google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: December 2012

Monday, December 31, 2012

தமிழக அரசியல் கிசு கிசு!


யார் இவர்கள்...?
தமிழக அரசியல் பரமபத விளையாட்டில்
அவ்வப்போது மேலும் கீழும் போகும்  இவர்கள்.


1
தமிழக மக்களுக்குச் சலுகைகள்
அதுவும் விலையில்லா சலுகைகள் செய்யவே
இவருக்கு ஆசையோ ஆசை பேராசை!
இருண்டு கிடக்கும் தமிழகத்தை
வெளிச்சத்துக்கு கொண்டுவர
கனவு கனவு மின்சாரக்கனவு!
வறண்டு கிடக்கும் தமிழகத்தை
காவேரியால் வளமாக்கிடவே
தில்லி படையெடுப்பு!
அதற்காக அம்மா! தாயே! என்று
கெஞ்சவா முடியும்?
சிலநேரங்களில் வெற்றி
சில நேரங்களில் அவமானம்.
எல்லாம் யாருக்காக? தமிழக மக்களுக்காக!


இவருக்கோ குடும்பப் பிரச்சனை. கட்சிப் பிரச்சனை.
அடுத்து மீண்டும் ஆட்சியை பிடிக்கவேண்டும்
கட்சியை காக்கவேண்டும்  அதுவே பெரும் பிரச்சனை
வெற்றியோ? தோல்வியோ?
போராட்டமே இவரது வாழ்கை..!
குடும்பத்தலைவர் கட்சித்தலைவர்.
சிந்தனையிலும் செயலிலும் வயதான வாலிபர்!

3
தேர்தல் வந்தாலும் வராவிட்டாலும்
அடுத்த முதல்வர் இவரே!
அறிவிப்பதும் இவரே!
இது முற்போக்கு சிந்தனையா?
இல்லை இவரது கனவா?
இவரது போராட்டங்கள்
தீவிரமாகத் துவங்கும்
வேடிக்கையாக முடியும்
பிடித்தது திண்டுக்கல் பூட்டு!
அய்(யா)யோ பாவம்
அதனால் இவரைப் பிடிக்காது   
டாஸ்மாக் குடி மகன்களுக்கு!

4
பேச்சுக்கும் செயலுக்கும்
சம்ப(த்)ந்தம் இல்லாதவர்.
வீராதி வீரர் அறிவிக்கை வீரர்
அது இவருக்கு அறிவி(வைகோ)க்கைப் போர்..
நமக்கோ அக்கப் போர்? ஆக்கப்போர்?

5
இவருக்கு நடிப்பே பிடிக்காது
நடிகராக இருந்தாலும்
(போலியாக)நடிக்கவும் தெரியாது
அது சினிமாவாக இருந்தாலும் சரி!
அரசியலாக இருந்தாலும் சரி!
வாழ்க்கையாக இருந்தாலும் சரி!
எல்லோரும் பாராட்ட வேண்டும்
என்று நினைப்பவர் இவர்
துரோகிகளைப் பிடிக்காது 
பிடித்தது கருப்பும் எம்.ஜி.ஆ(ர்)ரும் 
ஆத்திரத்தின் உச்சம்
அதுவே அவர்மேல் விழும் எச்சம்? 

 .......................பரிதி.முத்துராசன் 
(மன்னிக்கவும் ..இங்கு நகைச்சுவையை மையாமாக வைத்துத்தான் எழுதப்பட்டுள்ளது.யாரையும் உயர்வாகவோ தாழ்வாகவோ  எழுதும் எண்ணமில்லை ..அவ்வாறு ஏதேனும் எண்ணத் தோன்றினால் வருந்துகிறேன்.மீண்டும் மன்னிக்கவும்..நன்றி!)


*****************************************************************************


(அன்பர்களே! நண்பர்களே!
இந்த காலக்கட்டத்தில்
யாருக்கும் வில்லங்கம் வேண்டாமே!
இது தமிழகத்தின் அரசியல் கிசு கிசு!
யார் என்று அடையாளம் கண்டவர்கள்
விருப்பப்பட்டால் வாக்களிக்கவும்
நீங்கள் அளிக்கும் வாக்கு
வலையுலகில் அவர்களின் நிலை என்ன?
அவர்களுக்கும் தெரியவரும்
நமக்கும் தெரிய வரும்.)

கருத்துக்ககணிப்பு- 


2012:தமிழக அரசியலில் 

இவர்களில் நம்பர்- 1 யார்?

***************************************************************************

இப்பதிவைப் பற்றிய தங்கள் கருத்து....?

மேனி நனைக்காத மழை அறை..!





