google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: புண்ணாக்கு படையல்

Wednesday, January 23, 2013

புண்ணாக்கு படையல்


எனக்கு 
ஒரு திடீர் ஆசை....
புண்ணாக்கு 
எள்ளு புண்ணாக்கு திங்க...

பத்து வயது 
பழைய நினைவு...

அன்று 
அப்பா போடுவார் படையல் 
புண்ணாக்கு படையல் 
பனைமரத்தடியில்...
பச்சை ஒலைப்பட்டை செய்து 
எள்ளுப்புண்ணாக்கும் 
புதுக்கருபட்டியும்  படையல்..

எந்தச் சாமிக்கு...?
எனக்குத் தெரியாது
எப்போது பூஜை முடியும்?
எப்போது புண்ணாக்கு கிடைக்கும்?
என்ற நினைப்பு மட்டுமே 
என் நெஞ்சில் இருக்கும் 

வருடம் தோறும் 
பனைத்தொழில் ஆரம்பித்தால் 
பனை ஏறும் தொழிலாளர்கள் 
வந்துவிட்டால்....

இந்த
புண்ணாக்குப்படையலும் 
வந்துவிடும்..... 
   
எனக்கு 
ஒரு திடீர் ஆசை....
புண்ணாக்கு 
எள்ளு புண்ணாக்கு திங்க...

பனைமரத்தை 
படத்தில் பார்க்கும்போதெல்லாம் 
இந்த ஆசை தொற்றிக்கொள்ளும் 

இன்னொரு நினைவும் 
வந்து தொலைக்கும்...
பனை ஏறும் தொழிலார்களை 
ஒரு வார இதழில் 
குரங்கு மனிதர்கள் என்று எழுதிய 
அந்த  எழுத்தாளரின் அறிவும் 
அதை எதிர்த்து நடந்த போராட்டமும் 

அந்த புண்ணாக்கு எழுத்தாளர் 
மண்ணுக்குள் போய்விட்டார் 
இல்லாதவரைப் பற்றி 
அவர் யார் என்று  சொல்ல 
என் மனம்  உடன்படவில்லை 

 ..................பரிதி.முத்துராசன்
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1