google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சிரிப்பு மந்திரியும் சுவிஸ் வங்கியும்

Thursday, November 15, 2012

சிரிப்பு மந்திரியும் சுவிஸ் வங்கியும்



வட்டம் குட்டமுன்னு
ஆயிரத்தில் ஆரம்பிச்ச
தொழில்லப்பா...
  
எம்.ல்.ஏவானதும்
எகிறி எகிறி
லட்சம் லட்சமாய்
வந்துச்சுப்பா....

எம்.பியானதும்
அதுவும் எம்பி எம்பி  
கோடி கோடியாய்
கொட்டிச்சப்பா.....

பணத்தோடு வந்ததுச்சு
பயமோ..பயம் மக்கா....
கோடியும் கொட்டிச்சு 
தேள் கொடுக்காய்...
இங்கத்தான் கிடக்கானுங்களே
களவானிப் பயலுக ரொம்பனு
பக்..பக்னு....பதைச்சுச்சு  
பாழாப்போன நெஞ்சுப்பா...!

பாதுகாப்பா இருக்கட்டுமேனு
சுவிஸா..குவிஸா
அங்க கொண்டு போட்டேம்பா  

அதுக்கும்
எவம்ல அது....?
கஜ்ஜிரிவாலா...குஜ்ஜிரிவாலா
எந்த வாலோ...
வைச்சிட்டானுங்க ஆப்பு

இவனுங்க போடுற கூப்பாடுல
அந்தச் சுவிஸுக்காரன் சொல்றாம்பா...
எனக்கு அக்கௌன்டே இல்லன்னு
அடிச்ச துட்டேல்லாம்
அம்போனு போச்சுப்பா
அந்தச் சுவிஸுக்காரன்
நமள்ளவிட...மக்கா!  
பெரிய களவாணிப் பயவுல...
சண்டாளப் பயவுல 
இப்ப என்னையே
யாருனு? கேட்க்கிறாம்ப்பா.

“அண்ணே...
நாமதாம் சொன்னோம்
அவிய்ங்ககிட்ட
யார் கேட்டாலும்
சொல்லிப்புடாதேனு... 

**************************************************************



                                                Thanks-YouTube-Uploaded by switch2abi

************************************************************************* *****


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1