அங்கே மழை பெய்யும்
நீங்கள் நனையமாட்டீர்கள்
உங்களைச் சுற்றி பேய் மழை
தண்ணீர் கொட்டும்
உங்கள் மேனி ஈரமாகாது.

மாயமல்ல! மந்திரமல்ல!
இந்த மழை அறை
லண்டன் Barbican gallery-யின்
RAIN ROOM-மகத்துவமே....


இந்த மகிமை
உணர்கருவி(SENSOR)யின்
உன்னதத்தால்...
நம் உடல் உணரப்படுகிறது
நம் அசைவு உணரப்படுகிறது

நீர் நம்மீது படாமல்
இந்த ஆச்சரியம் நடக்கிறது..
இது ஒரு கனவு அனுபவம்.

செங்கடலில் மோசே நடந்த போது...
கடல் நீர் விலகி வழிவிட்ட காட்சி...?
இன்னும் பல விந்தைகள்!
........................பரிதி.முத்துராசன் 
*******************************************************

இந்தக் கானோளியைப் பாருங்கள்...



                      thanks-YouTube_by DEEPUSRI55


thanks-images-google.co.in
******************************************************************************

இப்பதிவைப் பற்றிய தங்கள் கருத்து.....?

2012:சினிமா ‘பார்ட்டி’கள் வருடமா...?



பாலிவுட் என்றாலே
ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம்
எப்போதாவது திண்டாட்டம்

 
இந்த ஆண்டு முழுவதும்
இவர்களின் ஆட்டத்துக்கும்  
‘பார்ட்டி கொண்டாட்டத்துக்கும்
அளவே இல்லை....   

 
தில்லியில்
பாலியில் வன்கொடுமையில்
பெண் தாக்குண்டபோது
இந்தப் பிரபலங்கள் யாரும்

வாயைத் திறக்கவில்லை


அந்தப் பெண் இறந்ததும்
அத்தனை பேரும் அணிவகுத்து
கண்டன ஊர்வலம்...

சமுதாயத்தைச் சீரழிக்கும்
இந்தச் சினிமாவும்
இந்தச் சினிமா பிரபலங்களின்
பகட்டும் பார்ட்டிகளும்
பயம் காட்டும் மாயைகளும்...?

 
அது சரி அவர்களாவது அப்படி!
இங்கே இருக்கும் கோடம்பாக்கம் எப்படி?
இந்த பாலிவுட் “பார்ட்டி கொண்டாட்டங்கள் 
கோலிவுட்டுக்கும் பரவுமா..?
 
பாலிவுட் பார்ட்டிகள் அளவுக்கு
கோலிவுட் பார்ட்டிகள் இல்லை
இருந்தாலும் இவ்வளவு மோசமாக இல்லை...
இருந்தாலும் வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை! 


 
சூப்பர் ஸ்டார் தன் பிறந்தநாளில் 
நல்ல விழிப்புணர்வு செய்தார் 

உலகநாயகனும் வானொலியில்  
"பெற்றால்தான் பிள்ளையா?"
சமுதாயத்துக்கு நல்லது சொல்லுகிறார் 

நிறையப் பேர் ஈமு கோழி வளர்த்தார்கள் 
இன்னும் சிலர் ப்ளாட் விற்பனையில்...
இன்னும் சிலர் வேஷ்டி விற்பனையில்...
இந்தச் சினிமா பிரபலங்களால் 
இந்தச் சமுதாயத்துக்கு நடப்பவைகள் 
தொல்லையா? இல்லையா? தெரியவில்லை...!

          .................................பரிதி.முத்துராசன்  



  **********************************************************
கருத்துக்கணிப்பு-

சினிமாவும் சினிமா பிரபலங்களும் இந்தச் சமுதாயத்துக்குச் செய்வது என்ன?

இக்கருத்துக்கணிப்பின் முடிவுகளை எப்போது வேண்டுமானாலும் நீங்களே காணலாம்?



****************************************************************************
பாலிவுட் “பார்ட்டி கொண்டாட்டத்தை
இந்தக் காணொளியில் காணுங்கள்....

                       thanks-YouTube-by ndtv

**************************************************************
  இப்பதிவைப் பற்றிய தங்கள் கருத்து....?

Sunday, December 30, 2012

நமக்கு காதல் தேவையா? கருத்துக்கணிப்பு





காதலர் தினத்தன்று
கயிற்றின் மீதமர்ந்து
ஊஞ்சலாடும்
உல்லாசக் காதலர்கள்!

