
அம்பது பேரைக்கூடக் கானோமடா
எல்லாத்தையும் நீயே ஆட்டப்போட்டுட்டியா...?)

உங்களுக்கெல்லாம் ஓன்று
சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்
என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கும்
எதிர்க்கட்சி நண்பர்களே!
நான் பண்ணியிரண்டு ஆண்டுகளுக்கு
ஒருமுறை பூக்கும் நெருஞ்சி மலர்...

(அண்ணேன்...
அது குறிஞ்சி மலர் அண்ணேன்)

ஆங்..ஏதோ ஒரு மலர்...
என்னிடம் மோதாதீர்கள்
மோதினால் உங்களை
நறுக்கென்று குத்திடுவேன்.

உங்களுக்கெல்லாம்
ஓன்று சொல்லிக்கொள்கிறேன்
அமெரிக்காக்காரான் கீச்சினால்
அதுக்கு ஒட்டுப் போடுகிறீர்கள்
இந்தியாக்காரன் கீச்சினால்
உள்ளே தூக்கிப் போடுகிறீர்கள்
அந்த ஒபாமாவைப் பார்த்து
ஓன்று நான் கேட்கிறேன்..
இதை நான் சும்மா விடமாட்டேன்
நாளைக்கே நான் இதை
சீனாசபைக்குத் தெரியப்படுத்தப் போகிறேன்

(அண்ணேன்...
அது ஐ.நா.சபை அண்ணேன்..)

இங்கு வந்ததிலிருந்து பார்க்கிறேன்
இந்தக் கன்னிப்பெண்
இந்த மணமேடையில்
எவ்வளவு நேரம்தான்
தனிமையில் இருப்பாள்
இவ்வளவு காலம்
இவள் வாழ்க்கையில்
காத்திருந்தது போதாதா...?
ஏ..மாப்பிள்ளையே
இது நியாயமா உனக்கு...?  
  
இன்னும் நிறைய விழாக்களில்
பங்குபெற வேண்டி இருப்பதால்...
மாப்பிள்ளையை
வரச்சொல்லுங்கள் சீக்கிரம்.

(அண்ணேன்...
இது திருமண விழா இல்லை
மஞ்சள் நீராட்டு விழா....ண்ணேன்
நம்ம டிரைவருக்கு நேத்து அடிச்ச
டாஸ்மாக் மப்பு தெளியலப்போல...
பக்கத்து தெரு மண்டபத்துக்குப் போகாம
இங்க கூட்டியாந்துட்டா..ண்ணேன்)    

**************************************************************

                 Thanks-YouTube-Uploaded by badmachi420

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1