google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: டாஸ்மாக் போதையே!

Saturday, December 15, 2012

டாஸ்மாக் போதையே!


           
    



டாஸ்மாக்கே...! உன்னிடம்
காசு கொடுத்து குவாட்டர் வாங்கி....

(நல்ல சரக்கோ...? கெட்ட சரக்கோ...?
அப்படியே அடித்தால்...
எல்லாச் சரக்கும் நெஞ்செரிச்சலே...!
அப்படியே சாப்பிட
எங்கே போவது கள்ளுக்கடைக்கு?)

அப்புறம் அதில் கலக்க
தண்ணீர் பாக்கெட்டோ...
இனிப்பு கலரோ
வசதிக்கு தக்க வாங்கியூத்தி...

தொட்டுக்கொள்ள ஊறுகாயோ..
அல்லது காரசாரமாய்
ஆடு,மாடு,கோழி,காக்கா  
எலி,பெருச்சாளி...
(யாருக்கு தெரியும் என்ன வென்று...?)
எல்லாவற்றின் உடல் பாகங்களையும்
எடுத்து நக்கியும் விழுங்கியும்....

அடிக்கும் போதை
இருக்கும் மூன்று மணிநேரமே!
(அதுவும் அவர்கள்
தண்ணீர் கலக்காமலிருந்தால்..)

ஆனால்...

என் காதலியைக் கண்டாலே...  
ஏறும் போதை என்னுள்ளே
இருக்கும் இமை மூடும் வரைக்கும்!
இமைகள் மூடினாலும் இனிமையாய்
இருக்கும் என் கனவிலும் கலையாமல்...

(அய்யன் வள்ளுவரே!
அடியேனை மன்நீப்பீராக!
உமது குறளைப் படித்து
உளப்பூர்வமாய் புரிந்து கொள்ள
இப்போது கள்ளுக்குப் போவதெங்கே?
இருப்பது அரசின் டாஸ்மாக் கடையே!)


மதுதரும் போதையை விட 
பெரிய போதை மங்கையின் காதலே....
அதனால் அன்பர்களே.....
டாஸ்மாக்  போ(வ)தையை மறந்து 
வள்ளுவர்  வாக்குபடி வாழுங்கள்!


 

thanks-soundcloud by Willet
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1