திருமண விழாவின்
ஒரு பகுதியாக
இந்தத் திக்கு முக்கு ஆட்டம்

தாய்லாந்து நாட்டில்
கண்கவரும் பின்னணியில்
இந்தக் காதல் சாகசம்...

இரு வேறு நாட்டவர்கள் 
தாய்லாந்து மணமகளும் 
ஸ்வீடிஸ் மணமகனும்..
காதலித்து கல்யாணம் 

ஊஞ்சலாடும் காதல்!
சந்தோசத்தில் 
ஊஞ்சலாடும் காதல்!

இங்கேயோ....
காதல் சீரழிகிறது!


சாதி மதம் சாக்கடையில்
பற்றி எரிகிறது ஊரும் 
பெற்ற வயிறும்...

இங்கேயோ.... 
காதல் சீரழிக்கிறது  
சமுதாயத்தை !

    ..................பரிதி.முத்துராசன் 

thanks-image-huffingtonpost
**************************************************
நமது கலாச்சாரத்துக்கு 
இந்தக் காதல்  தேவையா...?




**********************************************************************
இங்கே காதல் மோதல்  
கலவரத்துக்கு யார் காரணம்?



***************************************************************************
இந்தப் பதிவைப்பற்றிய தங்கள் கருத்து.....
 

இன்னும் அழுவதற்கு....


வலியை உணர 
வலுவில்லை 
உடம்பில்...


இன்னும் அழுவதற்கு 
நீரில்லை 
கண்களில்...


ஒரு மலரை 
ஆறு காமவண்டுகள் 
கசக்கி 
காயப்படுத்தி..
சீரழித்தன....  



இன்னும் எழுதுவதற்கு 
எதுவும் இல்லை 
என்னிடம்...
?
?
?
இதைத் தவிர.....

      .......................பரிதி.முத்துராசன் 






Saturday, December 29, 2012

டெல்லி கேங்-ரேப்:யார் குற்றவாளி? கருத்துக்கணிப்பு.


சீரழிந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தைக் காக்க உங்கள் வாக்குகளை அளியுங்கள்..  

 

டெல்லி கேங்-ரேப்: மாணவி மரணம் யார் குற்றவாளி?



*****************************************************************************




இனியும் நாட்டில் பாலியல் வன்கொடுமை தொடராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?




****************************************************************************
 இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து...

DTH-ல் விஸ்வரூபம்-ஒரு கருத்துக்கணிப்பு


அன்பர்களே! நண்பர்களே! இன்று திரையுலகில் மிகப்பெரிய சர்ச்சையாக விளங்கும் உலக நாயகன் -நடிப்புச் சக்கரவர்த்தி- டாக்டர் கமலஹாசன் அவர்களின் கனவுத்திரைப்படம் ...விஸ்வரூபம் பற்றிய ஒரு கருத்துக்கணிப்பு


விஸ்வரூபம் DTH-ல் வெளியிடுவது சரியா?


******************************************************************************


இது திரையரங்கங்களில் வசூலைப் பாதிக்குமா...?

 **********************************************************************************

டெல்லி கேங்-ரேப்:யார் குற்றவாளி? கருத்துக்கணிப்பு.




சீரழிந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தைக் காக்க உங்கள் வாக்குகளை அளியுங்கள்.. 

மேலும்


********************************************************************************

வாக்களித்த நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் மிக்க நன்றி!
இப்பதிவைப் பற்றிய உங்கள் கருத்து......

 

மனிதன் மிருகமாவது எப்படி...?



சில நேரங்களில்
மனிதர்களில் சிலர்
மிருகங்களாய்..?

சில நேரங்களில்
மிருகங்களில் சில
மனிதர்களாய்...?

இருவருக்கும்
இருக்கும் மூளை
என்ன வேறுபாடு?


மிருகங்களின் மூளை
பாக்கெட் கால்குலேட்டர் போல...


மனிதர்கள் மூளை
சந்தையில் விற்கும்
சமீபத்திய கணணி போல...

சில நேரங்களில்
சில தலைக்குள்ளிருக்கும்  
கால்குலேட்டர் கணணி போன்றும்..

சிலநேரங்களில்
சில தலைக்குள்ளிருக்கும்  
கணணி கால்குலேட்டர் போன்றும்..

இப்படி இடக்கு முடக்காய்
இவைகள் வேலை செய்வதால்
இந்த மாற்றங்களோ...?



இதற்குமேல் சொல்ல
என் மூளைக்கு
எதுவும் தெரியவில்லை...?
உங்களுக்கு..?   

.......................................பரிதி.முத்துராசன் 

Friday, December 28, 2012

கிளியே! ஆணவக் கிளியே!



அந்த அழகான கிளிக்கு
செக்கச் சிவப்பான மூக்காம்.

அந்தக் காட்டிலேயே
அதுதான் அழகுனு
அடிச்சுச்சாம் தம்பட்டம்

அதைக் கேட்ட புறாவுக்கு
வந்துச்சாம் கோபம்

“மிளகாய் பழம் போல்
கோணல் மூக்குக்காரி நீ
உன்னைவிட அழகிகள்
ஊருக்குள் இருக்கிறார்கள் நிறைய

என்றுதான் சொல்லிச்சாம்..


ஊருக்குள்ள வந்த கிளி
உதட்டுச்சாயம் போட்ட
பெண்ணைத்தான் பார்த்துச்சாம்
அத்தோடு அதன் ஆணவம்
அழிஞ்சுத்தான் போச்சுதாம்!

...................பரிதி.முத்துராசன்.
 

தில்லியில் போராடும் பெண்கள் பழைய பாத்திரங்களா?




ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி நேற்று ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த போது டெல்லியில் போராட்டம் நடத்தும் பெண்கள் பற்றித் தரக்குறைவாகப் பேசினார். பழைய பாத்திரங்களுக்கு ஈயம் பூசியது போலச் சில பெண்கள் வருகிறார்கள். மெழுகுவர்த்தி ஏந்திச் செல்வதைப் பேஷனாகக் கருதும் அவர்கள் இரவில் டிஸ்கோத்தே பார்ட்டிக்கு செல்பவர்கள் என்று கூறினார்.
.......நான் சொன்ன கருத்துப் பெண்கள் மனதை காயப்படுத்தி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்
                                  (இது செய்தி-நன்றி மாலைமலர்)


தில்லியில் போராடும் பெண்கள்
ஈயம் பூசிய பாத்திரங்கள்..
அதுவும் பழைய பாத்திரங்கள்
என்று வீரமுலக்கமிடும்
ஜனாதிபதியின் மகன்
அபிஜித் முகர்ஜியே...
யார் இங்கே ஜனாதிபதி?
நீரா..? உமது தந்தையாரா...?

அவரது தொலைக்காட்சி பேச்சு
அவருக்கே தொல்லையாய் போச்சு

போராடும் பெண்கள் முகத்தில்
சாக்கடை பூசிவிட்டார்
உண்மையில் சாக்கடை பூசியது
அவர் முகத்தில்தான்...  

அரசியல் பிரமுகரின்
அர்த்தமில்லா பேச்சு....
நாற்றமெடுக்கும் அவர் பேச்சு
நேற்றோடு முடிந்துப்போச்சாம்....
இன்று மன்னிப்புக் கேட்கிறார்

குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு....
இந்தியாவின் முதல் குடிமகனின்
மகனின் பேச்சும்....?

அபிஜித் முகர்ஜி அவர்களே!
நேற்று போராடும் பெண்கள்
ஈயம் பூசிய பழைய பாத்திரங்கள்
இன்று போராடும் பெண்கள்
தங்கம் பூசிய புதுப் பாத்திரங்களா?   

  

காதலிக்கப் பயமாயிருக்கு!











































(இது சினிமா படம் அல்ல 
நாளை சினிமா படம் 
தலைப்பாக வந்தாலும் வரலாம்)


அய்யன் வள்ளுவருக்கோ
காதல் ஒரு கவலை நீக்கி!
கவிச்சக்கரவர்த்திக்கோ
காதல் கண்ணியமானது!
என் உயிர் பாரதிக்கு
என்றும் காதல் சுவாசக்காற்று!

அன்றைய புலவர்கள்
காதல் செய்ததாலேயே
கவிதை எழுதினார்கள்
அவர்களால்
காதல் பெருமைப்பட்டது.

இன்றைய கவிஞர்கள்
காதல் செய்வதற்காகவே
கவிதை எழுதுகிறார்கள்
இவர்களால்
காதல் சிறுமை பட்டது.

காதலில்கூடச் சாதி...?
கள்ளக்காதல் ஒரு சாதி.
நல்லக்காதல்? இன்னொரு சாதி.
நயவஞ்சகக் காதல் எந்தச் சாதி...?

இப்போது காதலும் அரசியல் ஆனது.
அடி பிடி தகராறு கலவரம்
அதுவும் சாக்கடையானது.    

அது சரி...அன்பே!
என்னைக் காதலிக்கும்
நீ எந்தசாதி...?
காதலிக்கப் பயமாயிருக்கு!

(நான் உன் பெஞ்சாதி..
யோவ்..பெருச்சாளி
என்ன பகல் கனவா...?)

........................பரிதி.முத்துராசன்

thanks-images-deviantart   
 ********************************************************

சூடான செய்தி....
பெண்கள் பற்றிய பேச்சால் சர்ச்சை: கட்சி மேலிடம் சொன்னால் பதவி விலக தயார் - பிரணாப் முகர்ஜி மகன் பேட்டி 


பழைய பாத்திரங்களுக்கு 
ஈயம் பூசியது போல சில பெண்கள்-        
(ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன்) அபிஜித் முகர்ஜி





Thursday, December 27, 2012

பாசம் பயம் காட்டுகிறதே!


 

என் அருமை மனைவியே!
என் அருகில்
நீ வரும்போதெல்லாம்...
வருகிறது என் நினைவுக்கு
நாளிதழில் நான் படித்த செய்தி....


 
பாசமுள்ள அவர்கள் இருவரும்
வயோதிகத் தம்பதியினர்
அவரோ மரணப் படுக்கையில்...

அவர் படும் அவஸ்த்தைகளை 
காணப் பொறுக்காத
அவரது மனைவி
சுத்தியலால்
அவர் தலையில் அடித்து...

(கருணைக் கொலை...?)
அவர் இறந்துவிட்டதாக.... 
அய்யோ...பாவம்
அந்தப் பெண்மணியும்
தூக்கில் தொங்கினார்.

பக்கத்து வீட்டுக்காரர்கள்
பதறியடித்து வந்தப் போது...
அவர் கிடந்தார் அரை உயிரில்

பிழைத்துக் கொண்டார் அவர்
மரித்துப் போனார் அவரது மனைவி.


அதனால்தான்...

என் அருமை மனைவியே!
என் அருகில் நீ வரும் போது...
படுத்துக் கிடந்தாலும் நான்
பதறியடித்து எழுகின்றேன்

பாசம் பயம் காட்டுகிறதே!    

...............................பரிதி.முத்துராசன் 

தில்லி என்றாலே தில்லு முல்லா..?


தில்லி-
கி.மு. 6-ம் நூற்றாண்டிலிருந்து
அங்கே மக்கள் வசித்தார்களாம்
புரானகாலத்திலும்
பாண்டவர்களின் தலைநகரமாம்  

மவுரிய அரசன் தில்லு பெயரே
திரிந்து தில்லி..ஆனதாம்
அழகுபடுத்தியது ஷாஜகான்
அபகரித்தது ஆங்கிலேயர்.

தலைநகரமாய் இருப்பதாலோ
தில்லியின் தலைவிதி
அவ்வப்போது அடிமையாய்..?
கடும்பாடுபட்டு விடுதலை
ஆங்கிலேயரிடமிருந்து..

ஆனாலும்
இன்னும் அடிமையாகவே
இருக்கிறது தில்லி
ஊழல்வாதிகளிடம்
மத வெறியர்களிடம்
காம வெறியர்களிடம்

அடகுகடைக்குப் போகும்
தங்க நகை போல்
தலைநகரம் தில்லியும்
அயிந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
அடகு போகிறது ஆட்சியாளர்களிடம்!

அது சரி...
அங்கே என்ன இருக்கு...?
எங்க ஊரில் மாடு மேய்க்கும்
மண்ணாங்கட்டியும்
மல்லாக்கப் படுத்துக்கிட்டு
தில்லிக்கு ராஜாவாகும்
கனவோடு திரிகிறான்...?

தில்லி முல்லு தில்லு முல்லு
தில்லு பெயரே ‘தில்லி’யானதால்
தில்லி என்றாலே தில்லு முல்லா..?
  


......................................................பரிதி.முத்துராசன் 


**********************************************************************
கடைசிச் செய்தி.....
தில்லி இன்று
தமிழ்நாட்டை 
அவமானப்படுத்தி விட்டதாம் ...?
மணியடித்து நம் அம்மாவை 
பத்து நிமிடங்களுக்கு மேல்...
பேச அனுமதிக்கவில்லை.
பிறகு எப்படி கதை சொல்வது...?


பிரதமர் கூட்டத்தில் இருந்து 

அம்மா  கோபத்துடன் வெளிநடப்பு



இன்று மட்டுமா..?
என்றுமே அப்படித்தான்...!  
மௌனகுருவுக்கு 
பேசுவது பிடிக்காது என்பதாலா...?
அடுத்து அம்மாவையே  பிரதமராக்கிடலாம்...
பேசும் பிரதமர்...கதை சொல்லும் பிரதமர் !
  ..................இது நானல்ல ...டீக்கடை மன்னாரு 
UA-32876358-1